WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Germany: The SPD's bogus minimum wage campaign
ஜேர்மனி: குறைந்தபட்ச சம்பளத்திற்காக சமூக ஜனநாயகக் கட்சி ஏமாற்றுப்பிரச்சாரம்
செய்கிறது
By Jörg Victor
28 April 2008
Use this version
to print | Send this link by email
| Email
the author
2005ம் ஆண்டு இறுதியில் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியினருடன் ஒரு
"பெரிய கூட்டணியை"
உருவாக்கிக் கொண்ட பின்னர், சமூக ஜனநாயகக் கட்சி (SPD)
அதன் வேலைத்திட்டத்தின் ஒரு உத்தியோகபூர்வ குறைந்தபட்ச
சம்பள திட்டத்திற்கான கோரிக்கையை முன்னணியில் வைத்திருக்கிறது. அவர்கள் பக்கத்தில், சமூக ஜனநாயகக்
கட்சியின் முன்னாள் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் மற்றும் அவரின் பொருளாதார அமைச்சர் வொல்ப்காங்க்
கிளமென்ட் இருவரும் குறைந்தபட்ச சம்பள திட்டம் அமுலாவதை முற்றிலுமாக எதிர்த்திருக்கிறார்கள்.
கருத்துக்கணிப்புகளில் சமூக ஜனநாயகக் கட்சி பின்தங்கி இருக்கும் நிலையில், குறைந்தபட்ச
சம்பளத் திட்டத்திற்கான கோரிக்கை என்பது சமூக ஜனநாயகக் கட்சியை அதன் கூட்டணியிலுள்ள கிறிஸ்துவ ஜனநாயக
யூனியன் (CDU)
மற்றும் கிறிஸ்துவ சமூக யூனியன் (CSU)
ஆகிய கூட்டாளிகளிடமிருந்து அதனை வேறுபடுத்திக் காட்டுகிறது.
குறைந்தபட்ச சம்பளத்திற்கான கோரிக்கையானது, வரும் 2009ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் முக்கிய
பங்கு வகிக்க இருக்கிறது. "ஓர்
உத்தியோகபூர்வ குறைந்தபட்ச சம்பளம் என்பது எங்களின் தேர்தல் பிரச்சாரத்தின் மையக்கருத்தாக இருக்கும்"
என சமூக ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற குழுவின்
பொருளாதார கொள்கைகளுக்கான செய்தி தொடர்பாளர் ரெய்னர் வென்ட்
Financial Times Deutschland
இடம் தெரிவித்தார்.
" ஓர் உத்தியோகபூர்வ குறைந்தபட்ச
சம்பளத் திட்டம் என்பது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது."
எனக் கூறிய சமூக ஜனநாயகக் கட்சியின் வேலைவாய்ப்புத்துறை
அமைச்சர் ஓலாப் ஷொல்ஸ், தொடர்ந்து கூறுகையில், ஆனால் ஒரு பொதுவான குறைந்தபட்ச சம்பளத்தின்
அமுலாக்கம் என்பது ஒரு சமூக ஜனநாயகக் கட்சி அதிபரால் மட்டுமே சாத்தியப்படும் எனத் தெரிவித்தார்.
சமூக ஜனநாயகக் கட்சியின் குறைந்தபட்ச சம்பளத் திட்டத்திற்கான கோரிக்கையின்
பின்னால் இருக்கும் உள்நோக்கங்களை மிக எளிதாக புரிந்து கொள்ளலாம். ஷ்ரோடரின்
"2010 சமூகநல சீர்திருத்த
திட்டத்தின்" மீது
ஏற்பட்ட வெறுப்பினால் கட்சியை விட்டுச்சென்ற வாக்காளர்களை திரும்ப தம்பக்கம் இழுக்கும் ஒரு தேர்தல்
ஆயுதமாகவே அது பயன்படுத்தப்பட இருக்கிறது.
இந்த கோரிக்கை மிகவும் பிரபலமாகி உள்ளது.
Infratest
அமைப்பின் ஒரு விசாரணையின்படி, குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தின் அமுலாக்கம் கட்சி விசுவாசிகளின் ஆதரவும்
சேர்ந்து மக்கள் தொகையில் 80 சதவீதத்தினரால் அது வரவேற்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளத்திற்கான
கோரிக்கையானது இடது கட்சியை ஆதரிக்கும் 91 சதவீத வாக்காளர்களின் ஆதரவையும், சமூக ஜனநாயகக்
கட்சியை ஆதரிக்கும் 86 சதவீதத்தினரின் ஆதரவையும் மற்றும் 85 சதவீத பசுமைக் கட்சி வாக்காளர்களின்
ஆதரவையும் பெற்றிருக்கிறது. மேலும் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்துவ
சமூக யூனியன் மற்றும் தாராளவாத சுதந்திர ஜனநாயக கட்சியினர்
(FDP)
குறைந்தபட்ச கூலித் திட்டம் அமைப்பதை உத்தியோகபூர்வமாக நிராகரித்திருந்தாலும் கூட, கிறிஸ்துவ ஜனநாயக
யூனியன்/கிறிஸ்துவ சமூக
யூனியனின் 75 சதவீத ஆதரவாளர்களும் மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கும் 68 சதவீதத்தினரும்
சம்பளத்தின் குறைந்தபட்ச வரையறைக்கான கோரிக்கைக்கு உடன்படுகின்றனர்.
எவ்வாறிருப்பினும், அடிப்படையில், பெயரில் உள்ளது போன்று ஒரு குறைந்தபட்ச
சம்பளத் திட்டத்தின் உண்மையில் அமுலாக்கும் குறைந்தளவிலான உள்நோக்கம் கூட சமூக ஜனநாயகக் கட்சியிடம்
இல்லை. அதே நேரத்தில், மேலும் சம்பளத்தை குறைக்காமல் இருப்பதற்கான சமூக எதிர்ப்பை
திசைத்திருப்புவதற்காக மட்டுமே இந்த கோரிக்கை உண்மையில் பயன்படுத்தப்படுகிறது.
ஜேர்மனியில் அதிகரித்து வரும் மலிவு-கூலி பிரிவு
தெளிவாக்கப்பட வேண்டிய முதல் குறிப்பு என்னவென்றால், ஒரு உத்தியோகபூர்வ
குறைந்தபட்ச சம்பளத் திட்டம் தேவை என்பதற்கான நிலைமையே சமூக ஜனநாயகக் கட்சியால் தான் உருவாக்கப்பட்டது.
பல தசாப்தங்களாக, ஜேர்மனியின் அரசியல் கலந்துரையாடல்களில் அதுவொரு முக்கிய கருத்தாக எப்போதும்
இருந்ததில்லை. பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊதியங்கள், அதனுடன் தொடர்புடைய
சாதகமான தொழிலாளர் சட்டங்கள் மற்றும் ஒரு விரிவான சமூக பாதுகாப்பு முறை ஆகியவை மலிவு-சம்பள துறையின்
உருவாக்கத்தை தடுத்தன. பூகோளமயமாக்கல், ஜேர்மன் ஐக்கியம், முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் இருந்து கனரக
தொழில்துறை அழிக்கப்பட்டது மற்றும் பெருமளவில் வேலைவாய்ப்பின்மை உருவானது ஆகியவைகளின் விளைவாக அந்த
சமூக வெற்றிகளை தகர்க்க பெரிய தொழில்வழங்குனர் அழுத்தத்தை அதிகரித்தனர்.
1998ல் ஆரம்பித்து, ஹெர்கார்ட் ஷ்ரோடரின் கீழிருந்த சமூக ஜனநாயகக் கட்சி
மற்றும் பசுமை கட்சியின் கூட்டணி அரசாங்கமானது ஒரு கட்டாய மலிவு-சம்பள துறைக்கான நிலைமைகளை
உருவாக்கியது. பல்வேறு தொழிலாளர் மற்றும் சமூகநல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய
"ஹார்ட்ஸ் சட்டங்கள்"
("Hartz laws")
சமூக செலவுகளைக் குறைத்தது மட்டுமில்லாமல்
வேலையில்லாதவர்களை மோசமாக ஊதியம் அளிக்கும் தொழில்களை ஏற்கும் கட்டாயத்திற்கு தள்ளியது.
அன்றிலிருந்து, மலிவு-சம்பள தொழில்கள் ஜேர்மனியில் படிப்படியாக பரவின.
டியூஸ்பேர்க்-எஸ்ஸன் நகர பல்கலைக்கழகத்தின் பணி மற்றும் கல்விக்கான பயிலகம்
நடத்திய ஆய்வின்படி, பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின்
(Organisation of Economic Cooperation and
Development-OECD)
மலிவு சம்பள வரையறையை அடிப்படையாக கொண்டால், நடுத்தர
சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கு அளவு பெறுவோர் அதாவது மொத்த தொழிலாளர்களில் 2006 இல் சுமார்
6.6 மில்லியன் தொழிலாளர்கள் அல்லது 22.6 சதவீதத்தினர் மலிவு-சம்பள துறையில் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அதே ஆண்டு, 2 மில்லியன் மக்கள் (சுமார் முழு நேர பணியில் இருப்பவர்களில்
பத்தில் ஒருவர்) ஒரு மணி நேரத்திற்கு மொத்தமாக 7.5 யூரோவிற்கும் குறைவாக சம்பாதித்தனர், இந்த அளவு
2004ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 சதவீத உயர்வாகும். பகுதி நேர தொழிலாளர்களையும் சேர்த்தால், இந்த
எண்ணிக்கை 5.5 மில்லியனாக உயர்ந்துவிடும். இதில், சுமார் 2 மில்லியன் தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு
5 யூரோவிற்கும் குறைவாக சம்பாதித்தனர், இது 2004ம் ஆண்டை விட 20 சதவீதம் உயர்வாகும்.
" குறும் பணி"
(Mini Job)
என்றழைக்கப்படுவதில் சுமார் 7 மில்லியன் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள், இதில் மாதத்திற்கு 400
யூரோவிற்கு அதிகமாக இவர்களால் சம்பாதிக்க முடிவதில்லை. அதே நேரத்தில், 2 மில்லியனுக்கும் மேலானவர்கள்
இந்த குறும் பணியை தங்களின் முதன்மை தொழிலுடன் சேர்த்து செய்து வருகின்றனர் - அதாவது ஒரு பணி மட்டும்
வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. IG Metall
தொழிற் சங்கத்தின் புள்ளிவிபரங்களின்படி, தற்காலிக
வேலைவாய்ப்பில் தற்போது 1 மில்லியனுக்கும் மேலானவர்கள் இருக்கிறார்கள் எனும் போதிலும், பகுதி நேர
வேலை 11.2 மில்லியனாக அதிகரித்திருக்கிறது. இது போன்ற தற்காலிக தொழிலாளர்களில் 90 சதவீதத்தினர்
ஒரு மணி நேரத்திற்கு 7 யூரோவிற்கும் குறைவாக ஊதியத்தை பெறுகிறார்கள்.
இந்த நிலைக்கு காரணமான சமூக ஜனநாயகக் கட்சி, இவர்களின் நிலையை
மாற்றுவதற்கு குறைந்தபட்ச ஆர்வம் கூட கொண்டிருக்கவில்லை. தொழிற்சங்கங்களை போன்றே, நீண்ட காலமாக
சமூக ஜனநாயகக் கட்சியும் எந்தவிதமான உத்தியோகபூர்வ குறைந்தபட்ச கூலித் திட்டத்தையும் எதிர்த்து வருகிறது.
2006ன் தொடக்கத்தில், முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும், 2007 வரை தொழிலாளர்
பேரவை மந்திரியாக இருந்தவருமான பிரன்ஸ் முன்டபெயரிங், சில தொழில்துறைகளில் ஒரு மணி நேரத்திற்கு 5
யூரோவிற்கும் குறைவாக குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்க அறிவுறுத்தினார். இறுதியாக, கடந்த ஆண்டு, சமூக
ஜனநாயகக் கட்சியின் ஹம்பேர்க் கட்சி மாநாடு ஒரு மணி நேரத்திற்கு 7.50 யூரோவை பொதுவான
குறைந்தபட்ச சம்பளமாக பரிந்துரைத்தது. இது போன்றதொரு குறைந்தபட்ச சம்பளம் என்பது உயிர்வாழ
மட்டுமே போதுமானதாகும், ஆனால் எந்தவகையான சாதாரண குடும்பத்திற்கும் அல்லது சமூக வாழ்விற்கும் இது
நிச்சயமாக போதிய அளவிலானதல்ல.
அனைத்திற்கும் மேலாக, தற்போது மேலும் மேலும் தொழிலாளர்கள் பிழைப்பாதார
அளவிற்கும் குறைவான வருவாயை பெறுவதாலும் மற்றும் கூடுதல் அரசாங்க நிதி உதவிகளை பெற
நிர்பந்திக்கப்படுவதாலும் சமூக பதட்டங்கள் கட்டுப்பாட்டை மீறும் மற்றும் சமூக செலவுகள் மீண்டும் ஒரு சிக்கலான
வறட்சியைக் காணும் என்ற பயத்தால் இறுதியாக சமூக ஜனநாயகக் கட்சி இதுபோன்றதொரு கொள்கையை ஏற்றுக்
கொண்டது. உயிர்வாழ மட்டுமே போதுமான இந்த சம்பளம் என்பது
Florian Gerster (சமூக
ஜனநாயகக் கட்சி) ஆல்
உருவாக்கப்பட்ட புதிய தபால்துறை நிறுவனம் உட்பட சில நிறுவனங்களில் வியாபார மாதிரியின் ஒரு பகுதியாகவே
இருக்கிறது.
குறைந்தபட்ச தொழில் சட்டங்கள்
கிறிஸ்துவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்துவ
சமூக யூனியன் மற்றும் தொழில்வழங்குனர் அமைப்புகளின் எதிர்ப்புகளை சந்தித்திருக்கும் சமூக ஜனநாயகக் கட்சி ஒரு
பொதுவான குறைந்தபட்ச கூலியான 7.50 யூரோவை வலியுறுத்தக் கூட தயாராக இல்லை. இதற்கு மாறாக,
2007 ஜூனில், 1952 ஆம் ஆண்டின் குறைந்தபட்ச தொழில் சூழல்கள் சட்டங்களை மாற்றி அமைப்பதன் மூலம் சில
தனிப்பட்ட தொழில்துறைகளில் மட்டும் குறைந்தபட்ச கூலிகளை அமுலாக்க அது கூட்டு ஐக்கிய குழுவிடம் ஒத்துக்
கொண்டது.
எவ்வாறிருப்பினும், பலன்தர முடியாத மருந்து போன்று தொழில்துறை
மந்திரி ஓலாப் ஷொல்சால் (சமூக ஜனநாயகக் கட்சி) சமர்ப்பிக்கப்பட்ட குறைந்தபட்ச தொழில் சூழல்
சட்டங்களின் மறுபதிப்பு அறிக்கை மீதான கிறிஸ்துவ ஜனநாயக யூனியனின் உக்கிரமான எதிர்ப்பானது, அதுவொரு
வெற்று அறிக்கை என்பதை புலப்படுத்துகிறது. அதிபர் மாளிகையும் மற்றும் கிறிஸ்துவ சமூக யூனியனின் தலைமையிலான
பொருளாதாரத்துறை அமைச்சகமும் உடனடியாக பிற அரசாங்க துறைகளிடமிருந்து தொழில்துறை அமைச்சகம்
உதவியை பெறுவதில் குறுக்கிட்டது, இதில் பொருளாதாரத்துறை அமைச்சகம் மட்டும் 35 எதிர்ப்புகளை
சமர்ப்பித்தது.
எவ்வாறிருப்பினும், குறைந்தபட்ச கூலி அமுலாக்கம் என்பது
Deutsche Post
ஏற்கனவே தோல்வி அடைந்தது. 2007ம் ஆண்டு இறுதியில், ஜனவரி 1 முதல்
குறைந்தபட்ச சம்பளத்தை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கான உடன்படிக்கையில்
Deutsche Post
மற்றும் Verdi
தொழிற்சங்கத்திற்கு இடையே ஏற்பட்ட உடன்பாட்டை ஒரு நிபந்தனைக்குட்பட்ட தீர்வாக அறிவிக்க பாராளுமன்றம்
முடிவெடுத்தது. தபால் பட்டுவாடா தொழிலாளர்கள் கிழக்கு ஜேர்மனியில் 9 யூரோவும், மேற்கு ஜேர்மனியில்
9.80 யூரோவும் பெறவிருந்தனர். அதே போல கடிதம் பிரிப்பாளர்கள் கிழக்கில் 8 யூரோவும், மேற்கில்
8.40 யூரோவும் பெறவிருந்தனர். ஆனால் இந்த முடிவு பெரிய தொழில்வழங்குனர்களின் உக்கிரமான எதிர்ப்பை
சந்தித்தது.
அரசு கட்டுப்பாட்டில் இருந்த
Deutsche Post
உடன் போட்டியிடும் தனியார் பட்டுவாடா நிறுவனங்கள் அவைகளால்
உருவாக்கப்பட்ட "புதிய
கடித மற்றும் பட்டுவாடா சேவைகள் சங்கம்"
எனும் பேரவை சங்கத்துடன் சம்பள விகிதங்கள் குறித்து பேரம் பேசின. இந்த சம்பள விகிதங்கள்
Verdi மற்றும்
Deutsche Post
ஆல் ஒத்துக்கொள்ளப்பட்ட அளவை விட 2 யூரோவிற்கும் மேலாக குறைவாக
இருந்தன. ஸ்பிரிங்கர் வெளியீட்டாளர் நிறுவனத்தை சேர்ந்த தபால் நிறுவனமான
Pin,
நெதர்லாந்து தபால் நிறுவனமான
TNT
மற்றும் கூரியர் மற்றும் எக்ஸ்பிரஸ் போஸ்டல் சேர்வீசஸ் (BdKEP)
ஆகியவை குறைந்த கூலியை அறிமுகப்படுத்திய
Deutsche Post
இற்கு எதிராக வழக்கு தொடர்ந்து, பேர்லின் நிர்வாக நீதிமன்றத்தில் அவை
வெற்றியும் பெற்றன.
தற்போதைய ஒப்பந்த உடன்படிக்கைகளை தள்ளி வைக்க அரசாங்கம் விதிமுறைகளை
பயன்படுத்த முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் தனியார் தபால் நடத்துனர்களுக்கும் மற்றும்
அவர்களாலேயே நிதியளித்த தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை ஒரு முறையான உடன்படிக்கையாக
அது அங்கீகரித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக அரசாங்க தொழிலாளர் அமைச்சகம் ஓர் எதிர் மனுவை பதிவு
செய்துள்ளது. அதாவது அடுத்த ஆண்டு வரை தபாற்துறை தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி என்பது
நிச்சயமற்றதாகவே இருக்கும்.
தொழில்வழங்குனர் அமைப்புகள் மற்றும் குறைந்தபட்ச கூலி
Deutsche Post இன்
குறைந்தபட்ச சம்பளத்தை சுட்டிக்காட்டி "அரசாங்கத்தால்
அமுலாக்கப்பட்ட சம்பள அளவுகள் மீதான துரதிஷ்டவசமான தவறானது பெருமளவிலான பணிகளை அழிப்பதில்
ஆதாரமாக விளங்குகிறது என முக்கிய தொழில்வழங்குனர் அமைப்புகள் நான்கு மிகப் பெரிய அமைப்புகளுடன்
இணைந்து குறைந்தபட்ச சம்பள திட்டத்தை உக்கிரமாக எதிர்த்தன. குறைந்தபட்ச சம்பள திட்டத்திற்கு
எதிர்நடவடிக்கையாக ஸ்பிரின்கர் வெளியீட்டாளர் நிறுவனம் அதன் மூலதனத்தை நிறுவனத்திலிருந்து திரும்ப பெற்றுக்
கொண்ட பின்னர், Pin
குழுமத்தின் பல பிராந்திய சேய் நிறுவனங்கள் திவாலானதை அவை குறிப்பிட்டு
காட்டின.
தொழில்துறை மந்திரி ஷொல்சால் ஒரு மிகப் பெரிய வெற்றி என்று
குறிப்பிடப்பட்டதும் மற்றும் ஊடகங்களால் பெருமளவில் விவரிக்கப்பட்டதுமான, தற்காலிக தொழில் முகாமைகளில்
குறைந்தபட்ச சம்பள கோரிக்கையானது இந்த தொழில்துறையில் நிலவும் பெரியளவிலான சுரண்டலை முடிவுக்கு
கொண்டு வந்துவிடாது. இந்த பிரிவில் இருக்கும் இரண்டு மிகப் பெரிய தொழில்வழங்குனர் அமைப்புகள், 2006 இன்
மத்தியில் குறைந்தபட்ச கூலியை அமுலாக்குவதற்கான ஒப்பந்தத்தை உருவாக்க ஏற்கனவே சங்கங்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றன. இது கிழக்கில் 6.36 யூரோ மற்றும் மேற்கு ஜேர்மனியில் 7.31 யூரோ
என்ற அளவில் குறைந்தபட்ச கூலித் திட்டத்தை உள்ளடக்கி உள்ளது.
2004ல் இருந்து, தற்காலிக தொழிலாளர்கள் மீதான சுரண்டலுக்கான சட்டரீதியான
தடைகளை சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமை கட்சி கூட்டணி பெருமளவில் நீக்கியபோது, நிறுவனங்களின்
இலாபங்களுடன் இந்த பிரிவில் வேலைவாய்ப்பும் அதிகரித்தது. அண்ணளவாக 1,500 தற்காலிக தொழிலாளர்
முகாமைகள் 1 மில்லியன் தொழிலாளர்களின் மோசமான பொருளாதார சூழலைப் பயன்படுத்தி அவர்களை பணியில்
நியமித்து, அதன்மூலம் பெருமளவில் இலாபங்கள் ஈட்டின.
2006 இல், 75 சதவீத அனைத்து புதிய பணிகளும் தற்காலிக தொழிலாளர்களால்
நிரப்பப்பட்டன. இது 15 முன்னணி தொழிற்துறை நிறுவனங்களுக்கு உதவியளித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக,
சுவிட்சர்லாந்து நிறுவனம் Adecco,
அமெரிக்க நிறுவனமான Manpower
மற்றும் நெதர்லாந்து நிறுவனமான Randstadt
ஆகியவை 12 பில்லியன் யூரோ மதிப்பில் 40 சதவீத வருடாந்த விற்பனை வருமானத்தை பெற்றிருக்கின்றன. இந்த
மூன்று முன்னணி தொழில் நிறுவனங்களின் இலாபங்கள் பல இலட்சக்கணக்கான யூரோவில் மதிப்பிடப்படுகின்றன
என்பதுடன், அவை 60 சதவீதம் வரை ஆண்டு வளர்ச்சியையும் எட்டி இருக்கின்றன.
Adecco இன் வருடாந்த விற்பனை
மட்டும் 2007ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 24 சதவீதம் அதிகரித்து 251 மில்லியன் யூரோவை எட்டியதன்
மூலம் அதற்கு 28 மில்லயன் யூரோ இலாபம் கிடைத்துள்ளது. 2006ல் இருந்து,
Adecco தொழில்
கல்வி பயிலகத்தின் தலைவரான வொல்ஃப்காங்க் க்ளிமெண்ட் (சமூக ஜனநாயகக் கட்சி) சம்பளம் பெற்று
வருகிறார். 2002 இல் இருந்து 2005 க்கு இடையே, சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமை கட்சி கூட்டணியில்
பொருளாதார மற்றும் தொழில் மந்திரியாக பதவி வகுத்த க்ளிமெண்ட், தற்காலிக வேலைவாய்ப்பு சந்தைகளுக்கு
இருந்த தடைகளை தகர்த்ததில் முக்கிய பங்கு வகித்தார்.
தொழில் சங்கங்களும் மற்றும் குறைந்தபட்ச சம்பளமும்
உத்தியோகபூர்வ குறைந்தபட்ச சம்பள திட்டம் ஒப்பந்த பேரபேசும் முறையின்
அதிகாரத்தை பாதிக்கும் என்பதால் ஜேர்மன் சங்க கூட்டமைப்பை சேர்ந்த சங்கங்கள் குறைந்தபட்ச சம்பளத்தை
உத்தியோகபூர்வமானதாக மாற்றுவதாக எதிர்கின்றன. சம்பளங்களை கணக்கிடுவது மற்றும் நிர்மாணிப்பதை அரசு
கட்டுப்பாட்டில் இருந்து தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டிற்கு மாற்ற வேண்டும் என அவை கோருகின்றன.
அதேவேளையில், IG
Metal தொடர்ந்து பின்னடித்துக்கொண்டிருக்கும் போதினும்,
ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு (DGB)
தற்போது ஒரு குறைந்தபட்ச கூலி திட்டத்திற்கு ஆலோசனை வழங்கி வருகிறது. தற்போதைய ஒப்பந்த
உடன்படிக்கைகளை இணைக்காமல் பொதுவாக தொழில்துறையில் 7.50 யூரோ குறைந்தபட்ச சம்பளத்தை மட்டுமே
சட்டமன்ற உறுப்பினர்கள் அறிமுகப்படுத்துவார்கள் என அதன் தலைவர் பெர்ட்ஹோல்டு ஹூபர் வலியுறுத்தி
இருக்கிறார். அந்த தொழில்துறைகளில் ஒப்பந்த உடன்படிக்கைகளுடன், ஒத்துக்கொள்ளப்பட்ட குறைந்தபட்ச
சம்பளங்களின் அளவு குறைந்தபட்ச சம்பள திட்டத்தில் அமைக்கப்பட வேண்டும், இதன்மூலம் ஒப்பந்ந பேர முறை
சுதந்திரமாக செயல்படுவதை பாதுக்காக்க முடியும்.
தொழிற்சங்கங்களை பொறுத்த வரை, தமது அமைப்பின் நலன்களை பாதுகாப்பதே
முக்கிய பிரச்சனையாக உள்ளது. ஆரம்பத்தில், மூலதனத்திற்கும் மற்றும் குறைந்தபட்ச சம்பளத்தால் அச்சுறுத்தப்படும்
தொழிலாளர்களும் இடையிலான மத்தியஸ்தர் பங்கை வகிக்க முடியும் என கருதியபோதிலும், தற்போது பெருமளவிலான
தொழிலாளர்களுக்கு ஒரு உத்தரவாதத்துடன் கூடிய ஒப்பந்த உடன்படிக்கையுடன் உள்ள வேலைகளில் இல்லாததால்,
தொழிற்சங்கங்களின் நிலை அபாயத்திற்குள்ளாகியுள்ளது. 2006ல் அந்த சங்கங்களே நிலைகுலைந்திருந்தன, மேற்கு
ஜேர்மனியில் வேலைவாய்ப்பு பெற்றிருந்த 65 சதவீதத்தினர் மட்டுமே ஒப்பந்த உடன்படிக்கையை பெற்றிருந்தனர்
என்பதுடன் கிழக்கில் வெறும் 54 சதவீதத்தினர் மட்டுமே இந்நிலையில் இருந்தனர்.
இவ்வாறு ஜேர்மன் கூட்டமைப்பு சங்கத்தை சேர்ந்த சங்கங்கள் தங்களின் பங்களிப்பை
"இணை மேலாளர்களாக"
இருக்கும்வரை அவைகளால் குறைந்தபட்ச சம்பளத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. அவை ஒரு மணி நேரத்திற்கு
5 யூரோவிற்கும் குறைவான சம்பளத்தை ஒத்துக் கொண்டிருக்கின்றன. சான்றாக, கிழக்கு ஜேர்மனியிலுள்ள தூருங்கியாவில்
சங்கத்தால் நிர்மானிக்கப்பட்ட ஒரு பாதுகாவலரின் ஊதியம் கடந்த ஆண்டு ஒரு மணி நேரத்திற்கு 4.38
யூரோவாக இருந்தது. ஆனால் அருகிலுள்ள சாக்சோனியில், ஒரு புதிய முடிதிருத்துநர் ஒரு மணி நேரத்திற்கு வெறும்
3.82 யூரோ மட்டுமே ஊதியமாகப் பெறுகிறார்.
ஒவ்வொரு மனிதரும் கெளரவத்துடன் வாழ்வதற்கு உத்திரவாதம் அளிக்கும் ஒரு
குறைந்தபட்ச வருமானத்தை பெறுவதற்கு சமூக ஜனநாயகக் கட்சியும், தொழிற் சங்கங்களும் தகுதி இழந்து
விட்டன. இதற்கு, பெரிய தொழில்வழங்குனரின் இலாப நலன்களுக்கு அப்பாற்பட்டு மனித தேவைகளை முன்னிறுத்தும்
அடிப்படை சமுதாய மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. ஆனால் இவற்றை அவ்விரு பிரிவுகளும் நிராகரித்து வருகின்றன.
பொருளாதார ஆய்வு பயிலகத்தின் தலைவரும், அரசாங்க ஆலோசகரும் மற்றும்
தீவிர நவ-தாராண்மை கொள்கையாளருமான ஹன்ஸ்-வெர்னர் சின், கட்டுப்பாடற்ற பொருளாதாரத்தை சமூக
சமத்துவத்துவத்துடன் சமரசப்படுத்த முடியாது என்ற அவரின் நம்பிக்கையை நேர்மையான வகையில் வெளிப்படையாக
வெளிப்படுத்தி இருந்தார். அவரின் பார்வையில் உழைப்பின் விலையும், வினியோகம் மற்றும் தேவை ஆகியவற்றிற்கான
விதிகளின் அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும். இது சமூக நீதியுடன் எவ்விதத்தில் தொடர்புடையது என்று
கேட்கப்பட்ட போது, அவர், "சந்தையால்
நிர்மாணிக்கப்படும் சம்பளம் சமத்துவத்தின் கோட்பாட்டை உணராது."
என்று பதிலளித்தார். |