World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Demonstration and meeting in Sri Lanka to protest prosecution of Iranian students

ஈரான் மாணவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டமும் கூட்டமும்

7 March 2008

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் அதன் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும், ஈரானிய அரசாங்கம் 40க்கும் மேற்பட்ட இடதுசாரி மாணவர்களை தடுத்து வைத்துள்ளமைக்கும் மற்றும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கும் எதிராக, இலங்கையில், கொழும்பில் மறியல் போராட்டம் ஒன்றையும் பொதுக் கூட்டத்தையும் நடத்தவுள்ளன. இந்த ஆர்ப்பாட்டம் ஐ.எஸ்.எஸ்.ஈ. முன்னெடுத்துள்ள சர்வதேச பிரச்சாரத்தின் ஒரு பாகமாகும்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சுதந்திரம் மற்றும் சமத்துவத்துக்கான மாணவர்கள் குழுவை சேர்ந்தவர்களாவர். கடந்த டிசம்பரில், இந்தக் குழு ஈரான் மீதான அமெரிக்க யுத்த திட்டங்களை கண்டனம் செய்து சுயாதீனமான ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்த அதே வேளை, ஈரானிய அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்து தட்டினரையும் எதிர்த்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டதோடு மேலும் 10 பேர் ஜனவரி 15ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

சில மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருநத் போதிலும், ஏனையவர்கள் 80,000 டொலர் முதல் 300,000 டொலர் வரையான ஆகவும் கூடிய பிணை தொகையை செலுத்த முடியாமல் உள்ளனர். சில மாணவர்கள், குறிப்பாக அந்தக் குழுவின் தலைவர்கள் எனக் கூறப்படுபவர்களுக்கு பிணை வழங்கப்படவில்லை. அவர்கள் சிறைச்சாலைக்கு வெளியில் நண்பர்களையோ அல்லது குடும்பதினரையோ சந்திக்க முடியாத வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலையானவர்களின் படி, இந்த மாணவர்கள் மின்சார அதிர்ச்சி, அடி மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உட்பட சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாணவர்களும் வழக்கை எதிர்கொண்டுள்ளனர். இது நீண்டகால சிறைத் தண்டனை, பாடசாலையில் இருந்து வெளியேற்றல் அல்லது ஏனைய விதத்திலான தண்டனைகளை விளைவிக்கக் கூடும்.

குறைந்தபட்சம் ஏழு மாணவர்கள் சிறையினுள் நலிவுற்றுள்ளனர். பேருஃப் கரிமிஸாட், அலி கான்டெளரி, அமின் குவாஸீ. பிஸாட் பகரி, பெய்மன் பிரன், ஃபர்காட் ஹாஜி மிர்ஸலே, மோர்டெஸா கெட்மட்லோ ஆகியோரே அந்த மாணவர்களாவர். ஈரானிய குருதிஸ்தானின் தலைநகரான சனன்தாஜை சேர்ந்த செயற்பாட்டாளரான மிர்ஸலே, பேர் போன எவின் சிறைச்சாலையில் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம். நிலைமையுடன் நெருக்கமான ஒரு நபர், மிர்ஸலே சிறைச்சாலையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கவலை மாணவர்கள் மத்தியில் இருப்பதாக தெரிவித்தார். கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து மாணவர்களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறு சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ. யும் கோருகின்றன. அவர்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் கைவிடப்படல் வேண்டும்.

மார்ச் 10ம் திகதி, சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ. யும் மாணவர்களின் விடுதலையைக் கோரி இலக்கம் 5, இன்டிபென்டன்ஸ் அவனியு, கொழும்பு 7ல் அமைந்துள்ள ஈரானிய இஸ்லாமிய குடியரசின் தூதரகத்தில் கடிதமொன்றை கையளிக்கவுள்ளன.

மாணவர்களின் விடுதலையை கோரும் மறியல் போராட்டம் மார்ச் 10ம் திகதி மாலை 4 மணிக்கு கொழும்பின் பிரதான கோட்டை இரயில் நிலையத்திற்கு முன்னால் இடம்பெறும். மறியல் போராட்டத்தின் பின்னர், மாலை 6 மணிக்கு கொழும்பு 2ல் மக்கள் வங்கி தலைமையகத்துக்கு பின்னால் உள்ள போய்ஸ் ஸ்கெளட் மண்டபத்தில் கூட்டம் நடைபெறும்.

இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்குமாறு எமது வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved