World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Cheney's tour of Middle East raises tensions with Iran

மத்திய கிழக்கில் செனியின் பயணம் ஈரானுடனான பதட்டங்களை அதிகரிக்கிறது

By Peter Symonds
26 March 2008

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் செனியின் தற்போது முடிவுற்ற மத்திய கிழக்கு பயணத்தின் முக்கியமான நோக்கம் புஷ் நிர்வாகத்தின் ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தும் நிலைப்பாட்டிற்கு ஆதரவு திரட்டுவதாக இருந்தது. தெஹ்ரானை அப்பகுதியில் வந்துள்ள "இருண்ட மேகம்" என்று குறித்த செனி, புஷ் நிர்வாகம் பலமுறையும் தான் கூறிய இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து விருப்பங்களையும் செயல்படுத்துவது என்ற அச்சுறுத்தலில் இருந்து சிறிதும் பின்வாங்கவில்லை என்பதை ஐயத்திற்கு இடமின்றித் தெரிவித்தார்.

ஈரானில் உள்ள அணுசக்தி திட்டங்கள், அது "பயங்கரவாதத்திற்கு" கொடுக்கும் ஆதரவு பற்றிய பொய்கள், அரைகுறை உண்மைகளின் கலவையை செனி பகிரங்கமாக மீண்டும் கூறி அவற்றை தெஹ்ரானுக்கு எதிரான பொருளாதார தடைகளை சுமத்துவது மற்றும் இராணுவ நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்துவது ஆகியவற்றிற்கு போலிக்காரணங்களாக கூறினார். தனிப்பட்ட முறையில், குறிப்பாக இஸ்ரேலில் உரையாடல்கள் ஐயத்திற்கு இடமின்றி புஷ் நிர்வாகம் ஈரானுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பது பற்றிய திட்டங்களைத்தான் கொண்டிருந்தன.

ஒன்பது நாட்கள் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஈராக், ஆப்கானிஸ்தான், ஓமான், செளதி அரேபியா, இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் துருக்கி ஆகியவை இப்பகுதியில் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளாக இருக்கின்றன, அல்லது ஈரான்மீது தாக்குதல் நடத்தினால் முக்கிய பங்கை கொள்ளக் கூடியவையாக இருக்கின்றன. ஓமானுக்கு மேற்கொள்ளப்பட்ட பயணம் குறிப்பிடத்தக்க வகையில் தீய தன்மை நிறைந்தது, ஏனெனில் அது அப்பகுதியில் அமெரிக்காவிற்கு தளவாட உதவிகள் கொடுப்பது மட்டுமில்லாமல் ஹார்மஸ் ஜலசந்தி என்னும் மூலோபாய பகுதி கடலோரத்தில் தெற்குப் பகுதியிலும் உள்ளது. பாரசீக வளைகுடாவிற்கு செல்லும் குறுகிய நீர்வழி ஈரானுடனான எந்த பூசலிலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கை திட்டம் இயற்றுபவர்களின் முக்கிய அக்கறை ஆகும்.

கடந்த வாரம் இருநாட்கள் இஸ்ரேலில் இருந்தபோது, செனி இஸ்ரேலின் அரசியல் புள்ளிகள் மற்றும் பாலஸ்தீனிய தலைவர்களை சந்தித்தார். இஸ்ரேல் பயணம் பெயரளவிற்கு சமாதான வழிவகை மீண்டும் தொடக்கப்படுவதற்கு அமெரிக்க உதவி முயற்சிகள் என்று கூறப்பட்டாலும், எத்தகைய முயற்சிகளும் அறிவிக்கப்படவில்லை, எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக செனி, ஈரான் மற்றும் சிரியா "சமாதான வழிவகையை தகர்க்க அனைத்தையும் செய்து வருகின்றன" என்ற குற்றம் சாட்டுவதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.

புஷ் நிர்வாகம் காசாப் பகுதி, மேற்கு கரை ஆகியவற்றில் அல்லது பகுதியில் பரந்த முறையில் இஸ்ரேலின் ஆத்திரமூட்டல் தன்மை நிறைந்த தாக்குதல்களை தடுக்கும் விதத்தில் எதுவும் செய்யாது என்பதை செனி துல்லியமாக தெளிவாக்கிவிட்டார். இஸ்ரேலிய பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட்டுடன் ஒரு செய்தியாளர் மாநாட்டில் பேசுகையில் துணை ஜனாதிபதி அறிவித்தார்: "அமெரிக்கா இஸ்ரேலுடைய பாதுகாப்பிற்கு கொண்டுள்ள உறுதித்தன்மை நீடித்திருக்கும், அசையாமல் இருக்கும்... அமெரிக்கா இஸ்ரேலை அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய செயலில் ஒருபொழுதும் அழுத்தம் கொடுக்காது."

திங்களன்று ABC News க்குத் தெரிவித்த கருத்துக்களில் செனி, ஈரானிய "பேய்" பற்றி மீண்டும் கூறி, "ஹெஸ்போல்லா, சிரியா மூலம் அவர்கள் செயல்படும் நிலை, லெபனானிற்குள் அரசியலில் அவர்கள் தலையிடும் வழிவகை, ஹமாசுக்கு கொடுக்கும் ஆதரவு ஆகியவை சமாதான வழிவகையை தடைக்கு உட்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது என நான் நம்புகிறேன்" என்ற அக்கறையை தெரிவித்தார்.

"அவர்கள் அணுசக்தி அடர்த்தியை வளர்க்கும் முயற்சியில் பெரிதும் ஈடுபட, யூரேனிய அடர்த்தியை மேற்கொண்டு ஆயுத தரங்களை உயர்த்த முற்படுவது வெளிப்படை. இவற்றையெல்லாம் ஒன்றாக பார்க்கும்போது, ஈரான் ஈடுபட்டுள்ள பல நடவடிக்கைளும் பகுதியில் இருக்கும் தலைவர்களுக்கு பெரும் கவலை தருகிறது."

ஈரான் ஆயுதங்கள் தரத்திற்கு பயன்படுத்தக்கூடிய யூரேனிய அடர்த்தியை உற்பத்தி செய்கிறது என்பதற்கு எந்தவித சான்றும் இல்லை. பல முறையும் ஈரானிய ஆட்சி தான் அணுவாயுதத் தயாரிப்பை நாடுகிறது என்பதை மறுத்துள்ளது. அதன் அடர்த்தி ஆலைகள் சர்வதேச அணுசக்தி அமைப்பினால் (IAEA) னால் தொடர்ந்து ஆய்விற்கு உட்படுகின்றன; அது ஈரானின் அணுசக்தி மின் உற்பத்தி உலைக்குத் தேவையான குறைந்த அளவிற்குத்தான் யூரேனியம் அடர்த்தி செய்யப்படுவதாக அறிக்கை கொடுத்துள்ளது.

ஈரான் ஒரு இரகசிய அணுவாயுதத் திட்டம் கொண்டிருக்கிறது என்பதற்கு செனி ஒன்றும் ஆதாரம் கொடுத்துவிடவில்லை. கடந்த வாரம் ஈரானிய அரசாங்கம் பற்றி "மக்களை அழிப்பதற்காக, சிலரை மத்திய கிழக்கில் அழிப்பதற்காக அவர்கள் அணுவாயுதம் வேண்டும் என்று கூறியுள்ளனர்" என்னும் புஷ்ஷின் வேண்டுமென்றே கூறப்பட்ட பொய்யை போலவே செனியின் கருத்துக்களும் அழுத்தங்களை அதிகரிக்கத்தான் உதவுகின்றன.

திரைக்கு பின்னால், செனி ஈரான் மீது ஒரு இராணுவத் தாக்குதலுக்கான வாய்ப்பை இஸ்ரேலிய தலைவர்களுடன் தெளிவாக விவாதித்திருக்க வேண்டும். துணை ஜனாதிபதி தன்னுடைய அறிக்கைகளில் ஒப்புமையில் எச்சரிக்கையாக இருந்த போதிலும், அவருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தும் இஸ்ரேலிய அதிகாரிகள் அவ்வாறு இல்லை. எதிர்க்கட்சி தலைவர் பென்ஞமின் நெத்தன்யாகு இன்னும் அப்பட்டமாக விஷயத்தை கூறும் வகையில் இஸ்ரேலிய செய்தி ஊடகத்திடன் கூறினார்; "நான் அவரிடம் தெஹ்ரான் அணுகுண்டு தயாரிக்கும் முன் ஈரானிய அச்சுறுத்தல் அகற்றப்பட வேண்டிய தேவை பற்றி பேசியுள்ளேன்."

இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி எகுட் பரக், ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகள் பற்றி இஸ்ரேல் ஆதரவளிப்பதாக செனியிடம் கூறியிருப்பதாக தெரிகிறது; ஆனால் "அனைத்து விருப்புரிமைகள் பரிசீலனையின்கீழ் இருக்கும்". செனியிடம் பேசியதை தொடர்ந்து இஸ்ரேலிய ஜனாதிபதி சிமோன் பெரஸ் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் ஈரானின் ஏவுகணைத் திட்ட வளர்ச்சியை அசட்டை செய்வதற்கு கடிந்து கொண்டார். "ஈரான் இத்தகைய அணுவாயுதங்களை, ஏவுகணைகளை தயார் செய்வதற்கு ஒரே காரணம் இஸ்ரேலை அழித்து உலகம் முழுவதையும் அச்சுறத்து வேண்டும் என்பதற்காகத்தான்" என்றார் அவர்.

செளதி அரேபியாவின் செயற்பட்டியலிலும் ஈரான் முக்கியமாக இருக்கிறது. செளதிய முடியாட்சி நீண்டகாலமாக ஈரானிய ஆட்சியிடம் வட்டாரச் செல்வாக்கில் போட்டியிட்டு வருகிறது; ஆனால் சமீப மாதங்களில் இது ஈரானிய ஜனாதிபதி மகம்மது அஹ்மதினெஜட்டிற்குப் பல முறை வரவேற்பு கொடுத்துள்ளது. இத்தகைய சமரச அணுகுமுறைக்கு ஒரு காரணம் டிசம்பர் மாதத்தில் NIE, தேசிய உளவுத்துறை மதிப்பீடு என்று அமெரிக்க உறவுத்துறை அமைப்புக்களால் தொகுக்கப்பட்ட அறிக்கையில் ஈரான் 2003ல் தன்னுடைய அணுசக்தி திட்டங்களை முடித்துக் கொண்டுவிட்டது என்று வந்துள்ள குறிப்பு ஆகும்.

ஓமானில் இருக்கும் போது, செனி மிகத் திறமையுடன் NIE கருத்துக்களை உதறித் தள்ளினார்; ஈரான் மறுபடியும் ஒரு அணுசக்தித் திட்டத்தை தொடங்கிவிட்டதா என்பது பற்றி அறிய முடியாது என்றும் கூறினார். செளதி அரேபியாவிலும் இத்தகைய கருத்தை அவர் கூறியிருக்க வேண்டும்; அதற்குக் காரணம் NIE ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ அச்சுறுத்தல் குறைந்துள்ளது என தெரிவித்துவிடக் கூடாது என்பதே ஆகும். அப்துல்லா மன்னருடன் அதிக நேரம் பல பிரச்சினைகள் பற்றி, ஈரான், உலக விசைச் சந்தை உட்பட, உரையாடினார். செளதியின் எண்ணெய் உற்பத்தி உயர்வதை வாஷிங்டன் கோருவதோடு அது உலகில் எண்ணெய் விலை தற்பொழுது உயர்ந்திருப்பதை தளர்த்தும் என்பதோடு, ஈரானுடன் இராணுவ மோதல் ஏற்பட்டால் விசை அளிப்புக்களில் பாதிப்புத் திறன் பற்றிய பார்வையும் அதில் அடங்கியிருந்தது.

தன்னுடைய பயணத்தின் இறுதிக் கட்டமாக திங்களன்று துருக்கிக்கு சென்றிருந்த செனி பிரதம மந்திரி Rcep Tayyip Erdogan இடம் பேசுகையில் மீண்டும் ஈரானின் அணுசக்தித் திட்டம் பற்றிய தன்னுடைய கவலைகளை அறிவித்தார். துருக்கிய ஜனாதிபதி அப்துல்லா குல்லையும், இராணுவத் தலைவர் யாசர் புயுகனிட்டையும் அவர் சந்தித்தார். விவாதங்கள் பற்றி அதிகம் ஏதும் விளக்கப்படவில்லை; இதில் அமெரிக்க துருக்கிய படைகள் ஆப்கானிஸ்தானத்திற்கு அனுப்புதல் பற்றிய கோரிக்கை, விசை அளிப்புக்கள் மற்றும் கடந்த மாதம் துருக்கி இராணுவக் குறுக்கீட்டை வட ஈராக்கில் குர்டிஸ்தான் தொழிலாளர்கள் கட்சி (PKK) க்கு எதிராக ஊடுருவியது ஆகியவை இருந்திருக்க வேண்டும்.

தன்னுடைய நேட்டோ நட்பு நாடு நெருக்கமான பொருளாதார, அரசியல் உறவுகளை ஈரானுடன் நிறுவியுள்ளது பற்றி வாஷிங்டன் கவலை கொண்டுள்ளது. துருக்கிய மற்றும் ஈரானிய சக்திகள் கடந்த ஆண்டு வட ஈராக்கில் குர்திஷ் எழுச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைத்திருந்தன. PKK க்கு எதிரான துருக்கிய நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ஆதரவே செனி மீண்டும் உத்தரவாதம் ஆளித்தார்; ஆனால் அங்காராவில் இருந்து இதற்கு பதிலாக ஈரானில் தங்களுக்கான ஆதரவையும் முன்வைத்தார். வேறு எதுவும் இல்லை என்றாலும், ஈரான் மீதான அழுத்தங்களை புதுப்பித்தல் என்ற வகையில் அமெரிக்கா துருக்கி மற்ற அமெரிக்க நட்பு நாடுகளை தெஹ்ரானுடன் உறவுகளை விரிவாக்குவது பற்றி இருமுறை யோசிக்க வைக்கும்.

செனி மத்திய கிழக்கில் அமெரிக்க நிர்வாகத்தின் திட்டங்கள் பற்றி துல்லியமாக என்ன விவாதித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் திங்களன்று மனதை உறையவைக்கக்கூடிய உரையாடல் செனி மற்றும் ஜெருசெலத்தில் அவரைத் தொடர்ந்து வந்திருந்த செய்தியாளர்களுக்கும் இடேயே நடந்தது அமைத்தது.

ஒரு இறுதிக் கேள்வியாக அமெரிக்க செய்தியாளர் ஒருவர் கேட்டார்; "பிரதம மந்திரி ஒல்மெர்ட்டுடன் நிற்கையில் நீங்கள் அவர்கள் பாதுகாப்பிற்கு ஆபத்து கொடுப்பது எதையும் செய்ய மாட்டோம் என்று கூறினீர்கள். அவர்கள் உங்களிடமும் ஜனாதிபதியிடமும் வந்து எங்கள் பாதுகாப்பிற்காக ஈரானை நாங்கள் தாக்கியாக வேண்டும் என்று சொன்னால், நீங்கள் அதை நிறுத்துவீர்களா?"

இந்தக் கேள்வி ஒரு முன்நினைப்புக் கருத்தானது என்று செனி உதறித் தள்ளிய பின்னர் செய்தியாளர் கேட்டார்: "அவர்கள் உங்களை அணுகினரா (மற்றும் கேட்டனரா?)" மீண்டும் செனி இதை முன்நினைப்புக் கருத்து என்று உதறினாலும் ஆலோசனையை முற்றிலும் நிராகரிக்கவில்லை. இந்த கருத்துப் பறிமாற்றம் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

ஆனால் அங்கு இருந்தவர்கள் அனைவரும் அறிந்ததிருந்தது, அத்தகைய நிகழ்வு ஒன்றும் முன்நினைப்பு கருத்து அல்ல என்பதுதான். இஸ்ரேல் பலமுறையும் அது ஈரானை அணுசக்தி திறனை கட்டமைக்க அனுமதிக்காது என்று எச்சரித்துள்ளது; இந்த விவரம் செனி தன்னுடைய பயணத்தின்போது நன்கு விவாதித்திருக்கக்கூடும்.