WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
India's government plots break with Left Front to implement Indo-US
nuclear treaty
இந்திய அரசாங்கம் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு இடது
முன்னணியுடன் உறவை முறித்துக் கொள்ளுகிறது
By Keith Jones
21 June 2008
Use this
version to print | Send this link by
email |
Email the
author
வாஷிங்டனில் இருந்தும் இந்தியாவின் பெருநிறுவன உயரடுக்கில் இருந்தும் வரும் அழுத்தத்திற்கு
பணிந்து இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA)
அரசாங்கம் அதன் இந்திய-அமெரிக்க சிவிலியன் அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு ஒரு புதிய உந்துதலை
மேற்கொண்டுள்ளது.
UPA கூட்டணியின் மேலாதிக்க பங்காளியான
காங்கிரஸ் கட்சியின் தலைமை, குறைந்த பட்சம் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கை சுற்றியுள்ள பிரிவு, அணுசக்தி
ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக அரசாங்கம் பாராளுமன்ற பெரும்பான்மையை இழக்கக் கூடிய அபாயத்தையும்
முன்கூட்டிய தேர்தல்கள் விரைவில் நிகழவிருப்பதையும் ஏற்கத்தயார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது.
இத்தகைய போக்கு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA),
இந்தியாவின் முதலாளித்துவ மரபார்ந்த கட்சியான காங்கிரஸ் இரண்டிற்குமே பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தும்
தன்மையை கொண்டுள்ளது. உணவு மற்றும் எரிபொருள் விலைகள் கடந்த ஆறு மாத காலத்தில் மிக அதிகமாக உயர்ந்து,
பணவீக்கத்தையும் 13 ஆண்டுகாலம் இல்லாத அளவிற்கு 11 சதவிகிதத்திற்கும் மேல் கொண்டு சென்றுள்ளன. இதற்கிடையில்
பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்துள்ளது. சமீபத்திய மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக
பல தோல்விகளை சந்தித்துள்ளது. முன்கூட்டிய தேர்தல்களுக்கு வழிவகுத்தல் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள்ளும்
பிளவுகளை அதிகமாக்கும்; ஏனெனில் அதன் உறுப்புக் கட்சிகள் பலவும் முன்கூட்டிய தேர்தல்களை எதிர்க்கின்றன, அதைப்
பற்றி அஞ்சுகின்றன.
ஆயினும் கூட மன்மோகன் சிங், காங்கிரஸ் மற்றும் அதன்
UPA நட்புக்
கட்சிகளும் ஸ்ராலினிச தலைமயில் உள்ள இடது முன்னணியானது சிறுபான்மை
UPA அரசாங்கம்
அணுசக்தி ஒப்பந்தத்தை தொடர்ந்தால் அதற்கு கொடுக்கும் ஆதரவை அது விலக்கிக் கொள்ளும் என்று கூறும்
அச்சுறுத்தலுக்கு பயந்தால் தான் இராஜிநாமா செய்வதாக கூறியுள்ளார். (சிங் அரசாங்கத்திற்கு தலைமை
வகித்தாலும், பிரதம மந்திரி பதவியை அவர் வகிப்பது காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் தற்போதைய
நேரு-காந்தி பரம்பரையின் தலைவியுமான சோனியா காந்தியின் விருப்பத்தை ஒட்டித்தான்.)
வியாழன் மாலை இறுதியில்
rediff.com ல் வெளிவந்த கட்டுரை ஒன்று "பிரதம மந்திரி
மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியிடம் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்
செயல்படுத்தப்பட மிக அதிக அழுத்தம் கொடுக்கிறார்" என்று எழுதியுள்ளது.
"டாக்டர் சிங்கிற்கும் முன்கூட்டிய பொதுத் தேர்தல்கள் வேண்டாம் எனக் கருதும் சில
கட்சி தலைவர்களுக்கும் இடையே நடக்கும் பூசல், இடது ஆதரவு விலக்கப்பட்டதால் தூண்டப்படும் நிகழ்வு, இன்னும்
முடிவைக் கணவில்லை...என்று காங்கிரஸ் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன."
"டாக்டர் சிங், இந்த ஒப்பந்தம் தொடர்பாக அவருக்கு காங்கிரஸ் கட்சி முழு
ஆதரவு கொடுக்கவில்லை என்றால் பிரதம மந்திரி பதவியில் இருந்து இராஜிநாமா செய்ய விரும்புவதாகக்
கூறியுள்ளார். ஆனால் டாக்டர் சிங்கிற்கும் கட்சிக்கும் இடையே பேச்சுக்கள் தொடர்கின்றன, இறுதி முடிவு இன்னமும்
எடுக்கப்படவில்லை."
எதிர்பார்த்தபடி இந்த அறிக்கை காங்கிரஸ் கட்சித் தலைமையால் உறுதியாக
மறுக்கப்பட்டுவிட்டது.
ஆனால் மறுக்க முடியாத உண்மை இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் என்பது
மடியும் தறுவாயில் உள்ளது என்று சமீபத்திய புஷ் நிர்வாக அலுவலர்களின் கருத்துக்களில் இருந்து வெளிவருதலாகும்,
சில கடுமையான விருப்பங்களை இந்திய அரசாங்கம் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அமெரிக்க வணிக
மந்திரி Carlos Gutierrez
கூறியுள்ளார். இக்கருத்து UPA
அரசாங்கத்தை நெருக்கடியில் தள்ளியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்டுக்கள்) (சிபிஐ-எம்), இடது முன்னணியின்
முக்கிய கூறுபாடு, மற்றும் UPA
அரசாங்கம், காங்கிரஸ் கட்சி இவற்றின் உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையே பல பரபரப்பான
பேச்சுவார்த்தைகளை கடந்த வாரம் கண்டது. அரசாங்கத்திற்கு இப் பேச்சுக்களில் முக்கியமாக இருந்தவர்
வெளியுறவு மந்திரி பிரணாப் முக்கர்ஜி ஆவார்; அரசாங்கத்தில் இவர் பொதுவாக இரண்டாம் சக்திவாய்ந்த
மந்திரியாக கருதப்படுகிறார்.
ஐமுகூ-இடது
ஒருங்கிணைப்புக் குழு கடந்த புதனன்று சர்வதேச அணுசக்தி
முகவாண்மையை (IAEA)
சந்தித்து, அரசாங்கத்திற்கும் அதற்கும் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கண்டு இந்திய சிவிலிய அணுத் துறையை
IAEA
மேற்பார்வையில் கொண்டுவருவதை பரிசீலிக்க கூடுவதாக இருந்தது. இந்திய அமெரிக்க சிவிலிய அணுசக்தி ஒப்பந்தம்
இந்தியாவிற்கு உலக அணுசக்திக்கட்டுப்பாட்டு ஆட்சியினுள் ஒரு சிறப்பு அந்தஸ்தை தோற்றுவிக்கும்--அணுவாயுதபரவுதல்
தடுப்பு உடன்பாட்டிற்கு புறத்தே இருக்கும் அரசாங்கம், சிவிலிய அணு வணிகத்தில் ஈடுபட அனுமதிக்கப்படும் என்ற
நிலை-- ஆனால் இது நடைமுறையில் வருவதற்கு IAEA
மற்றும் பிற அணுசக்தி வழங்குநர் குழுவினரிடம் ஒப்பந்தங்கள் உறுதிகள் ஆகியவை தேவை.
ஆனால் ஒருங்கிணைப்புக் குழுவின் தயாரிப்பு விவாதங்களே அரசாங்கமும் இடது
முன்னணியும் வேற்றுமையில் இருந்ததை தெளிவாக்கின. இடது முன்னணித் தலைவர்கள் "இந்தியாவை பற்றி குறிப்பான
IAEA
பாதுகாப்பு உடன்பாட்டை" சரியாக இன்னும் மதிப்பிடவில்லை என்றும் புஷ் நிர்வாகம் ஆணையிடும் கால
அட்டவணையை பின்பற்றப்போவது இல்லை என்றும் கூறிவிட்டனர்.
அரசாங்கம் இடது முன்னணித் தலைமைக்கு "பாதுகாப்புக்கள்" உடன்பாடு பற்றி
பரந்த முறையில் எடுத்துக் கூறியபோதிலும்கூட, இடது முன்னணி உடன்பாட்டின் சரியான வாசகத்தை படிப்பதற்கு அது
அனுமதிக்கவில்லை.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற இருந்த சில மணி நேரத்திற்கு முன்புதான்
அரசாங்கம் சிரிய நாட்டு ஜனாதிபதி பஷர் அல்-அசத் வந்திருப்பதால் முக்கர்ஜி அவருடன் இருக்க
வேண்டியிருப்பதால் கூட்டம் இரத்து செய்யப்பட்டுவிட்டதாக கூறியது.
ஆனால் உண்மையான காரணம் அரசாங்கம், அல்லது அதற்குத் தலைமை தாங்கும்
காங்கிரஸ் மந்திரிகள் சிறு குழு மற்றும் சோனியா காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி தலைமை ஆகியவை வேறு என்ன
செய்யலாம் என்பதைப் பற்றித் தீவிரமாக ஆலோசிக்கின்றனர்.
அவர்களுடைய மதிப்பீட்டில் நான்கு பிரச்சினைகள் மையமாக உள்ளன.
முதலில், ஸ்ராலினிஸ்ட்டுக்களை முன்கூட்டிய தேர்தல் என்ற அச்சுறுத்தலில் இருந்து
பின்வாங்குவதற்கு இவர்களால் கட்டாயப்படுத்த முடியுமா?
இடது முன்னணித் தலைவர்களே தேர்தல் பற்றி ஆர்வமாக இல்லை; அது இப்பொழுது
இவர்களுடைய பாராளுமன்ற ஆதரவை நம்பியிருக்கும் UPA
நிலையை மாற்றி, அவர்கள் கொண்டிருக்கும் செல்வாக்கைக் குறைந்துவிடக்கூடும்; மேலும் மேற்கு வங்கம் என்றும்
அவர்களுடைய கோட்டையில் தொடர்ந்து அவர்கள் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை நடத்துவதற்கு மக்களிடம்
இருந்து பதிலடி கிடைக்கக்கூடும். கடந்த இலையுதிர்காலத்தில் சிபிஐ(எம்) குண்டர்கள் நந்திகிராம் விவசாயிகள் மீது
கொலைகாரத் தாக்குதல் நடந்திய சில நாட்களுக்கு பின்னர் (மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தின்
கொள்கையான சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக நிலத்தைக் கையகப்படுத்துதலுக்காக இடது முன்னணிக்கு
எதிராக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்); இடது முன்னணி அந்த நேரத்தில் சர்வதேச அணுசக்தி
முகவாண்மையுடன் ஐமுகூ அரசாங்கம் பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கான தன்னுடைய எதிர்ப்பை கைவிட்டிருந்தது.
இரண்டாவதாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொறி என்று அது கண்டித்திருந்த
உடன்பாட்டை ஏற்பதற்கு மீண்டும் இடது முன்னணி அனுமதித்தால் அதன் நம்பகத்தன்மை இன்னும் குறைமதிப்பிற்கு
உட்படும்; அந்த நிலையில் காங்கிரஸ் அவர்களின் எதிர்ப்பை அலட்சியப்படுத்தி
IAEA விடம்
பாதுகாப்பு உடன்பாடுகள் செய்து கொள்ளலாமா? அரசாங்கத்தை தைரியமிருந்தால் வீழ்த்திப் பாருங்கள் என்று
ஸ்ராலினிஸ்ட்டுகளுக்கு காங்கிரஸ் சவால் விடலாமா?
மூன்றாவதாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள காங்கிரசின் நட்புக்
கட்சிகளை இத்தகையை ஆபத்தான விளையாட்டிற்கு ஒப்புக் கொள்ள வைக்க முடியுமா?
நான்காவதாக, ஸ்ராலினிஸ்ட்டுக்கள் முறையாக அரசாங்கத்திற்கான தங்கள்
ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டால், அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் அவர்கள்
இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (BJP)
உடன் சேர எப்படியும் மறுத்துவிடுவார்களா? இடது முன்னணி தலைவர்கள் அத்தகைய போக்கை கடைபிடிக்கக் கூடும்
என்று குறிப்புக் கொடுத்துள்ளனர் இது அரசாங்கத்தை பதவியில் ஒட்டிக் கொள்ள அனுமதித்து அடுத்த ஆண்டு
தேர்தல்கள் தேதிகளை நிர்ணயிப்பதில் முன்முயற்சியையும் கொடுக்கும்.
அடுத்த ஐமுகூ-
இடது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு முன்பு காங்கிரஸ் இவை பற்றி தன்னுடைய கருத்துக்களை கூறும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. அக்கூட்டம் இப்பொழுது அடுத்தவார நடுப்பகுதிக்கு ஒத்திப் போடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெருநிறுவன உயரடுக்கு தான் எங்கு உள்ளோம் என்பதில் சந்தேகம்
கொள்ளவில்லை. செய்தி ஊடகங்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இடது முன்னணியின்
மிரட்டலை பகிரங்கப்படுத்தும்படி கூறுகின்றன; இதையொட்டி அரசாங்கத்தின் வீழ்ச்சி வந்தாலும் பரவாயில்லை என்று
அவை கூறுகின்றன.
தலையங்க கருத்துக்கள் பலவும் இந்திய அரசியலமைப்பின்படி அரசாங்கம்
பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை என்ற உண்மையை சுட்டிக் காட்டியுள்ளன. இதன் பொருள்
IAEA, NSG
ஆகியவற்றுடன் உடன்பாடுகள் கொள்ளும் வழிவகை, இறுதியில் அமெரிக்காவுடன் சிவிலிய அணுசக்தி ஒப்பந்தப்
பிரகடனம் ஆகியவை கூட ஒரு சிறுபான்மை அல்லது காபந்து (தேர்தல் காலத்தில் தற்காலிகப் பொறுப்பு
கொண்ட) அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட முடியும் என்பதாகும்.
வெள்ளியன்று அதன் முக்கிய தலையங்கத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை
செயல்படுத்துவதற்கு நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தியது: "இப்பொழுது அமெரிக்க நிர்வாகம் ஜனவரி 19
வரை அமெரிக்க காங்கிரசில் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க முயற்சி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளது--அதாவது அதன்
கடைசி அதிகார தினம் வரை; UPA
அரசாங்கம் இடதுடன் சேர்ந்து இதைத் தாமதப்படுத்தக்கூடாது, நேரம் குறுகியதாகிவிட்டது...." இடது முன்னணி
இந்த ஒப்பந்தம் மடிய வேண்டும் என்று நினைக்கும்; ஆனால் தான் அதைச் செய்ததாக காட்டிக் கொள்ளத்
தயாராக இல்லை. அரசாங்கத்தை உடனடியாக கவிழ்க்க இருப்பதாகவும் அது சொல்லவில்லை. "இந்த வாய்ப்பை
அரசாங்கம் பயன்படுத்த வேண்டும். இடது ஒன்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் பங்காளி அல்ல;
வெளியில் இருந்து ஆதரவு தருவதாகக் கூறுகிறது; ஆனால் பெரும்பாலான நடவடிக்கைகளை எதிர்கிறது."
வெள்ளியன்று "Time to call Left's Bluff"
என்ற தலைப்பில்
The Economic Times
ஒரு தலையங்கம் எழுதியது. "இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும்
இடது ஆதரவு இல்லாவிட்டாலும் அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த இருப்பதாகக் கூறியுள்ளனர். அணுசக்தி பற்றிய
இடதின் போலி மிரட்டலை சவால் விடும் இந்த முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம்; இது முற்றிலும் இந்தியாவின்
நலனுக்கு உகந்ததாகும்."
"காங்கிரசிற்கு, இந்தியாவின் நலனுக்கு உகந்தது எனத் தான் கருதுவதைச்
செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் பற்றி அது மேல்நடவடிக்கை எடுத்து தேசிய நலன்கள்
பற்றிய முக்கிய பிரச்சினைகளில் அது சமரசத்திற்கு உட்படாது என்ற அடையாளத்தை காட்ட வேண்டும். இடது
ஆதரவை திரும்பப் பெற்றால், பெறட்டும். பொதுத் தேர்தல்கள் சில மாதங்கள் முன்கூட்டியே வருகின்றன
என்றால், அந்த ஆபத்தை எதிர்கொள்ளலாம்." என்று தலையங்கம் முடிவுரை கூறியுள்ளது.
இந்திய உயரடுக்கு உலக சக்தி அந்தஸ்திற்கு விழைகிறது
இந்தியாவின் பெரு நிறுவனங்கள் மற்றும் இராணுவ வெளியுறவுக் கொள்கையின்
உயரடுக்குகள் இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கைக்கு பல காரணங்களினால் ஆதரவைக் கொடுக்கின்றன. இது
இந்தியாவிற்கு ஒரு சிறப்பான அந்தஸ்தை உலக அணுக் கட்டுப்பாட்டு ஆட்சிக்குள் கொடுத்து நடைமுறையில் ஒரு
அணுவாயுத நாடு என்ற அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும். முன்னேற்றகரமான சிவிலிய அணுசக்தி தொழில்நுட்பத்தை
பெறும் வாய்ப்பினால் இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றை நம்பியிருப்பது சற்று
குறையும், அமெரிக்காவுடனான இராணுவம் மற்றும் பிற உயர் தொழில்நுட்ப வணிகத்திற்கு வகை செய்யும்; மேலும்
இது இந்தியா உள்நாட்டு அணுசக்தி திட்டத்திற்கான இருப்புக்களின் மீது குவிப்புக்காட்ட உதவும்; அதன் அணு ஆயுதத்
திட்டம் என்றும் "மூலோபாய தடுப்பு ஆயுத" வளர்ச்சியையும் தொடரலாம் என்று அது நினைக்கிறது.
கடைசியாக, ஆனால் முக்கியத்துவம் சற்றும் குறையாத வகையில், இந்திய உயரடுக்கு
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை வாஷிங்டனுடன் "உலகந்தழுவிய மூலோபாயத்தில் பங்காளித்தனம்" என்ற
ஒரு சிறப்பு உறவை வலுப்படுத்தும் முயற்சியாக காண்கிறது. புஷ் நிர்வாகம் இத்தகைய கூற்றுக்களுடன் இந்தியாவை
ஈர்க்கும் முயற்சியில் உறுதியாக ஈடுபட்டுள்ளது; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் இந்தியா ஒரு
உலக சக்தியாக வரவேண்டும் என்று அமெரிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
இந்திய பெருநிறுவன உயரடுக்கிற்கு வேதனையை தருவதுபோல் நாட்டின்
உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான பிஜேபி இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டது; அது
அதிகாரத்தில் இருந்தபோது, தேசிய ஜனநாயக கூட்டணியின் (National
Democratic Alliance) தலைவர் என்ற முறையில், அது
அமெரிக்காவிடம் இப்பொழுது UPA
புஷ் நிர்வாகத்துடன் நடத்தி வரும் ஒப்பந்தம் போல் ஒன்றைக் காண விரும்பியது என்றாலும் இப்பொழுது, அதன்
நிலைப்பாடு அதுதான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு பிஜேபி எதிர்ப்பு,
UPA
அரசாங்கத்தில் இருக்கும் காலம் முழுவதும் பெரும் தூண்டுதலைத்தரும், மோதலைக் கொடுக்கும் நிலைப்பாட்டை அது
காட்டுவதுடன் இணைந்துதான் உள்ளது.
பிஜேபி உடன்பாட்டிற்கான எதிர்ப்பில் மையக் கருத்தாக அது இந்தியாவின் அணுசக்தி
திட்டத்தை வளர்க்க வரம்பு விதிக்கும் என்று கூறுகிறது; ஏனெனில் அமெரிக்க சட்டம், உடன்பாட்டிற்கு ஒப்புதல்
கொடுக்கும் Henry Hyde Act
வாஷிங்டன் உடன்பாட்டை இரத்து செய்ய முடியாது என்றும் அமெரிக்கா அளித்த எரிபொருள் தொழில்நுட்ப எரிவாயுவை
இந்தியா அணுவாயுத சோதனை நடத்தினால் திரும்பக் கோர முடியாது என்றும் உறுதிபடுத்தியுள்ளது.
தன்னுடைய பங்கிற்கு இடது முன்னணி வாஷிங்டன் தன்னுடைய கொள்கை உலக விழைவுகளுக்கு
இந்தியாவை ஈர்க்கும் வகையைத்தான் நோக்கமாக கொண்டுள்ளது என்றும் இந்த உடன்பாடு இந்திய அமெரிக்க இராணுவ
மற்றும் மூலோபாய பின்னணியின் வளர்ச்சியில் காணப்படவேண்டும் என்றும் கூறுகிறது; அந்த ஒத்துழைப்பு வாஷிங்டனை
இந்தியா அமெரிக்காவை நம்பியிருக்கச் செய்துவிடும் என்றும் கூறுகிறது.
இடது முன்னணித் தலைவர்கள் --வாஷிங்டனுடைய கொள்கைகளுக்கு கருவியாகிவிடும்படி
இந்தியா அச்சுறுத்தலுக்கு உட்படுத்தமாட்டாது, அதுவும் தேவையானால் சீனாவை கட்டுப்படுத்த எதிர்கொள்ளும் முயற்சியில்
ஈடுபடுத்தப்பட மாட்டாது என்று கூறுபவர்களுக்கு-- புஷ் நிர்வாகம் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் தலைவர்கள் இந்திய
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை பயன்படுத்தி வாஷிங்டன் எப்படி ஈரானை பொறுத்தவரை இந்தியா அமெரிக்க
வகையில் நிற்க மிரட்டியது என்பதை சுட்டிக் காட்டுகிறது.
ஆனால் மற்றபடி இடது முன்னணி
UPA
அரசாங்கத்திற்கு தீவிர ஆதரவு கொடுத்துத்தான் வந்துள்ளது; சமூகத்திற்கு நலன் பயக்காத, புதிய தாராளக்
கொள்கை செயற்பட்டியலை அரசாங்கம் நடத்துகிறது என்று கூறினாலும், அதன் நிலைப்பாடு இப்படித்தான் உள்ளது.
இவ்வார இறுதியில் சிபிஎம்-ன் பொதுச் செயலாளரான பிரகாஷ் காரட் கூறினார்:
"அரசாங்கம் தொடர்ந்து முழு பதவிகாலத்திற்கும் இருக்கும்... என்று நான் நம்புகின்றேன். நாங்கள்
அக்கறையான முயற்சியைத்தான் கொண்டுள்ளோம். சில காலம் முன்பு பிரதம மந்திரி தாங்கள் ஒரு பிரச்சினையான
அரசாங்கம் அல்ல எனக் கூறினார்... அரசாங்கம் தன்னுடைய உறுதிமொழிகளை காப்பாற்றும் என்று
நம்புகிறோம்." |