WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
Report documents growth of social inequality in France
பிரான்சில் சமூக சமத்துவமின்மை அதிகரிப்பதை அறிக்கை உறுதிப்படுத்துகிறது
By Alex Lantier
4 January 2008
Use this version
to print | Send this link by email
| Email
the author
"பிரான்சில் உயர் வருமானம் (1998-2006): சமத்துவமின்மையின் அதிகரிப்பா?"
என்ற தலைப்பில் பாரீஸ் பொருளாதாரப் பள்ளியின்
Camille Landais எழுதிய ஒரு அறிக்கையானது பிரான்சில்
அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை குறித்து மதிப்புமிக்க புள்ளிவிபரங்களை தருகிறது. பெருமளவிலான மக்களின்
வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டிருக்கும் தேக்கநிலை, சிறு மேற்தட்டுக்களிடம் அதிகரித்து வரும் வருமானம் மற்றும்
இலாபம், சமூக கட்டமைப்பில் உயர்மட்டத்தில் இருப்போரால் பெருந்திரளாக குவிக்கப்பட்டுள்ள ஒட்டுண்ணித்தன்மையானதும்
ஊகவாணிப முறையிலானதுமான செல்வத்தினது தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது.
வருமான வரி புள்ளிவிபரங்களின் அடிப்படையில், உழைக்கும் மக்களின் வருமானம் தேக்கநிலை
அடைந்திருப்பதை குறிப்பிடுவதில் இருந்து Landais
இவ்வறிக்கையை தொடங்குகிறார். 2006ன் நிலையான யூரோவின்படி, 1998ல் 689.5 பில்லியனாக இருந்த
மொத்த அறிவிக்கப்பட்ட மொத்த அரச வருமானம் 19.03 சதவீத உயர்வுடன் ஆண்டுக்கு 2.52 சதவீதம் எனும்
விகித்தில் 2005ல் 820.7 பில்லியனுக்கு சென்றது. எவ்வாறிருப்பினும், நடுத்தர வருமானம் பெறுவோர் (வருவாய்
பகிர்வின் மத்தியில் இருப்பவர்கள், மக்கள்தொகையின் பாதி பேருடைய ஊதியம் இந்த பிரிவில் அடங்குகிறது)
ஆண்டுக்கு 0.6 சதவீதம் எனும் விகித்தில் 4.29 சதவீத உயர்வுடன் 17,031 யூரோவில் இருந்து 17,762
யூரோவுக்கு சென்றது.
உண்மையில் அறிக்கையின்படி, பொருளாதார லாபங்களானது வருமான படிநிலையில் முதலிடத்தில்
உள்ள ஒரு மிகச் சிறுபான்மையினரால் முக்கியமாக பெறப்பட்டுள்ளது. வருமான பகிர்வின் அடித்தளத்திலுள்ள 90
சதவீதம் 1998 முதல் 2005 வரை 4.6 சதவீத உயர்வை மட்டுமே கண்டது, இதுவும் நடைமுறையில்
அடித்தளத்தில் உள்ள 50 சதவீதத்தில் இருந்து வேறுபடுத்த முடியாமல் உள்ளது. வருமான பகிர்வின் முதலிடத்தில் உள்ள
10 சதவீதம் ஆண்டுக்கு 1.2 சதவீத வருமான உயர்வைக் கண்டது, உயர்வமானம் பெறுவோரின் அதிகூடிய வருமான
வளர்ச்சியானது 90 முதல் 99 வது சதவீதத்திற்குள் வரும் குறைந்த வருமான வளர்ச்சியுடன் சமப்படுத்தப்பட்டுள்ளது.
அடிப்படையில் முன்னணியிலுள்ள சதவீதத்தினரின் (மக்கள் தொகையில் 1 சதவீதம் மட்டும் இருப்போரின்) வருமானம்
ஒட்டுமொத்த அரச வருமானத்தில் ஆண்டுக்கு 2.5 சதவீதம் எனும் விகிதத்தில் அதிகரித்தது.
மற்றொரு புறம், இந்த ஒரு சதவீதத்தினரில் முதல் பத்து நபர்கள் ஆண்டுக்கு 4
சதவீத அடிப்படையில் 32 சதவீத வருமான வளர்ச்சியைப் பெற்றனர். மேலும் இதே ஒரு சதவீதத்தினரில் வரும்
முதல் நூறு நபர்கள் ஆண்டுக்கு 5.2 சதவீத அடிப்படையில் 42.6 சதவீத வளர்ச்சியைப் பெற்றனர்.
உண்மையில், அறிக்கை அதை வெளிப்படையாக தெரிவிக்காத போதிலும், வருமான
பகிர்வின் அடித்தளத்தில் உள்ளவர்கள் அவர்களின் வருமான இழப்பைச் சந்தித்து வருவதாக அறிவுறுத்தி அது
புள்ளிவிபரங்களை அளிக்கிறது. மத்திய பிரிவினரிடையே வருமானம் உயர்வு இருந்த போதிலும், 2002 முதல் 2005
வரை மக்கள் தொகையின் அடித்தள 90 சதவீத்தினர் அவர்களின் சராசரி வருமானத்தில் அண்ணளவாக 2 சதவீதம்
வீழ்ச்சியைச் சந்தித்தனர்.
வருமானத்தின் மிக மந்தமான வளர்ச்சியானது சமீபத்திய ஆண்டுகளில் பிரான்சின்
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் குறைந்த வளர்ச்சியுடன் ஒப்பிட்டு விவரிக்கப்பட கூடாது என அந்த அறிக்கை
வலியுறுத்துகிறது: 1998 முதல் 2005 வரை தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.8 முதல் 1 சதவீதம்
வரை வேறுபட்டது, இது பெரும்பான்மை மக்களின் வருவாய் வளர்ச்சியை விட அதிகமாகும்.
இந்த அபிவிருத்திகளுக்கு
Landais இரண்டு தொடர்பு விளக்கங்களை தருகிறார்:
"முதலில் பணியாளர்களின் வருவாய்க்கு சாதகமில்லாத மூலதன-தொழில் பிரிவில் ஏற்பட்டிருக்கும் ஒரு மாற்றம்,
மற்றும் இரண்டாவதும் இந்நிலைமையின் விளைவின் ஒரு பகுதியாக மொத்த வருமானத்தில் உயர் ஊதியத்தின் பங்கின்
மிக விரைவான உயர்வாகும்."
இந்த அறிக்கை பின் வருவாய் படிநிலைகளில் உள்ள பல்வேறு பிரிவுகளின் வீட்டு
வருமானங்களை பிரித்துப் பட்டியலிடுகிறது: கூலி மற்றும் ஊதியங்கள், ஓய்வூதியங்கள், மற்றும் பல்வேறு வகையான
மூலதன வருவாய்கள் (அதாவது, வாடகைகள், முதலீட்டு வருவாய், இது போன்ற இதர பிற). கூலி மற்றும்
ஊதியமானது மக்கள் தொகையில் 90 சதவீதத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு 95 சதவீதத்திற்கு மேலான
வருமானமாகவும் மற்றும் 90 முதல் 99 சதவீதம் வரை உள்ளவர்களில் 85 சதவீதத்திற்கு மேலான
வருமானமாகவும் கணக்கிடப்படுகிறது. எவ்வாறிருப்பினும், 99 முதல் 99.9 சதவீத பிரிவில் வருபவர்களுக்கு 50
சதவீத வருமானத்தில் மட்டுமே கணக்கிடப்படுகிறார்கள் மற்றும் அந்த ஒரு சதவீத பிரிவுக்குள் வருபவர்களில் முதல்
நூறு பேருக்கு அண்ணளவாக 25 சதவீதமாக கணக்கிடப்படுகிறது என அவ்வறிக்கைக் கண்டறிந்துள்ளது.
இந்த மூலதன வருமானங்களின் மிக விரைவான வளர்ச்சியானது, அந்த
அறிக்கையின்படி, வருமான படிநிலையின் முதன்மையில் உள்ளவர்களின் அதிகரிப்பிற்கு சாதகமாக சாய்கிறது.
குறிப்பாக, இது 1998 முதல் 2005 வரை ஓர் தனிநபருக்கு 16 சதவீதத்திற்கு மேல் உயரும் நில விற்பனை
வருமானத்தை உள்ளடக்கி உள்ளது. மேலும் அதே காலகட்டத்தில் ஓர் ஆண்டு மூலதன வருமானம் 53 சதவீத
உயர்வையும் கொண்டிருக்கிறது.
இந்த மூலதன வருமானத்தின் மீதான மதிப்பீடு குறிப்பாக "பெருநிறுவனங்களால்
பகிர்ந்தளிக்கப்பட்ட வருமானங்களையும் உள்ளடக்கி இருக்கிறது", அதாவது, பெருநிறுவனங்கள் இலாபத்தில் அளிக்கும்
ஊக்கத்தொகைகளாகும், இது 1998-2005ல் மிகப் பெரியளவில் 63 சதவீதமாக வளர்ந்தது. இந்த பெருநகர
இலாபங்கள், நிச்சயமாக, பிரான்சில் மட்டுமின்றி, உலகளவில் உள்ள அனைத்து பெரு நிறுவனங்களாலும் பிரெஞ்சு
முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், பெருநிறுவன இலாபங்களின் இந்த திடீர் வளர்ச்சியானது
பிரெஞ்சு பெருநிறுவனங்களின் குறிப்பிடத்தக்க இலாப உயர்விலும் ஒத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
2007TM, CAC-40ன்
(நாற்பது முன்னணி பிரெஞ்சு பெருநிறுவனங்கள்) இலாபங்கள் 100 பில்லியன் யூரோவிற்கு நெருக்கமாக ஒரு புதிய
சாதனை அளவைத் தொட்டன. எண்ணெய் துறையின் பெரும் நிறுவனமான
Total 12.58
பில்லியன் யூரோவை இலாபமாக பெற்றது. எரிசக்தி துறை நிறுவனமான
Electricité de France, Suez,
மற்றும் Vallourec
நிறுவனங்கள் முறையே 5.6 பில்லியன் யூரோ (73.5% உயர்வு), 3.6 பில்லியன் யூரோ (43.5% உயர்வு)
மற்றும் 917 மில்லியன் யூரோ (93.7% உயர்வு) இலாபங்களை பெற்றன. வங்கிகள் மற்றும் காப்புறுதி
நிறுவனங்களும் நன்கு இலாபமீட்டின; BNP Paribas
7.3 பில்லியன் யூரோவுடன் (24.9 % உயர்வு)
இலாபமீட்டுவதில் இரண்டாம் இடத்தை பெற்றது.
மற்றொரு புறம், பிரெஞ்சு வர்த்தகத்தின் பெரும்பாலான உற்பத்தித் துறைகளின்
இலாபங்கள்- குறிப்பாக தொலைதொடர்பில் உள்ள
France Télécom மற்றும்
Alcatel-Lucent
ஆகியவையும், கார் உற்பத்தியாளரான
Peugeot-Citroën மற்றும்
Renault
ஆகியவற்றின் இலாபங்கள் சரிந்தன.
எரிசக்தி மற்றும் நிதி நிறுவனங்களின் சாதனையளவான இலாபங்கள் பிரெஞ்சு
முதலாளித்துவத்தை சார்ந்து நிற்கும் பண்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது. இவற்றின் இலாபங்கள்
பொருளாதார வளர்ச்சியின் அபிவிருத்திக்காக அல்லாமல் செல்வமிக்க முதலீட்டாளர்களிடமே சென்று குவியும்.
Hautes Etudes Commerciales (HEC) வர்த்தகப்
பள்ளியின் ஒரு பேராசிரியரான David Thesmar
பிரான்சில் உள்ள ஒரு Nouvel Observateur
இதழிடம் கூறுகையில், "பெருமளவில் வெற்றி பெற்ற குழுக்கள் எதுவும் உயர்நுட்ப நிறுவனங்களோ அல்லது சிறிய
அல்லது மத்திய தர வியாபாரங்களோ அல்ல. பெரிய வியாபாரங்களே ஆற்றல் மிக்கவனவாகவும்,
இலாபமீட்டுவனவாகும் உள்ளன, நிச்சயமாக, ஆனால் அவை முதிர்ந்த நிலையில் உள்ளன; அவைகளுக்கு
பெரியளவிலான முதலீடு செய்யவேண்டிய தேவை எனும் நிலையில் அவை இல்லை." என தெரிவித்தார்.
"நிதி சந்தைகளின் மற்றும் மூலதனச் சந்தைகளின் சர்வதேசமயமாக்கலின் அபிவிருத்தி
இதற்கு காரணமாக அமைவதாக விளக்கத்தின் ஒரு பகுதி சாத்தியமானதாக தோன்றுகின்றது. அது
சந்தேகத்திற்கிடமின்றி மூலதனத்தை ஈர்க்க நிறுவனங்களுக்கிடையேயான போட்டியை அதிகரிப்பதில் அழைத்துச்
செல்லும். இது பண இலக்குகளின் அடிப்படையில் அபிவிருத்தியை மற்றும் மேலும் தீவிரமான பங்கு இலாபத்தை
பகிர்ந்துகொள்ளும் கொள்கைகளை விரிவாக்குவதை விளக்கும், அதை நாம்
CAC-40 போன்ற
பெரிய நிறுவனங்களில் தெளிவாகக் காணலாம்." என
Landais எழுதுகிறார்.
செல்வந்தர்களின் வருமான வரவு அதிகளவில் மூலதனத்தில் இருந்து வருகிறது, ஆனால்,
Landais குறிப்பிடுவது போல, கடந்த காலங்களில்
வளர்ந்திருக்கும் சராசரி ஊதியமும் அதிகளவில் செல்வந்தர்கள் பக்கமே சாய்ந்திருக்கிறது. மக்கள்தொகையில்
அடிமட்டத்தில் இருக்கும் 90 சதவீதத்தினரை பொறுத்த வரை, ஆண்டுக்கு 0.4 சதவீதம் என்ற அடிப்படையில்,
2002 முதல் 2005 வரையில் வீழ்ச்சியுடன், 1998-2005 வரையிலான காலத்தில் அவர்கள் 3.1 சதவீதம்
அதிகரிப்பை பெற்றனர். இருப்பினும், முதன்மை சதவீதத்தினர் ஆண்டுக்கு 1.6 சதவீதம் எனும் அடிப்படையில் 13.6
சதவீதம் வளர்ச்சியை பெற்றனர்; மக்கள்தொகையின் முதல் ஆயிரத்தில் இருப்பவரின் ஊதியம் 29.2 சதவீதமாகவும்
(ஆண்டுக்கு 3.7%), முதல் பத்தாயிரத்தல் இருப்பவரின் ஊதியம் 51.4 சதவீதமாகவும் (ஆண்டுக்கு 6.4%)
வளர்ந்தது.
இந்த அறிக்கை பிரான்ஸ் மற்றும் அது "ஆங்கிலோ-சாக்ஸன் நாடுகள்" என அழைக்கப்படும்
நாடுகளுக்கும், அதாவது, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திற்கு இடையே சுருக்கமான ஒரு தகவல் நிறைந்த
ஒப்பீடுகளை அளித்து முடிகிறது. அது குறிப்பிடுவதாவது: "மொத்த அரச வருமானத்தில் உயர் ஊதியம் பெறுவோரின்
பிரிவை (உயர் சதவீதத்தினர் அல்லது மத்தியில் இருப்போர்) அல்லது ஊதியம் பெறும் அனைவரில் அதியுயர் ஊதியம்
பெறுவோரைக் கவனத்தில் கொண்டு 1980களின் தொடக்கத்தில் அங்கு சமத்துவமின்மை வலுவாக அதிகரிப்பதற்கு
முன்னதாக, 1990 களின் இறுதியில் பிரான்ஸ் தனது நிலையை ஆங்கிலோ-சாக்ஸன் நாடுகளுக்கு இணையான நிலையில்
கண்டது. 1980 களின் போது, மூலதன இலாபம் அல்லாத மொத்த வருமானத்தில் உயர்மட்டத்திலுள்ள பத்தில் ஒரு
பங்கினருக்கு 32 சதவீதமும், நூறில் ஒருவருக்கு 8 சதவீதமாகவும் இருந்தது. அந்த நாடுகளில் தற்போது இந்த
எண்ணிக்கை முறையே 43 மற்றும் 17 சதவீதமாக உள்ளது."
1980 களில் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகன் மற்றும் பிரித்தானிய பிரதம
மந்திரி மார்கிரட் தாட்சரின் கொள்கைகளில் தொடங்கிய சமூக சமத்துவமின்மையில் எழுச்சியில் தான் இன்னும் முழுமையாக
இலாபமடையவில்லை என்பதை பிரெஞ்சு அதிகாரவர்க்கம் நன்கு அறியும். அது வெறும் 20 ஆண்டுகளுக்கு முந்தையது
என்பதை அது மிக நுட்பமாக உணர்கிறது. 2007 மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலா
சார்க்கோசி, இழந்த காலத்தை ஈடுகட்ட பிரெஞ்சு அதிகாரவர்க்கங்களின் அனைத்து பிரிவுகளின் அதிகாரத்தை பெற்றிருக்கிறார்.
இவ்வாறு, ஒரு வலதுசாரி பொருளாதார நிபுணரான
Guy Sorman, தமது ஒரு வலைப்பதிவில் சார்க்கோசியின்
தேர்தலுக்கு சற்றே பின்னர், "25 ஆண்டுகளுக்கு பின்னால்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
"1980 களின் ஆரம்பத்தில் இருந்து வெகு தூரத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும்.... சரித்திரத்தின் சுவாசம்,
சார்க்கோசியை ஜனாதிபதியாக உயர்த்திவிட்டிருக்கிறது." என உணர்ச்சி பொங்க எழுதி உள்ளார். அவர் ரேகன்,
தாட்ச்சர், ஜோஸே மாரியா அஸ்நார் (ஸ்பானிய பிரதம மந்திரி) மற்றும் இரண்டாம் போப் ஜோன் போல்
ஆகியோர் உட்பட அக்காலத்து நாயகர்களையும் பட்டியலிட்டு உள்ளார்.
இது போன்ற சிந்தனை முதலாளித்துவ உரிமைகளை ஒருபோதும் தடுத்ததில்லை. இடது
மத்திய நாளிதழான Le Monde
தனது மே 30-ம் தேதி இதழில் சார்க்கோசியின் கொள்கைகள் குறித்து ''தோல்வியுற்றதை திருத்தும் பணி''
என்னும் தலைப்பில் ஒரு தலையங்கம் வெளியிட்டது. திருத்தும் பணி- இந்த வார்த்தை இனிமையானது, ஆனால்
மனிதப்பண்பற்ற அதன் சொல்லின் பண்புகளை மறைக்கவும், மக்களுக்கு அதைத் திரும்ப உறுதி செய்யவும் பின்னர்
பிரச்சாரத்தின் போது அது கைவிடப்பட்டது. ஆனால் உண்மையில் அது தொடர்ந்து சென்றது: ஒரு தொடர்ச்சியான
சரிவுகளை நோக்கி இழுத்துச் சென்றிருக்கும் இருபது வருட அசைவற்றத்தன்மை மற்றும் தவறுகளை தவிர்க்க பிரான்ஸ்
தாயராகி வருகிறது." |