World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US auto strike enters tenth week

A political balance sheet of the battle at American Axle

அமெரிக்க கார் தொழில் வேலைநிறுத்தம் பத்தாம் வாரத்தில் நுழைகிறது

அமெரிக்கன் ஆக்சிலில் நடைபெறும் போரின் ஓர் அரசியல் இருப்புநிலைக் குறிப்பு

By Jerry White and Barry Grey
30 April 2008

Use this version to print | Send this link by email | Email the author

கார் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் அமெரிக்கன் ஆக்சில் மற்றும் உற்பத்தி நிறுவன தொழிலாளர்களின் கடுமையான போராட்டம் பத்தாம் வாரத்தில் நுழைகையில், நிறுவனத்தின் கோரிக்கைகளுக்கும் தொழிலாளர்களின் தேவைகளுக்கும் இடையேயான மோதலின் சமரசப்படுத்த முடியாத தன்மை என்றுமில்லா வகையில் அதிகமாக வெளிப்படுகிறது.

அமெரிக்க ஆக்சிலின் முதலாளி Richard Dauch தன்னுடைய கோரிக்கையான தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் ஊதிய குறைப்பை ஏற்க வேண்டும் என்பதில் இருந்து விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. அவர் வேலைநிறுத்தத்தை உடைப்பவர்களை அழைத்து வரப்போவதாக அச்சுறுத்துவதுடன் தொழிற்சங்கங்கள் இருக்கும் ஆலைகள் அனைத்தையும் மூடப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். டிட்ரோயிட்டில் உள்ள போலீசார் --இங்குதான் நிறுவனத்தின் தலைமை அலுவலகமும் மிகப் பெரிய ஆலையும் உள்ளது-- பெருகிய முறையில் அச்சுறுத்துதல், ஆத்திரமூட்டல் ஆகியவற்றை மேற்கொள்ள முற்பட்டுள்ளனர்.

தங்கள் பங்கிற்கு தொழிலாளர்கள் நிறுவனத்தின் அனைத்தையும் அபகரிக்கும் கோரிக்கைகளை முறியடிக்க உறுதி பூண்டுள்ளனர்; நிறுவனம் தரத்தயாராக இருக்கும் கிட்டத்தட்ட வறுமை ஊதியத்தில் தங்கள் குடும்பங்களை காப்பாற்ற முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிவர். வாரத்திற்கு $200 மட்டும் என்ற வேலைநிறுத்த உதவித் தொகையில் வாழ்ந்து கொண்டு, உறுதியுடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேலைநிறுத்தத்தில் உள்ள பிரச்சினை அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சினை என்று இல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உலக ரீதியான பிரச்சினையை முன்வைக்கிறது. நிறுவனங்களுடைய போட்டித் தன்மை, இலாபங்கள் என்ற பெயரில் பெருநிறுவனங்களால் கோரப்படுகின்றவாறு, தொழிலாளர்கள் வறுமையில் வாடும் ஊதியத்திற்கு, கடும் உழைப்புக்கூடத்தில் உழைப்பதற்கு திரும்பிச் செல்ல வேண்டுமா, அல்லது தங்கள் சொந்த சுதந்திரமான நலன்களுக்காக உறுதியுடன் நிற்க வேண்டுமா?

இத்தகைய மோதல் உள்ள சமூக முன்னுரிமைகளில் சமரசத்திற்கு இடம் இல்லை. ஊதிய வெட்டுக்களுக்கான, ஓய்வுதிய நலன்கள், சுகாதார நலன்களை ஆகியவற்றை அகற்றுதலுக்கான உந்துதல்கள் என்பவை, மக்களில் ஒரு சிறுபான்மையினருடைய நலன்களுக்காக செய்பவை --அதாவது பெருநிறுவன-- நிதிய தன்னலச் சிறுகுழுக்களை சேர்ந்த மில்லியனர், பில்லியனர்களுக்காக நடத்தப்படுகின்றன. ஊதியங்கள், நலன்கள், வேலைகளை காப்பதற்காக போராடுவது என்பது தொழிலாள வர்க்கத்தின் நலன்களை, அதாவது மக்களின் பரந்த பெரும்பான்மையை பாதுகாப்பதை பிரதிபலிக்கிறது.

அமெரிக்க ஆக்ஸில் வேலைநிறுத்தம் இந்த சமரசத்திற்கு இடமில்லாத சமூக எதிர் நலன்களின் மோதலில் இருந்த விளைந்துள்ளது என்பதால் அது ஒரு நீடித்த, கடுமையான தன்மையை கொண்டுள்ளது.

இப்பூசலில் இருதிறத்தாருடைய சக்திகளுக்கும் துணை நிற்பது என்ன?

அமெரிக்கன் ஆக்ஸிலின் தலைமை நிர்வாகி ரிச்சார்ட் டெளச், தனிப்பட்ட முறையில் $250 மில்லியனுக்கும் மேலாக கடந்த தசாப்தத்தில் சம்பாதித்துள்ளார். (ஆண்டு அடிப்படையில் இது சராசரியாக ஒரு தொழிற்சங்கத்தில் உள்ள ஆக்ஸில் தொழிலாளியின் ஆண்டு வருமானத்தைவிட 417 மடங்குகள் அதிகமாகும். இவருக்கு பக்க பலமாக அமெரிக்க ஆக்ஸிலின் மிகப் பெரிய வாடிக்கை நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் வங்கிகள் மற்றும் பெரும் வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்கள் ஆகியோர் உள்ளனர்.

இதையும் தவிர ஜனநாயகக் கட்சியும் இதற்கு ஆதரவு ஆகும். "மத்தியதர வகுப்பிற்காக" பாடுபடுவதாக கூறும் இக்கட்சி பல தசாப்தங்களாக டிட்ரோயிட்டை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளது. மேயரும் ஒரு ஜனநாயக கட்சிக்காரர்தான்; நகரக் குழுவும் ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்குள்தான் உள்ளது.

இந்த ஆலை டிட்ரோயிட்டில் தொழிலாள வர்க்கம் அடர்த்தியாக இருக்கும் பகுதி ஒன்றான Hamtramck என்ற இடத்தில் உள்ளது. நகரத்தில் இருக்கும் முழு மக்களும் அதைச் சுற்றி இருப்பவர்களும் வேலைநிறுத்தம் பற்றி அறிவர்; தொழிலாளர்களுக்கு பரந்த முறையில் ஆதரவு இருக்கிறது.

அமெரிக்க ஆக்ஸில் ஆலைக்கு மிச்சிகன் Three Rivers இன்னும் நியூ யோர்க் பப்லோவிற்கு அருகே இரு ஆலைகள் உள்ளன. மிச்சிகன் மற்றும் நியூ யோர்க் கவர்னர்கள் இருவருமே ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஆயினும் கூட இரு மாநிலங்களிலும் எந்த பதவியில் இருப்பவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிறிதேனும் உதவ முன்வரவில்லை. மாறாக, அமெரிக்க ஆக்ஸில் உதவிக்கு அழைக்கும்போது, டிட்ரோயிட் நகர அதிகாரிகள் கடமை உணர்வுடன் வேலைநிறுத்த, மறியலுக்கு நடுவே வண்டிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கும் தொழிலாளர்களை கைது செய்யவும் மற்றும் மிரட்டவும் போலீசை அனுப்புகின்றனர்.

ஜனநாயகக் கட்சியின் ஆரம்ப தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், ஹில்லாரி கிளின்டனும் பராக் ஒபாமாவும் சாதாரண தொழிலாளர்களுக்காக போராடுவதாக கூறிவருகையில், இருவரில் எவருமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக பொது அறிக்கை எதையும் வெளியிடவில்லை, கிட்டத்தட்ட வறுமை ஊதியத்தை கொடுக்க முற்படும் நிறுவனத்தின் உந்ததுல் பற்றியும் குறைகூறவில்லை.

இதை எப்படி விளக்குவது?

ரிச்சர்ட் டெளச் போன்றவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் பெருநிறுவன சிறு தன்னலக் குழுக்களுக்குத்தான் ஜனநாயகக் கட்சி முற்றிலும் பிணைந்துள்ளது. பெரு வணிகத்தின் இலாப நலன்களுக்கும் தொழிலாளர்களுடைய தேவைகளுக்கும் இடையே இருக்கும் பூசலில், இக்கட்சி முந்தையவர்களுக்குத்தான் உறுதுணையாக உள்ளது. மக்களை திருப்திப்படுத்த இது பயன்படுத்தும் அலங்காரச் சொற்கள் முற்றிலும் பகட்டானவை. டிட்ரோயிட் போன்ற நகரங்களில் தொழிலாள வர்க்க சமூகம் வசிக்கும் பகுதிகளில் காரில் சென்றால் எந்த அளவிற்கு ஆலைகள் மூடல், வீட்டுக் கடன்களால் முன்கூட்டி மூடப்படல், எகிறி உயரும் எரிவாயு, உணவுப் பொருட்களின் விலைகள் ஆகியவை இவர்களை பாதித்துள்ளன என்பதற்கான நிரூபணத்தை காண முடியும்.

இதன்பின், UAW வேறு உள்ளது. யுனைடைட் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் அதன் தேசிய தலைமையகத்தை டிட்ரோயிட்டில் கொண்டுள்ளது; இந்த நகரத்திற்கு, போர்க்குண தொழிற்சங்க போராட்டங்கள் நடத்தும் இடம் என்ற பெருமிதமான மரபு உள்ளது. மிச்சிகனில் இதற்கு நூறாயிரக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர்.

UAW உறுப்பினர்களை திரட்டி வேலை நிறுத்தம் வெற்றிபெற இந்த சங்கம் என்ன செய்துள்ளது? ஒரே வரியில் கூறவேண்டும் என்றால் -- ஒன்றுமில்லை.

மற்ற ஆலைகளிலும் வேலை நிறுத்தத்தை ஏற்படுத்தவோ பெரும் அளவில் மறியல் கொண்டுவந்து நிறுவனத்தின் முக்கிய ஆலையில் உற்பத்தியை நிறுத்துவதற்கோ UAW ஏதும் செய்யவில்லை என்பதைத்தவிர, ஒரு குறிப்பிடத்தக்க வகையிலான ஆர்ப்பாட்டத்திற்கு கூட சங்கம் அழைப்பு விடவில்லை. நிறுவனத்திற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் இது ஏற்பாடு செய்திருந்த ஒரே ஆர்ப்பாட்டமும் கடைசி நிமிடத்தில் இரத்து செய்யப்பட்டு விட்டது.

UAW நிறுவனத்துடன் இரகசியப் பேச்சு வார்த்தைகளை நடத்துகிறது; எத்தகைய விவாதங்கள் நடைபெறுகின்றன என்பதை பற்றிக் கூட தொழிலாளர்களுக்கு தெரிவிக்க மறுக்கிறது. வேலைநிறுத்த காலத்தில் வெறும் $200 தான் வாரம் ஒன்றுக்கு தொழிலாளர்களுக்கு கொடுக்கிறது; ஆனால் இது முக்கால் பில்லியன் டாலர்கள் உடைய வேலைநிறுத்த ஊதிய நிதியத்தை கொண்டிருக்கிறது

ஊதிய வெட்டுக்களை எதிர்த்தல், வேலைக்குறைப்புக்களை எதிர்த்தல் ஆகியவற்றை செய்வதற்கு பதிலாக சங்கம் மூன்று பெரிய கார் தயாரிப்பாளர்கள் மற்றும் உதிரி பாக தயாரிப்பாளர்களான டெல்பி, டானா போன்றவற்றுடன் ஊதியங்களை பாதியாகக் குறைத்தல் மற்றும் பல ஆயிரக்கணக்கான வேலைகள் இழப்பு ஆகியவற்றிற்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்கன் ஆக்ஸிலுடனும் அத்தகைய உடன்பாட்டை கொள்ள தயாராக இல்லை என்று நம்புவதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா?

UAW அதிகாரத்துவம் கார் நிறுவனங்கள் ஊதிய வெட்டுக்களை சுமத்துவதற்கு உதவியதில் நேரடி ஆதாயத்தை ஏற்கனவே பெற்றுள்ளது; VEBA அறக்கட்டளை நிதி என்றும் பல பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனத்தை GM, Ford, Chrysler ஆகியவற்றிடம் இருந்து அது பெற்றுள்ளது. ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக UAW தன்னை அமெரிக்காவில் மிகப் பெரிய ஒற்றை பங்குதாரர் அமைப்பாக GM, Ford ஆகியவற்றில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. எனவே இந்த நிறுவனங்களின் நிதிய நலன்கள், போட்டித்தன்மை, இலாபம் பெறுதல் ஆகியவற்றில் இதன் உறுப்பினர்களுடைய ஊதியங்கள், நலன்கள், வேலைகள் இழப்பு மூலம் அது பயன் அடையும்.

UAW அமெரிக்க ஆக்ஸிலுடன் வேறுபாடுகள் கொண்டிருந்தால், அது தொழிலாளர் செலவினங்களை குறைப்பதற்காக நிறுவனத்தின் உந்துதலுக்கு உதவுதல் பங்கில் தனக்கு ஏதேனும் உறுதியான நலன்களை கிடைக்குமா என்று காணும் விருப்பத்தில்தான் உள்ளது. தொழிலாளர்களுடைய சீற்றம் மற்றும் உறுதிப்பாட்டை நன்கு அறிந்துள்ள UAW நிறுவனத்தை சற்ற மெதுவாக இலக்குகளை அடைவதற்கு செயல்படக் கூறுகிறது. UAW சர்வதேச பிரதிநிதியும் பேச்சுவார்த்தைகள் குழுவின் உறுப்பினராக இருக்கும் ஒருவர் கடந்த வாரம் Detroit Free Press ல் கூறியதாவது: "சந்தைக்கு நாம் போட்டித் தன்மையுடன் செல்லுவோம் ஆனால் ஒரே நாளில் அது நடக்காது."

இறுதியாக தொழிற்சங்கத்தின் பிளவுற்றவர்களும் உள்ளனர்; அதில் முன்னாள் தொழிற்சங்க அதிகாரிகள், லேபர் நோட்ஸ் வெளியீட்டுடன் தொடர்பு உடையவர்கள், Soldiers of Solidarity போன்ற குழுக்களில் தொடர்பு உடையவர்கள் உள்ளனர். அவர்களுக்கு "இடது" அமைப்புக்களான Workers World Party, International Socialist Organization போன்றவற்றின் ஆதரவுகள் இருக்கிறது.

அவற்றின் பங்கு UAW தான் இன்னமும் ஒரு தொழிலாளர்களின் அமைப்பு, உறுப்பினர்களின் நலன்களுக்கு பாடுபடக்கூடிய தன்மை உடையது என்ற போலிக் கருத்தை வளர்ப்பதுடன் ஜனநாயகக் கட்சியுடன் தொழிலாளர்கள் அரசியல் முறிவை எதிர்ப்பதும் ஆகும்.

எப்பொழுதாவது UAW தலைமையை பற்றி குறைகூறுவதுடன், இவை தொழிலாளர்கள் தங்களை தொழிற்சங்க அதிகாரத்திற்கு தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்றும் போராட்டத்தை சங்கத்தின் பொறுப்பில் விட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. இவ்விதத்தில் UAW வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தி, இறுதியில் அதை விற்றுவிடுவதற்கும் உதவுகின்றன.

தடுப்புக்களுக்கு மறுபுறத்தில் மிச்சிகன், நியூ யோர்க் ஆகிய நகர்களில் இருக்கும் பல நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்; இவர்கள் மகிழ்ச்சியுடன் அமெரிக்க ஆக்ஸில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவியளிக்க வருவர்; ஏனெனில் அவர்களும் ஊதியங்கள், நலன்கள், வேலைகள் ஆகியவற்றில் இதே போன்ற தாக்குதல்களைத்தான் எதிர்கொள்ளுகின்றனர். ஆனால் அவர்கள் அவ்வாறு ஈடுபடாமல் அவர்களைப் பிரதிபலிப்பதாக கூறப்படுபவர்களால் தடுக்கப்படுகின்றனர்.

முன்செல்லும் பாதை

எத்தகைய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்? வேலைநிறுத்தம் தோற்கடிக்கப்படக் கூடாது என்றால் அது விரிவாக்கம் செய்யப்பட்டு தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகள் திரட்டப்பட வேண்டும்.

அத்தகைய வளர்ச்சிக்கு முன் தேவை தொழிலாளர்கள் தாங்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக ஒரு அமைப்பை கட்டமைக்க பாடுபடுதல் ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி, நம்பிக்கைக்கு உகந்த, விசுவாசமாக உழைக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தை UAW விடம் இருந்து எடுத்துக் கொள்ளும் வகையில் தேர்ந்தெடுக்கப்படும் குழுக்களை கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை முன்வைக்கிறது. இந்தக் குழுக்கள் தொழில் முழுவதும் வேலைநிறுத்தங்களை விரிவுபடுத்த வேண்டும். மிகப் பெரிய அளவில் மறியல், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மெக்சிகோவில் இருக்கும் கார்த் தொழிலாளர்களுக்கு, Guanajuato வில் உள்ள அமெரிக்க ஆக்ஸில் ஆலை மற்றும் கனேடிய கார் தொழிலாளர்களுக்கு சிறப்பு முறையீடுகளை செய்ய வேண்டும்.

இந்த தொழில்துறைத் திரட்டு ஒரு புதிய அரசியல் மூலோபாயத்துடன் பிணைக்கப்பட்டால்தான் வெற்றிபெறமுடியும். தெழிலாளர்கள் டெளச் மற்றும் பிற கார் முதலாளிகளை மட்டும் எதிர்கொள்ளவில்லை; அமெரிக்காவின் முழு பொருளாதார, அரசியல் நடைமுறையையும் எதிர்கொள்ளுகின்றனர். முதலாளித்துவ முறையினால், தொழிலாளர்களின் தேவைகள் இன்னும் கூடுதலான வகையில் பெரும் செல்வக் கொழிப்பு உடையவர்களின் கூடுதலான சொந்தச் செல்வக் குவிப்பின் நலன்களுக்காக தாழ்த்தப்படுகிறது.

இரு வணிகக் கட்சிகள் மூலம் பெருவணிக அமெரிக்காவினால் இயக்கப்படும் பொருளாதார சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் சமூகத்தின் முன்னுரிமைகளில் அடிப்படை மாற்றங்களை கொண்டுவரவும் தொழிலாளர்களின் திரட்டை கொண்ட ஒரு புதிய அரசியல் கட்சி தேவைப்படுகிறது. இவ்விதத்தில்தான் தொழிலாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட முடியும்; வறுமை, போர், சமூக சமத்துவமின்மை ஆகியவை அகற்றப்படும்.

பல தசாப்தங்களாக பெருநிறுவனங்கள், பெரு வணிக அரசியல் வாதிகள், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் ஆகியோர் சோசலிசத்திற்கு எதிராக வாதிட்டு வருகின்றனர்; முதலாளித்துவம் தொழிலாளர்களை "மத்தியதர வகுப்பு" என்று அழைக்கப்படும் வகுப்பிற்கு உயர்த்தும் என்று கூறுகின்றனர். ஆனால் இலாப முறை தோல்வியுற்றுவிட்டது. அமெரிக்காவிலும் உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாளர்கள் பெரும்பாலான அடிப்படைத் தேவைகளை இழக்கும் நிலைமையை, கெளரவமான வீடுகள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் கெளரவமான ஊதியம் கொடுக்கும் வேலைகள் ஆகிவற்றை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.

பல தலைமுறைத் தொழிலாளர்களின் உழைப்பினால் கட்டமைக்கப்பட்ட கார் தொழில் பெறுநிறுவன நிர்வாகிகள் மற்றும் தங்கள் சொந்த செல்வக் கொழிப்பை நாடும் பில்லியனர் முதலீட்டாளர்களுடைய கரங்களில் விட்டுவைக்கப்பட முடியாதது. இந்தப் பரந்த உற்பத்தி சக்திகள் சமூதாயத்தின் உடைமைகளாக ஆக்கப்பட வேண்டும். கார் ஏகபோக உரிமைகள் மற்றும் உற்பத்தியின் முக்கியமான நெம்புகோல்களும், போக்குவரத்து, நிதியம் ஆகியவையும் பொது உடமையாக்கப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

இதுதான் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் சர்வதேச இணைய வெளியீடான உலக சோசலிச வலைத் தளம் ஆகியவை முன்வைக்கும் சோசலிச, புரட்சிகர முன்னோக்கு ஆகும். SEP ல் இணைந்து அதனை தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர தலைமையாக கட்டி எழுப்புமாறும் தொழிலாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.