WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: Break with the trade union collaborators of
Sarkozy! Build an independent socialist movement of the working class!
பிரான்ஸ்: சார்க்கோசியின் தொழிற்சங்க ஒத்துழைப்பாளர்களுடன் உறவை முறி!
தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான சோசலிச இயக்கத்தைக் கட்டி எழுப்பு!
Statement of the World Socialist Web Site
17 June 2008
Use this
version to print | Send this link by
email |
Email the
author
பிரான்ஸ் முழுவதும் ஓய்வூதிய உரிமைகளைக் குறைத்தல் மற்றும் வேலை நேரங்களை
தளர்த்தல் பற்றிய நிக்கோலோ சார்க்கோசி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஜூன் 17 அன்று நடத்தப்படவிருக்கும்
ஆர்ப்பாட்டங்களில் உலக சோசலிச வலைத் தள ஆதரவளார்களால் கீழ்க்கண்ட அறிக்கை வழங்கப்பட உள்ளது.
CGT மற்றும்
CFDT ஆகிய
பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்துள்ள ஜூன் 17ம் தேதி நடவடிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்கள்,
தொழிலாள வர்க்கத்தின் அடிப்படைப் பிரச்சினைகளான ஓய்வூதியங்கள் மற்றும் சட்டபூர்வமாக கட்டுப்படுத்தப்படும்
பணி நேரம் ஆகியவை சம்பந்தமானவை ஆகும்.
இந்நடவடிக்கைகள் இத்தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் ஏப்ரல் 9 அன்று முதலாளிகளுடன்
"பொது நிலைப்பாடு" என்ற ஆவணத்தில் கையெழுத்திட்ட வகையில் குற்றம் புரிந்த, உழைக்கும் மக்களை காட்டிக்
கொடுத்த்தை மறைப்பதற்காக அவைகளால் செய்யப்படும் ஒரு முயற்சி ஆகும்.
அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதித்துவம் மற்றும் பணி நேரம் பற்றி அரசாங்கம்
சட்டம் இயற்றுவதற்கு வழிகாட்டி நெறியாக இந்த ஆவணம் வடிவமைக்கப்பட்டது. "பரீட்சார்த்த அடிப்படையிலான"
தளர்த்தப்பட்ட பணி நேரங்களை இது முன்மொழிந்துள்ளது; இது முதலாளிகளை தேசிய மற்றும் தொழில்துறைகளில்
உள்ள சட்டபூர்வ தடைகளில் இருந்து விடுவிக்கிறது.
இது தொழிற்சங்க பிரதிநிதித்துவம் மற்றும் பணி நேரம் பற்றி மே 27ல்
வெளியிடப்பட்ட சட்ட வரைவிற்கு வழிவகுத்தது; அதற்கு எதிராகத்தான் இந்த எதிர்ப்புக்கள் நடத்தப்பட உள்ளன.
இதில் மோசடி என்னவென்றால்,
CGT (ஸ்ராலினிச
கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் தொழிலாளர் பொது கூட்டமைப்பு),
மற்றும்
CFDT (சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் பிரெஞ்சு
தொழிலாளர் ஜனநாயகக் கூட்டமைப்பு) இரண்டும் தாங்களே முன்முயற்சித்து, ஆதரவு கொடுத்த கொள்கைகளுக்கு
எதிராக, தொழிலாளர்களை அணிதிரட்டுவதுதான்.
ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் ஓய்வு ஊதியங்கள், வேலைகள், வேலைப்
பாதுகாப்பு, சமூகப் பணிகள், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, வேலையற்றோருக்கு நலன்கள், பிற ஜனநாயக
உரிமைகள் ஆகியவற்ற்றிகு எதிரான தாக்குதல்களுக்கு மகத்தான முறையில் வெளிவந்துள்ள மக்கள் சீற்றத்தை திரட்டும்
வகையில் நடைபெற்று வரும் தொழிற்சங்கங்கள் நடத்தும் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்களில்
சமீபத்தியதுதான் ஜூன் 17 ஆர்ப்பாட்டம் ஆகும். தொழிற்சங்கங்கள், இந்த சமூக பிற்போக்குத்தன்மையான
திட்டத்தை தீவிரமாக சவாலுக்கு உட்படுத்தாமல் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பல பிரிவுகளையும்
தனித்தனியே பிளவுபடுத்தி வைத்துள்ளன.
இந்தச் சட்ட வரைவு முதலாளிகளுக்கு பேச்சுவார்த்தைகள் நடத்தவும், வாரத்திற்கு
35 மணிநேரப் பணி என்பதை அகற்றுவதற்கும் உள்ளுர் நிறுவனத் தரத்தில் உரிமைகளை அளிக்கிறது. முந்தைய தேசிய
மற்றும் தொழில்துறை ரீதியாக இருந்த உடன்பாடுகளின் கட்டமைப்பையும் தொழில் விதி தொகுப்பால்
அளிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்புக்களையும் கைவிடுவதுடன் வேலைநிலைமைகளை ஓய்வொழிவில்லாமல் அழிப்பதை இது
கட்டியம் கூறி வரவேற்கிறது.
பிரெஞ்சு தொழில் சட்டத்தில் உள்ள "பிரதான (கோட்டுபாட்டு?) நலன்கள்"
என்பதனால் உள்ளூர் உடன்பாடுகள், தேசிய உடன்பாடுகளை கீழறுக்க முடியாது மாறாக அவற்றை முன்னேற்ற
மட்டுமே முடியும். இது "பொது நிலைப்பாடு" என்பதனால் கைவிடப்பட்டுள்ளது. தொழில் சட்டத் தொகுப்பின் கீழ்
இருந்த கொஞ்ச நஞ்ச பாதுகாப்பும், தொழில் ஆய்வாளர்களின் பங்கும் இப்பொழுது அழிக்கப்பட்டு வருகின்றன.
தொழிலாளர்கள் ஒரே தொழிலில் ஒருவருக்கு ஒருவர் எதிராக தூண்டப்படுகின்றனர்; ஒவ்வொரு ஆலையிலும் இது
எந்தப் பிரிவு மற்றவர்களைவிட குறைந்த ஊதியத்திற்கு அதிக நேரம் உழைக்கும் என்ற விதத்தில்
செயல்படுத்தப்படுகிறது. இந்த வழிவகை அமெரிக்க கார்த் தொழிலிலும் உலகெங்கிலும் தொழிலாளர்களுக்கு
பேரழிவு தரக்கூடிய வகையில் முறையாக சுமத்தப்படுகிறது.
இந்த மாறுதல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகக் குழுக்களில் தற்போது
விவாதிக்கப்படும் பணி நேர இயக்கு முறைத் திட்டங்களுடன் முற்றிலும் இயைந்து உள்ளன. லுக்சம்பர்க்கில் ஐரோப்பிய
ஒன்றியத்தின் 27 உறுப்பினர் நாட்டுப் பிரதிநதிகளும் சேர்ந்து இயற்றியுள்ள ஆவணத்தின்படி வாரப் பணி நேரம்
என்பது 60 மணி நேரம் மற்றும் அதற்கும் அதிகமாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.
CGT, CFDT ஆகியவற்றிற்கும்
முதலாளிகளுக்கும் ஏற்பட்ட பணி நேரம் பற்றிய உடன்பாடு, தொழிற்சங்கங்கள் உத்தியோகபூர்வ
அங்கீகாரத்திற்கான நிலைமகள் பற்றி சாதகமாக இருப்பதற்காக ஏற்பட்டுள்ளது. பிரதிநிதிகள் தேர்தல்களில் 10
சதவீத வாக்குகளை பெற்றால் தொடக்க நிலையிலேயே அங்கீகாரம் என்பது இந்த இரு கூட்டமைப்புக்களுக்கும்
கணிசமான முறையில் மற்ற சிறிய போட்டி தொழிற்சங்கங்களிடம் இருந்து குறிப்பிடத்தக்க நலன்களை கொடுத்து,
தொழிலாளர்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் புதிய அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களை அமைப்பது
என்பதை உண்மையில் இயலாததாக்கிவிடும்.
CGT, CFDT அதிகாரிகள்
பேச்சுவார்த்தைகள் மற்றும் பங்குபெறுபவர்களாக கூட்டு நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க குழுக்களில்
இருக்கும்போது மிக அதிக எண்ணிக்கையில் பங்குவகிப்பதற்கு இந்த உடன்பாடு உத்தரவாதம் அளிக்கும்; இதைத்தவிர,
தேசிய கூட்டு முதலாளிகள்-தொழிற்சங்க மற்றும் அரசாங்க அமைப்புக்கள் தொழில் உறவுகளை கட்டுப்படுத்தும்
குழுக்கள், ஓய்வூதியங்கள், வேலையின்மை, பிற நலன்கள் குழுக்களிலும் அதிக லாபகரமான பதவிகள் இவர்களுக்கு
கிடைக்கும். மேசைக்கு கீழே "தொழிலாளர் உறவுகளை சுமுகப்படுத்துதல்" பிரிவின் கீழ் பொதுமையாக்கப்பட்டது
கூறப்படாமல் உள்ளதாகும்.
சிறிய தொழிற்சங்கங்கள் இந்த உடன்பாட்டிற்கு காட்டும் எதிர்ப்பு கொள்கைகள்
அடிப்படையில் தளத்தை கொண்டிருக்கவில்லை; மாறாக கொள்ளையடித்த பொருளை பங்கு போடுவதில்
திருடர்களிடையே ஏற்படும் மோதல்களை ஒத்து உள்ளது. தொழிலாள வர்க்கத்திற்குள் அதிக நம்பகத்தன்மை இன்றி
8 சதவீதத்தினரையே பிரதிநிதித்துவம் செய்யும் (மேற்கு ஐரோப்பாவிலேயே மிகக் குறைவு), இந்த நிறைய பணம்
இருக்கும் அமைப்புக்களின் தலைவர்களுடைய முக்கிய கவலை எல்லாம், தங்கள் சலுகைகள் மற்றும் முதலாளித்துவ
வாழ்க்கை முறையை காத்துக் கொள்ளுதல் என்றுதான் உள்ளது.
தொழிற்சங்கங்கள், ஒரு தேசிய அணுகுமுறையை கொண்டு, தங்கள் பணி பிரெஞ்சு
முதலாளித்துவத்தின் பரந்த திட்டமான ஊதியங்கள், பணி நிலைமை, தொழிலாள வர்க்கத்தின் சமூக, ஜனநாயக
உரிமைகளை தாக்கி அதன் போட்டித்தன்மையை உலகச் சந்தையில் பெருக்கிக் கொள்ளும் முயற்சிக்கு உதவுதல் என்று
நினைக்கின்றன. இத்திட்டம் உலக கடன் நெருக்கடி மற்றும் வெடித்து எழுந்துள்ள எண்ணெய், உணவுப் பொருட்கள்
விலையேற்றங்களின் பின்னணியில் மிகத் தீவிர அவசரத்தையும் கொண்டுள்ளது.
இச்சமீபத்திய தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்பு தொழிலாள வர்க்கம்
ஐக்கியப்பட்டு அரசியல் தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் என்ற மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும்;
அதையொட்டி தனித்தனி பயனற்ற எதிர்ப்புக்கள், செயலற்ற ஒருநாள் நடவடிக்கைகள் போன்றவை தனிப்பட்ட
பிரச்சினைகளுக்கு நடத்தப்படுகின்றன. இதன் நோக்கம் ஓராண்டிற்கு முன்புதான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
சார்க்கோசியின் தேர்தலுக்கு பின்னர் மகத்தான முறையில் உறுதியான போராட்டங்களை நடத்தும் இளைஞர்கள்
மற்றும் தொழிலாளர்களின் போர்க்குணமான எதிர்ப்பை தனிமைப்படுத்தி, சளைக்க வைத்தல் என்பதாகும்.
1990 களின் மத்தியில் இருந்தே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு,
தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை காக்கும் முறையில் எந்த உணர்விலும் செயல்படவில்லை என்று வலியுறுத்தி
வருகிறது. தொழிற்சங்கங்கள் அவற்றிற்கு தலைமை தாங்கும் மத்தியதர வர்க்க அடுக்குகளின் நலன்களுக்காக
செயல்படுகின்றன; தொழிலாள வர்க்கத்தின் மீது கட்டுப்பாட்டை செலுத்த உதவுகின்றன; நிர்வாகம் மற்றும்
அரசாங்கத்தின் தாக்குதல்களை சுமத்த பயன்படுகின்றன. ஓய்வூதியங்கள், வேலைகள் என்று 1995, 2003,
2007 ஆண்டுகளில் நடந்த போராட்டங்கள் அனைத்தையும் காட்டிக் கொடுத்துள்ளது
ICFI
முன்னோக்கின் சரியான தன்மையை நிரூபணம் செய்கின்றன.
CGT, CFDT ஆகியவை ஏற்பாடு
செய்துள்ள அணிதிரள்வுகள் சமூக அழுத்தங்களுக்கு வடிகால் கொடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்; எதிர்ப்பு
ஆர்ப்பாட்டங்கள் இதற்காகத்தான் நடைபெறுகின்றன; இவை இருக்கும் நடைமுறைக்கு ஆபத்து வராமல்
நடத்தப்படும்; இறுதியில் இவை தொழிலாளர்களிடையே பெரும் சோர்வையும் ஏதும் செய்ய முடியாது என்ற
உணர்வையும்தான் கொடுக்கும்.
சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிச கட்சிகளுடன் தங்கள் வரலாற்றுரீதியான
பிணைப்புக்களை தொழிற்சங்கங்கள், அரசாங்கத்துடனும் கோலிசத்துடனும் உடந்தை என்ற விதத்தில், ஒத்துழைப்பு
கொடுத்து, அது சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின்னர் ஒரு புதிய தரத்தை அடைந்துள்ளது.
CGT மற்றும் பிற
தொழிற்சங்கத் தலைமைகளும் இடைவிடாமல், வாராந்திர, ஏன் அன்றாடத் தொடர்பையும் கூட சார்க்கோசி
நிர்வாகத்துடன் கொண்டு, அவருடைய சமூக பிற்போக்குத்தன திட்டம் எப்படி சுமத்தப்படலாம் என்று உழைத்து
வருகின்றன.
"தீவிர இடது" அமைப்புக்கள், ஒலிவியே பெசன்ஸநோவின் தலைமையில் இருக்கும்
LCR (Ligue Communiste
Revolutionnaire) போன்றவை ஒவ்வொரு பூசலையும்
பாராட்டுகின்றன; ஆனால் கடந்த அக்டோபர்-நவம்பர் மாதங்களில்
CGT மற்றும் பிற
தொழிற்சங்கங்கள் இரயில் மற்றும் பாரிஸ் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டங்களை காட்டிக்
கொடுத்த நேரத்தில் செயல்பட்டது போல் இல்லாமல், தவிர்க்க முடியாத காட்டிக் கொடுப்பு பற்றி உரக்கப்
பேசுகின்றன. இது இன்னும் கூடுதலான தோல்விகளுக்குத்தான் தயாரிப்பை அளிக்கும். அதன் வலைத் தளத்தில்
"பொது நிலைப்பாட்டில்" (position commune)
கையெழுத்திட்டது CGT
இன் முதலாளிகள் மற்றும் அரசாங்கத்துடனான அடிப்படை உறவுகளுடன் எதையும் கொண்டிருக்கவில்லை என்றும்
தொழிற்சங்கம் "ஏமாற்றப்பட்டு விட்டதாகவும்" LCR
கூறியுள்ளது.
தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்காக
LCR மற்றும் லுத்
ஊவ்றியேர் இரண்டும் தவிர்க்க முடியாத பங்கை கொண்டுள்ளன; இவை தொழிற்சங்க அதிகாரத்துவங்களை போராட
வைக்கும் வகையில் அழுத்தம் கொடுக்க தொழிற்சங்கங்கள் சீர்திருத்தப்பட முடியும் என்ற போலித் தோற்றங்களை
ஊக்குவிக்கின்றன. 1980 களின் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் முடிவில்லா சங்கிலித் தொடர்போல்
காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்ட வேலைநிறுத்தங்கள் நடைபெற்று வருகின்றன; ஆனால் இத்தகைய குழுக்கள் எந்த
முடிவையும் இவற்றில் இருந்து எடுப்பதாகத் தெரியவில்லை.
"தீவிர இடது" தொழிற்சங்கம் --மற்றும் முதலாளித்துவத்தை சீர்திருத்த முடியும்
என்ற அதன் முன்னோக்கு-- இன்னமும் தொழிலாள வர்க்கத்தால் செயல்படுத்தப்படக் கூடிய ஒரு முன்னோக்கு என்று
கருதுகிறது. இவற்றை பொறுத்தவரையில் தொழிலாளர்களுக்காக அரசியல் இயக்கம் ஒன்றை சோசலிச
மாற்றீட்டுடன் கட்டமைத்தல் என்ற தேவை என்பது அதிகபட்சம் வெறும் வனப்புரை என்பதுதான்.
ஆனால் இதுதான் உண்மையில் மிக அவசரமாகத் தேவைப்படுவது ஆகும்.
ஓய்வூதியங்கள், வேலைகள், பணி நிலைமைகள், ஊதியங்கள் ஆகியவற்றை காப்பதற்கான போராட்டம் என்பது
ஐரோப்பா மற்றும் சர்வதேசம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும்;
இது முன்னோடியில்லாத வகையில் உலக முதலாளித்துவ முறையில் நெருக்கடி இருக்கும் நேரத்தில் நடத்தப்பட
வேண்டும்.
CGT, CFDT ஆகியவை
தொழிலாள வர்க்கத்தின் நலன்களை காத்தல் என்ற நிலைப்பாட்டில் முற்றிலும் அவற்றின் பயனற்ற தன்மையை நிரூபணம்
செய்துள்ளன.
தொழிலாளர்கள், முதலாளித்துவ சார்புடைய அமைப்புக்களில் இருந்து உடைத்துக்
கொண்டு போராட்டத்திற்கான புதிய கருவிகளை கட்டமைக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, வேலையிடங்களில்
மட்டும் என்ற அடிப்படையில் இல்லாமல் ஒரு சர்வதேச வர்க்கம், பொது அக்கறை ஒரு சில செல்வம் கொழித்தவர்களுடைய
நலனக்கு என்று இல்லாமல் சமூகத்தின் பெரும்பாலான மக்களுக்கு என்ற அடிப்படையில் பொருளாதார, அரசியல்
வாழ்வு மறு சீரமைக்கப்பட வேண்டும் என்ற நலனைக் கொண்டு அமைப்பை நிறுவ வேண்டும்.
தன்னுடைய பொது நலன்களுக்காக ஐக்கியப்பட்டு போராடுவதற்கு தொழிலாள
வர்க்கம், சமுதாயத்தின் முன்னுரிமைகளை அடிப்படையில் மறு ஒழுங்கமைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசியல்
இயக்கத்தில் அது கட்டாயம் பிணைந்து கொள்ள வேண்டும். சமூக சமத்துவத்திற்காக போராடுதல், வறுமையை
அகற்றுதல், உலக மக்களின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்துதல், இவற்றிற்கு மனிதகுலத்தின் உற்ப்த்தி ஆதாரங்கள்
முழு உணர்வுடன் பகுத்தறிவார்ந்த முறையில் பயன்படுத்துதல் என்பவை வழிகாட்டும் கொள்கைகளாக இருக்க
வேண்டும்.
உண்மையான சோசலிச, சர்வதேசிய முன்னோக்கை தளமாகக் கொண்ட சொந்த
அரசியல் கட்சி ஒன்று தொழிலாள வர்க்கத்திற்கு தேவைப்படுகிறது. இதன் பொருள் பிரான்சில் நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவை கட்டமைப்பது ஆகும்.
தொழிலாளர்களை ICFI
மற்றும் அதன் வலைத் தளமான WSWS
பிரதிநிதித்துவப்படுத்தும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு, வேலைத்திட்டங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து
படிக்குமாறும் தொழிலாள வர்க்கத்திற்கான புதிய புரட்சிகர தலைமையாக அவ்வமைப்பை கட்டியமைப்பதற்கும்
சேர்ந்து உழைக்குமாறும் அதற்கு உதவுமாறும் ஒரு முடிவெடுக்குமாறு வலியுறுத்துகிறோம். |