:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
McCain and Vietnam: Revising history to pave the way for
new wars
மக்கெயினும் வியட்நாமும் : புதிய போர்களுக்கு வழிவகுக்க வரலாற்றை திருத்தும் முறை
By Bill Van Auken
18 June 2008
Use this
version to print | Send this link by
email |
Email the
author
ஜனாதிபதி வேட்பாளராக குடியரசு கட்சிக்காக நிற்க இருக்கும் அரிசோனாவின்
ஜோன் மக்கெயின் அமெரிக்க செய்தி ஊடகத்தில் வாடிக்கையாக "வியட்நாம் போர் வீரர்" என்று குறிக்கப்படுகிறார்.
கடந்த மாதம் அநேகமாக ஒவ்வொரு பேச்சிலும் அவருடைய ஜனநாயகக் கட்சி போட்டியாளர் செனட்டர் பரக்
ஒபாமா, மக்கெயினின் கொள்களைகளை குறைகூறுவதற்கு முன்பு, குடியரசுக் கட்சி வேட்பாளர் "ஒரு உண்மையான
நாயகன்", "தன்னுடைய நாட்டிற்கு வீரத்தனமாக பணிபுரிந்தவர்", "இராணுவப் பணியை நாம் மதிக்கின்ற ஒரு அமெரிக்க
நாயகன்" என்ற அவரது நம்பிக்கையை அறிவிக்கிறார்.
மரபார்ந்த வகையிலான அரசியல் ஞானம் இத்தகைய கருத்தை பகட்டாரவாரம்
என்று சந்தேகத்திற்கில்லாமல் தள்ளும், ஒருபுறம், குடியரசுக் கட்சியினர் தங்கள் வேட்பாளருக்கு கொடுக்கும் மதிப்பு
என்று நினைத்தாலும், மறுபுறம் இராணுவ அனுபவம் இல்லாத ஒரு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் இதைக் கூறும்போது
அச்சொற்கள் ஆழ்ந்த, தீய அறிகுறியை காட்டக்கூடிய அரசியல் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
ஒரு "போர் வீரர்" என்று மக்கெயினைக் குறிப்பதற்கான புறநிலை ஆதாரம் என்ன?
இந்த விருதை அவருடைய இரண்டாம் மனைவி குடும்பத்து பெரும் செல்வத் திரட்டால் ஒரு வெற்றிகர அரசியல்
வாழ்க்கைக்குள் இணைத்துள்ளதுடன், இதற்கு ஊழல் நிறைந்த அரிசோனா நிலப் பெரும் வணிகர் சார்ல்ஸ் கீட்டிங்கால்
உதவப்பட்டது.
ஒரு நான்கு நட்சத்திர கடற்படை தளபதிகளின், பேரனும் மகனுமான மக்கெயின்
அக்டோபர் 1967ல் வட வியட்நாமில் விமானத்தில் இருந்து வீழ்த்தப்பட்டு அடுத்த ஐந்தரை ஆண்டுகள் வியட்நாமில்
போர்க் கைதியாக காலம் கழிக்கும் வரை, கிட்டத்தட்ட ஒரு தசாப்தகாலத்திற்கு அதிக பெருமை பெறாத
கடற்படை விமானியாக இருந்தார்.
அவருடைய விமானம் சரிந்து விழுவதற்கு முன்பு அவர் கிட்டத்தட்ட 20 மணி நேரம்
வியட்நாம் வானில் போர்ப்பணியில் ஈடுபட்டு, பெரும் வெடிப்புத் தன்மை நிறைந்த குண்டுகளை கீழேயிருக்கும் சிறு
நகரங்கள், மக்கள்மீது போட்டார்; இவை தென் சீனக் கடலில் இருந்து குறுகிய காலப் பயணங்களாக ஒரு
அமெரிக்க விமானத்தில் இருந்து அவரால் போடப்பட்டன.
"Rolling Thunder"
என்று அழைக்கப்பட்ட ஒரு நடவடிக்கையில் பங்கு பெறுவதற்கு அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்; இது ஜனாதிபதி
லிண்டன் ஜோன்சனால் வியட்நாம் மக்களுடைய உறுதியை உடைக்கும் ஒரு முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. இதன்
நோக்கம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் உள்கட்டுமானத்தை தகர்ப்பதற்காக தொடர்ந்து குண்டு வீசுதல்
மற்றும் அதன் குடிமக்கள் ஏராளமானவர்களை கொல்லுதல் அல்லது உறுப்புக்களை இழக்கச் செய்தல் என்பவற்றை
நோக்கமாக கொண்டிருந்தது.
போர் முடிவிற்கு வருவதற்குள் அமெரிக்க போர் விமானங்கள் எட்டு மில்லியன் டன்கள்
வெடிமருந்துகளை --இரண்டாம் உலகப் போர் முழுவதும் போடப்பட்ட குண்டுகளின் தன்மையை போல் நான்கு
மடங்கு-- நியூ மெக்சிகோ அளவிற்கு இருக்கும் ஒரு நாட்டின் மீது போட்டன. வரலாற்றிலேயே மிக ஆழ்ந்த,
தொடர்ச்சியான குண்டுத் தாக்குதலான இது வியட்நாமின் நகரங்களை பேரழிவிற்கு உட்படுத்தி அதன் தொழில்துறை,
போக்குவரத்து, தொடர்புகள் கட்டுமானத்தையும் அழித்துவிட்டது.
போர் முடிவதற்குள், கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் வியட்நாம் மக்கள்
கொல்லப்பட்டனர்; பலரும் அமெரிக்க விமானத் தாக்குதல்களின் விளைவாக உயிரிழந்தனர்.
வியட்நாம்: ஒரு வரலாறு (Vietnam:
A History) என்ற தன்னுடைய புத்தகத்தில் மூத்த
செய்தியாளரான Stanley Karnow
ஒரு வியட்நாம் விவசாயி ஒரு குண்டுவீச்சை பற்றிக் குறிப்பிட்டதை பற்றிக் கூறியுள்ளதாவது: "காலை கிட்டத்தட்ட
எட்டு மணிக்கு குண்டுவீச்சு தொடங்கி நான்கு மணி நேரம் நீடித்தது. வெடித் தகர்ப்புக்களை நாங்கள் முதலில்
கேட்டபோது, என்ன செய்யலாம் என்ற கருத்தில் எங்களில் சிலர் நிலவறைகளுக்குள் ஓடிப்புகுந்தோம்; ஆனால்
அனைவராலும் அப்படிச் செய்ய முடியவில்லை. சற்று சப்தம் இல்லாமல் இருக்கையில் நாங்கள் வெளியே வந்து
பார்த்தபோது காட்சி கொடூரமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் உடல்கள் சிதறுண்டு கிடந்தன --உடல்
உறுப்புக்கள் மரத்தில் இருந்து தொங்கிக் கொண்டிருந்தன; தரை முழுவதும் சிதறிக் கிடந்தன. மீண்டும் குண்டுவீச்சு
துவங்கியது; இம்முறை நாபாம் குண்டுகள்; கிராமங்கள் பற்றி எரிந்தன. நாபாம் என்னையும் தாக்கியது. ஒரு
நிலக்கரிக்கட்டி உடல் முழுவதும் எரிவது போல் உணர்ந்தேன். நினைவை இழந்தேன். என் நண்பர்கள் என்னை ஒரு
மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆறு மாத காலம் வரை என்னுடைய காயங்கள்
ஆறத்தொடங்கவில்லை. இந்தத் தாக்குதலில் 200 பேர் உயிரிழந்தனர்; அதில் என்னுடை தாயார், சகோதரரின்
மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் இறந்தனர், நிலவறை சரிந்த போது அவர்கள் உயிரோடு புதையுண்டனர்."
இங்கு விளக்கப்படுவது ஒன்றும் வீரத்தனமான ஒரு செயல் ஆல்ல; உலகில் மிகச் சக்தி
வாய்ந்த நாடு என்று கூறப்பட்டதால் நடத்தப்பட்ட ஒரு போர்க்குற்றம் ஆகும்; அதுவும் ஒரு வறிய,
வரலாற்றளவில் அடக்குமுறைக்கு உட்பட்ட நாட்டிற்கு எதிராக.
மக்கெயின் சுடப்பட்டு வீழ்ந்தபோது, இத்தகைய குண்டுவீச்சு ஒன்றைத்தான் ஹனோய்
பகுதியில் அதிக மக்கள் நிறைந்த பகுதியில் விசை ஆலை ஒன்றின்மீது நடத்திக் கொண்டிருந்தார்.
ஹனோயினுள் பாரசசூட்டின் மூலம் நுழைந்த பின் மக்கெயின் உயிருடன் விடப்பட்டது
வியட்நாம் மக்களுடைய மனிதாபிமானத்திற்கு சான்று ஆகும்; குறிப்பாக ஒரு வியட்நாம் தொழிலாளி இக்காயமுற்ற
விமானி இறங்கியிருந்த ஏரிக்குள் நீந்திச் சென்று அவர் முழ்குவதற்கு முன் இழுத்துக் கரை சேர்த்து சீற்றத்துடன்
இருந்த ஒரு கூட்டத்திடத்தில் இருந்தும் அவரைக் காப்பாற்றினார்.
தனது நாடு ஒருபோதும் தாக்கப்பட்டிராத ஒரு வெளிநாட்டு விமானி பினிக்ஸ் அல்லது
எந்த அமெரிக்க நகரத்தின்மீதும் குண்டுவீசி ஆண்கள், பெண்கள், குழந்தைகளை துண்டுதுண்டுகளாக்கி அவர்கள்
வீடுகளையும் தகர்த்தவரை, நம் மக்கள் எப்படி நடத்துவர் என்பதைக் கற்பனை செய்து பார்க்கவும்.
1997ம் ஆண்டு CBS
செய்தி நிகழ்வு "60 நிமிஷங்கள்" என்பதில் மக்கெயின் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார்: "நான் ஒரு
போர்க்குற்றவாளி; நிரபராதியான மகளிரையும் குழந்தைகளையும் குண்டுவீசிக் கொன்றேன்." இது ஒரு
நேர்மையான அறிக்கை; ஆனால் அது ஒன்றும் நம்பகத்தன்மை கொண்ட வாதமாக, அவரை ஜனாதிபதியாக்குவதற்கு
உகந்தது அல்ல.
அவர் ஒரு போர்க்குற்றவாளி என்பது அவருடைய தனிப்பட்ட நடவடிக்கைளில் மட்டும்
பிரதிபலிக்கவில்லை; அவை ஐயத்திற்கு இடமின்றி ஒரு My
La படுகொலைக்கு ஒப்ப பேரழிவை கொடுத்தது, சற்று
கூடுதலான தூரத்தில் இருந்து. மாறாக இது ஒரு புறநிலைப் போர்த்தன்மையின் பகுதியாக இருந்தது.
அரசாங்கத்தின் இராணுவம், உளவுத்துறைப் பிரிவுகளில் தெளிவாக பலர் இரு கட்சியை சேர்ந்தவர்களும் இருந்தனர்;
வியட்நாமில் ஒரு ஆக்கிரமிப்பு எதிர்ப்புரட்சி, குற்றம் சார்ந்த போருக்கான பொறுப்பை அவர்கள்
கொண்டிருந்தனர்.
அமெரிக்க ஆளும் நடைமுறை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வியட்நாம் போரைத்
திருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது; நாஜிக்களின் வீழ்ச்சிக்கு பின்னர் உலகில் நடந்த மிகப் பெரிய போர்க்
குற்றங்களை இழைத்ததில் தன்னுடைய பொறுப்பை மறைப்பதற்காக இது நடந்துள்ளது; அதே போல் மக்கள்
எதிர்ப்பு, உள்நாட்டில் சமூகப் போராட்டங்கள் என்ற சூழ்நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல்
நினைவை அகற்றவும் பாடுபடுகிறது.
"வியட்நாம் பற்றிய பேச்சு" நடத்துதல் என்பது முதல் புஷ் நிர்வாகக் காலத்தில்
இருந்தே ஆளும் உயரடுக்கிற்குள் குறிவைக்கப்பட்ட இலக்காக இருந்து வந்துள்ளது. முதல் பாரசீக வளைகுடாப்
போர், பின்னர் ஈராக்கிய படையெடுப்பு ஆகியவை எப்படியும் வியட்நாமின் கசப்பான மரபுவழி பெற்றதை,
மக்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பு போர்கள் பற்றி கொண்டுள்ள வெறுப்பை அகற்றிவிடும் என்று நம்பப்பட்டது.
1997 ல் மக்கெயின் ஒப்புக்
கொண்டபோதிலும்கூட, அவரை ஒரு போர் வீரர் என்று பெருமிதப்படுத்துவது இம்முயற்சியின் ஒரு பகுதிதான்.
இதற்கிடையில் வியட்நாம் போர் பற்றிய அவருடைய சொந்தக் கருத்துக்களே ஈராக் பற்றி அவருடைய அணுகுமுறையை
உருவாக்குவதில் முக்கிய பங்கை கொண்டு, ஈரானுக்கு எதிரான ஒரு புதிய போரை தொடக்கும் திறனிலும் பங்கைக்
கொண்டுள்ளது.
ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸில் வெளியிடப்பட்ட கட்டுரை, 1974ல்
மக்கெயின் தேசிய போர்க்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, அவர் வெளிவந்து ஓராண்டிற்கு பின் எழுதியதை
ஆதாரமாக கொண்டது, வியட்நாமில் கடுமையான, உருவாக்கும் காலத்தில் பெற்ற அனுபவத்தில் இருந்து கண்ட
படிப்பினைகளை பற்றி உட்பார்வையை அளிக்கிறது. வியட்நாமிற்கு படைப் பிரிவுகளை அமெரிக்கா அனுப்பியே
இருக்கக் கூடாது என்ற பல அதிகாரிகளும் கருதியிருக்கையில், மக்கெயினின் கட்டுரை "போருக்கு பொது
மக்களுடைய தொடர்ந்த ஆதரவைப் பெறுவதில் தோல்வி பற்றி குவிப்பு காட்டியது" என்று டைம்ஸ்
கூறியுள்ளது.
சக போர்க் கைதிகள், "போரின் சட்டபூர்வத்தன்மை பற்றி வினா எழுப்பியவர்கள்
கம்யூனிஸ்ட் பிரச்சாரத்திற்கு எளிதில் மயங்குபவர்கள்" என்று குறைகூறியதுடன் அமெரிக்காவில் இருக்கும் "பிளவு
சக்திகளையும்" குறைகூறினார்.
இதற்கு மாற்றாக அவர் இன்னும் ஆழ்ந்த முறையில் அமெரிக்க துருப்புக்களுக்கு
அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகள் பற்றி உணர்வு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்; அதே
நேரத்தில் "இத்தகைய தன்மையை கொண்டுள்ள திட்டம் மூளைச் சலவை எனவும் கூறப்பட்டுவிடலாம் என்பதையும்"
ஒப்புக் கொண்டார்; அரசாங்கம் அமெரிக்க மக்கள் இன்னும் கூடுதலான வகையில் "அதன் அடிப்படை வெளியுறவுக்
கொள்கையின் தன்மை பற்றி" மக்களிடம் கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் இருப்பவர்கள் உட்பட பல மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள்
"போரின் சட்டபூர்வ தன்மை" பற்றி வினா எழுப்பினர்; ஏனெனில் அது ஒரு ஆக்கிரமிப்புப் போர்க் குற்ற வகையை
சேர்ந்திருந்தது. மேலும் அமெரிக்க உழைக்கும் மக்கள் இப்போருக்கான செலவைக் தொடர்ந்து கொடுக்கத்
தயாராக இல்லை --இதுவோ 60,000 துருப்புக்கள் உயிரை குடித்ததுடன் இன்னும் நூறாயிரக்கணக்கானவர்களை
உடல் மற்றும் மன அளவில் சிதைந்தவர்களாக செய்துவிட்டது. இதற்கிடையில் உலகெங்கிலும் இருக்கும் மக்கள்
போரை ஒரு குற்றம் என்றும் அறநெறியற்ற இழிவான செயல் என்றும்தான் கருதினார்.
பல கடற்படை, விமானப் பிரிவு விமானிகள் போரைப் பற்றி மாறுபட்ட முடிவுகளை
எடுத்தனர். இவர்களுள் முக்கியமானவர்களில் ஒருவர் தளபதி கர்ட்டிஸ் லீமே ஆவார்; இவர் முன்னாள் விமானப்
படை தலைமைத் தளபதியாவார்; வியட்நாமியர்களுக்கு எதிரான போரில் எத்தடையும் இருக்கக் கூடாது என்று
"அமெரிக்கா அவர்களை குண்டுவீச்சு நடத்தி கற்காலத்திற்கு தள்ளிவிட வேண்டும்" என்றார். இச்சக்திகள் ரோலிங்
தண்டர் நடவடிக்கையின் தொடக்கத்தின்போது ஜோன்சன் நிர்வாகம் பற்றி மிகவும் கடுமையான குறையைக் கூறினர்;
அமெரிக்கா இடைவிடாமல் வியட்நாம் நகரங்கள்மீது குண்டுவீச்சுக்கள் நடத்த வேண்டும் என்றனர். 200
B52 விமானங்கள்
மூலம் வியட்நாம் நகரங்களை தாக்கியதற்காக அவர்கள் நிக்சனை பாராட்டினர்; இந்தக் கொடுமையோ
வியட்நாம் மக்களின் உறுதியை முறியடிக்க முடியவில்லை; நாட்டில் இருந்தே அமெரிக்க படைகள் திரும்பப்
பெறப்படுவதற்கு வழிவகுத்தது.
தேசிய போர்க் கல்லூரியில் தான் இருந்த காலம் பற்றி மக்கெயின் அவர் எழுதியுள்ள
கட்டுரை, "கோட்பாடுகள் நிலைநாட்டப்பட்டன" என்பது போர் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் சரிந்து
நின்ற காலத்தில் எழுதியதாக கூறினார். அவருடைய அடிப்படை முடிவுரை அமெரிக்க வேறு இராணுவ
மூலோபாயத்தை கடைப்பிடித்து, "பிளவு சக்திகளின்" செல்வாக்கிற்கு உட்படாமல் இருந்திருந்தால் போரில் வெற்றி
கண்டிருக்க முடியும் என்பதாகும். இதில் போர் எதிர்ப்பு இயக்கம், செய்தி ஊடகம், ஜனநாயகக் கட்சி
நிலைப்பாடு ஆகியவை அடங்கும்.
வியட்நாம் வரலாறு பற்றி மக்கெயின் மாற்றி எழுதுதல் என்பது பிரத்தியேகமானது
ஒன்றும் இல்லை. பல தசாப்தங்களாக இது ஒரு சிந்தனைப் போக்கு பிரச்சாரமாக இருந்து ராம்போ போன்ற
திரைப்படங்களின் புகழ்பெற்ற பண்பாட்டு பொருட்களின் வெளிப்பாட்டு விளைவுகளாக உள்ளன. இதன் இறுதி
நோக்கம் ஈராக்கில் நடைபெற்று வருவது போன்ற அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர்களுக்கு வழிவகுத்தல் ஆகும்;
100 ஆண்டுகளானாலும் அமெரிக்க படைகளை அங்கு நிறுத்துவதில் தனக்கு சிக்கல் ஒன்றும் இல்லை என்று மக்கெயின்
கூறியுள்ளார்; அதே போல் ஈரான் பற்றி கூறுகையில் அவர் "bomb,
bomb, bomb ...bomb, bomb Iran" என்று பழைய
கடற்கரை பையன்கள் மெட்டில் பாடுகிறார்.
இந்த விதத்தில் ஜனநாயகக் கட்சி கருத்தளவுப் பிரச்சாரத்திற்கு உதவி செய்தல்,
உடந்தையாக இருத்தல் என்பது மக்கெயினை "ஒரு பெரும் போர் வீரர்" என்று தாழ்ந்து பணிந்து பாராட்டுவதில்
மட்டும் தொடங்கவில்லை. பல தசாப்தங்களாக இக்கட்சி, வலது கொடுக்கும் குற்றச் சாட்டான இதன் போர்
எதிர்ப்புப் பிரிவுதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தோல்விக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டிலிருந்து அச்சத்தில்
நடுங்குகிறது.
இதற்கிடையில் குடியரசுக் கட்சியினர் எதிர்க் கட்சி வேட்பாளர்களின் போர்ச்
சான்றுகளை தாக்குவதில் மன உளைச்சல் எதையும் காட்டவில்லை. 2004ம் ஆண்டு அவர்கள்
"Swiftboat Veterans for Truth"
என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரி வியட்நாமில் இருந்து
திரும்பியதும் போரை எதிர்த்ததற்காக அவர் மீது தாக்குதல் நடத்தியதோடு, வெள்ளி நட்சத்திரம் பரிசு
பெற்றதற்காக கெர்ரி பங்கு பெற்ற போர் நடந்ததா என்ற வினாவையும் எழுப்பினர்.
தங்கள் பங்கிற்கு கெர்ரி மற்றும் பிற ஜனநாயகக் கட்சியினர் 30 ஆண்டுகளுக்கு முன்பு
நடந்த போருக்கு எதிரான தங்கள் வேட்பாளர் பிரச்சாரத்தை புதைப்பதற்கு இயன்றதை செய்தனர்; அவரை
"பெரும் போர் வீரர்", "நாட்டை எப்படிக் காப்பது என்று அறிந்தவர்" என்று பாராட்டிப் பேசினர்.
இந்த வனப்புரைப் பிரச்சாரத்தின் விளைவு --ஜனநாயகக் கட்சியினர் தொடர்ந்து
மக்கெயினின் இராணுவ சான்றை இன்று "பெருமைப்படுத்துதல்" வியட்நாம் போர் பற்றி நல்ல கருத்தை மீட்பது
என்பதைக் கொண்டுள்ளது.
இந்த முயற்சிக்கப்பட்ட மறுசீரமைப்பு என்பது கடந்தகாலம் பற்றிய புது உட்பார்வைகளின்
தளத்தில் ஏற்படவில்லை; மாறாக கொடுமை நிறைந்த நினைவுகள் மங்கிவிட்டன என்ற நம்பிக்கையிலும் ஒரு புதிய
தலைமுறை அப்போரின் கொடூர நிகழ்வுகள் பற்றி அதிகம் அறியாதவை என்ற நம்பிக்கையிலும் முன்வைக்கப்படுகின்றன.
ஈராக்கில் தங்கள் நலனை கெளரவமாக மீட்பது எப்படி என்பது பற்றி எவ்வித
தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தபோதிலும், இறுதியில், வரலாற்றுத் திருத்தம் என்று ஜனநாயகக் கட்சியினர்
மற்றும் குடியரசுக் கட்சியினர் செய்வது ஆளும் உயரடுக்கிற்குள் இருக்கும் ஒருமித்த உணர்வின் உந்துதலால் நடக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நிலைப்பாட்டை காப்பதற்கு புதிய இன்னும் கொடூரமான போர்க்குற்றங்கள்
செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் உடன்படுகின்றனர்.
இது ஒபாமாவிற்கும் உண்மையில் பொருந்தும் --அவர் ஆப்கானிஸ்தான் போர் "நாம்
கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போர்" என்று விளக்கியுள்ளார்; பாக்கிஸ்தானுடன் ஒருதலைப்பட்ச தாக்குதல்கள்
நடத்தவேண்டும், மக்கெயின் கூறுவதைவிட அதிக இராணுவப் பிரிவுகளை அனுப்ப வேண்டும் என்கிறார்.
இத்தைகைய சூழ்நிலையில், அமெரிக்க தொழிலாளர்கள் மீண்டும் உக்கிரமான சமூகப்
போராட்டங்களை உள்நாட்டிலும் வெளிநாட்டில் போரையும் எதிர்கொள்ளும்போது, வியட்நாமில் அமெரிக்க
ஏகாதிபத்திய தோல்வியின் உண்மையான வரலாறு பாதுகாக்கப்படுதல் என்பது இன்னமும் கூடுதலான முக்கியத்துவத்தை
பெறுகிறது. |