WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Shades of 1929: Bear Stearns collapse signals deepest
crisis since Great Depression
1929 ன் நிழல்கள் படிகின்றன:
Bear Stearns
வீழ்ச்சி பெருமந்தநிலைக் காலத்திற்கு பின்னரான ஆழ்ந்த நெருக்கடியை சமிக்கை காட்டுகிறது
By the editorial board
18 March 2008
Use this version
to print | Send this link by email
| Email
the author
அடுத்த சில வாரங்களில் வோல் ஸ்ரீட் நிகழ்வுகள் எப்படி இருந்தபோதிலும், ஒரு
பெரும் வரலாற்றுத் தன்மை படைத்த நெருக்கடி இப்பொழுது விரிந்து வருகின்றது என்பதில் கேள்விக்கு இடமில்லை.
முதலாளித்துவ சந்தையின் தவறற்ற தன்மை, வோல் ஸ்ரீட் நிதிய மேதைகளின் அறிவார்ந்த தன்மை ஆகியவை பற்றி
ஒரு தலைமுறையாக அயராத செய்தி ஊடகப் பிரச்சாரத்திற்கு பின்னர், அமெரிக்கப் பொருளாதாரம் இப்பொழுது
பெரு மந்தநிலைக் காலத்தின் பின் காணப்படாத அளவிற்கு ஒரு பொருளாதார நிலைமுறிவின் விளிம்பில் நிற்கிறது.
கடந்த வெள்ளியன்று Bear
Stearns வீழ்ச்சி அடைந்ததும் அது பின்னர் ஜே.பி. மோர்கன்
சேஸ் மற்றும் அமெரிக்க மத்திய வங்கிகள் குழு ஒழுங்குசெய்யப்பட்ட விதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதும்,
போருக்குப் பிந்தைய உலகம் தழுவிய முதலாளித்துவத்தின் வரலாற்றில் ஒரு பெரிய திருப்பு முனையாகும். உலக முதலாளித்துவப்
பொருளாதாரத்திற்குள் இருக்கும் முரண்பாடுகளை அது சுட்டிக் காட்டுகிறது; இது 1930 களில் அனுபவிக்கப்பட்ட
சமூக மற்றும் பொருளாதார பேரழிவுகள் போன்ற நிதியப் பேரழிவு மீண்டும் வரலாம் என்ற நிலையை
தொடுவதுடன், அத்தகைய நிலை அதிகரிக்கலாம் என்பதையும் காட்டுகிறது.
Bear Stearn உடைய
14,000 ஊழியர்களுடைய அவலநிலையாவது, குறைந்தது பாதி பேருக்கு வேலை போய்விடும், நிறுவனத்தில் அவர்கள்
வாழ்நாள் முழுவதும் சேகரித்திருந்த பங்குச் சந்தைகள் ஒரே நேரத்தில் அழிக்கப்பட்டுவிடும் என்ற பரிதாபம், அமெரிக்கா
மற்றும் உலகம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தை இப்பொழுது சூழும் அச்சத்தை கொடுத்துள்ள சமூக பேரழிவின்
முன் நிழலை காட்டுகின்றன.
வார இறுதியில் அமெரிக்க மத்திய வங்கிகள் குழு எடுத்த நடவடிக்கைகள்,
அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் வங்கி மற்றும் நிதிய அமைப்புக்கள் தோல்வி அடைதல் விரைந்து பெருகும்
அச்சுறுத்தலில் முதலாவதாக Bear Stearns
நிகழ்வு இருக்கலாம் என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஞாயிறன்று தாமதமாக அமெரிக்க மத்திய
வங்கிகள் குழு, Bear Stearns
வைத்திருக்கும் இலகுவில் பணமாக்கமுடியாத சொத்துக்களுக்கு கிட்டத்தட்ட 30$ பில்லியனுக்கு பொறுப்பு ஏற்கும்
என்றும் இது ஜே.பி.மோர்கன் சேஸ் உடனான எடுத்துக் கொள்ளும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும்
அறிவித்துள்ளது.
இதைத் தவிர வங்கிகளுக்கு கொடுக்கும் நேரடிக் கடன்களில் வசூலிக்கப்படும்
கட்டணங்களில் தள்ளுபடி விகிதத்தில் கால் புள்ளி வெட்டையும் அமெரிக்க மத்திய வங்கிகள் குழு அறிவித்துள்ளது --இது
பெருமந்த காலத்திற்கு பின்னர் முன்னோடியற்ற ஒரு நடவடிக்கையாகும்; இது வரம்பற்ற கடனுக்கு ஆறு மாத
காலத்திற்கு வணிக வங்கிகளுக்கு பொருந்தும் என்பது மட்டும் இல்லாமல், முதலீட்டு வங்கிகள் மற்றும்
இடைத்தரகர்கள் குழுமங்களுக்கும் பொருந்தும். பொதுவாக, மத்திய வங்கியின் தள்ளுபடி பலகணி என்று
அழைக்கப்படுவது வணிக வங்கிகளுக்கு மட்டும்தான் கிடைக்கும், அதாவது சேமிப்புக்களை வாங்கும் நிறுவனங்களுக்கு
கிடைக்கும்; குறைவான கட்டுப்பாடு, மரபார்ந்த வகையில் கூடுதலான ஊக முதலீட்டு வங்கிகளுக்கு
கொடுக்கப்படுவதில்லை.
1932 ல் அமெரிக்க மத்திய வங்கிகள் குழு சட்டத்தில், பெரு மந்த நிலையின்
உச்சக்கட்டத்தில் முதலீட்டு நிறுவனங்கள் அனைத்திற்கும் அமெரிக்க மத்திய வங்கிகள் குழு கடன்கள் வழங்க
அனுமதித்தல் என்று ஒரு அவசரகால விதி சேர்க்கப்பட வேண்டிகொண்டதன் மூலம், ஏனைய பெரிய வோல் ஸ்ரீட்
நிறுவனங்களும் தோல்வியுறலாம் என்று அது அச்சம் கொள்வதை அமெரிக்க மத்திய வங்கிகள் குழுவானது சமிக்கை
செய்தது. மூத்த பொருளாதார வல்லுனர்களான அலென் சினாய் போன்றவர்கள் "சில முக்கிய நிதிய நிறுவனங்கள்"
ஏதேனும் ஒரு விதத்தில் மறைந்துவிடும்" என்று கணித்துள்ளனர்.
செவ்வாயன்று நடக்க உள்ள கூட்டத்திற்கு முன்பே அமெரிக்க மத்திய வங்கிகள் குழு
இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது; அக்கூட்டத்தில் மத்திய வங்கி குறுகிய கால வட்டி விகிதத்தை 0.50
சதவிகிதத்தில் இருந்து 1.0 சதவிகிதத்திற்கிடையில் இன்னமும் குறைக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
திங்களன்று பெரும் வெடிப்புத் தன்மை நிறைந்த நியூ யோர்க் பங்குச் சந்தை
சூழலில், டோ ஜோன்ஸ் தொழில்துறை சராசரி சற்று உயர்ந்து மூடியது; ஆனால் நிதியப் பங்குகள், ஜே.பி.
மோர்கன் சேசை தவிர, தீவிர சரிவைக் கண்டன. எஞ்சியிருக்கும் முக்கிய முதலீட்டு வங்கிகளில், அடைமான
ஆதரவுப் பத்திரங்களுக்கு பொறுப்பு ஏற்கும் லெஹ்மன் பிரதர்ஸ் மிக அதிக வீழ்ச்சியை, அதாவது வெள்ளியன்று 15
புள்ளிகள் சரிவைத் தவிர மற்றும் ஒரு 19 புள்ளிகள் சரிவை கண்டது. சந்தை மதிப்பில், உலகில் மிகப் பெரிய
வணிக வங்கியான சிட்டி குழுமம் ஆறு சதவிகித வீழ்ச்சியை கண்டது.
யூரோ, யென் மற்றும் ஸ்விஸ் பிராங்க் நாணயங்களுக்கு எதிரான டாலர் இதுகாறும்
இல்லாத அளவிற்குக் குறைந்த மதிப்பைக் கொண்டது.
நிதியச் சந்தைகளுள் மிகப் பெரிய வகையில்
சொத்து மற்றும் பணத்தின் பரிமாற்றத்தன்மையை
உட்செலுத்தியது, விற்கப்பட முடியாத சொத்துக்கள்,
சந்தேகத்திற்குரிய மதிப்பை உடைய சொத்துக்கள் ஆகியவை இணை அடைமானங்களாக ஏற்கப்பட்டதற்கான
உடன்பாடு ஆகியவற்றை தொடர்ந்து வந்துள்ள அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கைகள், அமெரிக்க மத்திய
வங்கி மோசமான முதலீடுகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான பில்லியன் மதிப்புள்ள டாலர்களை தன்னுடைய
இருப்புநிலைக் குறிப்பில் சேர்த்துள்ளது என்பதற்கு ஒப்பாகும். இது அனைத்துக் கடன்களையும் தீர்க்கும் மத்திய
தன்மையின்மீது இருக்கும் உலக நம்பிக்கையையே அச்சுறுத்தும் என்பதுடன், உலக நாணய சந்தைகளில் அமெரிக்க
டாலரின் வீழ்ச்சியை பெரும் சரிவிற்கு உட்படுத்தக்கூடும் என்ற நிலையையும் காட்டுகிறது.
தற்போதைய நிதிய நெருக்கடி 1929 பங்குச் சந்தை சரிவிற்குப் பின்னர் மிக
மோசமான நெருக்கடி என்பது பரந்த அளவில் இப்பொழுது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. திங்கள் இரவு "NBC
Nightly News" நிகழ்ச்சியில்
Bear Stearns
நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் வாங்கப்பட்டுள்ளதை சூழ்ந்துள்ள நடவடிக்கைகள் "பெரு மந்த காலத்தில் இருந்து
காணப்படாத ஒன்றாகும்" என்ற வலியுறுத்தலுடன் அதன் செய்தி திரட்டலில் குறிப்பிட்டுள்ளது.
லண்டன் பைனான்சியல் டைம்ஸில் வெளிவந்துள்ள கட்டுரை ஒன்றில்,
அமெரிக்க மத்திய வங்கிகள் குழுவின் தலைவர் அலன் கிரீன்ஸ்பான் எழுதியுள்ளதாவது: "இரண்டாம் உலகப்போருக்கு
பின்னர் மிகக் கடுமையான நெருக்கடி என்று தற்போதைய அமெரிக்க நெருக்கடி பின்னர் தீர்மானிக்கப்படக்கூடும்."
அமெரிக்க பெருநிறுவன மற்றும் நிதி நடைமுறைக்குள்ளேயே பலரும் அமெரிக்க மத்திய
வங்கிகள் குழு மற்றும் புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் பற்றி கடுமையாக குறைகள் கொண்டுள்ளனர்; இவை
டாலரின் மதிப்பை தீவிரமாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக நிலைமையை
குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் கருதுகின்றனர். திங்களன்று வெளியிட்ட தலையங்கத்தில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்
இவ்வாறு தொடங்கியது: "ஆகஸ்ட் மாதம் தொடங்கிய கடன் சந்தை பீதியில், இப்பொழுது மிக அதிக அளவு
ஆபத்தான கட்டத்தை அடைந்துவிட்டோம். டாலர் மீது உலகப் பாய்ச்சல் என்பது அடித்து விரட்டலில்
முடியக்கூடும்."
"இதுகாறும் அமெரிக்க மத்திய வங்கிகள் குழுவின் முக்கிய சாதனை உலக
நம்பிக்கையை டாலர்மீது இருத்தச் செய்திருப்பதாகும்... தன்னுடைய நிதிய நம்பகத்தன்மையை அமெரிக்க மத்திய
வங்கிகள் குழு மீட்டாக வேண்டும்; இல்லாவிடில் இன்றைய பெரும் பீதி நாளைய பெரும் வீழ்ச்சியாக
மாறிவிடக்கூடும்" என்று அவ்விதழானது புகார் கூறிச்சென்றது.
"சுதந்திர சந்தை" செயற்பாடுகளில் தலையிடும் வகையில்தான் அமெரிக்க மத்திய
வங்கிகள் குழுவின் குறுக்கீடு உள்ளது என்றும் சில வட்டாரங்கள் குறைகூறியுள்ளன. ஆனால் பெரும்பாலான
பகுப்பாய்வாளர்கள் உலக நிதியச் சந்தைகள் நிலைப்பாட்டை ஒட்டி இந்த நடவடிக்கை மிகவும் தேவை என்று
வலியுறுத்தியுள்ளனர். Bear Stearns
முற்றிலும் பொறிதல் என்பது அனைத்து நிதிய இருப்புக்களின் மதிப்பையும் சரிய வைத்திருக்கும்; அதைத் தொடர்ந்து
நிதிய சந்தைகள் முழுவதிலும் விளைவுகள் ஏற்பட்டிருக்கும், நிதிய சொத்துக்களின் குறைமதிப்பு பெரும் வங்கிகள்,
நிதிய அமைப்புக்களில் இருப்பு நிலைக் குறிப்புக்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்; ஏனெனில் இவை அனைத்தும் இதே
போன்ற வகையில்தான் Bear Stearns
இல் முதலீடு செய்துள்ளன."
நியூ யோர்க் டைம்ஸின் கருத்தின்படி பேர் மூழ்கடிக்க
அனுமதிக்கப்பட்டிருந்தால், "அனைத்து அடைமானப் பத்திரங்கள் முற்றும் சொத்துக்கள்" கடன் உறைநிலையில்
வைக்கப்பட்டுள்ள சந்தையில் கொட்டப்பட்டிருக்கும்; இது ஒரு "சுனாமியை" தோற்றுவித்து இடைத்தரகு நிறுவனங்கள்
மற்றும் ஆபத்துக்கால நிதியங்களை சகதியில் தள்ளி மூழ்கடித்திருக்கும்."
அமெரிக்க மத்திய வங்கிகள் குழு தலைவர் பென் பெர்நன்கேயும் மற்ற அமெரிக்க
மத்திய வங்கிகள் குழு கவர்னர்களும் கருவூலச் செயலர் ஹென்ரி போல்சன் மற்றும் துணைச் செயலர் ரொபேர்ட்
ஸ்டீலுடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் பற்றிக் குறிப்பிட்ட வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் எழுதியது: "Bear
Stearns ஐ தோல்வியை சந்திக்க அவர்கள் அனுமதித்தால்,
வோல் ஸ்ட்ரீட்டின் மற்ற பகுதிகளும் அத்துடன் இழுக்கப்பட்டிருக்கும். மிகப் பெரிய நிதிய அமைப்பு ஒன்று $8
பில்லியன் மதிப்பில் இருந்து ஒரே இரவில் ஒன்றும் இல்லாமல் போயிருக்கும்." இதையொட்டி கடன் கொடுத்தல் முழு
உறைநிலையை அடைந்திருக்க கூடும்; அது "1987 அளவிற்கு" பங்குச் சந்தை சரிவை ஏற்படுத்தி அமெரிக்க
பொருளாதாரத்திற்கு "சொல்ல முடியாத சேதத்தை" ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
மத்திய வங்கிகள் குழு, வங்கிகளுக்கு கொடுத்திருக்கும் கடனின் வட்டி விகிதம்
குறைத்தது பற்றி பெருகிய கவலைகள், அவை முற்றிலும் பயனற்றைவை என்ற முறையில் வெளிவந்துள்ளன. முன்னாள்
கருவூலச் செயலரான லோரன்ஸ் சம்மர்ஸ், "நாம் இதுகாறும் நம்பி வந்துள்ள முக்கிய கொள்கைக் கருவியான
மத்திய வங்கிகள் குழு, வங்கிகளுக்கு ஒருவிதத்தில் கடன் கொடுப்பது என்பது தொற்றுக் கிருமியை தக்க மருந்துடன்
எதிர்கொள்ளுவதற்கு ஒப்பானது" என்று கூறியுள்ளார். சர்வதேச நிதிய அமைப்பில் உயர்மட்ட அதிகாரியாக
இருக்கும் ஜோன் லிப்ஸ்கியும் இவரும் அமெரிக்க நிதிய முறையை காப்பாற்ற பொது நிதியங்கள் தேவைப்படும் என்று
கருத்து தெரிவித்துள்ளனர்.
பல பகுப்பாய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளபடி, இன்னும் கூடுதலான கடனைக்
கொடுப்பதன் மூலம் மத்திய வங்கி நெருக்கடியை தீர்க்க முடியாமல் இருப்பது, நிதிய முறை எதிர்கொண்டிருக்கும் மைய
பிரச்சினை சொத்து மற்றும் பணத்தின் பரிமாற்றத்தன்மை என்று இல்லாமல் அனைத்துக் கடனையும் தீர்க்கும் திறனை
ஒட்டி வெளிவருகிறது என்பதாகும்.
இந்த நெருக்கடி 2006ல் தொடங்கிய வீடுகள் விலைகள் வீழச்சியில் அதன் உடனடித்
தோற்றத்தை கொண்டு அப்பொழுதில் இருந்து அதிகமாகிவிட்டது. இதையொட்டி அடைமான சார்புடைய
பத்திரங்களின் மதிப்புக்களில் பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுவிட்டன; இவை வங்கிகள் மற்றும் முதலீட்டு
நிறுவனங்களிடம் இருந்தன; எந்த வட்டிவிகித வெட்டு அல்லது கூடுதலான கடனும் அதை மீட்க இயலாது. இத்திவால்
நெருக்கடியை தீர்ப்பதற்கு ஒரே வழிவகை வீடுகள் விலை உயரத் தொடங்கினால்தான் ஏற்படும். ஆனால் அமெரிக்க
பொருளாதாரம் ஒரு மந்த நிலையில் நுழைவதால் --ஹார்வார்ட் பொருளாதார வல்லுனர் மார்ட்டின் பெல்ட்ஸ்டின்
கருத்துப்படி இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஆழ்ந்த நெருக்கடியாகும் இது-- வீடுகள் விலைகள், நிதிய
நெருக்கடி தீவிரமாவதை அடுத்து, தொடர்ந்து சரியும்.
உலகளாவிய வங்கிகள் அடைமான ஆதரவுடைய பத்திர வணிகத்தை நம்பியிருப்பது
என்பது 1998ல் $16.4 பில்லியன் மதிப்பைக் கொண்டிருந்த இப்பத்திரங்கள் 2007 ஐ ஒட்டி $366 பில்லியனை
அடைந்து விட்டன. Bear Stearns
கடந்த ஆண்டு இப்பத்திரவகையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த 18ம் இடத்தில் இருந்த நிறுவனமாகத்தான்
இருந்தது; அதன் பொருள் ஏனைய பல நிறுவனங்களுக்கும் இதே நிலை ஏற்படக்கூடும் என்பதாகும்.
இவை எதிர்கொள்ளும் நெருக்கடி, அவை வைத்திருக்கும் சொத்துக்களுக்கு உண்மை
மதிப்பீடு இல்லை, எனவே பணம் புரட்டுவதற்கு அவற்றைப் பயன்படுத்தினால் அநேகமாக ஒருவரும் வாங்க
முன்வரமாட்டார்கள் என்பதாகும். நியூ யோர்க் டைம்ஸ் கருத்தின்படி, கடந்த நவம்பர் 30ம் தேதியை
ஒட்டி Bear Stearns
நிறுவனம் அடைமானம் மற்றும் அடைமான சார்பு, ஆதரவு உடைய பத்திரங்களை தன்னுடைய இருப்பில் $46
பில்லியன் மதிப்பிற்குக் கொண்டுள்ளது. அதன் ஆண்டு அறிக்கை இந்தச் சொத்துக்களில் $29 பில்லியன் சந்தையில்
எடுக்கக்கூடிய தவகல்கள் முலம் கணினி முன்மாதிரியில் மதிப்பிடப்பட்டவை, "அதில் இருந்து எடுக்கப்பட்டவை",
"ஆதரவு உடையவை" என்று குறிப்பிட்டுள்ளது; எஞ்சியிருக்கும் $17 பில்லியன் "நிறுவனத்தின் உள்ளேயே இருக்கும்
மாதிரிகள், வழிவகைகள் இவற்றில் பொதுவாகக் காணக்கூடிய, ஏற்கக்கூடிய முக்கியமான தகவல்களை பயன்படுத்தி
வாங்கப்பட்ட சொத்துக்கள்" என்று குறிப்பிடுகிறது.
Bear Stearns பயன்படுத்திய
வழிவகைகள் உலக நிதிய மற்றும் வங்கி முறைகள் அனைத்திலும் பயன்படுத்தப்படுகின்றன; இதன் பொருள் சொத்து
ஆதரவுடைய பத்திரங்களில் காணப்படும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் அப்பட்டமான கற்பனையான மூலதனம்
ஆகும்.
நெருக்கடியின் வரலாற்று வேர்கள்
நிதிய நெருக்கடியின் உடனடிக் காரணம் குறைந்த பிணையுள்ள அடமானச் சந்தையின்
சரிவு என்றாலும், அதன் வரலாற்று வேர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக அமெரிக்க மற்றும் உலக
முதலாளித்துவத்தின் கூறுபாடுகளில் ஏற்பட்ட மாற்றத்தில் உள்ளன.
இரண்டாம் உலகப் போர் முடிந்து 60 ஆண்டு காலம் என்பது இரு பகுதிகளாக
பிரிக்கப்படலாம். முதல் பகுதியில் அமெரிக்க முதலாளித்துவ பொருளாதாரம் அதன் உற்பத்தித் தொழிலின்
மேலாதிக்கம் என்ற கூறுபாட்டினால் சிறப்பு அடைந்திருந்தது. இரண்டாம் பகுதியில் பெருகிய முறையில் நிதியூட்டல்
முறையினால் அதன் தன்மை நிறைந்துள்ளது.
இந்த வழிவகையை ஒட்டி பெரும் மலை போன்ற கடன் தோன்றியுள்ளதுடன்,
உண்மையான உற்பத்தித் துறை வளர்ச்சியில் இருந்து பெருகிய முறையில் பிரிந்து, பெரும் சிக்கல் வாய்ந்த நிதிய
நடவடிக்கைகள் திரித்தல் ஆகியவற்றை கொண்டுள்ள தன்மையில் பெரு வங்கிகள், நிதிய நிறுவனங்களின் இலாபங்கள்
குவியும் வழிவகை ஏற்பட்டுள்ளது. இத்தகைய இலாபக் குவிப்பு அமெரிக்காவில் மையம் கொண்டுள்ளது; ஆனால்
இப்பொழுது வெடித்துள்ள நிதியநெருக்கடி ஒரு அமெரிக்க பிரச்சினை மட்டுமல்ல. மாறாக இது அமெரிக்க நிதிய
வழிவகையின் ஒரு வெளிப்பாடு ஆகும்; இதுவோ உலகப் பொருளாதாரத்தின் இதயத்தானமாக உள்ளது; எனவே
உலக முதலாளித்துவ ஒழுங்கிற்கு மிகப் பெரிய நெருக்கடி ஆகும்.
விரிந்துவரும் இப்பேரழிவு வோல் ஸ்ட்ரீட் வல்லுனர்கள் பலருக்கு ஒரு வியப்பாக
உள்ளது என்றாலும் மார்க்சின் மூலதனம் என்னும் நூலின் இரண்டாம் பகுதியின் முதல் அத்தியாயத்தில் இந்த
நெருக்கடியின் பின்னணி பற்றி தக்க உட்பார்வை காணக் கிடைக்கிறது. (வங்கிகள், நிதிய நிறுவனங்கள்) பண முதலீடு
வைத்திருப்போர் பற்றி மார்க்ஸ் கூறியது: "உற்பத்தி நிகழ்வுப்போக்கு என்பது பணம் பண்ணுவதற்கு ஒரு தேவையான
தீமை என்பது போல், ஒரு தவிர்க்கமுடியாத இடைப்பட்ட பிணைப்பாகத்தான் தோன்றுகிறது; ஆதலால்
முதலாளித்துவ உற்பத்தி முறை கொண்ட நாடுகள் அனைத்தும் அவ்வப்பொழுது பரபரப்புடன் உற்பத்தி
நிகழ்வுப்போக்கு இல்லாமலேயே பணம் பண்ணவேண்டும் என்ற உந்துதலுக்கு உட்படுகின்றன." இந்த நிகழ்வுப்போக்கு
"அவ்வப்பொழுது" என்று மார்க்சால் குறிப்பிடப்படுவது, இப்பொழுது அமெரிக்க முதலாளித்துவத்தின் நிரந்தர
இயல்பாக ஆகிவிட்டது.
மோசடித்தனம், திரித்தல், அப்பட்டமான குற்றச் செயல் ஆகியவை செல்வக் குவிப்பு
வழிவகையின் மத்திய கூறுபாடு என்ற அளவிற்கு இது நிலைமையைக் கொண்டுவந்து விட்டது. 2000-2001ல் பங்குச்
சந்தைக் குமிழ் வெடித்தபோது, இந்த வகையின் சில கூறுபாடுகள்
Enron மற்றும்
WorldCom.
சரிவில் வெளிவந்தன. ஆனால் முடிந்துவிட்டன என்று கூறுவதற்கு இல்லாமல் இவை இன்னும் பரந்த அளவில் அடுத்த
கட்டத்தில் விரிவடைந்து விட்டன.
பங்குச் சந்தை வெடிப்பிற்கு அமெரிக்க மத்திய வங்கிகள் குழு எதிர்கொண்ட நிலை,
முந்தைய காலம் முழுவதும் அக்டோபர் 1987ல் இருந்து வோல் ஸ்ட்ரீட் சரிவின் போது எடுத்துக் கொள்ளப்பட்ட
முயற்சிகள் மீண்டும் ஏற்கப்பட்டன என்பதுதான். வட்டி விகிதங்களை குறைத்து நிதிய முறையில் அதிக கடன்களை
உள்ளே கொடுத்தது. மோசடித்தன நடைமுறைகள் வெளிப்படுவதை இது கண்ணுற்று, "சிக்க வைக்கும் விகிதங்கள்",
"பொய்க்கடன்கள்" ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு, சந்தேகத்திற்கு உரிய தன்மை படைத்த கடன்கள்
தொகுப்பை உயர்மட்ட நிதிய கருவிகளாக மாற்றிய நிலையையும் கண்டது. இவை பின்னர்
AAA தரத்தில்
நிதிய நாணயத் தர நிர்ணய அமைப்புக்களால் வைக்கப்பட்டன. ஏனெனில் அவையே இத்தகைய சந்தேகத்திற்கு உரிய
நிதிய நடவடிக்கைகள் மூலம் வளர்ச்சி பெறும், இலாபம் பெறும் வாய்ப்புக்களை கொண்டிருந்தன.
"தடையற்ற சந்தை" ஊக்கிகளின் கூற்றான கட்டுப்பாடுகள் இல்லாத நிலை
வெளிப்படைத்தன்மையை பெருக்கியுள்ளன என்பதற்கு முற்றிலும் மாறாக, நிதிய முறை பெருகிய முறையில்
ஏமாற்றுத்தனம், மூடி மறைத்தல் ஆகியவற்றை கையாள்கின்றது. கடந்த ஒரு தசாப்தத்தில் முக்கிய மாற்றுவிகிதத்தில்
வணிகத்திற்கு உட்படாத நிதிய ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு, மற்றும் முற்றிலும் கட்டுப்பாடுத்தப்படாத
ஒப்பந்தங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டன; எஞ்சிய ஒப்பந்தங்கள், பங்குகள் பத்திரங்கள் இவற்றுடன்
பிணைக்கப்பட்டிருக்கும் வணிகங்கள் நிதிய முறைக்குள்ளேயே நடைபெறுகின்றன.
Bear Stearns
இன் இருப்புநிலைக் குறிப்பு காட்டுவது போல் "மதிப்பு" என்பது
தொடக்கத்தில் கணினி தோற்றுவித்த மாதிரிகளின் அடிப்படையில் வெளிவந்தவை என்பது திட்டமிட்ட
ஏமாற்றுத்தனத்திற்கு வெகு அருகில்தான் உள்ளது.
உண்மையில், கடன் நெருக்கடியின் காரணங்களில் ஒன்று முக்கிய வங்கிகள் மற்றும் நிதிய
நிறுவனங்கள் மற்றவை கூறுவதை நம்ப மறுத்து கடன்கள் கொடுப்பதை மறுத்தல் என்பதாகிவிட்டது.
போருக்குப் பிந்தைய முதலாளித்துவ பொருளாதாரம் பற்றிய ஒரு மதிப்பீடு
நிதிய சூழ்ச்சிக்கையாளல் மற்றும் குற்றச் செயல் வெடித்துள்ளமை, முக்கியத்துவத்தை
கொண்டிருக்கிறது என்றாலும் அது ஒன்றும் நெருக்கடிக்குக் காரணம் அல்ல. முதலாளித்துவ பொருளாதாரம், சமூகம்
இவற்றின் மிக உயர்மட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள்தான் உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் கட்டமைப்பில்
வரலாற்று அளவில் நிகழ்ந்துள்ள மாறுதல்களின் விளைவு ஆகும்.
இந்த வழிவகைகள்தாம் 1920 கள், 1930களில் இருந்த நிலைமையின் கூறுபாடுகளில்
காணப்பட்ட சமூக, பொருளாதாரச் சூழல் மீண்டும் வெளிவரும் தன்மைக்கு வழிவகுத்தன; இவை பின்னர் இரண்டாம்
உலகப் போர் வெடிக்க காரணமாயின.
பெரு மந்த நிலை மற்றும் போர் ஆகியவற்றை தொடர்ந்த பேரழிவை தகர்த்து
மீண்டும் உலகப் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துதல் அமெரிக்க முதலாளித்துவ முறையில் வலிமையில் தளத்தைக்
கொண்டிருந்தது. இதுதான் உலகச் சந்தை முறை மறுபடியும் கட்டமைப்பதற்கு தளத்தை கொடுத்தது; அதுவோ
1930 களில் கிட்டத்தட்ட மறைந்து விட்டிருந்தது; மேலும் இந்த முதலாளித்துவ முறை ஒரு சர்வதேச நிதிய
ஒழுங்கு, நிதி முறையை மீண்டும் 1944ம் ஆண்டு பிரெட்டன் வூட்ஸ்
உடன்படிக்கையின் கீழ் நிறுவுவதற்கும் 1947 மார்ஷல் திட்டத்தின்
கீழ் ஐரோப்பிய பொருளாதரத்தை மறுகட்டமைப்பதற்கும் உறுதுணையாக நின்றது.
அதன் விளைவாக அமெரிக்க தொழிற்துறையின் பெருகிய உற்பத்தி வழிமுறைகளை
ஏனைய முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்கு நீட்டித்தமையானது, இலாப வீதத்தில் மேல்நோக்கிய போக்கை
சாத்தியமாக்கியது. அது போருக்குப் பிந்தைய பொருளாதார செழுமைக்கு ஒரு அடித்தளமாக இருந்தது.
ஆனால் அரசாங்க தலையீடு, வட்டிவிகிதம் மற்றும் மொத்த தேவையின் (கேள்வி)
அளவைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் கீன்சிய பொருளாதாரம் 1930களின் போது வெளிப்பட்ட
நெருக்கடியை தீர்த்துவிட்டது என்ற கூற்று ஒருபுறம் இருந்தாலும், முதலாளித்துவ உற்பத்தி முறையில் இருந்த
முரண்பாடுகள் கடக்கப்படவில்லை. அவை 1960 களின் இறுதியில் இலாபவிகித சரிவு மற்றும் சர்வதேச பண
அமைப்பின் குவிந்த பிரச்சினைகளுடன் மீண்டும் தோன்றலை சமிக்கை செய்தன. இவை 1971ம் ஆண்டில் அமெரிக்க
டாலருக்கு தங்க ஆதரவு இருப்பதை அகற்றுவதற்கு வழிவகுத்து, 1973ம் ஆண்டு நிலையான பண உறவுகளை முடிவிற்கு
கொண்டுவந்தது.
1960 களும் 1970 களின் தொடக்க ஆண்டுகளும் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள
வர்க்கத்தின் போராட்டங்களின் வெடிப்பைக் கண்டது -- புரட்சிகர ஆற்றலுள்ள பரிமாணங்களை கொண்ட
அவ்வியக்கம் தொழிலாள வர்க்கத்தின் ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் தொழிற்சங்க தலைமைகளின்
காட்டிக்கொடுப்பினால் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.
இந்த இயக்கத்தை கட்டுப்படுத்தியது உலக முதலாளித்துவம் பரந்த வகையில் பரந்த
மறு ஒழுங்குபடுத்தலுக்கு தேவையான அரசியல் அத்திவாரங்களை கொடுத்தன. 1970 களின் முடிவிலும் 1980களின்
ஆரம்பத்திலும் அவை தொடங்கியிருந்தன. 1979ம் ஆண்டு "வோல்க்கர் கொடுத்த அதிர்ச்சி", 1930 களின்
ஆழ்ந்த பெருமந்த நிலைக்கு பின்னர், உண்மையான வட்டிவிகிதங்கள் முன்னோடியில்லாத அளவிற்கு உயர்த்தியதை கண்ட
நிலை, அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் கட்டமைப்பதின் தொடக்கமாயிற்று; இது தொழில்துறையில் இலாபமற்ற
பிரிவுகள் மூடப்பட வேண்டும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தொடர்ந்த தாக்குதல்கள் வேண்டும் என்று
கூறியது; இது 1981ம் ஆண்டு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அலுவலர்களின் தொழிற்சங்கத்தை அழித்ததில்
இருந்து தொடங்கியது.
இத்தாக்குதல் புதிய கணினி தளத்தை கொண்ட உற்பத்தி முறை, மேலாண்மை
ஆகியவற்றுடன் இணைந்து, செலவீனங்களை குறைத்து இலாபங்களை பெருக்கும் நோக்கத்தை கொண்டிருந்தது. இந்த
நடவடிக்கைகளின் பாதிப்பு அமெரிக்க தொழிலாளர்களின் உண்மை சராசரி ஊதியங்கள் தொடர்ச்சியாக 1973
முதல் 1990 களின் இறுதி வரை சரிவுற்றன; அப்பொழுது குறுகிய இடைவெளிக்கு பின்னர் 2001ல் அது மீண்டும்
தொடங்கியது.
இந்த நடவடிக்கைகள் ஒரு முக்கிய பங்கை கொண்டிருந்தாலும், உலக முதலாளித்துவ
பொருளாதாரத்தின் அமைப்பில் மிக முக்கியமான மாற்றம், 1990 களின் ஆரம்பத்தின் சோவியத் ஒன்றியம் மற்றும்
ஸ்ராலினிச ஆட்சிகளின் சரிவை தொடர்ந்து சீனா மற்றும் உலகின் பிற பகுதிகளில் கிடைக்கும் குறைவூதிய
தொழிலாளர் தொகுப்பு மற்றும் பரந்த பரந்த வளங்கள் திறந்துவிடப்பட்டதாகும்.
இந்த வளங்கள் பயன்படுத்தப்பட்டமை உலக முதலாளித்துவ பொருளாதரத்திற்கு
1990 களின் ஆரம்பத்தில்த்தில் இருந்த மந்த நிலையை தொடர்ந்து ஒரு ஏற்றத்தை அனுபவிக்க உதவின; அதே
நேரத்தில் பெருகிய முறையில் ஸ்திரமற்ற தன்மை ஒன்றும் வெளிவந்தது; அது 1997-98ல் வெளிப்பட்ட ஆசியப்
பொருளாதார நெருக்கடியில் புலப்படுத்தப்பட்டது.
அமெரிக்க பொருளாதாரம் வெற்றுத் தன்மை அடைந்தது, அதாவது உற்பத்தித்
தொழில்துறை அழிவிற்கு உட்பட்டு நிதிய முறை வளர்ச்சியுற்றது, மற்றும் சீனா, இன்னும் பிற இடங்களில் பரந்த
புதிய உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டது ஆகியவை, கடந்த ஒன்றரை தசாப்த காலத்தில் பொருளாதார
வளர்ச்சியை அதிகரித்த உலகந்தழுவிய நிகழ்வுப்போக்கின் இரு பக்கங்கள் ஆகும்.
அமெரிக்காவில் கடன் கொடுத்தல் விரிவாக்கம் செய்யப்பட்டது, தொடர்ச்சியான
செழுமைகள் தோற்றுவிக்கப்பட்டது -- பங்குச் சந்தைக் குமிழ், டாட்காம் குமிழ், வீடுகள் குமிழ் என--
சந்தைகள் சீனா இன்னும் பிற குறைவூதிய நாடுகளில் இருந்து தேவையான உற்பத்தி விரிவாக்கத்தை தொடர்வதற்கும்
நிலைநிறுத்துவதற்கும் உதவின.
அதே நேரத்தில் உற்பத்தித் துறையினை இந்த குறைவூதிய பகுதிகளுக்கு மாற்றம்
செய்ததால் ஏற்பட்ட உற்பத்திச் செலவினங்களின் குறைப்பு, அமெரிக்க மத்திய வங்கிகள் குழு குறைந்த வட்டிவிகித
நிதிய ஒழுங்குமுறையை தக்க வைக்கவும் கடனை அடிப்படையாக கொண்ட செழுமைகளை தோற்றுவிக்கவும் செய்தன.
ஆனால் இந்த வழிவகையே கடந்த காலத்தில் பெருகிய வளர்ச்சிக்கு வழிவகுத்தது,
இப்பொழுது உலகப் பொருளாதார நெருக்கடிக்கு வகை செய்யும் நிலைமைகள் ஏற்பட்டுள்ளது; இது மில்லியன்
கணக்கான மக்களை பேரழிவில் ஆழ்த்தும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.
சீனாவில் பெரும் அளவிலான முதலீடுகள், அதையொட்டி தோன்றியுள்ள மூலப்
பொருட்களுக்கான பெருகிய தேவை ஆகியவை உலகந்தழுவிய பணவீக்கம் மறுபடியும் எழுச்சி பெறும் நிலையை
ஏற்படுத்தியுள்ளன. இந்த விலைகளின் எழுச்சி தொடர்ந்து டாலரின் மதிப்பு வீழ்ச்சியுறுவதால் அதிகரிக்கிறது. அதே
நேரத்தில் டாலரும் தொடர்ந்து சரிகிறது; ஏனெனில் அமெரிக்க மத்திய வங்கிகள் குழு, வட்டிவிகித வெட்டுக்கள்
நிதிய முறையைத் தக்க வைத்துக் கொள்ளும் இலக்கைக் கொண்டுள்ளன. சுருங்ககூறின், முந்தைய காலக்கட்டத்தில்
ஏற்றத்தை தோற்றுவித்த வழிவகைகள் இப்பொழுது பின்னடைவுகளை கொடுக்கின்றன.
அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமகள் மீது முடிவில்லாமல்
நடத்தப்படும் தாக்குதல்கள், கடந்த மூன்று தசாப்தங்களாக குடும்ப வருமானங்களை நிலைநிறுத்தும் "சமாளிக்கும்
கருவிகள்" சக்தியிழய்து போயுள்ளமை ஆகியவை, கூடுதலான மகளிர் தொழிலாளர் தொகுப்பில் சேர்ந்துள்ளது,
வேலை நேரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது, செலவினங்களை சமாளிக்க வீட்டு அடைமானங்களை பயன்படுத்துவது
ஆகியன நுகர்வோர் செலவினக் குறைப்பு என்ற நிலை வரும் என்ற அச்சுறுத்தலை கொடுக்கின்றன; இவை ஆழ்ந்த
பொருளாதார பின்னடைவிற்கு வழிவகுத்துள்ளன.
அமெரிக்க டாலர் தொடர்ந்து பலவீனம் அடைவது, பணவீக்கத்தை பெருக்குவது
மட்டும் இல்லாமல் நாள் ஒன்றுக்கு $2 பில்லியன் வெளி மூலதனம் நாட்டிற்கு வருவதை திருப்பும் முயற்சியை
அதிகரித்துள்ளது; அப்படி பணம் வந்தால்தான் அமெரிக்க நிதிய முறைக்கு தேவையான நிதியம் வந்து சேரும்.
இத்தகைய உடனடி பொருளாதாரப் பாதிப்பை தவிர, டாலரின் சரிவு பரந்த
முறையில் வரலாற்று மாற்றத்தின் வெளிப்பாடும் ஆகும். கடந்த வாரம் டாலரானது யூரோ ஒன்றிற்கு 1.56 என
குறைந்ததால் உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை அது யூரோ பகுதியிடம் இழந்துவிட்டது. இது
ஒரு வெறும் அடையாள முறை முக்கியத்துவம்தான்.
போருக்கு பிந்தைய முதலாளித்துவ முறையின் மறு உறுதிப்பாடு மற்றும் தொடர்ந்த
ஏற்றம் ஆகியவை அமெரிக்கப் பொருளாதாரத்தின் வலிமையை நம்பியிருந்தன. ஆனால் ஒரு கணிசமான காலத்திற்கு,
குறைந்தது 1980 களில் இருந்தேனும், அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகந்தழுவிய நிலைப்பாடு தொடர்ச்சியாக
வலிமை குன்றியுள்ளது. இந்தச் சரிவு பெருமளவில் அமெரிக்க டாலர்தான் இன்னமும் முக்கியமான உலக நாணயமாக
செயல்படுகிறது என்ற உண்மையில் கணிசமாக மூடிமறைக்கப்படுகிறது. உலக நாணயம் என்ற முறையில் டாலரின் பங்கு
அமெரிக்காவிற்கு மக்தான நலன்களை கொடுத்து அதன் நிதிய முறைக்கும் ஏற்றம் கொடுத்து அதனிடம் இல்லாத ஒரு
வலிமை தோற்றத்தைக் காட்டியது.
இப்பொழுது அடித்தளத்தில் இருக்கும் வலுவற்ற தன்மை வெடித்து வந்துள்ளது; அனைத்து
முக்கிய நாணயங்களுக்கும் எதிராக டாலர் மதிப்பின் சரிவு வெளிப்பட்டுவிட்டது.
ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அவசியம்
அமெரிக்க நிதிய நெருக்கடி என்பது அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள
வர்க்கத்திற்கு ஆழ்ந்த முக்கியத்துவம் உடைய ஒரு நிகழ்வு ஆகும்.
அதனுடைய உடனடி விளைவு எப்படி இருந்தபோதிலும், முதலாளித்துவ இலாப முறையின்
அடிப்படை முரண்பாடுகளை அது குறிப்பிட்டுக் காட்டுகிறது; அதன் வெடிப்பு நூறாயிரக் கணக்கான தொழிலாளர்கள்,
இளைஞர்கள் மற்றும் அறிவார்ந்த பல பிரிவினர் ஆகியோர் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின்
பாதையில் முன்பு 1920கள் மற்றும் 1930களில் நுழைந்ததை கண்டது, இப்பொழுது மீண்டும் அது கனிந்துள்ளது.
தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளும் அரசியல் பணிகள் ஒரு சர்வதேச சோசலிச
வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை மையம் கொள்ளுகின்றன; அது தனியார் இலாபத்தின் ஆணைகளுக்கு,
பொருளாதாரத்தை தாழ்த்தும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதை இலக்காகக் கொண்டுள்ளதுடன், உலகம் முழுவதும்
இருக்கும் தொழிலாளர்களின் உழைப்பில் தோற்றுவிக்கப்பட்ட பரந்த செல்வம் அனைவருடைய நலன்களுக்கும்
பயன்படுத்துதலை நோக்கமாக கொண்டுள்ளது.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் ஆண்டின்போது நிதிய நெருக்கடி
வெளிப்பட்டுள்ளது; ஆயினும் கூட இரு பெரும் கட்சிகளின் வரக்கூடிய வேட்பாளர்கள் எவரும் வங்கிகள் மோசடி
செய்வது, பெருகிய முறையில் பல மில்லியன் அமெரிக்கர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தான விளைவுகள் ஆகியவற்றைப்
பற்றி ஏதும் கூறவில்லை. இப்பொழுது ஜனாதிபதியாக இருக்கும் ஜோர்ஜ் புஷ் இந்தப் பெருகி வரும் பேரழிவை
"ஒரு கரடுமுரடான வழி" என்று தள்ள முயல்கிறார். இதுவே இரு கட்சிகளும் நிதிய பிரபுத்துவத்தின் கருவிகள்
என்பதைத்தான் நிரூபணம் செய்கிறது.
கடந்த இரு தசாப்தங்களாக, முதலாளித்துவ அமைப்பின் தலைமை குருக்களும்,
நிபுணர்களும் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் எதிர்ப்புரட்சி மற்றும் அதிகாரத்துவ ஸ்ராலினிச
ஆட்சிகளின் சரிவை பயன்படுத்தி சோசலிசம் முடிந்துவிட்டது என்ற பிரச்சாரத்தை இடைவிடாமல் நடத்துவதற்கு
அடிப்படையை கொண்டனர். தனியார் சொத்துரிமை மற்றும் இலாபத்தின் அடிப்படையில் இருக்கும் முதலாளித்துவ
சந்தை ஒன்றுதான் வரலாற்றளவில் தொடரக்கூடிய பொருளாதார அமைப்பு வடிவமாக இருக்கும் என்றும்
கூறுகின்றனர்.
இத்தகைய வரலாற்றுப் பொய் இப்பொழுது அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது. வங்கிகளும்
நிதிய நிறுவனங்களும் உண்மையை பிரதிபலிக்கின்றன எனக்கூறி, விற்ற கவர்ச்சியான கடன் பொருட்களைப் போல்
அதுவும் சிறிதும் மதிப்பற்றது ஆகும்.
ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டம் கீன்சிய நடவடிகைகளுக்கு
திரும்ப வேண்டும் என்று கூறும் ஆருடம் கூறுபவர்களுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தின் மூலம்தான்
முன்னேற்றம் அடைய முடியும்; கூடுதலான அரசாங்க கட்டுப்பாடு, விதிகள் செயல்படுத்தப்பட்டு தனியார் உடைமை
உரிமைகள் காக்கப்படும் என்ற விதத்தில் தீர்வு கிடைக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
வரலாற்றுச் சான்றானாது 1970களில் எடுக்கப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளின்
தோல்வியைத்தான் காட்டுகிறது; அவைதான் தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்துள்ள "சுதந்திர சந்தை"
முறைக்கு வழி அமைத்தது.
அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களுடைய விதி அவர்களை
பேரழிவு அச்சுறுத்தலுக்கு உட்படுத்தும் ஒரு நிதிய முறையின் நடவடிக்கைகளால் தீர்மானிக்கப்படுவதை
அனுமதிக்கக்கூடாது. அவர்கள் விஷயங்களை தங்கள் சொந்த கரங்களில் கட்டாயம் எடுக்க வேண்டும்.
நெருக்கடிக்கான ஒரு சோசலிச தீர்விற்கு போராடுவதற்கு அனைத்து தேசிய எல்லைகளையும்
தாண்டி அவர்கள் கட்டாயம் ஐக்கியப்பட வேண்டும். அதன் மையத்தில் முழு நிதிய முறையும் தனியார் கரங்களிலிருந்து
எடுக்கப்பட்டு பொது உடைமையின் கீழ் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படும்.
செல்வக் கொழிப்பு, கூடுதலான செல்வுக் கொழிப்பு படைத்தவர்கள் செய்தி ஊடகத்தில்
இருக்கும் தங்கள் பிரதிநதிகளுடன் சேர்ந்து கொண்டு அத்தகைய திட்டத்தை செயல்படுத்த முடியாது எனக் கண்டிப்பர்;
ஏனெனில் இது தனியார் சொத்துரிமையின் மேலாதிக்கத்தை மீறுகிறது. ஆனால் அவர்களுடைய கொள்கைகள் மற்றும்
அவர்கள் தலைமை தாங்கும் சமூக ஒழுங்கினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள பேரழிவுகள், அவர்கள் சமூகத்தின்
பொருளாதார அமைப்பு மற்றும் செயற்பாடுகளை இயக்குவதற்கு எந்தவித உரிமையையும் இழந்துவிட்டனர் என்ற
பொருளை கொடுத்துவிட்டன.
முதலாளித்துவ சமூகத்தின் வளர்ச்சி புறநிலை விதிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன; இவை
எப்படியும் ஒரு சமூகப் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும், உயர்ந்த சமூக அமைப்பின் தேவையை முன்
வைக்கும் என்ற மார்க்சின் விஞ்ஞானப் பகுப்பாய்வை மறுக்கும் முயற்சிகள் ஒரு முழு வரலாற்றுக் காலத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதலாளித்துவ பொருளாதாரத்தின் "இயல்பான" நடவடிக்கையின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்ட அந்த விதிகள்,
இப்பொழுது வெளித்தோற்றத்தில், மார்க்ஸ் கூறியவாறு "நமக்கு அருகில் ஒரு வீடு சரியும்போது..... புவி
ஈர்ப்புவிதி தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளுவது போல்" துல்லியமாக வெளிவந்துள்ளன.
அமெரிக்க நிதிய நெருக்கடியின் வெடிப்பை தொடர்ந்து ஒரு புதிய அரசியல்
சகாப்தம் திறந்துவிடப்பட்டிருக்கிறது; இதில் தொழிலாள வர்க்கமானது தன்னுடைய மற்றும் மனிதகுலம்
முழுவதிற்குமான வருங்காலத்தை சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்திற்கான போராட்டத்தின் மூலம் கட்டாயம்
உத்திரவாதப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முன்னோக்குத்தான் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு ஆகும். |