WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Obama vows to back Bush's war commander
புஷ்ஷின் போர்த் தளபதிக்கு ஆதரவு கொடுக்கப்போவதாக ஒபாமா உறுதிமொழி
By Bill Van Auken
29 April 2008
Use this version
to print | Send this link by email
| Email
the author
ஜனநாயகக் கட்சியின் முன்னணி ஜனாதிபதி வேட்பு மனு பெறக்கூடிய பரக் ஒபாமா
ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் வட ஆபிரிக்காவில் இருந்து மந்திய ஆசியா வரையில் இருக்கும் பகுதிகளில் அமெரிக்க
இராணுவ நடவடிக்கைகள் படருவதற்கு புஷ் நியமிக்கும் நபருக்கு தான் ஒப்புதல் கொடுக்க இருப்பதாக ஞாயிறன்று
அறிவித்தார். "Fox News Sunday"
நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட இந்த உறுதிமொழி எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும் ஒபாமா மற்றும் ஜனநாயகக்
கட்சி முழுவதுமே போருக்கு எதிராக இருப்பது போல் காட்டிக் கொள்வதின் போலித் தன்மையை நன்கு
அம்பலப்படுத்துகிறது.
Fox ன்
Chris Wallace
யினால் ஒபாமா வினவப்பட்டார்: "செனட்டர், இந்த வாரம் ஜனாதிபதி புஷ் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க
படைகளின் தளபதியான டேவிட் பெட்ரீயசை மத்திய கட்டுப்பாட்டு தலைவராக நியமித்துள்ளார்...நீங்கள் இந்த
ஏற்பாட்டிற்கு வாக்களிப்பீர்களா?"
ஒபாமா விடையிறுத்தார்: "ஆம். ஈராக்கில் பெட்ரீயஸ் சிறந்த தந்திரோபாய
வேலை செய்துள்ளார் என்றுதான் நான் நினைக்கிறேன். நடைமுறை விடயங்கள் என்ற வகையில் அங்குதான் இந்த
நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக கவனத்தை அதிகமாகச் செலுத்தி வருகிறது என்பது வெளிப்படையாகும்."
அட்மிரல் வில்லியம் பலோனை "பெரிதும் மதிப்பவராக" தன்னை ஜனநாயகக்
கட்சியின் வேட்பாளர் அறிவித்துக் கொண்டார்; பென்டகன் தகவல்களின்படி இவரோ பெட்ரீயசை ஒரு அரசியல்
ஆர்வம் உடைய தளபதி என்றும் புஷ்ஷின் வெள்ளை மாளிகைக்கு துதிபாடுபவர் என்றும் இகழ்ந்துள்ளார். கடந்த
மாதம் மத்தியக் கட்டுப்பாட்டின் தலைவர் பதவியில் இருந்து பலோன் இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உள்ளானார்.
"ஈராக்கையும் விடக் கூடுதலாக நாம் சிந்திக்க வேண்டும். ஈரான், பாக்கிஸ்தான்,
ஆப்கானிஸ்தான் ஆகியவை பற்றிய பிரச்சினைகளும் நமக்கு உள்ளன; ஈராக் பற்றிய கூடுதலான குவிப்பு நம்மை
திசை திருப்பியுள்ளது" என்று பலோன் கூறியதாக கூறப்படும் கருத்து பற்றி அவரை ஒபாமா புகழ்ந்துள்ளார்.
"பெட்ரீயஸ் எமது மூலோபாய நலன்களை பற்றி பரந்த பார்வை ஒன்றை
ஆராயவேண்டும் என்பது என்னுடைய நம்பிக்கை என்று" அவர் சேர்த்துக் கொண்டார்.
அதை பெட்ரீயஸ் செய்வார் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையே இல்லை.
ஈரானுக்கு எதிராகப் போர் என்னும் புஷ் நிர்வாகத்தின் உந்ததுலை எதிர்ப்பவர்
என்று Esquire
சஞ்சிகை ஒரு கட்டுரை வெளியிட்டதை தொடர்ந்து, பலோன் இராஜிநாமா
செய்யும் கட்டாயத்திற்கு உள்ளானார்.
இதற்கு மாறாக, புஷ் நிர்வாகத்தின் போர்க் கொள்கையுடன், ஈரான் மீது
தாக்குதலுக்கு ஆதரவு உட்பட என்பதில், பெட்ரீயஸ் தன்னை முழுமையாள இணைத்து அடையாளம் காட்டியுள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் தேசிய சட்டமன்ற குழுவிற்கு சாட்சியம் கொடுத்தபோது, ஈராக் ஆக்கிரமிப்பு பற்றி
முன்னேற்ற அறிக்கைய அளிக்கையில் --அங்கு இவர்தான் அமெரிக்காவின் உயர் தளபதி ஆவார்-- ஈரானின் "தீய
செல்வாக்கு" மற்றும் "இழிந்த நடவடிக்கைகள்" நாட்டில் ஆயுதமேந்திய பூசல்களுக்கு முக்கிய காரணம் என்றும்
அமெரிக்க துருப்புக்களின் இறப்புக்களுக்கு ஒரு முக்கியகாரணம் என்றும் வாதிட்டிருந்தார்.
ஈராக்கில் தாக்குதல்களுக்கு ஈரானின் பொறுப்புக்கள் இருப்பதாகக் கூறப்படும்
வாஷிங்டனின் வாதத்தை அளிப்பதற்காக தளபதி இப்பொழுது தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
ஈராக்கில் அமெரிக்க போர்ப் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற
இவருடைய பிரச்சாரத்தை தளபதி எதிர்த்தால் பெட்ரீயசிற்குப் பதிலாக வேறு எவரேனும் போடப்படுவரா என்று
வினவப்பட்டதற்கு ஒபாமா கூறினார்; "தளபதி பெட்ரீயஸ் கூறுவதை கவனமாகக் கேட்பேன் கடந்த பல
ஆண்டுகளாக அவர் பல அனுபவங்களை குவித்துள்ளார். அவர் கூறுவதை நான் கேட்க மறுத்தால் அது
மடத்தனமாகும்."
பெட்ரீயஸ் நியமனத்தை அறிவிக்கையில், பாதுகாப்பு மந்திரி ரொபேர்ட் கேட்ஸ்
அந்த நியமனம் "புதிய நிர்வாகத்திற்கு தொடர்ச்சியை அளிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று
கூறினார்; வேறு விதமாகக் கூறினால், ஈராக்கில் ஆக்கிரமிப்பு மற்றும் அதிக அளவு துருப்புக்களை நிறுத்தி வைத்தல்
ஆகியவை புஷ் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பின்னரும் தொடரும் என்று ஆகிறது.
முன்பு செய்ததைப் போலவே ஒபாமா ஈராக்கில் அமெரிக்க துருப்புக்கள் எண்ணிக்கை
குறைக்கப்பட வேண்டும் என்பதை நயமாக அழைப்பு விடுத்துள்ளார் --அவருடைய திட்டத்தின்படி பல
ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புகள், கடற்படையினர்கள் என்று ஈராக்கில் இருப்பவர்கள்-- பரந்த அமெரிக்க
மூலோபாய நலன்களை கருதி இராணுவ சக்தி மற்ற இடங்களில் பயன்படுத்தப்படுவதற்காக அங்கு தொடர்ந்து
நிறுத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளார். "ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகியவற்றில் இருக்கும் பிரச்சினைகளை
கருத்தில் கொண்டு மூலோபாய முடிவுகள் எடுக்கப்படும்; மேலும் எமது தேசிய மதிப்பீடுகள் 2001ல் இருந்து
குறிப்பிட்டு வருவது போல் அல் கேய்டா வலிமை அடைந்தது வருவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்"
என்றார்.
"ஈரான் பிரச்சினைகள் உட்பட" "பரந்த மூலோபாய நலன்கள்", கருத்தில்
கொண்டு அமெரிக்க இராணுவத்தினர்கள் நிறுத்துதல் நிர்ணயிக்கப்படும் என்று அழைப்பு விடும் ஒபாமாவின் கருத்து படைகளின்
கூட்டுத் தலைவரான அட்மிரல் மைக்கேல் முல்லன் ஒரு பென்டகன் செய்தியாளர் கூட்டத்தை பயன்படுத்தி, அமெரிக்க
இராணுவம் ஈரானுக்கு எதிராக "இராணுவத் திறன் இருக்கக்கூடிய நடவடிக்கைகளை" மேற்கொள்ளலாம் என்று வெளியிட்ட
அச்சுறுத்தலை தொடர்ந்து வந்துள்ளது.
"ஈராக்கில் அமெரிக்க மற்றும் கூட்டு நாடுகளின் துருப்புக்களை கொன்று
வருவதற்காக" ஈரானை முல்லன் குற்றம் சாட்டியுள்ளார்; இக்குற்றச் சாட்டு இடைவிடாமல் கூறப்படுகிறது; ஆனால்
இதற்கு தக்க நிரூபணம் ஒன்றும் கொடுக்கப்படுவதில்லை. "போரிடும் திறன் அற்றவர்கள் என்று எங்களைப் பற்றி
நினைப்பது பெரும் தவறாகிவிடும்" என்று அவர் தெஹ்ரானை எச்சரித்தார்.
மத்திய கட்டுப்பாட்டு தலைவர் என்று பெட்ரீயஸிற்கு பதவி உயர்வு கொடுத்திருப்பது
ஈரானுக்கு எதிரான போர்த் தயாரிப்பு பிரச்சாரத்தை விரைவுபடுத்தும் வகையில் வெளிவந்துள்ளது. நவம்பர்
தேர்தலுக்குள்ளேயே அத்தகைய தாக்குதலை புஷ் நிர்வாகம் நடத்தக்கூடும் அந்த முயற்சி "அதிர்ச்சி, வியப்பு என்று
மற்றொரு நிகழ்வை அமெரிக்கர்கள் கொடுக்கும் வகையில் இருக்கும் தாக்குதலாக போகும்.
அவ்வாறு ஏற்பட்டால், பெயரளவிற்கு எதிர்ப்பு என்று சொல்லக்கூடிய ஜனநாயகக்
கட்சியின் ஆதரவு உண்டு என்ற நிலையும் அதற்கு இருக்கும்; எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் இந்த
நிலைமைதான்; அவர் மற்றொரு ஆக்கிரமிப்பு போரில் உடந்தை என்று அம்பலப்படுத்தப்படுவார்.
மிரட்டும் வகையில் அலங்காரச் சொற்களை பேசுவதில் செனட்டர் ஹில்லாரி கிளின்டன்
ஒபாமாவையும் மிஞ்சி விட்டார். சமீபத்தில் ஈரானை "முழுமையாக துடைத்தழித்துவிடப்போகும்" வகையில் அது
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் விளைவு இருக்கும் என்று அவர் கூறினார்; இது அடிப்படையில் 71 மில்லியன்
மக்கள் இருக்கும் நாட்டிற்கு எதிரான இனவழிப் படுகொலை என்றுதான் இருக்கும்.
ஒபாமாவை போலவே, இவரும் பெட்ரீயஸ் தளபதி என்பதற்கு ஒப்புதல்
கொடுப்பார் என்பதில் ஐயமில்லை; பெட்ரீயஸ்தான் ஈரானுக்கு எதிரான ஒரு போர்த் தயாரிப்பிற்கு முக்கிய
பொறுப்பை கொண்டிருப்பார். ஜனவரி 2007ல் இவர்கள் இருவரும் ஈராக்கில் அவர் தளபதி நியமனத்திற்கு "ஆம்"
வாக்குகள்தான் போட்டனர்; அது செனட் மற்றத்தில் 81-0 என்ற வாக்கு பெற்றது. அதுவும் காபிடல் ஹில்லில்
ஈராக்கிற்கு கூடுதலாக 30,000 துருப்புக்கள் அனுப்பி "விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்" என்று பெட்ரீயஸ்
சாட்சியம் அளித்த பின் கொடுக்கப்பட்ட வாக்கு ஆகும் இதையொட்டி இந்த விரிவாக்கத்திற்கு ஜனநாயகக் கட்சி
ஒப்புதல் என்பது உட்குறிப்பு உறுதியாகப் போயிற்று.
அடுத்த ஜனநாயக கட்சி ஆரம்பத் தேர்தல்கள் சுற்றுக்கு ஒரு வாரம் இருக்கையில்
--இந்தியானா, வட கரோலினா ஆகிய மாநிலங்களில் நடக்க உள்ளது-- கிளின்டன் தன்னுடைய பிரச்சாரத்தை
இன்னும் நெருக்கமான விதத்தில் "தேசிய பாதுகாப்பு இராணுவவாதம் என்ற பிரச்சினைகளுடன் அடையாளம் காண
முற்பட்டுள்ளார். பல நிகழ்வுகளில் முன்னாள் கூட்டுத் தளபதிகள் தலைவரான ஓய்வு பெற்ற தளபதி
Hugh Shelton
உடன் இவர் தோன்றியுள்ளார்; அவரோ அந்தப் பதவியை வகித்த முன்னாள் அதிகாரி எவரும் ஒரு ஜனாதிபதி
வேட்பாளருக்கு ஒப்புதல் கொடுத்ததில்லை என்று கூறியுள்ளார்.
வட கரோலினாவில்
Fayetteville என்ற இடத்தில் இராணுவத்தின் 82வது விமானப்
பிரிவு, சிறப்பு செயற்பாடுகள் கட்டுப்பாட்டுத் தலைமையகம் இருக்கும்
Fort Bragg ல்
பேசிய கிளின்டன், ஈராக்கில் இருக்கும் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெற வேண்டும் என்று முன்பு பிரச்சாரத்தில்
கூறியிருந்தது பற்றி குறிப்பிடுகையில், "அதைப் பொறுப்பாகவும் இயன்ற அளவு விரைவாகவும் செய்வோம்"
என்றார்.
"இது எளிதான செயல் அல்ல. நாம் எதிர்கொண்டுள்ள சங்கடத்திற்கு விரைவான
தீர்வுகள் இல்லை; நாம் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதில் இருந்து வரும் விளைவுகளுக்கும் எளிதான தீர்வுகள்
இல்லை" என்றார்.
ஞாயிறன்று வட கரோலினாவில் இருக்கும்
Cape Fear
என்ற இடத்தில் நடந்த அணிவகுப்பு ஒன்றில் பேசிய கிளின்டன், ஒபாமா வாதத்திற்கு ஒப்பானதைத்தான்
முன்வைத்தார்; ஈராக்கில் இருக்கும் அமெரிக்கத் துருப்பு வலை குறைக்கப்படும்; மற்ற இடங்களில்
பயன்படுத்துவதற்கு ஏற்ப இந்தக் குறைப்பு இருக்கும். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவில் இருக்கும் ஜனாதிபதி
ஹமித் கர்சாயி மீது நடந்த படுகொலை முயற்சியை சுட்டிக்காட்டி, அங்கு நடைபெறும் எழுச்சியை அடக்குவதற்கு
வாஷிங்டனுக்கு கூடுதலான இராணுவத் தருப்புக்கள் தேவை என்பதற்கு அது நிரூபணம் என்றார். ஆப்கானிஸ்தானில்
தேவைப்படும் "வளங்கள்" பற்றி கைவிட்டுவிடவில்லை என்று கூறிய அவர் அந்த நாடு ஈராக்கைவிட "கூடுதலான
கவனத்தை பெற வேண்டும்" என்றார்.
இதற்கு இடையில் மீண்டும் போருக்கு நிதி அளிக்க, ஈராக் ஆக்கிரமிப்பிற்கு என்று
காங்கிரசில் வாக்கெடுப்பிற்காக தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கான திட்டம் மிகப் பெரிதாக இருக்கும்:
ஜனநாயகக் கட்சி தலைமை நவம்பர் தேர்தல்களுக்கு சற்று முன்னதாக மற்றொரு நிதிய வாக்கெடுப்பை தவிர்க்க
முயலும் முறையில் இந்த தந்திரோபாய உத்தி நடைபெறுகிறது.
இந்த சட்டம் இந்தவார துவக்கத்திலேயே அறிமுகப்படுத்தப்படலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது; வெள்ளை மாளிகை தற்போதைய நிதி ஆண்டு முடிவிற்குள் வேண்டும் என்று கோரும் $108
பில்லியனை தவிர, அடுத்த ஜனாதிபதி பதவிக்காலத்தில் குறைந்தது ஆறு மாத காலத்திற்கு இந்த அளவு
தொடரப்படும் வகையில் $70 பில்லியன் "இணைப்பு நிதியும்" கோரப்பட உள்ளது.
மன்ற அவைத்தலைவரான நான்ஸி பெலோசி (கலிபோர்னியா, ஜனநாயகக் கட்சி)
இந்த உடன்பாட்டை எளிதாக்கும் வகையில் போர் செலவு நடவடிக்கை திட்டங்களை 13 வாரங்கள் வேலையின்மை
நலன்களுடன் விரிவாக்கம் செய்யும் வகையில் இணைக்க விரும்பி, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மூத்த
வீரர்களுக்கான GI
Bill
நலன்களையும் அளிக்க விரும்புகிறார். ஜனநாயகக் கட்சி தலைமை வாக்குகளை பிரிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது; இதையொட்டி சட்ட மன்றத்தில் இருக்கும் ஜனநாயகக் கட்சியின் ஒரு பகுதியினர் போர்
நிதிக்கு எதிராக அடையாள வாக்கை அளிக்கும்; அதே நேரத்தில் உள்நாட்டு செலவின நடவடிக்கைகளுக்கு ஆதரவு
கொடுத்து வாக்கு அளிக்கும்.
ஜனநாயகக் கட்சியின் போர் நிதிக்காக வாக்களிப்பிற்குத் தயாரிப்புக்கள், கருத்துக்
கணிப்பு வாக்கெடுப்பின் பின்னணியில் போர் பற்றிய அதிருப்தி, புஷ்ஷுக்கு எதிர்ப்பு ஆகியவை மிக உச்ச கட்டத்தில்
இருப்பதைக் குறிக்கின்றன. புஷ் பற்றிய பாதகமான அளவீடுகள் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரைப் பற்றி இதுகாறும்
இல்லாத குறைமதிப்பைக் காட்டுகின்றன.
திங்களன்று வெளியிடப்பட்ட கால கருத்துக் கணிப்பின்படி கருத்துக் கோரப்பட்ட
அமெரிக்கர்களில் 63 சதவிகிதத்தினர் ஈராக் போர் ஒரு "தவறு" எனத் தாங்கள் நம்புவதாகக் கூறியுள்ளனர்.
"ஈராக் போர் எதிர்ப்பில் புதிய எதிர்ப்புக் கட்டம் அமெரிக்க தொடர்புடைய ஒரு
தீவிரப் போரில் Gallup
நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ள மிக அதிக "தவறு" என்ற இடத்தைப் பெற்றுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
இது மே 1971ல் வியட்நாம் போர் ஒரு தவறு என்று 61 சதவிகிதத்தினர் கூறியதை விட 2 சதவிகிதம்
அதிகமாகும் என்று Gallup
இன் ஜேப்ரி ஜோன்ஸ் கூறியுள்ளார்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட
Gallup கருத்துக்
கணிப்பின்படி கருத்து கேட்கப்பட்டவர்களில் 28 சதவிகிதத்தினர்தான் ஜனாதிபதி என்ற முறையில் புஷ்ஷின் செயல்களுக்குத்
தாங்கள் ஒப்புதல் அளிப்பதாக கூறியுள்ளனர்; 70 ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதியின் செல்வாக்கை கண்டறிய
கருத்துக் கணிப்பு அமைப்பு ஆய்வை தொடங்கியதில் இருந்து இது மிகக் குறைவான சதவிகிதம் ஆகும்.
மக்களுடைய மிகப் பெரிய போர் எதிர்ப்பு உணர்வை ஒட்டிய ஆதரவு இருந்த
போதிலும் ஈராக் போரை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத ஜனநாயகக் கட்சியினர், ஈரானுக்கு எதிரான
ஒரு புதிய போரை ஆரம்பிக்க நிர்வாகத்துடன் இணைந்து கொள்ளும் வகையில் நிலைப்பாட்டை கொள்வது ஒரு
அரசியல் கோழைத்தனம் மட்டும் அல்ல. குடியரசுக் கட்சியின் கொள்கைகளை போலவே ஜனநாயகக் கட்சியின்
கொள்கைகளும் அமெரிக்க மக்களுடைய உணர்வால் நிர்ணயிக்கப்படுவது இல்லை; மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
மூலோபாய நோக்கங்கள் மற்றும் அமெரிக்காவை ஆளும் நிதிய உயரடுக்கின் நலன்கள் ஆகியவற்றின் மூலோபாய
நோக்கங்களுக்காக உள்ளன.
கடுமையான பிளவுகள் ஈராக் போர் நடத்துதல் பற்றி இருந்தாலும், இரு கட்சிகளும்
தொடக்கத்தில் இருந்து போருக்கு அடித்தளத்தில் இருக்கும் அடிப்படை இலக்குகள் பற்றி உறுதியாக உள்ளன --அதாவது
அமெரிக்க இராணுவ சக்தியை பாரசீக வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவில் இருக்கும் முக்கிய எண்ணெய் வளம்
கொழிக்கும் பகுதி மீது மேலாதிக்கம் செலுத்த பயன்படுத்துதல், அதையொட்டி உலக அரங்கில் இப்பொழுது
இருக்கும், வரக்கூடிய போட்டியாளர்களைவிட கூடுதலான ஆதாயத்தை பெற வேண்டும் என்பது ஆகும்.
புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளும் ஜனநாயக்க கட்சியின் ஜனாதிபதி ஆரம்ப பிரச்சாரங்களின்
வளைவரைகோடும் ஆகிய இவ்விரண்டும் ஆளும் உயரடுக்கிற்குள் பெருகி வரும் நம்பிக்கையான ஈராக் சங்கடத்தில்
இருந்து வெளிவரும் ஒரே வழி இன்னும் புதிய, குருதி சிந்தக்கூடிய போரை ஈரானுக்கு எதிராகத் தொடக்க
வேண்டும் என்பதே ஆகும். |