World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா :
பிரித்தானியா Britain: SEP campaign in Haltemprice and Howden by-election Chris Talbot explains why he is standing பிரிட்டன்: ஹால்டெம்பிரைஸ்-ஹெளடன் துணைத்தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் தான் ஏன் போட்டியிடுகிறேன் என்பதை கிறிஸ் ரால்போட் விளக்குகிறார் 28 June 2008 ஹால்டெம்பிரைஸ்-ஹெளடன் தொகுதியில் துணைத்தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராக நிற்கும் கிறிஸ் ரால்போட் ஜூன் 27ம் தேதி கோட்டிங்ஹாம் கிராமத்தில் கோட்டிங்ஹாம் நகர மன்ற அரங்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். யோர்க்ஷெரியல் கிழக்கு ரைடிங்ஸ் பகுதியில் துணைத் தேர்தல் ஜூலை 10 வியாழன்று நடக்க இருக்கிறது. தற்போது கன்சர்வேட்டிவ் எம்.பி. ஆக இருக்கும் டேவிட் டேவிஸ் அரசாங்கத்தின் "பயங்கரவாத எதிர்ப்பு" சட்டம் தனிநபர்களை 42 நாட்கள் குற்றச்சாட்டு ஏதும் இல்லாமல் காவலில் வைக்க அனுமதிப்பதை எதிர்த்து இராஜிநாமா செய்ததை அடுத்து இத்தேர்தல் நடக்கவிருக்கிறது. சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராக தான் ஏன் போட்டியிடுகிறேன் என்பதை ரால்போட் விளக்கினார். செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறிய கருத்துக்கள் வருமாறு. டேவிட் டேவிஸ் இராஜிநாமா செய்ததை அடுத்து விரைவாக நாம் ஹால்டெம்பிரைஸ்-ஹெளடென் துணைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவை சோசலிச சமத்துவக் கட்சி எடுத்தது. நாங்கள் பல ஆண்டுகளாக உலக சோசலிச வலைத் தளத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்து போரிடுதல் என்ற பெயரில் அடிப்படை குடி உரிமைகளை தொழிற் கட்சி அரசாங்கம் தொடர்ந்து அரித்தெடுப்பதன்பால் கவனத்தை ஈர்த்துள்ளோம். ஜனநாயக உரிமைகளை காத்தல் என்பதற்கான பொறுப்பு தொழிலாள வர்க்கத்திடம் உள்ளது என்று நாங்கள் வலியுறுத்தி வந்துள்ளோம்; இதற்கு தொழிற் கட்சியுடன் அரசியல்ரீதியான உடைவும் உண்மையான சோசலிச கட்சியை கட்டியமைப்பதும் அவசியமாகும். எமது பேச்சுரிமை, கூடும் உரிமை, அராசங்கத்தின் தொடர்ச்சியான குறுக்கீடு இல்லாமல் அனுபவிக்கும் பாதுகாப்புக்கள் ஆகியவற்றின்மீது தொழிற்கட்சி நடத்தும் தாக்குதல், வெறுமனே இஸ்லாமிய அடிப்படைவாதம் கொடுக்கும் அச்சுறுத்தலுக்கு தவறான விடையிறுப்பின் விளைவு மட்டும் அல்ல என்று விளக்கியிருக்கிறோம். இது வண்டியை குதிரைக்கு முன்னே நிறுத்துவது போல் ஆகும். பிரிட்டனை தொழிற்கட்சி போரில் ஈடுபடுத்தியதால் --முதலில் ஆப்கானிஸ்தானில், பின்னர் ஈராக்கில், இப்பொழுது ஒருவேளை ஈரானிலும் எனத் தெரிகிறது-- இது ஆழ்ந்த சீற்ற உணர்வை தோற்றுவித்துள்ளது; அது பயங்கரவாதக் குழுக்களால் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது. எனவேதான் இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்திற்கு வெளியே ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை தீவிரமாக எதிர்த்தல் என்பது இயலாதது ஆகும். மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவில் போருக்கான உந்துதல் பெருநிறுவனங்கள் எண்ணெய், பிற முக்கிய இருப்புக்கள் மீது கட்டுப்பாடு கொள்ள விரும்புவதால் நிர்ணயிக்கப்படுகிறது. எனவேதான், டோனி பிளேயரும் இப்பொழுது கோர்டன் பிரெளனும் -- தொழிற்கட்சி முற்றிலும் கட்டுப்பட்டுள்ள பிரிட்டன் மற்றும் உலக பெருநிறுவனங்களுக்கு உலகின் எண்ணெய் வருவாய்களில் ஒரு பங்கை உறுதிசெய்வதற்கு அமெரிக்க இராணுவ வலிமையுடன் சேர்ந்து கொள்வதற்கு புஷ் நிர்வாகத்துடன் தங்கள் அரசியல் உடன்பாட்டை பிணைத்துள்ளனர். ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் என்பது அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொருளாதார, அரசியல் செயற்பட்டியலினால் நிர்ணயிக்கப்படுகிறது. உலக நிதிய தன்னலக் குழுவின் பிரதிநிதிகள் என்ற முறையில் தொழிற்கட்சி சமூக நலத் திட்டங்களை அழித்தல், கொடுக்க வேண்டிய ஊதியங்களை குறைத்தல் என்ற பணிகளை பெற்றுள்ளது; அப்பொழுதுதான் அது பெருவணிகம் மற்றும் பெரும் செல்வந்தர்களுக்கு வரிக்குறைப்புக்கள் கொடுக்க முடியும். பெரும்பாலான மக்களை வறிய நிலையில் வைத்து ஒரு சிலரை பெரும் செல்வந்தர்களாக ஆக்குவதற்கான ஜனநாயக ஆதரவைப் பெறுவது முடியாது என்பதை கசப்பான அனுபவங்கள் நிரூபணம் செய்துள்ளன. இப்பொழுது பொருளாதாரப் பின்னடைவு பாதிப்பை தொடங்கிய நிலையில், தொழிற்கட்சி, அரசியல் மற்றும் தொழில்துறை எதிர்ப்பு என்னும் எழுச்சி அலையை எதிர்கொள்கிறது; இதை அடக்குமுறை நடவடிக்கைகள் மூலம் தோற்கடிக்க முடியும் என்று நம்புகிறது. பிரிட்டனில் செல்வந்த தட்டிற்கு தொழிற்கட்சி கொடுக்கும் ஆதரவு அதற்கு மக்களின் பரந்த பிரிவுகளின் விரோதத்தைத்தான் தேடிக் கொடுத்துள்ளது. ஹென்டன் இடைத் தேர்தலில் தொழிற்கட்சி தன் வேட்புமனு தொகையையும் தோற்ற நிலையில் நாம் இங்கு இன்று கூடியுள்ளோம்; மொத்தத்தில் ஐந்து சதவீத வாக்குகளை கூட பெறாததால் அது வேட்பு மனுத் தொகையை இழந்தது. மேலும் 24 மில்லியன் பவுண்டுகள் கடன்களைத் தீர்க்க முடியாத திவால் தன்மையையும் அது எதிர்கொண்டுள்ளது. ஹெண்டன் வாக்கு மிகவும் முக்கியமானதாகும். 1976க்கு பின்னர் முதல்தடவையாக முக்கிய கட்சிகளில் ஒன்று ஒரு ஆங்கிலேய இடைத் தேர்தலில் ஐந்தாவதாக வந்துள்ளது. இது கன்சர்வேட்டிவ் கட்சியினால் மட்டும் தோற்கடிக்கப்படவில்லை; லிபரல்கள், பசுமைக் கட்சி மற்றும் பாசிச பிரிட்டிஷ் தேசிய கட்சி ஆகியவற்றாலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தொழிற் கட்சி பதவியில் இருந்து அடித்து விரட்டப்பட வேண்டும். ஆனால் தொழிற் கட்சி தாக்குதல்கள் பற்றிய எங்கள் புரிந்து கொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டால், சிவில் உரிமைகள் காப்பதை டேவிட் டேவிஸ் அல்லது கன்சர்வேடிவ் கட்சி போன்றவற்றின் பொறுப்பிற்கு விடுவது என்பது மிக ஆபத்தைக் கொடுக்கும் தவறாகிவிடும். ஆப்கானிஸ்தான், ஈராக்கிய போர்களில் கொண்ட பங்கினால் டோரிகள் கரங்களும் குருதி படிந்தவை ஆகும். மேலும் மார்க்கரெட் தாட்சரின் கீழ் டோரிக்கள் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை தொடங்கினர்; பதவியில் தொடர்ந்து இருந்திருந்தால், தொடர்ந்து தாக்கியும் இருப்பர். தொழிற் கட்சியின் பெருவணிக, போர் ஆதரவுக் கொள்கைகளின் ஒவ்வொரு கூறுபாட்டையும் அவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்; பிரிட்டனில் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் மீதும் இதைத்தவிர எண்ணெய், எரிவாயு, தாதுப்பொருள்கள் என்பவை இருக்கும் பகுதிகளில் அல்லது போட்டிப் பொருளாதார சக்திகள் இராணுவ மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் முடங்கிப்போன பகுதிகளில் வாழும் துரதிருஷ்டவசமான மக்கள் மீதும் பெரு வணிகத்தால் கோரப்படும் தாக்குதல்கள் அனைத்தையும் செய்திருப்பர். இந்த தொழிற் கட்சி அரசியல் வாதிகளும் டேவிஸிற்கு ஆதரவு தரும் தாராண்மைவாதிகளும் அதிகபட்சம் தங்களை ஏமாற்றிக் கொண்டுள்ளனர்; குறைந்த பட்சம் வேண்டும் என்றே ஒரு காட்டிக் கொடுப்பை நடத்துகின்றனர் --ஏனெனில் அவர்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கான சுயாதீன அரசியல் அணிதரளலை எதிர்க்கின்றனர்; அத்தகைய திரளல் இலாபமுறைக்கு காவலர்கள் என்ற அவர்களுடைய வசதியான வாழ்க்கையை அச்சுறுத்திவிடும் என்பதால். அடுத்த சில நாட்களில் செய்தி ஊடகம் இந்த இடைத் தேர்தலை ஏளனம் செய்யும் வகையில் பெரும் முயற்சி எடுக்கும்; பல கோமாளித்தன வேட்பாளர்களுடைய பணிகள், சுயவிளம்பர பிரியர்கள், உறுதியான வலதுசாரிகள் மற்றும் அரசியலில் நோக்குநிலை தவறியவர்கள் ஆகியோர் இதற்காக பயன்படுத்தப்படுவர். ஆனால் இது தொழிற் கட்சியை பிடியில் இருந்து தளர்த்திவிடத்தான் உதவும் --அதுதான் ஊடகத்தின் நோக்கமும் ஆகும்; இது டேவிஸ் தன்னை அரசாங்கத்திற்கு உறுதியான தீவிர எதிர்ப்பு கொடுக்கக்கூடிய ஒரே நபர் எனக் காட்டிக் கொள்ளத்தான் உதவும். எங்கள் பங்கிற்கு, எங்கள் பொறுப்பை அக்கறையுடன் எடுத்துக் கொள்ளுகிறோம். எங்களுக்கு இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் சாத்தியமானதனைத்தையும் செய்ய முற்படுகிறோம். செய்தி ஊடகம் தவிர்க்க முடியாமல் சுமத்த விரும்பும் இருட்டடிப்பு நிலையில், ஹால்டெம்பிரைஸ்-ஹெளடன் தொகுதி மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவும், ஜனநாயக உரிமைகளை காக்க விரும்புவர்களுக்கு எத்தகைய அடிப்படைப் பிரச்சினைகள் ஆபத்தில் உள்ளன என்பதையும் எச்சரிக்க விரும்புகிறோம். |