WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
French lead European Union force to Chad/Sudan border
சாட்/சூடான் எல்லைக்கு ஐரோப்பிய ஒன்றியப் படைகளை பிரான்ஸ் வழிநடத்துகிறது
By Brian Smith
5 March 2008
Use this version
to print | Send this link by email
| Email
the author
சாட்டிற்கும் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசிற்குமான (EUFOR)
ஐரோப்பிய ஒன்றிய பணிக்குழு 400ல் இருந்து 600 துருப்புக்கள் கொண்ட தரைப்படையுடன் தன்னுடைய நடவடிக்கைகளை
மார்ச் 15ல் இருந்து தொடங்கும். 3,700 பேர் அடங்கிய பலமான படைப்பிரிவை நிறுத்துதல் ஜூன் மாதத்திற்குள்
முடியும்; இதற்கான பணிகள் ஜனவரி இறுதியில் தொடங்கின; ஆனால் சாட்டின் தலைநகரான
N'Djamena
வின்மீது பெப்ருவரி தொடக்கதில் கிளர்ச்சியார்களின் தாக்குதல் நடந்ததால் தாமதமாகியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவினால் அனுமதிக்கப்படும்
EUFOR நூறாயிரக்கணக்கான
அகதிகளை -- சூடானின் டார்பர் பகுதியில் இருந்து சாட்டின் குறுக்கே கடந்து வந்த சுமார் 260,000 பேர்
மற்றும் அதேபோல சாட்டில் இருந்தும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இருந்தும் உள்நாட்டுப்பூசலினால்
இடம்பெயர்ந்து வெளியேறிய 180,000 பேர்களை -.பாதுகாக்க நோக்கங்கொண்டுள்ளது. நடைமுறையில்,
EUFOR
ஐக்கிய நாடுகள்/
டார்பரில் உள்ள ஆபிரிக்க ஒன்றிய பணி (UNAMID)
ஆகியவற்றின் பணிகளுக்கும் உதவும்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு இடையே
EUFOR க்காக
ஊக்கம் கொடுத்ததில் பிரான்ஸ் முக்கியமானதாகும்; அது ஆபிரிக்காவில் சீனா நுழைதலை பற்றி, குறிப்பாக எண்ணெய்
துறை ஈடுபாடு பற்றி, கவலை கொண்டுள்ளது. மேலும் வறண்ட கிழக்கு ஆபிரிக்கப் பகுதியில் அதிகார வெற்றிடம்
ஏற்பட்டால் பயங்கரவாதம் செழிக்குமோ என்ற வாதத்தையும் பிரான்ஸ் முன்வைத்துள்ளது. இதற்காக அமெரிக்க
ஜனாதிபதியிடமிருந்து அது பாராட்டுதலை பெற்றது.
சூடான்-சாட் எல்லைப்பகுதி அருகில் அகதிகளுக்கு "சில உதவியளிப்பதற்கு ஐரோப்பிய
ஒன்றிய படைகளை திரட்டியதில் அதன் பொறுப்பான பணிக்காக (ஜனாதிபதி) நிக்கோலோ சார்க்கோசியின் அரசாங்கத்திற்கு
நான் நன்றி தெரிவிக்கிறேன்" என்று ஜனாதிபதி புஷ் அவருடைய சமீபத்திய ஆபிரிக்க பயணத்திற்கு முன் வெளிநாட்டு
செய்தியாளர்களிடம் கூறினார்.
மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து போதுமான ஆதரவை பெற முடியவில்லை என்ற
நிலையில், துருப்புக்கள் மற்றும் ஹெலிகாப்டர் தேவைகளில் குறைவு ஏற்பட்டால் சரிக்கட்டுவதாக பாரிஸ் ஒப்புக்
கொண்டுள்ளது. இது EUFOR
படைகளின் எண்ணிக்கையை 2,100 துருப்புக்கள் என்று உயர்த்தும்; இத்தாலியானது தளத்தில் ஒரு மருத்துவமனையை
அமைக்கும்; அயர்லாந்து படைகள் தளபதி பாட் நாஷின் கீழ் இங்கும். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே
EUFOR
பங்கு மற்றும் ஏற்கனவே சாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 1,450 பிரெஞ்சு துருப்புக்கள் பற்றி உள்ளார்ந்த
ஆபத்தான குழப்பநிலை பற்றி கவலைகள் வெளிவந்துள்ளன.
சாட்டின் ஜனாதிபதி
Idriss Deby, EUFOR முன்மொழிவை வரவேற்றாலும்,
அருகில் இருக்கும் சூடான் அது ஈடுபடுத்தப்படுவதை தடைக்கு உட்படுத்தும் நம்பிக்கையில் உள்ளது. சூடான் இப்பணியை
டேபியை தாங்கிநிறுத்தவும் சூடானின் ஆளும் தேசியக் கூட்டணியை குறைமதிப்பிற்கு உட்படுத்தவுமான பிரான்சின்
முன்முயற்சி என்று கருதுகிறது. கார்ட்டூமின் ஆதரவிற்கு உட்பட்டவர்கள் எனக் கருதப்படும் எதிர்ப்புக் குழுக்களும்
EUFOR
ஐ பூசலில் போரிடுகிற அணி என கருதுவர் என்று கூறியதோடு,
EUFOR, UNAMID
இரண்டும் வெளியில் இருந்து குறுக்கீடு செய்வதை தடுக்கும் வகையில்
N'Djamena மீது
தங்களின் சமீபத்திய தாக்குதலை காலம் கணித்து நடத்தின.
பிரான்சில் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர்
Laurrent Teisserie
கூறினார்: "பிரெஞ்சு படைகள், லிபியாவில் இருந்து சாட்டிய படைகளுக்கு சென்று கொண்டிருக்கும் வெடிமருந்து
அனுப்புதலில் பங்கு கொண்டன; மேலும் எரிபொருள், உணவு, வான்வழிக் கண்காணிப்பு ஆகியவற்றையும்
கொடுத்துள்ளன. பிரான்ஸ் முன்னோட்ட விமானங்களையும் மீரஜ் ஜெட் விமானங்களையும் சாட்டில் நிறுத்திவைத்து,
நூற்றுக்கணக்கான மக்கள் N"Djamena
விமான நிலையத்தில் இருந்து சமீபத்திய கைகலப்புக்களின் போது வெளியேற்றப்படவும் உதவியது."
பிரெஞ்சு நாளேடான
La Croix,
பிரெஞ்சு துருப்புக்கள்
N'Djamena வில்
சாட்டின் அரசாங்கத்துடன் இணைந்து போரிட்டதாகவும், பெப்ருவரி அன்று
Massaguet ல்
இருந்த கலகப் பிரிவு ஒன்றின்மீது நடத்திய தாக்குதலில் ஒருங்கிணைந்து செயல்பட்டதாகவும், தூதர்களும்
அதிகாரிகளும் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளது. ஆனால் பாதுகாப்பு மந்திரியான
Herve Morin
"பிரான்ஸ் நேரடியாக போரில் பங்கு" பெறவில்லை, ஆனால் அத்துருப்புக்கள் "விமான நிலையத்தின்
கட்டுப்பாட்டுக்கு ஆபத்து என்று நாம் உணரும் ஒவ்வொரு முறையும் தக்க விடையிறுத்ததாகவும்" கூறினார்.
பிரெஞ்சு வார இதழான
Le Canard Enchaine ம், பிரெஞ்சு சிறப்புப்
படைப்பிரிவுகள் முன்பு சூடான் எல்லையில் கலகப் பிரிவுகளை வேவு பார்த்தாகவும் மிராஜ் தாக்கும் விமானத்தை
வழிகாட்டியதாகவும் கூறியுள்ளது. மோரனுடன் சந்திப்பிற்கு பின்னர் பிரெஞ்சு படைகள் முன்னணியில் இருந்தன என்று
செய்தியாளர்களிடம் கூறியபோது, பத்திரிகை கூற்றுக்களை டேபி உறுதிப்படுத்தியது போல் தோன்றியது.
டேபி ஆட்சியை நிலைநிறுத்துவதில் பிரெஞ்சு சம்பந்தமானது, சார்க்கோசியின்
தேர்தலுக்கு பிந்தைய இலக்கான தனக்கு முன்பு பதவியில் இருந்தவர்கள் கொண்டிருந்த
Francafrique
தலையீடு என்று கூறப்படுவதை முறிப்பதாக கூறியதை வினாவிற்கு உட்படுத்தியுள்ளது.
"ஆபிரிக்கா மாற்றம் அடைந்துள்ளது மற்றும் ஆபிரிக்காவுடனான பிரான்சின் உறவுகளும்
மாறுதல் அடையவேண்டும்," என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் சார்க்கோசி கூறியிருந்தார். மனிதாபிமான
தலையீடு என்ற மாற்றத்தை வலியுறுத்துகையில், "பிரான்ஸ் சமாதானம் நீடித்து செழிக்க, மனித உரிமைகள் மற்றும்
பொருளாதார வளர்ச்சிக்காக போராடும் என்றும் அவை கரைக்க முடியாமல் ஆயிரமாண்டு இலக்குகளுடன்
பிணைந்துள்ளன" என்றும் கூறினார்.
Francafrique ஐ முறிப்பது
என்பது "பிரெஞ்சு அரசியல் வட்டங்களில் உள்ளவர்கள் விரும்புவதை விட மிகக் கடினமானது என்று
நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று மேற்கு ஆபிரிக்கா பற்றிய சிறப்பு ஆய்வாளர்
Kaye Whiteman
விளக்கினார். "ஆபிரிக்க தொடர்பு எப்பொழுதுமே பிரான்சிற்கு நடுத்தர சக்தி என்ற அந்தஸ்தைக்
கொடுத்துள்ளது; அதையொட்டி ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் ஒரு இடம் பெறத் தகுதி கொண்டுள்ளது."
முயற்சிக்கப்பட்ட இராணுவ ஆட்சி கவிழ்ப்புசதியை தொடர்ந்து டேபி, அரசியல்
எதிர்ப்பாளர்களை காவலில் வைக்க துவங்கினார்; இது சர்வதேச பொதுமனிப்பு சபை உட்பட சில இடங்களில்
இருந்து குறைகூறலை பெற்றுள்ளது.
சாட்சியங்களின்படி, குறைந்தது ஆறு எதிர்த்தரப்பு தலைவர்களாவது சாட்டில்
காணாமற் போய்விட்டனர்; இவர்கள் அடையளங்கள் காட்டப்படாது இராணுவச் சீருடை அணிந்தவர்களால் தூக்கிச்
செல்லப்பட்டு விட்டனர். இதில் முன்னாள் சாட் ஜனாதிபதி
Lol Mahamat Choua,
முன்னாள் மந்திரி
Ibni Oumar Mahamat Saleh மற்றும் எதிர்க்கட்சி
தலைவர் Ngarlejy Yorongar
ஆகியோரும் அடங்குவர்.
உள்துறை மந்திரியான
Ahmat Bachir கிளர்ச்சி செய்தவர்கள்தான் காணமற்
போனதிற்கு பொறுப்பு என்று குறைகூறினார். "கூலிப்படையின் கட்டுப்பாட்டின்கீழ் இவர்களுடைய வீடுகள்
இருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். ரேடியோவில் கேட்டபின்தான் நாங்கள் இவர்களின் கைது பற்றி
அறிந்தோம்." என்று அவர் கூறினார். "அவர்கள் (கலகக்காரர்களால்) கைது செய்யப்பட்டனரா அல்லது
(கலகக்காரர்களோடு) எங்கேயாவது பதுங்கியுள்ளனரா என்பது பற்றி தெரியவில்லை." என்றும் அவர் கூறினார்.
இக்குற்றச்சாட்டுக்கள் கிளர்ச்சியாளர்களால் மறுக்கப்பட்டுள்ளன; டேபி அரசாங்கத்தை எவர் எதிர்த்தாலும்
அவர்களை தாங்கள் கடத்துவது என்பது பொருளற்ற பேச்சு என்று காரணம் கூறினர்.
மோதல்களை அடுத்து, சூடான் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு கொடுக்கிறது என்ற
கருத்தில் கடும் வாசகங்களில் Bachir
அதைக் கண்டித்தார்; இது சர்வதேச அளவில் கேட்கப்பட வேண்டும் என்பது அதன் கருத்து. "சூடானிடம்
காசுவாங்கும் இஸ்லாமியக் கூலிப்படைகள் அனைவரையும் நம்முடைய பாதுகாப்புப் படைகள் கைதுசெய்துள்ளன...
அடையாள அட்டைகள் உள்ளன...சிலர் இஸ்லாமிய குழுக்களிலிருந்து வந்தவர்கள்; சிலர் அல்கொய்தாவிலிருந்து
வந்தவர்கள் என்றார். "இவர்கள் (சூடானின் ஜனாதிபதி) உமர் அல்-பஷீர் மற்றும் அல் கொய்தாவால் சாட்டின்
உறுதியை குலைப்பதற்கு மட்டும் இல்லாமல் ஆபிரிக்கா ஒட்டுமொத்தமும் உறுதியற்றுப் போக வேண்டும் என்பதற்காக
அனுப்பிவைக்கப்பட்டனர்."
சாட்டின் பிரதம மந்திரி
Nouradine Delwa Kassire Coumakoye உம்
அரசாங்கம் எந்த புதிய சூடானிய அகதிகளுக்கும் நுழைவு அனுமதி மறுக்கக்கூடும் என்று கூறினார். "இன்னும்
கூடுதலாக நாங்கள் எவரையும் அனுமதிப்பதற்கு இல்லை" என்ற அவர் சர்வதேச சமூகத்தை கிழக்கு சாட்டில்
இருக்கும் 240,000 அகதிகளையும் வேறு நாட்டிற்கு அனுப்புமாறு கூறினார். "இவர்களால்தான் நாங்கள் பல
பிரச்சினைகளையும் எதிர்கொண்டுள்ளோம், என்று ஆட்சி கவிழ்ப்பு முயற்சியைக் குறிப்பிட்டு அவர் கூறினார்.
சாட்டே ஒரு வறிய, வறண்ட பகுதியாகும்; கலிபோர்னியாவை போல் மூன்று மடங்கு
நிலப்பரப்பு கொண்டுள்ளது; இங்கு 10 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். பதட்டங்களுடன் பல இனவழிப் பிரிவுகள்
உள்ளன, குறிப்பாக டேபி ஜாகவா குழுவின் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் சிறப்பு சலுகைகளை தொடர்ந்து
பூசல்கள் ஊள்ளன. ஆனால் இனக்குழு மட்டும் டேபியுடனான அதிருப்திக்கு முக்கிய காரணம் அல்ல, ஜாகவாக்களும்
அவருடைய சொந்தக் குடும்பத்தினரும் கூட சமீபத்திய கிளர்ச்சிகளில் தொடர்பு கொண்டுள்ளனர்.
Federation Action for the Republic
உடைய உறுப்பினரான Blaise Mouga
--கடந்த வாரம் இவருடைய தலைவர் Ngarlejy
Yorongar கைது செய்யப்பட்டிருந்தார் -- இவர் சமீபத்திய
நிகழ்வுகள் பற்றி ஒரு விளக்கம் கொடுத்தார். "நம் நிலம், பஞ்சு, தெற்கில் கொழிக்கும் விவசாய நிலை
ஆகியவை இருந்தும், இந்த நாடு எவ்வளவு ஏழ்மையில் இருக்கிறது என்பதை பாருங்கள். ஒரு மாறுதலை நாங்கள்
விரும்புகிறோம். கிளர்ச்சியை நாங்கள் விரும்பவில்லை; ஆனால் டேபியும் எங்களுக்கு தேவை இல்லை. சர்வதேச
சமூகம் டேபி இருப்பவற்றில் குறைந்த தீமை எனலாம்; ஆனால் அவர்கள் ஒன்றும் அவருடன் வாழவில்லை."
Agence France Presse
செய்தி நிறுவனம் சாட்டின் எண்ணெய் துறையை பற்றி சமீபத்தில் கூறியது; இங்கு நாள் ஒன்றிற்கு 150,000 ல்
இருந்து 160,000 பீப்பாய்கள் வரை எடுக்கப்படுகின்றன; இதன் இருப்புக்கள் 1.5 பில்லியன் பீப்பாய்கள் கச்சா
எண்ணெய் என மதிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் மதிப்பு உயர்ந்துள்ளதை
அடுத்து, சாட்டின் எண்ணெய் வருமானங்கள் அதன் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது கணிசமான முக்கியத்தைக்
கொண்டுள்ளன. வல்லுனர்கள் நாட்டின் எண்ணெய் உற்பத்தித்திறன் பயன்படுத்தப்படவில்லை என்றும் சாட் நாடானது
அமெரிக்கா, சீனா போன்ற முக்கிய நுகர்வாளர்களிடமிருந்து தீவிர ஆர்வத்தை ஈர்க்கக்கூடும் என்றும்
கருதுகின்றனர்.
ஆபிரிக்க பொருளாதார விஷயங்கள் பற்றி சிறப்பு ஆராய்ச்சி நடத்தும்
Philippe Hugon,
விளக்குகிறார்: "எண்ணெய் செல்வம் ஓரளவிற்கு வீணடிக்கப்பட்டு ஆயுதங்கள் வாங்குவதிலும்
Idriss Deby
க்கு நெருக்கமாக இருப்பவர்களுடைய சொத்துக்களை பெருக்குவதற்கும் பயன்படுகிறது. எதிர்ப்பாளர்கள் தங்கள்
பங்கை கேட்கின்றனர்."
Arab Oil and Gas ஏட்டின்
Nicolar Sarkis
இதை ஏற்றுக் கூறுகிறார்: "எதிர்த்தரப்பு அரசாங்கத்தை நாட்டின் செல்வங்களை விற்றுவிட்டதாக குற்றம் சாட்டுகிறது."
உலக வங்கியுடன் உடன்பாடு காண்பதற்கு சாட்டின் அதிகாரிகள் நாட்டின் 70
சதவிகித எண்ணெய் வருமானத்தை, சாட்டின் டோபா எண்ணெய் வயலில் இருந்து காமெரூனில் இருக்கும் கிரிபி
துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் குழாய்த்திட்டத்திற்கு வங்கியின் நிதி ஆதரவிற்காக ஒதுக்குவது தேவைப்படுகிறது.
ஆனால் சாட்டின் முக்கிய கடன்கொடுத்தவர்கள் கடந்த ஆண்டு டேபி அரசாங்கம் 70 சதவிகிதக் கடமைப்பொறுப்பை
மதிக்கவில்லை என்றும் இதற்குக் காரணம் இராணுவச் செலவினம் அதிகரித்துள்ளதுதான் என்று கூறுகின்றனர்.
அமெரிக்க விசைப் பெருநிறுவனங்களான
ExxonMobil, Chevron
மற்றும் மலேசியாவின் Petronas
ஆகியவை சாட்டின் எண்ணெய் துறையில் முக்கிய பங்கைக் கொண்டவர்கள்; பிரெஞ்சு குழுவான
Total இங்கு
காணப்படவே இல்லை.
"அமெரிக்க நிறுவனங்கள், ஐரோப்பிய மற்றும் சீன நிறுவனங்களின் அதிருப்தியை
பெருக்கும் வகையில் நாட்டில் நுழைந்து விட்டனர்" என்று சார்கிஸ் கூறினார். அருகில் இருக்கும் சூடானில் இருந்து
தன்னுடைய தேவையில் 30 சதவிகிதம் பெறும் சீனாவிற்கு ஒரு நீண்ட கால மூலோபாயம் உள்ளது, அது
சாட்டிலிருந்து சூடானில் இருக்கும் அதன் குழாய்த்திட்டத்திற்கு இணைப்பு விரிவாக்கத்தை கட்டுவதாக இருக்கும். |