:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Obama clinches Democratic presidential nomination
ஜனநாயக கட்சியின் ஜனாதிபதித் தேர்வாளர் நியமனத்தை ஒபாமா பெறுகிறார்
By Patrick Martin
5 June 2008
Use this version
to print | Send this link by email
| Email
the author
செவ்வாயன்று டஜன் கணக்கான சிறப்பு பிரதிநிதிகள் -- காங்கிரஸ் உறுப்பினர்கள்,
செனட்டர்கள், கவர்னர்கள் மற்றும் கட்சி அதிகாரிகள் -- அவருடைய வேட்பு மனுவிற்கு ஒப்புதல் அளிக்க,
தொடக்கப் பிரச்சாரத்தின் இறுதி நாளன்று பரபரப்புக் காட்டிய நிலையில், செனட்டர் பரக் ஒபாமா ஜனநாயகக்
கட்சியின் ஜனாதிபதி வேட்புமனுத் தாக்கல் செய்யும் உரிமையை பெற்றார்.
கடந்த இரு ஆரம்பநிலைத் தேர்தல்களில் ஒபாமா ஹில்லாரி கிளின்டனுடன் பகிர்ந்து
கொண்டார்; இவர் மோன்டனாவில் வெற்றி பெற்றார், ஆனால் தெற்கு டக்கோடாவில் தோல்வியுற்றார்; ஆனால்
இந்த இரு அதிக மக்கட் தொகை இல்லாத மாநிலங்களின் பிரதிநிதிகள் 31 ஆகும்; இது கிட்டத்தட்ட 200
இன்னமும் உறுதி செய்யாத சிறப்புப் பிரதிநிதிகள் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் சிறிய அளவாகப் போயிற்று;
நியமனத்திற்கு தேவையான 2,118 பிரதிநிதிகள் தேவை என்ற நிலையில் சிறப்பு பிரதிநிதிகள் ஒபமாவிற்கு ஆதரவாக
உறுதியாகச் செயல்பட்டனர்.
புதனன்று நான்கு உயர்மட்ட ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் --கட்சித் தலைவர்
ஹோவர்ட் டீன், மன்ற அவைத்தலைவர் நான்சி பெலோசி, செனட் பெரும்பான்மைக் கட்சித் தலைவர் ஹாரி ரீட்
மற்றும் ஜனநாயகக் கட்சி கவர்னர்கள் சங்கத்தின் தலைவர் ஜோ மான்சின் ஆகியோர் இதுகாறும் உறுதியளிக்காத
சிறப்புப் பிரதிநிதிகளை வெள்ளிக் கிழமைக்குள் தங்கள் ஜனாதிபதிக்கான நபரின் பெயரை அறிவிக்குமாறு அழைப்பு
விடுக்கப்பட்டனர்.
புதனன்று மாலை ABC
News கிளின்டன் உத்தியோகபூர்வமாக போட்டியில் இருந்து
விலகுவார் என்றும் ஒபாமாவிற்கு அந்த கெடுவிற்குள் ஒப்புதல் கொடுப்பார் என்றும் அறிவித்தது. ஆனால்
அப்படிப்பட்ட ஒப்புதலை அவர் தெற்கு டக்கோடாவில் செவ்வாய் இரவு தன்னுடைய ஆதரவளார்களிடையே
பேசுகையில்கூடத் தெரிவிக்கவில்லை.
ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி நியமனம் சமீபத்திய அமெரிக்க வரலாற்றில் மிகவும்
நீடித்த செயலாகிவிட்டது. பெப்ருவரி மாதம் கடைசி மூன்று வராங்களில் நடந்த ஜனநாயகக் கட்சி பேரவை
பிரதிநிதிகளிடையே ஒபாமா உறுதியான முன்னணியை பெற்றார்; அப்பொழுது அவர் 11 தொடர்ச்சியான
ஆரம்பநிலைத் தேர்தல்களையும் சிறப்புக் குழுக்களில் வெற்றியையும் கொண்டிருந்தார். கிளின்டன் 14 இறுதி
ஆரம்பநிலைத் தேர்தல்களில் 9 ல் வெற்றிபெற்றார்; ஆனால் அவருடைய போட்டியாளர் குவித்திருந்த 150 க்கும்
அதிகமான பிரதிநிதிகள் எண்ணிக்கையை கடக்க முடியவில்லை.
அவருடைய அரை டஜன் போட்டியாளர்களைவிட பிரச்சாரத்தில் கிளின்டன் மிகப்
பெரிய ஆதாயத்துடன் நுழைந்திருந்தார்; அவருக்குக் கூடுதலான நிறுவன, நிதிய ஆதரவு இருந்தது; ஆனால்
அக்டோபர் 2002 ல் ஈராக் போருக்கு அவர் கொடுத்திருந்த ஆதரவு வலுவிழக்கச் செய்துவிட்டது. புஷ்ஷிற்கு
ஈராக்கின்மீது படையெடுக்க அதிகாரம் கொடுத்தது இரட்டைத் தவறுகள் என்று ஆயிற்று: அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்தை கூடுதல் மதிப்பு செய்தது ஒன்று, மற்றொன்று அமெரிக்க மக்களிடையே போர்
பற்றி வரக்கூடிய எதிர்ப்பை குறைமதிப்பீட்டிற்கு உட்படுத்தியது.
ஈராக் போர் பற்றி மக்களுடைய விரோத உணர்வு பற்றி அவர் முறையிட்டிருந்தாலும்
கூட, ஒபாமாவின் பிரச்சினை எந்த உண்மையான விதத்திலும் ஒரு "போர் எதிர்ப்பு" பிரச்சாரம் அல்ல.
தொடர்ச்சியாக கிளின்டனையும் புஷ்ஷையும் அவர் ஈராக்குடன் பிணைத்து அந்த "போருக்கு அனுமதி கொடுத்திருக்கக்
கூடாது என்றும் அது நடத்தப்பட்டிருக்கக் கூடாது" என்றும் கூறினார்.
இல்லிநோய் செனட்டர் ஈராக் படையெடுப்பு, வெற்றி என்பது ஒரு மூலோபாயச்
சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது, மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அளவில் நபர்கள், காட்டிக் கொள்ளும் தன்மை
ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் வேண்டும் என்று நினைக்கும் அமெரிக்க ஆளும் உயரடுக்குப் பிரிவை
பிரதிபலிக்கிறார். இந்த அடுக்குகள் இராணுவ நடவடிக்கை எப்பொழுதும் கூடாது என்று கூறவில்லை; ஆனால் புஷ்
நிர்வாகம் தன்முனைப்புடன் ஈராக்கில் இராணுவ வெற்றியை காணும் முயற்சியை மூடத்தனமானது என்றும் இறுதியில்
பேரழிவைக் கொடுத்துவிட்டது என்றும் கருதுகின்றன.
ஒபாமா அனைவருக்கும் தெரிந்த பெயராவதற்கு முன்பு, அரங்குகளை நிரம்பச்
செய்து இணையதளம் மூலம் சிறிய நன்கொடைகளிலேயே மில்லியன்களை ஈர்க்குமுன், அவருடைய வேட்புத்தன்மை
ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுக் கொள்கை நடைமுறையின் குறிப்பிடத்தக்க பகுதியின் கவனத்தை ஈர்த்தது; இதில்
முன்னாள் கார்ட்டரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்
Zbigniew Brezezinski மற்றும் முன்னாள் கிளின்டனின்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆன்டனி லேக்கும் அடங்குவர்.
புஷ் நிர்வாகம் பற்றி அவர் குறைகூறியதால் ஒன்றும் இவர்கள் ஒபாமா பக்கம்
ஈர்க்கப்படவில்லை--இந்த குறைகூறலும் குறிப்பிடத்தக்க வகையில் ஆக்கிரோஷமாக இல்லை, அதுவும் தேசிய
காங்கிரஸில் இருக்கும் பற்கள் மழுங்கிய தரத்தில் கூடக் கூரியது அல்ல -- ஆனால் முதல் ஆபிரிக்க-அமெரிக்க
ஜனாதிபதி சர்வதேச அளவிலும் அமெரிக்காவிற்குள்ளும் புதுத் தோற்றங்களை புதுப்பிப்பதில் காணக்கூடிய அடையாள
விளைவு பற்றியதாக, அமெரிக்க முதலாளித்துவத்தின் ஜனநாயகக் கருத்துக்கள் பற்றிய விளைவுகள் பற்றியதாக
ஈர்க்கப்பட்டது.
ஒபாமாவின் நியமனம் சிறப்பாக உறுதியாகிவிட்ட நிலையில், அமெரிக்க செய்தி
ஊடகம் இப்பொழுது அத்தகைய தோற்றங்களை கூடுதலாகவே காட்ட முற்படுகின்றது. தொலைக்காட்சி இணையங்கள்
கணக்கிலடங்காத நேரத்தை அமெரிக்க ஜனநாயகம் எப்படிப் பெரிய சாதனையை ஒரு ஆபிரிக்க அமெரிக்கரை,
இரு பெரிய முதலாளித்துவ கட்சிகளில் முதல் தடவையாக அமெரிக்க வரலாற்றில் ஜன்னதிபதி வேட்பு மனு பெற
வைத்தது, என்று காட்டுவதில் செலவழிக்கின்றன.
இத்தகைய போலித்தோற்றங்கள் தற்பொழுது பரந்த அளவில் உள்ளன; வெளியேற
உள்ள புஷ்-செனி நிர்வாகத்தின் எட்டு ஆண்டு போர், பிற்போக்குத்தனம், சமூகச் சீரழவு சிறுபான்மை
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் என்ற பல இனப் பின்னணியில் இருப்பவர்களிடம் மட்டும் இல்லாமல், எங்கும்
பரவியுள்ளன.
ஆனால் ஒபாமாவின் நியமனம் மற்றும் நவம்பர் 4 அன்று அவர்
தேர்ந்தெடுக்கப்பட்டால், அவற்றின் முக்கியத்துவம் இத்தகைய மேம்போக்கான தோல் நிறம் போன்றவற்றால்
மட்டும் நிர்ணயிக்கப்பட மாட்டாது. செய்தி ஊடகம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள், வக்காலத்து
வாங்குபவர்கள் என்ன கூறினாலும், ஒபாமா ஒன்றும் கறுப்பர் அல்லது சிறுபான்மையினரின் நலன்களை
பிரதிபலிக்கவில்லை; எப்படி ஹில்லாரி கிளின்டன் ஒன்றும் அனைத்து மகளிரின் நலன்கைப் பிரதிபலிக்கவில்லையோ
அப்படித்தான் இதுவும்.
ஒபாமா மற்றும் கிளின்டன் இருவருமே அமெரிக்க ஆளும் உயரடுக்கின் பிரதிநிதிகள்
ஆவர்; அந்த சிறு நிதிய பிரபுக் குழுதான் அனைத்து பொருளாதார, அரசியல் நெம்பு கோல்களை அமெரிக்க
சமூகத்திற்குள், உத்தியோகபூர்வ இரு பெரிய கட்சிகள், செய்தி ஊடகம் உட்பட பலவற்றையும் கட்டுப்படுத்துகிறது.
ஒபாமா இலாபமுறையை ஆர்வத்துடன் காப்பவர் ஆவார்; மிகப் பெரிய
செல்வந்தர்கள் சிலரின் ஆதரவு அவருக்கு உண்டு; அதில் பில்லியனர் முதலீட்டாளர் வாரன் பபே யும் அடங்குவார்;
இவ் வாரன் பபே மைக்ரோசாப்ட்டின் பில் கேட்சையும் தாண்டி அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரராக
ஆனார்.
செனட்டர் ஒபாமாவை போல் பபேயும் ஒரு அறிவாளி ஆனால் அவர் இல்லிநோய்
ஜனநாயகக் கட்சிக்காரரை அமெரிக்க சமூகத்தில் முற்போக்கு மாற்றம் வேண்டும் என்பதற்காக ஆதரிக்க
முற்படவில்லை. ஆளும் உயரடுக்கின் சிந்திக்கும் பல பிரிவுகள் கருதுவதைப் போலவே அவரும் அமெரிக்க அரசியல்
வாழ்வில் குறைந்த பட்சம் வண்ணப்பூச்சு மாற்றமாவது தேவை, அப்பொழுதுதான் கீழிருந்து பெரும் எழுச்சி வராது
என்று உணர்ந்துள்ளார்.
ஒபாமா நியமனம் என்பது மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி நடைமுறைக்கு எதிராக
என்றோ, கீழிருந்து ஒரு மக்கள் இயக்கம் ஏற்பட்டுள்ளது என்றோ ஒபாமாவின் சில தன்னைத்தானே
ஏமாற்றிக்கொள்ளும் ஆதரவாளர்கள், தாராள வாதக் கருத்து உடையவர்கள் இப்பொழுது கூறுவது போல் ஒன்றும்
நடக்கவில்லை. ஒபாமா பிரச்சாரத்தில் மக்களின் பங்கு மின்னிசோட்டாவில் செவ்வாயன்று இரவு
St.Paul ல்
நடந்த அணியைப் போல்தான் இருக்கும் --அதாவது ஒரு நன்கு வளர்க்கப்படும், மிகத் திறமையான சந்தையின்
பிரச்சாரத்தில் மக்கள் துணை நடிகர்கள் போல் பங்கு கொள்ளுவதாக இருக்கும். இப்பிரச்சாரத்தின் நோக்கம்
அமெரிக்க முதலாளித்துவ அரசியலை அதன் அழுகிய அடிப்படையைத் தொடாமல் புதுப்பித்தல் என்பது ஆகும்.
ஒபமா ஒரு விருப்பத்துடன் செயல்புரியும், ஒப்புமையில் மிக உயர்ந்த அளவில்
இப்பிரச்சாரத்தின் முழு உணர்வுக் கருவி ஆவார். இதுதான் இரு சூழ்நிலையிலும் --அவர் குத்திக் கொண்ட கொடி,
முன்பு செய்தி ஊடகத்தின் கவனத்தை ஈர்த்தது, மற்றும் செவ்வாய் இரவு அவருடைய உரையில் பொருள்,
தன்னைத்தானே ஜனநாயக ஜனாதிபதி வேட்புப் போட்டியில் வெற்றியாளர் என்று அறிவித்துக் கொண்டது என்பவற்றில்
தெளிவாக நிரூபணம் ஆயிற்று.
தனக்கு எதிராக குடியரசுக் கட்சி வேட்பாளராக வரக்கூடிய செனட்டர் ஜோன்
மக்கெயினையும் அவருடைய ஈராக்கில் "நிகழ்வு முடியும் வரை இருக்க வேண்டும்" என்பதற்காக ஒபாமா
தாக்கினார்; ஆனால் தன்னுடைய குறைகூறலை தேசிய வரம்புகளில் எடுத்துரைத்தார். புஷ்-மக்கெயின் கொள்கை,
"நம்முடைய வீரம் மிகுந்த, சீருடைய அணிந்த ஆடவர் பெண்டிரிடம் இருந்து அனைத்தையும் எதிர்பார்க்கிறது; ஆனால்
ஈராக்கிய அரசியல் வாதிகளிடம் ஒன்றையும் கேட்கவில்லை" என்று அவர் கூறினார்; ஏதோ ஈராக் அமெரிக்காவை
சுரண்டுவது போலவும் அமெரிக்கா அதைச் சுரண்டவில்லை என்பது போலவும். அமெரிக்க மக்களுக்கு போரினால்
ஆகும் செலவை அவர் மேற்கோளிட்டார்; ஆனால் இன்னும் கூடுதலான வகையில் போர் இழப்புக்களை எப்படி
அமெரிக்கா ஈராக் மீது ஏற்படுத்தியது, கிட்டத்தட்ட ஈராக்கை ஒரு செயல்படும் சமூகம் என்ற நிலையில் இருந்து
அழித்துவிட்டது என்பது பற்றிக் கூறவில்லை.
அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் போரை இவர் முடிவிற்குக் கொண்டு
வருவதாகக் கூறப்படும் கருத்து பற்றி கூறுகையில் அறிவித்தார் --இந்த உட்குறிப்பு விரைவில் படைகள்
திரும்பப்பெறப்படும் என்பதை நிராகரித்துள்ளன -- "இங்கு நின்று ஈராக்கில் பலவற்றை செய்ய முடியும் என்று
நான் கூற விரும்பவில்லை. எவ்வளவு கவனமற்று அங்கு சென்றோமோ, அதற்கு மாறாக அவ்வளவு கவனத்துடன்
திரும்பி வர வேண்டும்; ஆனால் எப்படியும் திரும்பி வரவேண்டும்." பிரச்சாரத்தின் சில பகுதிகளில் அனைத்து படைத்
துருப்புக்களும் அவர் வெள்ளை மாளிகையில் இருக்கும் முதலாண்டிலேயே வந்துவிடும் என்றார். இது பின்னர் தெளிவற்ற
முறையில் ஒரு உறுதிப்பாடாக "புறப்பட்டு விடுவோம்" என்ற அளவிற்கு மாறியது; இந்தச் சூத்திரம் காலவரையற்று
அடிப்படையில் அப்பகுதியை ஆக்கிரமிப்பது என்ற விளக்கத்திற்கும் இடம் அளிக்கும்.
அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து திரும்பப் பெறப்படுபவை, உலகின் மற்ற பகுதிகளுக்கு
அனுப்பிவைக்கப்படும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்; குறிப்பாக ஆப்கானிஸ்தானத்தில். அங்கு "நம்முடைய முயற்சிகளை
மீண்டும் குவிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
உலகில் அமெரிக்காவின் நிலையையும் அதன் உலகத் தரத்தையும் புதுப்பிக்க வேண்டும்
என்ற இலக்கையும் அவர் வலியுறுத்தினார்."நாம் மீண்டும் ஒரு சுதந்திர உலகிற்கு வழிகாட்டுவதற்கான தைரியத்தையும்
நம்பிக்கையையும் கொள்ளவேண்டும். இதுதான் ரூஸ்வெல்ட், ட்ரூமன் மற்றும் கென்னடி விட்டுச் சென்றுள்ள மரபுரிமை".
வேறுவிதமாகக் கூறினால் இரண்டாம் உலகப் போரின் போது, கொரியப் போரின் போது மற்றும் வியட்நாம்
போரின் ஆரம்ப கட்டத்தில் இருந்து ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதிகளின் மரபுரிமை ஆகும்.
புதனன்று காலை ஒபாமா அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகாரங்கள் குழுக்
கூட்டத்தில் (AIPAC)
ஆற்றிய உரையில் அமெரிக்க இராணுவம் புதுப்பிக்கப்பட்டு நிற்க வேண்டியதின் தேவையை தொடர்ந்து
வலியுறுத்தினார். அந்த அமைப்பு வாஷிங்டனில் இஸ்ரேலுக்கு ஆதரவை வளர்க்கும் அமைப்பு ஆகும். இஸ்ரேலை
அங்கீகரிக்காத ஹமாஸ் இன்னும் பிற இஸ்லாமிய, தேசியக் குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை தான் நடத்த
மாட்டேன் என்றும் அவர் அறிவித்தார்.
"பேச்சுவார்த்தை மேசையில் பயங்கரவாத அமைப்புக்களுக்கு இடம் இல்லை" என்று
கூறிய அவர், "சிலர் கூறுவது போல் இல்லாமல் எனக்கு பேசுவதற்காக எமது விரோதிகளுடன் உட்கார வேண்டும்
என்பதில் அக்கறை இல்லை" என்றார்.
புஷ் நிர்வாகம் மற்றும் செனட்டர் மக்கெயினை ஈராக் போர் ஈரானை
வலுப்படுத்திவிட்டது என்ற காரணத்திற்காக குறைகூறினார்; அதுவோ மத்திய கிழக்கில் இஸ்ரேலின் வலுவான
எதிரியாக உள்ளது. தூதரக முறையில் ஈரானுடன் பேச்சு வார்த்தை வேண்டும் என்பதை மீண்டும் கூறிய அவர்,
"ஆனால் எமது பாதுகாப்பு, நம் நட்பு நாடு இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகளில்
இராணுவ நடவடிக்கை என்ற அச்சுறுத்தல் உண்டு என்பதை எப்பொழுதும் மனத்தில் கொள்ளுவேன்." என்றார்.
AIPAC மாநாட்டில் கலந்து
கொண்ட 7,000 பேர் மக்கெயினுக்குக் கொடுத்ததைவிட கூடுதலான களிப்புடன் ஒபாமாவிற்கு வரவேற்பு
கொடுத்தாக செய்தியூடகத் தகவல்கள் கூறுகின்றன; இரு நாட்களுக்கு முன்புதான் அங்கு மக்கெயின் பேசினார்.
சியோனிச செல்வாக்கு குழுவிடம் தாழ்ந்து நின்ற வகையில் ஒபாமா கூறினார்: "இஸ்ரேலின் பாதுகாப்பு
புனிதமானது; அது பேச்சுவார்த்தைக்கு இடமற்றது."
மத்திய கிழக்கில் எந்த சமாதான ஒப்பந்தமும் "இஸ்ரேலை ஒரு யூத நாடு என்ற
அடையாளத்தை காப்பதாக இருக்க வேண்டும்; இஸ்ரேல் பாதுகாப்பாக, அங்கீகரிக்கப்பட்ட, காக்கக்கூடிய
எல்லைகளை கொண்டிருக்க வேண்டும். இஸ்ரேலின் தலைநகரமாகத்தான் ஜெருசேலம் இருக்கும்; அது
பிளவடையாமால் இருக்கும்" என்றார்.
ஈரானைப் பொறுத்தவரையில்
Toronto Globe & Mail
இன் நிருபர், AIPAC
கூட்டத்திற்கு வந்திருந்தவர் கூறினார்: "செனட்டர் ஒபாமா, செனட்டர் மக்கெயின் போல் அல்லது தற்போதைய
ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் போலவே கழுகுப்பார்வையைக் கொண்டிருந்தார்."
AIPAC கூட்டத்தில் ஒபாமா
கூறினார்: "ஈரானிடம் இருந்து வரக்கூடிய ஆபத்து அதிகம், உண்மையானது; என்னுடைய இலக்கு அந்த அச்சத்தை
அகற்றுவதாக இருக்கும்". தெளிவற்ற ஆனால் ஆபத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சொல்லாட்சியைப் பயன்படுத்திய
அவர் கூறினார்: "என் சக்திக்குள் உள்ள அனைத்தையும் --அனைத்தையும்-- ஈரான் அணுவாயுதம் பெறாமல்
தடுக்கப் பயன்படுத்துவேன்."
ஒரு ஒபாமா ஜனாதிபதி காலம் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் அடிப்படை
முறிவு எதையும் பிரதிபலிக்காது; மாறாக ஒரு புது வடிவில் அதன் தொடர்ச்சியாக இருக்கும். முதல் கறுப்பர்
ஜனாதிபதி அமெரிக்க ஆளும் உயரடுக்கின் நலன்களை, முதல் கறுப்பு வெளியுறவுத்துறை அமைச்சர் கொலின் பவல்
இருந்ததைப்போலவும் அவருக்குப் பின் அப்பதவிக்கு வந்த ஆபிரிக்க அமெரிக்கரான கொண்டலிசா ரைசைப்
போல்தான் பாதுகாப்பார்.
தோலின் நிறம் அல்ல, வர்க்கத்தின் நிலைமைதான் அரசியலில் உறுதியான
செயற்பாட்டின் தன்மை ஆகும். இந்த அடிப்படை மார்க்சிச உண்மையை ஒபாமா பற்றியும் அவர் மூலம் ஜனநாயகக்
கட்சி மற்றும் முழு இலாபமுறையின் போலித் தோற்றங்களை அனைத்து இடது தாராளவாதிகள் வலுவாக்க முற்படும்
நேரத்தில், வலியுறுத்துவது முக்கியமாகும்;
இவ்விதத்தில் Nation
ஏட்டின் சமீபத்திய தலையங்கம், ஆரம்ப பிரச்சாரத்தை "ஒபாமாவிற்கு
வரலாற்றுக் கணம், ஜனநாயகக் கட்சிக்கும் அமெரிக்க பரிசோதனைக்கும் வரலாற்றுக் கணம். குடியரசு தோன்றியதில்
இருந்து ஒரு பெரிய கட்சி ஆபிரிக்க அமெரிக்கர் ஒருவரை ஜனாதிபதியாக வேட்பு நியமனம் செய்துள்ளது" என்று
பாராட்டியுள்ளது.
"இந்த இனத்தின் மிக குறிப்பிடத்தக்க உண்மை பற்றி பெருமைப்பட வேண்டும். மகளிரும்
பெரும்பாலான ஆபிரிக்க அமெரிக்கர்களும் வாக்குப் போடும் உரிமைகூட 1908ல் இல்லாத நிலையில், ஒரு
பெண்ணும் ஒரு ஆபிரிக்க அமெரிக்க மனிதரும் 2008ம் ஆண்டில் ஜனாதிபதி நியமனப் போட்டிகளில் மிகப் பெரிய கூட்டங்களை
கூட்டிவிட்டனர்... அதன் வரலாற்றின் பெரும்பகுதியில் அமெரிக்கா ஒரு முற்றுப்பெறாத ஜனநாயகமாக
இருந்துள்ளது. ஆனால் இந்த ஐந்து மாதங்களில் இது இன்னும் முழுமையான இணைப்பை உறுதிப்படுத்தும் செய்தியை அளிக்கப்
பாடுபட்டுள்ளது." என்று தலையங்கம் புகழ்ந்துள்ளது.
ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக அடிமை முறை மற்றும் தெற்கில் இன வேறுபாட்டிற்கு
ஆதரவைக் கொடுத்த ஜனநாயகக் கட்சிக்கு ஒரு பெருமையையும் கொடுக்கும் வகையில் எழுதியுள்ளது: "20ம்
நூற்றாண்டின் இடைப்பகுதியில் இன்னும் தடையற்று முழுமையான அளவில் குடியரசுக் கட்சியை விட சுதந்திரத்திற்கும்
கண்ணாடி உச்சிகளை உடைப்பதற்கும் பாடுபட்டதின் பலன்களை 2008 ன் முதல் மாதங்களில் தன்னுடைய கடந்த
கால சேவையை ஒட்டி அனுபவிக்கத் தலைப்பட்டுள்ளது."
உண்மை என்னவென்றால் ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் அமெரிக்க ஆளும்
உயரடுக்கின் கருவிகள் ஆகும்; இவற்றின் வேறுபாடுகள் தந்திரோபாயமுறையில் உள்ளனவே அன்றி அடிப்படைகளில்
இல்லை.
ஒரு ஒபாமா நிர்வாகத்தை நன்கு நடத்துதல் என்பது, அமெரிக்க மற்றும் உலக
முதலாளித்துவத்தின் பெருகிய ஆழ்ந்த நெருக்கடிக்கு இடையே, அமெரிக்க ஆளும் உயரடுக்கு உலக நிலையையும் தக்க
வைத்துக் கொண்டு உள்நாட்டிலும் தன் ஆதிக்கத்தை நிறுத்திக் கொள்ளுவது என்பது, ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி
வேட்பாளரின் தேன்சொட்டும் சொற்களில் போலீஸ் அரசு, ஒற்றறிதல் மற்றும் போர் ஆகியவற்றின் மூலம்தான்
முடியும். |