WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
India's Left Front withdraws from government over US
nuclear deal
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவின் இடது முன்னணி அரசாங்கத்திற்கு
அளித்த ஆதரவை விலக்கிக் கொள்கிறது
By Kranti Kumara
11 July 2008
Use this
version to print | Send this link by
email |
Email the
author
நான்கு ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA)
அரசாங்கத்திற்கு விசுவாசமாக ஆதரவு கொடுத்த பின்னர், ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சியான சிபிஐ(எம்)
தலைமையில் உள்ள நான்கு கட்சி இடது முன்னணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் கொடுத்த
ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது.
ஜி-8 மாநாட்டிற்கு பார்வையாளர் என்ற முறையில் சென்றிருந்த பிரதம மந்திரி
மன்மோகன்சிங் ஜப்பானில் தூண்டுதல் கொடுக்கும் வகையில் கருத்து கூறியதை அடுத்து இடது முன்னணி இந்த நடவடிக்கையை
எடுத்துள்ளது. இப்பொழுது வாஷிங்டனுடன் அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக
UPA சமீபத்தில்
இறுதி வடிவம் கொடுக்கப்பட்ட இந்திய குறிப்பு உடைய "பாதுகாப்பு நிலைகள்" பற்றிய உடன்பாட்டை, இடது முன்னணி
எதிர்ப்பையும் மீறி, சர்வதேச அணுசக்தி முகவாண்மைக்கு (IEAE)
குழுவிற்கு விரைவில், ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும் என்று கூறியிருந்தார்.
இடது முன்னணி ஜனாதிபதி பிரதீபா பாடிலிடம் புதன் ஜூலை 9 அன்று ஆதரவைத்
திரும்ப பெறும் கடிதம் ஒன்றை முறையாக கொடுத்து ஜனாதிபதி
UPA அரசாங்கத்தை
பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோர வழிநடத்துமாறு கோரியது. கூட்டணி இப்பொழுது இடது முன்னணியின்
நான்கு கட்சிகளை சேர்ந்த 59 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் சிறுபான்மை அரசாகப் போய்விட்டது.
இதற்கிடையில், வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தை தளமாகக் கொண்ட
சமாஜ்வாதி கட்சி, ஜனாதிபதி பாடிலிடம் இந்திய பாராளுமன்றத்தின் கீழ்பிரிவான லோக்சபாவில் இருக்கும் தன்னுடைய
39 உறுப்பினர்கள் ஐக்கிய முன்னணி கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பர் என்ற கடிதத்தை அளித்தது. முன்பு இடது முன்னணியுடன்
உடன்பாடு கொண்டிருந்த சமாஜ்வாதி கட்சி (SP)
யின் ஆதரவை காங்கிரஸ் பெற்றுள்ளது; இதற்காக திரைக்குப் பின் பல தொடர்ச்சியான உடன்பாடுகள் இருக்கக்
கூடும்; அவை இன்னும் வெளிவரவில்லை; இதற்காக கடந்த இரண்டு மூன்று வாரங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று
வந்தன.
UPA மே 2004ல் கடந்த
பொதுத் தேர்தல்களுக்கு பின்னர் முதன்முறையாக அமைக்கப்பட்டபோது, அதில் 14 கட்சிகள் இருந்தன;
இப்பொழுது அந்த எண்ணிக்கை 7 ஆகக் குறைந்துவிட்டது; ஏனெனில் முதலில் இருந்து உறுப்புக் கட்சிகளில் பாதி தம்
ஆதரவை விலக்கிக் கொண்டுவிட்டன. இப்பொழுது இருக்கும் வகையில்
UPA க்கு 216
பாராளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர். 543 உறுப்பினர்கள் இருக்கும் மக்களவையில் பெரும்பான்மைக்கு
தேவைப்படும் 272 ஐ விட இது மிகக் குறைவு ஆகும்.
நம்பிக்கை வாக்கிற்கான வாக்கெடுப்பு எப்பொழுது நடத்தப்படும் என்ற முறையான
அறிவிப்பு இன்னமும் வரவில்லை என்றாலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு இது ஒருவேளை ஜூலை 21
அல்லது 22 அன்று நடக்கலாம் என்று தகவல் கொடுத்துள்ளது.
பெரும்பான்மையை பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி போதுமான எம்.பி.க்களை
திரட்டும் பரபரப்பான முயற்சிகளை கொண்டுள்ளது. தன்னுடைய இலக்கு அடையப்பட்டுவிடும் என்ற தன்னுடைய திறன்
பற்றி காங்கிரஸ் பகிரங்கமாக பெரும் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற விவகார மந்திரி வயலார் ரவி "மன்றத்தில் வாக்கெடுப்பு
நடத்தப்படும்போது பெரும் வெற்றியுடன் நாங்கள் மீள்வோம் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு" எனக் கூறியதாக
தெரிய வந்துள்ளது.
நடைமுறையில் இருக்கும் கறைபடிந்த தந்திரங்களை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி
"பெரும் வெற்றியை" காணக்கூடும்; இதில் இலஞ்சம் கொடுத்தலும் அடங்கும். உண்மையில் இருக்கும் எம்.பிக்கள்
பலர், ஏற்கனவே குற்றப்பின்னணி உடையவர்கள் அல்லது விரும்பத்தகாத குணநலன்களை கொண்டவர்கள்தான்.
அவர்களில் ஒருவரான, வாக்களிப்பதாக கூறியிருக்கும் அடீக் அகமது என்பவர், தற்பொழுது உத்தரப் பிரதேச
சிறையில் உள்ளார்; கொலை உட்பட 150க்கும் மேற்பட்ட குற்றச் சாட்டுக்களை அவர் எதிர்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் UPA
அரசாங்கம் IAEA
ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பில் இருக்கும் 35 உறுப்பினர்களுடன் இரகசியமாக ஒரு மாதத்திற்கு முன்
கையெழுத்திட்டிருந்த உடன்பாட்டின் வரைவு நகலை சுற்றறிக்கைக்கு விடுமாறு கோரியுள்ளது.
IAEA
உடன்பாட்டின் பொருளுரையை இதுவரை இந்தியப் பாராளுமன்றத்திற்கோ அல்லது தங்கள் முன்னாள் ஸ்ராலினிச
நட்புக் கட்சிக்களுக்கோ கூட வெளியிட UPA
மறுத்துள்ளது; அது அடிப்படை ஜனநாயக நெறிகள் பற்றி அது காட்டிய அவமதிப்பைத்தான் வெளிப்படுத்தியது.
இந்த UPA
இன் நடவடிக்கை ஸ்ராலினிஸ்ட்டுக்கள் ஆதரவை விலக்கிக் கொண்டவுடன் வெளியுறவு மந்திரி பிரணாப் முக்கர்ஜி
கொடுத்த பொது உறுதிமொழியை நேரடியாக மீறுகிறது. பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு பெற்ற
பின்னர்தான் சர்வதேச அணுசக்தி முகவாண்மையுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையை தொடரும் என்று அவர்
கூறியிருந்தார்.
வேண்டுமென்றே பொய்கூறுகிறாரா அல்லது அவருடைய முடிவை மீறி மன்மோகன்சிங்
அல்லது காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இத்தகைய முடிவை எடுத்தனரா என்பது தெளிவாக இல்லை.
ஜப்பானில் ஜூலை 8 முதல் 10 வரை ஜி-8 கூட்டத்தில் பங்கு பெற்ற மன்மோகன்
சிங் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷை தனியே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சந்தித்து, இந்திய அமெரிக்க
அணுசக்தி உடன்பாட்டை செயல்படுத்துவதில் UPA
மேற்கொண்ட முயற்சிகளை பற்றி தகவல் கொடுத்தார். புஷ் கீழ்க்கண்ட கருத்தை கூறினார்;
"இரு நண்பர்களுக்கு இடையே இது நல்ல பேச்சுவார்த்தை. மேலும், திரு. பிரதம
மந்திரி அவர்களே, இன்று எங்களோடு சேர்ந்திருப்பதற்கு நன்றி; உங்கள் நாட்டில் உங்கள் தலைமைக்காக
வாழ்த்துக்கள். என்று புஷ் கூறினார்.
கூட்டணியின் உடைவு இடது முன்னணிக்கும்
UPA
அரசாங்கத்திற்கும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியும் செயல்படுத்திவிடுவது என்ற பிந்தையதின்
தீர்மானம் பற்றிய நீடித்த அரசியல் போராட்டத்தின் உச்சக் கட்ட முடிவு ஆகும். இந்த ஒப்பந்தம் முதலில் ஜூலை
2007ல் கையெழுத்தாயிற்று.
ஒரு சில வாரங்களுக்கு முன்பு
UPA அரசாங்கம்
ஒப்பந்தச் செயல்பாட்டில் தான் இடது முன்னணியின் எதிர்ப்பையும் மீறி, ஈடுபடப்போவதாக அறிவித்து, அதற்காக
IAEA
நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு சில "பாதுகாப்பு விதிகள்" உடன்பாடு இறுதியாக்கப்பட்டிருக்கும் இந்தியா
தொடர்பானவை பற்றியதையும் அளிக்க இருப்பதாகக் கூறியபின், தற்போதைய நெருக்கடி வெளிப்பட்டது.
இந்திய அமெரிக்க 123 அணுசக்தி ஒப்பந்தப்படி (அமெரிக்க அணுசக்தி சட்டத்தின்
123 விதியின் கீழ் வருவதால் அந்தப் பெயர்), இந்திய அரசாங்கம் சர்வதேச அணுசக்தி முகவாண்மையுடன் சில
பாதுகாப்புவிதிகள் பற்றி உடன்பாட்டிற்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; அதில் இந்திய சிவிலிய அணுசக்தி
உலைகள் பற்றிய பட்டியல் இருக்கும்; அவை ஆய்வு நடத்தும் அமைப்பின்கீழ் தொடர்ச்சியான கண்காணிப்பிற்கு
உட்படும் என்று இந்திய அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படும்.
இதைத்தவிர, இந்தியா
NSG எனப்படும் அணுசக்தி எரிபொருள் அளிக்கும் குழுவிடம் (Nuclear
Suppliers Group) அணுசக்தி வணிகக் கட்டுப்பாடு பற்றி
ஒப்புதலையும் பெற வேண்டும். இந்தக் குழுவில் 45 நாடுகள் உள்ளன; அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன்,
பிரான்ஸ், இந்தியாவின் பிரதான போட்டியாளர் சீனா ஆகியவை உள்ளன.
இந்த உடன்பாடுகள் ஏற்பட்டவுடன், ஒப்பந்தம் அமெரிக்க காங்கிரசிற்கு இறுதி
ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வருவதை அடுத்து குறைவான கூட்டங்களைத்தான்
அமெரிக்க காங்கிரஸ் கொண்டிருப்பதாலும், இந்திய அரசாங்கம் மற்றும் புஷ் நிர்வாகம் பெரும் ஆர்வத்துடன் புஷ்
பதவியை விட்டு விலகும் முன் உடன்பாட்டை காண விரும்புவதாலும்,
UPA, இடது
முன்னணி எதிர்ப்பை எப்படி மீறுவது என்பது பற்றி தான் சிந்தித்து விரைவில் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறது.
இழிவான முறையில் தன்னை தாழ்த்திக் கொள்ளுதல்
கடந்த நான்கு ஆண்டுகளில் ஸ்ராலினிஸ்ட்டுகள் தலைமையிலான இடது முன்னணி சீரான
முறையில் UPA
அரசாங்கத்தை ஆதரித்து வந்துள்ளது பாரதிய ஜனதா கட்சி (BJP)
என்னும் வகுப்புவாதக் கட்சியை எதிர்த்துப் போராட தான் காங்கிரசிற்கு ஆதரவு கொடுப்பதாகக் கூறியும்
வந்துள்ளது. பிஜேபி
யின் வகுப்புவாதக் கொள்கைகள் பெரும் ஆபத்துக்களை கொடுக்கக்கூடும்
என்பது உண்மையேயாயினும், அந்த ஆபத்துக்களை எதிர்த்துப் போரிட கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றும் உகந்த கருவி
அல்ல; ஏனெனில் இதுவும்தான் சாதி, வகுப்புவாத அரசியலை தேர்தல் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறது.
1984ம் ஆண்டு முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தி ஒரு சீக்கிய
மெய்க்காப்பாளரால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியே அப்பாவி சீக்கியர்களுக்கு எதிராக
ஒரு கொடூரமான இனப்படுகொலைக்கு திட்டமிட்டது.
மரபார்ந்த வகையில் இந்தியாவில் உள்நாட்டு, வெளிநாட்டு மூலதனத்தின் அரசியல்
பிரதிநிதி என்னும் முறையில் காங்கிரஸ் கட்சி முதலாளித்துவத்தின் நலனுக்காக பொருளாதார கொள்களை
தொடர்ந்து வருகிறது, ஏற்கனவே வறுமையில் வாடும் மக்களுக்கு இவை எதிரானவை ஆகும்.
ஸ்ராலினிஸ்ட்டுக்கள் காங்கிரஸ் கட்சி இவர்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டனர்,
இவர்களுடைய ஆதரவு இல்லாமல் வாழமுடியும் என்ற கருத்திற்கு வந்துவிட்டனர் என்று தெளிவான பின்னர்தான்
ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவிற்கு வந்தனர். சமாஜ்வாதி கட்சியின் ஆதரவு கிடைத்தவுடன் காங்கிரஸ் கட்சி
ஸ்ராலினிஸ்ட்டுக்களை வெளிப்படையான இகழ்ச்சியுடன் நடத்தியது.
UPA க்கு கொடுத்த ஆதரவு
விலக்கிக் கொள்ளப்பட்டது பற்றி சிபிஐ(எம்) க்குள்ளேயே வலுவான பூசல்கள் உள்ளன; இது முன்கூட்டியே தேர்தல்
வருவதைச் செய்யக்கூடும். கட்சியின் மேற்கு வங்க மாநிலப் பிரிவு இரு முக்கிய காரணங்களுக்காக இந்த ஆதரவு
விலகலை எதிர்க்கிறது.
முதலாவது, தேர்தல்களை எதிர்கொள்ள கட்சியே அஞ்சுகிறது. கடந்த இரு
ஆண்டுகளில், தனியார் முதலீட்டின் மூலம் மாநிலத்தை தொழில்மயமாக்கும் உந்துதலால் ஏற்பட்ட தொடர்ச்சியான
பல அரசியல் நெருக்கடிகளினால் கட்சி அமைப்பே சீர்குலைந்துள்ளது. இதன் விளைவாக கட்சியை பொறுத்தவரை
உற்சாகமற்ற நிலைப் பிரச்சினைகள் பல உள்ளன. கட்சித் தலைமை தேர்தலில் தன்னுடைய விதியை நிர்ணயிக்க
களத்தில் இறங்கும் முன் மேற்கு வங்க கட்சி அமைப்பை சீர் செய்வற்கு பல மாதங்கள் ஆகும் என்று கருதுகிறது.
மேலும் இக்கட்சி சமீபத்தில் நடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் அம்மாநிலத்தின்
தீவிரப் பின்னடைவைக் கொண்டது. இடது முன்னணி அரசாங்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நந்திகிராம்
விவசாயிகளுக்கு எதிராக நடத்திய படுகொலையை அடுத்து எதிர்ப்புக்கள் குறிப்பாகப் பெருகியுள்ளன.
கட்சியின் மேற்கு வங்கப் பிரிவு அரசியலில் அதிக விலையை இதற்காகக் கொடுக்க
வேண்டியிருக்கும் என்றும் அஞ்சிறது; கடந்த நான்கு ஆண்டுகளாக
UPA
அரசாங்கத்தற்கு சிறிதும் தயக்கமற்ற முறையில் ஆதரவு கொடுத்துள்ளது இதற்குக் காரணம் ஆகும்.
UPA இன்
பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு ஒரு பொருளாதாரப் பேரழிவை தருபவை;
பணவீக்கம் 12 சதவிகிதத்திற்கு உயர்ந்துவிட்டது; அடிப்படை உணவுப் பொருட்களை விலை உயர்ந்து இந்தியாவின்
உழக்கும் மக்களிடையே பரந்த பட்டினி நிலைமைதான் உள்ளது.
இரண்டாவது காரணம் மேற்கு வங்க சிபிஐ (எம்) அதன் முதல் மந்திரியும்
பொலிட்பீரோ உறுப்பினருமான புத்ததேப் பட்டாசார்ஜியின் தலைமையில் சற்றும் அயராமல் பொருளாதார
கொள்கையை தொடர்கிறது; அது மாநிலத்தை சர்வதேச மற்றும் உள்நாட்டு மூலதனத்தை ஈர்க்கும் வகையில்
செய்துள்ளது. புத்ததேப் மேற்கு வங்கத்தை ஒரு குறைவூதிய தொழிலாளர் தொகுப்புச் சிறப்பிடமாக மாற்றும்
உந்துதலை கொண்டுள்ளார்: இதற்காக பெருவணிகத்திற்கு மாநிலத்தில் வேலைநிறுத்தங்கள் என்ற "ஆபத்து" முடிவிற்கு
கொண்டுவரப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதன் விளைவாக, மேற்கு வங்கக் கட்சித் தலைமைக்கும் இந்தியாவின் பெரு
வணிகங்களான டாட்டாக்கள் போன்றவற்றிற்கும் இடையே சக்திவாய்ந்த இணைப்புக்கள் நிறுவப்ப்டுள்ளன. இந்திய
பெருவணிகத்தின் கணிசமான பிரிவு வலுவாக இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கிறது; அது வணிகப்
பெருக்கத்தில் எதிர்பார்க்கப்படும் மகத்தான அதிகரிப்பில் இருந்து இலாபம் அடையும் என
கணக்கிடுகிறது--கிட்டத்தட்ட 100$ பில்லியன் சில ஆண்டுகளில் கிடைக்கும்; இராணுவம் மற்றும் அணுசக்தி பொருளில்
இந்திய அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால் அவை கைகூடும்.
இதன் விளைவாக, புத்ததேப் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள்
UPA க்கு
கொடுக்கும் அரசியல் ஆதரவை விலக்கிக் கொள்ளுவதின் மூலம் இந்த வணிக நலன்களை விரோதித்துக் கொள்ளுவது
பற்றியும் கவலைப்படுகின்றனர்.
புத்ததேப் இவருக்கு முன் பதவியில் இருந்தவரும் சிபிஐ(எம்) அரசியற்குழு உறுப்பினருமான
ஜோதி பாசு முதலில் செலுத்திய கொள்கைகளைத்தான் தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.
இருவருமே கட்சிப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரட் நடவடிக்கையான
UPA க்கு
கொடுக்கும் ஆதரவை நிறுத்துவதை எதிர்த்துள்ளனர். ஸ்ராலினிச மூத்த தலைவரான ஜோதி பாசு கீழ்க்கண்டவாறு
கூறியதாக சொல்லப்படுகிறது:
"இந்த ஒப்பந்தத்தை தோழர்கள் எதிர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்; இதை
எப்படியும் காங்கிரஸ் செயல்படுத்த வேண்டும் என நினைக்கிறது; அதை எதிர்க்க வேண்டும், ஆனால் அரசாங்கத்தை
இதற்காக அதிகாரத்தில் இருந்து அகற்றக் கூடாது."
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில், இடது முன்னணியின் ஆதரவு பொறுத்துக்
கொள்ள வேண்டிய இன்றியமையாத தீமையாக இருந்தது. இந்திய உயரடுக்கில் சக்திவாய்ந்த அமெரிக்க சார்புடைய
வலது சாரியைப் பிரதிபலிக்கும் கட்சி என்ற நிலையில், அந்த உறவை தூக்கி எறியும் நேரம் வந்துவிட்டது. இந்திய
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இது பெரும் வல்லரசுகள் குழுவை அடைவதற்கான கடவுச்சீட்டு என்று கருதுவதால்,
அதற்குக் குறுக்கே ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இருப்பதை இது விரும்பவில்லை.
தன்னுடைய அரசியல் நிலைக்கு உடனடியான ஆபத்தை தள்ளிப் போட்டு விட்டதைப்
போல் தோன்றினாலும், UPA
அரசாங்கம் அடுத்த 10 மாதம் தன் வரை பதவிக்காலத்தை நிலைக்க வைக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
ஸ்ராலினிஸ்ட்டுக்களின் நம்பிக்கை நிறைந்திருந்த ஆதரவை அது ஒதுக்கிவிட்டு நம்பகத்தன்மையற்ற, முற்றிலும்
சந்நர்ப்பவாத அடிப்படையிலான சமாஜ்வாதி ஆதரவையும் மற்ற சிறு கட்சிகளுடைய ஆதரவையும் கொண்டுள்ளது;
இவை அனைத்தும் அரசியல் காற்றில் சிறிதே மாற்றம் இருந்தாலும் கட்சி மாறுவதில் இழிந்தவை ஆகும்.
காங்கிரஸ் கட்சியின் அரசியல் நல்வாய்ப்புக்களும் இதே விதத்தில், முற்றிலும்
திரைக்குப் பின் நடக்கும் கொள்கையற்ற மற்றும் சீழிந்த உடன்பாடுகள், உலகில் "மிகப் பெரிய ஜனநாயக நாடு"
என அழைக்கப்படும் நாட்டில் முதலாளித்துவ அரசியல் முறை என ஒப்புக்கொள்வதில் இருக்கும் தன்மைகளிலும்
விரைவாக மாறக்கூடும். |