World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்French LCR-PCF debate: a dialog of political opportunists பிரெஞ்சு LCR-PCF விவாதம் : அரசியல் சந்தர்ப்பவாதிகளின் உரையாடல் By Alex Lantier ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன் (PCF) நீண்ட காலமாக தொடர்பு கொண்டுள்ள பிரெஞ்சு நாளேடு l'Humanite, PCF செய்தித் தொடர்பாளர் ஒலிவியே டார்ட்டிகோலேக்கும் LCR உடைய தத்துவவாதி பிரான்சுவா சபடோவிற்கும் இடையே நடந்த விவாதத்தை ஜூன் 7ம் தேதி வெளியிட்டது. இந்த விவாதம் ஒரு புரட்சிகர நிலைமை அபிவிருத்தி அடையும்பொழுது சீர்திருத்வாத வேலைத்திட்டத்தின் பின்னே தொழிலாள வர்க்கத்தை சிக்கவைப்பதற்கு, முதலாளித்துவ வர்க்கத்திற்கான ஒரு இடது பாதுகாப்பு அரணை தயார்செய்வதுதான் தங்களது பாத்திரம் என தாங்கள் கருதும் அரசியல் நிலைமை பற்றிய LCR தலைமையின் ஆய்வின் மீது நன்கு வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. பிரெஞ்சு முதலாளித்துவத்தின் நுட்பமான பிரிவுகள் அத்தகைய கணக்கீடுகளின் பொருத்தத்தை ஒப்புக் கொள்ளுகின்றன. தொழிலாளர்களின் தேக்கமுற்ற ஊதியங்கள் மற்றும் உயரும் உணவு மற்றும் எரிபொருளின் விலைகளை எதிர்கொள்கையில், ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் செல்வாக்கற்ற அரசாங்கம் சமூகச் செலவின குறைப்புக்களை செய்துவருவதுடன், வேலைநிறுத்தங்கள் ஒன்றிணைந்து அதற்கு எதிரான ஒரு அரசியல் இயக்கமாக வருவதை தடுப்பதற்கு தொழிற்சங்கத்தலைமை மீது நம்பிக்கையையும் கொண்டுள்ளது. Le Monde நாளேடு முதலாளித்துவ அரசியல் வட்டங்களில் இருந்து எதிர்ப்பு இல்லாதது, "எந்த அளவிற்கு சார்க்கோசி தன்னுடைய திட்டங்களை எளிதாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை விளக்குகிறது. ஆனால் இதில் ஒரு ஆபத்து உள்ளது. எந்த நேரத்திலும் அனைத்தும் பற்றி எரியக் கூடும். அரசாங்கத்திலும் இந்த ஆபத்து பற்றி விழிப்புணர்வு உள்ளது." Le Monde சமூகப் பிரச்சினைகள் பற்றி சார்க்கோசியின் ஆலோசகரான Raymound Soubie ஐயும் பேட்டி கண்டது; அவர் நிலைமையை கவனமாக பார்த்து வருவதாகவும், "தொழிற்சங்கங்கள் பலவீனமடைந்து வருவதைத் தடுப்பதற்கும் மற்றும் கட்டுப்படுத்தமுடியாத இயக்கங்களின் தோற்றத்தை" எச்சரிக்கையுடன் கவனித்துக் கொண்டிருந்ததாக கூறினார்.இத்தகைய பின்னணியில் புரட்சிகரத் தன்மையுடைய ஒலிகளை கொடுத்து தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கக் கருவிகளுடன் பிணைக்கும் செயலையும் செய்யக்கூடிய ஒரு கட்சி முதலாளித்துவத்திற்கு தேவை என்பது மிகவும் முக்கியமாகும். முன்பு ட்ரொட்ஸ்கிச கட்சி எனக் கூறிக் கொண்டிருந்த, இப்பொழுது சே குவேராவை முதன்மைப்படுத்துவதுடன் ஒரு புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) யில் தன்னை கரைத்துக் கொள்ளத் தயாராக இருக்கும் கட்சியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR), இந்த வேலைக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிசத்தில் ஒரு பகுதி ஸ்ராலினிச மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தவறான பிற அதிகாரத்துவ தலைவர்களுக்கும் ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதற்கு ஆதரவாக சுயாதீனமான புரட்சிகர கட்சிகளை அமைக்கும் வேலைத்திட்டத்தை கைவிட்டபொழுது, 1950ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இந்த அமைப்பிற்கு நீண்ட கால சந்தர்ப்பவாத வரலாறு உண்டு. LCR பல தசாப்தங்களாக ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக கட்சிகள், மற்றும் நிலவும் தொழிற்சங்கத் தலைமைகளுக்கு வெளியே பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தை தடுப்பதில் பல பத்தாண்டுகளாக முக்கிய பங்கை ஆற்றி வந்துள்ளது. 2002ல், ஜனாதிபதி தேர்தல் இரண்டாம் சுற்றில் மற்ற உத்தியோகபூர்வ இடதுகளுடன் சேர்ந்து பிரெஞ்சு ஆளும் உயரடுக்கிற்கு விருப்பமான வேட்பாளாரான ஜாக் சிராக்கிற்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்தது. பிரெஞ்சு பெருநிறுவன செய்தி ஊடகம், சமீபத்தில் LCR ன் 2007 ஜனாதிபதி வேட்பாளர் ஒலிவியே பெசன்ஸனோவை உயர்த்துவதில் தீவிரமாக உள்ளது. தொடர்ச்சியான சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் அவருக்கு இருக்கும் பொது ஆதரவை 45 முதல் 60 வரை என்று கணித்துள்ளது; அவர் இப்பொழுது வாடிக்கையாக விவாத நிகழ்வு, உரை நிகழ்வு காட்சிகளில் தோன்றுகிறார். 1981 ல் இருந்து முதலாளித்துவ கூட்டணி அரசாங்கங்களில் ஒரு பகுதியாக இருந்த மற்றும் அதனது ஆதரவு பொரிந்துபோன PCF ஐ பொறுத்தவரை, LCR குறிப்பிடத்தக்க வகையில் சோசலிஸ்ட் கட்சியுடன் இன்னொரு எதிர்கால கூட்டணி பங்காளராக பிரதானமாய் ஆர்வம் கொண்டுள்ளது; 1997-2002 ல் இவ்விதத்தில்தான் பன்மை இடது கூட்டணி பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் தலைமையில் இருந்தது. ஜூன் 7ம் தேதி பேட்டியில் LCR பிரான்சில் ஒரு புரட்சிகர நிலைமை வெளிப்படும் திறன் பற்றி கூடுதலான ஆர்வம் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக்கினார்.ஸ்ராலினிச Darigolles கூறினார்: "நாங்கள் இருவரும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்கள். ஆனால் இந்த அணிதிரட்டல்ககளை வரம்பிற்கு உட்படுத்துவது அவற்றுடன் உடனொத்துச்செல்வதற்கு ஒரு அரசியல் செயற்திட்டம் இல்லாமை என்பதை இன்று நாம் பார்க்கிறோம். இந்த நிலைமை நீடிக்க முடியாது... இன்று புரட்சிகரமாய் இருப்பது என்பது இங்கே இப்பொழுதே, அடுத்த ஐந்து ஆண்டுகளில் சக்திகளின் சமநிலை மாற்றத்திற்கு தேவையான தவிர்க்க முடியாத நடவடிக்கைகளை விளக்குவது ஆகும் -- நடைமுறைக்கு கொண்டுவரக்கூடிய நடவடிக்கைகள், தேவையான நிதிய, அமைப்புமுறை, ஜனநாயக வழிவகைகளுடன் விளங்கி ஒரு முழுமையான சீரான தன்மையை வமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் ஒரு ஜனநாயக மாற்றீட்டை விரிவாய் திட்டமிடுவதாகும்." இதற்கு விடையிறுக்கையில், LCR ன் சபடோ கூறினார்: "இந்நாட்டில் முக்கிய [சமூக] வெற்றிகள் ஏதேனும் ஒரு அரசாங்கத்தால் தொகுக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் அவை பொது வேலைநிறுத்தங்கள், புரட்சிகர அல்லது புரட்சிக்கு முந்தைய நிலையின் விளைவுகள் ஆகும்... வலது மிகவும் அதிகமாக சாதிக்க வேண்டும் எனக் கருதும்போது ஊசற்தண்டு மறு புறத்திற்கு ஊசலாடும்; மக்களுடைய எதிர்வினை இராது எனக் கூறுவதற்கு இல்லை. ஆனால் நாங்கள் யதார்த்தவாதிகள்; சக்திகளின் சமச்சீர் நிலை தடையற்ற சந்தைத் தாக்குதலின் பொழுது மோசமாகிவிட்டிருக்கிறது." பலமுறையும் பல மில்லியன் கணக்கானவர்கள் கலந்து கொண்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு அணிகள் சமீப ஆண்டுகளில் இருந்தபோதிலும், ஒரு சமூக எழுச்சியை "தள்ளிவிடுவதற்கில்லை" என்று சபடோ வெற்றுத்தனமாக கூறியிருப்பது LCR தலைமையின் பார்வையை சுட்டிக் காட்டுகிறது. ஆனால், இதையும்விட முக்கியமானது "மக்களுடைய விடையிறுப்பு" சார்க்கோசியின் கொள்கைகளுக்கு இன்னமும் ஏற்படக்கூடும் என்று அவர் கூறிய கருத்து ஆகும். சமீபத்திய, தொழிற்சங்க கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வேலைநிறுத்தங்களும் அணிவகுப்புக்களும் தொழிலாள வர்க்கத்தின் கட்டற்ற, "மக்கள்" இயக்கம் அல்ல என்றும், இன்னும்சொல்லப்போனால் இவை பிற்போக்கு அரச கொள்கைகளுக்கான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை, தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு பின் வழிப்படுத்தும் ஒரு வழியாகும் என்பதை சபடோ நன்கு அறிவார். ஆனால் தொழிற்சங்கங்கள் அழைப்புவிடும் ஆர்ப்பாட்டங்களுக்கு திறனற்ற வகையில் பாரட்டும் புகழும் கொடுக்கும் Rouge போன்ற LCR வெளியீடுகளை படிப்பவர்களுக்கு இத்தகைய பார்வை வியப்பை அளிக்கிறது. இப்படி LCR எழுத்துக்களுக்கும் அதன் தலைமை சிந்தனைக்கும் இடையே இருக்கும் இடைவெளி இன்னும் தெளிவாக பேட்டியின் போக்கில் தெளிவாயிற்று. PS ä LCR வலுவிழக்கச் செய்யும் என்ற நம்பிக்கையை கொண்ட வலதுசாரி நாளேடான Le Figaro கட்டுரையாளர்களை மேற்கோளிட்டு, Dartigolles, "LCR இன் தற்போதைய நிலைப்பாடு இடதில் அரசியல் திட்டம், இயக்கத்தன்மை ஆகியவை வெளிப்படக்கூடியதை தடுக்கும் ஒரு நிலைப்பாட்டின் பகுதியாகத்தான் உள்ளது." என்று வலியுறுத்தினார். அரசாங்கத்தில் பங்கு பெறுவதற்கு LCR தயாராக இருப்பதாகவும், ஆனால் அங்கு வருவதற்கு தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன போராட்டத்தின் பின்னணியை விரும்புகிறது என்றும் Sabado விளக்கினார். "அரசாங்கத்தில் பங்கு பெறுவதை நாங்கள் மறுக்கவில்லை; ஒரு அரசாங்க முன்னோக்கில் நாங்கள் தெளிவாக இருத்திக் கொள்ளுவோம்; ஆனால் அந்த அரசாங்கம் சமூக இயக்கங்களின் விளைவாக இருக்க வேண்டும்; சக்திகளின் அரசியல் உறவைக் கொண்டிருக்க வேண்டும்; வலது இடது மற்றும் PS இன் பாராளுமன்ற உடன்பாடுகளின் விளைவாக இருக்கக்கூடாது." Dartigolles இடம் இருந்து LCR அனைத்து இடது கட்சிகளையும் ஒன்று சேர்த்த அரசாங்கம் ஒன்றில் பங்கு கொள்ளுதல் பற்றிய கேள்விகளுக்கு விடையிறுக்கையில் சபடோ கூறினார்: "பாராளுமன்ற பெரும்பான்மையை அடைவதற்கு மேலாதிக்க கட்சிக்கு தன்னைக் கீழ்ப்படுத்திக் கொள்ள உடன்படுவது என்பது, செய்யப்படலாம், ஆனால் எஞ்சியது எதிர்மறையாகத்தான் உள்ளது. ஒருவேளை இந்த விஷயங்களை மீண்டும் இடது கட்சிகளுடன் விவாதிக்கலாம்; ஆனால் சக்திகளின் சமசீர்நிலை வடிவமைப்பிற்குள் மக்கள் இயக்கம் செல்வாக்கு பெற்றிருக்கும் நிலையில் என்ன நிகழும் என்பதுதான் பிரச்சினை."சபடோவின் கருத்துக்கள் கவனமாக ஆராயப்பட வேண்டும். புரட்சிகர உணர்வுகளை கொண்டிருப்பதாக தன்னைக் காட்டிக் கொள்ளும் LCR இன் தலைமை, "சமூக இயக்கங்களின்" விளைவாக பதவிக்கு வர விரும்புகிறது --இந்த சொல் பிரெஞ்சு முதலாளிதுதவத்தால் வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்ப்புக்களை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அரசாங்க அதிகாரம் வந்தால், LCR அதைக் கைப்பற்றினால் அல்லது பங்கு கொண்டால் என்ன செய்யும் என்பதற்கு விடை இல்லை. ஒரு சர்வதேச சோசலிசப் புரட்சியின் பகுதியாக செயல்பட LCR விரும்புமா, உலகப் பொருளாதாரத்தை தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் ஜனநாயக முறையில் இயங்குவதற்கு முற்படுமா, சமூக சமத்துவமின்மை, போர், வர்க்க அடக்குமுறை ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? அல்லது ஓரளவு சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மூலம் பிரெஞ்சு முலாளித்துவத்தை மறு உறுதி செய்ய அது முற்படுமா? இந்தப் பிரச்சினை பற்றி சபடோ மற்றும் டார்ட்டிகோல் விவாதிக்கவில்லைதான்; ஆனால் LCR இன் வரலாறு, குறிப்பாக ஜூன் 7 பேட்டியின் பொருளுரை, கட்சியின் தலைமை பிந்தைய போக்கைத்தான் கொள்ளும் என்ற உறுதியைக் காட்டுகின்றன. அதிலும் குறிப்பாக, "மேலாதிக்க கட்சி (அதாவது முதலாளித்துவ PS) உடன் வெளிப்படையான தேர்தல் உடன்பாடு மறுக்கப்படுவதற்கு சபடோ கொடுக்கும் காரணம் மிகவும் முக்கியத்துவமானது. அரசியல் கொள்கை அல்லது வர்க்க முன்னோக்கின் அடிப்படையில் இது இல்லை. மாறாக, PCF இன் அரசியல் மற்றும் தேர்தல் பொறிவினைக் கருத்தில் கொள்கையில், LCR அதை ஒரு வலுவற்ற உத்தி என்று கருதுகிறது; சபடோவின் சொற்களில், "அது செய்யப்பட்டது, ஆனால் சமச்சீர்நிலை எதிர்மறையாக இருந்தது." ஆனால் இடதுடன் "மக்கள் இயக்கத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில்" ஒரு விவாதத்திற்கு சபடோ தயாராக இருக்கிறார். வேறுவிதமாகக் கூறினால், தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் முதலாளித்துவ அரசியல் உறுதியற்ற தன்மைக்கு தள்ளப்பட்டு LCR அதிகாரத்திற்கு வந்தால், அந்தக் கட்டத்தில் LCR, PS, மற்றும் PCF உடன் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒப்பந்தம் காண்பதை பற்றி பரிசீலிக்கும் ஆனால் அத்தகைய சூழ்நிலையில் PS உடன் LCR பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய ஒரே விஷயம் முதலாளித்துவ ஆட்சியை எப்படி தக்க வைப்பது என்பதுதான். இந்த வாய்ப்பும் LCR தலைமையின் சிந்தனையில் உள்ளது என்பது சபடோவின் கருத்து 1936 மக்கள் முன்னணி அரசாங்கம் பற்றிய கருத்தை பேட்டியின் போக்கில் தெரிவித்துள்ளதில் காணப்படுகிறது --அந்த நிகழ்வு பற்றி அலன் கிறிவின் போன்ற பிற LCR தலைவர்கள் கூட்டங்களில் உத்தியோகபூர்வ இடது கட்சிகளுடன் குறிப்புக் காட்டியுள்ளனர். முதலாளித்துவ இடதுடனான ஒரு கூட்டின் மூலம் புரட்சிகர நிலைமையை நிராயுதபாணியாக்குவதற்கான சந்தர்ப்பவாதக் கட்சிகளின் திறனுக்கு பிரான்சில் ஒருவேளை மிகச் சிறப்பான உதாரணம் மக்கள் முன்னணி ஆகும். மக்கள் முன்னணிக் காலத்தில், தொழிலாள வர்க்கத்தின் மகத்தான வேலைநிறுத்த அலைகள் அப்பொழுது இருக்கையில் சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலாளித்துவ ரடிக்கல் கட்சியுடன் ஒரு கூட்டணி அமைத்தன. ரஷ்யாவில் 1917 அக்டோபரில் ஏற்பட்ட புரட்சி போல் இங்கும் விளைவுகள் இருக்கலாம் என்று முதலாளிகள் பீதியடைந்தபோது, அவர்கள் சடுதியில் பல சலுகைகளை கொடுத்தனர்; ஒரு 40 மணி நேர வேலை வாரம்; ஊதியத்துடன் கூடிய விடுமுறை, மூலோபாய தொழில்கள் தேசியமயமாக்கப்படல் போன்றவை. "எப்பொழுது வேலைநிறுத்தத்தை முடிக்க வேண்டும் என்பதை ஒருவர் அறிந்திருக்க வேண்டும்" என PCF தலைவர் Maurice Thorez அனைவரும் அறிந்த வகையில் அறிவித்ததுடன், இடது கட்சிகள் பின்னர் தொழிலாளர்களை வேலைக்கு திரும்புமாறு கட்டாயப்படுத்தின. மக்கள் முன்னணியின் காட்டிக்கொடுப்புக்கள் சர்வதேச அளவில் குறிப்பாக பெரும் பாதிப்பை உண்டு பண்ணின. ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் அவை குடியரசுவாதிகள் சர்வதேச தனிமைப்படலை உறுதிப்படுத்தின. ஸ்பெயினில் பாசிசம் வெற்றி பெறுவதற்கும் அவர்கள் தோல்வி அடைவதற்கும் இது கணிசமாக உதவியது. அதிகாரத்தை கைப்பற்ற தொழிலாளர்கள் போராட்டங்கள் என்பதை உலக அரசியல் செயற்பட்டியலில் இருந்து இன்னமும் கூடுதலான வகையில் ஒதுக்கியதால், பிரெஞ்சு மக்கள் முன்னணி நாஜி ஜேர்மனியில் ஹிட்லர் ஆட்சி உறுதிப்பட உபயோகமாக இருந்தது. மக்கள் முன்னணியே வலதிற்கு மாறி 1938ல் பொறிவுற்றது. இதன் குறைந்த வரம்பு உடைய உள்நாட்டுச் சீர்திருத்தங்கள் இரண்டாம் உலகப் போர், நாஜி ஆக்கிரமிப்பு மற்றும் பிந்தையதுடன் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் ஒத்துழைப்பு ஆகியவற்றினால் விரைவில் பயனற்றதாகப் போயின. சபடோவின் இத்தகைய நிகழ்வுகளைக் குறிக்கும் திறன், பிரான்சில் ஒரு புரட்சிகர நிலைமையின் போக்கில் உத்தியோகபூர்வ இடதுடன் பேச்சுவார்த்தைகள் பற்றி முன்கருத்தைக் கூறுதல் என்பது LCR ஐ உள்ளபடி காண்பிக்கிறது: அதாவது அரச எந்திரம் மற்றும் முதலாளித்துவ இடதிற்கு தொழிலாள வர்க்கம் தாழ்ந்து நின்று முதலாளித்துவத்தை காப்பாற்ற தோற்றுவிக்கப்பட்டுள்ள அமைப்பு என காட்டுகிறது. |