World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: PSG candidate challenges chairman of the Left Party

ஜேர்மனி: சோசலிச சமத்துவ கட்சி வேட்பாளர் இடது கட்சி தலைவருக்கு சவால் விடுகிறார்

By Elizabeth Zimmermann
12 January 2008

Back to screen version

ஜனவரி 27ல் நடைபெறவிருக்கும் ஹெஸ்ஸ மாநில தேர்தல்களில் சோசலிச சமத்துவ கட்சி அதன் இரு பிராந்திய வேட்பாளர்களை நிறுத்துகிறது. இரசாயன &ஸீதீsஜீ;தொழிலாளரும் மற்றும் சோசலிச சமத்துவ கட்சியின் ஹெஸ்ஸி பிராந்திய தலைவரான 59 வயதான ஹெல்முட் ஆரென்சும் மற்றும் ஒரு சமூக காப்புறுதி தொழிலாளியும் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்னாள் சோசலிச வேட்பாளருமான 53 வயதான அகிம் ஹெப்டிங்கும் சோசலிச சமத்துவ கட்சியின் வேட்பாளர்களாவர்.

வரவிருக்கும் ஹெஸ்ஸி மாநில தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இடது கட்சி ஜனவரி 9இல் பிராங்கபேர்ட்(மைன்) நகரத்தில் ஒரு தேர்தல் கூட்டத்தை நடத்தியது. பிராங்கபேர்ட் தெற்கு தொகுதியின் இடது கட்சி வேட்பாளர் டீட்டர் ஹூஜ் மற்றும் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள பேர்லினில் இருந்து வந்திருந்த அக்கட்சியின் தலைவர் லோதர் பிஸ்கி ஆகியோர் முக்கிய பேச்சாளர்கள் ஆவர்.

அக்கூட்டம் இடது கட்சி தேர்தல் பிரசாரத்தின் "உச்சகட்ட" அறிவிப்புக்குரியதாக இருந்ததால், அது சுவரொட்டிகள் மற்றும் செய்தித்தாள் விளம்பரங்கள் வழியாக பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தபோதிலும் கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு சிறு அறையை மட்டுமே வாடகைக்கு எடுத்திருந்தனர். இந்த கூட்டத்தில் சற்றே 100க்கு கூடுதலானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மற்றும் இதே போன்று சில மாதங்களுக்கு முன்னர் மாநிலத்தில் நடைபெற்ற இடதுகட்சியின் துவக்க விழா கூட்டமும் தொழிற்சங்கத்தினரையும், முன்ன் சமூக ஜனநாயக கட்சி (Social Democratic Party) மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்டு கட்சி (German Communist Party) உறுப்பனர்களையுமே கூடுதலாக உள்ளடக்கி இருந்தது.

டீட்டர் ஹூஜ் அறிமுகவுரையில், ஹெஸ்ஸ தொழிற்சங்க இயக்கத்தில் அவரது 40 ஆண்டு கால தொழிற்சங்க வாழ்க்கையை நினைவு கூர்ந்தார் மற்றும் இறுதியாக இடது கட்சியில் இணைவதற்கு முன்னால் சமூக ஜனநாயக கட்சியில் இருந்த பல தசாப்தங்களில் அவர் சாதகமான மற்றும் பாதகமான பாதைகளைக் கடந்து வந்திருப்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

இடது கட்சி தலைவர் பிஸ்கி அவரது உரையில், பொதுவான கருத்துக்களுடன் கூட்டத்தை அணுகியதுடன், "ஐரோப்பிய இடது மற்றும் அதற்கு அப்பாலும்" இடது கட்சி ஒரு முக்கிய முன்னுதாரணமாக திகழ்வதாகப் புகழ்ந்தார்.

இந்த இரு பேச்சாளர்களைத் தொடர்ந்து, ஹெஸ்ஸ சோசலிச சமத்துவ கட்சி வேட்பாளர் ஹெல்முட் ஆரென்ஸ் கூட்டத்தில் பேசும் போது நேரடியாக பிஸ்கிக்கு சவால் விடுத்தார்: "ஹெஸ்ஸ தேர்தல் திட்டங்களில் முன்வைப்படும் கோரிக்கைகளுக்கு முற்றிலும் எதிர்மாறாக பேர்லினில் கொள்கைகளைச் செயல்படுத்தி வரும் ஒரு கட்சி எவ்வாறு நம்பிக்கைக்குரியது? அங்கு அது பிராந்திய அளவில் பலத்த அரசியல் செல்வாக்கு கொண்டிருக்கிறது மற்றும் அரசாங்கத்திலும் பங்கு வகிக்கிறது."

ஆரென்ஸ் தொடர்ந்து குறிப்பிடுகையில்: "என் அளவில், இங்கு ஹெஸ்ஸவில் இடதுகட்சி அதன் தேர்தல் அறிக்கையில் ஒரு யூரோ தொழில்களை [ஒரு மணி நேரத்திற்கு ஒரு யூரோ (1.48 அமெரிக்க டாலர்) எனும் குறைந்த கூலி தொழில்கள்] எதிர்க்கும் போது அதில் நம்பகத்தன்மை கொஞ்சமும் இல்லை. ஆனால் அதே கட்சி பேர்லினில் 39,000 ஒரு யூரோ தொழில்களை அறிமுப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது." என்று தெரிவித்தார். ஒரு யூரோ தொழில்கள் பழைமைவாத நிர்வாகத்தை உடைய ஹெஸ்ஸ உட்பட, இதர பிற ஜேர்மன் மாநிலங்களை விட பேர்லினின் அதிகளவில் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக ஆரென்ஸ் வலியுறுத்தினார். இது போன்ற தொழில்களின் அறிமுகமானது தொழிலாளர்கள் ஒரு முறையான பணி ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர் உரிமைகளை பெறுவதை பாதிப்பதாக அமைகின்றன''.

பிற பிரச்சனைகளிலும் இடதுசாரி வார்த்தைஜாலத்திற்கும் மற்றும் வலதுசாரி கொள்கைக்கும் இடையே இதே போன்ற வெளிப்படையான முரண்பாடு இருப்பதையும் ஆரென்ஸ் சுட்டிக்காட்டினார். "பொதுத்துறை சேவை தொழிலாளர்களின் தொழில்களையும் மற்றும் தொழில் நிலைமையையும் பாதிக்க கூடிய ஒருங்கிணைந்த மாநில அரசுகளின் சம்பள ஒப்பந்த நிர்ணயங்களை நிராகரித்ததற்காக ஹெஸ்ஸவிலுள்ள ரோலான்ட் கொக் இன் அரசாங்கம் [வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக யூனியன்] மிக சரியாகவே விமர்சிக்கபட்டது என்பதை ஒருவர் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், ஆனால் அதே சமயம் இடது கட்சி உள்ளடங்கிய பேர்லினில் இருக்கும் நிர்வாகம் பொது சேவை தொழிலாளர்களின் வார வேலை நேரத்தில் நான்கு மணி நேரத்தை அதிகரிக்கவும் மற்றும் 12 சதவீத ஊதிய வெட்டை அமுலாக்குவதற்காகவும் மாநில அரசுகளின் சம்பள ஒப்பந்த நிர்ணய அமைப்பில் இருந்து விலகிய முதல் மாநில அரசாங்கமாக விளங்கியது?"

இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, அரங்கில் அமர்ந்திருந்தவர்களிடையே பதட்ட உணர்வு ஏற்பட்டது. இருப்பினும், ஆரென்ஸ் மேற்கொண்டும் கருத்துக்களை வலியுறுத்தினார்: "இந்த கூட்டத்தின் ஆரம்ப உரையில், சமூக கொள்கைகள் மற்றும் பிற அரசியல் பிரச்சனைகளில் ஸ்பிதமான கட்சிகளுக்கு இடது கட்சி 'மட்டுமே ஒரு மாற்றீடாக' இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அது அவ்வாறு கிடையாது என்பதை மட்டுமே என்னால் உறுதியாகக் கூற முடியும்! முதல் வாய்ப்பிலேயே சமூக ஜனநாயக கட்சியை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வர ஊக்குவிப்பதே இடது கட்சியின் முக்கிய நோக்கமாகும் என்று நான் கூறுவேன். இதற்கான காரணம் என்னவென்றால், இடது கட்சி ஒரு சமூக சீர்திருத்த வேலைத்திட்டத்தைக் கொண்டுள்ளது, அது எவ்வகையிலும் சமூக ஜனநாயக கட்சியுடையதில் இருந்து மாறுபட்டதல்ல. அது சமூகத்தின் அடித்தளத்திற்கு, அதாவது, முதலாளித்துவ உறவுகளுக்கு சவால் விடும் வகையில் தயாரிக்கப்படவில்லை."

பேர்லினில் சமூக ஜனநாயக கட்சி மற்றும் இடது கட்சி நிர்வாகத்தின் சமூகத்திற்கெதிரான கொள்கைகளைப் பாதுகாத்து பிஸ்கி நேரடியாகவே பதிலளித்தார். கூட்டரசு சட்டங்களுக்கு எதிராக பேர்லின் செனட் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதுடன், அது ''குறிப்பிட்ட சட்டப்பிணைப்புகளாலும்'' கட்டுப்பட்டுள்ளது என அவர் அறிவித்தார்.

பிஸ்கி விவாதித்ததாவது: "சமூகநல சேவைகளுக்கு எதிரான ஹார்ட்ஸ்-IV சட்டங்களைச் எதிர்ப்பதில் பேர்லின் செனட் சக்தியற்று இருக்கிறது. செனட்டர்கள் மத்திய அரசின் சட்டத்தின் கீழ் இருப்பதை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்." ஆயிரக்கணக்கான ஒரு யூரோ தொழில்கள் பேர்லினில் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அது குறித்து தாம் "மகிழ்ச்சியடையவில்லை" என்றும் கூறிய அவர், ஆனால் 10,000 ஒரு யூரோ தொழில்களை மொத்த சம்பளமாக 1,300 யூரோக்கள் அளிக்கும் தொழில்களாக மாற்ற திட்டங்கள் இருப்பதாகக் கூறி பேர்லின் இடது கட்சி செயல்பாடுகளின் மீது ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க முயன்றார். அதே சமயத்தில், அது போன்றவொரு முனைவு எடுக்கப்படும் போது எவையெல்லாம் முழுமையாக குறைந்த ஊதிய தொழில்கள் என்பதை எவ்வகையிலும் விளக்க அவர் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. பிற ஜேர்மன் மாநிலங்களை விட பேர்லின் இடது கட்சியின் தொழிற்கொள்கை மிகவும் நியாயமுள்ளதாக இருப்பதாக கூறும் அளவிற்கு பிஸ்கி உரை அமைந்தது.

பின்னர், பொது சேவை தொழிலாளர்களின் பணியிடங்கள் மற்றும் சம்பளங்களைத் தாக்கும் வகையில் பேர்லினின் சமூக ஜனநாயக கட்சி - இடது கட்சி நிர்வாகம் மாநில அரசுகளின் சம்பள நிர்ணய அமைப்பில் இருந்து விலகிக் கொண்டிருப்பது குறித்து பார்வையாளர்களின் மத்தியில் இருந்து எழும்பிய மற்றொரு கேள்விக்கும் பிஸ்கி பதிலளித்தார். அரசாங்கத்தில் இணைந்து செழிப்பானகாலத்தில் மட்டுமல்லாது கடினமான காலகட்டத்திலும் பணியாற்வேண்டியுள்ளது என ஆணவமாக பதிலுரைத்த அவர், பேர்லின் செனட், குறிப்பாக இடது கட்சியுடன், அதன் அனைத்து வெட்டுக்கள் மற்றும் சேமிப்புகளின் முறைமைகளை தொழிற்சங்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுத்தி இருந்தது என்பதையும் நினைவுபடுத்தினார். நகரம் வங்குரோத்தடைந்து விட்டதாகவும், வேறு எவ்வகையான கொள்கைகளும் சாத்தியமில்லை என்றும் பிஸ்கி அறிவித்தார்.

கட்சியின் வாக்குகளையும் பாதிக்கும் இந்த கொள்கைகளுக்காக இடது கட்சி "பல பின்னடைவுகளை சந்திக்கவேண்டியிருந்ததாக'' பிஸ்கி ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்கு வேறு மாற்று இல்லை என தெரிவித்த அவர், கட்சி வேறெதும் செய்யமுடியாது என்றார். இடது கட்சி பற்றி "ஒரு வகையான நம்பகத்தன்மையை" பிஸ்கியிற்கு இது அளித்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால்: நகரத்தின் நிதி நெருக்கடி சுமையைப் பிடிவாதமாக நகர மக்களின் முதுகில் மாற்றியதோடல்லாமல், பிஸ்கியைப் பொறுத்த வரை, பரவலான மிகப் பெரிய எதிர்ப்புகளைச் சந்திப்பதில் கட்சி பின் வாங்காது என்ற அடிப்படையில் இடது கட்சியின் நம்பகத்தன்மை அமைந்துள்ளது.

பேர்லினினைப் பற்றிய உண்மைகள்

உண்மையென்ன என்றால், 2001ன் கோடைகாலத்தில் பேர்லினின் அதிகாரத்தைக் கைபற்றிய சிறிது காலத்திற்கு பின்னர், சமூக ஜனநாயக கட்சி மற்றும் இடது கட்சியின் சிகப்பு-சிகப்பு கூட்டணியானது, வங்குரோத்தான Berlin Banking Society இனை ஜாமீனில் விடுவிக்க 21.6 யூரோ கடன் வழங்கும் ஒரு சட்டத்தை இயற்றியது. மேலும் இந்த வங்குரோத்தான வங்கியின் முக்கிய பங்குதாரர்களுக்கு பணத்தைத் திருப்பி அளிக்க மாநில நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஆண்டு அடிப்படையில் கூடுதலாக 300 மில்லியன் யூரோ அளிக்கப்பட்டது. அன்றிலிருந்து, கடனைத் திருப்பி அளிப்பதற்காக மக்களிடம் கடுமையான வெட்டுக்கள் செய்யப்பட்டு வருகிறது.

முன்னாள் சமூக ஜனநாயக கட்சி மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பேர்லின் நீர் வினியோகிக்கும் நிறுவனத்தைப் பகுதியாகத் தனியார்மயமாக்கியதைத் திரும்பப் பெற செனட் மறுத்துவிட்டது, இருப்பினும் சமூக ஜனநாயக கட்சி மற்றும் இடது கட்சி இரண்டும் நீர் வினியோகத்தை மீண்டும் அரசுடமையாக்குவதே அவைகளின் நோக்கமாக தங்களின் 2001ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்தன. அதற்கு பதிலாக, தனியார் முதலீட்டாளர்களின் (RWE and Veolia Waters) இலாபங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது, இதன் விளைவாக பேர்லினில் தண்ணீர் விலை சராசரியாக 25 சதவீதம் உயர்ந்தது. பேர்லின் பொருளாதார செனட்டர் ஹெரால்ட் வொல்வ் (இடது கட்சி) மீண்டும் ஒருமுறை, மக்களின் செலவிலேயே - தனியார் தண்ணீர் நிறுவனங்களுக்கு தற்போது மேலும் சலுகைகள் அளிப்படுகிறது.

கூட்டணி ஆட்சியில், 15,000 பணியிடங்கள் வெட்டப்பட்டுள்ளன என்பதுடன், வரும் 2012ல் மேலும் 18,000 குறைக்கப்பட இருக்கின்றன. கூட்டணி ஆட்சியின் முதல் நான்கு ஆண்டுகளில், 500 மில்லியன் யூரோவிற்கும் மேலாக சம்பள செலவீனங்கள் வெட்டப்பட்டு இருக்கிறது.

பொது சேவைகளும் மற்றும் அமைப்புகளும் கூட பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பொது சேவை தொழிற்சங்கமான Verdi இன் நெருக்கமான ஒத்துழைப்புடன் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்தில் 10 சதவீத வெட்டை அறிமுகப்படுத்தி நகரத்தின் போக்குவரத்து துறையில் செனட் சேமிப்புகளைச் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. புதிய தொழிலாளர்கள் தங்களின் ஊதியத்தில் 15 சதவீத வெட்டு கண்டிருக்கிறார்கள்.

கூடுதலான முக்கிய வெட்டுக்கள் நகரத்தின் சுகாதார மற்றும் பள்ளித்துறைகளில் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது, அதேவேளை முன்னர் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட 65,000 குடியிருப்போரைக் கொண்ட GSW எனப்படும் வீடமைப்பு நிறுவனம், வரம்பின்றி வாடகை வசூலிப்பதில் பெயர் பெற்ற அமெரிக்க முதலீட்டாளர் மற்றும் வியாபார நிறுவனமான செர்பிரஸிடம்(Cerberus) விற்கப்பட்டது.

பிராங்பேர்ட்டில் நடந்த இடது கட்சியின் தேர்தல் கூட்டத்திலிருந்து ஒரு முக்கியமான அரசியல் பாடம் அறிந்து கொள்ளப்பட வேண்டியதாகும்.

இடது கட்சி பிரதிநிதிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை முன்வைத்தவைகளுக்கும், அவர்களின் அரசியல் நடைமுறைக்கும் இடையே உள்ள வெளிப்படையான முரண்பாடுகளில் அவர்களுக்கு எவ்விதமான குழப்பமும் இல்லை. உண்மையில், தேவைப்படும் போது (பேர்லினை பார்க்கவும்) நிலைமையை ஸ்திரப்படுத்தவும், வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் தங்களின் நலன்களை பாதுகாப்பதற்காகக் கோரும் கீழ்த்தரமான பணிகளை நடத்துவதில் பங்கு பெறும் சமூக ஜனநாயக கட்சியை பாதுகாக்க தான் விரைந்தியங்க அக்கட்சி தயாராகி இருக்கிறது.

கட்சியின் இரட்டைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையில்லாமையை பிராங்பேர்ட் வேட்பாளரான டீட்டர் ஹூஜ் மற்றொரு அறிக்கையும் பிரதிபலித்தது. பிற கட்சிகளுடன் உடன்படிக்கை அல்லது ஒப்பந்தங்கள் தொடர்பான அல்லது மாநில அரசாங்க கூட்டணியில் இடது கட்சிக்கு பங்கெடுத்துக் கொள்வது பற்றிய எவ்விதமான ஊகங்களிலும் தான் ஈடுபடவிரும்பவில்லை என அவர் தெரிவித்தார். இது போன்றதொரு கூட்டணி ஆட்சி ஏற்பட்டால், அது ஒரு மத்திய அரசாங்கத்தில் இடது கட்சி கலந்துகொள்வதன் சாதகமான தன்மைக்கு ஒரு பரிசோதனையாக அமையலாம்.

பிற கட்சிகளுடனான கூட்டணி குறித்த இதுபோன்ற எவ்விதமான முடிவும் கட்சி தலைமையால் அல்லாமல் உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என ஹூஜ் தெரிவித்தார். எந்த சமயத்திலும், இடது கட்சி ஒரு "சமரச உடன்படிக்கை" என அழைக்கப்படுவதில் அல்லது கூட்டணியில் பங்கு பெறுவது குறித்து முடிவெடுக்கும் முன்னதாக உறுப்பினர்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இந்த அறிக்கையும் உண்மையின் முகத்தை வெளிப்படுத்துகிறது. கட்சியின் ஜனநாயகம் மற்றும் உறுப்பினர்களின் உரிமைகள் மூலம் ஹெஸ்ஸவை ஒரு சோதனை முயற்சியாகவே இடது கட்சி தலைமை கையாள்கிறது. மாநில தேர்தலில் தங்களின் முன்னணி வேட்பாளராக டீட்டர் ஹூஜ் நிறுத்துவது குறித்து இடது கட்சி தலைவர்கள் ஒஸ்கார் லாபொன்டைன் மற்றும் கிரகோர் ஹீஸி ஆகிய இருவரும் ஏற்கனவே கடந்த ஆண்டு வசந்தகாலத்தில் தங்களின் சொந்த திட்டத்தை வரைந்துவிட்டார்கள். சரியான நிலைகளின் கீழ் சமூக ஜனநாயக கட்சியுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்த, ஹெஸ்ஸ மாநில பாராளுமன்றத்தில் நுழைவதற்கான ஒரு வழியை உருவாக்குவதற்காக தொழிற்சங்கங்களில் மற்றும் ஹெஸ்ஸவின் சமூக ஜனநாயக கட்சியில் ஹூஜ் இற்கு உள்ள பெருமளவிலான தொடர்புகளைப் பயன்படுத்த லாபொன்டைன் மிகுந்த ஆவலாக உள்ளார்.

எவ்வாறிருப்பினும், இடது கட்சியின் பிரதிநிதிகள் கூட்டத்தில் ஹூஜ் இருமுறை கட்சி உறுப்பினர்களின் வாக்களிப்பில் தோல்வி அடைந்துள்ளார். இதற்கு பதிலாக உறுப்பினர்கள் நீண்ட காலமாக முன்னாள் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் பின் மெட்ஸ் முன்னணி வேட்பாளராக்கினர். சமூக ஜனநாயக கட்சியுடன் எவ்விதமான கூட்டணியையும் தாம் எதிர்ப்பதாக மெட்ஸ் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்தார். இந்த முடிவை மாற்றவும் மற்றும் மெட்ஸ் வேட்பாளர் போட்டியில் இருந்து "தாமாகவே" விலகிக் கொள்ளச் செய்யவும் பேர்லின் கட்சி தலைமை நடவடிக்கையில் இறங்கியது. பின்னர் அது மற்றொரு வேட்பாளர் வில்லி வன் ஓயனை முன்னிறுத்தியது, அவரின் பணி என்னவென்றால் இடது கட்சி மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளுக்கு இடையே கூட்டணிக்கான வாய்ப்பை திறந்து வைப்பதாகும். இதுதான் உறுப்பினர்களிடம் இடது கட்சியும் மற்றும் ஹூஜ் உம் முன்வைக்கும் உறுதிமொழியும் நம்பிக்கையுமாகும்!.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved