World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்:ஆசியா : பாகிஸ்தான்Pakistan's leading opposition parties to form national coalition government பாக்கிஸ்தானின் முன்னணி எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி தேசிய அரசை நிறுவ இருக்கின்றன By K. Ratnayake and Keith Jones புஷ் நிர்வாகத்தின் விருப்பங்களுக்கு மாறாக, பாக்கிஸ்தானின் இரண்டு முக்கிய கட்சிகளான பாக்கிஸ்தான் மக்கள் கட்சியும் (றிறிறி) பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியும் (றிவிலி-ழி), ஒரு கூட்டணி தேசிய அரசை உருவாக்கவும் மற்றும் இதே போன்றதொரு கூட்டணிகளை நாட்டின் நான்கு மாகாணங்களில் உருவாக்கவும் வியாழனன்று சம்மதம் தெரிவித்துள்ளன. றிறிறி, றிவிலி-ழி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஒருதரப்பாக செயல்பட்ட வகையில் திங்களன்று தேர்தல் நடத்தப்பட்டது என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் பார்வையாளர்கள் ஒப்புக் கொண்டதான ஒரு தேர்தலில், றிறிறி தேசிய அவையில் சுமார் 33 சதவீத இடங்களை வென்றிருக்கிறது, றிவிலி-ழி 25 சதவீத இடங்களை கைப்பற்றியிருக்கிறது. பெரும்பான்மையான பாக்கிஸ்தானியர்களின் தாயகமாய் திகழும் பஞ்சாப் மாகாணத் தேர்தலில் இந்த இரண்டு கட்சிகள் பெற்றுள்ள இடங்களும் ஏறக்குறைய அப்படியே திரும்பியுள்ளது. றிறிறி, றிவிலி-ழி மற்றும் இக்கட்சிகள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொண்ட ஒரு சிறு கட்சியான பஸ்தூன் அடிப்படையிலான அவாமி தேசியக் கட்சி இக்கட்சிகள் அனைத்தும், 1999 இல் இராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றி அதனை தொடர்ந்து "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக மாறிய ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப்புக்கு எதிராக சபதமேற்றுள்ள கட்சிகள் ஆகும். ஜனநாயகத்திற்கு திரும்புவதற்கு தானே வழிநடத்தி செல்வேன் என்று பல வருடங்கள் தொடர்ந்து உறுதியளித்து வந்த முஷாரஃப், அரசியல்சட்டத்திற்கு முரணாக 2012 வரை தான் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சட்டப்பூர்வமான ஒப்புதல் அளிக்கக்கூடிய நீதிபதிகளை நிறுவும் வகையில் சென்ற ஆண்டின் இறுதியில் சுமார் ஆறு வாரங்களுக்கு போர்ச் சட்டத்தை அமல்படுத்தினார். ஊடகங்கள் மீது முரட்டுத்தனமான கட்டுப்பாடுகளை திணிப்பதற்கும், தேசிய மற்றும் மாகாண அவைகளுக்கான தேர்தலை ஒட்டிய காலத்தில் எதிர்க்கட்சியினரை பயமுறுத்துவதற்கும் அவசரகால நிலை சட்டமும் பயன்படுத்தப்பட்டது. பாக்கிஸ்தானியர்களில் பெரும்பான்மையான மக்கள் முஷாரஃப் இராஜினாமா செய்வதற்கும், அமெரிக்கா ஏச்சுக்கு உள்ளாக்கப்படுவதையும் விரும்புகிறார்கள் என்று நீண்ட காலமாக கருத்துக் கணிப்புகள் காட்டி வந்திருப்பதற்குக் காரணம் பாக்கிஸ்தானில் இராணுவ சர்வாதிகாரங்களை அமெரிக்கா தொடர்ந்து ஆதரித்து வருவதும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்புக்களும் ஆகும். டிசம்பர் 27 அன்று நடந்த, றிறிறி தலைவரும் பிரதமருக்கான வேட்பாளருமான பெனாசிர் பூட்டோவின் படுகொலை ஒரு தேசிய கிளர்ச்சியை உசுப்பி விட்டது, இதன்போது கலகக்காரர்கள், அரசின் சொத்துக்கள் மற்றும் இராணுவம் மற்றும் பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் (னி) ஆல் ஆரம்பிக்கப்பட்ட முஷாரஃப் ஆதரவுக் கட்சியின் அலுவலகங்கள் ஆகியவை உள்ளிட்ட, முஷாரஃப் ஆட்சியின் அடையாளங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இருப்பினும், செய்தித் தகவல்களின் படி, திங்கள் தேர்தலில் றிவிலி (னி) இன் படுதோல்வியால் புஷ் நிர்வாகம் அதிர்ச்சியுற்றுள்ளது. அது முதலே முஷாரஃப்புக்கு ஆதரவை முட்டுக் கொடுக்கும் முயற்சியில் அது தட்டுத் தடுமாறி முனைகிறது. இந்த முயற்சியில், அமெரிக்க அதிகாரிகள் முஷாரஃபை புகழ்ந்தும் அதனால் புது அரசு அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் தொடர்ந்து அறிக்கை விடுவது, மற்றும் றிவிலி (னி) மற்றும் முஷாரஃபுடன் இணைந்திருந்த பிற கட்சிகளை, இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகளின் கூட்டணியான விவிகி மற்றும் பாக்கிஸ்தானின் உருது பேசும் மொஹாஜிர் சமுதாய மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் வினிவி போன்றவை உள்ளடங்கிய ஒரு அரசை உருவாக்க றிறிறி மீது திரைமறைவு அழுத்தத்தை அளிப்பது ஆகிய இரண்டும் அடக்கம். பாக்கிஸ்தானிய நாளிதழான The News, "றிவிலி-ழி அல்லாமல் றிவிலி (னி) மற்றும் வினிவி போன்ற கட்சிகளுடன் ஒரு கூட்டணி அரசை உருவாக்க றிறிறி இணைத் தலைவர் மீது கடும் அழுத்தத்தை அமெரிக்கர்கள் அளித்து வருகின்றனர் என்று [றிறிறி] வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன" என கூறியுள்ளது. பாக்கிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் மறைந்த பூட்டோவின் கணவரும், றிறிறி தலைவராக பொறுப்பேற்றுள்ளவருமான ஆஸிப் அலி சர்தாரியினை புதனன்று அமெரிக்க தூதரகத்திற்கு அழைத்துப் பேசியது இதில் சம்பந்தப்பட்டதாகும். கடந்த வருடத்தில் பல சமயங்களில், முஷாரஃப்புடன் கூட்டணி அமைத்து செயல்படுவதன் சாத்தியம் குறித்து பெனாசிர் அமெரிக்காவுடன் பேசி வந்திருந்தார். ஆனால், முஷாரஃப் மற்றும் அவரது கூட்டணியினர் இடையேயிருந்து வந்த எதிர்ப்பினாலும் இராணுவ கட்டுப்பாட்டு அரசுக்கு அதிகரித்த பொதுமக்கள் எதிர்ப்பினாலும் அந்த மூன்று வழி ஒப்பந்தம் நிறைவேற சாத்தியமின்றியே போய்க் கொண்டிருந்தது. பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியானது (பெயர் சுட்டிக் காட்டுவதைப் போலவே, அதன் தலைவர் நவாஸ் ஷெரிபைச் சுற்றியே எழுப்பப்பட்ட கட்சி), எதிர்க்கட்சிகளுடன் ஒரு ஒப்பந்தத்தின் மூலம் முஷாரபுக்கு பெரும் வெகுஜன சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளிக்க புஷ் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அவருடைய வலது சாரி அரசியல் மற்றும் சவுதி அரச குடும்பத்துடனான அவரது நெருங்கிய தொடர்புகள் இவை போதாதென்று, 1999ல் பிரதமராக இருந்த அவரை கவிழ்த்திய முஷாரஃபின் மீது கொண்ட தனிநபர் பகை, மற்றும் இஸ்லாமிய அடிப்படை உரிமைகள் மீதான அவரது தொடர்புகள் இவற்றின் காரணமாக நவாஸ் ஷெரிப் புஷ் நிர்வாகத்தால் மிகவும் கவனத்துடனே அணுகப்பட்டு வந்திருக்கிறார். வியாழனன்று, அமெரிக்க விருப்பங்களுக்கு மாறாக, சர்தாரியும் ஷெரிபும் ஒரு கூட்டணியை கட்டமைக்கப் போகிறார்கள் என்பது உறுதியானதும், ஜோர்ஜ் புஷ் முஷாரஃபுடன் தொலைபேசியில் பேசினார். அவர்களது பேச்சு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் புரூசெல்ஸில் இருந்து பேசிய தெற்காசியாவிற்கான அமெரிக்க துணைச் செயலர் ரிச்சார்ட் பவுச்சர் முஷாரஃபுக்கான அமெரிக்க ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார். "முஷாரஃபுடன் அவரது புதிய பொறுப்பில் இணைந்து பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம்" என்று அவர் அறிவித்தார். தன்னை மீண்டும் தேர்வு செய்யச் செய்வதற்கு முஷாரஃப் கையாண்ட சர்வாதிகார வழிமுறைகளை மறந்து விட்டு பவுச்சர் கூறினார், "அவர் இப்போது ஒரு சிவிலியன் ஜனாதிபதி". நவாஸ் ஷெரிபும், மற்றும் பாக்கிஸ்தானிய ஊடகங்களில் அநேகமானவையும் முஷாரஃப் பதவி விலக கோரி வருகின்றனர், ஆனால் ஜனாதிபதியாக தொடர முஷாரஃப் உறுதி பூண்டிருக்கிறார். தவிர, சென்ற நவம்பரில் போர்ச் சட்டத்தின் கீழ், தான் அதிகாரத்தைப் பறித்த 60 உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு மீண்டும் அதிகாரமளிக்கும் வகையிலான நாடாளுமன்றத்தின் எந்த முயற்சியும் சட்டவிரோதமானது என்றும் அவர் அறிவித்துள்ளார். தெளிவாக சர்தாரிக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு முயற்சியாக, இந்த வாரம் பாக்கிஸ்தான் அரசாங்கம், றிறிறி தலைவருக்கு எதிரான 10 வருட காலமாக இருக்கும் ஊழல் வழக்கினை துரிதப்படுத்த சுவிஸ் நீதிமன்றங்களை அதிகாரபூர்வமாக வலியுறுத்தியிருக்கிறது. தன்னுடைய மனைவி இரண்டாம் முறையாக பிரதமராக இருந்த சமயத்தில், அரசு ஒப்பந்தங்களுக்காக ஏராளமான கமிஷன்களை வாரிக் குவித்ததாக கூறப்பட்ட சர்தாரி, ஊழல் பணம் சுமார் 55 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையினை ஒரு சுவிஸ் வங்கி கணக்கில் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. வியாழனன்று சர்தாரி மற்றும் ஷெரிப் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, முஷாரஃப் தொடர்ந்து அரசியல் சட்டத்தை மீறி நடந்து கொண்டதால் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதற்கோ அல்லது அதிகாரம் பறிக்கப்பட்ட நீதிபதிகளை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதற்கோ வாக்குறுதி எதனையும் அவர்கள் வழங்கவில்லை. இவையெல்லாம் உருவாகவிருக்கும் நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் என்று அவர்கள் கூறிவிட்டார்கள். ஷெரிப் கூறினார், "நீதி முறைமையை மீட்டமைப்பதில் கோட்பாட்டளவில் கருத்து வேறுபாடு இல்லை [இரண்டு கட்சிகளுக்கும் இடையில்]. அதற்குரிய வழிமுறைகளை நாங்கள் நாடாளுமன்றத்தில் உருவாக்குவோம்". ஆனாலும் இதில் ஒரு முக்கியமான கேள்வி, அதாவது முஷாரஃபால் அமர்த்தப்பட்ட நீதிபதிகள் கூறிய அனைத்து தீர்ப்புகளும், சென்ற அக்டோபரில் அவர் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டது அரசியல்சட்டத்திற்குட்பட்டது தான் என்று வழங்கப்பட்ட தீர்ப்பு உட்பட, செல்லாததாக்கப்படுமா என்பது, விடையளிக்கப்படாமல் தொக்கியே நிற்கிறது. முஷாரஃப் இராஜினாமா செய்ய வேண்டும் என்று ஷெரிப் பட்டவர்த்தனமாகக் கூறி விட்டார். ஆனால் சர்தாரியின் நிலைப்பாடு அந்த அளவு திட்டவட்டமாக இல்லை என்பது ஊடகங்களால் வெளிச்சமிட்டு காட்டப்பட்டுள்ளது. அவர் சொன்னதெல்லாம் வெறுமனே "மக்களின் தீர்ப்பு தெளிவாக இருக்கிறது" என்பது மட்டும் தான். சந்தேகத்திற்கு இடமின்றி, உருவாகவிருக்கும் அரசாங்கம் முஷாரஃபுக்கு எதிராக செயல்பட வேண்டிய மக்கள் விருப்ப அடிப்படையிலான அழுத்தம் அதிகமாகவே இருக்கிறது. வியாழனன்றும் மறுபடியும் வெள்ளிக்கிழமையும், அதிகாரம் நீக்கப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியமர்த்தக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். பல நகரங்களில் இந்த போராட்டங்கள் பாதுகாப்பு படையினரால் தாக்குதலுக்கு உள்ளாயின. அமெரிக்காவை மனதில் கொண்டு, முஷாரஃபுடன் இணைந்து செயலாற்றும் சாத்தியக்கூறினையும் றிறிறி தலைமை முழுமையாக விலக்கி விடவில்லை. ஆனால் ஷெரிபின் முஷாரஃப் எதிர்ப்பு கூடுதலான வலிமையுடன் இருந்தது தான் திங்கள் தேர்தலில் பஞ்சாபில் றிவிலி-ழி நிறைய வாக்குகள் கிடைத்ததில் முதன்மையான காரணம் வகித்தது என்பதை றிறிறி தலைவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். 1999 க்கு முந்தைய அக்டோபரில் இருந்த அரசியல்சட்டத்தை மீண்டும் கொண்டுவர விரும்புவதாக சர்தாரியும் ஷெரிபும் கூறி வந்தார்கள். ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கும், இராணுவ ஆதிக்கமுள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலமாக அரசு கொள்கை உருவாக்கத்தில் தனது பாதுகாப்புக் கோட்டையாக திகழும் இராணுவத்திற்கு (துருக்கியில் ஏற்படுத்தப்பட்டதைப் பார்த்து வடிவமைக்கப்பட்டது) நிரந்தரமான தீர்மானமான ஒரு பிடியை அளிப்பதற்குமான வண்ணம் முஷாரஃப் அரசியல்சட்டத்தை மாற்றி எழுதினார். பிரதமரை பதவிநீக்குவதற்கும் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கும் உள்ள அதிகாரங்கள் ஜனாதிபதியின் அதிகாரத்தில் உள்ளடங்கியவை. இராணுவப் படைகளுக்கும் அவர் அதிகாரபூர்வ தலைமை படைத் தளபதியாக இருப்பார். றிறிறி தலைமையிலான தேசிய கருத்தொற்றுமை அரசாங்கத்தில் முஷாரஃப் ஆதரவு உறுப்புகள் சேர்க்கப்படுமா என்று கேள்வி எழுப்பிய போது சர்தாரி கூறினார், "நாட்டில் முஷாரஃப் ஆதரவு குழு என்றோ அரசியல் கட்சி என்றோ எதுவும் இல்லை". ஆனால் ஷெரிபோ, றிறிறி உடனான தனது பேச்சுவார்த்தைகளில் தனது கரத்தை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட றிவிலி (னி) உறுப்பினர்களை தனது கட்சிக்குத் தாவும்படி வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. பலர் விஷயத்தில் இது பழைய இடத்திற்கு திரும்புவது போலத் தான், ஏனென்றால் அடிப்படையில் றிவிலி (னி) கட்சியானது 1999 இராணுவப் புரட்சிக்கு பின்னர் ஷெரிபின் கட்சியிலிருந்து முஷாரப் பக்கம் சென்று சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டது தான். சொல்லப் போனால், சமீபத்தில் அதிகரித்துக் கொண்டே செல்லும் உணவு விலைகள் மற்றும் மாவு மற்றும் மின்சாரப் பற்றாக்குறையாக வடிவமெடுத்த, இப்போது பொருளாதாரத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் நெருக்கடியை எப்படி கையாளப் போகிறார்கள் என்பது குறித்த தெளிவான சிந்தனை எதுவும் சர்தாரி மற்றும் ஷெரிப் வசம் இல்லை. புதிய அரசாங்கம் எண்ணெய் அடிப்படையிலான பொருட்களின் விலை அதிகமாக உயர்த்துவது உள்ளிட்ட, மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கும் என்பது மேல்தட்டு வட்டாரங்களில் பொதுவாக அறியப்பட்ட விஷயமாக இருக்கிறது. தேர்தலின் போது றிறிறி கட்சியோ அல்லது றிவிலி-ழி கட்சியோ தங்களது பொருளாதார திட்டங்கள் குறித்து அதிகமாகக் கூறவில்லை என்றால் அதன் காரணம் முஷாரஃப் ஆட்சியின் புதிய தாராளமய நோக்குநிலையுடன் அவர்கள் உடன்பாடு கொண்டிருப்பது தான். இரண்டு கட்சிகளும் ஒப்புக் கொண்டிருக்கக் கூடிய உறுதியான சில விஷயங்களில் ஒன்று பெனாசிர் பூட்டோ படுகொலையில் ஐநா விசாரணைக்கு அழைப்பு விடுவதுதான். றிறிறி மற்றும் றிவிலி-ழி இடையே வித்தியாசத்தை காட்டும் சிக்கலான பல பிரச்சினைகள் இருக்கின்றன என்று ஒப்புக் கொண்ட சர்தாரியின் உதவியாளர் ஒருவர், "எங்களது பார்வைகளுடன் நவாஸ் ஷெரிபின் நிலைப்பாட்டினை இணக்கமாகக் கொண்டு வருவதற்கு அவசியமான அடிப்படை விஷயங்களை கையாளுவதற்கு" தொடர்ந்த நீண்ட பேச்சுவார்த்தைகள் அவசியப்படும் என்பதை இரண்டு கட்சிகளும் உணர்ந்திருக்கின்றன. பூட்டோ மற்றும் ஷெரிப் குடும்பங்கள் மற்றும் அவர்களது கட்சிகள் நீண்ட காலமாக கடும் அரசியல் எதிரிகளாக இருந்து வருகின்றன. 1990களில், இராணுவ சர்வாதிகாரியான ஜெனரல் ஜியா உல்-ஹக்கின் அரவணைப்பில் தனது அரசியல் வாழ்க்கையை தொடக்கிய ஷெரிப், பெனாசிர் பூட்டோவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இரண்டுமுறை இராணுவம் மற்றும் அரசாங்க அதிகாரத்துவத்துடன் கூட்டாய் செயலாற்றியிருக்கிறார். பூட்டோவும், தன் பங்குக்கு, ஷெரிபுக்கு எதிரான முஷாரஃபின் இராணுவப் புரட்சியை ஆரம்பத்தில் ஆதரித்தார். சென்ற ஆண்டு சர்வாதிகாரி முஷாரஃபுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்வதற்கான முன்தயாரிப்பாக ஷெரிப் மற்றும் அவரது றிவிலி-ழி கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். இன்று அந்த இரண்டு கட்சிகளுமே ஜனநாயகத்திற்கான ஒரு போரட்டத்திற்கு இணைந்து தலைமையேற்பது குறித்து பேசுகின்றன, ஆனால் இரண்டு கட்சிகளுமே பாக்கிஸ்தானின் இறந்து பிறந்த ஜனநாயகக் கன்றின் வேரில் இருக்கும் ஒட்டுமொத்தமான சமமற்ற முதலாளித்துவ சமூக ஒழுங்கினை பாதுகாத்து ஆதரிக்கின்றன. பூட்டோக்கள் அவர்களே சிந்தியைச்சேர்ந்த பெரும் நிலப்பிரபுக்கள் குடும்பத்தினர் தான், ஷெரிபோ பணமுதலை தொழிலதிபர்கள் வழிவந்தவர். கடந்த காலத்தில் இவர்கள் பதவிக்கு வந்த சமயத்தில், றிறிறி ம் சரி, றிவிலி-ழி ம் சரி தசாப்த தசாப்தங்களாக வரும் அமெரிக்காவுடனான இராணுவ பாதுகாப்பு கூட்டணியை தொடர்ந்து வந்திருக்கின்றனர், இரண்டு கட்சிகளுமே இப்போது அதனை கேள்விக்குரியதாக்க விரும்பவில்லை. முஷாரஃப்புக்கு அமெரிக்கா அளிக்கும் உறுதிபட்ட ஆதரவினை எதிர்த்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் மூலம் ஷெரிப் வாக்குகளை அள்ளியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சென்ற நவம்பரில் தான் வாஷிங்டன் போஸ்ட் இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் அவர், அமெரிக்கா பாக்கிஸ்தானின் "இயல்பான கூட்டாளி" என்று பிரகடனப்படுத்தினார். சிக்கலில் அமிழ்ந்து வரும் முஷாரஃபை அமெரிக்கா பிடித்துக் கொண்டிருக்கிறது என்றால் வேறெதற்கும் விட, பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் மத்தியில் தமது அந்தஸ்து மற்றும் தமது விரிந்துபட்ட சொத்துக்கள் இரண்டையும் பராமரிப்பது குறித்த கவலையில் இருக்கும் பாக்கிஸ்தானின் இராணுவ அதிகாரிகள் குழுவுக்கு, அதனைத் தாங்கள் இன்னும் அமெரிக்க-பாக்கிஸ்தான் உறவின் அச்சாணியாக கருதுவதை தொடர்கிறோம் என்பதை உறுதியாக வெளிப்படுத்தும் நோக்கில் தான். மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் புவி-சார்ந்த அரசியல் நலன்கள் மற்றும் ஆசைகளுக்கு பாக்கிஸ்தான் இராணுவத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டும் பொருட்டு, சமீப நாட்களில் பாக்கிஸ்தானில் இராணுவ உளவுத் துறை நடவடிக்கைகள் குறித்த தகவலை புஷ் நிர்வாகம் கசிய விட்டது. அமெரிக்க அரசாங்க வட்டாரங்களின் கூற்றுப்படி, பாக்கிஸ்தான் இராணுவமும் அமெரிக்க இராணுவ உளவுத்துறை ஆலோசகர்களும் சேர்ந்து பாக்கிஸ்தானில் உள்ள பஸ்தூன் பேசும் பழங்குடி பகுதிகள் மற்றும் ஆப்கான் எல்லைப் பகுதிகளில் உள்ள தலிபான்-ஆதரவு சக்திகள் மீது ஒரு பெரும் முக்கிய தாக்குதலில் ஈடுபட இருந்தன. மிக முக்கியமாக, நியூயோர்க் டைம்ஸ் இதழில் வெளியான கட்டுரை ஒன்று பாக்கிஸ்தானுக்குள் சிஐஏ பாதி இராணுவத் தளம் ஒன்றினை இயக்கி வருவதை முதன்முறையாக வெளிப்படுத்தியிருக்கிறது. டைம்ஸ் அறிக்கையின் படி, பாக்கிஸ்தானுக்குள் இருக்கும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்படுவோர் மீது தாக்குதல் நடத்த பாக்கிஸ்தான் ஜனாதிபதியின் ஒப்புதலை சிஐஏ சமீபத்தில் பெற்றிருக்கிறது: "மற்ற விஷயங்கள் தவிர புதிய ஏற்பாடுகள், பாக்கிஸ்தானின் ஒரு இரகசியத் தளத்தில் இருந்து ஏவப்படும் ஆயுதமேந்திய சூறையாடும் கண்காணிப்பு விமானத்தில் இருந்து கண்காணிப்பு ரோந்துகள் மற்றும் தாக்குதல்களின் எண்ணிக்கையையும் எல்லைகளையும் அதிகப்படுத்துவதற்கு அனுமதித்தது, இது அல் கெய்தா மற்றும் தலிபான் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு இருந்ததை விட கூடுதல் உக்கிரம் கொண்ட மூலோபாயமாகும்". டைம்ஸ் அறிக்கை குறிப்பிடாமல் விட்டிருந்தது என்றாலும் கூட, இத்தகையதொரு சிஐஏ தளம் பாக்கிஸ்தான் மேற்குப்புற எல்லையின் அண்டை நாடான ஈரான் மீது அமெரிக்க நடவடிக்கைகளுக்கான ஒரு செயல்பாட்டுப் பகுதியாகவும் அநேகமாகப் பயன்படுத்தப்படக் கூடும். |