World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காThe two faces of Barack Obama பரக் ஒபாமாவின் இரு முகங்கள் By Bill Van Auken மேரிலாண்ட், வர்ஜீனியா மற்றும் வாஷிங்டன் டி.சி. ஆகியவற்றில் நடந்த "பொடாமாக் தொடக்க தேர்தல்களில்" வெற்றியடைந்த செவ்வாய் இரவு விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் கூட்டம் நிறைந்திருந்த அரங்கில் தோன்றிய இல்லிநோய் செனட் உறுப்பினரும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பளாருமான பரக் ஒபாமா ஈராக் போர் பற்றி மட்டும் இல்லாமல் அமெரிக்காவில் இருக்கும் சமூக நிலைமைகள் பற்றி, மக்களை திருப்திப்படுத்தும் வனப்புரைத் தன்மையை கொண்டிருந்த உரையை ஆற்றினார். விஸ்கான்சின் அணிவகுப்பு பெரும்பாலும் மிக அதிமாகவும், இளைஞர்களின் ஆதிக்கமும் நிறைந்த தொடர்ச்சியான பிரச்சார நிகழ்வுகளில் கடைசியானது --கிட்டத்தட்ட மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் 20,000 பேரும் வர்ஜீனியா கடற்கரையில் 17,000 பேரும் செவ்வாய் தொடக்கத் தேர்தல்களுக்கு முன் கூடியிருந்தனர்; இவை ஒபாமா இன்னும் கூடுதலான "இடது" பொது முகத்தை ஏற்ற விதத்தில் நடந்து கொண்டதைக் காட்டின. இல்லிநோய் செனட் உறுப்பினர் ஒரு போராடுபவரின் உள்ளுணர்வை கொண்டிருக்கிறார்; அவர்களுக்கு என்ன தேவையோ அதை கூட்டங்களுக்கு கொடுக்க முற்படுகிறார். விஸ்கான்சினில் அவர் Exxon உடைய "மிக அதிகமாக இலாபங்களை" "price at the pump" உடன் தொடர்பு படுத்தி களிப்பான பாராட்டுதல்களை பெற்றார். "வேலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி பெற்றோர்களை அவர்கள் சிறுவயதுக் குழந்தைகளுடன் குறைந்த ஊதியத்திற்கு போட்டியிட வைக்கும் வோல் மார்ட்டின்" வணிக உடன்பாடுகளை பற்றி பேசினார். "வோல் ஸ்ட்ரீட் மட்டும் இன்றி Main Street ஐயும் தான் கேட்க இருக்கும் ஜனாதிபதியாக இருக்கப்போவதாக உறுதியளித்தார்; எல்லாம் எளிதாக இருக்கும் நேரம் மட்டுமில்லாமல், கடினமாக இருக்கும்போதும் தொழிலாளர்களுடன் துணை நிற்கும் ஜனாதிபதியாக இருக்கப் போவதாக" உறுதியளித்தார். ஈராக் பிரச்சினை பற்றி பேசுகையில், "எமது படைகள் கடமை என்ற பெயரில் பல இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றனர்; இந்தப் போருக்கு நாம் அங்கீகாரம் கொடுத்திருக்கக்கூடாது, இந்தப் போர் தொடக்கப்பட்டிருக்கக் கூடாது" என்றும் "9/11ஐ பயன்படுத்தி வாக்குகளை அச்சுறுத்தி வாங்கியவர்களையும்" எள்ளி நகையாடினார். சராசரி அமெரிக்கர்களுடைய சரிந்து கொண்டிருக்கும் சமூக நிலைமைகள் பற்றியும் அவர் மேற்கோளிட்டு தொடர்ந்தார். "விடியும் முன்னரே தகப்பனார் வேலைக்குச் சென்றுவிடுவதுடன், செலவினங்களை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று இரவு விழித்திருக்கிறார்."; "ஒரு நாள் முழுவதும் கல்லூரியில் வேலைபார்த்தும் இரவு ஷிப்ட்டிலும் வேலை பார்க்கும் பெண்மணி ஒருவர் என்னிடம் தன்னுடைய நோய்வாய்ப்பட்டிருக்கும் சகோதரியின் சுகாதார பாதுகாப்பிற்கு செலவிடப் பணம் போதுமானது இல்லை" எனக் கூறியது பற்றியும் தெரிவித்தார்; ஓய்வு பெற்ற ஒருவர், "அவர் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த நிறுவனம் திவாலாகிப் போனதால் தன் ஓய்வூதியத்தை இழுந்தது பற்றியும்" கூறினார்; மேலும் "பள்ளிக்குப் பிறகும் Dunkin Donuts ல் செலவை ஈடுகட்டுவதற்காக வேலைசெய்யும் ஆசிரியர் பற்றியும்" கூறினார். தொழிலாளர்களுக்கு வரிக் குறைப்புக்கள், சுகாதார பாதுகாப்புச் சீர்திருத்தங்கள், கூடுதலான ஊதியங்கள், "CEO க்கள் போனசை மட்டும் என்று இல்லாமல், ஓய்வூதியங்களை காக்கும்" அரசாங்கம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழிகளை கொடுத்தார். மார்ட்டின் லூதர் கிங்கின் சொல்வன்மையை பிரதிபலிக்கும் வகையில் "நம்முடைய கனவுகள் ஒத்திப்போடப்பட மாட்டாது, நம்முடைய வருங்காலம் மறுக்கப்பட மாட்டாது, மாற்றத்திற்கான காலம் நமக்கு வந்துவிட்டது" என்று தன்னுடைய உரையை முடித்துக் கொண்டார். ஜனநாயகக் கட்சி நடைமுறை மற்றும் அது பிரதிபலிக்கும் வணிக நலன்களுக்கு சற்று சிந்தனைக்கு இடம் அளிக்கும் வகையில் இந்த உரைகளின் கூறுபாடு உள்ளது. ஒபாமாவின் சொல்லாற்றல்கள் ஆபத்தான பகுதிக்கு அழைத்தும் செல்லுவது போல் தோன்றுகின்றன. ஜனநாயகக் கட்சி புஷ் நிர்வாகத்தின் வெளிநாட்டில் போர்க் கொள்கை மற்றும் உள்நாட்டில் சமூகப் பிற்போக்குத்தனம் ஆகியவற்றின் தவிர்க்க முடியாத பங்காளியாகத்தான் செயல்பட்டு வந்தது. ஆனால் இந்த மக்களைத் திருப்திப்படுத்தும் தொடக்க வனப்புரை ஒபாமாவின் ஒரு முகம்தான். வேறு ஒரு முகமும் இவரிடம் உள்ளது; அது உறுதியாக எப்பொழுதும் அவர் பகிரங்கமாகக் குறைகூறும் பெருநிறுவன நலன்களையே நோக்கியுள்ளது; அவர்கள்தான் இவருடைய பிரச்சாரத்திற்கு பல மில்லியன் கணக்கான டாலர்களை கொட்டிக் கொடுத்துள்ளனர். போடோமாக் தொடக்கத் தேர்தல்கள் நடந்த மறுநாள், Business Week "ஒபாமா வணிக நலன்களுக்கு ஏற்றவரா?" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டது. இந்த வினாவிற்கு நேரடியான விடையை கட்டுரை கொடுக்கவில்லை என்றாலும், இந்த ஏடு கொடுத்துள்ள அணுகுமுறை ஒரு சில வரம்புகளுக்கு உட்பட்ட "ஆமாம்" என்று கூறுவது போல் தோன்றியது; உயர்மட்ட வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருநிறுவன முக்கியமானவர்களுடன் இல்லிநோய்சின் செனட்டர் நடத்திய தனி விவாதங்களை அடிப்படையாகக் கொண்ட கருத்து அது; அதே நேரத்தில் இவர் "மாறுதல்" வேண்டும் என்று பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார். இவ்விதத்தில் கடந்த ஞாயிறன்று மெயின் ஜனநாயகக் கட்சி குழுக்களில் தான் வெற்றி பெற்றதை அறிந்த பின்னர் ஒபாமா தன்னுடைய கணினி முன் அமர்ந்து ரோபர்ட் வொல்ப், அமெரிக்க UBS ன் தலைமை நிர்வாக அதிகாரியுடன் மின்னஞ்சல்களை பறிமாறிக் கொள்ள உட்கார்ந்தார்; பிந்தையவர் இவருடைய வோல் ஸ்ட்ரீட் "நண்பர்கள்", சக மில்லியன்கள் பவற்றைக் கொண்ட நபர்களிடம் இருந்து நன்கொடைகளை கொண்டுவருவதற்கு பொறுப்பாக இருப்பவர், ஒபாமா தன்னுடைய "இயக்கம்" என்று கூறிக் கொள்ளுவதற்கு அளிப்பதற்கு பொறுப்பாக இருப்பவர் ஆவார். Centre for Responsive Politics உடைய மதிப்பீட்டின்படி கடந்த ஆண்டு ஒபாமா பிரச்சாரத்தின் மூலம் எழுப்பிய பணத்தில் எண்பது சதவிகிதம் வணிகத்துடன் தொடர்பு கொண்டவர்களின் அன்பளிப்பு ஆகும்; வோல் ஸ்ட்ரீட்தான் அவ்வரிசையில் முன்னணியில் நிற்கிறது. பாதிக்கும் மேலான பணம், நன்கொடைகள் $2,300 க்கும் அதிகமானவை அங்கிருந்துதான் வந்தது. வொல்பைத் தவிர, ஒபாமா, கிட்டத்தட்ட $52 பில்லியன் சொத்துக்களை உடைய அமெரிக்காவின் இரண்டாம் பெரும் பணக்காரரான வாரன் பபேயுடும் எப்பொழுதும் தொடர்பு கொண்டுள்ளார். இவருடைய முக்கிய பொருளாதார ஆலோசகர்களில் ஒருவராக ஷிகாகோ பல்கலைக் கழக பேராசிரியரும், தடையற்ற சந்தைக் கொள்கையை முக்கியமாக வாதிடுபவருமான ஆஸ்டன் கூல்ஸ்பீயும் உள்ளார். வோல்க்கர் ஒப்புதல் கொடுத்தல் கடந்த மாதம் ஒபாமாவிற்கு ஆதரவு கொடுப்பதாக போல் வோல்க்கர் கூறியுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்; அவர் பெடரல் ரிசர்வ் குழுவின் தலைவராக ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரால் 1979ல் நியமிக்கப்பட்டு அமெரிக்க மத்திய வங்கியின் பொறுப்பை கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ரேகனின் வலதுசாரி நிர்வாகத்தின் கீழும் வகித்தார். ஒரு உயர்வட்டி விகித ஆட்சி என்று நிதிய மூலதனத்தின் ஆதிக்க சக்திகள் பணவீக்கத்திற்கு எதிராகக் கோரியபோது வோல்க்கர் அதைத் தொடக்கும் பொறுப்பை கொண்டிருந்தார். அவருடைய நிதியக் கொள்கை தவிர்க்க முடியாமல் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலுடன் பிணைந்து இருந்தது; விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் தொடங்கி, PATCO வேலைநிறுத்தத்தை உடைத்ததுடன், அடிப்படைத் தொழிலின் பல பிரிவுகள் மூடப்பட்டதுடன், 1930 களின் பெரும்நத நிலைக்கு பின்னர் மிக மோசமான பொருளாதார கீழ்நோக்குச் சரிவையும் கட்டவிழ்த்ததில் முடிந்தது. இந்தக் கொள்கைகளின் இறுதி விளைவு பெரும்பாலான தொழிலாள வர்க்க மக்களிடம் இருந்து ஒரு குறுகிய நிதிய உயரடுக்கிற்கு செல்வம் பரந்த முறையில் மாற்றப்பட்டதுதான்: இந்த வழிவகை இன்றும் தொடர்கிறது. ஒபாமாவிற்கு தன் ஆதரவைக் கொடுத்துள்ள அறிக்கையில் வோல்க்கர் தான் முன்பு கட்சி அரசியலை தவிர்த்து வந்ததாக கூறியுள்ளார். இப்பொழுது தலையிடுவதின் காரணம் "சந்தைகளில் இருக்கும் தற்போதைய கொந்தளிப்பால் இல்லை" என்றும் "எமது நாட்டை உள்ளிலும் வெளியிலும் எதிர்நோக்கி இருக்கும் ஆழ்ந்த சவால்கள் கோருவதால்" என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறுவதாவது: "இந்த அறைகூவல்கள் புதிய தலைமை, புதிய அணுகுமுறை ஆகியவற்றை கோருகின்றன. எமது பார்வைக்கு தேவையான நம்பிக்கை, நமக்கு தேவையான வலிமை மற்றும் உலகெங்கிலும் எமது உரிமைகளுக்காக ஒபாமாவின் தலைமை கொடுக்கும்." என்று முடிவாக கூறியுள்ளார். ஒரு வலதுசாரிப் பண்டிதரும் முன்னாள் ரேகன் நிர்வாகத்தின் பொருளாதாரப் பிரிவு ஆலோசகருமான Larry Kudlow இம்மாதத் தொடக்கத்தில் கொடுத்த ஒப்புதல் பற்றிக் கூறும்போது, தான் முன்பு வோல்க்கருக்கு உரை எழுதிக் கொடுத்தது பற்றிக் குறிப்பிட்டு வோல்க்கரை "ஒரு பெரிய அமெரிக்கர்... தொல்சீர் கன்சர்வேடிவ்.. நிதிய, வழிகவகைகள் நிதானம் பற்றி முழுவதும் உணர்ந்தவர்" என்று விவரித்துள்ளார். "இந்த ஒப்புதலை பொழுதுபோக்கிற்காக வோல்க்கர் செய்யக் கூடியவர் அல்ல. என்னை நம்புங்கள் இத்தகைய நடைமுறை முடிவுகளில் அவர் எப்பொழுதும் தொடர்பு கொள்ள மாட்டார்" என்று குட்லோ கூறினார். "வோல்க்கர்தான் புதிய ரோபர்ட் ரூபினா [கிளின்டன் நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கையை இயக்கிய வோல் ஸ்ட்ரீட் முக்கியஸ்தர்]? ஒபாமாவிற்கு ஏதேனும் திரு வோல்க்கர் கற்பித்துக் கொண்டிருக்கிறாரா? நம்பப்படுவதை விட ஒபாமா நிதிய முறையில் ஒரு கன்சர்வேடிவாக இருக்கக் கூடுமா?" என்று முடிவாக குட்லோ கேட்டுள்ளார். இவைதான் ஒபாமா இடது சொற்றொடர்களை அரங்கில் இருந்து கூறும்போது, திரைக்குப் பின்னணியில் இருக்கும் உண்மையான உறவுகள் ஆகும். வோல்க்கர் போன்றவர்கள் இல்லிநோய் செனட்டரை தொழிலாள வர்க்கத்தின் வெகு ஜன வாழ்க்கை நிலையை உயர்த்தும் பெரிய மாற்றங்களை கொண்ட கொள்கைகளுக்கு உரிய கருவியாக கருதவில்லை; மாறாக அமெரிக்க நிதிய மூலதனத்தின் உலகந்தழுவிய நலன்களை காக்கும் கருவியாகத்தான் நினைக்கின்றனர். ஒபாமா, அமெரிக்காவில் முதல் ஆபிரிக்க-அமெரிக்க ஜனாதிபதியாக வரக்கூடியவர், பொருளாதார நெருக்கடி தொடர்வதாலும், சமூக அழுத்தங்கள் அதிகரிப்பதாலும் ஏற்பட்டுள்ள ஆபத்துக்களை எதிர்கொள்ளச் சிறந்தவர் என்று அவர்கள் நம்புகின்றனர். வேறு எவர் தொழிலாள வர்க்கம் இன்னும் பெரிய தியாகங்களை செய்ய வேண்டும், தேசிய ஒற்றுமை, "மாறுதல்களுக்கு" என்ற விதத்தில்? அதே நேரத்தில் அவர் உலகிற்கு ஒரு புதிய முகத்தைக் காட்டுவார்; அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வெளியுறவுக் கொள்கை தேக்கங்கள், பெருகிய முறையில் உலகத்தில் ஒதுக்கி வைக்கப்படுதல் இவற்றில் இருந்து வெளிக் கொண்டுவரும் என்று நினைக்கின்றனர்; அவை புஷ் நிர்வாகத்தின் மரபியமாகி உள்ளன. இந்த வணிக உறவுகள் இருக்கும்போது, ஒபாமாவின் பிரச்சார வனப்புரை, வறுமையையும் சமூகச் சமத்துவமின்மையையும் எதிர்கொள்ளுதல் என்பது ஒரு அவநம்பிக்கை தன்மையையும், மக்களைத் திருப்திப்படுத்தும் தன்மையையும் கொண்டுள்ள அளவு வியக்கத்தக்கது ஆகும். இடைவிடாமல் மாற்றத்திற்கு அவர் கொடுக்கும் உறுதிமொழிகள் எந்தவித முன்னேற்ற பொருளாதாரத் திட்டத்துடனும் பிணைந்தவை அல்ல; அவை வோல் ஸ்ட்ரீட் இன் பெருநிறுவனங்களின் இலாப நலன்களை அடிப்படையில் சவால்விடுபவையாக இருக்காது. மாறாக, ஒபாமா ஒரு கன்சர்வேடிவ் நிதியக் கொள்கையைத்தான் முன்வைத்துள்ளார்; "சேவைக்கு பணம் கொடுக்கவும்" என்ற அணுகுமுறைக்குத்தான் ஆதரவு கொடுக்கிறார்; கடன்கள் மற்றும் பற்றாக்குறைகள் குறைக்கப்பட வேண்டிய தேவையை வலியுறுத்துகிறார். மிக அதிக அளவில் இருக்கும் $400 பில்லியன் பற்றாக்குறையை புஷ் நிர்வாகத்தில் இருந்து பெற்றிருக்கும் நிலையில் அவர் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும்போது, அச்சூழல் அவரை கடுமையான சிக்கன செயல்களை செய்யத்தான் உறுதி கொடுக்கும். புதனன்று இவ்வேட்பாளர் விஸ்கான்சினில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் ஆலை ஒன்றைச் சுற்றிப் பார்த்து, அடுத்த 10 ஆண்டுகளில் $210 பில்லியன் மொத்த மதிப்பு உடைய மாற்றீட்டு விசைக்கான கட்டுமானத் தொடர்புடைய திட்டத்தையும் அது குறித்த வேலைகளையும் முன்வைத்தார். அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்கொண்டுள்ள ஆழ்ந்த நெருக்கடியின் முன், இது ஒரு பாக்கெட்டில் ஒரு துளி நீர் போல்தான் --இந்த துளிகூட பற்றாக்குறை குறைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையின் முன் விரைவில் ஆவியாகிவிடும். முதலாளித்துவம் பற்றி பேச விரும்பாதவர்கள் வறுமை, வேலையின்மை பற்றி எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொள்ள வேண்டும். சமூகத்தின் உற்பத்தி சக்திகள் தனியார் உடைமையில் இருப்பதை தீவிரமாக எதிர்கொள்ளாத வகையில் அல்லது அது தோற்றுவித்துள்ள மகத்தான சமூக சமத்துவமின்மை பற்றி எதிர்க்காத வரையில் எவரும் தீவிரமாக அவற்றை எதிர்த்துச் செயல்பட முடியாது. வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் ஆகியவை காப்பாற்றப்படல், கெளரவமான வீடுகளை பெறும் உரிமை, சுகாதாரப் பாதுகாப்பு கல்வி ஆகியவை பல நூறு மில்லியன்கள் அமெரிக்கர்களுக்கு அளித்தல் என்பது பெரும் செல்வக் கொழிப்பு உடையவர்களிடம் இருந்து பரந்த தொழிலாள வர்க்க மக்களுடைய பரப்பிற்கு தொலைநோக்குடைய பரந்த மறுபங்கீட்டு முறை மூலம்தான் முன்வைக்க முடியும். வொல்ப், பபே, வோல்க்கர் போன்றவர்கள் ஒபாமாவை ஆதரிப்பதற்கு காரணம் இவர் அத்தகைய கொள்கைக்கு அருகில்கூட செல்ல விருப்பம் உடையவர் அல்ல என்பதை அவர்கள் அறிந்துள்ளனர் என்பதால்தான். போரைப் பொறுத்த வரையில், ஒபாமா பிரச்சாரம் அமெரிக்க இராணுவவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நினைப்பவர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள். இல்லிநோய்யின் செனட்டர் அமெரிக்க இராணுவ செலவு அதிகரித்துள்ளதை குறைப்பதற்கில்லை என்றுதான் உறுதியாகக் கூறியுள்ளார் --இப்பொழுது இச்செலவு $700 பில்லியன் ஆண்டு ஒன்றுக்கு என ஆகிறது; மாறாக அதைப் பெருக்குவதாகத்தான் இருப்பார். தரைப்படைக்கு மற்றொரு 65,000 பேர்கள் தேர்நதெடுக்கப்பட வேண்டும் என்றும், கடற்படைக்கு 27,000 பேர்கள் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" கூடுதலான காலணிகள் நிறுவப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்; அந்தப் போலிக் காரணம்தான் புஷ் நிர்வாகத்தால் "தவிர்க்க முடியாத போரை" தொடங்க பயன்பட்டது; அதாவது மத்திய கிழக்கு, மத்திய ஆசிய எண்ணெய் வளப் பகுதிகளில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிபடுத்தும் இராணுவ நடவடிக்கையை நோக்கமாக கொள்ளுவது என்பதே அது. ஈராக்கை பொறுத்த வரையில் அவர் போரை நிறுத்துவதாக கூறும் உறுதி மொழிகள் நம்பத்தகுந்தவை அல்ல; ஏனெனில் அவர் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் "அமெரிக்க நலன்களை காக்க" நிறுத்தப்படும் என்றும் "பயங்கவாத-எதிர் நடவடிக்கைளை நடத்தும்" என்றும் கூறியுள்ளார்; இந்தச் சூத்திரம்தான் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கத் தரைப்படை, கடற்படை வீரர்கள் ஈராக்கை தொடர்ந்து ஆக்கிரமிப்பதுடன் அங்குள்ள மக்களை பல ஆண்டுகளுக்கு அடக்கவும் செய்வர். ஒபாமாவின் அலங்காரச் சொற்கள் மக்களிடையே எதிர்பார்ப்புக்களை எழுப்பியுள்ள நிலையில் -- அத்தகைய குறிப்பு காணப்படலாம்-- அவை தவிர்க்க முடியாமல் ஏமாற்றத்தில்தான் முடியும். அநேகமாக இது தொடக்கத் தேர்தல் காலம் முடிந்த பின்னரேகூட முடிவடையலாம்; ஒபாமா வலது குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே இருக்கும் தன்னுடைய திட்டத்தை விளக்குக என அவரைக் கோரும் கூறுபாடுகளை எதிர் கொள்ள நேரிடும். வெள்ளை மாளிகையை அவர் நவம்பர் மாதம் கைப்பற்றினால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்க தன்னலச் சிறுக் குழுவின் நலன்களைக் காக்கும் கடமையை கொண்டுள்ள நிர்வாகத்திற்குத்தான் தலைமை தாங்குவார். ஒபாமா பிரச்சாரத்தை ஒரு முன்னேற்ற சமூக மாறுதல் அமெரிக்காவிற்கு கொண்டுவரக்கூடிய வழிவகை என்று நினைப்பவர்கள், வெளியே அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடியது என்று நினைப்பவர்கள், ஜனநாயகக் கட்சியும் அது பிரதிபலிக்கும் பெருநிறுவன, வங்கிகளின் நலன்கள் இதை அனுமதிக்காது என்பதை உணர்வர். இந்தத் தேவையான இலக்குகள் ஜனாநயாகக் கட்சியுடன் திட்டவட்டமான உடைவை கொள்வதின் மூலமும், முழு இரு கட்சிமுறையை முறிப்பதின் மூலமும், தொழிலாள வர்க்கம் ஒரு வெகுஜன சோசலிச இயக்கத்தை சுயாதீனமாக கட்டமைப்பதின் மூலமும்தான் இயலும். |