World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spain: Prime Minister Zapatero lashes out at European Central Bank

ஸ்பெயின்: பிரதம மந்திரி ஸபடேரோ ஐரோப்பிய மத்திய வங்கி மீது வசை மொழிகிறார்

By Keith Lee
5 July 2008


Use this version to print | Send this link by email | Email the author

ஸ்பானிய பிரதம மந்திரி José Luis Rodriguez Zapatero ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) மீதும் மற்றும் அதன் தலைவர் ஜோன் குளோட் ட்ரீசே மீதும் வசை மாரி பொழிந்துள்ளார்.

இந்த மாதம் மத்திய வங்கியின் வட்டி விகிதங்களை தாம் உயர்த்தவிருப்பதாக வெளியான ட்ரீசேயின் அறிக்கைகளால் அவர் கோபம் தூண்டிவிடப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பணவீக்க உயர்வு அதிகரித்து வருவதால், 0.25 சதவீத வட்டி விகித உயர்வு பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய மத்திய வங்கி நிர்ணயித்த 2 சதவீதத்திற்கும் மேலாக, மே மாதம் ஐரோப்பிய நாடுகளில் ஆண்டு நுகர்வோர் பணவீக்க (Consumer Inflation) விகிதம் 3.7 சதவீதமாக அதிகரித்தது.

"நான் அதை உறுதியாக கூறவில்லை," என்று கூறிய ட்ரீசே, "அவ்வாறு நடக்கலாம் என்று கூறினேன்." என்றார்.

"பணவீக்க எதிர்பார்ப்புகளை பற்றிய ஒரு தீர்க்கமான முடிவு அவசியம்" என்று தொடர்ந்து கூறியதன் மூலம் ட்ரீசே தெளிவுபடுத்துவது என்னவென்றால், எரிசக்தி மற்றும் உணவு பொருட்களின் விலைகள் இருந்த போதினும், அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடியின் பாரத்தை தொழிலாளர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை தான். ஐரோப்பிய மத்திய வங்கி, சம்பள உயர்வு கோரிக்கைக்கு எதிரான தனது முதல் தாக்குதலுக்கு இறங்கியுள்ளது.

ட்ரீசேயின் இடம் கோரிக்கை வைக்குமுகமாக "சற்று கவனம் தேவை என", ஸபடேரோ கூறியதாவது, "ஐரோப்பிய மத்திய வங்கியின் சுதந்திரத்தை நாங்கள் அனைவரும் மதிக்கிறோம், ஆனால் ஐரோப்பிய மத்திய வங்கியும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கிறோம்." என்று தெரிவித்தார். ஐரோப்பிய வங்கிகளுக்கிடையே அளிக்கப்படும் வட்டி விகிதமான யூரிபார் (Euribor- ஐரோப்பாவின் 50 முக்கிய வங்கிகள் தங்களுக்குள் வாங்கும் கடனுக்கான சராசரி வட்டி விகிதம்) உயர்த்தப்படுவது நிச்சயமாக "மிகவும் அதிகமானதாகும்" என அவர் தெரிவித்தார்.

தமது குற்றச்சாட்டுகளை மேலும் தொடர்ந்த போது, ஐரோப்பிய மத்திய வங்கியிடமிருந்து "விட்டுக்கொடுக்கும் தன்மையை" வலியுறுத்தினார்.

ஸ்பெயினில் பொருளாதார பிரச்சனைகளின் அதிகரிப்பால் ஏற்படும் அரசியல் நெருக்கடியால் ஸபடேரோவின் மனநிலை இருண்டுள்ளது. நாட்டில் என்ன நடக்கிறது? இதற்காக அவர் என்ன செய்ய போகிறார்? என்பதை விளக்கும்படி நாட்டின் தேசிய காங்கிரஸ் கேள்வி எழுப்பும் நிலைக்கு பொருளாதார பிரச்சனைகள் அவரை கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றன. இந்த நிலைமை சில முன்மாதிரிகளையும் கொண்டுள்ளது.

அரசியல்வாதிகளால் ஐரோப்பிய மத்திய வங்கி மீது அழுத்தம் அளிக்கப்பட கூடாது என கூறி ஸபடேரோ குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களை ட்ரீசெட் நிராகரித்துள்ளார். "நாங்கள் சுதந்திரமானவர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்." என அவர் அறிவித்தார். "இந்த சுதந்திரம் உடன்படிக்கையால் முழுமையாக உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அனைவரும் அறிவார்கள்." என்றார். அவரின் அறிவிப்புகளுக்கு பின்னர் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்ததுடம் யூரிபார் விகிதமும் அதிகரித்தது.

ஸபடேரோவின் குறிப்புகளின் வெளிப்படையான தன்மை, அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை முகங்கொடுக்க எந்த கொள்கைகளைப் பின்பற்றுவது என்பதின் மீதான ஐரோப்பிய சக்திகளிடையே அதிகரித்து வரும் முரண்பாடுகளைப் பிரதிபலிக்கிறது.

ஐரோப்பிய மத்திய வங்கி அதன் வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என்றும், உயர்ந்த யூரோ-டாலர் செலவாணி விகிதங்களில் அது அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கடந்த காலத்தில் ஸ்பானிய அரசாங்கம் அறிவித்திருந்தது. ட்ரீசேயின் அறிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்த ஒரே ஐரோப்பிய தலைவர் ஸபடேரோ மட்டும் அல்ல. போர்த்துக்கல் நிதி மந்திரி பெர்னாண்டோ டெய்ஜிரா டொஸ் டான்டோஸ் கூறுகையில், வட்டி விகிதம் உயர்த்தப்படுவதென்பது தமது நாட்டு பொருளாதாரத்தின் "மேலும் மோசமான காலத்தை" தான் எடுத்துக்காட்டும் என்றார். போராடி வரும் பணவீக்கத்தின் மீது மாத்திரம் ஐரோப்பிய மத்திய வங்கி கவனம் செலுத்துவதை பிரான்ஸ் நிதிமந்திரி கிறிஸ்ரின் லகார்டும் குற்றஞ்சாட்டினார். "வட்டிவிகித உயர்வால் பொருளாதார வீழ்ச்சி தூண்டிவிடப்படலாம்" என அப்பெண்மணி எச்சரித்தார்.

அங்கெலா மேர்க்கெல் தலைமையிலான ஜேர்மன் அரசாங்கத்தால் ட்ரீசே ஆதரிக்கப்படுகிறார், ஸபடேரோவின் வெடிப்பிற்கான ஒரு விளக்கத்தை ஜேர்மன் அரசாங்கம் கோரியது. ஐரோப்பிய மத்திய வங்கியின் சுதந்திரத்தில் கை வைக்க முடியாது என்ற கோணத்தில் இவ்விடயத்தை ஜேர்மன் காண்பதாக செய்தி தொடர்பாளர் தோமஸ் ஸ்டேக் தெரிவித்தார். "ஐரோப்பிய மத்திய வங்கி மீதோ அல்லது ட்ரீசே மீதோ குற்றஞ்சாட்ட எங்களிடம் எவ்வித குற்றச்சாட்டுகள் கிடையாது. ஸபடேரோ இதை வேறுபட்ட வகையில் பார்க்கிறார் என்றால், அவர் அதை விளக்க வேண்டும்." என பேர்லினில் நடந்த அரசாங்க செய்தியாளர்கள் மாநாட்டில் ஸ்டேக் தெரிவித்தார்.

"நிச்சயமாக இதுபோன்றதொரு சமயத்திற்கான சரியான அமைப்புமுறை இது" என்று ஐரோப்பிய மத்திய வங்கியின் சுதந்திரத்தை ஸ்லோவேனியன் நிதிமந்திரி அண்ட்ரெ பஜூக் பாராட்டினார்.

அனைத்து ஐரோப்பிய பொருளாதாரங்களிலும், வட்டி விகித உயர்வுகளால் அதிகளவில் பாதிக்கப்படுபவைகளில் ஒன்றாக ஸ்பெயின் உள்ளது. தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும், ஆனால் கடன் நெருக்கடியின் கீழ் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழில்துறையில் எந்தவித வட்டி விகித மாற்றங்களும் மிகப் பெரிய விளைவை உண்டாக்கும். நிலபேர அபிவிருத்தியாளர்களின் APCE இன் கருத்துப்படி, செப்டம்பரில் இருந்து வீட்டு விலைகள் 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஸ்பானிய அடமான கடன்களில் சுமார் 90 சதவீதம் யூரிபார் விகிதங்களில் உள்ளடங்கி உள்ளன. தங்களின் போதிய கூலியின்மைக்கு மாற்று வருமானமாக தங்களின் சொத்துகளை சார்ந்திருந்த ஸ்பானிஷ் தொழிலாளர்கள் இதனால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 98 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஸ்பானிய அடமான கடன்கள் மாறுபடும் வட்டி விகிதத்தில்* உள்ளன என்பதுடன் எவ்வித வட்டி விகித உயர்வும் பெரும்பான்மையான தொழிலாளர்களை மேலும் வறுமையில் தள்ளும்.

ஏனென்றால் தொழில்துறை உலகில் மிக அதிக வரவுசெலவுத்திட்ட உபரி நிதியைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் விளங்கியது. நிதியியல் சூறாவளியை சமாளிக்க நாடு சிறப்பாக நிலைப்படுத்தப்பட்டு இருப்பதாக ஆளும் ஸ்பானிஷ் சோசலிச தொழிலாளர் கட்சியின் (PSOE) அரசாங்க மந்திரிகளும், அதிகாரிகளும் வாதிட்டுள்ளார்கள். "நாம் பாதுகாப்பாக உள்ளோம், நாங்கள் நமது நிதிகளைச் சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். எதிர்பார்த்ததை விட மிக அதிகளவிலான உபரிநிதிகளை நாம் கொண்டிருக்கிறோம், எனவே நம்மால் பொருளாதாரத்தை சீரமைத்து, குடும்பங்களுக்கு உதவ முடியும்." என மார்ச்சில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸபடேரோ தெரிவித்தார்.

400 யூரோ ஆண்டு வருமான வரிச்சலுகை, அடமான கடன் தொகைகள் தள்ளுபடி, மாகாணங்களின் குறைந்த ஓய்வூதியங்களுக்கு 26 சதவீத உயர்வு மற்றும் கட்டுபடியாகும் விலையில் ஆண்டுக்கு 150,000 வீடுகளை கட்டுதல் உட்பட, பல தேர்தல் வாக்குறுதிகளை அவர் முன்வைத்தார். மட்ரிட் மற்றும் பிற பிராந்தியங்களுக்கு இடையிலான அதிவேக ரெயில் இணைப்புகள் போன்ற பாரியசாலை மற்றும் ரயில் திட்டங்களில் முதலீடு செய்யப்படுமென்றும் அரசாங்கம் உறுதியளித்தது.

எவ்வாறிருப்பினும், சொத்து மற்றும் எண்ணெய் விலைகள் நெருக்கடியை அரசாங்கம் ஈடுகட்ட முனைந்த போது இந்த உபரிநிதி ஒரு வாரத்திற்குள்ளாக சீர்குலைந்தது. ஆண்டின் மே வரையிலான காலத்தில் நாட்டின் நிதிதிட்டத்தில் உபரிநிதியாக 2.7 பில்லியன் யூரோவும், 0.24 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியும் இருந்தன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 13.6 பில்லியன் யூரோவாக இருந்தது. அரசாங்கம் அதன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கினால் இது மேலும் வீழ்ச்சி அடையும் என வீட்டுவசதித்துறைக்கான அரசாங்க செயலாளர் கார்லோஸ் ஓகானா தெரிவித்தார்.

ஸ்பானிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தாவது இடத்தில் உள்ளதும், ஐரோப்பிய ஒன்றியத்தில் எங்கும் இல்லாத அளவில் இரண்டு மடங்கு சராசரி விகிதங்களைக் கொண்டதுமான அதன் பாரிய கட்டுமான துறைக்கு உடனடி கடன்கள் அளிப்பதற்கான ஸபடேரோவின் மறுப்பின் மீதும் மற்றும் அவரின் நம்பிக்கைமிக்க முன்கணிப்புகளின் மீதும், பல விமர்சகர்கள் தங்களின் எரிச்சலை வெளிப்படுத்தி உள்ளனர். ஜேர்மனி, இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய அனைத்தையும் சேர்த்து கிடைக்கும் எண்ணிக்கையை விட அதிகளவிலான வீடுகளை ஸ்பெயின் கட்டியுள்ளது என்பதுடன், அயர்லாந்தை தவிர பிற எந்த மேற்கத்திய நாடுகளையும் விட வீட்டுத்துறையை ஸ்பெயின் மிகுதியாக சார்ந்துள்ளது.

வீட்டுவசதித்துறை மந்திரி பெயாரெஜ் கொரைடொரின் கருத்துப்படி, குடியிருப்பு வீடுகள் கட்டுமான துறை "மிகவும் கடுமையாகவும், தீவிரமாகவும் வீழ்ச்சி அடைந்து வருகிறது". "இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து கணிசமான அளவில் அதிகரித்துள்ளதுடன், வீட்டுக்கடன் உள்ள பலருக்கு பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது.."

உண்மையில் ஸ்பானிஷ் வீட்டு விலைகள் குறைந்து வருகின்றன என்று தெரிவித்த கொரைடொர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற நிதியியல் பயிலகங்களால் கணிக்கப்பட்ட அளவிற்கு வீழ்ச்சியடையுமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஸ்பெயினின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டின் 3.8 சதவீத வளர்ச்சியில் இருந்து இந்த ஆண்டு 1.8 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய கணிப்பு குறிப்பிட்டது. நாட்டின் தற்போதைய நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக உள்ளது. இது தொழில்துறை உலகில் அமெரிக்காவிற்கு அடுத்து இரண்டாவது மிகப் பெரிய அளவாகும்.

ஸபடேரோவினால் வெளியிடப்பட்ட கவலைகளை அவர் ஆதரிக்கிறாரா என்பதற்கு விளக்கம் அளிக்க மறுத்த கொரைடொர், ட்ரீசெட்டின் பொறுப்பு குறித்து அவருக்கு கூறுவது "தமது வேலையில்லை" என்று தெவித்ததுடன், "அவர் அறிக்கைகளின் விளைவை அவரே தான் கவனிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

கட்டுமானத்துறையில் இந்த ஆண்டு சுமார் 10 இலட்சம் வேலை இழப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, பில்லியன் கணக்கான விற்கப்படாத செங்கற்கள் அங்கு தேங்கியுள்ளன. "ஸபடேரோ எங்களை காய்ந்து போகுமாறு தொங்கவிட்டுள்ளார்," என அலாமிதா கட்டுமான ஒப்பந்ததாரர் லூயிஸ் ரூயிஸ் தெரிவித்தார்.

கட்டுமானம் சார்ந்த பொருளாதாரம் பாரிய வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்படாத வகையில் அது மாற்றி அமைக்கப்படும் எனும் ஸபடேரோவின் வாக்குறுதியை பல செங்கற்கள் உற்பத்தியாளர்கள் நிராகரித்துள்ளனர். "எங்கள் தொழிலாளர்களில் 85 சதவீதத்தினருக்கு குறைந்தளவே கல்வியறிவு உள்ளது. இந்த ஆலை மூடப்பட்டு விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று லா அலாமிதா செங்கற்கள் தொழிற்சாலையின் ஹெக்டொர் டி பின்டோ சான்செஜ் கேள்வி எழுப்பினார்.

ஸ்பெயினின் மிகப் பெரிய செங்கற்கள் மற்றும் தரைகற்கள் உற்பத்தி பிராந்தியமான லா சாக்ராவில், பல நகரங்களும், கிராமங்களும் பாதி கட்டப்பட்ட நிலையில் பணம் மற்றும் கடன் வசதி இல்லாத கட்டிட நிறுவனங்களால் கைவிடப்பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள் தரிசு இடங்களாக ஆகியுள்ளன. பத்து இலட்சத்திற்கு அண்மித்த புதிய ஸ்பானிய வீடுகள் காலியாக உள்ளன.

மலிவான யூரோ-பிராந்திய கடன் மற்றும் குறைந்த திறன் மற்றும் மலிவு கூலி வேலைவாய்ப்பின் மூலம் அதன் வளர்ச்சியை உயர்த்துவதற்கான ஸ்பெயின் தங்கியிருப்பதை பல பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். "ஸ்பானிஷ் பொருளாதாரம் அச்சமூட்டும் வகையில் வீழ்ச்சி அடைந்து வருகிறது," என மட்ரிட்டின் கார்லோஸ் மிமிமி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் ஆண்டொனி எஸ்பசா தெரிவித்தார். "அது ஐரோப்பாவை விட பாரியளவில் பாதிக்கப்பட உள்ளது, மேலும் அதிலிருந்து மீண்டெழவும் அதற்கு நீண்ட காலம் பிடிக்கும்." என அவர் குறிப்பிட்டார்.

எம்ப்ரீசா வியாபார பள்ளியின் மட்ரிட் பயிலகத்தின் பொருளாதாரத்துறை தலைவர் ரஃபேல் பாம்பில்லன் கூறியதாவது, "நம்மால் போட்டியிட கூடிய உயர்திறன் தொழில்துறைக்கு நாம் மாறப் போவதில்லை. வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்கும் ஒரு பொருளாதார நெருக்கடியில் நாம் உள்ளோம்." என்று தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஸ்பானிய தொழிலாளர்கள் மீது திணிக்க மேலும் பல நடவடிக்கைகளை ஸபடேரோ சமீபத்தில் அறிவித்தார். அதாவது, ஒரு சம்பள உயர்வினைமையையும், அடுத்த ஆண்டு முதல் உள்ளூர் சேவை பணிகளுக்கான சேர்ப்பில் 30 சதவீத வெட்டையும் அவர் அறிவித்தார். முதன்மை அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களையும் இந்த சம்பள உயர்வின்மை உட்கொண்டிருக்கும், ஆனால் சராசரியாக 17,000 யூரோ (31,000 அமெரிக்க டாலர்) சம்பாதிக்கும் சாதாரண தொழிலாளர்களே இதனால் முதன்மை பாரம் சுமத்தப்படுவர்.

வேலைவாய்ப்பின்மை தற்போது 9.6 சதவீதத்தில் நிலைப்பட்டுள்ளது, அது அடுத்த ஆண்டில் 11 சதவீதத்திற்கு அண்மையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பானிஷ் ஓய்வூதியங்களுக்கு "வெறுமனே உத்தரவாதம்" அளிக்கப்பட்டிருந்தாலும், எதிர்கால கொடுப்பனவுகளை பற்றி சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது என வேலைவாய்ப்புத்துறை மந்திரி செலெஸ்டினோ கார்பகோ தெரிவித்தார்.

ஸபடேரோவின் பொருளாதார நடவடிக்கைகள் போதிமானவை என தாம் நினைக்கவில்லை என ஸ்பெயின் வங்கியின் கவர்னர் மிகேல் ஏஞ்செல் பெர்ணான்டஸ் அமைச்சரவைக்கு தெரிவித்தார். அத்துடன் தொழில்சந்தை மறுசீரமைப்பு, சம்பள உயர்வுகள் மற்றும் பணவீக்கத்திற்கு இடையிலான தொடர்பை முடிவுக்கு கொண்டு வரும் ஒருங்கிணைந்த கூலி பேச்சுவார்த்தைகளில் மாற்றங்கள் மற்றும் ஸ்பானிய பிராந்திய அரசாங்கங்களிடம் இருந்து பாரிய சிக்கன முறைமைகள் ஆகியவற்றிற்கு அவர் அழைப்பு விடுக்கிறார்.

ஸபடேரோ சந்தித்து வரும் பிரச்சனை என்னவென்றால், நாட்டை இயங்கா நிலைக்கு கொண்டு வந்து விடுவோம் என எச்சரித்திருக்கும் ஸ்பானிய மீனவர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களின் சமீபத்திய வார நடவடிக்கைகளின் மூலம் எடுத்துக்காட்டப்படும் ஸ்பானிஷ் சமூகத்தின் தீவிரமடைதல்தன்மை ஆகும்.

* Floating rates- கடன் திருப்பிகட்டும்காலத்தில் வெளிவட்டிவிகித மாற்றங்களுக்கு ஏற்ப வட்டிவிகிதம் மாறுபடும்.

Fixed-rate-கடன் திருப்பிகட்டும்காலத்தில் வட்டிவிகிதம் நிலையானதாக இருக்கும்.