World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Russia's presidential candidate D. Medvedev and the Kremlin's "national projects"

ரஷ்யாவின் ஜனாதிபதி வேட்பாளர் டிமிட்ரி மெட்வடேவ் மற்றும் க்ரெம்ளினின் "தேசிய திட்டங்கள்"

By Vladimir Volkov
5 January 2008

Use this version to print | Send this link by email | Email the author

ரஷ்ய அரசாங்கத்தின் துணைப் பிரதமரான டிமிட்ரி மெட்வடேவ் (Dmitrii Medvedev) இனை ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ''வாரிசாக" முன்னிறுத்த கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட அரசியல் உபாயங்களில் கையாளப்பட்ட பிரச்சாரங்களில், புதிய ஜனாதிபதி ஆட்சியின் முக்கிய நோக்கமானது நாட்டு குடிமக்களின் சமூக நிலமைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை உள்ளடக்கி இருப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தன.

டிசம்பர் 10ல் டி.மெட்வடேவ்வை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த டூமா பேரவைத் தலைவரும் மற்றும் டிசம்பர் 2ன் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய ரஷ்ய கட்சியின் தலைவர் Boris Gryzlov கூறுகையில், மெட்வடேவ் சமூகத்தில் பிரபலமான வேட்பாளர், ஏனெனில் அவர் கிரெம்ளினின் ''தேசிய திட்டத்தை'' மேற்பார்வையிட்டு வருகிறார் என்று குறிப்பிட்டார்.

டிசம்பர் 17ம் தேதி அவரின் வேட்பு மனுவிற்கு ஒப்புதல் அளித்த ஐக்கிய ரஷ்ய காங்கிரஸில், டி.மெட்வடேவ் தமது தொடர் மூலாபாயத்தைப் பின்வரும் வழிகளில் முறைப்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டார்: "அது பொருளாதாரத்தின் மற்றும் ரஷ்ய கிராமங்களின் மூல அபிவிருத்திக்காகவும், சிறு மற்றும் மத்திய வியாபார வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை கண்டறிவதற்காகவும் அமைகிறது, அது நமது குடிமக்களின் நலத்தை உயர்த்துவதுடன், சமூகத்தன்மையை வலுவாக்கி, சிறந்த ஜனநாயக கொள்கையை பின்பற்றுகிறது. ரஷ்ய நாட்டின் பாதுகாப்பிற்காக, மூத்த குடிமக்கள் மற்றும் புதிய தலைமுறைகளின் பிரச்சனைகளுக்காகவும் இது ரஷ்யாவின் வெற்றிகரமான எதிர்காலத்திற்கும், நமது தேசிய நோக்கங்களுக்காகவும் அனைத்திற்குரியதாகவும் அமைகிறது."

சாதாரண குடிமக்களின் சிக்கல்கள் குறித்த ''கவலைகள்'' டிசம்பர் 19ம் தேதி நடந்த டூமா கூட்டத்தொடரில் தொடர்ந்தது. ஜனாதிபதி புட்டினின் வார்த்தைகளின்படி, "முக்கிய விஷயம் என்னவென்றால், பல தசாப்தங்களாக குவிந்திருக்கும் மற்றும் மக்கள் அவர்களின் அன்றாட வாழ்வில் எதிர்நோக்கி வரும் மிகச்சிக்கலான சமூக பிரச்சனைகளை நாம் தீர்க்கத் தொடங்க வேண்டும்." என்று தெரிவித்தார்.

டி.மெட்வடேவ்வின் உரையிலும் இதே கருத்தே எதிரொலித்தது. "சமூகத்துறையில் செய்த முதலீடுகள் ஒட்டுமொத்தமாக கணிசமான அளவில் வருவாய் ஈட்டி இருக்கிறது" எனத் தெரிவித்த அவர், "அந்த முதலீடுகளை தொடர்வதே எனக்கு நல்லதாகத் தெரிகிறது." என்று தெரிவித்தார்.

"மக்களிடம் முதலீடு" என்று கருதப்படுவது குறித்து மெட்வடேவ் தொடர்கையில், ரஷ்ய பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் மேம்பாடுகளுக்கு ஒரு சிறப்பான தூண்டுதலாக தேசிய திட்டங்கள் இருப்பதுடன், அது ஒரு "பெருக்கமாக்கும் காரணியாகவும்" அமைந்துள்ளது. சான்றாக, சுகாதாரத்துறை முதலீடுகள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தை மீண்டெழச் செய்துள்ளது. தேசிய கல்வி திட்டமானது பள்ளி பேருந்துகளை வினியோகிக்கும் வாகனத்துறையின் மேம்பாட்டை விரைவுபடுத்தி இருக்கிறது. வேளாண்மைத்துறையில் செலுத்தப்பட்ட வளங்கள் வங்கியியல் துறையை, குறிப்பாக கிராமப்புறங்களுக்கு புத்துணர்வூட்டி இருக்கிறது.

"சமூக நிலைநோக்கு" பற்றிய கருத்துரு வெளிப்படையாகவே மெட்வடேவ்வை கிரெம்ளினின் மத்தியில் முன்னிறுத்தும் ஊடகங்களின் முயற்சிகளிலும் இடம் பெற்றிருக்கின்றன. கிரெம்ளினில் உருவாக்கப்பட்ட "அதிகார பரிமாற்ற" குறிப்புகளின்படி புதிய ஜனாதிபதி பொறுப்பேற்பது என்பது புட்டினின் விஷயத்தில் நடந்தது போன்று யுத்தத்தால் அல்லாமல், சாதாரண மக்களுக்கு நல்லவைகளை செய்யும் ஆர்வத்தால் தீர்மானிக்கப்படவேண்டும் என்று குறிப்பிடுகிறது.

இந்த நிலைப்பாட்டில் இருந்து, தேசிய திட்டங்கள் என அழைக்கப்படுவதன் உண்மையான உள்ளடக்கங்களையும் மற்றும் அவற்றை செயல்படுத்துவதால் ஏற்படும் முக்கிய விளைவுகள் குறித்து ஆராய்வது சிறப்பாகும்.

"Potemkin" குடியிருப்புகள்

2005 ஜனவரியில் சமூக வெட்டு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து சமூகநல சேவைகளுக்கு பதிலாக பணம் வழங்குவதற்கு (monetization of benefits) எதிராக பெரும்பான்மையான பகுதிகளில் நடந்த மாபெரும் போராட்ட அலைகளின் (சோவியத்தின் பின்னான முழுக்காலகட்டத்திலும் இவை மிகபலமானதாக இருந்தன) விளைவாக அவ்வாண்டு இறுதியில் தேசிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சமூகநல சேவைகளுக்கு பதிலாக பணம் வழங்குவது என்பது சோவியத்தின் சமூக கட்டமைப்பில் மீதமிருந்த முக்கிய அம்சம் ஒன்றையும் இல்லாதொழித்தது: இந்த முன்மொழிவானது மருத்துவ உதவிகள் மற்றும் மருந்துகள் போன்ற சமூக நலன்களைக் குறைந்தபட்சமாவது, தற்போதைய சந்தை மதிப்புகளின் அடிப்படையில் அல்லாமல் மக்கள்தொகையில் மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்க உத்தரவாதமளிக்க வேண்டும் என்றது.

இந்த சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டபோது மேற்கூறிய சேவைகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உதவிபெறுனர்களுக்கு சந்தை விலையின் அடிப்படையில் சில ''தேர்ந்தெடுக்கப்பட்ட'' உதவிகள் வழங்கப்படும் என்ற கொள்கையின் மூலம் உத்தரவாதமாக கிடைக்கும் என்ற பொதுவான கொள்கை (குறைந்தபட்சம் காகிதத்திலாவது) மாற்றி அமைக்கப்பட்டது. அதன் விளைவாக, பொது மக்களுக்கான அரச கடமைகளின்படி பதினைந்துக்குக் குறைவில்லாத காரணிகளின் கீழ் நலன்கள் வழங்கும் சீர்திருத்தம் வெளியிடப்பட்டது.

சமூகநல சேவைகளுக்கு பதிலாக பணம் வழங்குவது மூலம் கல்வி, சுகாதார நலன், வீடுகள் கட்டமைப்பு மற்றும் வேளாண்மை ஆகிய அடிப்படை உள்ளடக்கங்கள் மீது ஏற்படும் நிலைகுலைய வைக்கும் விளைவுகளை மறைக்க இந்த தேசிய திட்டங்கள் வெளிப்பூச்சுடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்த தேசிய திட்டங்களுக்கு பெருமளவிலான உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. டி.மெட்வடேவ்வின் சமீபத்திய அறிக்கையின்படி, அடுத்த இரண்டு வருடங்களில் அவற்றின் செயலாக்கத்திற்காக சுமார் 400 பில்லியன் ரூபிள் செலவிடப்பட இருக்கின்றன (அதாவது சுமார் 16.3 பில்லியன் டாலர்), மேலும் 2008ல் சுமார் 300 பில்லியன் ரூபிள் (12.2 பில்லியன் டாலர்கள்) அவைகளுக்கு ஒதுக்கப்பட இருக்கிறது.

இந்த தொகை என்ன ஆனது, இது எங்கே போய் கொண்டிருக்கிறது?

ஆரம்பத்தில் முழுமையாக நிராகரிக்கப்பட்டிருந்த சமூக ''ஓட்டைகளை'' அடைக்க அவை செலவிடப்படுகின்றன (ஆனால் இவை ஒட்டுமொத்த சமூக நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை) அல்லது தேசிய திட்டங்களில் பங்கெடுத்து குறிப்பிடத்தக்களவில் இலாபத்தை ஈட்டி வந்தவையும், சமூகத்துறையில் செயல்பட்டு வந்த தனியார் வியாபாரங்களுக்கு ஆதரவாக இவை செலவிடப்படுகின்றன.

டி.மெட்வடேவ்வின் தலைமையில் டிசம்பர் 25ல் கூடிய உயர் முன்னுரிமை தேசிய திட்டங்களுக்காக கழகங்களின் வாரியக் கூட்டத்தில் கல்வி அமைச்சர் ஆண்ரே ப்ருசென்கோ பேசுகையில், நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் (50 ஆயிரத்திற்கும் மேலானவை) இணையத்தளத்தில் இணைத்தது அவரின் முதன்மை சாதனையாகும் என அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சராசரியாக இருந்த ஆசிரியர்களின் ஊதியம் "சில இடங்களில்" 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இவ்வாறு செய்ததன் மூலம், எவ்வாறிருப்பினும், தேவையற்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்கும் பொருட்டு அவர் ஒரு பிராந்தியத்தை கூட குறிப்பிடவில்லை. அதற்குமாறாக, தங்களின் பள்ளிகளில் கல்வியை நவீனப்படுத்த தேவையான திட்டங்களை முன்வைத்த பிராந்தியங்களை குறித்து அவர் பேசினார். ஆண்ரே ப்ருசென்கோ மேலும் கூறுகையில், "இந்த பிராந்தியங்கள் சிறந்த ஆசிரியர்களை ஊக்குவிக்க நிதியைப் பெற்றன. அதாவது, நீங்கள் சிறப்பாக பணியாற்றினால், நிறைய பெறுவீர்கள் என்பதாகும்." என்று தெரிவித்தார்.

தகுதி சம்பளம் அடிப்படையிலான மாற்று திட்டத்திற்கான ஒரு ஒத்திகை முறைக்காகச் செலவிடப்பட்ட இந்த தொகை, எவ்வித சாதகமான பலனையும் அளிக்கவில்லை. ஆசிரியர் தொழில் என்பது நடத்தையால் மட்டும் கெளரவிக்கப்படுவதில்லை, பொருளாதாய முறையினாலும் கவனிக்கப்படுவதாக ப்ருசென்கோ தெரிவித்த போதிலும், ஒட்டுமொத்தமாக ரஷ்ய பள்ளிகள் குறைந்த சம்பளம் பெறும் ஆசிரியர்களையும் மற்றும் சீர்ப்படுத்த முடியாத நிலையில் உள்ள பெருமளவில் சீர்குலைந்த வசதிகளையும், கட்டடங்களையும் கொண்டிருக்கின்றன என்பதே உண்மையாகும். ஒரு ரஷ்ய பள்ளியானது அதன் ஊழியர்களின் தீரமிக்க ஆர்வத்தாலும், பெற்றோர்களின் சுயமான ஆதரவாலும் மட்டுமே உயிர்வாழ்வதால், கல்வி பணியைத் தொடர்வதற்கான நன்றிகள் அவர்களையே சேரட்டும்.

ஆனால் ரஷ்ய பள்ளிகள் இது போன்ற உதவிகளால் அல்லாமல் அரசாங்க கொள்கைகளாலேயே தொடர்ந்து வருவதாக முழுவதுமாக நியாயப்படுத்தப்படுகிறது.

அடுத்து வீட்டு கட்டுமானம் குறித்து கவனிக்கும் போது, புதிய வாழ்விட கட்டுமானங்களுக்கு முதலீடுகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக ஆணையங்கள் தெரிவிக்கின்றன. தேசிய திட்டங்கள் பற்றிய டிசம்பர் 25ம் தேதி கூட்டத்தில் பிராந்திய அபிவிருத்தி அமைச்சக தலைவர் டிமிட்ரி கோஸாக் கூறுகையில், 2007ம் ஆண்டு சாதனை அளவாக 60 மில்லியன் சதுர மீட்டர்களில் புதிய கட்டுமானங்கள் கட்டப்படும், இது முன்னாள் திட்டமிட்டதை விட 4 மில்லியன் சதுர மீட்டர் கூடுதலாகும் என்று கூறினார். எவ்வாறிருப்பினும், இந்த வேகம் நிச்சயமாக போதாதென்று அரசாங்கமே ஒத்துக் கொள்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 140 மில்லியன் சதுர மீட்டருக்கும் மேலான இடத்தில் கட்டடங்கள் தேவையென்று அது தெரிவிக்கிறது. ஆனால் குடியிருப்பு இடங்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ளதே முக்கிய பிரச்சனையாக இருப்பதால் நிலங்களின் விலை வானுயர உயர்ந்துள்ளன.

தேசிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைகள் இரட்டிப்பாகி உள்ளன. மாதத்திற்கு 14 ஆயிரம் ரூபிள் சராசரி கூலியாக இருக்கும்போது, அனைத்து முக்கிய நகரங்களிலும் சராசரியாக ஒரு சதுரமீட்டரின் விலை 70 ஆயிரம் ரூபிளை எட்டியிருக்கிறது. இதை வேறு முறையில் கூறினால், ஒரு நவீன குடியிருப்பை பெற ஒருவர் தனது 10 முதல் 12 ஆண்டு கால ஊதியத்தை முழுமையாக ஒதுக்க வேண்டும்.

அடமானக் கடன் முகாமையின் தகவலின்படி, 4.5 மில்லியன் குடும்பங்களுக்கு மேம்பட்ட வீட்டு சூழல் தேவைப்படுகிறது. ஆனால் இருபது பேரில் ஒருவரால் மட்டுமே மிக நவீன குடியிருப்பிற்கான போதிய தொகையைச் சேர்க்க முடிகிறது.

"மக்கள் தொகையில் பாதியளவினருக்கு வாழ்வதற்கான ஓர் இடத்தை வாங்குவதற்கோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ வசதி இல்லை." என்பதை டூமா அரச துணை அதிகாரி கலீனா ஹோவன்ஸ்காயா உறுதிப்படுத்தினார்.

அனைத்திற்கும் மேலாக, ஒரு சதுரமீட்டர் கட்டிடத்தின் விலைக்கும் அதன் சந்தை விலைக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளி குறித்து கவனிக்க வேண்டும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில், ரஷ்ய கட்டுமான கழகமான RGI International, லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதுடன், நிர்பந்தத்தின் காரணமாக அதன் நிதி ஆவணங்களும் வெளியிடப்பட்டன. ஒரு சமயத்தில் மாஸ்கோ நகரத்தின் மையத்தில் ஒரு சதுரமீட்டரில் ஒரு ஆடம்பர குடிமனையை கட்டுவதற்கான செலவு 30 முதல் 75 ஆயிரம் ரூபிள் வரையில் மாறுபட்டு இருந்தது. அதேவேளை அதேயளவான நிலத்தின்விலை 700 ஆயிரம் ரூபிள் மற்றும் அதற்கு மேலாக உயர்ந்தது.

சிறப்பு பார்வையாளர்களின் கருத்துப்படி, மாஸ்கோவில் மற்றும் ரஷ்யாவின் பிற நகரங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலான புதிய குடிமனையை முதலீட்டாளர்கள்/ஊகவணிகர்கள் என்று அழைக்கப்படுபவர்களால் பின்னர் அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது.

''கட்டுபடியாகக் கூடிய வீடுகள்'' தேசிய திட்டத்தின் உண்மையான தன்மை குறித்து New Gazette இதழின் டிசம்பர் 13 கட்டுரை எடுத்துக்காட்டியது. ஜூன் 2007ல் அளிக்கப்பட்ட இடத்தின் கட்டமைப்பிற்குள், "22 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, இதற்கான உள்கட்டமைப்பு கூட்டு நிதித்திட்டத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட உள்ளது என்பதுடன், ‘Gazprom' மற்றும் RAO ‘EES' போன்ற உள்நாட்டு நிறுவனங்களும் இதில் பங்கெடுக்கவுள்ளன. கோடீஸ்வரர்களின் நகரம் என்று பொதுவாக அறியப்படும் ‘Rublevo-Arkhangelskoe,' (இது சுலைமான் கேரிமோவ் வின் ‘Rublevo-Arkhangelskoe' நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது) மற்றும் ‘Konnaya lakhta' மற்றும் ‘Northern Valley' (ஓலேக் டெரிபஸ்கா வின் ‘Glavstroi') ஆகியவற்றுடன் மேலும் பல திட்டங்களும் இந்த கட்டுமான திட்டங்களில் அடங்கி இருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதில் நிலங்களுக்கு உள்ளடங்கி இருக்கும் குறைந்தபட்ச மதிப்பு ஒரு மில்லயன் டாலருக்கும் அதிகமாகும். இவை எல்லாம் தேசிய திட்டத்தின் 'கட்டுபடியாகக் கூடிய விலையில் வீடுகள்' எனும் வரைமுறைக்குள் எவ்வாறு அடங்குகின்றன? வேறுவார்த்தைகளில் கூறுவதானால், இது போன்ற வீட்டுத்திட்டத்தை செயல்படுத்தத் தான் முடியுமா?"

தேசிய திட்டங்களில் மருத்துவம் மற்றும் வேளாண்மைக்கான ஆதரவும் சிறப்பாக இல்லை. "முதலுதவி" வாகனங்களில் 70 சதவீதம் மேம்படுத்தப்பட்டு இருப்பதாக சமீபத்தில் சுகாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ரட்டியான கோலிகோவா தனது அறிக்கையில் முதன்மை சாதனையாக குறிப்பிட்டுள்ளார். அதன் விளைவாக, அவசர உதவி அழைப்புக்கு உதவும் மருத்துவர்களின் பதிலுரைக்கும் நேரம் 35 லிருந்து 25 நிமிடமாக குறைந்துள்ளது. "உயிரிழப்பு விகிதம்'' 9 சதவீதம் குறைந்துள்ளதாகவும், பிறப்பு விகிதம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும்" அவர் அறிவித்தார்.

அரசாங்கத்திற்கு முழு நம்பிக்கைக்குரிய நாளிதழான Izvestia கூட, பின்வரும் அறிவிப்பில் உள்ள கருத்தில் முரண்பட்டுள்ளது: "மக்கள் ஒழுங்காக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள்... கார் விபத்துக்கள் மட்டுமே நிலையை மோசமடையச் செய்கிறது: பெரும்பான்மை விபத்துக்களில் மக்கள் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதில்லை - அவர்கள் அவ்விடத்திற்கு செல்வதில் நீண்ட நேரம் எடுக்கிறது. இந்த சோக நிலைக்கு எதிரான போராட்டமும் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும்." என்று தெரிவித்தார்.

வேளாண்மைத் துறை குறித்து கூறும்போது, கிராமப்புறங்களிலும் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதாக தமது மிகப் பெரும் உரையில் அமைச்சர் அலெக்ஸே கோர்டேயேவ் தெரிவித்தார். புறநகர் பகுதிகளில் சராசரி கூலி 6,000 ரூபிளுக்குக் குறைவானவே உள்ளது, அது தொழில்துறையின் சராசரி கூலியை விட 2.5 சதவீதம் குறைவாகும்.

ஒட்டுமொத்தமாக, தேசிய திட்டங்கள் என்பவை கிரெம்ளினின் நீண்ட கால பிரசாரங்களாக இருந்து வருகின்றன. அதன் முக்கிய நோக்கம் உண்மையான விளைவுகள் அல்ல, மாறாக பெரிய ஊடகங்களால் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என புகழப்படுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பதாகும். வார்த்தைகளின் முழு அர்த்தத்தில், "Potemkin குடியிருப்புகள்" என்பதனூடாக நாட்டின் உண்மையான நிலையை முழுமையாகத் தீர்மானிக்கமுடியாது.

பரவி வரும் ஊழல்

அதே நேரத்தில், ஒரு பெரியளவிலான ஊழல் உருவாகும் தொட்டியாக மாறி இருக்கும் தேசிய திட்டங்கள், வர்த்தக அமைப்புகளையும் மற்றும் இந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் நிதியை ''ஒன்று குவிக்கும்'' நாட்டின் பிற அமைப்புகளை வளப்படுத்தி வருகின்றன.

தனிப்பட்ட சிறப்பமைப்புகளாலும் மற்றும் மக்கள் பிரிவுகளாலும் பல்வேறு வகைகளில் தேசிய திட்டங்களின் செயலாக்கம் அணுகப்பட்டு வருகின்றன என்பதுடன், பணத்தின் முறையான வினியோகம் என்பது எதிர்மறை மதிப்பீடுகளை பார்வையாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது என டிசம்பர் 26ம் தேதியிட்ட Independent Gazette இதழ் எச்சரிக்கையை வெளியிட்டது. இதே போன்று, டி.மெட்வடேவ் இனால் நம்பிக்கையளிக்கப்படும் பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாடு சந்தேகத்திற்குரியதாக இருப்பதை ஏற்று கொள்ள வேண்டி இருக்கிறது என டிசம்பர் 11ல் வெளியான Kommersant செய்தித்தாள் அறிவித்தது.

தேசிய திட்டங்களுக்காக மட்டுமே சிறப்பாக ஒதுக்கப்பட்ட ஆதாரவளங்கள் பரவலாக கையாடல் செய்யப்பட்டு வருவதே அடிப்படை பிரச்சனையாகும், பொதுவான ரஷ்ய முறைகளின் அடிப்படையில், கையாடல்களின் அளவு - செலவிடுவதற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 30 சதவீதத்தை எட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஊழல்களில் ஒன்று Sverdlov பகுதியில் நடந்தது. இந்நகர நிர்வாகம் சீமென்ஸ் நிறுவனத்தின் இரண்டு கணினி Tomography ஸ்கேனர்களை (பிற ஆதாரங்களின்படி இது நான்காகும்) மருத்துவமனை எண். 36 இற்காக வாங்கியது. அடிப்படையில் CAT ஸ்கேனர்களின் விலை 40 மில்லியன் ரூபிளுக்கு சற்றே அதிகமாக இருந்த அதே நேரத்தில் அவர்கள் அவை ஒவ்வொன்றுக்கும் 80 மில்லியன் ரூபிள் அளித்திருந்தார்கள். நகர சுகாதார நிர்வாகத்தின் துணைத் தலைவர் அலெக்ஸான்டர் ஷாஸ்டின் மற்றும் அப்பிராந்திய சீமென்ஸ் நிர்வாகத்தின் பிரதிநிதியான லெவ் டுப்நோவ் ஆகிய இருவருக்கும் இடையே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. நாட்டு வளங்களை வீணாகச் செலவு செய்தமைக்காக குற்றஞ்சாட்டப்பட்டு, இவர்கள் இருவரும் நவம்பரில் கைது செய்யப்பட்டனர்.

இந்த விடயத்தில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், நகர சுகாதார அதிகாரிகள் தேசிய சுகாதார திட்டத்தில் இருந்து பெற்ற உதவிப்பணத்திலிருந்து இந்த நிறுவனத்திற்கு நிதி வழங்கினார்கள் என்பதுதான்.

தேசியரீதியாக மட்டுமின்றி பிராந்திய ஊடகங்களிலும் கிரெம்ளினின் தீவிரமான கட்டுப்பாடு இருக்கின்றதால், பொதுமக்கள் பார்வையிலிருந்து இதுபோன்ற எத்தனை சம்பவங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்பதை ஒருவர் இதன் மூலம் ஊகிக்க மட்டுமே முடியும்.

பிற உதாரணங்களும் தேசிய திட்டங்கள் மீதான செலவுகளின் விளைவுகளை மிக தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

ரஷ்ய கிராமங்களுக்கு மருந்துகளை வினியோகிக்கும் முறை முழுவதுமாக தகர்ந்துவிட்டதால், கிராமங்களில் வசிக்கும் 38 மில்லயன் ரஷ்ய குடிமக்கள் மருத்துகள் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள் என டிசம்பர் 25ல் வெளியான Independent Gazette அறிவித்தது.

இதுவரை, கிராமங்களில் மருந்துகள் அங்கிருந்த முதலுதவி மையங்கள் வாயிலாகவும் மற்றும் பயிற்சிபெற்ற செவிலியர் மூலமாகவும் விற்கப்பட்டு வந்தன. எவ்வாறிருப்பினும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டங்களின்படி, மருந்துகளை மொத்த விற்பனை செய்ய கட்டாயம் உரிமம் பெற வேண்டும். இந்த உரிமங்கள் பெறுவதற்கான கட்டணத்தால் அந்த பகுதிகளில் மருந்துகளின் விற்பனை வியாபாரரீதியில் இலாபகரமாக அமைவதில்லை. அது குறித்து The Gazette இதழ் குறிப்பிடுகையில்: "மருந்துப் பொருட்கள் வினியோகிக்கும் முன்னைய முறை முழுவதுமாக உடைக்கப்பட்டு விட்டது, அதே சமயம் அதற்கு மாற்றாக புதிய முறை ஒன்று உருவாக்கப்படவில்லை." என்கிறது.

புட்டினின் வாரிசாக மெட்வடேவ் தம்மை நிலை நிறுத்திக் கொள்வதற்கு முன்னால், முக்கிய வேட்பாளராகக் கருதப்பட்ட முதல் பிரதமரான ஷேர்கே இவாநோவ் ஆல் மற்றொரு உதாரணம் கொடுக்கப்படுகிறது. ரஷ்ய தொலைக்காட்சிகள் "நேனோ" (Nano) என்ற வார்த்தையை பயன்படுத்தி விளம்பரங்கள் அளிக்கத் தொடங்கிவிட்டன; சான்றாக, துருப்பிடிக்காத ஒரு உலோகமான "நேனோஜிங்க்" என்பதும், "நேனோக்ரீம்" என்று அழைக்கப்படும் ஒரு முகப்பூச்சு பொருளும் விளம்பரப்படுத்தப்படுகிறது என அவர் தெரிவித்தார். இவாநோவ் அறிவித்தபடி, "பொதுவாக இது போன்றதொரு தொழில்நுட்பம் இருக்கிறதா என்றே எனக்கு சந்தேகமாக இருக்கிறது." என்று தெரிவித்தார்.

பிரச்சனை என்னவென்றால் மிக சில நாட்களுக்கு முன்னால் "RosNano Tech" எனப் பெயரிடப்பட்ட ஒரு அரசு கழகம் உருவாக்கப்பட்டு, வரவுசெலவுத் திட்டத்தில் 130 மில்லியன் ரூபிள் அதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி ஆதாரங்களை ஒன்றிணைத்தல் அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட இருக்கிறது, ஆனால் இதுவரை ரஷ்யாவில் இது போன்ற உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு உரிமம் வழங்கப்படவில்லை.

அரசால் ஒதுக்கப்பட்ட இந்த நிதியால் என்ன செய்யப்படும் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. ஆனால் இந்த புதிய கழகத்தின் நிதி வளங்கள் குறித்து முடிவெடுக்கும் முதலாளிகள் இதில் பெருமளவிலான தொகையை தனியார் நிறுவனங்களின் கருவூலங்களுக்கு அனுப்பப்படுவதற்கான நிறைய வழிகளை "கண்டறிந்து அளிக்கும் வாய்ப்புகள்" இதில் இருப்பதாக சந்தேகிக்க நிறைய காரணங்கள் இருக்கின்றன.

எவ்வாறிருப்பினும், டிசம்பர் 18-ம் தேதி இதழில் The Gazette ஒத்துக் கொண்டபடி, இந்த "நேனோ-மோசடிக்காரர்கள்" இந்த நேனோ பணத்தை பொறுப்பில்லாமல் கையாள்வார்கள் என்றே தெரிகிறது" என இவாநோவ் குற்றஞ்சாட்டினார்.

பொதுவாக சமூக அரசியல் கட்டமைப்பு இவ்வாறு இருக்கையில், இதற்கிடையில் ஊழல் மற்றும் திருட்டுத்தனங்களால் ஆழமாக வேர்விட்ட ஒரு அமைப்பு முறைக்கு "மனிததன்மையுடைய" முகத்தை டிமிட்ரி மெட்வடேவ்வை முன்னிலைப்படுத்துவதன் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யெல்ட்சினால் உருவாக்கப்பட்டு, புட்டினினால் "முழுமைப்படுத்தப்பட்ட" அமைப்பின் ஒரு உண்மையான வாரிசாகவே டி.மெட்வடேவ் காணப்படுகிறார். அவர் அதை மாற்ற விருப்பமில்லாது இருப்பது மட்டுமல்லாது, அதற்கு மாறாக, அவரிடம் உள்ள சகலவழிமுறைகளையும் பயன்படுத்தி அதை பாதுகாக்க முயல்வார்.