World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பர்மா

Burma aid conference: Demands and ultimatums, but little money for the cyclone victims

பர்மா உதவி மாநாடு: கோரிக்கைகளும் இறுதி எச்சரிக்கைகளும், ஆனால் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக குறைந்த உதவித்தொகை மட்டுமே

By Peter Symonds
27 May 2008

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வாரம் இரங்கூனில், ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட நன்கொடை வழங்குனர்கள் மாநாட்டில் சுயநலம், மனிதாபிமானமற்ற வெறுப்பு மற்றும் ஏமாற்றுத்தனம் ஆகியவை மட்டுமே தாராளமாக வினியோகப்பட்ட பொருட்களாக இருந்தன. பர்மாவில் சூறாவளியால் பாதிக்கப்பட்டதாக கணக்கிடப்பட்ட 2.4 மில்லியன் மக்களுக்கான உதவிகளை வெளியிடுவதற்கான கூட்டமாக அது இருந்த போதினும், அன்னிய உதவி முயற்சிகளுக்கு பர்மாவின் இராணுவ ஆட்சி அதன் கதவுகளை திறந்து விட, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் தங்களின் கோரிக்கைகளை திணிப்பதற்கான வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக் கொண்டன. ஆனால் இக்கூட்டத்தின் மூலம் மிகக்குறைவான நிதியே கிடைக்கவுள்ளது.

மாநாட்டிற்கு முன்னதாக, சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுகட்டுமான உதவிக்காக பர்மிய ஆட்சி 10.7 பில்லியன் டாலர் உதவிக்கு அழைப்புவிட்டது. இத்துடன், ஐராவதி நதிப்படுகை பகுதி விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தங்கள் பிழைப்புக்கு மீண்டும் திரும்ப உதவியாக, உடனடி நிவாரணப்பொருட்களும் அவசர தேவையாக உள்ளன. நாட்டின் "நெற்களஞ்சியம்" என அறியப்படும் அங்கு, அடுத்த சில வாரங்களில் ஒரு புதிதாக பயிரிடப்படவில்லை என்றால் நீண்டகால துயரம் ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்திருக்கிறது. தற்காலிக முகாம்கள், நெல் விதைகள், உரங்கள் மற்றும் மீன்பிடி படகுகள் சாத்தியமான விரைவில் தேவைப்படுவதாக பர்மாவின் பிரதம மந்திரி தெயின் சென் மாநாட்டில் தெரிவித்தார்.

இந்த கோரிக்கைக்கான பிரதிபலிப்பு மிகவும் வேதனைக்குரியதாய் இருந்தது. சர்வதேச ஊடக செய்திகள், புதிய நன்கொடைகளின் மதிப்பை 50 மில்லியன் டாலரிலிருந்து 150 மில்லியன் டாலருக்குள் குறிப்பிடுகின்றன, ஆனால் இதுவும் கூட சந்தேகத்திற்குரியதே. மனிதாபிமான துறைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் செய்தி நிறுவனம் IRIN, மொத்தத்தில் இத்தொகை தொடர்பாக எவ்வித செய்தியும் வெளியிடவில்லை. ஆனால், "அக்கூட்டத்தில் கலந்து கொண்ட நன்கொடை வழங்குனர்கள் பலர், வெறுமனே ஏற்கனவே தாங்கள் அளித்த உதவிகளை பட்டியலிட்டனர் என்பதுடன் நிலைமை மேம்பட்டால் நிறைய உதவிகள் அளிப்பதாக வாக்குறுதியளித்தனர்." என்று மட்டும் அச்செய்தி குறிப்பிட்டது.

சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் உடனடி உதவிக்காக 201 மில்லியன் டாலருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சொந்த "உடனடி கோரிக்கை" வெறும் 57 மில்லியன் டாலரை அல்லது மொத்த அளவில் 28 சதவீதத்தை மட்டுமே பெற்றிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் நிதியியல் கண்காணிப்பு அமைப்பின்படி, மற்றுமொரு 42 மில்லியன் டாலருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்வாக்குறுதிகள் உறுதி செய்யப்படுவதில்லை மற்றும் முந்தைய பேரழிவுகளில் நடந்தது போன்றே அவை நிறைவேறாமல் படாமலும் போகலாம். உதவிக்கான புதிய வாக்குறுதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் நிதிக்கணக்கில் சேர்க்கப்படுமா என்பதும் தெளிவாக இல்லை.

இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம், பர்மிய இராணுவ ஆட்சியைச் சாதகமாக கட்டுக்குள் கொண்டு வர நன்கொடை அறிவிப்புகளை பயன்படுத்துவதே ஆகும். ஒரு மேற்கத்திய தொண்டு அதிகாரி IRIN இடம் தெரிவித்ததாவது: "ஒவ்வொரு பேச்சாளராலும் அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 'நீங்கள் சரியானதை செய்தால், நாங்கள் உங்களுடன் இணைந்து நிற்போம். வெளிப்படையாக கூறுவதானால், நீங்கள் செய்யவில்லை என்றால், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது'."

அதன் மக்களுக்கு உதவ தவறி வருவதாக இராணுவ ஆட்சியை வசைபாடி வரும் புஷ் நிர்வாகம், வெறும் 20.5 மில்லியன் டாலரை நன்கொடையாக அளிக்க உறுதியளித்துள்ளது. நிறைய செய்வதற்கு வாஷிங்டன் தயாராகி வருவதாக இரங்கூனில் அமெரிக்க தூதர் ஸ்காட் மார்ஷியல் ஊடகங்களிடம் தெரிவித்தார். "எவ்வாறிருப்பினும், அவ்வாறு செய்வதற்கு, சூழ்நிலையை முழுமையாக மதிப்பிடும் பொருட்டு பேரழிவுக்கான சர்வதேச உதவி வல்லுனர்களை அவ்வாட்சி அங்கு அனுமதிக்க வேண்டும்." என அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவின் கூட்டினரும் இந்த நிபந்தனைகளுக்கு ஒத்து பாடியிருக்கிறார்கள். Irrawaddy.org இணையத்தளத்தின் கருத்துப்படி, ஐராவதி நதிப்படுகை பகுதியில் மீட்பு பணியாளர்களுக்கு கட்டுப்பாடில்லாத அனுமதி வழங்க கோரி பிரிட்டன், டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய அனைத்து நாடுகளும் ஆட்சியை வலியுறுத்தி உள்ளன. கூடுதலாக 27 மில்லியன் டாலர் நன்கொடை அளித்து, ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதிநிதி பேர்னார்டு ஸ்ராஜ்னெர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் "கட்டுப்பாடற்ற அனுமதி" வழங்குவதற்கான தேவையை வலியுறுத்தினார். ஆஸ்திரேலியா 25 மில்லியன் டாலர் வழங்குவதற்கான வாக்குறுதியை அளித்திருக்கிறது, ஆனால் அதுவும் "சர்வதேச மதிப்பீட்டின் தேவை" மற்றும் "தடையில்லா அனுமதியுடன்" மட்டுமே கிடைக்கும்.

எல்லாவற்றையும் விட பிரான்ஸ் மிகவும் வலியுறுத்தலுடன் இருந்தது. மாநாட்டு நாளன்று, பர்மாவின் கடற்கரைக்கு அருகில் சர்வதேச கடல் எல்லைகளில் வட்டமிட்டுக் கொண்டிருந்த தமது கடல்படை கப்பலான Mistral இனை தாய்லாந்திலுள்ள புகெட்டிற்கு சென்று அதிலிருந்த உதவி பொருட்களை இறக்குமாறு பிரான்ஸ் திருப்பி விட்டது. குறிப்பாக, 1,000 டன் அளவிலான மனிதாபிமான உதவி பொருட்களை நேரடியாக இறக்கவும், வினியோகிக்கவும் மியான்மர் அதிகாரிகள் இணங்கவில்லை என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என ஓர் அமைச்சரக அறிக்கை குறிப்பிட்டது.

பின்னர், தமது நாட்டின் கூடுதல் உதவி மறுக்கப்பட்டதை நியாயப்படுத்தி பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி பேர்னார்ட் குஷ்நெர் பின்வருமாறு அறிவித்தார்: "எங்களிடம் மிக விலையுயர்ந்த உதவிப்பொருட்கள் இருந்தன. அவை இப்போது பர்மாவை விட்டு அகன்றுவிட்டன. முன்னர் எங்களிடம் இருந்த அவற்றை, எங்களால் அளிக்க முடியாத, இச்சமயத்தில் அவர்கள் நிறைய கேட்கிறார்கள்." பிரெஞ்சு முறையில் வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உதவிகளை இராணுவ ஆட்சி ஏற்க தயாராகவில்லை என்றால், மேற்கொண்டு எந்த உதவியும் கிடைக்காது. இராணுவத் தலையீடு உட்பட, பர்மாவில் உத்தியோகபூர்வ அனுமதியுடன் அல்லது அனுமதியில்லாமல் நேரடியாக தலையிட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் ஓர் அவசர கூட்டத்தை கூட்டுவதற்கான அழைப்பில் குஷ்நெர் முன்னிலையில் இருக்கிறார்.

ஓர் அரசியல் பிரச்சாரம்

ஐராவதி நதிப்படுகை பகுதியை நர்கீஸ் சூறாவளி சீரழித்த மூன்று வாரங்களுக்கு பின்னர், போதிய உதவி அளிக்கத் தவறிய பர்மிய தளபதிகளை குற்றஞ்சாட்டியும், தொண்டு அதிகாரிகள் மற்றும் அன்னியநாட்டு இராணுவங்களை நாட்டுக்குள் அனுமதிக்க கோரியும் அங்கு மேற்கத்திய அரசாங்கங்களின் சளைக்காத பிரச்சாரம் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மாநாட்டில் ஆரம்ப கட்ட தொகைகளுக்கு கூடுதலாக அனுமதிக்க மறுக்கும் அந்த நாடுகள், அந்நாட்டின் (பர்மாவின்) சோகத்தை எரிச்சலூட்டும் வகையில் இராணுவ ஆட்சிக்கு எதிரான ஓர் அரசியல் உந்துகோலாக பயன்படுத்த முயல்கின்றன என்பதையே எடுத்துக்காட்டுகிறது. பர்மிய தளபதிகள் பாதிக்கப்பட்டவர்களை அரசியலுக்காக பாவிப்பதாக குற்றஞ்சாட்டப்படும் போதினும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டினரும் கூட தெளிவாக அதையே தான் செய்கிறார்கள்.

"கட்டுப்பாடற்ற நுழைவுக்கான" கோரிக்கை ஒருபோதும் முடிவதாக இல்லை. தொண்டு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பர்மாவிற்குள் நுழைய அனுமதிப்பதற்கான வலியுறுத்தல்களை அடுத்து ஐராவதி நதிப்படுகை பகுதியில் தடையில்லாமல் நுழைவதற்கான கோரிக்கைகளும் பின்தொடர்ந்தன. அமெரிக்க இராணுவ விமானங்களை இரங்கூன் விமானத்தளத்தில் தரையிறக்க அனுமதிப்பதை தவிர்க்கும் ஆட்சியின் மீதான கண்டனங்களை அடுத்து பிரெஞ்சு, பிரிட்டன் மற்றும் அமெரிக்க போர்கப்பல்களை பாதிக்கப்பட்ட பகுதியில் அனுமதிப்பதற்கான கோரிக்கைகள் பின்தொடர்ந்தன. பர்மிய கடல் எல்லைக்குள் பிரெஞ்சு கப்பற்படை கப்பல் அனுமதிக்கப்பட்டால், இராணுவ ஆட்சியை கண்டிக்க குஷ்நெர் உடனடியாக ஒரு புதிய போலிக்காரணத்தை கண்டறிவார் என்பதை எவருமே உறுதியாக கணிக்கலாம்.

2004 சுனாமியால் உருவாக்கப்பட்ட பேரழிவுக்கு இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகியவை காட்டிய பிரதிபலிப்புபோல், பர்மிய தளபதிகள் அவர்களின் மீட்பு முயற்சிகளில் தகமையற்றவர்களாகவும் மற்றும் சூறாவளியில் பிழைத்திருப்பவர் மீதான அவர்களின் கவனமின்மை இரக்கமற்றது என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் வெளிநாட்டு உதவிக்கு "திறந்து விட" வேண்டும் என்ற இடைவிடாத கோரிக்கைகள் ஆயிரக்கணக்கில் பிழைத்திருப்பவர்களின் நலன் கருதி அல்லாமல், அதற்கு பதிலாக குழி தோண்டுவதற்கும், ஸ்திரமின்மைக்கு இட்டு செல்வதற்கும் மற்றும் இறுதியாக இராணுவ ஆட்சியை வெளியேற்றுவதற்குமான விருப்பங்களால் முன்னிறுத்தப்படுகிறது. ஆங் சன் சூ கி (Aung San Suu Kyi) தலைமையிலான ஜனநாயக எதிர்கட்சி எனப்படுவதன் கைகளில் ஆட்சியை ஒப்படைப்பதற்கான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரங்களால் திணிக்கப்பட்ட பொருளாதார தடைகளின் தொடர்ச்சியாக இந்த பிரச்சாரம் அமைகிறது.

இராணுவ ஆட்சியின் திறமையற்ற மீட்பு முயற்சிகளை மட்டுமே முழுமையாக வெளிப்படுத்தி வரும் சர்வதேச ஊடகங்களின் செய்திகளுக்கு இந்த நோக்கங்கள் வண்ணம் பூசுகிறது. உதவி பெறும் மக்களின் எண்ணிக்கையும் கூட வெகுவாக வேறுபடுகின்றன. பிழைத்திருக்கும் 2.4 மில்லியன் மக்களில் வெறும் 23 சதவீதத்தினர் மட்டுமே உதவி பெறுகிறார்கள் என பரவலான செய்தி ஒன்று குறிப்பிட்டது. The Wall Street இதழ் 42 சதவீதத்தினர் "சில வகையான அவசர உதவிகளை பெறுகிறார்கள்" என்ற மற்றொரு ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரத்தை வெளியிட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் "குறிப்பிடத்தக்க உதவிகளைப்" பெறுகிறார்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்ட இயக்குனர் கேத்லீன் கிரேவீரோ ஒரு புள்ளிவிபரத்தை தருகிறார்.

பர்மாவில் அரசு சாரா அமைப்புகளுக்கு உதவி வரும் பிரிட்டிஷ் வியாபாரி போல் ஸ்ராசான்னால் (Paul Strachan) மீட்பு நடவடிக்கைகள் மீது ஒரு ஆர்வமூட்டும் ஆய்வு அளிக்கப்பட்டது. கடந்த வாரஇறுதி Scotsman பத்திரிகையில் எழுதும் போது, இராணுவ ஆட்சியுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொண்ட அவர், உணவு மற்றும் மீட்பு பொருட்கள் அல்லாமல் பணமே முக்கியமாக தேவைப்பட்டுகின்றது என குறிப்பிட்டார்.

"பத்திரிகை அறிக்கைகளுக்கு மாறாக, ஒரளவு உதவி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிடைத்து வருகின்றது... மிக முக்கியமாக தேவைப்படுபவை இங்கு கிடைக்கின்றன. சீனா, இந்தியா மற்றும் தாய்லாந்திலிருந்து உடனடி வினியோகம் அங்கு தயாராக இருக்கிறது. உள்ளூர் நிறுவனங்கள் சிறந்த தயாரிப்புக்களை வழங்கும் போதும், சூறாவளியில் பிழைத்திருப்பவர்களுக்கு பிரிட்டனிலிருந்து கொண்ட வரப்பட்ட குடிநீர் போத்தில்கள் வழங்கப்படுகின்றன. விமானத்தில் கொண்டு வந்து வினியோகிப்பதை விட அங்கிருந்து எடுத்து வினியோகிப்பது மிகவும் எளிதானது. இது தென்கிழக்கு ஆசியாவில் ஒரு முக்கிய நிலப்பகுதியான பர்மா, பாரிய உற்பத்தி, மலிவு விலை, புலி பொருளாதாரத்தால் சூழப்பட்டுள்ளது. இது 'இருண்ட ஆபிரிக்கா' அல்ல... அங்கு விமானத்தில் உணவைக் கொண்டு வர வேண்டியதில்லை, அத்தியாவசியமானவற்றை சுலபமாக வாங்கக்கூடிய பணம் மட்டுமே தேவைப்படுகிறது." என ஸ்ராசான் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும், ஞாயிறன்று நடத்த மாநாட்டில் தேவையான பணம் மட்டும் வழங்கப்படவில்லை.

பர்மாவில் ஒரு பெரிய துன்பியல் நடந்து வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது, அதற்கு இராணுவ ஆட்சியே பொறுப்பாகும். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் பரிதாபம் என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரங்களின் கவனத்தில் மிகவும் கடைசியாக உள்ளது. இராணுவ ஆட்சியை மாற்றி மேற்கத்திய பொருளாதாரம் மற்றும் மூலோபாய நலன்களுக்கு நிறைய ஒத்துழைக்கும் ஆட்சியை அமர்த்துவதற்கு நடந்து வரும் முயற்சிகளில், இந்த பேரழிவு சாதாரண ஓர் அரசியல் கருவியாகி உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவுக்கு போட்டியாக வளர்ந்து வரும் போட்டியாளரான சீனாவுடன் பர்மிய தளபதிகள் மிகவும் நெருங்கி இருப்பதாக வாஷிங்டன் கருதுகிறது. உதவிக்காக பர்மா "திறந்து விடப்பட" வேண்டும் என்ற கோரிக்கைகளானது, அந்நாட்டின் மலிவுத் தொழிலாளர் மற்றும் வளங்களை (எண்ணெய் மற்றும் எரிவாயு உட்பட) சுரண்ட அந்நாட்டில் அன்னிய முதலீட்டாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற தொடர்ச்சியான அழைப்பை எதிரொலிக்கிறது.

பர்மாவை வழிக்கு கொண்டு வர அழுத்தம் அளிக்கும் முயற்சிகளில் பல காலனியாதிக்க மூர்க்கத்தனத்தை விட அதிகமானவை அங்குள்ளன. மே 18ல் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் "மீட்பாளர்களிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்" என்ற தலைப்பிட்ட செய்தியில், பர்மாவில் இராணுவ தலையீட்டிற்கான கோரிக்கைகள் அதிகரித்திருப்பதை எழுத்தாளர் டேவிட் ரீஃப் குறிப்பிட்டார். "உதவி என்பது ஒரு விஷயம். ஆனால் துப்பாக்கி முனையில் உதவி என்பது மனிதாபிமான நடவடிக்கைகளை அது ஒருபோதும் செல்லக்கூடாத இடத்திற்கு எடுத்துச் செல்கிறது. மேலும் உண்மை என்னவென்றால், நர்கீஸ் சூறாவளி நாட்களில் வெளியாகிய மனிதாபிமான யுத்தங்களுக்கான அழைப்புகளானது, எவ்வாறு தலையீட்டுக்கான திடீர் உந்துதல்கள், தற்போது எவ்வாறு சிறப்பாக கொண்டு செல்லப்படுகிறது என்ற தீவிரவான அபாயத்தின் ஓர் அடையாளமாக உள்ளது." என அவர் தெரிவித்தார்.

"19ம் நூற்றாண்டு ஐரோப்பிய காலனித்துவவாதத்தின் முனைவுகள் மனிதாபிமான நோக்கத்தை அடித்தளமாக கொண்டவை என அதன் ஆதரவாளர்களால் முன் வைக்கப்பட்டது." என நினைவு கூர்ந்து ரீஃப் பின்வருமாறு எழுதினார்: "இறுதியாக, மனிதாபிமான அடித்தளத்தில் இராணுவ தலையீடுகளை யார் முன்னெடுக்கிறார்கள் என்பது பற்றி கவனம் செலுத்துவது மிக முக்கியமாகும். மற்றவர்களுடன், 19ம் நூற்றாண்டில் இருந்த இரண்டு முக்கிய காலனித்துவ சக்திகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளால் முன்னெடுக்கப்படுகிறது. மேலும் அவர்கள் துல்லியமாக எங்கு தலையிட விரும்புகிறார்கள் - மன்னிக்கவும், பாதுகாப்புக்கான தங்களின் பொறுப்புணர்வை அவர்கள் எங்கு கொண்டு செல்ல விரும்புகிறார்கள்? கூடுதலாக அவர்கள் முன்னர் ஆட்சி செய்த அதே நாடுகளில் தான்."

ஒரு ஆரம்ப குறிப்பாக, சனியன்று ஆஸ்திரேலியன் இதழில் வெளியான ஒரு தொடர் விவாதத்தில் பிரெஞ்சு எழுத்தாளர் மற்றும் தத்துவஞானி பேர்னார்ட்-ஹென்றி லெவி எழுதினார் ஒரு குறிப்பில் சில சமயங்களில் பிரெஞ்சு காலனியாதிக்கம் மிகவும் மோசமாக இருந்ததில்லை என வரையறுத்தார். "படுகொலைக்குரிய பர்மாவின் சர்வாதிகாரிகளை கைதிக்கூண்டில் ஏற்று" என்ற தலைப்பிலான கட்டுரையானது வாதங்களை விட அசை சொற்களையே மிகுதியாக கொண்டிருந்தது. லெவியின் கருத்துப்படி, இராணுவ ஆட்சி பல்வேறு வகையில் பித்துப் பிடித்தும், குற்றம் செய்வதற்கான வெறியுடனும், இனவாதத்துடனும், வெளிநாட்டு விரோத மனப்பான்மையுடனும், மனநோய் பிடித்த, உணர்வு குழம்பிய, மனக்குழப்பமடைந்த, மாஃபியாக்கள் போன்ற, நாற்றம்மிக்க மற்றும் கோமாளித்தனமானது.

அவரின் அடைமொழிகளின் பட்டியலை குறிப்பிட்டு களைப்படைந்த லெவி குறிப்பிடுவதாவது: "இந்த நிகழ்வுகளை எதிர்நோக்கையில், வேதனை மற்றும் அனுதாபத்தின் மத்தியிலும் கொலை, வெறுப்பு மற்றும் மடமை ஆகியவற்றிற்கான இயந்திரத்தின் இந்த கொலைகாரர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னர் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்கும் இடையில் ஒருவர் தயங்குகிறார். இறுதியாக அந்த நாட்களை பிரான்ஸ் உருவாக்கியது, உலகின் மீது உரிமையை நிலைநாட்டியது மற்றும் தலையிடுவதற்கான கடமையைச் செய்தது."

இந்தோ-சீனா மற்றும் அல்ஜீரியாவில் யுத்தங்களில் உலகத்திற்கு இது போன்ற கொடுமைகளை அளித்த பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியின் தன்மைகள், எவ்வித சிறிய மிகைப்படுத்தலும் இல்லாமல் மீண்டும் நினைவிற்கு கொண்டுவரலாம். இதுதான் பர்மாவில் தலையிட வேண்டும் என்ற குஷ்நெரின் பிரச்சாரத்திற்கு பின் என்ன இருக்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.