World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : சீனாChinese earthquake victims face continuing hardship and new threats சீனப் பூகம்ப பாதிப்பாளர்கள் தொடர்ந்து இடர்பாடுகளையும் புதிய அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளுகின்றனர் By John Chan சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாநிலத்தில் பூகம்பம் தாக்கி கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு பின்னரும் மில்லியன் கணக்கான மக்கள் இன்னமும் பேரழிவுப் பாதிப்பை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். 68,000 மக்களுக்கும் மேல் மடிந்து, 18,000 பேரைக் காணோம் என்ற நிலையில், இறுதி இறப்பு எண்ணிக்கை 80,000 ஐ தாண்டக்கூடும். கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, தற்காலிகமான உறைவிடங்களில் போதிய தேவைகளின்றி வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் பேரழிவுகளான வெள்ளங்கள், நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படக் கூடும்; மேலும் பூகம்பத்திற்குப் பின் வரும் சக்தி வாய்ந்த அதிர்வுகளின் அச்சமும் உள்ளது. செவ்வாயன்று சிச்சுவானிலும், நூற்றுக்கணக்கான மைல்கள் தள்ளியிருக்கம் ஷான்க்சி மாகாணத்திலும் இரண்டு நிலஅதிர்வுகள் மற்றும் 420,000 வீடுகளை அழித்தன. கடந்த ஞாயிறன்று மற்றொரு வலுவான பின்னதிர்வு வடக்கு சிச்சுவானை தாக்கி ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்தது. உதவி நடவடிக்கைகளின் மாபெரும் அளவு பேரழிவின் பரப்பைக் குறிக்கிறது. செங்டு இராணுவப் பகுதியின் துணைத் தளபதியான லூ டெங்மிங், 178,000 இராணுவ, துணை இராணுவ போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக புதனன்று தெரிவித்தார். அவர்கள் அரை மில்லியன் டன்னுக்கும் மேலான உதவிப் பொருள்களை தரை மூலமாகவும் மற்றும் ஒரு 5,350 டன்களை வான்வழி மூலமும் அனுப்பி வைத்துள்ளனர். இராணுவம் 4,281 கி.மீ.நீளத்திற்கு சேதப்பட்ட சாலைகளை செப்பனிட்டுள்ளது; 119,000 கூடாரங்களைக் கட்டியது; 2 மில்லியன் கன மீட்டர்களுக்கும் மேலான இடிபாட்டு பொருட்களை அகற்றியுள்ளது. 3,336 தப்பிப் பிழைத்தவர்களை காப்பாற்றியுள்ளதோடு, 305,300 பேருக்கு மருத்துவ உதவி அளித்து 44 தற்காலிகப் பள்ளிகளையும் கட்டியுள்ளது. மழைக் காலம் வந்துவிட்டது நிலச்சரிவுகள் ஏற்படுத்தியுள்ள ஆற்றுத் தடுப்புக்கள் திடீரென வெடித்து கடும் வெள்ளங்கள் ஏற்படும் ஆபத்துக்களை அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மக்களை மியாங் பகுதியில் இருந்து வெளியேற்றலாமா என்பது பற்றி அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்; அப்பகுதியில் 36 "பூகம்ப ஏரிகள்" தடுக்கப்பட்ட ஆறுகளால் ஏற்பட்டுள்ள; இவற்றில் 28 பெருக்கெடுத்து ஓடும் அபாயத்தில் உள்ளன. மிகப் பெரிய அச்சுறுத்தல் டாங்ஜியஷான் "பூகம்ப ஏரி" என்று ஜியான்ஹீ ஆற்றில் இருந்து வருகிறது; இது கிட்டத்தட்ட 170 கன மீட்டர்கள் நீரைத் தேக்கிவைத்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நீர்மட்டங்கள் உயரவே, 1,000 சீன இராணுவத்தினரும் பொறியியல் வல்லுனர்களும் நாள் முழுவதும் கால்வாய்கள் வெட்டுதல், வெடி மருத்துகள் பெரும் இயந்திரங்கள் ஆகியவை பகுதியில் பயன்படுத்துவதற்காக அனுப்பப்படுவதற்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதன் நோக்கம் மெல்ல மெல்ல நீரை வடித்து "அணையின்மீது" இருக்கும் அழுத்தத்தை குறைப்பது ஆகும். டாங்ஜியாஷான் 80 சதவீத கட்டிடங்கள் தகர்க்கப்பட்ட மிக மோசமான பாதிப்பிற்கு உட்பட்ட சிறுநகரங்களுள் ஒன்றான பெய்சுவானுக்கு வடக்கே உள்ளது. வெள்ளியன்று அங்கிருந்து 197,500 பேர் ஜியானே ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதிக்கு அகற்றப்பட்டனர். இன்னும் கூடுதலான வெளியேற்றங்களும் தேவைப்படக்கூடும்; இது ஏற்கனவே பெரும் பணியில் கூடுதலாக ஈடுபட்டுள்ள நிவாரண உதவிக்கு இன்னும் அதிக சிரமங்களைத் தரும். சீனச் செய்தி ஊடகம் இந்த வாரம் முறையான பயிற்சிகள் ஆயிரக்கணக்கான மக்கள் வேறிடத்திற்கு செல்வதற்காக கொடுக்கப்படுகின்றன என்று அறிவித்துள்ளது. ஆனால் தேவைப்படும் 70 நிமிஷத்திற்குள் எப்படி 300,000 பேர் ஜியாங்யோ நகரத்தில் இருந்து அகற்றப்பட முடியும் என்பது தெளிவாக இல்லை. மே 29 நியூ யோர்க் டைம்ஸ் பதிப்பின்படி, மியான்யாங் நிவாரண நடவடிக்கைகளின் தலைவர் இதன் நோக்கம் 1.3 மில்லியன் மக்களை நான்கு மணி நேரத்திற்குள் எந்தவித இறப்பும் இன்றி டாங்ஜியாஷன் கரை உடைப்பு ஏற்பட்டால் அகற்றுதல் என்பதாகும் என்றார். "பூகம்ப ஏரிகளைத்தவிர" டஜன்கணக்கான மற்ற அணைகளும் சேதப்பட்டுள்ளன. சிலவற்றில் இருந்து கசிவு ஏற்பட்டு கூடுதலான ஆபத்துக்கள் வெளிப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் சீனாவின் பெருகிய விசைத் தேவையில் விரைவில் இலாபம் காணலாம் என்ற நோக்கத்துடன் கட்டப்பட்டனவே அன்றி, நிதானமான, அறிவியல் திட்டவகையில் அல்ல. சீனப் பிரதமர் வென் ஜியாபோ "பூகம்ப ஏரிகள்" கையாளப்படுவது முன்னுரிமை பெறும் என்று கூறியுள்ளார். ஆனால் Agence France-Press இடம் ஒரு நீர்வளத் துறை அதிகாரி உள்ளூர் அரசாங்க மட்டத்தில் இதற்கு விடையிறுப்பு குறைவாக இருப்பதாக தெரிவித்தார். "சில நேரம் உள்ளூர் அதிகாரிகள் வெளியேற்றுவது மிகவும் கடினமான செயல் என்று நினைக்கின்றனர்; அது தேவையில்லை என்ற கருத்தில்தான் உறுதியாக இருக்கின்றனர்; ஏனெனில் ஆபத்து எந்த அளவிற்கு இருக்கும் என்பது தெரியாது என அவர்கள் கருதுகின்றனர்." கடந்த இரு தசாப்தங்களாக சீனாவில் கட்டவிழ்க்கப்பட்டுள்ள "சந்தை சீர்திருத்தம்" என்பது கடுமையாக உள்ளூர் அரசாங்க அதிகாரிகளை மைய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதை பெரும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. பெருநகரங்கள், பேரூர்கள் மற்றும் பகுதிகள் ஒன்றுடன் ஒன்று பெரும் போட்டியில் முதலீட்டை ஈர்ப்பதற்காக ஈடுபட்டுள்ளன. உள்ளூராட்சிகள் பல நேரமும் இயற்கை பேரழிவுகள், சுற்றுச் சூழல் பிரச்சினைகள் அல்லது சுகாதாரத்திற்கான ஆபத்து ஆகியவற்றை மறைக்கின்றனர்; ஏனெனில் உற்பத்தியில் தடைகள் அல்லது செலவினங்கள் கூடுதல் ஆதல் ஆகியவற்றை அவை தவிர்க்க விரும்புகின்றன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) அதிகாரிகள் ஏற்கனவே சமீபத்திய நாட்களில் நிவாரண முயற்சிகள் "சோசலிசத்தின் திறமையை" நிரூபணம் செய்துவிட்டதாக அபத்தமான முறையில் கூறுகின்றனர். உண்மையில் சீனாவில் முதலாளித்துவ சந்தை பெரும் குழப்பமான முறையில் செயல்படுவது நிவாரணப் பணிகளையும் அடிப்படை வசதிகளைகள் கொடுக்கப்படுவதையும் கடுமையாக சமரசத்திற்கு உட்படுத்தியுள்ளது. உதாரணமாக, இந்த ஆண்டு ஆரம்பத்தில் "பனிப் பேரிடர்" காலத்தில் அரசாங்கத்தின் விசை நிறுவனங்கள் ஒத்துழைக்க மறுத்து வேண்டுமேன்றே பல இருட்டடிப்புக்களை செய்தன; அவை அதிகாரிகள் மின்விசைக் கட்டண அதிகரிப்பை அகற்றுவதற்காகவும், அதையொட்டி கூடுதலான இலாபம் பெறலாம் என்பதற்காகவும் செய்யப்பட்டன. நிவாரணப் பணிகளில் தொடர்பு உடையவர்கள் பலரும் தப்பிப் பிழைப்பவர் பற்றி உண்மையான அக்கறைதான் கொண்டுள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நிவாரணப் பணியில் தீவிர குறைகள் இல்லை என்று காட்டும் வகையில் ஒரு பொது உறவுப் பிரச்சாரத்திற்கு, மக்கள் கருத்தை திருப்தி செய்யவும், வெளி முதலீட்டாளர்களுக்கு அரச எந்திரம் இத்தகைய நெருக்கடிகளை எளிதில் எதிர்கொள்ளும் என்பதைக் காட்டுவதற்கும், உயர்மட்ட தலைவர்களான பிரதமர் வென் போன்றவர்கள் திரட்டப்பட்டனர். சீனாவின் முக்கிய நிதிய ஏடான Caijing மே 27 அன்று மியான்யாங் நகரத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் காணப்படும் பெரும் குழப்பங்களை பற்றித் தகவல் கொடுத்துள்ளது. நோயாளிகளில் முன்று வகையினர் உள்ளனர். முதல் பிரிவில் இராணுவம் அல்லது மீட்புக்குழுவினால் கொண்டுவரப்படுபவர் இருக்கின்றனர். இரண்டாவது பிரிவில் பாதிப்பிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மாற்றப்பட்டவர்கள் உள்ளனர். ஆனால் மூன்றாம் பிரிவு --தாங்களாகவே மருத்துவமனைக்கு வரும் அகதிகள்-- தாங்கள் செலவழிக்கும் பணத்தில் ஒரு பகுதியைத்தான் திரும்பப் பெற முடியும், அல்லது அது கூட கிடைக்காது என்று உள்ளது. அவர்கள் ஒரு அடையாள அட்டையைக் காட்ட வேண்டும், "அகதி என்ற சான்றிதழை" காட்ட வேண்டும்; பலரும் அடையாள அட்டைகளை பேரழிவில் இழந்துவிட்டனர்; அல்லது அவை அழிக்கப்பட்டுவிட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் மற்ற மாநிலங்களில் இருக்கும் மருத்துவ மனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். "சில மருத்துவமனைகளும் இத்தகைய மாநில மாற்றங்கள் என்று வந்துள்ளதால் பாதிக்கப்பட்ட அமைப்புக்களும் நிதி பெறுவதற்கு கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. மாநிலத்திற்கு மாநிலம் நிதி பெறும் நடவடிக்கைகள் மாறுகின்றன என்பதை கைஜிங் அறிந்தது என்று கட்டுரை விளக்குகிறது. உதாரணமாக ஹூபேயில் காயமுற்றவர்களும் அவர்களுடைய செவிலியரும் உதவித் தொகை பெறுவர். இப்படி வழிவகைகள், விதிகள் ஆகியவை மையப்படுத்தப்படாமல் இருப்பது 1990 களில் "பணம் கொடுத்துப் பயன் பெறுக" என்று வந்த திட்டத்தின் விளைவு ஆகும்; அப்பொழுதில் இருந்து பொது மருத்துவ மனைகள் தனியார் வணிகம் போல் திறமையாக நடைபெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. பூகம்பம் அதன் ஊழல் நிறைந்த திறமையைற்ற அதிகாரத்துவ ஆட்சியின் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக CCP ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. சீனா முழுவதும் தொழிலாளர் மக்கள் மற்றவர்களிடையே முன்னோடியில்லாத வகையில் பாதிக்கப்பட்டவர்கள்பால் பெரும் பரிவுணர்வு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 200,000 தொண்டர்கள் சிச்சுவானில் நடக்கும் நிவாரணப் பணிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் இதற்காக வந்துள்ள நன்கொடைகள் 35 பில்லியன் யுவான் அல்லது 55 பில்லியன் டாலர் என்று உள்ளது. உள்ளூர் அதிகாரிகள் உதவிகள் அளிப்பதில் காட்டும் ஊழலைத் தெரிவித்து இணைய தள அறிக்கைகள் குற்றம் சாட்டியுள்ளன. அரசாங்கம் அத்தகைய ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக "விரைவான, கடுமையான, அபராதங்களை" விதிக்கும் என உறுதி மொழி கூறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தேசிய தணிக்கை மற்றும் உள்ளூர் தணிக்கை அலுவலகங்களில் இருந்து 300 சிறப்பு அலுவலர்கள் நன்கொடைகள் நல்ல முறையில் பயன்படுத்துவதை கண்காணிக்கும் "வெளிப்படையான" நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சீற்றம் எளிதில் வெடித்துவிடக்கூடும் என்பதை பெய்ஜிங் நன்கு அறிந்துள்ளது. சிச்சுவானினில் கட்டிடங்கள் மோசமாக கட்டமைக்கப்படுவது, குறிப்பாக பள்ளிக் கட்டிடங்கள் பற்றி பரந்த எதிர்ப்பு உணர்வு உள்ளது; அதையொட்டி பல மரணங்கள் நிகழ்ந்து விட்டன. பேரிடருக்கு தயாராக இருத்தல், நிவாரணப் பள்ளி கட்டமைத்தல் என்னும் Tsinghua பல்கலைக்கழகத்தில் இருக்கும் பயிலகத்தின் பேராசிரியரான Liu Jingbo மே 29 அன்று கூறினார்: "பூகம்பத்திற்கு பிரகு பெய்சுவான் நகரத்தின் நிலை பற்றிய காட்சிகளைப் பார்த்த போது நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். ஏராளமான மக்கள் வசிக்கும் நகரம் ஒன்று இத்தகைய ஆபத்து நிறைந்த பகுதியில், அதிலும் மலையடிவாரத்திலேயே அமைக்கப்படலாம்? ஒரு பூகம்பம் ஏற்பட்டால் கட்டிடங்களின் சரிவு மட்டும் மக்களை உயிரோடு புதைப்பதில்லை, அவற்றைத் தொடரும் மிகப் பெரிய கற்கள், மணல்சரிவு துகள் ஓட்டங்கள் ஆகியவையும் உயிரைப் பறிக்கும்." உள்ளூராட்சியில் நகர்ப்புறத் திட்ட வளர்ச்சிப் பிரிவின் "அறியாமைதான்" நகரத்தில் 15,000 பேர் இறந்ததற்கு காரணம் என்றும் லியு குற்றம் சாட்டியுள்ளார். சீனாவின் மற்ற பகுதிகளில் இருப்பதைப் போல் இதுவும் அறியாமை காரணமாக இல்லாமல் கட்டிடம் கட்டுபவர்கள், உள்ளூர் அரசாங்கம் ஆகியவற்றின் இலாப உந்துதல்தான் கட்டிட நெறிகளை தூக்கி எறிந்து குறைவான பாதுகாப்புத் தேவைகளையும் அகற்றிய வகையில் கட்டிடங்கள் கட்ட அனுமதித்துள்ளன. பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து சரிந்த அளவில் கிட்டத்தட்ட 10,000 சிறுவர் இறந்து போயினர். தங்கள் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் பல நகரங்களிலும் கடந்த வார இறுதியில் இருந்து எதிர்ப்புக்களை நடத்தி தரக்குறைவான பள்ளிக் கட்டிடங்களை கட்ட அனுதித்த ஊழல் அதிகாரிகளுக்குத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர். மியான்ஷூ நகரத்தில் உள்ள Fuxin No.2 துவக்கப்பள்ளியில் மடிந்துவிட்ட மாணவர்கள் பற்றி பெரும் தெரிப்புத் தெரிவித்து பெற்றோர்க்ள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் உள்ளூர் கட்சி அலுவலர் ஒருவரை சூழ்ந்து கொண்டு பள்ளில் 127 இறப்புக்கள் ஏற்பட்டதை மறைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர் நியூ யோர்க் டைம்ஸ் கொடுத்த தவகல்; "இதற்கு மறுநாள் மியன்சுவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் பெற்றோர்களுடன் பேசுவதற்கு வந்து அவர்கள் மாநிலத் தலைநகரான செங்டுவிற்கு அணிவகுத்து செல்வதை தடுத்து நிறுத்தினர்; உயர்மட்ட அதிகாரிகள் இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்காக பெற்றோர்கள் செல்ல இருந்தனர். உள்ளூர் கட்சித் தலைவர் ஜியாங் குஹோஹா அவர்கள் கால்களில் விழுந்து எதிர்ப்பைக் கைவிடுமாறு கோரினார்; ஆனால் பெற்றோர்கள் அவரை முகத்திற்கெதிரே திட்டிவிட்டு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்." ஜியாங் மண்டியிட்டு பெற்றோர்களுடன் சமாதானம் நாடும் படங்கள் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின; ஏனெனல் அங்கு பொதுவாகக் கட்சித் ததலைவர்கள் கொடுங்கோல் முறையில் நடப்பவர்கள் என்ற இகழ்வைத்தான் கொண்டவர்கள். பூகம்ப பகுதிகளில் பிரதமர் வென் மற்றும் ஜனாதிபதி ஹு ஜின்டோ நேரடியாக வந்தது போல் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலர்களும் செய்தி ஊடகம் திரித்துக் கூற வேண்டும் என்று பயன்படுத்துகின்றனர். ஆனால் இது உண்மையில் ஒரு பகுதிதான். எதிர்ப்பாளர்கள் ஏற்றத்தோடு எழுச்சி செய்து போலீசாரோடு மோதியபோது சில பெற்றோர்கள் காயமுற்றனர். வேறுவிதமாகக் கூறினால் இறுதிப் பகுப்பாய்வில் ஆட்சி இன்னமும் போலீஸ் அரசாங்க நடவடிக்கைகளைத்தான் நம்பியிருக்கிறது. மே 29 பதிப்பில் பைனான்சியல் டைம்ஸ் இதுவரை சாதாரண மக்கள் உள்ளூர் அதிகாரிகளைத்தான் திறமையற்ற தன்மை, பொருட்படுத்தாத நிலை, ஊழல் ஆகியவை கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டியிருக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலே இருக்கும் உயர்மட்ட அதிகாரத்துவத்தின் "நீதிப் பேரரசர்" உண்மையிலேயே பாதிப்பாளர்கள் பற்றிப் பெரும் கவலை கொண்டுள்ளதாக அவர்கள் இன்னமும் போலிக் கருத்தில் உள்ளனர். "இத்தகைய நம்பிக்கை அரசாங்கம் ஊக்குவிக்கும் செய்தி ஊடகக் கட்டுப்பாட்டின் மூலம் வலியுறத்தப்பட்டு சாதாரண மக்கள் தங்கள் தலைவர்களின் மனிதக் குறைகள் பற்றி அதிகம் அறியாவகையில் செய்யப்பட்டு விடுகிறது; ஏனவே மக்களுக்காக அவர்கள் செய்வது மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன." என்று கட்டுரை கூறுகிறது. ஆனால் பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் குரலுக்கு நிலைமையில் இருக்கும் மெல்லிய வரம்பு நன்கு தெரியும்: "ஒரு நியாயமான பேரரசர் என்ற கருத்து உண்மையில் வெறும் கற்பனைதான் என்ற முடிவிற்கு போதுமான மக்கள் முடிவிற்கு வந்துவிட்டால் மக்கள் கருத்து மாறிவிடும்" என்று எச்சரிக்கை கொடுக்கிறது. |