WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Germany: Train drivers union submits to government
and management
Drivers must reject the new contract!
ஜேர்மனி: இரயில் சாரதிகள் சங்கம் அரசாங்கம் மற்றும் நிர்வாகத்திடம் சரணடைகிறது
சாரதிகள் புதிய ஒப்பந்தத்தை நிராகரிக்க வேண்டும்!
By Ludwig Niethammer
19 January 2008
Use this version to
print | Send this link by email |
Email the
author
கடந்த ஞாயிறன்று, ஜேர்மன் இரயில் சாரதிகள் சங்கமான
GDL மற்றும்
ஜேர்மன் இயில்வே (Deutsche Bahn AG)
இரண்டும் 10 மாத போராட்டங்களுக்கு பின்னர் ஒரு புதிய ஒப்பந்தத்தின்
முக்கிய மூலங்களுக்கு உடன்பட்டன. குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வு மற்றும்
'பிரத்தியேக ஒருங்கிணைந்த
உடன்படிக்கைக்காக'
(Separate collective agreement)
GDL
தலைவர்கள் பெருமளவில் சாரதிகளின் உண்மையான கோரிக்கைகளைக் கைவிட்டிருக்கிறார்கள்.
அனைத்து விபரங்களும் தெரியவில்லை என்றாலும், தெளிவாகத் தெரியும் ஒரு விடயம்
என்னவென்றால், பல மாதங்களாக போராடி வந்த சாரதிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள
சமரசம் எவ்வகையிலும் பூர்த்தி செய்யவில்லை. சராசரியாக 7 சதவீதமாக உள்ள ஊதிய உயர்வானது, உண்மையில்
சாரதிகளால் 31 சதவீதம் கேட்கப்பட்டதில் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவாக அமைகிறது! நடப்பு நிலவரம்
அதைவிட மோசமாக உள்ளது, அதாவது சாரதிகளின் முக்கிய கோரிக்கையாக இருந்த
"சுதந்திரமான ஒருங்கிணைந்த
உடன்படிக்கை" (Independent collective
agreement) என்பது
GDL தலைவர்களால்
முழுமையாக கைவிடப்பட்டிருக்கிறது.
தற்போது அறியப்பட்டிருப்பதன்படி, இந்த ஒப்பந்தத்தில், 2007 ஜூலை 1 முதல்
2008 பெப்ரவரி 29 வரையிலான காலத்திற்கு ஒரே தவணையில் 800 யூரோ (இது சுமார் 3 சதவீதத்திற்கு
சமமாகும்) வழங்க முடிவாகி இருக்கிறது. மார்ச் 1 முதல், இது 8 சதவீதமாக உயர்த்தப்படுகிறது, பின்னர்
மீண்டும் செப்டம்பர் 1 முதல் கூடுதலாக 3 சதவீத உயர்வு இருக்கும். இந்த புதிய ஒப்பந்தம் 2009 பெப்ரவரி
வரை தொடரும், அதன் பின்னர் வார வேலை நேரமானது 41 மணி நேரத்தில் இருந்து 40 மணி நேரமாகக்
குறைக்கப்படும்.
GDL பிரதிநிதிகள் இதையொரு வெற்றியாக
கூறியிருக்கிறார்கள். அவர்கள் இதை இரயில் ஓட்டுனர்களுக்கான 11 சதவீத ஊதிய உயர்வாக பேசுகிறார்கள்.
சங்கம் ஒரு பிரத்தியேக ஒருங்கிணைந்த உடன்படிக்கையை எட்டியிருப்பதாக
GDL தலைவர்
Manfred Schell
அறிவித்தார். ஆனால் உண்மைகளை மிக நெருக்கமாக இருந்து ஆராயும்போது
அது வேறுபட்ட ஒரு தீர்வை நோக்கி எடுத்துச் செல்கிறது.
முதன்மையாக, இந்த மாறுபட்ட ஊதிய உயர்வானது ஒப்பந்தத்தின் 19
மாதகாலத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டால், இரயில் சாரதிகள் வெறும் 5 சதவீத கூடுதல் ஊதியம் மட்டுமே
பெறுகிறார்கள். பெப்ரவரி 2009 முதல் 40 மணி நேர வாரவேலை நேரமானது ஊதியத்தில் சிறிய
தாக்கமளிக்கும். மார்ச் 2008 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த புதிய ஊதிய விகிதம் தொழில்
அனுபவம் மற்றும் பிற கல்வித் தகுதிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருப்பதால், அது இரயில் சாரதிகள் மத்தியில்
பிரிவுகளை உருவாக்கும். GDLன்
கருத்துப்படி, ஊதிய உயர்வு 7 முதல் 15 சதவீதம் வரை மாறுபடுகிறது. ஆனால் ஆரம்ப கணிப்புப்படி, இரயில்
சாரதிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் 7 சதவீதம் மட்டுமே பெறுவர்.
புதிய விதிகளின் கீழ் 20,000 இரயில் ஓட்டுனர்களில் 12,000 பேர் மட்டுமே
பயனடைவார்கள் என்பதை GDL
ஒத்துக் கொண்டேயாக வேண்டும். அதற்கும் மேலாக, சாதாரண
தொழிலாளர் நிலையில் உள்ள சுமார் 8,000 இரயில் சாரதிகள் மற்றும் பிரத்யேகமாக இரயில் பட்டறைகளில்
பணியாற்றும் சாரதிகள் மற்றும் பிற இரயில் ஊழியர்களும் (ஆரம்பத்தில் இவர்களுக்கும் சமமான சலுகைகளை வழங்க
GDL
கோரியது) இதில் கைவிடப்பட்டுள்ளனர்.
GDL சாரதிகளை பின்புறமிருந்து
குத்திய மற்றும் போராட்டத்தை பலமாக எதிர்த்த
Transnet மற்றும்
GDBA சங்கங்களின்
முதல் வெளிப்பாடுகள் வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன.
GDBA தலைவர்
Klaus-Dieter Hommel
கூறுகையில், "நிர்வாகத்துடன்
பல மாதங்களுக்கு முன்னால் நாங்கள் ஏற்றுக் கொண்ட கட்டமைப்புக்குள்ளேயே இந்த உடன்படிக்கை அமைந்திருப்பதாக
நாங்கள் நம்புகிறோம்."
என்று தெரிவித்தார். மற்றும்
Berliner Zeitung
இதழுக்கு
Transnetன் முன்னனி பேச்சுவார்த்தையாளர்
Alexander Kirchner
கூறுகையில், "அவர்கள்
உண்மையில் ஏதாவது சாதித்திருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டியுள்ளது."
எனத் தெரிவித்தார். 4.5 சதவீத ஊதிய உயர்வுடன் ஒரே தவணை
ஊதியமாக 600 யூரோ வழங்குவது மற்றும் அதனுடன் 2010ல் 10 சதவீத உயர்வு வழங்குவது என்பதுடன் (கோடையில்
Transnet
மற்றும் GDBAவால்
ஏற்றக் கொள்ளப்பட்டதுடன்) "பொதுவாக
இது ஒத்திருப்பதாக"
அவர் தெரிவித்தார்.
அவரது மதிப்பீடு சரியென்றால், (நிறைய ஆதாரங்கள் பின்வரும் திசையையே குறிப்பிட்டு
காட்டுகின்றன), பின் GDL
இந்தவொரு மோசமான ஊதிய உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டிருக்காது என்பதுடன், அது பேச்சுவார்த்தையில்
தற்போதிருக்கும் ஒருங்கிணைந்த கூட்டாளிகளான இரயில் நிர்வாகத்திற்கும்,
Transnet மற்றும்
GDBAக்கும்
கூட கண்டனம் தெரிவித்திருக்கும். மேலும், GDL
தற்போதைய உடன்படிக்கை வரைவை ஏற்றுக் கொள்ளும்,
"தற்போது
நாங்கள் Transnet
மற்றும் GDBAவுடன்
பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம்"
என்ற GDLன்
சமீபத்திய செய்தித்தொடர்பாளர் Seibertn
ஆல் அளிக்கப்பட்ட அறிவிப்புகளும் இதையே குறிப்பிட்டு காட்டுகின்றன.
சங்க ஆய்வாளர் Josef
Esser இனாலும் இதே போன்ற கண்ணோட்டம் வெளியிடப்பட்டது.
GDL
இனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் "தன்னாட்சி"
உரிமையை அவர் சந்தேகிக்கிறார். ஒரு பத்திரிகை பேட்டியில்
Esser கூறுகையில்,
"இன்னும்
80 சதவீதம் கருதப்படக்கூடிய அளவில் ஒரு முழுமையான வரைவு ஒப்பந்தம் ஏற்படுத்தலாம். பின்னர் வரையறுக்கப்பட்ட
ஆறு தொழில் பிரிவுகளில் ஊதியங்கள் மற்றும் வேலை நேரங்கள் குறித்து பிரத்யேகமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான
ஒரு சிறப்பு ஒருங்கிணைந்த உடன்படிக்கைகள் உள்ளன."
என தெரிவித்தார். ஆறு பிரிவுகளில் ஒன்று இரயில் சாரதிகள்
பற்றியதாக இருக்கும், அதற்கு GDL
பொறுப்பாகும். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஆனால் அது முழுமையாக
சுதந்திரமானது என்றும், அதன் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் சம்பளங்களுக்காக அது பேச்சுவார்த்தை நடத்தலாம்
என்பதும் பொருளல்ல, அது ஒட்டமொத்த அமைப்புடன் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். இது
GDLன்
அடுத்தக்கட்ட படியாகும், ஆனால் தற்போது GDL
பிரகடனப்படுத்தி வருவதுபோல ஒரு 'சுயேட்சியான
ஒருங்கிணைந்த உடன்பாட்டிற்கான'
அதுவொரு அதிகபட்ச கோரிக்கையல்ல."
என அவர் தெரிவித்தார்.
2002ன் கோடைகாலத்தில்,
Transnet மற்றும்
GDBA
சங்க அதிகாரிகளுடன் இணைந்து ஓர் ஒருங்கிணைந்த கூட்டணி பேச்சவார்த்தையை நடத்துவதில் இருந்து விலகுவதாக
GDL
அறிவித்தது. அதன் பின்னரே, சமூக நிலைகளில் இரயில் சாரதிகள் கடுமையான சம்பள வெட்டுக்கள் மற்றும் குறைப்புகளை
எதிர்ப்பார்கள் என்பதை இந்த அமைப்புகள் ஒப்புக் கொண்டன என்பதாக அது கூறியது.
இதுவே ஒரு "சுயேட்சியான
ஒருங்கிணைந்த உடன்படிக்கையை"
ஏற்பதற்கான உட்பொருளாகும். இதனால் மட்டுமே 31 சதவீத உயர்வுக்கான கோரிக்கை சாத்தியப்படும்.
எவ்வாறிருப்பினும், அதுவரை, ஒருங்கிணைந்த உடன்பாட்டின் பொருண்மைகளைச் சாரதிகள் சுயேட்சயாக வரையறுக்க
வாய்ப்பை உருவாக்கக் கூடிய GDL
உடனான ஓர் ஒப்பந்தத்தை ஏற்க ஜேர்மன் இரயில்வே நிர்வாகம் பிடிவாதமாக
மறுத்திருக்கிறது. ஒரு பிரத்யேக ஒருங்கிணைந்த உடன்படிக்கைக்கான (separate
collective agreement) கோரிக்கையானது
Transnet மற்றும்
GDBA
உடன் நேரடியாக ஒப்பந்தத்தை
உடைத்துக் கொள்வதற்கு எப்போதும் போராட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
மேலும் முக்கியமாக, (சங்கங்களின் மையமாக இருந்த
Transnet ஐ பொறுத்த வரை, பல்வேறு வழிகளில் நிதி
வழங்கப்பட்டது) எவ்வகையிலும் நிர்வாகம் இதை தடுக்க விரும்பியது.
Manfred Schell மற்றும்
Claus Weselsky
ஆகிய GDL
தலைவர்களின் கீழ் வரையறுக்கப்பட்ட வர்த்தக சங்கங்களின் நோக்கமானது
சாரதிகளின் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளிய சமரசங்கள், தயக்கங்கள் மற்றும் வாய்ப்பு உத்திகளை உருவாக்குவதில்
ஒரு தொடர்ச்சியான விருப்பத்தை வெளிப்படுத்தியது. அதே சமயத்தில், ஜேர்மன் இரயில்வேயின் தலைமை செயல்
அதிகாரி Hartmut Mehdorn
கடுமையான தாக்குதல்களையும் மற்றும் ஆத்திரமூட்டும் செயல்களையும் அதிகரித்திருந்தார்.
முன்னதாக, GDL
மீண்டும் வேலைநிறுத்த நடவடிக்கை தொடங்க மறுத்ததுடன் எவ்வித
முன் நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தையில் இறங்கிய போது, டிசம்பர் தொடக்கத்தில்
Mehdorn எவ்வித
கூடுதல் சலுகைகளையும் வழக்க விரும்பவில்லை.
Transnet மற்றும்
GDBD
சங்கங்களும், சமூக ஜனநாயக கட்சி மற்றும் இடது கட்சி மற்றும் மாபெரும் கூட்டணி உட்பட
Mehdornனும்
இணைந்து சாரதிகளுக்கு எவ்வித சுயேட்சையையும் வழங்குவதற்கு பதிலாக அப்போதிருந்த
"ஒப்பந்த
வரைவையே"
இறுதி வரை தக்கவைத்தார்கள்.
கிறிஸ்துமஸூக்கு முன்னால்
GDL மீண்டும் வெறும் கையோடு நின்றபோது,
பேச்சுவார்த்தையை இரத்து செய்து, ஜனவரி 7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்க அதற்கு
அழுத்தம் கொடுக்கப்பட்டது. மீண்டும் ஒருமுறை, முன்னணி சங்கமும், சமூக ஜனநாயக கட்சி அதிகாரிகளும் தங்களின்
கோபத்தை கொட்டிக் கொண்டதுடன், இரயில் சாரதிகள் மீது பாய்ந்தனர். சமூக ஜனநாயக கட்சியின்
பாராளுமன்ற பிரிவைச் சேர்ந்த Rainer Wend,
பொதுவான நல்லவைகளுக்கு கேடு விளைவிக்க அதன் குறிப்பட்ட
நலன்களை தொடர்வதில் தொடர்ந்து GDLஐ
குறை கூறினார்.
ஆண்டு தொடக்கத்தில், போக்குவரத்து மந்திரி
Wolfgang Tiefensee (சமூக
ஜனநாயக கட்சி) தலையிட்டு ஒரு தீர்வை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இரயில் சாரதிகளின்
போராட்டம் தொடர்ந்து பரவலான மக்களிடமிருந்து வலுவான ஆதரவைப் பெற்று வந்தது. என்ன விலை
கொடுத்தாவது, சமீபத்தில் தொடங்கப்பட்ட பொது சேவையில் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை மூலம் அரசாங்கம்
சாரதிகளின் போராட்டத்தை தவிர்க்க விரும்பியது. அதற்கும் மேலாக, கூட்டரசாங்கத்தின் கொள்கைகளில் இருந்த
கெடுபிடியும் அதிகரித்து வருகிறது, இரண்டு வாரங்களில் நடைபெறவிருக்கும் மாநில தேர்தலில் ஒரு தெளிவான
உணர்வு வெளிப்பட வேண்டும். இந்த சூழல்களின் கீழ், இந்த மோதலுக்கான ஒரு விரைவான முடிவை வலியுறுத்திய
Tiefensee,
இரயில்வே தலைவர்
Mehdornஐ
அழைத்து அவரின் எரிச்சலூட்டும் பாதையை குறைந்தபட்சம் பகுதியாகவாவது விட்டுத் தரும்படி கேட்டுக்
கொண்டார்.
இரயில் சாரதிகள் விட்டு கொடுக்கக்கூடாது என்பதுடன் இந்த உடன்பாட்டையும்
கட்டாயம் நிராகரிக்க வேண்டும்! பழைய "ஒப்பந்த
வரைவை"
மீண்டும் உட்புகுத்துவதால் இரயில் சாரதிகளின் நிலையை மேலும் படுமோசமாக ஆக்குவதோடு மட்டுமில்லாமல்,
சங்கத்தின் அதிகாரத்தின் பிடியில் இருந்து தொழிலாளர்களை விடுவிக்க தொடங்கி இருக்கும் போராட்டத்தையும் அது
வலுவிழக்கச் செய்யும்.
தொழிலாளர் போராட்டங்கள் பொதுத்துறையிலும் மற்றும் சில முக்கிய தொழில்துறையிலும்
தொடங்கி இருக்கும் சூழ்நிலையில், அரசாங்கத்தின் கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன என்பதால், அதிலிருந்து
பின்வாங்கக் கூடாது.
GDL தலைவர்களின் தடுமாற்றங்களும்
மற்றும் முடிவில்லாத சமரசங்களும், "சமூக
கூட்டணி"
என்ற பழைய சங்க கருத்துக்கள் ஜேர்மன் நிர்வாகத்தின் மற்றும் அதன் பின்னணியில்
நிற்கும் அரசாங்கத்தின் தாக்குதல்களை மற்றும் எரிச்சலூட்டல்களை எதிர்க்க பயனற்றவை என்ற உண்மையுடன் நேரடியாக
தொடர்பு கொண்டுள்ளன. GDL
ஒரு செயல்படுத்த கூடிய சமரசத்தை விரும்புகிறது, ஆனால்
அதுபோன்றதொரு விடயம் நிலைக்காது என்பதுடன் அது தோல்வியை மட்டுமே தழுவும்.
தற்போது சங்க உறுப்பினர்களின் தைரியமான மற்றும் தெளிவான தடையீடு தேவைப்படுகிறது.
போராட்டமானது அடித்தளத்தில் இருந்து மேற்தட்டு வரை மீண்டும் மறுஒழுங்கமைப்பு செய்யப்பட வேண்டும். அடிப்படையில்
இதற்கு புதிய மூலோபாயம் மற்றும் நோக்கம் தேவைப்படுகிறது. பெரு வணிகங்களின் இலாப வட்டிகளுக்கு பதிலாக,
அது சமூக நோக்கத்துடன் கூடிய மிக உயர்வான உழைக்கும் மக்களின் தேவைகளாகும். தற்போது நிதியியல் மேற்குடி
மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மற்றும் பெரிய நிறுவனங்கள் -குறிப்பாக ஜேர்மன் இரயில்வே போன்றவை-
ஒட்டுமொத்த சமூகத்தின் சேவையில் நிறுத்தப்பட வேண்டும்.
இந்த அடிப்படையில் மட்டுமே பெருநிறுவனங்கள், அரசாங்கங்கள், தொழிற்சங்கங்கள்
மற்றும் ஐரோப்பிய தொழிற்சங்கம் ஆகியவற்றின் ஏகாதிபத்திய அதிகாரத்திற்கு எதிராக அனைத்து தேசிய எல்லைகளுக்கிடையிலான
தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் அடிப்படையில் ஒரு சர்வதேச மூலோபாயத்தை அபிவிருத்தி செய்யவும் மற்றும்
இதர அனைத்து தொழிலாளர்களுடன் நெருக்கமாக உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புள்ளது.
|