World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்ா : பிரான்ஸ்

French government prepares new cuts in unemployment compensation

பிரெஞ்சு அரசாங்கம் வேலையின்மை இழப்பீட்டுத் தொகையில் புதிய குறைப்புகளை கொண்டுவர தயாராகிறது

By Kumaran Ira
31 May 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் அரசாங்கம் அதன் கடும் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் விரோதப் போக்கு பெருகுகையில், பிரெஞ்சு அரசாங்கம் இன்னும் கூடுதலான சீர்திருத்தங்களை தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரங்களை குறைக்கும் வகையில் கொண்டுவர முயன்று வருகிறது. இம்முறை சீர்திருத்தங்கள் வேலையின்மையில் இருப்பவரை இலக்கு கொண்டு, அவர்கள் இரு வேலை வாய்ப்புக்களை மறுத்தால் அவர்களுடைய வேலையின்மைக் காலத்தில் பெறும் நலன்கள் அகற்றப்பட்டுவிடும் என்பதன் மூலம், அவர்களின் நலன்களை குறைக்கவும், இன்னும் பரந்த அளவில் அவர்களை எளிதில் குறைவூதிய உழைப்புத் தொகுப்பில் இருத்துமாறு செய்யவும் நோக்கம் கொண்டுள்ளது.

மே 6ம் தேதி பொருளாதார மந்திரி "சமூக பங்காளிகளுடன்" --முதலாளிகள் அமைப்புக்கள், தொழிலாளர்கள் சங்கங்கள் என்று தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட இருக்கும் சமூக வெட்டுக்கள் குறைப்புத் தயாரிப்பில் பங்காளிகள் -- வேலையின்மை காப்புத் திட்டம் (Assurance Chomage) பற்றி மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த சந்திப்பு நடத்தினார். இதில் ஒரு வரைவுச் சட்டம் "நியாயமான வேலை வாய்ப்புக்கள்" (L'offre raisonable d'emploi) அளிக்கப்பட்டது; அது இந்த கோடைகால இறுதிக்குள் வாக்களிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சட்ட வரைவு மூன்று மாதங்கள் வேலையின்மையில் இருந்த பின்னர் வேலை தேடுபவர்கள் அவ்வேலைகள் குறைந்தது அவர்களுடைய முந்தைய ஊதியத்தில் 95 சதவீதத்தை கொண்டிருந்தால், அவர்களுடைய வீடுகளைச்சுற்றி 30 கி.மீ. சுற்றளவிற்குள் பணியிடத்தை கொண்டிருந்தால் (பொதுப் போக்குவரத்தில் 1 மணி நேரத்திற்குள் போக முடியும் என்றால்) "அவர்களுடைய தகுதிக்கு பொருத்தமான" வகையில் இருக்கும் இரு வேலை வாய்ப்புக்களை மறுக்கும் உரிமை அற்றவர்கள், என்று கூறுகிறது. ஆறு மாதங்களுக்கு பின்னர் வேலை தேடுபவர்கள் தங்கள் முந்தைய ஊதியத்தில் 80 சதவிதம் கிடைக்கும் இரு வேலை வாய்ப்புக்களுக்கு மேல் நிராகரிக்கும் உரிமையை பெற மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆயினும், ஒரு ஆண்டு வேலையில்லாமைக்கு பின்னர், "நியாயமான வேலை நிலைமைக்கான" தேவையானது வேலையின்மைக் காலத்தில் பெறும் நலன்களைவிட (முந்தைய ஊதியத்தில் 57.4 சதவீதம்) அதிகமான ஊதியத்தை கொடுக்கும், அதுவும் முன்பு குறிப்பிட்டுள்ள தூரத்திற்குள் இருக்கும் பணிநிலையத்தில் கிடைக்கும் எந்த வேலைக்கும் மேலும் தளர்த்தக்கூடியதாக இருக்கும்.

தொழிற்சங்கங்கள், முதலாளிகளின் அமைப்பிற்கு சீர்திருத்த நடவடிக்கைகளை விவரித்த ஆவணம், இரு முறை அப்படி நிராகரித்தபின், "வேலை தேடுபவர்கள் வேலையின்மை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வேலையின்மைக்காலத்தில் பெறும் நலன்கள் முடிந்துவிட்டது என்ற நிலையை எதிர்கொள்ளுவர்" எனக் கூறுகிறது.

மைய-இடது நாளேடான Le Monde சட்டவரைவின் நோக்கத்தை, கட்டுரையின் தலைப்பில் நன்கு கூறியது: "இலக்கு: வேலையில்லாதோரை 'மோசமான வேலைகளை' எடுத்துக் கொள்ள நிர்பந்தித்தல்."

மே 26 அன்று தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுடன் சட்ட வரைவில் இறுதி வடிவத்தை அமைக்கும் இன்னொரு கூட்டத்திற்கு பின்னர் தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவத்தின் பிரதிநிதிகள் இதை "நியாயமற்றது", "உகந்தது அல்ல" என்று குறைகூறியுள்ளனர். தொழிற்சங்கங்களின் வழக்கமான நிலைப்பாட்டிற்கு பொருந்தும் வகையில் -- பொதுவாக தேவையான திசையில்தான் என்றாலும் அரசாங்க சமூக வெட்டுக்கள் மிக அதிகமாக இருக்கின்றன, எனக் கூறுவதாகும்-- CGT யின் தலைவர் Jean-Christophe Le Duigou கூறினார்: "மீண்டும் தொழிலாளர்களை ஒரு வேலை தேடுவதற்காக அழுத்தம் கொடுப்பதற்கு துணை வழிவகைகள் தேவை இல்லை."

இந்த ஆண்டு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்தபின் வந்த தொடர்ச்சியான சட்டமன்ற தீர்மானங்களில் கடைசியாக வந்ததுதான் இது; சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு நடவடிக்கை அமைத்த பின்னர், சிறு விமர்சனங்களை வைத்தலாகும். இது போல் நடந்த மற்ற நேரங்களில் ஜனவரி 2008ல் தொழிலாளர் நடத்தை விதி நிர்வாகத்திற்கு சாதகமாக மீண்டும் மாற்றி எழுதப்பட்டது உள்ளடங்கும்; மார்ச் 2008 சீர்திருத்தம் தொழிற்சங்க பிரதிநிதித்துவம் பற்றியது. தொழிற்சங்கங்கள் இப்பணியை செய்தபின், அக்டோபர்-நவம்பர் 2007 போக்குவரத்து வேலைநிறுத்தங்கள் ஓய்வூதியக் குறைப்புக்களுக்காக நடைபெற்றதை நெரித்தபின், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி நீண்ட தலையங்கம் ஒன்றை Le Monde நாளேட்டில் "வலுவான தொழிற்சங்கங்களுக்காக" என்ற தலைப்பில் எழுதினார்: அது ஆரம்பித்த விதம், "எமது நாட்டிற்கு தேவைப்படும் சீர்திருத்தங்களை அளித்து செயல்படுத்துவதற்கு, நாம் தொழிலாளர்கள், முதலாளிகள் ஆகியோரின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்வோருடன் பங்காளித்தனம் கொள்ள வேண்டும்."

Le Duigou பைனான்சியல் டைம்ஸ் பேட்டி ஒன்றில், இதை எதிர்கொண்டு சார்க்கோசியை பாராட்டினார்: "சமூக உரையாடலுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதை அவர் அறிந்துள்ளார். எமது நாட்டின் சமூக நிலைமையில் நாம் ஒரு திருப்புமுனையில் இருக்கின்றோம் இருப்பவை மாற வேண்டும் என்பதை அனைவரும் நம்புகின்றனர்."

முதலாளித்துவ ஐரோப்பாவில் தொழிலாளர்கள் ஊதியங்கள், வாழ்க்கை தரங்களை அடிமட்டத்திற்கு கொண்டு போவதற்காக நடத்தப்படும் போட்டியில் போட்டித்தன்மைமிக்கதாக இருக்கும் பொருட்டு, வேலையின்மைக்காலத்தில் பெறும் நலன்களைக் குறைப்பது, இன்னும் பரந்த முறையில் சமூகச் செலவினத்தை வெட்டுவது அவசர தேவை என்பதை பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் உணர்கிறது.

இவ்விதத்தில், ஜேர்மன் முதலாளித்துவம் பிரெஞ்சு முதலாளித்துவத்தைவிட முன்னணியில் உள்ளது. ஜேர்மன் சமூக ஜனநாயக அரசாங்கம் சமூக நலம் (Hartz IV) என்ற பெயரில் சீர்திருத்தத்தை 2005ல் அறிமுகப்படுத்தியது; அதன்படி சமூக செலவினங்களில் மகத்தான வெட்டுக்களை கொண்டுவருவதில் வெற்றி பெற்றது. பல வேலையற்றவர்கள் மிகக் குறைந்த ஊதியம் உடைய வேலைகளை எடுத்துக் கொள்ளும் கட்டாயத்தை ஏற்படுத்தியது; அதன் விளைவு பல வேலையற்றவர்கள் தங்களின் வேலையற்ற காலத்திற்காக பெறும் நலன்களை இழந்தனர் Hartz IV சட்டங்களின்படி, வறுமையில் வாடும் மில்லியன்கணக்கான ஜேர்மனியர்கள், மாதம் 347 யூரோக்கள்தாம் பெறுகின்றனர். அரசாங்கத்தின் சமீபத்திய வறுமை பற்றிய அறிக்கையின்படி, ஜேர்மனியர்களில் 8ல் ஒருவர் (13 சதவிகிதத்தினர்) வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்; இந்த எண்ணிக்கை Hartz IV வந்த பின் அதிகமாகிவிட்டது.

ஆயினும்கூட, பிரெஞ்சு முதலாளித்துவம் சமூகச் செலவினத்தை குறைக்க, குறிப்பாக வேலையற்றகாலத்தில் பெறும் நலன்களைக் குறைக்க, நீண்ட பிரச்சாரத்தை நடத்தியது.

பிரான்சில் UNEDIC (National Professional Union for Employment in Industry and Trade) அமைப்பின் வேலையற்றோர் காப்பீட்டுத் திட்டம் 1958ம் ஆண்டு நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கட்டுப்பாட்டினுள் நிறுவப்பட்டது. இது வேலை தொடர்புடைய முறை ஆகும்; அதன் நிதி பெரும்பகுதி முதலாளிகள் மற்றும் தொழிலாளிகளின் பங்களிப்பில் இருந்து நிதியூட்டப்பட்டு, தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படுகிறது. UNEDIC மற்றும் ASSEDIC (Associations for Employment in Industry and Trade) வேலையற்றோர் காப்பீட்டுத் திட்டத்தை நிர்வகிக்கின்றன. ASSEDIC வேலைத்திட்டத்தை நடத்தும் பொறுப்பையும், UNEDIC, அதன் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணியையும் செய்கின்றன.

மற்றொரு முக்கியமான அமைப்பு, ANPE -National Employment Agency-- 1967ல் தோற்றுவிக்கப்பட்டது; இது பொருளாதாரம், தொழில் மற்றும் வேலைகள் அமைச்சரகத்தின் கீழ் ஒரு பிரெஞ்சு பொது நிர்வாக அமைப்பாக ஏற்பட்டது. இதன் முக்கிய பணி வேலை தேடுபவர்களையும் தேர்ந்தெடுக்க விரும்பும் முதலாளிகளையும் இணைப்பது ஆகும்.

1970 களின் கடைசிப் பகுதியில் இருந்து பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், குறிப்பாக எஃகு, உலோகம், சுரங்கத் தொழில் போன்றவற்றில், வேலையின்மை விகிதம் கணிசமாக பெருகிற்று; UNEDIC யின் நிதி நெருக்கடிகள் அடிக்கடி ஏற்படலாயின. 1973ல் வேலையில்லாதோர் 400,000 என்ற எண்ணிக்கையில் இருந்து 1975ல் இது 840,000 என்று ஆயிற்று.

1980 களின் ஆரம்பத்தில் இருந்து, தொடர்ந்த சீர்திருத்தங்கள் வேலையின்மைக்காலத்தில் பெறும் நலன்களைக் குறைத்துள்ளன --கட்டண பங்களிப்பு குறிப்பிட்ட காலத்திற்கு தேவை என்ற பிரிவிலும், நலன்கள் அளிக்கும் பிரிவு இரண்டிலும் இப்படி ஏற்பட்டது. வேலையின்மைக்காலத்தில் பெறும் நலன் முறைக்கு 14 மாதங்கள் பங்களிப்பு கொடுத்தபின், 50 வயதிற்குக் குறைந்த smicard (ஒரு குறைந்த பட்ச ஊதியம் பெறும் தொழிலாளி), 36 மாத காலத்திற்கு 1979ல் வேலையின்மைக்காலத்தில் பெறும் நலன்களை பெற்றிருப்பார்; 1984ல் அது 30 மாதமாகவும், 2001ல் அது 23 மாதமாகவும் இருந்தது. 1979ல் வேலையற்ற குறைந்த பட்சத் தொழிலாளிகள் தங்கள் மொத்த வருமானத்தில் 60.8 சதவீதத்தை 36 மாதங்களுக்குப் பெற்றனர். இது 1997ல் 30 மாதங்களுக்கு 53.5 சதவீதம் என்று ஆயிற்று. 1990ல் வேலையின்மை காப்பீடு இரு வேலைதேடுவோரில் ஒருவருக்குத் துணையாக இருந்தது.

இந்தக் குறைப்புக்கள் தொடர்ச்சியாக சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கங்களின் கீழ் வந்தன; ஆரம்பத்தில் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் கீழ்; தொழிலாளர்கள் குறைந்த அல்லது அதிகமான முறையற்ற வேலை நிகழ்வுகளால் தாக்குலுக்கு ஆளான விதத்தில் பெரும்பாலும் அடையப்பட்டன. 1982ல் இழப்பீட்டுத் தொகைகள் வேலையற்ற தொழிலாளி எத்தனை காலத்திற்கு UNEDIC க்கு அவர் வேலையில் இருந்தபோது கட்டணம் கொடுத்தாரோ, அது குறியீடாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

மித்திரோன் அரசாங்கம் 1984 சட்டத்தின்படி நீண்ட கால பங்களிப்பு வரலாற்றை கொண்டிராதவர்கள்மீது தாக்குதலை நடத்தியது; நடைமுறையை இரு பிரிவுகளாக செய்தது; தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் நிர்வகிக்கும் வேலையற்றோர் காப்புத் திட்ட நிதி; இது நீண்ட கால கட்டணம் அளித்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்; இதைத்தவிர அரசாங்கம் நிர்வகிக்கும் துணை ஆதரவு முறை; இதன்படி வேலையின்மை காப்புத் திட்டத்தில் சேர தகுதி அற்றவர்கள், நீண்ட கால வேலையற்றோர், இளைஞர்கள், பாதுகாப்பு இல்லாத வேலையில் இருப்பவர்கள் ஆகியோர் ஒரு பிரிவில் கொண்டுவரப்பட்டனர்.

1992 சீர்திருத்தம் இன்னும் கூடுதலான வகையில் நீண்ட கால வேலையற்றோர் உரிமைகளைத் தாக்கியது: வேலையின்மைக்காலத்தில் பெறும் நலன்கள் குறைவாகும் தரத்திற்கு மாற்றப்பட்டன; ஒவ்வொரு நான்கு மாதமும் 17 சதவீத வெட்டுக்கள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.

டிசம்பர் 2000 த்தில் ஒரு உடன்பாடு முதலாளிகள் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களால் கையெழுத்திடப்பட்டன; இதன்படி அனைத்து வேலை தேடுபவர்களும் PARE என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் (மீண்டும் வேலைக்கு செல்ல உதவும் திட்டம்). இதன் விதிகளின்படி அவர்கள் நடந்து கொள்ளவில்லை என்றால் நலன்களை குறைப்பை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும். இதன் விளைவாக 2000ம் ஆண்டில் வேலையின்மையில் வாடியவர்களில் 46 சதவீதத்தினர் வேலையின்மை நலன்கள் பெறுவதில் இருந்து ஒதுக்கப்பட்டனர்; 31 சதவீதத்தினர் மாதம் ஒன்றுக்கு 460 யூரோக்கும் குறைவாக பெற்றனர். 2002ல் முதலாளிகள் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றொரு கடுமையான உடன்பாட்டில் கையெழுத்திட்டன; அதிலும் நலன்கள் பெறும் தகுதி கடினமாக்கப்பட்டது. இந்த உடன்பாடும் வேலையின்மை இழப்பீட்டுத் தொகையை 30 மாதங்களில் இருந்து 23 மாதங்களாக குறைத்தது.

பொதுவான சந்தைச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, ஜனவரி மாதம் தொழிற்சங்கங்களுடனும் முதலாளிகள் குழுக்களுடனும் பேச்சுவார்த்தைகள் மூலம் வந்த விளைவை ஒட்டி, அரசாங்கம் ANPE, ASSEDIC இரண்டையும் ஒன்றாக இணைத்துவிட்டது. இந்த இணைப்பு இரு அமைப்புக்களிலும் வேலைக் குறைப்புக்களை ஏற்படுத்தும்; வேலையில்லாதவர்கள் மீது கூடுதலான கட்டுப்பாடுகள், பொருளாதாரத் தடைகள் ஆகியவை வரும். மே 15ம் தேதி ANPE யில் இருந்த ஊழியர்கள், பொதுப்பணித் துறை ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டு, பொதுத்துறையில் வேலைக் குறைப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தம் செய்தனர்.

இந்த குறைப்புக்கள் வேலையின்மை வீதம் UNEDIC இன் பொறுப்பக்களை சற்று குறைந்திருக்கும் நேரத்தில் துல்லியமாக இடம்பெற்றுள்ளன; மற்றும் வரவு/செலவு திட்டத்தில் உபரியை கொடுத்துள்ளது. சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம் அரச கணக்கை சீர் செய்வது என்று இல்லாமல் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை தாக்குவது என்ற மூலோபாய முடிவிற்கு செயல்வடிவம் கொடுப்பதுதான் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

தற்போதைய வேலையின்மை விகிதம் 7.8 சதவீதம் ஆகும்; இது 2 மில்லியன் வேலை அற்ற தொழிலாளர்களை பிரதிபலிக்கிறது. DARES (தொழில்துறை அமைச்சரகத்தின் ஆராய்ச்சித் துறை) கொடுத்துள்ள அறிக்கையின்படி 2006ல் வேலையற்றோரில் 51 சதவீதத்தினர்தான் UNEDIC - வேலையற்றோர் காப்புத் திட்டத்தின்கீழ் வந்திருந்தனர். ஆனால் இன்று 16.5 மில்லியன் ஊழியர்கள், வேலையின்மை காப்புத் திட்டத்திற்கு கட்டணம் செலுத்துகின்றனர்; 30 பில்லியன் யூரோக்களுக்கு மேல் வருமானத்தை தோற்றுவிக்கின்றனர்.

APNEE கருத்தின்படி, வேலையற்ற தொழிலாளர்கள் அமைத்துள்ள ஒரு அமைப்பு, "2005ல் 15 பில்லியன் பற்றாக்குறையை காட்டிய பின்னர் UNEDIC 2006ல் 344 மில்லியன் உபரியை மீண்டும் காட்டியுள்ளது, 2005ல் 3.5 பில்லியன் மற்றும் 2008 க்கு 5 பில்லியன் என கணிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வியத்தகு முன்னேற்றம் வேலையின்மை தொகைகளை வாங்குபர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஏற்பட்டுள்ளது; வேலையற்றவர்களில் பாதிக்கும் மேலானவர்களுக்கு (52.5 சதவிகிதம்) ASSEDIC ஏதும் கொடுப்பதில்லை. இந்த நடவடிக்கையின் இலக்கு பற்றாக்குறையை குறைக்க வேலையற்றோரின் தோள்களில் வைத்தல், அதே நேரத்தில் மக்கள் கருத்தை திருப்தி செய்யும் விதத்தில் வேலையற்றோர் வீதத்தை குறைத்துக் கூறுதல் என்ற வகையிலான படுகொலையை தொடர்வதுதான்."