World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

A socialist program for Sri Lankan teachers' wage struggle

இலங்கை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்நோக்கு

By the Socialist Equality Party (Sri Lanka)
10 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

அதிகரித்துவரும் விலைவாசி அனைத்துத் தொழிலாளர்களதும் வாழ்க்கை நிலைமையை சீரழிக்கின்ற நிலைமையில், ஆயிரக்கணக்கான அரசாங்கத் துறை ஆசிரியர்கள் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் நடக்கும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை பிரச்சாரத்தில் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பள முரண்பாட்டைத் திருத்துமாறு கோரி மூன்று இலங்கை தொழிற்சங்கங்கள் இந்தப் பிரச்சாரத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன.

நீண்ட காலத்திற்கு முன்னர் கடந்த செப்டெம்பரில், இதே கோரிக்கைக்காக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆசிரியர்களும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக உக்கிரமாக்கிக்கொண்டிருக்கும் உள்நாட்டு யுத்தத்தை நியாயப்படுத்துவதற்காக கிளறிவிட்ட இனவாத பதட்ட நிலைமைகளை நிராகரித்து, இன வேறுபாடுகளுக்கு அப்பால் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (சி.டீ.எஸ்.யூ), கல்விசார் பணியாளர்கள் சங்கம் (ஈ.பி.யூ.) மற்றும் அனைத்து இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் (ஏ.சி.யூ.டீ.யூ.) ஆகிய தொழிற்சங்கங்களால் செப்டெம்பர் 13 வேலைநிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட்டது. இப்போது இந்த சுகயீன விடுமுறை பிரச்சாரத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதும் இதே தொழிற்சங்களே ஆகும். அதற்கும் மேலாக, டிசம்பர் 31ம் திகதியளவில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசாங்கம் கொடுத்த பெறுமதியற்ற வாக்குறுதிகளின் அடிப்படையில் இதே தொழிற்சங்கங்கள் கடந்த அக்டோபரில் நடக்கவிருந்த இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை இரத்து செய்தன.

ஆசிரியர்களின் போராட்டம் மீண்டும் மீண்டும் தாமதப்படுத்தப்பட்டு, இடையூறு செய்யப்பட்டு மற்றும் தடுக்கப்பட்டு வந்துள்ளது என்ற உண்மை, கடந்த செப்டெம்பர் வேலை நிறுத்தத்தின் போது சோசலிச சமத்துவக் கட்சி விடுத்த எச்சரிக்கையை நிரூபித்துள்ளது. "தனது பிற்போக்கு யுத்தத்தை முன்னெடுப்பதன் பேரில் உழைக்கும் மக்கள் அதன் சுமைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்துகிறது. அரசாங்கத்திற்கும் அதன் யுத்தத்திற்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டம் இன்றி, சம்பளம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றங்களைக் கூட அடைவதற்கான பிரச்சாரம் தோல்விக்கு இட்டுச் செல்லும்."

யுத்தம் நிறுத்தப்படாமல் முன்னெடுக்கப்பட வேண்டும் என இடைவிடாது கோரிக்கை விடுக்கும் சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியைச் (ஜே.வி.பி.) சார்ந்த சி.டீ.எஸ்.யூ, செப்டெம்பர் 13 வேலை நிறுத்தத்தை காட்டிக்கொடுப்பதில் மையப் பாத்திரம் வகித்தது தற்செயலானது அல்ல.

வாழ்க்கைச் செலவு மேலும் மேலும் தாங்க முடியாதளவு அதிகரித்துச் செல்லும் நிலைமையின் கீழ், சம்பள உயர்வுக்காக போராட வேண்டும் என ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கொடுத்த நெருக்கத்தின் கீழ், ஏனைய பதினொரு கல்விசார் தொழிற்சங்கங்களும் சுகயீன விடுமுறை நடவடிக்கையை அங்கீகரித்துள்ளன. ஆயினும், இந்த சுகயீன விடுமுறை பிரச்சாரமானது, ஒரு கைத்தொழில் நடவடிக்கையாகக் கூட ஏற்பாடு செய்யப்படவில்லை. மாறாக, ஆசிரியர்கள் தமது வருடாந்த சுகயீன விடுமுறை சலுகையில் இரண்டு நாட்களை அர்ப்பணிக்கக் கோரப்பட்டுள்ளார்கள். தெளிவான உண்மை என்னவெனில், தொழிற்சங்கத் தலைவர்கள் யுத்தத்தையும் இராஜபக்ஷ அரசாங்கத்தையும் எதிர்க்க மறுப்பதன் காரணமாக, அவர்கள் வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுப்பதற்கு எதிரான நிலைப்பாட்டில் நின்றுகொண்டுள்ளனர்.

சம்பளக் கோரிக்கையை எழுப்புவதற்குப் பதிலாக, தொழிற்சங்கங்கள் 1997ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சம்பள முரண்பாட்டை அகற்றுமாறு அழைப்புவிடுக்கத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த முரண்பாடு கல்வி நிர்வாக சேவையில் உள்ள ஊழியர்களுடன் ஒப்பிடுகையில் ஆசிரியர்களுக்கு பாதகம் ஏற்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது. இந்த கோரிக்கையின்படி மாத சம்பளம் 5,000 ரூபாவால் (45 அமெரிக்க டொலர்) அதிகரித்த போதிலும், அனைத்து உழைக்கும் மக்களும் ஒரே மாதிரியான பொருளாதார சிரமங்களை எதிர்கொள்கின்ற நிலையில், அது ஒரு தொழிலாளர் பகுதியினரை இன்னொரு பகுதியினருக்கு எதிராக இருத்துகிறது.

செப்டெம்பர் 13 ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு சற்றே முன்னதாக, தொழிற்சங்கத் தலைவர்கள் ஜனாதிபதி இராஜபக்ஷவை சந்தித்தனர். அப்போது அவர், அரசாங்கம் யுத்தத்திற்கு நிதி வழங்கத் தள்ளப்பட்டிருப்பதால் சம்பள உயர்வு வழங்க முடியாது என வெறுமனே பிரகடனம் செய்தார். நான் யுத்தத்தை நிறுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா எனக் கேட்டு இராஜபக்ஷ தொழிற்சங்க தலைவர்களை நேரடியாக சவால் செய்த போது, அதற்கு பதில் அளிக்க எந்தவொரு தொழிற்சங்கத் தலைவரும் தயாராக இருக்கவில்லை.

தொழிலாளர் வர்க்கத்தின் போராடும் ஆற்றலை பிளவுபடுத்தி, திசை திருப்பி அதை அழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் யுத்தத்தை எதிர்க்காமல், ஆசிரியர்களால் அல்லது வேறு எந்தவொரு தொழிலாளர் பிரிவினராலும் போராட்டங்களை முன்னெடுக்க முடியாது என்பதை இந்த கலந்துரையாடல் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இராஜபக்ஷ அரசாங்கம் யுத்த முயற்சிகளை விமர்சிக்கும் அல்லது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காக குரல் எழுப்பும் எவருக்கும் எதிராக துரோகி எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதாரவாளர் எனவும் முத்திரை குத்துவது வழமையாகிவிட்டது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கோரிக்கை விடுக்காமல் தொழிலாளர் வர்க்கத்தால் ஒரு அடி தன்னும் முன்னால் வைக்க முடியாது. இந்த வழியில் மாத்திரமே கொழும்பு அரசாங்கம் மற்றும் பிரிவினைவாத புலிகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களுடன் சிங்கள, தமிழ் தொழிலாளர்கள் ஐக்கியப்பட்டு யுத்தத்துக்கு முடிவுகட்ட முடியும்.

தொழிற்சங்களுக்குள் ஜே.வி.பி. ஆரம்பிக்கின்ற சுகயீன விடுமுறை பிரச்சாரத்தில் அல்லது வேறு ஏதாவது ஒரு பிரச்சாரத்திலேனும் எந்தவொரு தொழிலாளியாலும் நம்பிக்கை வைக்க முடியாது. 2005 நவம்பரில் இராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வருவதில் ஜே.வி.பி. பிரதான பாத்திரம் வகித்ததோடு உழைக்கும் மக்களுக்கு எதிரான அவரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அது ஆதரவளித்தது. ஜே.வி.பி. ஒவ்வொரு மாதமும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக அரசாங்கத்துக்கு வாக்களித்து வருகிறது. எண்ணிலடங்கா ஆட்கடத்தல்களும் காணாமல் போகும் சம்பவங்களும் நாடு பூராவும் நடப்பது இந்த அவசரகால சட்டத்தின் கீழேயே ஆகும். அதே சமயம், முன்னெப்போதும் இல்லாதவாறு 163 பில்லியன் ரூபாய்களை யுத்தத்திற்காக ஒதுக்கி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எண்ணெய் வார்த்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றவும் ஜே.வி.பி. வாக்களித்தது.

ஜே.வி.பி. யின் இந்தக் கொள்கை காரணமாக, அதன் சமூக அடித்தளம் ஆட்டங்கண்டதோடு அங்கத்தவர்கள் எண்ணிக்கையும் குறைந்து போனது. கட்சியின் இந்த நெருக்கடியே அது அண்மையில் பிளவடைந்ததற்கு மையக் காரணமாக விளங்கியது. இந்தப் பிளவில் ஜே.வி.பி. யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்றார்கள். அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகிப்பதாக ஜே.வி.பி. பாசாங்கு செய்வதானது, உழைக்கும் மக்களுக்கு மத்தியில் கொஞ்சம் நம்பகத் தன்மையை மீண்டும் பெற்றுக்கொள்ளும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியேயாகும்.

ஜே.வி.பி. யின் பிரச்சாரங்களின் மோசடிப் பண்பு, அது அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு 5,000 ரூபா மாத சம்பள அதிகரிப்பு கேட்டு முன்வைத்த கோரிக்கையில் தெளிவாகியுள்ளது. அண்மையில் வெளியான ஆய்வின்படி, மார்ச் 31ம் திகதியளவில் ஐந்து பேர் அடங்கிய குடும்பம் ஒன்றுக்கான மாத செலவு, 30,885 ரூபா. ஆனால், அரசாங்க ஊழியர் ஒருவரின் குறைந்தபட்ச சம்பளம் 11,370 ரூபாவாகும். ஜே.வி.பி. யினதும் மற்றும் அதன் தொழிற் சங்கங்களதும் கோரிக்கைகள் வழங்கப்பட்டாலும், அது ஒரு தொழிலாளர் வர்க்க குடும்பத்தின் வாழ்க்கைக்குத் தேவையான தொகையில் அரைவாசியாகக் கூட இருக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக, மார்ச் மாதத்தில் இருந்து பஸ் கட்டணங்கள் 27 வீதத்தாலும் மற்றும் ரயில் கட்டணங்கள் 300 வீதத்தாலும் அதிகரித்துள்ள அதே வேளை, மே மாதத்தில் பண வீக்கம் 26.2 வீதத்தை எட்டியுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டில் உணவு மற்றும் தானிய விலைகள் 42.8 வீதத்தால் அதிகரித்துள்ளன.

இந்த நிலைமைகள், தொழிலாளர்களை சம்பள உயர்வுக்கான போராட்டத்திற்குத் தள்ளிய போதிலும், அரசியல் ஸ்தாபனத்துடனும் தனியார் இலாப அமைப்புடனும் முற்றாகக் கட்டுண்டுள்ள தொழிற்சங்கங்கள், எந்தவொரு ஜனநாயக பூர்வமான ஆலோசனைகளையும் பெறாமல் தமது கோரிக்கைகளை எதேச்சதிகாரமாக குறைத்துக்கொள்கின்றதோடு தமது உறுப்பினர்களை துணிவிழக்கச் செய்வதற்கு மட்டுமே சேவை செய்யும் வலுவற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கே அழைப்பு விடுக்கின்றன.

கூட்டுத்தாபன கும்பல்களை வளமூட்டும் மற்றும் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் விரிவுபடுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் பொதுக் கல்விக்கான நிதியை வெட்டிக் குறைத்தல், மற்றும் முழு பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்கள், தனியார்மயமாக்கம் மற்றும் அரசாங்கத் துறைக்கான செலவுக் குறைப்பு ஆகியவற்றுக்கு எதிரான பரந்த போராட்டத்தில் இருந்து ஆசிரியர்களின் சம்பளப் போராட்டத்தை தனியாகப் பிரித்துவிட முடியாது. கல்வித் துறையைப் பொறுத்தளவில், இந்தக் கொள்கைகள் தனியார் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன.

இராஜபக்ஷ யுத்தத்தை உக்கிரமாக்குவதானது, பொதுக் கல்வி மற்றும் ஏனைய ஒவ்வொரு சமூக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை வற்றச் செய்வது மட்டுமன்றி, பெரும் வர்த்தகர்களின் திட்டங்களுக்கு எதிரான தொழிலாளர் வர்க்க எதிர்ப்பை இனவாதத்தினுள்ளும் தேசியவாதத்தினுள்ளும் மூழ்கடிக்கும் முயற்சியையும் கொண்டுள்ளது. அதன் சகல முன்னோடிகளையும் போலவே, இராஜபக்ஷவின் ஸ்திரமற்ற கூட்டணியானது அழிவுகரமான ஆயுத மோதலுக்குள் நாட்டை மீண்டும் தள்ளிவிடுவதன் மூலம் வளர்ந்துவரும் சமூக அமைதியின்மைக்கு பதிலளிக்கின்றது.

யுத்தம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் மீது அதிகரிக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு, அனைத்துலக சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் தொழிலாளர்களுக்கு அவசியம். ஒரு சிலரின் இலாபத்திற்காக அன்றி, பெரும்பான்மையானவர்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடியவாறு சமுதாயத்தை முழுமையாக மறு ஒழுங்க செய்வதற்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றுக்கான போராட்டத்தை ஆசிரியர்களும் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் முன்னெடுக்க வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர் வர்க்கமும், தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் சோசலிசக் குடியரசு ஒன்றியங்களை அமைப்பதன் ஒரு பாகமாக, ஸ்ரீலங்கா மற்றும் ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டத்திற்காக ஐக்கியப்பட வேண்டும்.