World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

Strike wave continues in Romania

ருமேனியாவில் வேலைநிறுத்த அலைகள் தொடர்கின்றன

By Marcus Salzmann
30 April 2008

Use this version to print | Send this link by email | Email the author

கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் வேலைநிறுத்தத்தில் இருந்த பின்னர், ருமேனிய கார்த்தொழில் நகரமான பீடெஸ்டியில் இருக்கும் Dacia (Renault) கார் உற்பத்தி நிறுவனத் தொழிலாளர்கள், உள்ளூர் தொழிற்சங்கங்கள் மற்றும் கார் நிறுவன நிர்வாகம் இரண்டும் ஒரு 30 சதவிகித ஊதிய உயர்விற்கு ஒப்புக் கொண்டவுடன் வேலைக்கு திரும்பினர். சில நாட்களுக்கு பின்னர் ருமேனியாவின் மிகப் பெரிய எஃகு ஆலையான கேலாட்டி நகரில் உள்ள ArcelorMittal ஆலையில் 4,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

எஃகு தொழிலாளர்களும் கணிசமான ஊதிய உயர்வை கோருகின்றனர். நிர்வாகம் ஏற்கனவே அவர்களுடைய ஊதியங்களை 12 சதவிகிதம் உயர்த்துவதாக கூறியுள்ளது. ஆலையில் இருக்கும் 9,000 உறுப்பினர்களுக்கும் மேலானோரை பிரதிபலிக்கும் ஒன்பது தொழிற்சங்கங்கள் உடனடியாக இந்த உயர்வை வரவேற்றனர். ஆனால் ஒரு உலோக தொழிலாளர்கள் சங்கமான Solidarietea மூன்று மடங்கு கூடுதலான உயர்வு கோரி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

இரு நாட்கள் நடவடிக்கைகளுக்கு பின்னர் நிர்வாகம் உள்ளூர் நீதிமன்ற உத்தரவின்படி வேலைநிறுத்தத்திற்கு தடை ஒன்றை கொண்டுவர முடிந்தது. வேலைநிறுத்தம் சட்ட விரோதம் எனக் கூறிய நீதிமன்றம் குறைந்தது அடுத்த 30 நாட்களுக்கு எவ்வித வேலைநிறுத்த நடவடிக்கையையும் தடுத்து நிறுத்தியது. இந்த சூழ்நிலையில், தொழிலாளர்கள் ஏப்ரல் நடுப்பகுதியில் வேலைக்கு திரும்பினர். தொழிற்சங்கங்கள் கொடுத்துள்ள புள்ளிவிவரங்களின்படி இரு நாட்கள் வேலைநிறுத்தம் ஆலையில் உற்பத்தியை பாதியாக செய்துவிட்டது.

ArcelorMittal உலகின் மிகப் பெரிய எஃகு நிறுவனம் ஆகும்; 24 நாடுகளுக்கும் மேற்பட்ட இடங்களில் மொத்தம் 320,000 தொழிலாளர்களை பணியில் அமர்த்தியுள்ள 60 ஆலைகளை இது கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த நிறுவனம் இந்திய எஃகு முதலாளி லக்ஷ்மி N. மித்தல் தலைமையில் இருக்கும் மித்தல் எஃகு நிறுவனம் மற்றும் லுக்சம்பர்க்கில் இருக்கும் ஆர்ஸ்லர் இரண்டும் இணைந்த விதத்தில் உருவாயிற்று. ஆர்ஸ்லர் மித்தல் ருமேனியாவில் நான்கு ஆலைகளை கொண்டுள்ளது; ருமேனியா சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துள்ளது. கேலாட்டி ஆலையில் 14,000 தொழிலாளர்கள் உள்ளனர்; ஆண்டு ஒன்றுக்கு இந்த ஆலை 4.7 மில்லியன் டன்கள் எஃகு தகடுகளை தயாரிக்கிறது.

டாஸியாவில் இருந்ததை போலவே AcelorMittal தொழிலாளர்களும் நிறுவனம் அளித்து வரும் மிகக் குறைந்த ஊதியங்களை எதிர்த்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை உணர்ந்தனர். சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளி விவரங்களின்படி ஒரு ருமேனிய எஃகுத் தொழிலாளி சராசரியாக மாதம் ஒன்றுக்கு 350 யூரோக்கள் சம்பளம் பெறுகிறார்.

டாஸியாவை பொறுத்த வரையில், நிறுவன நிர்வாகம் சமீபத்திய வேலைநிறுத்தம் பற்றி நீதிமன்றங்கள் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்த முடியவில்லை. நாட்டின் அரசியல் மற்றும் வணிக உயரடுக்கு பொதுவாக இப்பூசல் பற்றி குறைந்த அளவு அக்கறையைத்தான் காட்டியது. ஆனால் கேலாடி வேலைநிறுத்தத்தை தொடர்ந்து நிலைமை மாறியுள்ளது; ஒரு எஃகு பூசலை எப்படியும் நிறுத்திவிட வேண்டும் என்று உறுதி கொண்டுள்ள நிர்வாகம் மற்றும் அரசு சக்திகளை எஃகுத் தொழிலாளர்கள் இப்பொழுது எதிர்கொள்ளுகின்றனர்.

ருமேனிய வணிக வட்டங்கள் தொழிலாளர்களின் மற்ற பிரிவுகளும் டாசியா தொழிலாளர்களின் உதாரணத்தை பின்பற்றக்கூடும் என்று அஞ்சுகின்றன. கிட்டத்தட்ட மூன்று வார காலத்திற்கு டாசியா வேலைநிறுத்தம் கார் ஆலை வேலைகளை கிட்டத்தட்ட முடக்கிவிட்டது; இதனால் ரெனோல்ட்டின் நஷ்டங்கள் கிட்டத்தட்ட பல நூறு மில்லியன் யூரோக்களாக இருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டாசியாவை பொறுத்த வரையில் நிர்வாகம் சில சலுகைகளை கொடுக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டது. அனைத்து டாசியா தொழிலாளர்களும் கூடுதலாக 300 லீக்கள் (90 யூரோக்கும் குறைவானது) ஒவ்வொரு மாதமும் பெறுவர்; இதைத்தவிர ஊதிய அதிகரிப்பு 60 லீக்களாக செப்டம்பரில் இருந்து கொடுக்கப்படும். இதைத்தவிர அனைத்து தொழிலாளர்களும் ஒரு மாத ஊதியத்தை இலாப பகிர்வு என்ற முறையில் மொத்தமாக பெறுவர்.

தொழிற்சங்கத்தின்படி, ஒப்புக் கொள்ளப்பட்ட உடன்பாடு 450 லீக்களை சேர்க்கும். ஆனால் இது கூட தொழிலாளர்கள் உண்மையில் கோரியதைவிட மிகக் குறைவு ஆகும். அவர்களுடைய ஆரம்ப கோரிக்கை பட்டியல் ஊதியத்தில் 50 சதவிகித உயர்வு, இலாபத்தில் பங்குத் திட்டம் மற்றும் சிறப்பு விடுமுறை வசதிகள் ஆகியனவாகும். அதே நேரத்தில் டாசியா நிர்வாகம் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதன் மூலம் ஊதிய உயர்வை திருப்பித் தகர்க்க முயல்கிறது. ஏற்கனவே இது கூடுதல் ஊதியம் இல்லாத ஷிப்ட்டுக்களை கோரியுள்ளதுடன் இழந்த உற்பத்தியை ஈடு செய்வதற்கு வார இறுதியில் உழைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே உடன்பாடு என்பது தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்த நடவடிக்கைகளை அதிகரித்தவுடன் வந்தது. ஏப்ரல் 9ம் தேதி 5,000 க்கும் மேற்பட்ட கார் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த Pitesti யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மக்களின் பரந்த பிரிவிடையே வேலைநிறுத்தம் ஆதரவு பெற்றது; அவர்களும் குறைந்த ஊதியங்கள் மற்றும் மட்டமான வாழ்க்கைத் தரங்களைத்தான் எதிர்கொண்டுள்ளனர்.

ருமேனிய போக்குவரத்து தொழிலாளர்களும் ஏப்ரலில் நடவடிக்கையை மேற்கோண்டனர்; ஓய்வூதியம் பெறுபவர்களும் தங்களுடைய குறைந்த ஓய்வூதியங்கள் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை பற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஆசிரியர்கள் தொடர்ந்து எதிர்ப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்; அவர்கள் மிகக் குறைவான ஊதியங்களைத்தான் பெறுகின்றனர்.

கடுமையான விலைவாசி உயர்வுகள்

தொடர்ந்து பணிவீக்க உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் பரந்த பிரிவுகள் தங்கள் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய இயலவில்லை. ருமேனியாவில் பணவீக்கம் மார்ச் மாதம் 8.6 சதவிகிதம் என்று இருந்தது; அடிப்படை உணவுப் பொருட்களின் விலை சராசரியாக 25 சதவிகிதம் உயர்ந்தது.

மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதேபோன்ற நிலைமைதான் உள்ளது. செக் குடியரசில் கடந்த நவம்பர் பணவீக்கம் சராசரியாக 5 சதவீதம் என்று இருந்தது; தற்போது ஹங்கேரியில் இது 6.9 சதவீதமாக உள்ளது. பல்கேரியாவில் விலைவாசிகள் 12 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளன; லாட்வியாவிலோ 13.7 சதவீதத்தை கடந்து விட்டது.

புள்ளி விவரங்களின்படி, ஜேர்மனியில் ஒரு சராசரி குடும்பம் கிட்டத்தட்ட 12 சதவீதம் அதன் வருமானத்தில் உணவு மற்றும் சக்திக்காக செலவழிக்கிறது. ருமேனியா, பல்கேரியா போன்ற நாடுகளிலோ சாதாரண குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் 50 சதவீதத்திற்கும் மேலாக அத்தகைய அடிப்படை தேவைகளுக்கு செலவழிக்க வேண்டியுள்ளது.

கடன் நிலைமையில் மிக ஆபத்தான அதிகரிப்பு உள்ளது என்பது எதிர்பார்த்ததுதான் பல்கேரியாவில் மொத்த தனியார் கடன்கள் கடந்த ஆண்டு 62 சதவிகிதம் உயர்ந்தது; ருமேனியாவில் இது 60 சதவிகிதமாக இருந்தது. பால்டிக் அரசுகளில் இத்தகைய கடன்கள் சராசரி 45 சதவீதம் அதிகரித்தன; போலந்தில் கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகரித்தது.

சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்த இந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் எனவே தொழில்துறை பூசல்கள் பரவி வருகின்றன என்பது வியப்பு அல்ல. ஸ்விட்சர்லாந்து நாளேடான Le Temps கூறியது: "ஊதிய உயர்வு கோரிக்கை டாசியாவுடன் ஒன்றும் செய்வதற்கில்லை அதனினும் குறைவாக ருமேனியாவுடனும் ஒன்றும் செய்வதற்கில்லை. இந்த இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்த அனைத்து பத்து கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளை பற்றியுள்ளது. EU 8+2 சூத்திரத்தின்படி அவை சர்வதேச வணிக நிறுவனங்களுக்கு குறைவூதிய தொழிலாளர் தொகுப்பின் காரணமாக சுவர்ண பூமியாக ஆகியிருந்தன.... இப்பொழுதோ அத்தகைய குறைவூதியங்களின் காலம் முடிவிற்கு வருகின்றது."

உலகம் முழுவதும் இருக்கும் நிதிய நெருக்கடியின் விளைவுகள் நிலைமையை மோசமாகத்தான் ஆக்கிக் கொண்டு உள்ளன. சர்வதேச நிதிய அமைப்பின் (IMF) சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி கிழக்கு ஐரோப்பிய பகுதியில் பொருளாதார வளர்ச்சி "கடுமையான கட்டத்தை" எதிர்கொண்டுள்ளது. ஆஸ்திரிய Wirtschaftblatt ஒரு வல்லுனரை மேற்கோளிட்டு கூறுகிறது: குறைந்த பிணை அடைமான நெருக்கடி கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று உட்கார்ந்து கொண்டு கணிப்பது ஒரு தவறாகிவிடும்."

ஐரோப்பிய மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கியின் (EBRD), European Bank for Recontruction and Development) இயக்குனர் Fabrizio Coricelli உம் இருண்ட சித்திரத்தைத்தான் கொடுக்கிறார். தற்போதைய நெருக்கடி "ஒரு கொந்தளிப்பு" மட்டும் இல்லை என்றும், "அடிப்படை உருகிக் கரைந்து போதல் இதைத் தொடரக்கூடும்" என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக ருமேனியா, பல்கேரியா மற்றும் பால்டிக் அரசுகள் நெருக்கடியில் அதிகம் பாதிப்பு அடையக்கூடும். இதே போன்ற கருத்துக்கள்தான் ஹங்கேரிய மத்திய வங்கியின் Judit Nemenyi யாலும் கூறப்பட்டுள்ளது. அவர் கிழக்கு ஐரோப்பிய பொருளாதாரங்கள் கடனை நம்பியுள்ளன என்றும் அதனால் பாதிப்பிற்கு உள்ளாகும் என்றும் கூறியுள்ளார்.

வணிக வல்லுனர்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வணிக பணம் அளிப்புக்களில் அதிக பற்றாக்குறை இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். அண்மைய ஆண்டுகளில் வலுவான வளர்ச்சி இருந்தாலும் மொத்த தேசிய சொத்துக்கள் குறைந்து வருவதை இது தெளிவாக்குகிறது. 2007ல் செலுத்துகை பெறுமதி 14.5 சதவீதம் கூடுதலாகக் கொண்டிருந்த நிலைமையைத்தான் ருமேனியா பெற்றிருந்தது; எஸ்தோனியா 16 சதவீதம் மற்றும் பல்கேரியா 21 சதவீதத்திற்கும் மேல் என்று உள்ளது. மிக அதிகமான பற்றாக்குறை லாட்வியாவில், 22.9 சதவீதமாக உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் வலுவான பொருளாதார வளர்ச்சி இந்நாடுகளில் இருந்ததற்கு மேலை வங்கிகள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் காரணமாகும்; அவை இப்பகுதியில் இருக்கும் குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு வளங்களால் ஈர்க்கப்பட்டன.

கடந்த ஆண்டு கிழக்கு ஐரோப்பாவில் நேரடி முதலீடு குறைந்ததை அடுத்து, சர்வதேச நிதிய நெருக்கடியின் விளைவுகள் ஏற்கனவே பகுதியில் இருக்கும் பிரச்சினைகளை தீவிரப்படுத்தும் அச்சுறுத்தல்களை கொண்டுள்ளன. நேரடி முதலீட்டில் வீழ்ச்சிக்கான ஒரு காரணம் முன்பு அரசுடமை நிறுவனங்களாக இருந்தவை, ஏற்கனவே தனியார்மயமாக்கப்பட்டிருக்கின்றன; அங்கு இருப்பவர்கள் நிறைய புசித்து ஊகவணிகர்களுக்கு வட்டியில் சிறிதே விட்டுவைத்திருந்திருக்கலாம்.

பைனான்சியல் டைம்ஸ் (FT) டாசியா வேலைநிறுத்தம் பற்றிய வணிக வட்டங்களின் கவலைகளை சுருக்கமாக கூறியுள்ளது. "போர்க்குண தொழிற்சங்கங்களின்" நடவடிக்கைகளினால் அதிக ஊதியங்களை கொடுக்கும் கட்டாயத்திற்கு உட்படும் ஒரே ஆலையாகவோ, கடைசி ஆலையாகவோ டாசியா இருக்காது என்றும் பத்திரிகை கூறியுள்ளது. பத்திரிகையின் கருத்தின்படி ஊதியங்கள் மிக விரைவில் உயர்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் தெற்கே விரிவடையும் போக்கில், ஸ்பெயின், கிரேக்கம் மற்றும் போர்த்துக்கல் ஆகியவை மேலை ஊதிய தரங்களை அடைவதற்கு 20 ஆண்டுகள் பிடித்தன. ஆனால் கிழக்கு ஐரோப்பாவை பொறுத்த வரையில் இந்த வழிவகை 10 ஆண்டுகளில் அடையப்பட்டுவிடலாம். "முதலாளிகள் தங்கள் செலவினங்களுக்கான நீண்ட காலத் தீர்வுகளை மேலும் நீண்டகாலம் நன்கு கவனிக்க வேண்டிய தேவை உள்ளது" என்று பைனான்ஸியல் டைம்ஸ் முடித்துள்ளது.

இந்த நிலைமையை ஒட்டி நாட்டின் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து மக்கள் மீதும் கடுமையாக இருக்குமாறு ருமேனிய அரசாங்கத்திற்கு கூடுதலான அழுத்தம் வந்துள்ளது. இந்த ஆண்டு ஆலோசனைகளின்போது, சர்வதேச நாணய நிதியமானது அரசாங்கத்தை அதன் கடுமையான நிதியக் கொள்கைகளில் இருந்து பின்வாங்கக் கூடாது என்றும் வரவிருக்கும் தேர்தல்களை காரணம் காட்டக் கூடாது என்றும் தீவிரமாக எச்சரித்துள்ளது. இன்னும் கூடுதலான சமூகச் செலவீன குறைப்புக்கள் வேண்டும் என்றும் அது கோருகிறது. இதன் பொருள் இன்னும் அதிக வேலை நிறுத்தங்கள் மற்றும் சமூக பூசல்கள் தவிர்க்க முடியாமல் வரும் என்பதாகும்.