சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: LCR signals willingness to ally with Socialist Party

பிரான்ஸ்: எல் சி ஆர் சோசலிஸ்ட் கட்சியுடன் கூட்டுவைக்க விருப்பம் என்று சமிக்கை

By Alex Lantier
10 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

மே 31ம் தேதி அன்று பிரெஞ்சு செய்தி இதழான Marianne 2007 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த செகோலென் ரோயலுக்கும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக (LCR) செய்தித் தொடர்பாளரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான ஒலிவியே பெசன்ஸ்நோவிற்கும் இடைய நடந்த விவாதம் ஒன்றை பிரசுரித்தது. பேட்டியில் தொடர்ந்த வினாக்களுக்கு விடையிறுக்கையில் பெசன்ஸநோ தான் ஒரு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தில் பங்கு பெறுவது பற்றி பரிசீலிக்க இருப்பதாக தெரிவித்தார்.

இந்த விவாதம் மக்களிடையே பெருகிவரும் அரசியல் நடைமுறை பற்றிய அதிருப்தி மற்றும் கன்சர்வேட்டிவ் கோலிச ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்கு எதிரான சீற்றத்திலிருந்து சோசலிஸ்ட் கட்சி பலன் அடைய போராடுகின்ற நேரத்தில் வந்துள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் வாங்கு திறனை அதிகப்படுத்துவதாக சார்க்கோசி கூறிய தேர்தல் உறுதிமொழிகள் எரிபொருள், உணவுப்பொருள் ஆகியவற்றின் மிக உயர்ந்த விலைகளினால் சிதறுண்டு போயின; இதையொட்டி மீனவர்கள், லாரி ஒட்டுநர்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து வேலை நிறுத்த அலையில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் கோலிச ஜனாதிபதி சிக்கன கொள்கைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்; அவை வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை பொருளாதாரத்தில் பல பிரிவுகளில் தூண்டியுள்ளன; அவற்றில் கப்பல் போக்குவரத்து, தரைப்போக்குவரத்து மற்றும் பொதுப் பணிகள் ஆகியவை அடங்கும். அவரை ஏற்றுக்கொள்ளும் வீதம் என்பது 35 சதவீதமாக குறைந்து விட்டதாக சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன.

சார்க்கோசி இழிவுபடுத்தப்படுதல் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எத்தகைய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை தான் நன்கு அறிந்துள்ளதாக ரோயால் Marianne இடம் தெளிவாக்கினார். அவர் கூறினார்: "நிக்கோலோவின் உரைகளில் இருந்த ஆற்றலினால் மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டனர். அவர் கூறியிருந்தார்; நீங்கள் எனக்கு வாக்களியுங்கள், நான் எல்லாவற்றையும் சரி செய்வேன். நான் மிகப் பெரிய மனிதன்! என்றார். இன்று இந்த உறுதிமொழிகள் பற்றி பெரும் ஏமாற்றமும் திகைப்பும், நாம் கவனமாக இல்லாவிடின், அனைத்து அரசியல் வடிவமைப்புக்களையும் இழிவு படுத்திவிடும்."

அவரும் பெசன்ஸநோவும் தாங்கள் ஒன்றாக உழைக்கத் தயாராக இருப்பதை வலியுறுத்திய வகையில் பேசினர். மரியான் பெசன்ஸநோவை, ரோயலுடனான விவாதம் ஒரு "மோதல்" கூறுபாட்டைக் கொண்டிருந்ததாக உணர்ந்தாரா என்று கேட்கப்பட்டதற்கு, பெசன்ஸநோ விடையிறுத்தார்: "இல்லை, இல்லை. நான் விவாதம் செய்யும் எண்ணத்துடன் இங்கு வந்துள்ளேன்." ரோயால் உடனடியாக சேர்த்துக் கொண்டார்: "படைப்பாற்றல் கொண்ட மோதல் போன்ற ஒரு விஷயம்."

தான் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதை பெசன்ஸநோ தெளிவாக்கும் வகையில் கூறியது: "நாம் உறுதியுடன் கூறுவோம். நமது உடன்பாடின்மைகளுடன் எங்கே நாம் நிற்கிறோம், எப்படி ஆரம்பிப்பது, எப்படி பெரும்பான்மையை, ஒரு மிகப் பெரிய பெரும்பான்மையை உருவாக்குவது, ஒன்றுடன் மற்றொன்றை மோதவிடும் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு விடையிறுப்பதற்கு திடமான முன்னணியை அமைப்பது? [..] நாம் பல கருத்துக்களை ஆராயலாம்; ஆனால் முதலில் சார்க்கோசியின் 55 தடையற்ற சீர்திருத்தங்களை எதிர்க்க வேண்டும். அதற்கு நாம் ஒன்றாக இணைந்து அணிதிரளலில் ஐக்கியப்பட வேண்டும்.

ரோயால் தன்னுடைய கொள்கைகள், எப்படி பெசன்ஸநோவின் வனப்புரையுடன் இயைந்துள்ளன என்பதை நிரூபிக்க முற்பட்டார். அராஜகவாதம் மற்றும் அரச வருமானங்கள் உள்ளூர் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதை பெசன்ஸநோ புகழ்ந்ததற்கு விடையிறுக்கையில் ரோயால் அபத்தமான முறையில், Pitou-Charentes பகுதியின் தலைவர் என்ற முறையில் தான் கொண்டுவந்த முன்முயற்சியான, உயர்நிலைப்பள்ளிகளுக்கு முனிசிபல் செலவுகள் மீதாக பகுதி அளவுக் கட்டுப்பாட்டை கொடுத்தது தன்னை ஒரு "புரட்சியாளர்" எனபதை நிரூபித்ததாக கூறினார். ஆனால் "நிக்கோலோ சார்க்கோசிக்கு மாற்றுத் தீர்வு என்பதில் உடன்பாடு இல்லாமல் எதிர்ப்பை நெறியான வகையில் கட்டமைப்பது என்பது சாத்தியம்" என்று ரோயால் மேலும் சேர்த்தார்.

பேட்டியின் முடிவில், மரியான் பெசன்ஸநோவை "ஒரு இடது வெற்றி 2012ல் உறுதி பெறுவதற்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், சோசலிஸ்ட் கட்சிக்காக வாக்கை கேட்குமா அல்லது வெற்றி பெற்றபின் ஒரு சோசலிஸ்ட் கட்சியின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கக்கூட செய்யுமா என உறுதிப்படுத்த முடியுமா?" என்று வினவப்பட்டார்.

பெசன்ஸநோ விடையிறுத்தார்: "நான், நான் ஒன்றும் 2012 ஐப் பற்றியே கவலைப்படவில்லை. இடதின் மீது சோசலிச கட்சியின் மேலாதிக்கம் என்பதில் நாங்கள் போட்டியிடுகிறோம்; எங்கள் சுதந்திரத்திற்கு அழைப்பு விடுகிறோம் [...] ஆயினும், சந்தைப் பொருளாதாரத்தை வினாவிற்கு உட்படுத்தும் முதலாளித்துவ எதிர்ப்பு இடது அரசாங்கத்திற்குள் செல்கையில், நான் அதற்கு எதிரானவள் அல்ல."

ஒரு ஐக்கியப்பட்ட இடதின் வருங்காலம் பற்றிக் கருத்துக் கூறுகையில் ரோயால் தெரிவித்ததாவது: "மிகவும் ஈர்ப்புத் தன்மை உடைய சோசலிஸ்ட் கட்சி (PS) எங்களுக்கு வேண்டும். மிகக் குறைவான பின்பற்றுபவர்கள் இருக்கும் கட்சி பற்றி எனக்குத் திருப்தி இல்லை. ஒரு புதிய உலகை கட்டமைக்க பாடுபட அனைவரும் வரவேற்கப்படுகின்றனர். ஆனால் அதிகாரத்தின் பொறுப்புக்கள் அனைத்தையும் ஏற்பதைவிட, சிலர் போராட்டங்களுடன் நின்றுவிட நினைத்தால் [சார்க்கோசியின் சமூக வெட்டுக்களுக்கு எதிராக], அது அவர்கள் விருப்பம், அதை நான் மதிக்கிறேன்."

பெசன்ஸநோ விடையிறுத்தார்: "கவலைப்பட வேண்டாம். நாங்கள் வெறும் போராட்டங்களுடன் நிறுத்திக் கொள்ள மாட்டோம். [...] நீங்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால், உங்கள் அரசாங்கம் அதன் இடதிற்கு அரசியல் எதிர்ப்பைக் கொண்டிருக்கும்; உங்கள் திட்டத்தில் இருக்கும் நல்லதிற்கு இடது ஆதரவு கொடுத்திருக்கும்; எஞ்சியதைப் பொறுத்தவரை, பல முறையும் பின்புறம் தாக்குவதன் மூலம் தன்னுடைய முன்னேற்றத்திற்காக அதனைக் கையாண்டு கொள்ளும்

பெசன்ஸ்நோவின் கருத்துக்கள், LCR தலைமை வலியுறுத்தும் அழுத்தம் கொடுக்கும் அரசியலின் வர்க்க சமரச தன்மை பற்றி தெளிவாக்குகின்றன. அவை ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு" கோரிக்கையின் தன்மை பற்றியும் கூறுகின்றன; அதில் ட்ரொட்ஸ்கி அல்லது புரட்சிகர சோசலிசம் பற்றி குறிப்பு ஏதும் கொடுக்காதது அனைத்து அரசியல் சக்திகளுடனும் சமரசத்திற்கு இடமளிக்கிறது.

LCR தற்பொழுது ஒரு புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி என்பதற்குள் (New Anti-Capitalist Party- [NPA]) தன்னை கரைத்துக் கொள்ள தயார் செய்துவருகிறது; அதன் நோக்கம் சோசலிஸ்ட் கட்சிக்கு இடதில் இருக்கும் அதிருப்தி அடைந்துள்ள சக்திகளை அனைத்தையும், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் சில பிரிவுகளுள் உள்ள "தீவிர இடது", பல்கலைக் கழகங்களுள் இருக்கும் பிரிவுகள் அனைத்தையும் ஒரு பரந்த அரசியலில் பிரெஞ்சு முதலாளித்துவ அரசியலில் தலையீடு செய்ய முற்படும் கட்சியை உருவாக்குதல் ஆகும். LCR ல் இருக்கும் NPA நிறுவனர்களின் முன்னோக்கு, புரட்சிகர மார்க்சிசத்திற்கு முற்றிலும் மாறாக முதலாளித்துவ அரசியல் வாதிகள் மீது அழுத்தம் கொடுக்கும் ஒரு கட்சியை கொண்டுவருதலும், முதலாளித்துவ சமூகத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் ஏற்கும் விதத்தில் ஆட்சி நடத்துதலும் ஆகும்..

குறிப்பிடத்தக்க வலையில், LCR இன் பிரச்சாரம், NPA க்காக இருப்பதில், சே குவாராவை இயக்கத்தின் ஒரு அடையாளமாக ஏற்றலுடன் இணைந்து, LCR ன் கடந்தகால ட்ரொட்ஸ்கிச போலித்தனங்களையும் அகற்றிவிடுவதாக உள்ளது. கடந்த மார்ச் மாதம், பெசன்ஸநோ தான் ஒரு போதும் ஒரு ட்ரொட்ஸ்கிச வாதியாக இருந்ததில்லை என்று அறிவித்தார்.

LCR இன் பிரச்சாரம் பெருநிறுவன செய்தி ஊடகத்தில் இருந்து கணிசமான விடையிறுப்பை கொண்டுள்ளது; அது பெசன்ஸநோவிற்கு மிக அதிகமான முறையில் பொதுத் தோற்றத்தையும் நேரத்தையும் கொடுத்துள்ளது. இதன் விளைவாக முதலாளித்துவ கருத்துக் கணிப்பில் அவருக்கான ஆதரவு மிகப் பெரிதாகியுள்ளது. மே 2008 ல் நடத்தப்பட்ட Ifop கருத்துக் கணிப்பு அவரை இடது அரசியல் வாதிகளில் மூன்றாம் இடத்தில், ரோயலுக்கும் முன்னால் நிறுத்தியுள்ளது. அரசியலில் நம்பகத்தன்மையை மீண்டும் நிறுவப் பெரிதும் பாடுபடும் PS க்கு, LCR உடன் ஒரு கூட்டு என்பது இடது வாக்காளர்களிடம் அதன் நம்பகத்தன்மையை மீட்பது போல் ஆகும்.

பிரெஞ்சு முதலாளித்துவத்தின் விருப்பத்திற்குரிய "இடது" ஆளும் கட்சி என்றாலும் கூட, PS 2002 ஜனாதிபதி தேர்தல் முதல் சுற்றில் பெற்ற அவமானகரமான தோல்வியில் இருந்து உண்மையில் மீளவே இல்லை; அத்தேர்தல் முதலாளித்துவ வர்க்க வலதிற்கு தான் மாற்றீடாக வருவோம் எனப்பட்ட பிரமைகளுக்கு பெரிய அடியைக் கொடுத்தது.

பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பனுடைய சோசலிஸ்ட் கட்சி தலைமையில் இருந்த அரசாங்கம் நடத்திய வலதுசாரி சமூகக் கொள்கை, கணக்கிலடங்கா தனியார் மயம் ஆகியவற்றிற்கு எதிராக இருந்த நிலையில் 2002ம் ஆண்டு இடது வாக்குகள், சோசலிஸ்ட் கட்சி, ட்ரொட்ஸ்கிச "தீவிர இடது" எனப்பட்டது, Jean Pierre Chevenement இன் இப்பொழுது செயல்படாத Civil Block, பசுமை வாதிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே பிரிந்தன. வலதுசாரி ஜனாதிபதியாக இருந்த ஜாக் சிராக் மற்றும் புதிய பாசிச வேட்பாளர் Jean Marie Le Pen இருவரும் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரான ஜோஸ்பனை தோற்கடித்தனர்; ஜோஸ்பன் தேர்தலில் இரண்டாம் சுற்றுக்குக்கூட செல்ல முடியவில்லை.

அந்த நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் ஒரு பகிரங்க கடிதத்தை LCR க்கும் ட்ரொட்ஸ்கிசவாதிகள் எனக்கூறிக்கொள்ளும் மற்ற கட்சிகளுக்கும் --Lutte Ouvriere, Parti des Travailleurs-- கடிதம் எழுதி தொழிலாள வர்க்கம் ஜனாதிபதி தேர்தல்களில் இரண்டாம் சுற்றை புறக்கணிக்க வேண்டும் என்று கோரியது; தேர்தலோ வாக்காளர்களுக்கு இரு வலதுசாரி முதலாளித்துவ வேட்பாளர்களான சிராக், லூபென் ஆகியோருக்கு மட்டுமே வாக்குப் போடும் வாய்ப்பை கொடுத்தது.

இந்த கொள்கை நெறி வழிவகையை LCR நிராகரித்து, பிரெஞ்சு அமைப்பு முறையின் நிலைப்பாட்டை ஏற்று சிராக்கிற்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்தது. இந்த நடவடிக்கை --மற்றும் 2003, 2006, 2007 ஆண்டுகளில் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நடந்த பெரும் மக்கள் வேலைநிறுத்தங்களை காட்டிக் கொடுத்த தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு LCR கொடுத்த அரசியல் மறைப்பு ஆகியவை-- PS ன் ஒரு பிரிவிற்கு LCR ஒருவேளை தங்களுக்கு பயன்படக்கூடும் என்ற கருத்தை கொடுத்துள்ளது.

கடந்த ஆண்டு சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின்னர் PS தீவிரமான முறையில் LCR தலைமையின் ஆதரவை நாட முற்பட்டு, PS, LCR ஆகியவற்றிற்கு இடையே இருந்த தொடர்புகள் அதிகரித்த வகையில் வெளிவந்துள்ளன. கடந்த டிசம்பரில் PS ல் இருக்கும், முன்னாள் உயர்மட்ட LCR உறுப்பினர் Henri Weber, LCR தலைவர் Alan Krivine ஐ சந்தித்தார்; பெசன்ஸநோவை பல முக்கிய PS உயர்மட்டத் தலைவர்களும் பகிரங்கமாகப் புகழ்ந்தனர்.

அப்பொழுது Le Monde, "உடன்பாடுகள் பற்றிய வினா எழுந்துள்ளது" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் PS அதற்கு இடதில் இருந்து ஒரு கட்சியின் ஆதரவு இல்லாமல் பதவிக்கு வருவது இயலாது என்று சுட்டிக் காட்டியது.

1971 Epinay Congress பற்றிக் குறிப்பிட்டு --அதில் PS அமைக்கப்பட்டு அது PCF உடன் உடன்பாட்டில் நம்பிக்கை கொள்ளும் என்ற கருத்தின் அடிப்படையில் ஏற்பட்டது --Le Monde எழுதியது: "தேர்தல் என்று பேசினால் PCF க்கு இடம் இல்லை (1981ல் Georges Marchais க்கு 15.3 சதவிகிதம் என்பதில் இருந்து 2007ல் Buffet க்கு 1.3 சதவிகிதம் என்று வந்துவிட்டது).. பசுமை வாதிகளுக்கும் அதே கதிதான்...இடது பதவிக்கு மீண்டும் வருதல் என்பது 'எப்பிநோய் வட்டத்துடன்' (Epinay cycle) உடன்பாடு கொண்டாலும் அரிது."

LCR உடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அரசாங்க அதிகாரத்தை மீண்டும் பெறுதல் என்பது PS வட்டங்களில் சற்று சர்ச்சைக்குரியதாகிவிட்டது. ரோயாலின் முக்கிய போட்டியாளராக PS ல் இருக்கும் பாரிஸ் மேயர் Bertrand Delanoë இன் ஆதரவாளர்கள் அவர் தீவிரப்போக்கினராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் முயற்சி பற்றி அவரை "Che'golène Royal" என்று கேலியாக அழைக்கின்னறர். PS இன் இப்பிரிவுகள் வலதுசாரி முதலாளித்துவ அரசியல்வாதி Francois Bayrou மற்றும் அவருடைய ஜனநாயக இயக்கம் (MoDem) உடன் ஒரு கூட்டை விரும்புகின்றனர்.

ஆயினும்கூட, PS ல் சில கூறுபாடுகள் இக்கருத்தையும் பரிசீலிக்கின்றன. Le Monde கருத்தின்படி மே 11 அன்று பெசன்ஸிநோட் பிரான்ஸ்2 தொலைக்காட்சியில் "Vivement dimance" என்ற நிகழ்வில் PS ன் தேசிய செயலாளர் Francois Hollande பாரிஸ் பிரதிநிதி Dalien Vaillant ஐ "ஒரு முற்போக்குத் தளம் அமைப்பதில் பாதிப்பு" எப்படி பிரெஞ்சு அரசியலில் இருக்கும் என்பது பற்றி ஆராயுமாறு கோரியதாகத் தெரிவித்தார்; Vaillant தான் LCR, NPA அமைக்கும் முயற்சிகள் பற்றி "கவனமாக ஆராய இருப்பதாக" கூறினார்.

Valiant, லு மொண்டிடம் கூறியது: "1974ல் பிரான்சுவா மித்திரோன்ட் லியோனல் ஜோஸ்பனுக்கு கம்யூனிஸ்ட் கட்சியுடன் உறவுகளை கடைப்பிடிக்கும் பணியை கொடுத்தார். அவருடைய பணி மிகவும் பயனுடையதாக போயிற்று." உண்மையில் அது பயனுடையதாக இருந்த தன்மைதான் பின்னர் PC, PCF க்கு இடையே தேர்தல் உடன்பாட்டிற்கு வகை செய்து 1981ல் மித்திரோனை ஜனாதிபதி பதவியை வெல்லச் செய்தது."