World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Recessionary trends deepen, sparking gyrations on stock, commodities markets

மந்தநிலைப் போக்குகள் அதிகமாதல், பங்கு, பண்டங்கள் சந்தைகளில் வட்டச்சுழற்சிகளை தூண்டல்

By Barry Grey
22 March 2008

Back to screen version

Bear Stearns ஐ அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கி தலையிட்டு, பெருமளவு நிதியளித்து தப்பிக்க வைத்ததை அடுத்து மந்த நிலை அதிகமாகும் என்ற அச்சங்களும், பெரிய நிதிய நிறுவனங்களின் அனைத்துக் கடன்களையும் தீர்க்கும் திறன் பற்றி தொடர்ந்த உறுதியற்ற நிலையும் அமெரிக்க பங்குச் சந்தைகளில் கணிக்க முடியாத ஏற்ற இறக்கங்களை காட்டின.

செவ்வாய்க்கிழமை, JP Morgan Chase, Bear Stearns ஐ எடுத்துக் கொள்ள நடவடிக்கையை வடிவமைத்து மற்றும் அது வரம்பில்லாத கடனை ஆறுமாத காலத்திற்கு வங்கிகள் மற்றும் தரகு நிலையங்களுக்கு அளிக்கும் என்று அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கி அறிவித்ததற்கு மறு நாள் --1930 களின் பெருமந்த நிலையில் இருந்து காணப்படாத முன்னோடி இல்லாத நடவடிக்கை இது--Dow Jones தொழில்துறை சராசரி 420 புள்ளிகள் உயர்ந்தன. இந்த உயர்வு நிதியப் பங்குகளால் வழிநடத்தப்பட்டன; அவை அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கி உடன்பாடான கருவூலப் பத்திரங்கள் பணமாக்கமுடியாத, சந்தேகத்திற்கு உரிய அடைமான ஆதரவுப் பத்திரங்களுக்கு பதிலாக மாற்றப்படும் என்று அறிவித்ததால் ஆதாயம் அடைந்தன.

அதற்கு அடுத்த நாள் Dow 293 புள்ளிகள் சரிவைக் கண்டது; இதற்குக் காரணம் திடீரென பண்டங்கள் சந்தையில் விற்பனை பெருக்கத்தால் அதிர்ச்சிக்காளானது.

வியாழனன்று வார வணிகத்தின் கடைசி நாள் பெரிய வெள்ளி விடுமுறையால் ஏற்பட்டதால், Dow மீண்டும் உயர்ந்து, 261 புள்ளிகள் ஆதாயத்தை கண்டது; சில பண்டங்கள் குறியீடுகள் தொடர்ந்து சரிந்தும் இந்த நிலை வந்தது.

இத்தகைய சந்தையின் தீவிர வெடிப்புத் தன்மை அமெரிக்கா ஒரு மந்த நிலைக்குள் நுழைந்துள்ளது, மற்றும் அமெரிக்க பொருளாதாரம் கீழ்நோக்கு பின்னடைவிற்குள் சறுக்கிச்செல்ல, உலகம் முழுவதும் ஒரு சரிவிற்கு வழிவகுக்கும் என்ற பெருகிய குறிப்புக்களின் அடிப்படையில் உந்துதல் பெற்றுள்ளது.

வியாழனன்று அமெரிக்க அரசாங்கத்தின் தொழிலாளர் துறை வேலையற்றவர்கள் கோரும் உதவி கடந்த வாரம் அதற்கு முந்தைய வாரத்தில் இருந்து 22,000 எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இது கிட்டத்தட்ட இரு மாதங்களில் மிக அதிக அளவை கொண்டது ஆகும் என்று குறிப்பிட்டுள்ளது. வேலையற்றோர் நலன்களுக்கான விண்ணப்பங்கள் அந்த வாரம் 378,000 என்று வந்ததாகவும், இது எதிர்பார்த்ததைவிட மிக அதிகம் என்றும் தெரிவித்துள்ளது. நான்கு வார புதிய விண்ணப்பங்கள் 365,250 என்று உயர்ந்துள்ளன; இது 2005 வளைகுடா கடலோரப் பகுதி புயல்கள் வீசியபோது அலையென எழுந்த விண்ணப்பங்களைவிட அதிக அளவு ஆகும். ஆகஸ்ட் 2004க்கு பின்னர் மிக அதிகமான எண்ணிக்கையில் நலன்கள் பெறுவோர் உயர்ந்துவிட்டனர்.

வேலை அற்றோர் உதவித் தொகை நாடல் பற்றிய அறிக்கை பெப்ருவரி மற்றும் ஜனவரி மாத மாதாந்திர வேலைகள் அறிக்கையை அடுத்து வந்துள்ளது; அவற்றில் முறையே 63,000 மற்றும் 22,000 என்று சம்பளப் பட்டியல் கொண்ட வேலைகளில் மொத்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிகப் பெரிய வணிக வங்கியான சிட்டி குரூப், அதன் சந்தைகள், வங்கிப் பிரிவுகளில் 2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த மாதம் நடைமுறைக்கு வரும் இப்பணி நீக்கங்கள் கடந்த கோடை காலம் அடைமான நெருக்கடி தொடங்கி வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ள மொத்த வேலை வெட்டுக்களை 6,000 க்கும் அதிகமாக ஆக்கியுள்ளன; இது நிறுவனத்தில் உலகம் முழுவதும் இருக்கும் ஊழியர் தொகுப்பில் 10 சதவிகிதம் ஆகும். சிட்டி குரூப் தன் பணிநீக்க நடவடிக்கைகள் நியூ யோர்க், லண்டன் ஆகியவற்றில் குவிப்பை காட்டும் என்று கூறியுள்ளது.

வோல் ஸ்ட்ரீட்டின் பெரும் நிறுவனம் தன்னுடைய சொத்துக்களின் மதிப்பை கடந்த ஆண்டு $20 பில்லியன் இழப்பாக காட்டியுள்ளது; வரவிருக்கும் மாதங்களில் குறைந்த பிணையுள்ள கடன்களில் மற்றும் ஆபத்துக்கள் நிறைந்த முதலீடுகளில் பல மில்லியன்கள் இழப்பை காட்ட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

குறைந்த பிணையுள்ள கடன் நெருக்கடி மற்றும் கடன் நெருக்கடிகள் 2007 நடுப்பகுதியில் வெடித்ததில் இருந்து அமெரிக்க நிதிய பணிகள் நிறுவனங்கள் மொத்தம் 60,000 வேலைகளுக்கு மேலாக நீக்கிவிட்டன.

நியூ யோர்க் ஆய்வு நிறுவனம் ஒன்றால் The Conference Board அதன் பொருளாதாரக் குறியீடுகளில் முக்கியமான மூன்றின் குறியீடுகள் 0.3 சதவிகிதம் பெப்ருவரியில் குறைந்து விட்டதாக தவகல் கொடுத்துள்ளது; பிலடெல்பியாவின் மத்திய ரிசேர்வ் வங்கி அதன் தொழிற்சாலை குறியீட்டெண் மார்ச் மாதம் சரிந்துள்ளதாகவும் இது குறியீட்டெண்ணில் நான்காம் மாதம் தொடர்ச்சியாக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கிறது. நாடு முழுவதும் உற்பத்தி நடவடிக்கைகள் சரிந்துவிட்டன; கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் இல்லாத வேகம் இதில் காணப்பட்டுள்ளதாக Institute for Supply Management நடத்திய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

கார் தொழில் செய்தித் தொடர்பாளர்கள் 2008ல் வாகனங்கள் விற்பனையில் தீவிர சரிவு இருக்கும் என்றும் இது கூடுதலான பணிநீக்கங்கள், ஆலை மூடல்கள் ஆகியவற்றின் விளைவாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். அமெரிக்க தொழில்துறையின் அதிக கனமற்ற வாகனங்கள், கார்கள் ஆகியவற்றின் விற்பனை 14.95 மில்லியன் ஆகத்தான் இருக்கும் என்றும் இது 1994க்குப் பின்னர் மிகக் குறைவான எண்ணிக்கை என்றும் J.D.Powers & Associates கணிப்பு ஒன்றை கொடுத்துள்ளது.

மற்றொரு அறிக்கை, வீடுகள் சந்தை மற்றும் வீடுகள் கடன் தவணை கொடுக்க தவறுதல், மூடப்படுதல் பற்றியது, தொடர்ந்து சரிவு இருப்பதாகக் கூறியுள்ளது; அமெரிக்க புள்ளிவிவரங்கள் குழு தேசிய வீடுகள் காலியாக இருக்கும் விகிதம் 2.8 சதவிகிதமாக 2007ன் நான்காம் காலாண்டில் இருந்ததாக கூறியுள்ளது. அது முந்தைய காலாண்டில் இருந்ததைவிட 2.7 சதவிகிதம் அதிகம், 2007 ன் முதல் காலாண்டு உயர்நிலைக்கு சமமாகும்.

அமெரிக்க நிதிய நெருக்கடி மற்றும் பொருளாதார மந்த நிலையின் உலகந்தழுவிய பாதிப்பு புதிய ஆண்டை ஒட்டி உலக வணிகம் கிட்டத்தட்ட அசையாமல் நின்றுவிட்டதை காட்டும் வகையில் குறிப்பை கூறுகிறது. Bureau for Economic Policy Analysts என்னும் ஒரு டச்சு ஆய்வு அமைப்பு ஜனவரிக்கு மூன்று மாதங்கள் முன்னதாக உலக வணிகம் பொருட்களில் அதற்கு முந்தைய மூன்று மாதங்களில் இருந்ததை விட ஆண்டுவிகிதத்தில் 0.2 சதவிகிதம்தான் உயர்ந்ததாக தெரிவித்துள்ளது.

"இது ஒரு கணிசமான குறைப்பு ஆகும். உலக வணிக அளவு வளர்ச்சி கீழ்நோக்கிய போக்கில் உள்ளது" என்று இவ்வமைப்பு கூறியுள்ளது.

ஒரு பொருளாதாரச் சரிவின் பெருகிய அடையாளங்கள், கடன் நெருக்கடி மற்றும் வங்கி தோல்விகள் பற்றிய முதலீட்டாளர்களின் பயங்களுடன் சேர்ந்து பொருள்கள் சந்தைகளில் பரந்த விற்றுவிடலுக்கு வகை செய்தன; இது புதன் தொடங்கி வியாழனன்றும் தொடர்ந்தது. கச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகளுக்கும் வார தொடக்கத்தில் இருந்த மிக உயர்ந்த விலைகளில் இருந்து சரிந்தன.

எண்ணெய் விலைகள் 6.9 சதவிகிதம் கடந்த இரு நாட்களில் குறைந்தன; பெரும்பாலான மற்ற பொருட்கள் 7 சதவிகிதம் குறைந்தன. கோதுமை விலைகள் 15 சதவிகிதம் சரிவுற்றது. மொத்தத்தில் வாரத்தில் பண்ணடங்கள் விலைகளில் சரிவு அரை நூற்றாண்டில் மிக அதிகமானது ஆகும்.

இத்தகைய விற்பனை செவ்வாயன்று பெடரல் நிதியங்களில் இலக்கு வட்டி விகிதத்தை பொருட்கள் ஊக முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த 1சதவிகிதம் என்பதற்கு பதிலாக 0.75 என்று குறைந்ததை அடுத்து எடுத்த முடிவினால் வந்திருக்கலாம் என்பது வெளிப்படை. அது அமெரிக்க டாலருக்கு உலக நாணய சந்தையில் ஏற்றம் கொடுத்து யூரோ, யென் மற்றும் சுவிஸ் பிராங்க் ஆகியவற்றிற்கு வாரத் தொடக்கத்தில் இருந்து மிக அதிக மாற்று மதிப்பை தீவிரமாக குறைத்தது. பிரிட்டிஷ் பவுண்ட், ஆஸ்திரேலிய டாலர் மற்றும் கனேடிய டாலரும் தீவிரமாக சரிவிற்கு உட்பட்டன.

சேமிப்பு நிதி அமைப்பாளர்கள் உட்பட பெரு முதலீட்டாளர்கள், அமெரிக்க நாணயத்தின் மதிப்பு மற்றும் முக்கிய பொருட்கள் விலை உயரும் என்ற கருத்தில் இருந்தவர்கள் ஓரளவு பங்குகள், பத்திரங்கள், எஞ்சிய முதலீடுகள் ஆகியவற்றில் ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்து, பீதியுற்று தங்கள் பொருட்கள் இருப்புக்களை தள்ளிவிட முற்பட்டனர். ஆனால் பொருட்கள் விற்பனை என்பது உலகளாவிய மந்த நிலை ஏற்படுமோ என்ற பயத்தினாலும் ஊக்கம் பெற்றது; அது பொருட்கள் விலைகளை பெரிதும் குறைத்துவிடும் தன்மையை கொண்டது.

2008 தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவில் எண்ணெய்க்கான தேவை கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததைவிட 2.4 சதவிகிதம் குறைந்துவிட்டது.

பொருட்கள் விலைச் சரிவு இதன் ஊகக்காரர்கள் தங்கள் இலாபத்தை அடைமான ஆதரவு மற்றும் பண இருப்பை அதிகரிக்க விரும்பிய வகையில் உளைச்சலுக்கு உட்பட்ட கடன் கொடுத்தவர்களிடம் இருந்து வந்த அழுத்தத்தின் விளைவாகவும் இருக்கக் கூடும்.

வெள்ளியன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இந்த வழிவகையை கீழ்க்கண்ட விதத்தில் விவரித்தது: "கடன் அளிக்கும் சந்தைகளில் இழப்பு வணிகத்தை கொண்டிருந்த முதலீட்டாளர்கள் --அடைமானப் பத்திரங்கள், கடனுக்கு ஆதரவு கொடுத்த பத்திரங்கள் போன்றவை-- இப்பொழுது வங்கிகளாலும் மற்றவர்களாலும் வணிகத்திற்காக வாங்கும் பணத்திற்கு கூடுதல் பணத்தை ஒதுக்குமாறு கோரப்படுகிறார்கள்; இது 'deleveraging', அதிக 'நெம்புகோல்தன்மை அற்ற நிலை' எனக் கருதப்படுகிறது. பணத்தை அதிகம் பெறுவதற்கு சில முதலீட்டாளர்கள் மற்றும் ஒதுக்கு நிதியாளர்கள் தாங்கள் வைத்திருந்த பொருட்கள் பங்குகளை விற்றுவிட்டனர்."

இந்த வழிவகை நிதிய முறையின் பொதுவான நெருக்கடியின் வெளிப்பாடு என்றும் இது பெரிய வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் மையம் கொண்டுள்ளது என்றும் ஜேர்னல் விளக்கியுள்ளது. MF Global Ltd. என்று சிகாகோவில் இருக்கும் பொருட்கள் ஆய்வு மையத்தின் இயக்குனர் Rich Fetes ஐ மேற்கோளிட்டு கூறியது: "இவை அனைத்தும் நீர்மை நெருக்கடியுடன் தொடர்பு கொண்டவை. வங்கிகளுடைய சொத்துக்கள் இழப்பில் தள்ளுபடி செய்யப்படும்போது பண்டங்களில் வாணிகம் செய்யப்படும் ஒதுக்கு நிதியில் கூடுதலான பணத்தை எடுத்துக் கொண்டுவருவதன் மூலம் அவர்கள் தங்கள் இருப்பு விவரங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது."

மிக அதிகமாக நெம்புதலுக்கு உதவும் ஒதுக்கு நிதிகள் மற்றும் பிற முதலீட்டாளர்கள் நிதியும் பண்டங்கள் இருப்பில் வைக்கப்படுகின்றன; இதற்கு காரணம் இலகுவில் பணமாக்கக்கூடிய இருப்புக்களை விற்று மற்ற ஊக வழியில் ஏற்பட்ட மோசமான நிலை இழுப்புக்களை அவர்கள் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

மார்க் வில்சன் என்னும் Moody's Investors Service இன் துணைத் தலைவரும், மூத்த கடன் அதிகாரியும் விளக்கினார்: "சுற்றிலும் உறுதியற்ற நிலை இருக்கும் சூழலில்தான் இப்பொழுது நாம் இருக்கிறோம்."
ஒரு நிதியக் கரைப்பை ஒதுக்கி வைக்கும் முயற்சியில், அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கி முன்னோடியில்லாத நடவடிக்கைகளை எடுத்துள்ளது; இதில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் கடன் சந்தைகளில் நுழைக்கப்படுகின்றன; அவற்றின் இருப்பு நிலைக் குறிப்புக்கள், அடைமான ஆதரவு உடைய பத்திரங்கள், நெம்புகோல் தன்மை படைத்த கடன்கள் எப்படி பெருநிறுவனத்தை எடுக்கப் பயன்படுகின்றன, மற்ற தோல்வியடையக்கூடிய இருப்புக்கள், வணிக வங்கிகளின் பொறுப்பில் இருப்பவை, முதலீட்டு நிறுவனங்களில் இருப்பவை ஆகியவை அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, எந்த அளவிற்கு அவை திவால்தன்மையை அச்சுறுத்தும் என்பதும் கணக்கில் எடுக்கப்பட்டு இந்த நடவடிக்கை வந்துள்ளது; உதாரணம் பேர் ஸ்டேர்ன்ஸ் நிறுவனத்திற்கு உதவியது.

இது அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கி சொந்த அனைத்து கடன்களையும் தீர்க்கும் தன்மை பற்றி உலகம் முழுவதும் இருக்கும் நம்பிக்கையை வலுவிழக்க செய்யக்கூடும்: மேலும் அமெரிக்க டாலரின் நிலைமையை இன்னும் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும். இறுதியில் இந்த செலவினங்கள் அமெரிக்க அரசாங்கத்தால், மத்திய ரிசேர்வ் வங்கியிலிருந்து கருவூலத்திற்கு வரும் குறைந்த பணவரத்து என்ற வடிவம் அல்லது அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கி இழக்கும் தொகைகள் என்ற முறையில் ஏற்கப்படும்; அல்லது நேரடியாக வோல் ஸ்ட்ரீட்டை பிணையில் எடுக்கும் அரசாங்க நடவடிக்கையும் ஏற்படலாம்.

Fannie Mae, Freddie Mac என்னும் அரசாங்க உத்தரவு பெற்ற அடைமான நிதிய அமைப்புக்களை மேற்பார்வையிடும் கட்டுப்படுத்தும் குழு இரு நிறுவனங்களும் தங்கள் மூலதன தேவைகளை 30ல் இருந்து 20 சதவீதமாக குறைக்க வேண்டும் என அனுமதிக்க உட்பட்ட முறையில், அமெரிக்க அரசாங்கம் புதனன்று மற்றொரு நடவடிக்கையை இத்துறையில் ஈடுத்தது. புஷ் நிர்வாகத்தின் ஆழ்ந்த அழுத்தத்தை ஒட்டி எடுக்கப்பட்டது என்று கூறப்படும் இந்த நடவடிக்கை, இரு அடைமான நிதிய நிறுவனங்கள் இன்னும் கூடுதலான $200 பில்லியனை அமெரிக்க அடைமான சந்தையின் நீர்மைக்காக உட்செலுத்தும் தன்மையை கொண்டது. இதன் நோக்கம் ஏற்கனவே தொந்திரவில் இருக்கும் சந்தை, அதன் "ஜம்போ" அடைமானங்கள் $414,000 ஐ விடக் கூடுதலாக இருப்பதற்கு உதவியாக இருக்கும், நிறுவனங்கள் குறைந்த பிணையிலான வீட்டுக் கடனுக்கு மீண்டும் நிதி அளிப்பதையும் அதிகரிக்கும்.

அமெரிக்க அரசாங்கம் இறுதியில் Fannie Mae, Freddie Mac என்று நான்காம் காலாண்டு இழப்பை பதிவு செய்துள்ள நிலையில் இருக்கும் நிறுவனங்களுக்கு உதவ இருப்பதால், அவர்களுடைய கடன் கொடுக்கும் வசதியை அதிகரித்தல் என்பது இன்னும் நேரடியான முறையில் வங்கி, அடைமான தொழில்களுக்கு அரசாங்க மீட்பில் மற்றொரு கட்டத்தை பிரதிபலிக்கிறது.

இரு நிறுவனங்களின் முதலீட்டு தேவையை தளர்த்துதல் என்பது வியாழனன்று பங்குச் சந்தை மீட்பிற்கு உதவியது; இது வீடுகளின் விலைகள் குறைவதை தடுத்து, அடைமானக் கட்டணங்கள் காலதாமதம் ஆதல், கடன்கள் மூடப்படுதல் ஆகியவை பரவுதலையும் தடுக்கும்; இதனால் வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் இருப்பு நிலைக் குறிப்புக்கள் ஊக்கம் பெறும்.

அமெரிக்க வீடுகள் துறைச் சரிவு, அடைமானத் தொடர்புடைய முதலீடுகள் தோல்வி இவற்றில் இருந்து ஏற்படும் விளைவுகள் சுவிஸ் வங்கி பெருநிறுவனமான Credit Suisse யினால் வியாழனன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது; அதாவது 2008 முதல் காலாண்டில் மிக அதிக இழப்புக்கள் வரும் என்று அது கூறியுள்ளது. தன் பத்திரங்கள் சிலவற்றின் மதிப்பை தவறாகக் கணித்துவிட்டதாகவும், $2.83 பில்லியன் இழப்புக்களை ஏற்கும் என்றும் இலாபங்கள் 2007ம் ஆண்டில் 6 சதவிகிதம் குறைக்கப்படும், அதாவது $7.8 பில்லியன் என்றும் அது கூறியுள்ளது.

மற்றொரு தீய அடையாளம் நியூ யோர்க்கில் இருக்கும் முக்கிய கடன் கொடுக்கும் அமைப்பான CIT யில் இருந்து வந்துள்ள அறிவிப்பாகும்; இருப்பிற்காக வைத்திருந்த முழு $7.3 பில்லியனையும் அது எடுத்து விட்டதாகவும் வழக்கமான இடங்ககளில் இருந்து கடன் பெற முடியவில்லை என்றும் அது கூறியுள்ளது. "இது ஒரு அலைத் தொடர்பு விளைவு" என்று Sandler O'Neill & Partners அமைப்பின் பகுப்பாய்வளரான Michael Taiano கூறினார்: "CIT பிழியப்படுகிறது, இருப்பவர்கள் திணறுகின்றனர்; இதன் விளைவு தங்கள் கடன் கட்டணம் செலுத்துதலில் தவறு ஏற்படும். இவ்விதத்தில்தான் பொதுவாக உணவுப் பொருட்கள் சங்கிலியிலும் ஏற்படும்."

தற்போதைய நெருக்கடியை பெரு மந்த நிலையை ஏற்படுத்திய வழிவகையுடன் ஒப்பிட்ட பொருளாதார வல்லுனரும் நியூ யோர்க் டைம்ஸின் கட்டுரையாளருமான போல் க்ருக்மன் வெள்ளியன்று எழுதினார்: "இப்பொழுது இருக்கும் நிதிய நெருக்கடி அடிப்படையில் மூன்று தலைமுறைகளுக்கு முன்பு நாடு முழுவதும் வங்கிகள் மீது நடந்த படையெடுப்பு அலையின் நவீனப் பதிப்பு போல் உள்ளது. தங்கள் மெத்தையின் கீழ் வைப்பதற்காக மக்கள் வங்கியில் இருந்து பணம் எடுப்பதில்லை; ஒரு நிழல் வங்கி முறையில் இருந்து பணத்தை எடுத்து கருவூல பத்திரங்களில் போடுவது என்ற நவீன முறைக்காக அதைச் செய்கின்றனர். இதன் விளைவு, அப்பொழுது இருந்ததைப் போலவே, நிதிய முரண்பாட்டின் தீய வட்டம் ஏற்பட்டுள்ளதுதான்."

அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கி குழுவின் முன்னாள் தலைவர் போல் வோல்க்கர் ஒரு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பெடரல் மிக அதிக ஆபத்துச் செயற்பாடுகளை செய்து கொண்டிருப்பதாகவும் வட்டி விகிதங்களை அது குறைக்கும் கொள்கை பணவீக்க வெடிப்பு என்ற நிலையை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்தார். PBS உடைய Charlie Rose நிகழ்ச்சியில் அவர் கூறியது: "அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கி சில விதங்களில் நிதிய நெருக்கடியை தீர்ப்பதற்கு கடந்த காலத்தில் எடுக்கப்பட்டவை போல் இல்லாமல், இன்னும் தீவிர நடவடிக்கைகள் எடுப்பதை பார்க்கிறோம்."

"உங்கள் மோசமான சொத்துக்களை குவிக்கும் இடம் அமெரிக்க மத்திய ரிசேர்வ் வங்கி அல்ல, அதேபோல் மோசமாகக் கூடும் என்ற சொத்துக்களை குவித்து வைக்கும் இடமும் இல்லை" என்று தொடர்ந்து கூறிய அவர், டாலரின் வலுவிழப்பு என்பது உலக நாணயம் என்ற முறையில் அதன் பங்கு பற்றிய "வினாக்களை எழுப்பத் தொடங்குகிறது." என்றார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved