WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
India: Fuel price hikes deepen political crisis of
Congress Party-led government
இந்தியா: எரிபொருள் விலை உயர்வுகள் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின்
அரசியல் நெருக்கடியை அதிகப்படுத்துகிறது
By K. Ratnayake and Keith Jones
11 June 2008
Use this
version to print | Send this link by
email |
Email the
author
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் (UPA)
ஜூன் 4ம் தேதி பெட்ரோல், டீசல், உணவு எரிவாயு ஆகியவற்றின் விலைகளை 11ல் இருந்து 16 சதவீதம் வரை
உயர்த்தி அறிவித்தமை இந்தியா முழுவதும் சீற்றம் நிறைந்த எதிர்ப்புக்களை தோற்றுவித்ததுடன் அரசியல் நடைமுறை
பெரிதும் தன்னை உறுதியாகக் காட்டிக் கொள்ள வேண்டிய நிலையையும் ஏற்படுத்தியது.
பொருளாதாரத்தை கிழித்துச் செல்லுகையில், எரிபொருள் விலையுயர்வுகள் இன்னும்
கூடுதலான முறையில் உணவுப் பொருட்கள், பிற அடிப்படை பொருட்களின் விலைகளையும் உயர்த்தும்; அதுவும்
மொத்த பணவீக்க வீதம் ஏற்கனவே நான்கு ஆண்டுகள் இல்லாத உயர்வில் 8.24 சதவீதம் எனக் காட்டும் போது;
உயரும் உணவுப் பொருட்களின் விலைகள் மக்களின் பரந்த பிரிவினருக்கு போதுமான ஊட்ட உணவை கிடைக்கமுடியாமற்
செய்கிறது. 1.1 பில்லியன் இந்திய மக்கள் தொகையில் 70 சதவீதம் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைந்த
பணத்தில் (அமெரிக்க 50 சென்ட்டுகள்) வாழ்க்கை நடத்துகிறது.
இந்திய ஸ்ராலினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அல்லது சிபிஎம்- ன் தலைமையில் இயங்கும் இடது
முன்னணி, வாரம் முழுவதுமான எதிர்ப்புக்கள் பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தது; இதில் ஐக்கிய முற்போக்குக கூட்டணி
(UPA)
அரசாங்கம் விலையுயர்வை இரத்து செய்ய வேண்டும் என்பதற்காக பந்த் எனப்படும் பொது வேலைநிறுத்தம் ஜூன்
5ம் தேதி நடந்தது. இடது முன்னணி அரசாங்கம் அமைத்திருக்கும் மூன்று மாநிலங்களான மேற்கு வங்கம், கேரளா
மற்றும் திரிபுராவில் இந்த வேலைநிறுத்தம் வெற்றி அடைந்தது; மற்ற இடங்களில் ஓரளவு ஆதரவைத்தான் பெற்றிருந்தது.
காங்கிரஸ் தலைமையில் இருக்கும்
UPA
பாராளுமன்றத்தில் பதவியில் தப்பிப் பிழைப்பதற்கு இடது முன்னணியைத்தான் நம்பியுள்ளது. ஆனால்
CPM தலைவர்கள்,
அரசாங்கத்தை பற்றிய சீற்றம் நிறைந்த கண்டனங்கள் ஒருபுறம் இருந்தாலும், அரசாங்கத்தை வீழ்த்துவதாக இல்லை
என்று விரைவில் தெரிவித்துவிட்டனர்.
எரிபொருள் உயர்வை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு ஐந்து
நாட்கள் முன்பு CPM
இன் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரட்
rediff.com இடம் கூறினார்: "நாங்கள் இப்பொழுதுதான்
எங்கள் மத்திய குழு கூட்டத்தை முடித்துள்ளோம். விலை உயர்வை பற்றியும் திட்டமிடப்பட்டிருந்த பெட்ரோல் விலை
பற்றியும் நாங்கள் விவாதித்தோம்; ஆனால் அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டு வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள
வேண்டும் என்ற கோரிக்கை எங்கள் விவாதத்தில் இல்லை; கட்சியில் எவராலும் எழுப்பப்படவில்லை. அந்தப்
பிரச்சினை வெளிவரவே இல்லை."
இந்திய முதலாளித்துவ முறையின் மரபார்ந்த ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி மக்களுக்கு
ஆதரவுக் கொள்கைகளை தொடர அழுத்தம் கொடுக்கப்பட முடியும், குறைந்தபட்சம் புதிய தாராளக் கொள்கையில்
வேகத்தை குறைக்க முடியும் என்று முன்பு வலியுறுத்தியிருந்தாலும், காரட் கூறினார்: "UPA
க்கு நாங்கள் ஆதரவு கொடுப்பதற்கு முக்கிய காரணம் பாரதீய ஜனதா கட்சி (BJP)
அதிகாரத்திற்கு வெளியே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்." இந்து மேலாதிக்க பிஜேபி இந்திய பாராளுமன்றத்தில்
உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக உள்ளது.
இடது முன்னணியில் இரண்டாம் பெரிய முக்கிய கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்
பொதுச்செயலாளரான ஏ.பி.பரதனும் இதேபோல் ஐ.மு.கூ க்கு கொடுக்கும் ஆதரவு தொடரும் என்று
வலியுறுத்தினார். "ஆதரவை விலக்கிக் கொள்ளுவது விலைவாசிகள் குறைப்பிற்கு உதவாது என்று அவர் கூறினார்.
பிஜேபி, இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியை
அமைத்திருக்கும் சாதித் தளத்தை கொண்ட பகுஜன் சமாஜ் கட்சி (BSP),
மேற்கு வங்கத்தில் இருக்கும் வலது சாரி திருணமூல் காங்கிரஸ் ஆகியன உள்பட மற்ற பல கட்சிகளும் தங்கள்
எதிர்ப்பை வெளியிட்டன; சில இடங்களில் விலையுயர்விற்கு எதிராக பொது வேலைநிறுத்தங்கள் நடந்தன.
இந்தக் கட்சிகள் அனைத்தும் வரவிருக்கும் மாநில, தேசிய தேர்தல்களில் மக்களுடைய
அதிருப்தியை பயன்படுத்த முற்படுகின்றன. பிஜேபி க்கு கொடுத்த பதிலில் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது போல்,
பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் மார்ச் 1998ல் இருந்து மே 2004 வரை
ஆட்சியில் இருந்தபோது 17 முறை எண்ணெய் விலைகளை உயர்த்தியது. ஆனால் இதையொட்டி பிஜேபி ஒன்றும்
ஐ.மு.கூ விலையை உயர்த்தியதை "பொருளாதாரப் பேரழிவு" என்று கூறுவதை நிறுத்தவிடவில்லை; மக்களுடைய
வாழ்க்கைத்தர சரிவுகளுடன் நயமற்ற வகையில் தொடர்புபடுத்தும் வகையில் பிஜேபி வலதுசாரி வகுப்புவாதிகள்,
தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத்தின்மீது "மிருதுவாக" இருப்பதாகவும் இந்தியாவின் முஸ்லிம் சிறுபான்மையை
"திருப்திப்படுத்தும் வகையில்" செயல்படுவதாகவும் கூறிவருகிறது.
எப்படி பிஜேபி எரிபொருள் விலை பற்றி முடிவெடுக்கும் என்று காங்கிரஸ் கட்சியால்
அறைகூவலுக்குட்பட்ட பின், பிஜேபி தலைவர் மிஸ்டர் வெங்கையா நாயுடு இது ஒன்றும் பிஜேபி முடிவெடுக்க
வேண்டியது அல்ல அன்றார். "பயங்கரவாதம் மற்றும் பொடா (Prevention
of Terrorism Act) பற்றி நாங்கள் கூறிய கருத்துக்களை
அரசாங்கம் கேட்டதா?" என்று அவர் வினவினார்.
சில மாநில அரசாங்கங்கள் காங்கிரஸ் அல்லது அதன் ஐ.மு.கூ நட்புக்கட்சிகள்
உட்பட, மத்திய அரசாங்கம் விலை உயர்த்தியதற்கு விடையிறுக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை
எரிவாயு மீது தாங்கள் வசூலிக்கும் வரிகளைக் குறைத்துள்ளன. இந்தக் குறைப்புக்கள் அதிக பலனைக்
கொடுப்பதில்லை; ஏனெனில் சில்லறை விற்பனையில் இந்த வரிகளின் சதவிகிதம் இணைந்திருக்கும், அதையொட்டி
மத்திய அரசாங்கம் உத்தரவிட்ட விலை உயர்வுடன் தானாகவே அதிகமாகிவிடும்.
கடந்த வார விலை அதிகரிப்புக்கள் இந்தியாவில் மிகப் பெரிய எரிபொருள்
விலையுயர்வு ஆகும். ஒரு லிட்டருக்கு பெட்ரோல் விலையுயர்வு ஐந்து ரூபாய் (அமெரிக்க 12 சென்ட்டுகள்)
என்றும், டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் என்றும் சமையல் எரிவாயு 50 ரூபாய், அதவாது அமெரிக்க $ 1.20
என்றும் இருந்தன.
மக்களுடைய விடையிறுப்பைக் கண்டு அஞ்சியும், மற்றும் தொடர்ச்சியான தேர்தல்
தோல்விகளினால் வலுவிழந்தும் இருக்கும் ஐ.மு.கூ அரசாங்கம் பல வாரங்கள் எப்பொழுது, எவ்வளவு எரிபொருள்
விலையை உயர்த்துவது என்று ஆலோசித்துக் கொண்டிருந்தது.
ஜூன் 4ம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் பிரதம
மந்திரி மன்மோகன் சிங் உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் $130க்கும் மேல் உயர்ந்துள்ள மிக அதிக விலையினால்
அவருடைய அரசாங்கமும் உயர்த்தும் கட்டாயத்திற்கு உட்பட்டது என்று வாதிட்டார். இந்த உயர்வுகள் "தவிர்க்க
முடியாதவை" என்று விளக்கிய அவர், சர்வதேச பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப மக்கள் "மாற்றிக்
கொள்ளப் பழக" வேண்டும் என்றும் இந்த விலை உயர்வு மக்களிடையே "ஆதரவைப்" பெறாது என்பதையும் ஒப்புக்
கொண்டார்.
பெருவணிகம் நீண்ட நாட்களாக அரசாங்கம் இறக்குமதி செய்யும் எரிபொருள்மீது அது
கொடுக்கும் உதவித் தொகைகளை நிறுத்த வேண்டும் என்று கோரிவருகிறது. "இந்தியாவில் எண்ணெய்
பொருட்களுக்கான உதவித் தொகை ஊறிப்போயிருக்கிறது" என்று
Business Week
அறிவித்தது; அதே நேரத்தில் எண்ணெய் நிறுவனங்கள் "சாவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக
Business Standard
அறிவித்தது. மே 29 தலையங்கம் ஒன்றில், "எதிர்க்கட்சிகள் விஷயத்தைத்
தெருக்களுக்கு இட்டுச் செல்வது பற்றி அரசாங்கம் பயப்படக்கூடாது. இப்பொழுதும் அரசாங்கம் செயல்படவில்லை
என்றால் இன்னும் மோசமான விளைவுகள் இருக்கும்" என்று கூறியது.
அரசாங்கத்திற்கு உரிமையான அல்லது ஓரளவு சொந்தமான இந்தியன் ஆயில், பாரத்
பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவையும் உலகச் சந்தை விலைகளுக்கு ஏற்ப எரிபொருள்
விலைகளை அரசாங்கம் உயர்த்த மறுப்பது அவற்றின்மீது சமாளிக்க முடியாத இழப்புக்களை ஏற்படுத்துவதாகக்
கூக்குரலில் சேர்ந்து கொண்டன.
கிட்டத்தட்ட இந்தியாவின் எண்ணெயில் 70 சதவீதமும், எரிபொருளில் அதிக சதவீதமும்
இறக்குமதிகள் மூலம்தான் பெற்ப்படுகின்றன. இந்த நிதிய ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் இந்தியாவின் எண்ணெய்
இறக்குமதிச் செலவு $8 பில்லியன், அதாவது ஏப்ரல் 2007ல் இருந்து 46 சதவீதம் அதிகமாயிற்று.
Associated Chamebrs of Commerce and Industry
(Assocham) ல் ஜூன் 2 அன்று பேசிய மன்மோகன் சிங்
அரசாங்கம் பெருவணிகத்தின் செய்தியை அறிந்துள்ளது என்று அடையாளம் காட்டினார். "இதையும்விட இனி உதவித்
தொகைகளை நாங்கள் அதிகரிக்க முடியாது; அதே போல் உலக பொருள் விலையுயர்வு, எண்ணெய் விலை
அதிகரிப்பு இவற்றின் பாதிப்பில் இருந்து நுகர்வோரை முற்றிலும் காப்பதற்கு வழியும் இல்லை" என்றார்.
வாஷிங்டனும் எண்ணெய் உதவித் தொகைக் குறைப்புக்களை நாடியுள்ளது;
செயற்கையான குறைந்த விலைகள் தேவையை அதிகரிக்கும் என்றும் அதையொட்டி உலகச் சந்தை விலை உயரும்
என்றும் கூறியுள்ளது. டோக்கியோவில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஆசியாவில் நான்கு முக்கிய
எருபொருள் நுகரும் நாடுகளான ஜப்பான், தென் கொரியா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை "படிப்படியாக"
எண்ணெய் உதவித் தொகைகளைக் குறைப்பதாக ஒப்புக் கொண்டன.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொழில்துறையில் பாதிப்பு ஏற்படுத்தும் என்றாலும்,
பெருவணிகம் அரசாங்கத்தின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ளது. இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர்
கே.வி. காமத் விலை அதிகரிப்பு "தவிர்க்க முடியாதது" என்றார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் வர்க்கப் பூசல் இவற்றிற்கு இடையே அகப்பட்டு
தத்தளிக்கும் அரசாங்கம்
இலாபங்கள், வெளியார் முதலீடு, இறக்குமதியை அதிகம் நுகர்வோர் பெருகியுள்ளது
இந்தியாவை "ஒளிவீசச் செய்துள்ளது" என்று கூறிய பிஜேபி/ தேஜகூட்டணிக்கு எதிர்ப்பு பெருகியதால் நான்கு
ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ தானே வியக்கும் வண்ணம் அதிகாரத்தை பெற்றது.
பிஜேபி/ தேஜகூட்டணி (BJP/NDA)
அரசாங்கத்தின் புதிய தாராளக் கொள்கைகள் பற்றி, "சீர்திருத்தத்தை மனிதக் கண்ணோட்டத்தில்" நடத்துதல்
பற்றி மக்கள் கொண்டிருந்த அதிருப்திக்கு எதிராக நெறியான வகையில் காங்கிரஸ் முறையீடு செய்தது.
தேர்தல்களுக்கு முன்பும் பின்பும், காங்கிரசின் ஆதரவிற்கு ஸ்ராலினிஸ்ட்டுக்கள் வந்தனர். முதலில் அவர்கள் பிஜேபி ஐ
தேர்தல்களில் தோற்கடிப்பதுதான் முக்கிய பிரச்சினை என்றனர்; பின் ஒரு குறைந்தபட்சத் திட்டத்தை ஐ.மு.கூ
விற்காக வகுப்பதில் உதவினர்; இது காங்கிரசின் நோக்கமான முதலாளித்துவப் பொருளாதார மறுசீரமைப்பிற்கு
அழுத்தம் கொடுத்ததுடன் இந்தியாவின் உழைக்கும் மக்களுக்கு சில சலுகைகளையும் இனிப்பான சொற்களையும்
கொடுத்தது.
நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் குறைந்தபட்ச திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட
பெரும்பாலான சமூகச் செலவினங்கள், குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி பற்றியவை அடையப்படவில்லை.
இதற்கிடையில் கிராமப்புற இந்தியாவை சமூக நெருக்கடி கவ்விக் கொண்டுள்ளது; இதையொட்டி பல
ஆயிரக்கணக்கான விவசாயிகளின் தற்கொலை குறையாமல் தொடர்ந்து வருகிறது.
இதற்கு முன்னால் இருந்த பிஜேபி அரசாங்கத்தின் அதே அடிப்படைப் பொருளாதார
கொள்கைகளை செயல்படுத்திய நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசாங்கம் பிஜேபி இன்
வெளியுறவுக் கொள்கையையும் தொடர்கிறது, "உலகந்தழுவிய மூலோபாய பங்காளித்தனத்தை" அமெரிக்க
ஏகாதிபத்தியத்துடன் வளர்க்கப் பெரிதும் பாடுபடுகிறது.
ஆனால் சர்வதேச பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் ஆதரவு அரிப்புற்ற
நிலையில் UPA
அரசாங்கம் பெருகிய முறையில் கடந்த நான்கு ஆண்டுகள் செய்துவந்த அரசியல் கழைக்கூத்தாடி வித்தையை
தொடர்வது கடினமாயுள்ளது; அதாவது புதிய தாராள பெருவணிக நலன்களைத் தொடரும்போது சமூகச்
செலவினங்களை அதிகரித்தல், பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு இடது முன்னணியின் ஆதரவை நம்பியிருத்தல்,
அதே நேரத்தில் பெருகிய பொருளாதார பாதுகாப்பின்மை, சமூக சமத்துவமின்மை ஆகியவை பெருகியுள்ளதற்கு
மக்களின் எதிர்ப்பை தடுத்தல் ஆகிய இவற்றைச் செய்ய முடியவில்லை.
கடந்த பெப்ருவரி பட்ஜெட்டில் ஐ.மு.கூ அரசாங்கம் நிதிய அமைப்புக்களுக்கு மிக
வறிய விவசாயிகள் கொடுக்க வேண்டிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற திட்டத்தை அறிவித்தது; அது 2009
முதல் பகுதியில் வரவிருக்கும் தேசிய தேர்தல்களில் அரசாங்கத்தின் வாய்ப்பை அதிகரிக்கும் என்று நம்பப்பட்டது.
இது அதிகபட்சம் ஒரு தற்காலிக நடவடிக்கைதான். மூச்சுத்திணற அடிக்கும் கடனில் பெரும்பகுதி விவசாயிகளால்
தனியார் கடன் கொடுப்பவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டியவை என்ற அடிப்படையை அது புறக்கணித்தது.
வங்கிகளும் கூட்டுறவு நிறுவனங்களும் இந்த கடன் நிவராண திட்டத்தால் பயன் அடைகின்றன; வசூலிக்க முடியாத
கடன்களுக்கு பதிலாக அரசாங்க பணம் கிடைப்பதில் அவற்றிற்கு ஆதாயம்தான். ஆயினும் கடன் நிவாரணத் திட்டம்
இந்தியாவின் பெருவணிக பிரிவிற்கு எரிச்சலைத்தான் கொடுத்தது; அது ஐ.மு.கூ அரசாங்கம் மக்கள் அதிருப்தி,
இடது முன்னணியின் வேண்டுகோள்கள் இவற்றைப் பற்றி அதிகம் அக்கறை காட்டுவதாக நம்புகிறது.
இன்று வரை இருக்கும் சான்றுகளை பார்த்தால்
UPA அரசாங்கம்
மற்றும் காங்கிரஸ் கொடுத்துள்ள கடன் நிவாரண திட்டம் தேர்தலுக்கு அதிக பயன்களை கொடுக்கும் போல்
தோன்றவில்லை. கடந்த மாதம் கர்னாடகாவில் நடைபெற்ற மாநிலச் சட்டசபை தேர்தலில் பிஜேபி க்கு
இரண்டாம் இடத்தை காங்கிரஸ் பெற்றது; இது தொடர்ச்சியான மாநிலத் தேர்தல்கள் பின்னடைவில் சமீத்தியது
ஆகும்.
பெருகிவரும் பணவீக்கமும் அரசாங்கத்தை ஒரு பொருளாதார அரசியல் முன்னேற்றமற்ற
பாதையில் இருத்தியுள்ளது.
உயரும் விலைகள் தேர்தல் தோல்வி என்பதை அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாகக்
கொடுத்துள்ளன; அதுவும் தீவிர சமூக அமைதியின்மையும் அந்த விதத்தில்தான் உள்ளன. உலக வங்கிக் கூட்டத்தில்
ஏப்ரல் மாதம் பேசிய நிதி மந்திரி பி.சிதம்பரம், "விலை உயர்வைப் பற்றி உலகந்தழுவிய ஒருமித்த கருத்தை
விரைவில் பெறாவிட்டால், பல நாடுகளில் உணவுப் பொருள் உயர்வினால் தூண்டுதல் பெறும் சமூக அமைதியின்மை
உலகத்தை காட்டுத்தீக்கு இரையாக்கும்; தொத்துவியாதி போல் பரவி வளர்ச்சியுற்ற, அடையும் எந்த நாட்டையும்
விட்டுவிடாது" என்றார்.
ஆனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் தீவிர அரசாங்க நடவடிக்கை இந்தியாவின்
பொருளாதார வளர்ச்சியையும் நெரிக்கும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது; இந்த விரிவு இந்தியாவின் உயரடுக்கு மீது
பெரும் செல்வக் கொழிப்பை அளித்துள்ளது; ஆனால் 8 சதவீதத்திற்கும் மேலான வளர்ச்சி வீதம் வேலயற்ற
நிலையைத் தடுத்து நிறுத்துவதில் வெற்றி பெற முடியவில்லை.
பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரான சி.
ரங்கராஜன் கடந்த வாரம் எண்ணெய், உணவுப் பொருள் மற்றும் பொதுப் பண்டங்கள் விலையுயர்வை ஒட்டி
அரசாங்கம் அதன் இந்த ஆண்டு கருதும் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்திற்கு மேல் இராது என்று
கொண்டிருப்பதாகக் கூறினார். செவ்வாயன்று உலக வங்கி ஒரு அறிக்கையை வெளியிட்டது; அதில் "இந்தியாவின்
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2006ன் 9.7 சதவீதத்தில் இருந்து இன்னும் வலிமையான 8.7 என்றுதான்
2007ல் ஆயிற்று; ஆனால் 2008ல் இது 7 எனக் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." எனக்
கூறப்பட்டுள்ளது.
அரசாங்கம் பொருளாதாரக் கொந்தளிப்பை எதிர்கொள்ளும் வகையில் பெருகிவரும்
நிதியப் பற்றாக்குறையைக் குறைக்க வேணைடும், அல்லது இடது முன்னணி மற்ற ஆதரவுக் கட்சிகளை மீறி நடக்க
வேண்டும் என்று பெரு வணிகம் வற்புறுத்தி வருகிறது. பெருநிறுவன இந்தியா அரசாங்கம் இந்திய-அமெரிக்க சிவிலிய
அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்தவேண்டும் என்றும் ஆர்வம் கொண்டுள்ளது; அது இந்தியாவிற்கு வாஷிங்டனுடன் ஒரு
சலுகை பெற்ற உறவைக் கொடுக்கும் என்று நம்புகிறது. இடது முன்னணி இந்த ஒப்பந்தத்தை நிறுத்திவிடுவதாக
உறுதிமொழி அளித்துள்ளது; சரியான முறையில் இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சியான இந்தியாவை அதன்
கொள்ள உலக விழைவுகளுக்கு முக்கிய கூறுபாடாகத்தான் அது மாற்றும் என்று வாதிட்டுள்ளது.
எரிபொருள் விலையுயர்வை வரவேற்ற நிலையில், இந்திய பெருநிறுவன உயரடுக்கின்
அதிகம் குரல் கொடுக்கும் பிரிவான புதிய இந்தியன் எக்ஸ்ப்ரஸ், இன்னும் ஆக்கிரோஷமான நடவடிக்கைகள்
அரசாங்க செலவுகளைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. "இப்பத்திகளில் பல முறை நாம்
குறிப்பிட்டுள்ளபடி அரசாங்கச் செலவினம் என்பது அரச வருமானத்திற்கு அப்பாற்பட்டதாக உள்ளது; எந்த நிதி
அமைச்சரும் உண்மையான சித்திரத்தைக் கொடுக்க இயலாது...வரிகளை, வருமானங்களை உயர்ந்த அளவிற்கு உயர்த்தி
காலம் கடத்துவது தீர்வு ஆகாது, நடக்கவும் இயலாது... மாறுதல்களை எப்படிக் கொண்டுவந்து வாக்களர்களை
ஏற்க வைப்பது என்பது அரசியல் சவால் ஆகும்; பலரும் இதை ஒப்புக் கொள்ளத்தயாராக இல்லை." என்று
எழுதியுள்ளது.
ஐ.மு.கூ உடைய ஆட்சி நான்காம் ஆண்டு நிறைவை ஒட்டி எழுதிய தலைப்புச் செய்தியில்
ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறியது: "ஐ.மு.கூவின் ஆண்டுநிறைவு அச்சங்கள்". அதில், "உலகம் முழுவதும் படர்ந்துள்ள
நெருக்கடி நிலைமை ஐ.மு.கூ அரசாங்கத்தின் தற்பொழுதைய பொருளாதார இடர்பாடுகளுக்கு ஓரளவு பொறுப்பு
ஆகின்றன. ஆனால் தன்னுடைய அரசியல் தப்புவதற்கு இடதை முற்றிலும் இது நம்பியிருப்பது நேர்த்தியான வளர்ச்சி
ஆக்கத்தைத் தொடர்வதற்குத் தேவையான சீர்திருத்தங்களை செய்வதற்கு இதை சக்தியிழக்க செய்துவிட்டது. புதிய
தாராள சீர்திருத்தம் பற்றி இடதின் எதிர்ப்பு அரசாங்கத்தை பொதுத்துறையில் இலாபமாக உள்ளதை தனியார்மயமாக்கும்
உந்துதலை நிறுத்திவிட்டது; காப்பீடு, தனியார் துறையில் வெளியார் முதலீடுகளின் வரம்பை மற்றும் ஓய்வுதிய
தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்கள் ஆகியவற்றை நிறுத்திவிட்டது. எனவே இயல்பாக எழும் பெரிய வினா, இந்தியாவின்
வளர்ச்சிக் கதை என்பது எத்தனை காலம்தான் நீடிக்க இயலும்?"
தொழிலாளர் சீர்திருத்தம் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுவது
தொழிலாளர்களை அகற்றுவது, ஆலைகள் மூடல் மற்றும் நடுத்த வர்க்கம் தடைகளைத் தூக்கி எறிதல், மற்றும்
பெரிய ஆலைகளில் நிலவும் ஒப்பந்த முறையில் அமர்த்துதல் போன்றவற்றைக் குறிப்பிடுகிறது.
ஐ.மு.கூ தன்னுடைய பதவிக்காலத்தில் ஐந்தாம் ஆண்டை தொடங்குகையில் அது
பெருகிய முறையில் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஆழ்ந்து வரும் வர்க்கப் பூசல்கள் இவற்றிற்கு இடையே
அகப்பட்டுக் கொண்டு தத்தளிக்கும் அரசாங்கமாக உள்ளது.
எல்லாவற்றையும் விட இது இடது முன்னணியைத்தான் இந்திய தொழிலாள வர்க்கம்
உழைப்பாளிகள் ஆகியோரின் எதிர்ப்பை எதிர்ப்புக்கள், பாராளுமன்ற அரசியல் ஆகியவற்றில் திசைதிருப்பிவிடுவதற்கு
நம்பியுள்ளது. |