World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Clinton's national security campaign and Obama's political dilemma

கிளின்டனின் தேசியப்பாதுகாப்புப் பிரச்சாரமும் ஒபாமாவின் அரசியல் சங்கடமும்

By Bill Van Auken
10 March 2008

Use this version to print | Send this link by email | Email the author

வையோமிங்கில் சனிக்கிழமை நடந்த ஜனநாயக சிறுகுழுக்கள் கூட்டம் பராக் ஒபாமா, ஹில்லாரி கிளின்டனால் திரட்டப்பட்ட பேராளர்கள் வாக்குகளை குறிக்கும் வகையில் 7க்கு 5 அடிப்படையில் வெற்றியை உருவாக்கியது. இது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு போட்டியில் தொடர்ந்து முடிவற்ற தன்மை இருப்பதையும் ஜனநாயகக் கட்சியிலேயே பெருகிய முறையில் நெருக்கடி இருப்பதையும்தான் அடிக்கோடிட்டுக்காட்டுகிறது.

இரு தரப்பும் இப்பொழுது தங்கள் முறையீட்டை பெருகிய முறையில் உயர்மட்ட பேராளர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடம் - மாநாட்டு இடங்களில் ஐந்தில் ஒரு பங்கை கட்டுப்படுத்தும் தேர்ந்தெடுக்கப்படும் மற்றும் கட்சி அலுவலர்களிடம் வைக்கின்றனர்; அவர்களுடைய ஆதரவு இல்லாமல் இருவரில் எவரும் வேட்புத் தகுதி பெற முடியாது.

இறுதி முடிவு எப்படி இருந்தபோதிலும்கூட, இந்தப் பெருகிய முறையில் இருக்கும் ஆழ்ந்த அரசியல் போர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் இருவரையும் தீவிரமாக வலதிற்குத் தள்ளி வருகிறது.

கிளின்டனுடைய நிலை அதிக அளவில் மக்கெயினுடைய பிரச்சாரத்துடன் இணைந்த வகையில் ஏற்கனவே தொடங்கிவிட்டது; இருவருமே அமெரிக்காவின் "தலைமைத் தளபதி" என்ற பதவிக்கு தங்களிடம் இருப்பதாகக் கூறும் தகுதிகளை கூறுவதுடன் இருவருமே ஒபாமாவை இப்பிரிவில் அவருடைய தகுதிகளை வினாவிற்கு உட்படுத்தும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

நியூ யோர்க் செனட்டரும் முன்னாள் முதல் சீமாட்டியுமான ஹில்லாரி தன்னுடைய "தேசியப் பாதுகாப்பு" பிரச்சாரத்தை வாஷிங்டன் டி.சி.யில் ஒரு சிறப்புச் செய்தியாளர் கூட்டத்தில் விவரித்தார்; இதில் இவரைச் சுற்றி 13 ஓய்வு பெற்ற மூத்த இராணுவ அதிகாரிகளுடன், ஏராளமான அமெரிக்க கொடிகளும் சூழ காட்சி அளித்தார். கூடியிருந்த உயர்மட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகள் கிளின்டனுடைய தேசிய பாதுகாப்பு திறன்களை மதிப்பிடவும் ஒபாமாவிடம் அத்தன்மை இல்லாதது பற்றிக் கூறவும் பேச அழைக்கப்பட்டனர்.

துணைத் தளபதி ஜோ பல்லார்ட் (1990 களில் பில் கிளின்டனால் இராணுவப் பொறியியல் பிரிவுக்கு தலைமை தாங்குமாறு நியமிக்கப்பட்டவர்) கூறிய கருத்து மாதிரித் தன்மையை கொண்டிருந்தது: "தொலைபேசி மணி அடிக்கும்போது அதிகாலை மூன்று மணிக்கு தங்கள் ஜனாதிபதி தயாராகக் கேட்க இருப்பாரா என்பது பற்றி வாக்காளர்கள் சிறிதும் கவலைப்பட தேவையில்லை."

இந்த நயமற்ற குறிப்பு இம்மாத தொடக்கத்தில் டெக்ஸாஸ் ஆரம்பத் தேர்தலுக்கு முன்னால் கிளின்டன் பிரச்சாரத்தில் ஏற்படுத்தப்பட்ட பயத்தை கிளப்பிவிடும் பிரச்சாரத்தை பற்றியது ஆகும்; அதில் தூங்கும் குழந்தைகளும் வெள்ளை மாளிகையில் ஒரு "சிவப்பு தொலைபேசி" மணி அடித்துக் கொண்டு இருப்பது போன்ற தோற்றங்கள் இருந்தன.

இந்த அடையாள முறை அமெரிக்க அரசியலில் பல பிரிவுகளிலும் இருப்பதைப் போல் இரு மட்டங்களில் செயல்படுகிறது. ஒரு புறத்தில், பொதுமக்களை பயமுறுத்தி ஒபாமாவை விட கிளின்டனுக்கு ஆதரவு தேடும் வகையில் ஈர்க்கும் தன்மையை, இவருக்கு வாக்களிக்காவிட்டால் அவர்கள் பயங்கரவாத தாக்குதலின் பாதிப்பாளராகக்கூடும் என்ற கருத்தை கொண்ட முயற்சியாகும்.

ஆனால் பல்லார்டின் அறிக்கையில் எழுப்பப்படும் வெளிப்படையான கேள்வி இதுதான்: விடிகாலை 3 மணிக்கு தொலைபேசி மணி அடிக்கும்போது எதைச் செய்யத் தயார்? இங்கு இன்னும் மிகக் குறைவான தளத்திற்கு இயக்கப்பட்ட மிக அடிப்படையான செய்தி வெளிப்படுகிறது. விடிகாலை தொலைபேசி அழைப்பை எடுக்கும் ஜனாதிபதி அப்பொழுதே தளபதியிடம் உலகில் ஏதேனும் ஒரு பகுதியில் இருக்கும் மக்கள் மீது குண்டுவீச்சு நடத்தலாம் என்று உத்தரவு கொடுப்பார் என்றும் அது பற்றிய உளைச்சல் ஏதுமின்றிப் பின் தூங்கச் சென்றுவிடுவார் என்பதும் ஆகும். வெள்ளை மாளிகையில் உறங்கிய அனுபவம் கிளின்டனை இத்தகைய இரக்கமற்ற முறைக்கு எஃகு போல் தயாரித்துள்ளது, அரசியலில் அதிகம் அறியப்படாத நபரான ஒபாமா இத்தகைய கொல்லும் உள்ளுணர்வை செயல்படுத்த நம்பப்பட முடியாதவர் என்ற செய்தியை அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குக் கொடுக்கும் தன்மையை இந்த தகவல் கொடுக்கிறது.

செய்தி ஊடகத்தில் முன்னாள் இராணுவத் தளபதிகளுடன் தோன்றிய பின்னர் கூறிய கருத்துக்களில், கிளின்டன் தன்னுடைய தேசிய பாதுகாப்பு பிரச்சாரத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடிய திறன் இருக்கும் ஜோன் மக்கெயினைக் கூட உயர்த்திக் காட்டி தன்னுடைய கட்சியை சேர்ந்த ஒபமாவை குறைமதிப்பிற்கு உட்படுத்தினார்.

"இப்பொழுது செனட்டர் மக்கெயின் குடியரசு கட்சியின் வேட்பாளராக வரக்கூடும் என்பதை நாம் அறிந்த நிலையில் தேசிய பாதுகாப்பு என்பது இத்தேர்தலில் முதலிலும் மையத்திலும் இருக்கும். நாங்கள் ஒவ்வொருவரும் தலைமைத் தளபதி என்ற பதவியின் நுழைவாயிலை கடக்க முடியும் என்பதை நிரூபணம் செய்தல் அவசியம் என்று நான் நினைக்கிறேன்" என்று கிளின்டன் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒரு நல்ல நண்பர், "நம் நாட்டிற்கு ஆற்றிய பணியில் பெரும் வரலாறு கொண்ட சிறப்பான நபர்" என்று மக்கெயினைப் புகழ்ந்த கிளின்டன் தானும் மக்கெயினும் இந்த "நுழைவாயிலை" கடந்து விட்டதாக உறுதிபடுத்தினார். ஆனால் ஜனநாயகக் கட்சி போட்டியாளரை பொறுத்து அவர் கூறினார்: "செனட்டர் ஒபாமாவை இது பற்றி அவருடைய வேட்புத் தன்மை எப்படி என்பதை நீங்கள்தான் கேட்க வேண்டும்."

தன்னுடைய செய்தில் குழப்பத்திற்கு இடமில்லாத வகையில், கிளின்டன் தானும் மக்கெயினும் " பிரச்சாரத்திற்கு ஒரு வாழ்நாள் அனுபவம் முழுவதையும் கொண்டுவருவதாகவும், செனட்டர் ஒபாமா 2002ல் அவர் கொடுத்த உரை ஒன்றைத்தான் கொண்டுவருகிறார்" என்றும் குறிப்பிட்டார்; அப்பொழுது இல்லிநோய் மாநிலத்தின் மூலம் கூட்டாட்சி செனட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஒபாமா வரவிருக்கும் தவிர்க்க முடியாத போருக்கு எதிராகப் பேசியிருந்தார்.

இந்த அணுகுமுறையின் தர்க்கரீதியான முடிவுரை ஒருவேளை கிளின்டன் ஒபாமாவிடம் வேட்புமனு பெறுவதில் தோற்றால், ஜனநாயகக் கட்சியினர் மக்கெயினுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது ஆகும்.

கிளின்டனுடைய செய்தியாளர் கூட்டத்தில் மற்றொரு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய கருத்தும் எழுப்பப்பட்டது. நியூ யோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் இராணுவப் படைகள் தேர்வு மையக் கட்டிடத்தின் கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றை சேதப்படுத்திய அதிக சக்தி இல்லாத, நயமற்ற குண்டுவீச்சு பற்றி எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வு, "உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நாம் பெரிதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தை காட்டுகிறது" என்றார். மேலும் போலீசாருக்கும் இராணுவத்திற்கும் பொதுமக்களை காப்பாற்றுவதற்கு அதிக "கருவிகள்" தேவைப்பட்டால் தான் அளிக்கப் போவதாகவும் கூறினார்.

தேசிய பாதுகாப்பிற்கு இந்த அதிக விளைவற்ற டைம்ஸ் சதுக்க குண்டு வெடிப்பை பெரிய ஆபத்து என்று புஷ் நிர்வாகம் கூட சித்தரிக்க முயற்சிக்கவில்லை; பொதுவாக இது தவறான முறையில் எதிர்ப்பைக் காட்டியதாகக் கருதப்படுகிறது. இத்தகைய நிகழ்வை இன்னும் கூடுதலான "கருவிகளை" போலீஸ்-இராணுவப் பிரிவிற்குக் கொடுக்க நியாயப்படுத்த தயாராக கிளின்டன் இருப்பது தேசிய பாதுகாப்பு பற்றிய அவருடைய பார்வையில் புஷ் நிர்வாகத்தின்கீழ் ஜனநாயக உரிமைகள் இருந்த முழுத் தன்மையும் அவர் ஜனாதிபதியானாலும் கூடுதலாகும் என்பதைத்தான் காட்டுகிறது.

கிளின்டனுடைய தேசியப் பாதுகாப்பு பற்றிய வலதுசாரிப் பிரச்சாரம் திறமையுடன் அமைந்து ஒபாமா பிரச்சாரத்தை தற்காப்பில் ஈடுபட வைத்து, அதையும் வலதிற்கு தூண்டிய விதத்தில் குழப்பத்தை கொடுத்தது.

இந்த வழிவகை தவறுக்கு இடமில்லாத வகையில் கடந்த வெள்ளியன்று ஒபாமாவின் மூத்த வெளியுறவுக் கொள்கை ஆலோசகரான சமந்தா பவர் கட்டாயமாக இராஜிநாமா செய்யவேண்டியதின் வெளிப்பாட்டை காட்டியது; அவர் ஹில்லாரி கிளின்டன் "தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எதையும் செய்யத்தயாராக இருக்கும் அரக்கத் தன்மை உடையவர்" என்று விவரித்திருந்தார்.

அமெரிக்க அரசியல் நடைமுறையில் திருமதி பவர் கூறியதற்கு உடன்பாடு தெரிவிக்கும் அடுக்குகள் சந்தேகமில்லாமல் பல பரந்த அளவில் உள்ளன; ஆனால் இந்த வட்டங்களில் "அரக்கத்தனமாக இருத்தல்" என்பது எதிர்மறையாக ஏற்கப்படுவதில்லை. வேட்பாளர் நியமன வழிவகை உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கட்டத்தை அடைய இருக்கும் நிலையில், இது கிளின்டனுக்கு சாதகமாகத்தான் அமையும். அவர் களத்தில் வீரமாக இருப்பது என்பதை நிரூபித்துள்ளார். முதலாளித்துவ அரசியலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தபின், அதிலும் எட்டு ஆண்டுகள் வெள்ளை மாளிகையில் நாட்டின் உச்சப் பதவியை கணவர் வகித்த போது இருந்த அளவில், அவரும் அவருடைய கணவரும் அவர்கள் "கடுமையான முடிவுகள்" எடுக்கும் திறன் உடையவர்கள் என்று காட்டினர்; அதாவது, விடிகாலை 3 மணிக்கோ அல்லது எந்த நேரத்திலுமோ ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த உத்தரவு கொடுப்பர் என்று. மனிதாபிமான உணர்வுகளை ஒரு காலத்தில் அவர் கொண்டிருந்தால், அது மிக நீண்ட காலத்திற்கு முன்புதான் இருந்திருக்கும்.

ஆனால் ஒபாமா பற்றி ஒரு கேள்விக்குறி உள்ளது. அரசியல் நடைமுறைக்கு கிளின்டன் எழுப்பும் வினா இதுதான்: "முதல் நாளில் இருந்து எதிர்பார்ப்பதை அவர் செய்ய முடியும் என்று ஒபாமா பற்றி நீங்கள் உறுதியாகக் கூறமுடியுமா?" வெள்ளை மாளிகையின் நுட்பங்களை அறிகையில், "இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள்", குண்டுவீச்சுத் தாக்குதல்கள் ஆகியவற்றின்போது இடைப்பட்ட நாசத்தை பற்றி குமுறும் ஒருவர் அங்கு இருக்க வேண்டும் என்று இராணுவ உயர்மட்ட அதிகாரிகளும் ஆட்சி உயரடுக்கும் உண்மையிலேயே விரும்புகின்றனரா?

தன்னுடைய பங்கிற்கு அரசியல் நடைமுறையில் முடிவெடுப்பவர்களுக்கு உத்தரவாதம் தரும் வகையில் அத்தகைய சந்தேகங்களை எதிர்க்கும் வகையில் ஒபாமா தகவல்களை கொடுக்கிறார். பவரைப் பதவிநீக்கம் செய்தது அத்தகைய அடையாளங்களில் ஒன்றாகும், "அரக்கத்தனமானது" என்ற கருத்தைக் கூறுமுன் பவர், ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர்களில் கூடுதலான "இடது" சார்பு உடையவர் என்று அடையாளம் காணப்பட்டிருந்தார். குறிப்பாக அவர் மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கை பற்றிக் குறை கூறியிருந்தார்; இஸ்ரேலிய-பாலஸ்தீனிய பூசலிலும் நேர்மையான அணுகுமுறை வேண்டும் என்ற பரிவுணர்வு கொண்டிருந்தார். அத்தகைய பூசல்கள் இருந்த நிலைப்பாட்டில் இருந்து பவர் சமீபத்தில் தன்னை ஒதுக்கி வைத்துக் கொள்ளப்பார்த்திருந்தார்; இதில் ஈராக்கில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது பற்றிய கால அட்டவணை பற்றித் தான் கூறியிருந்து வெளிப்படையான உறுதிமொழிகளில் இருந்து தனிப்பட்ட முறையில் பின்வாங்கியதும் அடங்கும்.

BBC க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், வெள்ளை மாளிகையில் ஒபாமா நுழைந்தவுடன் அவர் திட்டத்தை "மீண்டும் பரிசீலிப்பார்" என்று வலியுறுத்தியிருந்தார். "அவர் ஒன்றும் இதே திட்டத்தை நம்பியிருக்க மாட்டார்; ஜனாதிபதி வேட்பு மனுப் போட்டியாளர் அல்லது அமெரிக்க செனட்டர் என்ற முறையில் கொடுத்திருந்த அதே திட்டத்தை நம்பியிருக்க மாட்டார்" என்று அவர் தொடர்ந்து கூறினார்; "அவர் தளத்தில் இருக்கும் மக்களுடன் கலந்து ஆலோசித்து நடைமுறைத் திட்டம் ஒன்றைக் கொண்டு வருவார்."

இத்தகைய நிலைப்பாடு ஈராக் பற்றிய அமெரிக்கக் கொள்கைக்கு கிளின்டன் கொடுக்கும் திட்டத்தில் இருந்து மாறுபட்ட திட்டம் எதையும் ஒபாமா அளிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது; இருவருமே அமெரிக்கப் படைகளை, அளவில் குறைக்கப்பட்டாலும், ஈராக்கில் காலவரையற்ற காலனித்துவ முறை ஆக்கிரமிப்பில் வைத்திருப்பர்.

எப்படிப் பார்த்தாலும், சமீபத்திய மாற்றங்கள் பவருக்கு உதவவில்லை. "அரக்கத்தனம்" என அவர் கூறியது தன்னுடைய உள்வட்டத்தில் இருந்து அவரை நீக்குவதற்கு ஒபாமாவிற்கு வாய்ப்பை கொடுத்தது; இதையொட்டி ஜனநாயகக் கட்சியில் உள்ள சியோனிச ஆதரவுத் தளத்திற்கு உத்தரவாத தகவலை அவர் கொடுத்தார்.

இதேபோல் கடந்த புதனன்று ஒபாமாவே பாக்கிஸ்தானுக்குள் அந்நாட்டு அரசாங்கத்தின் ஒப்புதல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் "பயங்கர வாத இலக்குகளை" தாக்குவது பற்றிய தன்னுடைய உறுதிமொழியை ஆற்றலுடன் வெளிப்படுத்தும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். இதன் தெளிவான நோக்கம் தன்னை இராணுவவாதத்திற்கு விரோதி அல்ல என்று சித்திரித்துக் கொள்ளுவதும், அதையொட்டி "தலைமைத் தளபதி" பதவி வகிக்கத் தகுதி உடையவர் என்று காட்டிக் கொள்ளுவதும் ஆகும்.

இப்படி கிளின்டன் தாக்குதல்களுக்கு விடையிறுக்கும் முயற்சியில் வலதிற்கு நகரும் வகையிலும், தன்னுடைய "தேசியப் பாதுகாப்பு" பிரச்சாரத்தை நடத்தும் விதத்திலும் அவர் தவிர்க்க முடியாமல் இவருடைய வேட்புத்தன்மைக்கு ஈர்க்கப்படும் இளம் வாக்காளர்களின் அடுக்குகளை விரோதப் படுத்திக் கொள்வார்; அவர்களோ இவருடைய திட்டம் கணிசமான மாற்றத்திற்கு உறுதி கொடுத்தது, போருக்கு எதிர்ப்புக் கொடுக்கிறது என்ற பொய்த்தோற்றத்தில் மயங்கியிருக்கக் கூடும்.

ஆனால் ஒபாமாவிற்கு மாற்றீடு என்ன உள்ளது அவருடைய அரசியல் சங்கடம் தெளிவாகத்தான் உள்ளது. ஒருபுறம் அவர் மிக அதிகத் தெளிவற்ற தன்மை என்றாலும் அமெரிக்க சமூகத்தில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்ற பரந்த விருப்பத்திற்கு முறையீடு கொடுத்து புகழ் பெற விரும்பினார். ஆனால் அவ்வாறு செய்கையில் ஜனநாயக, கட்சி மற்றும் குடியரசுக்கட்சி என்று இரு கட்சிகளையும் கட்டுப்படுத்துகின்ற ஆளும் உயரடுக்கின் சமூக, நிதிய நலன்களால் சுமத்தப்படும் தடைகள் ஏற்கப்பட வேண்டும் என்பதை அவர் நன்கு அறிவார்.

பவர் ஈராக் பற்றிய அறிக்கை மற்றும் இவருடைய பொருளாதார ஆலோசகர் NAFTA பற்றி கனேடிய அரசாங்கத்திற்கு கொடுத்த உத்தரவாதம் இவற்றில் இருந்து, பொது அரங்கில் ஒபாமா கூறப்படுவது அவருடைய உண்மையான கொள்கைகள் என்று பின்னர் வரும்போது அவருக்கு எதிராகக் கொள்ளப்படக்கூடாது என்பதைக் காட்டுகிறது.

விந்தையான முறையில், ஒபாமா மீது செலுத்தப்படும் அழுத்தங்கள் கிளின்டனுடைய தாக்குதல்களுக்கு திறமையாகக் கூட அவரை பதில் கூறமுடியாமல் செய்கின்றன. அலங்காரச் சொற்கள் வகையில் ஒபாமாவிற்கு கிளின்டனின் அதிகம் பேசப்படும் "அனுபவம்" பற்றி அதிகம் அம்பலப்படுத்துவது கடினம் ஆகும். 2002 ல் இவ்வம்மையார் போருக்கு வாக்களித்தது பற்றி நன்கு ஆராய்தல் நல்ல தொடக்க இடமாக இருக்கும்; அதைத் தன்னுடைய பிரச்சாரத்தில் தொடர்ந்து கூறும் கருத்தாக ஒபாமா கொண்டுள்ளார்.

செனட்டில் வாக்களித்து நியாயப்படுத்திப் பேசிய தன்னுடைய உரையில் கிளின்டன், தன்னுடைய கணவரின் நிர்வாகம்தான் ஈராக்கிற்கு எதிரான போருக்கு தளத்தை தடைகள், ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கையாக அங்கு ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கூறுவது எல்லாவற்றிலும் பங்கு கொண்டிருந்ததற்கும் பெருமை கொண்டார். இந்த உரை கிளின்டன் மற்றும் புஷ் நிர்வாகத்திற்கும் இடையே அடிப்படை தொடர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; இப்போர் பற்றி பின்னர் எத்தகைய தீவிர தந்திரோபாய வேறுபாடுகள் வெளிப்பட்டாலும் உண்மை அதுதான்.

ஈராக் போர் ஐந்தாம் ஆண்டு முடிவு விரைவில் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் கூடுதலான பிரச்சாரம் இப்போரின் இழப்பு ஈராக்கியர் மில்லியன்கணக்கிலும் அமெரிக்க உயிர்கள் ஆயிரக்கணக்கிலும் ஏற்பட்டதை அம்பலப்படுத்துகிறது; ஒரு சமூகம் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளது; சமூக நலச் செலவினங்களுக்காக செலவழிக்கப்பட வேண்டிய டிரில்லியன் கணக்கான டாலர்கள், போருக்காக திசை மாற்றம் பெறுபவை, 2008ல் முக்கியமான பிரச்சினை என்று "தேசிய பாதுகாப்பை" உயர்த்துவதற்கு பதிலாக செய்திருக்கப்பட்டிருக்கலாம்.

சுருக்கமாக கூறினால், கிளின்டனுக்கு தொடர்ச்சியான அரசியல் விடையிறுப்பு அமெரிக்க வெளியுறவு, அதற்கு அடிக்கோடிடும் சமூக நலன்கள் பற்றிய முழு விமர்சனத்தையும் கொடுப்பதுதான்.

அத்தகைய பிரச்சாரம் நடத்துவதற்கு ஒபாமாவால் முடியவில்லை. முதலில், அவர் உண்மையிலேயே ஒரு போர் எதிர்ப்பு வேட்பாளராக இருந்ததேயில்லை என்பதால் அதில் நம்பகத்தன்மை இருக்காது. கிளின்டனே பலமுறையும் சுட்டிக் காட்டியுள்ளபடி, செனட்டில் நுழைந்ததில் இருந்து அவர் வாக்களித்த முறை அவருடையதை போல்தான் இருந்தது. போருக்கு நிதியளித்ததில் இருந்து, ஈராக்கில் அமெரிக்க படைகளை நிறுத்துவது என்ற தொடர்ச்சியான நடவடிக்கைகளில் அவருடைய ஆதரவு இருந்தது. 2002ல் கிளின்டன் போல் போருக்கு வாக்களிக்கவில்லை என்பது உண்மைதான்; ஆனால் அப்பொழுது அவ்வாறு செய்வதற்கு அவர் செனட்டில் இல்லை.

போருக்கு இவர் எதிரி என்ற ஒபாமாவின் புகழ் ஒரு போலித் தோற்றம் என்பது பரந்த அளவில் ஆளும் நடைமுறைக்குள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வலதுசாரி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தலையங்க பங்கங்கள் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் அரைப்பக்க தலையங்கங்களை வெள்ளியன்று வெளியிட்டது; இது New Republic ன் ஆசிரியரான மார்ட்டினால் எழுதப்பட்டது; அவர் ஈராக் போருக்கு முதலில் ஆதரவு கொடுத்தார்; 2004 ல் ஜனநாயக வேட்பு மனுதாரர் ஜோன் கெர்ரி தேர்ந்தெடுக்கப்படுவதை எதிர்த்தார்; அதற்குக் காரணமாக அவர் "இஸ்ரேலை பொறுத்தவரையில்" பேரழிவாகிவிடுவார் என்றும் ஒபமா "என்னுடைய நம்பிக்கையை வென்றுள்ளார்" என்றும் எழுதியுள்ளார்.

ஒபாமாவை "பழைய சிறப்புத் தன்மை, கொள்கைப் பிடிப்புக்கள் உடைய நாட்டுப் பற்றாளர்" என்று விவரித்து அவர் தொடர்ந்து எழுதியது: "அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் தன்னுடைய ஆதரவாளர்கள் பலருக்கு ஏமாற்றம் கொடுத்து எதிர்ப்பாளர்கள் பலரை வியப்பில் ஆழ்த்துவார்."

இத்தகைய அமெரிக்க கொள்கை பற்றிய கிளின்டன் சான்றைக் கூறுவது ஆளும் உயரடுக்கில் முக்கிய முடிவெடுக்கும் பிரிவுகளை விரோதப்படுத்தும்; அவற்றைத்தான் ஒபாமா பிரச்சாரம் நம்பியுள்ளது; அது தவிர்க்க முடியாமல் ஜனநாயகக் கட்சிக்கு தாக்குதலை ஏற்படுத்திவிடும்.

ஒபாமாவின் பிரச்சாரம் கீழிருந்து ஒருவித எழுச்சி என்பதை பிரதிபலிக்கவில்லை; மாறாக ஜனநாயகக் கட்சியின் வெளியுறவு நடைமுறைக்குள் இருக்கும் சில கூறுபாடுகளுக்கு கருவியாகத்தான் உதவுகிறது; அவர்களில் பலர் கிளின்டன் நிர்வாகத்தில் மூத்த அனுபவம் கொண்டவர்கள்; அவர்கள் இவருடைய வேட்புத் தன்மையை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒரு தந்திரோபாய மாற்றத்தை கொண்டுவரும் வழிவகை என்று கண்டனர்; அதே நேரத்தில் உலகிற்கும் அமெரிக்க மக்களுக்கும் அதை ஒரு மாற்றம் போல் காட்டவும் விரும்புகின்றனர்.

சந்தேகத்திற்கு இடமில்லாமல், பிரச்சினைக்கு உரிய கொள்கை வேறுபாடுகள் பரப்பளவில் குறுகியவைதான்; அனைத்துப் பிரிவுகளும் அடிப்படைய மூலோபாய, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலாப நலன்களை நிலைநிறுத்துவதில் உறுதி கொண்டவை; அமெரிக்க கொள்கையை எதிர்கொண்டிருக்கும் தற்போதைய புதைசேற்றுக்கு யார் பொறுப்பு, எந்தக் கொள்கைகள் பொறுப்பு, எப்படி மீள்வது என்பது பற்றி மிகக் கடுமையாகத்தான் அவர்கள் உள்ளனர்.

இறுதியில், ஜனநாயகக் கட்சி ஆரம்பத் தேர்வுகளில் நடத்தப்படும் கடுமையான உட்போராட்டங்கள் 2004 கெர்ரி பிரச்சாரத்தில் வந்த விளைவுகளைத்தான் அடிப்படையாக அளிக்கும்; இருவரில் எவர் வெற்றி பெற்றாலும் நிலைமை அதுதான். ஈராக் என்பது இரண்டாம் பட்சத்திற்குத் தள்ளப்படும்; இரு கட்சிகளும் தேர்தல் போர் பற்றிய வாக்கெடுப்பாக மாறாது என்பதற்கு உத்தரவாதம் கொடுத்துவிடும்.

ஏற்கனவே மார்ச் மாதம் வந்துவிட்டது; அரசியல் முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மீண்டும் பொதுத் தேர்தல்களில் அமெரிக்க மக்களில் பெரும்பாலானவர்கள், ஈராக் போருக்கு முடிவு வேண்டும் என்று நினைப்பவர்கள் அரசியல் அளவில் உரிமை இழப்பர்; ஏனெனில் ஆளும் உயரடுக்கு 2003 படையெடுப்பின் தொடக்க நோக்கங்களை தொடரும் உறுதி கொண்ட இரு வேட்பாளர்களைத்தான் நிறுத்தி வைக்கும்; அந்த நோக்கம் எண்ணெய் வளம் உடைய நாட்டை வெற்றி காண்பதும், உலகில் அப்பகுதியில் முக்கியமான மூலாபாய அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதும் ஆகும்.

ஜனநாயகக் கட்சியின் தொடக்கத் தேர்தல்களின் பரிணாமமானது, போர் மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டமும் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள், உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றின் பாதுகாப்பும், முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுப்போராட்டத்தில் உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்த முயலும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான ஒரு வெகுஜன சுயாதீன அரசியல் இயக்கத்தை கட்டியமைப்பதின் மூலம்தான் முன்னெடுக்கப்பட்ட முடியும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.