World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காOn the eve of the Iowa caucuses Corporate money, media manipulation and the US elections அயோவா செல்வாக்குச் சிறுகுழுக்கள் கூடுவதற்கு முன்பு பெருநிறுவன நிதி, செய்தி ஊடகத் திரித்தல் மற்றும் அமெரிக்க தேர்தல்கள் By Patrick Martin ஓராண்டிற்கும் மேலாக போட்டி நடந்து வந்துள்ள போதிலும், அயோவாவில் வியாழன் இரவு நடைபெறும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் சிறப்புச் சிறுகுழுக் கூட்டங்கள்தாம் 2008 ஜனாதிபதி பிரச்சாரத்தில் உத்தியோகபூர்வ ஆரம்பத்தை குறிப்பவையாகும். ஜனவரி 3ம் தேதி அன்று அயோவாவிலும், ஜனவரி 8ம் தேதி நியூ ஹாம்ப்ஷயர் ஆரம்பநிலைத் தேர்தலுக்கும் மற்ற ஆரம்ப போட்டிகளுக்கும் காட்டப்படும் மகத்தான செய்தி ஊடகக் குவிப்பு நவம்பர் மாதம் வரவிருக்கும் தேர்தலில் இருபெரும் கட்சிகளில் யார் தேர்ந்தெடுக்கப்படுவதிலும் உள்ள அடிப்படை சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதைக் காட்டிலும் மூடி மறைக்கத்தான் உதவுகிறது. அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வகை ஜனநாயகத்துடன் அதிக தொடர்பைக் கொண்டிருக்கவில்லை. இரு கட்சி முறை பெருநிறுவன நலன்களுக்கு ஒரு உறுதியான அரசியல் ஏகபோக உரிமையை அளித்துள்ளது. ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது ஆளும் உயரடுக்கிற்குள் சிக்கல்கள் நிறைந்த போராட்டத்தின் விளைவாகத்தான் இருக்கும்; இதில் பணமும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகமும் பெரும் பங்கை கொண்டுள்ளன, அமெரிக்க மக்களுடைய தேவைகளோ, உணர்வுகளோ அல்ல. அமெரிக்க நிதிய மேற்குடியின் இரு அரசியல் கருவிகளாகத்தான் ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் உள்ளன. இவை இரண்டும் முற்றிலும் ஒரே மாதிரியானவை அல்ல; ஏனெனில் வெவ்வேறு முறையீட்டு வகைகளை கடைப்பிடிக்கின்றன, வெவ்வேறு வரலாறுகளைக் கொண்டுள்ளன, மேலும் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு வெவ்வேறு பெருநிறுவன நிதியப் பிரிவுகளுக்காக பேசுகின்றன; ஆயினும்கூட இரு பெருவணிகத்தின் கட்சிகளும் ஒரே அடிப்படை சமூக செயற்பாட்டைத்தான் கொண்டுள்ளன: அதாவது அமெரிக்க சமூகத்தின்மீது பெருவணிக-நிதிய உயரடுக்கின் மேலாதிக்கத்தை பேணுதல் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகரீதியான நலன்களை உயர்த்திப் பிடித்தல் ஆகும். இரு கட்சிகளுமே வேறு எந்தவித முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் வலதுசாரி என்றுதான் கருதப்படும் -- குடியரசுக் கட்சி அரைப்பாசிச அல்லது தீவிர வலது என்றும், ஜனநாயகக் கட்சி கன்சர்வேடிவ் அல்லது மைய-வலதாகவும் கருதப்படும். இரு கட்சிகளுமே முதலாளித்துவ சந்தை முறையை சமூகத்தில் தலையாய அமைப்புமுறைக் கோட்பாடாக உயர்த்தி, ஏற்றுள்ளவை ஆகும்; எந்த அளவிற்கு அரசாங்க கட்டுப்பாடு பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதில் சிறு வேறுபாடுகளைத்தான் கொண்டிருக்கின்றன. இரு கட்சிகளுமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "தேசிய நலன்களை" நிலைநிறுத்துகின்றன; அதாவது, உலகின் மீது மேலாதிக்கம் செலுத்தும் அதன் உரிமையை. அதே நேரத்தில் அந்த இலக்கை நிறைவேற்றுவதற்கு எந்த அளவிற்குத் தூதரக முறை, இராணுவ சக்தி மற்றும் அரசியல் நாச வேலைகளின் துல்லியமான கலவை பயன்படுத்தப்பட்ட வேண்டும் என்பதில் வேறுபடுகின்றன. இரு கட்சி முறையின் மிக முக்கியமான அரசியல் பணி இத்தகைய கட்டுப்படுத்தப்பட்ட அரசியல் இயங்குமுறை மூலம் அமெரிக்கச் சமூகத்தின் பிரம்மாண்டமான சிக்கல் தன்மையை பிரதிபலிக்க முடியும் எனக் காட்டும் போலித் தோன்றத்தை தக்கவைப்பதாக இருக்கக்கூடும். அமெரிக்கா பரந்த பிராந்திய, பண்பாட்டு, சமூக, இனவழி வேறுபாடுகளை கொண்டுள்ள நாடு, ஆயினும்கூட உத்தியோகபூர்வ அரசியல் வாழ்வில் ஏகபோக உரிமை கொண்டுள்ள இரு கட்சிகளும் தங்கள் முக்கிய ஆதரவு மற்றும் முக்கிய தலைவர்களை இதே குறுகிய சமூக அடுக்கில் இருந்துதான் --உயர்மட்ட ஐந்து அல்லது பத்து சதவிகிதத்திடம் இருந்துதான் -- எடுத்துக் கொள்ளுகின்றன. அப்படி இருந்த போதிலும்கூட, ஆளும் உயரடுக்கிற்கு தன்னுடைய எதிர்ப்பிற்கு இடமில்லாத கட்டுப்பாட்டை தேர்தல் வழிவகையின்மீது கொண்டு அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தல் எளிதான செயலாக இல்லை. சமூக, அரசியல், ஏன் சொந்தக் காரணிகள்கூட சிக்கல் வாய்ந்த, முன்கூட்டிக் கூறப்பட முடியாத வழிவகைகளும் பின்னிப்பிணைந்துள்ளன. ஆளும் உயரடுக்கே கூட பல பிரச்சினைகளில் ஆழ்ந்த பிளவுகளை கொண்டுள்ளது. ஒருவேளை மிகவும் கணித்துக்கூற முடியாத காரணி, அமெரிக்காவின் குறைந்த பிணையுள்ள அடமானங்கள் பொறிவால் எழுந்த நிதி நெருக்கடி, அல்லது முன்னாள் பாக்கிஸ்தானிய பிரதம மந்திரி பெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டது போன்ற முக்கிய உலக நிகழ்வுகளுக்கும் மற்றும் அதிகரித்த அளவில் செயற்கையான மற்றும் வளைந்துகொடுக்காத அமெரிக்க தேர்தல் முறைக்கும் இடையிலான குறுக்கீட்டுப் புள்ளியாகும். 2008 பிரச்சாரத்தில், குடியரசு, ஜனநாயகக் கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்வு பெப்ருவரி 5ம் தேதியை ஒட்டி, நியமிக்கும் மாநாடுகள் கூடுவதற்கு 6 மாதங்கள் முன்பும், பொதுத் தேர்தல்களுக்கு ஒன்பது மாதம் முன்னரும் முடிந்துவிடக் கூடும். பெப்ருவரிக்கும் நவம்பருக்கும் இடையே அமெரிக்காவில் அரசியல் நிலையை அதிர வைக்கக் கூடிய பெரும் நிகழ்வுகள் ஏற்பட்டால், துவக்கத் தேர்தல் பிரச்சாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு முற்றிலும் மாறான வகையில் ஆளும் உயரடுக்கிற்கு அரசியல் பிரதிநிதி தேவைப்படும். இரு கட்சிகளில் ஜனாதிபதி முன்மொழிவுப் பிரச்சாரங்களில் பணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி சிறிதும் மிகைப்படுத்திக் கூறுவது முடியாததாகும். 2008 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் முழு வடிவமைப்பும் முந்தைய ஆண்டு வேட்பாளர்கள் திரட்டிய நிதிமூலம் நிறுவப்பட்டது; அதுதான் செய்தி ஊடக எதிர்பார்ப்புக்கள், தகவல்கள் மற்றும் பெருமளவிற்கு வாக்குப் போடுதலையும் செல்வாக்கிற்கு உட்படுத்தும். ஜனநாயகக் கட்சியை பொறுத்தவரையில், செனட்டர் பரக் ஒபாமா நியமனத்திற்கு உகந்த நம்பகத்தன்மை பெற்றுள்ள வேட்பாளராக வந்துள்ளார்; ஒரு குறிப்பிட்ட அரசியல் அடையாளத்தை இவர் கொண்டுள்ளார் என்பதினால் அல்ல; முக்கிய வேட்பாளர்களில் அதிக சரக்கில்லாதவர் என்று வாதிட இடம் உண்டு; ஆனால் அவர் 2007ன் முதல் காலாண்டுக் காலத்திலும் அதற்குப் பின்னரும் ஹில்லாரி கிளின்டனுடன் டாலருக்கு டாலர் என்ற முறையில் நிதி திரட்டுவதில் இணையாக இருந்தார் என்பதன் காரணமாக. மற்ற இரு செனட்டர்களான டிலாவரின் ஜோசப் பிடென் மற்றும் கனக்டிக்கட்டின் கிறிஸ்டோபர் தொட் இருவரும் வாஷிங்டனில் நீண்ட காலமாக இருந்த போதிலும், ஏதோ பந்தயத்தில் அவர்களும் ஓடினார்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்; இதற்குக் காரணம் நிதி திரட்டின் விளைவுகள் அவர்களுக்கு குறைவான செய்தி ஊடகத் தகவல்களையும் அதற்கு ஏற்ற கருத்து கணிப்புக்களையும்தான் கொடுத்தன. குடியரசுக் கட்சியின் முன்னாள் மசாச்சுஸெட்சின் கவர்னராக இருந்த மிட் ரோம்னி தொடக்கத்தில் முன்னணியில் இருந்ததற்கு காரணம் ஆக்கிரோஷமான முறையில் நிதி திரட்டியதும், தன்னுடைய சொந்தச் செல்வத்தில் இருந்து கணிசமாக செலவழித்ததும்தான், அது அரை பில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கு உயர்வாக இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் வேட்பாளராகலாம் எனக் கருதிய சிலர், செனட்டர் சாம் பிரெளன்பாக், முன்னாள் வேர்ஜினிய கவர்னர் ஜேம்ஸ் கில்மோர் போன்றவர்கள் பணம் திரட்டுவதில் கொண்ட கஷ்டங்கள் காரணமாக முதல் வாக்குப் பதிவிற்கு சில மாதங்கள் முன்னரே போட்டியில் இருந்து விலகி விட்டனர். கருத்துக் கணிப்பில் பின்னால் எழுச்சி பெற்று இருந்தாலும், முன்னாள் அர்கன்ஸாஸ் கவர்னர் மைக் ஹக்கபிக்கு அதிக வெற்றி வாய்ப்புக்கள் இல்லை எனத் தெரிகிறது; ஏனெனில் அவருடைய முக்கிய போட்டியாளர்கள் ரோம்னி, முன்னாள் நியூ யோர்க் மேயர் ருடால்ப் கியுலியனி, முன்னாள் செனட்டர் பிரெட் தோம்சன் மற்றும் செனட்டர் ஜோன் மக்கைன் ஆகியோருடன் ஒப்பிடும்போது இவரால் குறைந்த அளவு பணம்தான் திரட்டப்பட முடிந்தது. அயோவா செல்வாக்குச் சிறுகுழுக்களே ஒரு தேர்தல் போட்டிக் களம் என்பதைவிட ஏல விற்பனைக் கடைக்கு ஒப்பாகத்தான் இருக்கின்றன. அயோவா சிறு குழுக்களில் 80,000 மக்கள் மட்டுமே பங்கு பெறுவர்; ஜனநாயகக் கட்சியின் சிறு குழுக்களில் 150,000 பேருக்கு மேல் பங்கு பெற மாட்டார்கள்; அதுவே மிக அதிகமாக கூட்டமாகிவிடும். ஜனவரி 3ம் தேதி இரவு செல்வாக்குக் குழுவினர் கூடும்போது, ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் மொத்தத்தில் $25 மில்லியன் செலவழித்திருப்பர்; இது சிறுகுழுக்களில் வரும் ஒவ்வொரு நபருக்கும் $100க்கும் மேலாக என்று இருக்கும்; குடியரசுக் கட்சியினர் இதே தொகைக்குச் சற்று குறைவாகச் செலவழித்திருப்பர் மாநிலத்தில் பிரச்சாரத்திற்காக ஒபாமாவும் கிளின்டனும் தனித்தனியே 500க்கும் மேற்பட்ட முழு நேர ஊழியர்களை நியமித்திருந்தனர்; ஒப்புமையில் சற்றே குறைவான எண்ணிக்கையில் எட்வர்ட்ஸும், ரோம்னியும் ஊழியர்களை நியமித்திருந்தனர். குழுக்கள் கூட்டத்திற்கு வரக்கூடியவர்களை ஒரு வேட்பாளர் அல்லது பிறர் குறைந்தது சராசரி ஆறுதடவையாவது தொடர்பு கொண்டனர் என்று சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. வாக்குகளை அளிக்கும் சிறிய எண்ணிக்கையிலான அயோவா மக்கள் மற்றும் முதல் தொடக்க வாக்குப் பதிவு நடக்கும் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள குறைந்த எண்ணிக்கை, இரு கட்சிகளிலும் உள்ள அரசியல் நடைமுறைகளுக்கு மற்றும் ஊடகங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின் விளைவைத் திரிப்பதற்கு எளிதாக உதவுகின்றன. 2004ல் ஹோவர்ட் டீன் பிரச்சாரம் தகர்க்கப்பட்டதை நினைவிற்கு கொண்டுவந்தாலே போதும். அப்பொழுது ஒரு கடைசி நேரத் திருப்பம் அயோவா குழு செனட்டர் ஜோன் கெர்ரிக்கு ஆதரவு கொடுக்கிறது எனக் கூறப்பட்டு டீனின் கூட்டத்திற்குப் பிந்தைய ஊர்வல அணி உளரீதியாக கரைந்துவிட்ட ஒன்று எனவும் கூறப்பட்டு அவருடைய வேட்பாளர் தகுதி வினாவிற்கு உட்படுத்தப்பட்டது மட்டும் இல்லாமல், அவருடைய மூளை இயக்கத்தையும் செய்தி ஊடகம் வினாவிற்கு உட்படுத்தியது; இதில் இருந்து டீன் மீளவே இல்லை. முக்கிய வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் உண்மை அரசியலை சிறிதும் கொண்டிருக்கவே இல்லை. ஜனநாயகக் கட்சியில் ஒபாமா, கிளின்டன் மற்றும் எட்வர்ட்ஸ் ஆகியோருக்கு இடையே இருக்கும் போட்டி உண்மையான கொள்கைகள் பற்றிய கருத்து வேறுபாடுகள் என்பதைவிட, அவர்களுடைய மாறுபட்ட பாணிகள், தொனிகள், அணுகுமுறைகள், பிரச்சாரத்தில் ஏதேனும் தவறு என்ற முறையில் தொடர்ச்சியான அற்ப நிகழ்வுகள் ஆகியவற்றைப் பற்றித்தான் சுற்றிவந்தது. குடியரசுக் கட்சியில், ஒவ்வொரு முக்கிய வேட்பாளரும் சிதைவின் விளிம்பில் இருக்கும் ஒரு கட்சியின் விரோதப் போக்குடைய கன்னையை பிரதிநிதித்துவம் செய்கின்றார், அதாவது வோல் ஸ்ட்ரீட்டுக்காக ரோம்னி; கிறிஸ்துவ அடிப்படை உரிமைகளுக்காக ஹக்கபீ; இராணுவம், ஈராக் போர் ஆர்வலர்களுக்காக மக்கைன்; "பயங்கரவாதத்தின் மீதான" போரின் தீவிர ஆதரவாளர்களுக்காக கியுலியானி; தெற்கை தளமாகக் கொண்ட கட்சி அமைப்பிற்காக தொம்சன் என்ற விதத்தில் ஆகும் நியமனப் போட்டி முழுமையாக என்பது ஒரு புறம் இருக்க, அயோவாவின் முடிவு இரு கட்சிகளிலும் உறுதியாக இல்லை. ஆளும் உயரடுக்கிற்குள் இருக்கும் கூறுபாடுகளின் போராட்டத்தால் இது நிர்ணயிக்கப்படும்; மக்களுடைய உணர்வு இதில் இரண்டாம் பட்சத்தைத்தான் கொண்டிருக்கும். ஆனால் ஏற்கனவே பிரச்சாரத்தில் சில பொதுக் கூறுபாடுகள் இருப்பது தெளிவாகியுள்ளது. தேர்தலில் இரண்டு மையப் பிரிச்சினைகள் உள்ளன; ஆழ்ந்த நிதிய நெருக்கடியினால் அதிகமாகியுள்ள அமெரிக்காவில் சமூக துருவமுனைப்படலின் வளர்ச்சி; அமெரிக்க இராணுவவாததின் வளர்ச்சி; ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் முறையே ஏழாம், ஐந்தாம் ஆண்டுகளில் இருக்கும் போர்கள், மற்றும் ஈரான், பாக்கிஸ்தான், மற்றும் பிற இடங்களிலும் புதிய தலையீடுகள் என்பவை அவை. உள்நாட்டுப் பிரச்சினைகளை பொறுத்தவரையில், அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் பெரும் செல்வக் கொழிப்பு உடையவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே சமூகத்தில் ஆழமடைந்துவரும் பிளவுகள் என்னும் அமெரிக்க சமூகத்தின் அடிப்படை உண்மையைத்தான் எதிர்கொள்ளுகின்றனர். இரு கட்சிகளும் இந்தப் பிரச்சினையை ஆளும் உயரடுக்கின் கருவிகள் என்ற முறையில் தங்கள் வேறுபட்ட பங்குளை மனதில் கொண்டு வெவ்வேறு விதங்களில் அணுகுகின்றன. குடியரசுக் கட்சியின் தந்திரோபாயமானது இதைப் புறக்கணித்து, வேறு திசையில் திருப்புவது ஆகும்; இதற்காக மக்களின் மிகப் பிற்போக்கான, அதிகம் சிந்திக்காத பிரிவுகளை ஏமாற்றும் விதத்தில் முற்றிலும் தயாரிக்கப்டும் வலதுசாரி ஆத்திரமூட்டல்களை பயன்படுத்துவது ஆகும்; இதில் புலம்பெயர்ந்தோரை தாக்குதல், ஓரினச் சேர்க்கையாளர்களை தாக்குதல், பயங்கரவாத பீதியை கிளப்பி விடுதல், குறுகிய மத பற்றாளர்களின் உணர்வைத் தூண்டி விடுதல் ஆகியவை அடங்கும். இவற்றுடன் நாணமற்ற முறையில் சொத்துக்கள், சலுகைகளை பாதுகாப்பதும் (தடையற்ற சந்தை) இணைக்கப்பட்டு சமூகப் பொருளாதாரப் பிளவுகளைப் பற்றி கூறப்படும் எதனையும் "வர்க்கப் போர்முறை" என்றும் பூதாகரப்படுத்திவிடும். ஜனநாயகக் கட்சியின் தந்திரோபாயம் பெருகிய சமூகப் பிளவை ஒப்புக் கொண்டு அடிப்படை சமூக அமைப்பு, செல்வப் பகிர்வு ஆகியவற்றை சிறிதும் கவனியாமல் பல பெரிய, பெயரளவு நடவடிக்கைகளை கொடுப்பது ஆகும். கிளின்டன், ஒபாமா, எட்வர்ட்ஸ் என்று அனைவரும் வோல் ஸ்ட்ரீட்டில் பெரும் செல்வம் குவிதலை பற்றிக் குறிப்புக்கள் கூறினாலும், உழைக்கும் மக்கள் பெருகிய முறையில் எதிர்கொள்ளும் கடினமான போராட்டத்துடன் அதை ஒப்பிட்டுக் காட்டுகின்றனர். இத்தகைய சமத்துவமற்ற நிலைமையை ஏற்படுத்தும் பொருளாதார முறை முற்றிலும் அடிப்படையில் சரிபடுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய நடவடிக்கைகளை இவர்கள் எவரும் முன்வைக்கவவில்லை. இவர்கள் மூவருமே தொழிலாள வர்க்கத்தின் உழைப்பினால் தோற்றுவிக்கப்படும் செல்வத்தின் பெரும் பகுதியை எடுத்து அனுபவிக்கும் உயர்மட்ட ஒரு சதவிகிதத்தின் பகுதியாகத்தான் உள்ளனர். இவர்கள் மக்களை திருப்திப்படுத்தும் முறையில் கொண்டுள்ள ஆழ்ந்த தன்மையும் செயலும் இவ்வளவுதான் (கிளின்டன் மிகுதியாக ஆரவாரம் செய்ய மாட்டார்; எட்வர்ட்ஸ் அதிகம் கூச்சலிடுவார்). எட்வர்ட்ஸ் அயோவாவின் கடைசி நாட்களில் இதுவரை இல்லாத அளவிற்கு, சமீபத்தில் இரு கட்சிகள் அமெரிக்க அரசியலில் காணாத முறையில், அசாதாரணமான வகையில் பெரு வணிகத்திற்கு எதிராக தன்னுடைய தாக்குதலை சொல்லாற்றல் மூலம் வெளிப்படுத்தினார். இது வாக்காளர்களுக்கு பெருகிய முறையில் சமூகப், பொருளாதார பெருந்திகைப்பு இருப்தை உணர்ந்து வெளிப்பட்டது ஆகும். இதே விதத்தில் பிரச்சினையை எதிர்கொள்ளும் ஒரே குடியரசுக் கட்சி வேட்பாளர் ஹக்கீப் ஆவார்; அயோவா கருத்துக் கணிப்புக்களில் இவர் முன்னணியில் இருக்கும் ஞானஸ்நான உபதேசம் செய்பவர் ஆவார்; இவர் முன்னணியில் இருப்பதற்கான காரணம் அடிப்படை வாத கிறிஸ்துவர்கள் மற்றும் வீட்டுப் பள்ளியில் படித்தோரிடையே பெற்றுள்ள ஆதரவுதான். வலதுசாரி மற்றும் திருப்திப்படுத்தும் வனப்புரை இரண்டையும் இணைத்துச் செயல்படுத்துகிறார். அதுவும் வோல் ஸ்ட்ரீட் நலன்கள் பற்றி இணைக்கிறார். இதனால் குடியரசுக் கட்சியின் நடைமுறையில் இருந்து தீப்பொறி பறக்கும் தாக்குதல்களையும் எதிர்கொள்கிறார். வெளிநாட்டுக் கொள்கையில், இரு கட்சிகளிலும் இருக்கும் முக்கிய வேட்பாளர்கள் ஈராக் போர் காலவரையற்று நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்; "போரை முடிவிற்குக் கொண்டுவருவோம்" என்று ஜனநாயகக் கட்சியினரின் பாசாங்கு இருந்தபோதிலும், நடைமுறைச் செயல்கள் இப்படித்தான் உள்ளன. உதாரணமாக நியூ ஹாம்ப்ஷயரில் சமீபத்திய கருத்துக்களின்படி ஜனநாயகக் கட்சியினர் 98 சதவிகிதமும், சுயாதீனமாக இருப்பவர்களில் 74 சதவிகிதத்தினரும் ஓராண்டிற்குள் அனைத்துப் படைகளும் ஈராக்கில் இருந்து திருப்பப் பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஆகக்கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ள மூவரில் எவரும் இத்தகைய கொள்கையை ஏற்க மாட்டார்கள், அல்லது பதவிக்கு வந்தபின் அத்தகைய செயலில் ஈடுபடவும் மாட்டார்கள். போர் எதிர்ப்பு வேட்பாளர்கள் காங்கிரசை கட்டுப்படுத்தும் வகையில் ஜனநாயகக் கட்சியினரை வாக்களித்து பதவியில் இருத்திய ஓராண்டு காலத்திற்கு பின்னர், அமெரிக்க இராணுவ வலியத்தாக்குதல் நடவடிக்கையால் சீற்றம் அடைந்த, பெருந்திகைப்பிற்கு ஆளாகிய, பல மில்லியன் பேரும் வாக்குரிமை பறிக்கப்படுவதற்கு ஜனநாயகக் கட்சி இப்பிரச்சினையை அது 2004ல் செய்ததைப்போல் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பிரச்சினையாக உறுதிப்படுத்தும் முயற்சியைக் கொள்ளவில்லை. |