World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்ா : பிரான்ஸ்

France: government, unions prepare large-scale pension cut

பிரான்ஸ்: அரசாங்கம், தொழிற்சங்கங்கள் பாரிய அளவில் ஓய்வூதியக் குறைப்புக்களுக்கு தயார் செய்கின்றன

By Kumaran Ira and Alex Lantier
5 May 2008

Back to screen version

ஏப்ரல் 28ம் தேதி பிரெஞ்சு தொழில்துறை மந்திரி சேவியர் பெர்த்திரோண்ட், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் முதலாளிகள் அமைப்புக்கள் ஆகியவற்றை சந்தித்து ஓய்வூதியக் குறைப்புக்களுக்கு வழிகாட்டும் நெறிகளை அமைப்பதற்கு மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பொதுத்துறை, தனியார்துறை ஆகியவற்றில் இருக்கும் அனைத்து தொழிலாளர்களும் ஓய்வூதிய நலன்கள் பெறுவதற்கு 2012 முதல் இப்பொழுது உள்ள 40 ஆண்டுகளுக்கு பதிலாக 41 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும். ஏப்ரல் 24ம் தேதி தொலைக்காட்சி பேட்டியில் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி "நீடித்த உழைப்பு, நீடித்த ஊதியம்" என்பது ஒன்றுதான் தீர்வு எனக் கூறிய சார்பு உரையை உறுதிப்படுத்தும் வகையில் இது உள்ளது.

தற்போதைய ஓய்வூதிய சீர்திருத்தத்தின் பிரதான நிலைப்பாடு அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த Jean-Pierre Raffarin ஆல் மேற்கொள்ளப்பட்ட 2003 ஓய்வூதியக் குறைப்புக்களால் கட்டாயமாக்கப்பட்டிருந்தன; அதில் மக்கட் தொகை போக்கின் அடிப்படையில் அதிக மாற்றம் இல்லை என்றால் 2008ம் ஆண்டில் இருந்து பணிக்காலத்தில் சம்பளம் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதன் விளைவாக "சமூகப் பங்காளிகள்" --தொழிற்சங்கங்கள், முதலாளிகள் கூட்டமைப்புக்களால் சீர்திருத்தங்கள் திட்டமிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது மற்றும் அரசானது சாதாரண நிர்வாக ஆணைகளாக செயல்படுத்தப்படும்; இதற்கு பாராளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டிய தேவையில்லை. ஏப்ரல் 28 கூட்டத்திற்கு பின்னர் பெர்த்திரோண்ட் துவக்க சீர்திருத்த வரைவுக் கருத்துக்களை, "2008 ஓய்வூதியத் திட்டங்கள் பற்றிய கூட்டம்" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார்.

இந்த வரைவின்படி பணியில் இருக்க வேண்டிய கால அதிகரிப்பு, "National Institute for Statstics and Economic Studies, INSEE குறிப்பிட்டிருக்கும் ஆயுட்கால எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் நியாயப்படுத்தப்படுகிறது. ஓய்வூதியத் திட்டங்களில் இருக்கும் மோசமான நிதி நிலைமையும் இந்த தேவையை உறுதி செய்கிறது" என்று கூறுகிறது.

இந்த வரைவுத் திட்டம் சில சிறிய, அதிக பூச்சுக்கள் நிறைந்த நடவடிக்கைகளையும் வறிய ஓய்வு பெற்றவர்களுக்கு அறிவிக்கிறது. ஒரு நடவடிக்கையின்படி ஓய்வூதியங்களில் 60 சதவீதம் மரணம் அடைந்து விட்ட ஓய்வூதியக்காரருடைய மனைவி அல்லது கணவருக்கு 2011 வரை கொடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இது 56 சதவிகிதத்தில் இருந்து சற்று அதிகமாகும். மற்றொரு நடவடிக்கைப்படி, முழு நேரமும் குறைந்த ஊதியத்தில் உழைத்த தொழிலாளிக்கு (SMIC) இல் குறைந்தது 85 சதவீதமாவது உழைத்த காலப் பணவீதத்தை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது; இந்த நடவடிக்கை ஒப்புமையில் மிகக் குறைந்த ஊதியத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்குத்தான் நலனைக் கொடுக்கும்; அவர்களோ பல நேரமும் நீடித்த கால ஒழுங்கற்ற அல்லது பகுதி நேர வேலைகளைத்தான் கொண்டிருந்தார்கள்.

இச்சீர்திருத்தத்தின் குறிப்பிடத்தக்கது 57 வயது கடந்த தொழிலாளர்களுடைய பணி நிலைமை பற்றியது ஆகும்; இவர்கள் பல நேரமும் முன்கூட்டியே ஓய்வு எடுக்குமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்; அதையொட்டி நிறுவனங்கள் இளவயது, குறைவூதிய தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக் கொண்டு அவர்களுடைய ஓய்வூதியத்தையும் குறைக்க முடியும். 55 வயதிற்கு மேல் இருப்பவர்களுடைய வேலையில் இருப்போர் விகிதம் பிரான்சில் 38.1 என்று இருப்பது ஒரு அடையாளம் ஆகும்; ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரியோ 43.6 என்று உள்ளது. இதுவரை இந்த தொழிலாளர்கள் வேலை தேடுவதில் இருந்து விலக்கீடு அளிக்கப்பட்டனர். (ஞிவீsஜீமீஸீsணீtவீஷீஸீ பீமீ ஸிமீநீலீமீக்ஷீநீலீமீ பீணினீஜீறீஷீவீஞிஸிணி). வேலையில் இருந்து நீக்கப்பட்ட பின் அவர்கள் சட்டபூர்வ ஓய்வு வயது வரை வரும் வேலையின்மை காப்பீட்டிற்கு (Assurance-Chômage) அனுப்பப்படுவர்; அதன் பின் சாதாரண ஓய்வூதியங்களையும் பெறுவர்.

இந்த வரைவு DRE வழங்கப்படுவதற்கு குறைந்தபட்ச வயது எவ்வளவு என்று குறிப்பிடாமல் அதிகரிக்கும் திட்டத்தை கொண்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு இழக்கப்பட்ட காலாண்டுக்கு 5 சதவீத ஓய்வூதியக் குறைவு என்ற நிலையில், குறிப்பிட்ட காலத்திற்கு தேவையான ஊதியத்தை பெறத்தவறிய தொழிலாளர்கள் மீது பிரெஞ்சு ஒய்வூதிய திட்டங்கள் கடும் நிதி அபராதங்களை திணித்தன. அத்தகைய திட்டங்கள் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுடைய ஓய்வூதியங்களை கடுமையாக பாதிக்கும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் பிரெஞ்சு ஆளும் உயரடுக்கிற்கும் இடையே இருக்கும் இந்த ஒத்துழைப்பு முழுவதிலும், பொது மக்கள் பார்வையில் இருந்து மொத்தம் எவ்வளவு பணம் ஒதுக்கப்படும் என்பது மறைத்துத்தான் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தயாரிக்கப்படுவதோ, தொழிலாள வர்க்க ஓய்வு பெற்றோரின் நிதியில் இருந்து பெரும் நிதிகள் அரசு கருவூலத்திற்கு மாற்றப்படும்; இறுதியில் பிரெஞ்சு பெருநிறுவனங்களின் அடி மட்டத்திற்கு செல்லும்.

INSEE கருத்தின்படி பிரான்சில் கிட்டத்தட்ட 13.5 மில்லியன் ஓய்வூதியக் குடிமக்கள், மக்கட்தொகையில் 20 சதவீதத்தினர் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 500,000 தொழிலாளர்கள் ஓய்வு பெறுகின்றனர்; இந்த எண்ணிக்கை தலைமுறை ஓய்வுபெறும்போது குழந்தை பெருகுவது போல் 700,000 என அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2006ல் ஓய்வூதியங்களில் செலவுத் தொகை கிட்டத்தட்ட 235 பில்லியன் யூரோக்கள் என்று இருந்தது; இதில் 230 பில்லியன் யூரோக்கள் முதலாளிகள்-தொழிலாளர்கள் அளிப்புத் தொகை மூலம் வந்தது; எஞ்சிய 4.2 பில்லியன் யூரோக்கள் மட்டும்தான் அரசால் கொடுக்கப்பட்டது.

நவம்பர் 2007ல் தயாரிக்கப்பட்ட புள்ளி விவர ஆவணங்களின்படி, அரசாங்கத்தின் COR (Le Conseil d'orientation des retraites --COR) என்னும் ஓய்வூதிய சார்பு ஆலோசனைக்குழு ஓய்வு பெற்றுள்ள மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாகியிருந்தாலும், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ஓய்வூதியங்களுக்காக செலவழிக்கப்படும் தொகை வருங்காலத்தில் நிரந்தரமாக 13 சதவிகிதம் என்றுதான் இருக்கும் என்று கணித்துள்ளது. இதை ஏற்றாலும், ஒய்வூதிய நிதிக்கு பற்றாக்குறை 2015 ல் 15.1 பில்லியன் யூரோக்கள் என்றும், 2030 ல் 47.1 பில்லியன் யூரோக்கள் என்றும் 2050 ல் 68.8 பில்லியன் யூரோக்கள் என்றும்தான் இருக்கும். இந்தக் கருத்தின் அடித்தளத்தில் இருப்பது பிரெஞ்சு முதாலளித்துவ வர்க்கம் ஓய்வூதியங்களுக்கு செய்யும் செலவு அரசியல் அளவில் எந்த அளவிற்கு இலாபம் தருமோ அந்த அளவிற்கு குறைந்ததாக வைக்கப்படும் என்று அது கொண்டுள்ள உறுதிப்பாட்டின் அடிப்படையில்தான் ஆகும்.

ஓய்வூதியங்களை குறைக்கும் முயற்சியில் பிரெஞ்சு முதலாளித்துவம் பணியில் இருக்க வேண்டிய காலத்தை நீடித்தல் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்; மேலும் தேவைப்படும் பணியில் இருக்க வேண்டிய காலத்தில் இருந்து பணிகாலம் குறைந்து இருந்தால் நிதிய அபராதங்கள் அதிகம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கொண்டுள்ளனர். அத்தகைய சீர்திருத்தம் 1993ல் பிரதம மந்திரி Edouard Balladur ஆல் முதலில் கொண்டுவரப்பட்டது; இதன்படி தனியார் பிரிவுத் தொழிலாளர்கள் 37.5 ஆண்டுகள் என்பதில் இருந்து 40 ஆண்டு காலம் குறைந்தது பணியாற்றியிருக்க வேண்டும் என்று வந்தது. Raffarin ஆல் 2003ல் கொண்டுவரப்பட்ட இரண்டாவது சட்டத்தின்படி 37.5 ல் இருந்து 40 ஆண்டுகள் குறைந்த பணிக்காலம் என்று கொண்டுவந்ததுடன் 2008ல் இருந்து அது 41 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என்றும் கூறியது. கடந்த டிசம்பரில் அரசாங்கம், "சிறப்புத் திட்ட ஒய்வூதியக்காரர்களுடன் இணைந்து இருந்த பொதுத் துறை தொழிலாளர்களை பொது நிதிக்கு மாற்றிவிட்டனர்; சிறப்பு ஓய்வூதிய திட்ட பிரிவு என்பது பொருளாதாரத்தின் மூலோபாய பிரிவுகளான போக்குவரத்து, சக்தி போன்றவையாக இருந்தது.

இந்த சீர்திருத்தங்களின் விளைவாக, OCDE அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி, ஓய்வூதியமாக பெறும், ஒய்வு பெறும் தொழிலாளர்களின் இறுதி ஊதியத்தின் சதவிகிதம் 64.7 என்பதில் இருந்து 51.2 சதவிகிதம் என்று கடந்து விட்டிருக்கிறது.

இந்த குறைப்புக்களை, தன்னுடைய வாழ்க்கைத் தரங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உறுதியான முயற்சிகளுடன் பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் எதிர்கொள்கிறது. 1995ல் பொதுத்துறை தொழிலாளர்கள், பலடூர் செய்த குறைப்புக்களை நீட்டிக்கும் பிரதம மந்திரி அலன் யூப்பேயின் முயற்சிக்கு எதிராக ஒரு மாத காலம் நீடித்த வேலைநிறுத்தத்தின் மூலம் நாட்டை ஸ்தம்பிக்க வைத்தனர். 2003 குறைப்புக்கள்போது இதைபோல் பொதுத் துறை தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது ஆசிரியர்கள் மில்லியன் எண்ணிக்கையில் ஒன்றாக திரண்டனர்; கடந்த ஆண்டு சிறப்பு ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக போக்குவரத்து மற்றும் விசைத் தொழிலாளர்கள் அக்டோபரிலும் நவம்பரிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால் பிரெஞ்சு ஆளும் உயரடுக்கு தொழிலாளர்களை பிரிப்பதிலும், ஒவ்வொரு பிரிவுடன் தனியே பேச்சு வார்த்தை நடத்துவதிலும் வெற்றிகரமாக செயல்பட்டது.

ஓய்வூதிய உரிமைகளை வெற்றிகரமாக பாதுகாப்பதற்கு மத்திய தடையாக இருப்பது தொழிற்சங்கத் தலைமையே. தொழிலாளர்கள் நீண்ட காலத்தில் எதிர்பார்க்கக் கூடிய ஆபத்தைப்பற்றி எச்சரிக்கை கொடுக்காமல் --அது முதலாளித்துவம் அதன் பிரதிநிதிகளுக்கு முற்றிலும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்திற்கு வழி வகுத்திருக்கும்-- தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் தொடர்ச்சியாக வேலைநிறுத்தங்கள் பரவாமல், நெருக்கமாக வந்துவிடாமல் பார்த்துக் கொண்டு பின்னர் அரசாங்கத்துடன் சில சலுகைகளுக்காக பேச்சு வார்த்தைகளை நடத்தின.

தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்திற்கும் இடையே இருக்கும் ஒத்துழைப்பு இப்பொழுது பகிரங்கமாக செய்தி ஊடகத்தில் விவாதிக்கப்டுகிறது. ஏப்ரல் 19 Le Monde தலையங்கத்தில் சார்க்கோசி எழுதியது: "மே 2007 ஜனாதிபதித் தேர்தல்களை தொடர்ந்து, எலிசே அரண்மனைக்கு நான் செல்வதற்கு முன்பே தொழிற்சங்கத் தலைவர்கள், வணிகக் குழுவின் தலைவர்களை நான் சந்தித்து, அவர்கள் கூறுவதைக் கேட்டு நான் எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் பற்றி அவர்களுடைய நிலைப்பாட்டையும் கேட்டான். அப்பொழுதில் இருந்து நான் தொடர்ச்சியாக அவர்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரையும் சந்தித்து வருகிறேன்... சிறப்புத் திட்ட ஓய்வூதிய சீர்திருத்தம் வெற்றிகரமாக கடந்த இலையுதிர் காலத்தில் நிறைவேற்றப்பட்டது; இதற்குக் காரணம் தேசிய மட்டத்தில் ஆழ்ந்த ஒருங்கிணைப்பு மற்றும் சீர்திருத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவுடனும் நடந்த பேச்சுவார்த்தைகள்தாம்."

ஸ்ராலினிச ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள CGT (பிரான்சின் மிகப் பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பு) யின் உயர்மட்ட அதிகாரியான Jean-Christophe Le Duigou சார்க்கோசியை புகழ்ந்து பைனான்சியல் டைம்ஸில் ஒரு பேட்டியில் விடையிறுத்தார்; "சமூக உரையாடலுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதை அவர் புரிந்து கொண்டுள்ளார். நம் நாட்டுச் சமூக நிலைமையில் ஒரு திருப்பு முனையில் நாம் உள்ளோம். நிலைமை மாற வேண்டும் என்று ஒவ்வொருவரும் நம்புகின்றனர்."

இத்தகைய சூழ்நிலையில், வர்க்க உணர்வுடைய தொழிலாளர்கள் அனைவரும் CGT, CFDT இரண்டும் மே 22 அன்று ஓய்வூதியக் குறைப்பிற்கு எதிராக நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டங்கள் பற்றிய திட்டத்தை பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சார்க்கோசியின் செல்வாக்கு பெரும் சரிவிற்கு உட்பட்டுள்ள நிலையில், பொருளாதார இடர்பாடுகள் பெருகியுள்ள நிலையில், இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பிற்கு கணிசமான ஆதரவு இருக்கும். ஆனால் தொழிற் சங்க அதிகாரத்துவத்தின் இலக்கு அரசியல் ஆவேசத்தை வெளிப்படுத்தும் வகையில்தான் இருக்கும்; அரசாங்கத்திற்கு எதிராக ஒரு போராட்டம் என்ற போலித்தனத்தை காட்டும் வகையில்தான் இருக்கும். அதே நேரத்தில் அவை சார்க்கோசியுடன் திரைக்குப் பின் தொழிலாளர்களுக்கு தெரியாமல் சதியில்தான் ஈடுபடும்.

CFDT ஆர்ப்பாட்டத்திற்கு தன் ஆதரவை அறிவித்தவுடன், அதன் ஓய்வூதிய பேச்சுவார்த்தை நடத்துபவரான Gaby Bonnard ஒப்புக் கொண்டதாவது: "பணிக்கால அதிகரிப்பு என்பதற்கு கொள்கை அளவில் நாங்கள் விரோதப் போக்கை காட்டவில்லை."

மே 1ம் தேதி வெளியிட்ட தலையங்கத்தில், Le Figaro தன்னுடைய ஆர்ப்பாட்டத்தை மே 15 மாணவர்கள் எதிர்ப்பு அணியுடன் இணைக்க மாட்டோம் என்று கூறிய தொழிற்சங்க முடிவை வரவேற்று பாராட்டியுள்ளது மே 22 அணிவகுப்பை பற்றி அது எழுதியதாவது: "தொழிற்சங்கங்களின் பார்வையில் இது நம் நாட்டிற்கு தேவையான, கடுமையான ஆனால் முக்கியமான சீர்திருத்தத்திற்கு எதிரான கடைசி கெளரவ நிலைப்பாடு ஆகும்." "தொழிற்சங்கங்களுக்கான உண்மையான விஷயம் உண்மையில் எங்கும் உள்ளது. இவர்கள் உந்து சக்தியாக இருக்கும் பிரான்சில் சமூக நன்னடத்தை அசாதாரண முறையில் புதுப்பிக்கப்பட அவர்கள் கட்டாயம் காலநீட்டிப்பு செய்ய வேண்டும். பிற இடங்களில் செய்துமுடிக்கப்பட்டுவிட்ட அடிப்படையான ஓய்வூதிய சீர்திருத்த பங்களிப்பு இவர்கள் தங்கள் பொறுப்பை உறுதியாக ஏற்றதை வெளிப்படுத்தும் ஒரு சமிக்கையை அனுப்பும்" என்றும் கூறியுள்ளது.

இதற்கு தொழிலாள வர்க்கம் சேர்த்துக் கொள்ள வேண்டியது: "முதலாளித்துவ வர்க்கத்திற்கான அவர்கள் பொறுப்பு" என்பதுதான். உண்மையில், சார்க்கோசியும் முதலாளித்துவ செய்தி ஊடகமும் இடைவிடாமல் வெளிப்படுத்துவது தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் அப்பட்டமான சரணாகதிதான், மற்றும் "அதி இடது" கட்சிகளின் தலைமையில் இருக்கும் போலி ட்ரொட்ஸ்கிச மற்றும் இடது தலைமைகளில் அவர்களுடைய அனைத்து ஆதரவாளர்களின் நீட்டிப்பு ஆகும்.

இத்தகைய பாசாங்குத்தனமான கருத்தான ஓய்வூதியத்திற்கு பணம் இல்லை என்பதை தொழிலாளர்கள் உதறித்தள்ள வேண்டும். ஆண்டு ஒன்றிற்கு 15 பில்லியன் யூரோக்கள் அளவிற்கு உயர்மட்ட வருமான வரம்பில் இருப்பவர்களுக்கு 10 ஆயிரம் சதவீதம் வரிவிலக்கை சார்க்கோசி கொடுத்த ஒரு ஆண்டிற்கு பின்னர், அரசாங்கம் ஓய்வூதியங்களுக்கு 4.2 பில்லியன் செலவழிக்க பணம் இல்லை என்று கூறுகிறது. இப்பொழுதில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பின்னர் 69 பில்லியன் யூரோக்கள் ஓய்வூதியத் திட்டத்தின் பற்றாக்குறை இருக்கும் என்று கூறப்படுவது, நாற்பது பெரிய பிரெஞ்சு நிறுவனங்களின் கடந்த ஆண்டு CAC-40 குறியீடுகளுக்கான இலாபத்தைவிட குறைவானது; அந்தப் பணம் 100 பில்லியன் யூரோக்கள் என்று இருந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்தின் சமூக செலவின வெட்டுக்கள் மற்றும் தொழிற்சங்க தலைமையுடனான அதன் இணைந்த சதி இவற்றிற்கு எதிராக ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்திற்கு அரசியல் கட்சி ஒன்று அமைக்கப்பட வேண்டும். உலக சோசலிச வலைத் தளம் பிரெஞ்சு தொழிலாளர்கள் மாணவர்கள் இடையே இத்தகைய போராட்டத்திற்காக ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கை முன்வைக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved