WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
India: Hindu-communalist BJP wins assembly elections in Gujarat and
Himachal Pradesh
இந்தியா: இந்து வகுப்புவாத பா.ஜ.க குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டமன்ற
தேர்தல்களில் வெற்றி பெற்றது
By Ajay Prakash and Kranti Kumara
5 January 2008
Use this version to
print | Send this link by email |
Email the
author
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் காந்தி-நேரு பரம்பரையின் தற்போதைய
தலைவர் சோனியா காந்தியால் மேற்கு இந்திய மாநிலத்தை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர பாரிய முன்னெடுப்பு செய்யப்பட்ட
போதும் குஜராத்தில் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (BJP)
தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
நரேந்திர மோடி தலைமையின் கீழ் 182 இடங்கள் கொண்ட குஜராத் சட்டமன்றத்தில்
117 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றது.
அக்டோபர் 2001ல் இருந்து குஜராத்தின் முதலமைச்சராக இருந்து வரும் மோடி,
முஸ்லீம்களுக்கு எதிராக தூண்டிய கலவரம் 2002 பிப்ரவரி-மார்ச்சில் அம்மாநிலத்தை அதிர வைத்ததுடன், சுமார்
2,000 பேரை பலியாக்கியதுடன், 10,000 பேரை வீடற்றவராக்கியது.
காங்கிரஸ் கட்சி, தனது பங்கிற்கு, குஜராத் சட்டமன்ற இடங்களில் கடந்த 2002ம்
தேர்தலை விட 8 இடங்கள் அதிகமாக பெற்று 59 இடங்களை கைப்பற்றியது. இதில் காங்கிரசின் கூட்டணி கட்சியான
தேசிய காங்கிரஸ் கட்சி மூன்று இடங்களைக் கைப்பற்றியது. குஜராத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் (CPM)
காங்கிரஸூடன் கூட்டணி வைத்திருந்தது. அது ஒரு இடத்தைக் கூட கைப்பற்ற தவறிவிட்டது. சிபிஎம் தலைமையிலான
இடதுசாரி கட்சியானது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA)
அரசை புதுதில்லியில் ஆட்சியிலிருக்க உதவி வருகிறது.
மோடியின் அரசாங்கத்தை வீழ்த்த, பாரதீய ஜனதா கட்சியின் கீழ்தரமான மதவாத
அரசியலுக்கு மோசமாக அடிபணிந்தவகையில் பாரதீய ஜனதா கட்சியுடன் முரண்பட்டிருந்தவர்களிடம் காங்கிரஸ்
ஆதரவு திரட்ட வேண்டியதாயிற்று. பாரதீய ஜனதா கட்சியுடன் கருத்து வேறுபாடு கொண்ட இவர்கள் மோடியை
போன்று தங்களை இந்து மதவாத கொள்கைகளுக்கு இணக்கமானவர்களாக காட்டிக் கொண்டது மட்டுமின்றி (விஷ்வ
இந்து பரிஷத் மற்றும் பிற இந்து மேலாதிக்க அமைப்புகளாலும் வெளிப்படையாக ஆதரவளிக்கப்பட்டனர்); இதில்
பெரும்பான்மையினர் 2002 இல் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டுவதிலும் மற்றும் அதற்கான ஏற்பாடுகள்
செய்வதிலும் முக்கிய பங்கு வகித்தனர். ஆனால் சுயேட்சையாக அல்லது பாரதீய ஜனதாவில் இருந்து பிரிந்த
பாரதீய ஜனசக்தி கட்சியில் கீழ் அல்லது காங்கிரஸ் வேட்பாளராக காங்கிரஸால் ஆதரவளிக்கப்பட்ட பாரதீய
ஜனதா கட்சியின் விட்டோடிகளில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் தங்கள் இடங்களில் தோல்வியை தழுவினர்.
கடந்த மாதம் இரண்டாவதாக வடமேற்கு மாநிலமான இமாச்சலப்பிரதேசத்தில்
நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலிலும், பாரதீய ஜனதா கட்சியால் காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டது.
இமாச்சலப்பிரதேச சட்டமன்றத்திற்கான 68 இடங்களில் காங்கிரஸ் 23 இடங்களில் இருந்து 20 இடங்களைப்
பெற்று சரிவைக் கண்டபோது, பாரதீய ஜனதா அங்கு 41 இடங்களை கைப்பற்றியது.
2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 6 மில்லியன் மக்கள்தொகையை கொண்ட
இமாச்சலப்பிரதேசம் ஒரு சிறிய மாநிலமாகவே கருதப்படுகிறது. ஆனால், அதற்கு முற்றிலும் மாற்றாக, 50
மில்லியனுக்கும் மேலான மக்கள்தொகையை கொண்ட குஜராத் இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றாக
இருக்கிறது. மேலும் அது தொழிற்துறைமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கப்பட்டவைகளில் ஒன்றாகவும் திகழ்கிறது.
குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த இரு தேர்தல்
தோல்விகளும் காங்கிரஸிற்கு ஒரு பெரும் வீழ்ச்சியாக அமைந்திருக்கிறது. வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களை
தமக்கு சாதகமாக ஊக்குவிக்கவும் மற்றும் வெற்றி பெறவும் குஜராத்தில் கிடைக்கும் ஒரு காங்கிரஸ் வெற்றி
கட்சிக்கு அரசியல் உந்துதலை உருவாக்கிக் கொடுக்கும் என்றும், அதன்மூலம் இந்திய-அமெரிக்க அணு ஆயுத கூட்டு
ஒப்பந்தத்துக்கு இடதுசாரிகளின் எதிர்ப்பை நீக்கலாம் என்றும் காங்கிரஸ் தலைமை மற்றும் இந்திய மேற்தட்டின் ஒரு
குறிப்பிடத்தக்க பிரிவு எண்ணியிருந்தது. ஆனால் அதுபோன்ற கணிப்புகள் தற்போது கந்தலாகி தொங்குகின்றன.
குஜராத்தில் ஏற்பட்ட அதன் தோல்வியை தொடர்ந்து, காங்கிரஸ் தலைமை
உடனடியாக ஒரு "சுய ஆய்வு கூட்டத்திற்கு" கூடியது. கணிக்கப்பட்டபடி, 2002ல் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான
கலவரத்தில் நடந்த படுகொலைகள் பற்றி மத்திய அரசாங்கம் மீண்டும் விசாரணையை தொடங்க வேண்டும் என்ற
ஆலோசனைகளில் ஏற்பட்ட தவறு உட்பட கலவரத்தை முன்னிறுத்தி பாரதீய ஜனதா அரசாங்கத்திற்கு எதிரான
பிரச்சாரத்தில் காங்கிரஸின் திறமையான தாக்குதல்களில் போதியளவு பிற்போக்குத்தனம் இடம் பெறவில்லை என்ற
முடிவுக்கு அது வந்தது.
குஜராத்தில் கிடைத்திருக்கும் பாரதீய ஜனதாவின் வெற்றி அதன் முக்கிய
தலைவர்களிடம் இருந்து வெற்றி அறிக்கைகளை வெளியிடச் செய்திருக்கிறது.
பாரதீய ஜனதாவின் பாராளுமன்றத் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்குப்
பரிந்துரைக்கப்பட்டு இருக்கும் புதிய வேட்பாளர் எல்.கே. அத்வானி, ''இந்த தேர்தல் வெற்றி தேசிய
அரசியலின் திருப்புமுனையாகும், ஏனென்றால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாரதீய ஜனதா கட்சி
முன்னிலையில் வருவதற்கு இதுவொரு அறிகுறியாகும்'' என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த தேர்தல் முடிவுகள் அதன் இந்து மேலாதிக்க கொள்கைகளான இந்துத்துவாவிற்கு
அளிக்கப்பட்ட ஓர் உறுதியான உறுதிமொழியாக என பாரதீய ஜனதா கட்சியின் பொது செயலாளர் ராஜ்நாத் சிங்
தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், "நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசாங்கத்தின் தலைமை
மற்றும் திறனைப் போன்றே கட்சியின் எண்ணம் மற்றும் கொள்கைகளும் வெற்றி பெற்றிருக்கின்றன." என்று
தெரிவித்தார்.
2004ம் ஆண்டு இந்திய தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய கூட்டணி
கட்சி எதிர்பாராத வகையில் விலகியதில் இருந்து பாரதீய ஜனதா கட்சி தொடர்ச்சியான நெருக்கடிகளை சந்தித்து
வருகிறது. கட்சியின் முன்னணி தேசிய தலைவராக சில காலம் இருக்க வேண்டும் என்ற மோடியின் ஆசையினால்
தன்னை இந்துத்துவாவின் மீது தன்னார்வம் கொண்டவராக காட்டிக் கொள்ளும் அவரின் முயற்சிகளால் - ராஜ்நாத்
சிங்கின் உரை குறிப்பிடுவது போல, மோடியின் தலைமை பற்றி பாரதீய ஜனதாவிற்குள் பல்வேறு கருத்து
வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.
குஜராத் பாரதீய ஜனதா கட்சியின் மீதான மோடியின் ஏகபோக தனியுரிமையை
கொண்டிருப்பதிலும் மற்றும் இரண்டாவது முறையாக மாநிலத்தின் முதலைச்சராக பதவி வகிப்பது தொடர்பாகவும்
பெருநிறுவன ஊடங்கள் வேறுபாடான கருத்துக்களை கொண்டுள்ளன. அவரின் தீவிர மதவாதம் மற்றும் "தெரு நீதி"
வழங்கும் அவரின் நீதித்தன்மை அபாயகரமாக ஸ்திரமின்மையை உருவாக்குவதாக சில பிரிவுகள் கருதும் போது,
இந்திய மற்றும் வெளிநாட்டு மூலதனங்களின் மிக சக்தி வாய்ந்த பிரிவுகளால் முன்வைக்கப்படும் நவீன தாராளமய
சீர்திருத்தங்களை கருணையற்ற முறையில் நடைமுறைப்படுத்தியதற்காக அவரின் சிறப்பான நிர்வாகம் குறித்து அவருக்கு
மற்றொரு பிரிவினர் வரவேற்பளிக்கின்றனர்.
இந்தியாவின் நிதியியல் மையமான மும்பையை (பம்பாய்) கொண்டிருக்கும்
மஹாராஷ்டிராவையும் பின் தள்ளி விட்டு தற்போது அனைத்து இந்திய மாநிலங்களில் முன்னனி முதலீட்டிற்குரியதாக
குஜராத் மாறி இருக்கிறது. இந்தியாவின் மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இந்தியாவினுள்
2006-2007 இல் கொண்டு வரப்பட்ட அனைத்து வெளிநாடு முதலீடுகளில் நான்கில் ஒரு பங்கு மூலதனத்தை
குஜராத் ஈர்த்திருக்கிறது. பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் சுவரொட்டிகளில் "குஜராத்தே மீண்டெழு!" என்ற
வாசகத்துடன் ஒருபுறம் மோடியும் மற்றொருபுறம் முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடாவின் படங்களுடன்
அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
குஜராத் தேர்தலுக்குப் பின்னர், சரியான நேரத்தில் அவரின் திறமையான மதவாத
கோரிக்கைகள் ஒரு செயல்திறமையற்று நிர்வகிக்கப்பட்ட காங்கிரசின் பிரச்சாரத்தை வெற்றி கொண்டதாக கூறி
இந்த பெருநிறுவன ஊடகங்கள் அனைத்தும் ஒருமித்த கருத்துடன் மோடியை புகழ்வதில் ஈடுபட்டன. தி டைம்ஸ் ஆப்
இந்தியா இதழின் டிசம்பர் 24ம் தேதி தலையங்கம், "மோடி மீதான பொதுஜன வாக்கெடுப்பு. ஆனால் அவர்
அதை எளிதாக வென்றார்." என தேர்தலைக் குறித்து குறிப்பிட்டது.
பெருநிறுவன இதழ்களின் தேர்தல் ஆய்வுகளை படிக்கும்போது, குஜராத் என்பது இந்து
மதவாதத்தின் கொதிக்கும் கொப்பரையாகவே ஒருவருக்கு தோற்றம் அளிக்கும். ஆனால் யதார்த்தமானது மிகவும்
சிக்கலானது.
டிசம்பர் 2007 தேர்தலில் வாக்களித்தோர் எண்ணிக்கை, அதற்கு 2002 ஐ விட
சற்றே குறைந்து சுமார் 60 சதவீதத்திற்கு நெருக்கமாக இருந்தது. முப்பத்தி எட்டு சதவீத வாக்குகள் பெற்ற
காங்கிரஸுடன் ஒப்பிடுகையில் பாரதீய ஜனதா கட்சி சுமார் 49 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
இவ்வாறு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பாரதீய ஜனதாவின் வாக்குவிகிதம் 29.4 சதவீதமாக அமைகிறது.
மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இல்லாத வாக்காளர்களின் எண்ணிக்கையையும் மொத்தமாக கணக்கில்
எடுக்கும்பட்சத்தில், இது மேலும் குறைவாக அமையும். இருந்தபோதிலும், பாரதீய ஜனதா கட்சி 182 சட்டமன்ற
இடங்களில் 64 சதவீதத்தை வென்றது.
எனவே, மோடி மற்றும் பாரதீய ஜனதா கட்சி நகர்புற நடுத்தர வர்க்கத்தை
சேர்ந்த பெரும்பான்மையினரின் தேர்தல் ஆதரவைப் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த பிரிவினரின்
பெரும்பான்மையினர் கணிசமான அளவில் கடந்த 15 ஆண்டுகளில் செய்யப்பட்ட நவீன தாராளமயமாக்கல்
பொருளாதார சீர்திருத்தங்களின் மூலம், குறிப்பாக சமீபத்திய முதலீட்டு அபிவிருத்திகளால் பயனடைந்தவர்களாவர்.
மேலும், முற்போக்கான மாற்றீடு எதுவும் இல்லாததால், தங்களின் வாழ்வில் ஏதேனும் முன்னேற்றம் வருமா என
நம்பிக்கையிழந்திருக்கும் பெருமளவிலானவர்கள் மத்தியில் பாரதீய ஜனதா கட்சியின் ''அபிவிருத்தி'' எதிரொலிப்பை
பெற்றுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் முறை மட்டுமின்றி, முதலீடு வளர்ச்சிகளும் கூட
கிராமப்புற குஜராத்தை முழுவதுவதாக நிராகரித்திருக்கிறது என்பதுடன் நகரங்களில் அது சமூக சமத்துவமின்மையை
ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு மேலாக, இந்த முதலீட்டு வளர்ச்சி என்பது உயர்ந்தளவில் ஸ்தரமின்மையைக்
கொண்டிருப்பதுடன், இது பல முரண்பாடுகள் மற்றும் சமமற்ற தன்மையைக் கொண்டு உலக முதலாளித்துவ
பொருளாதாரத்தின் சுமையையுடன் பிணைக்கப்பட்டு இருக்கிறது.
அடிப்படை பொது மற்றும் சமூக சேவைகள் இன்றி சுரண்டப்பட்டு வந்த பழங்குடி
இனத்தவர் மற்றும் கீழ்சாதியினர் என அழைக்கப்படும் மிகவும் ஏழ்மையானவர்களின் வெறுப்புக்களை மாநிலத்தின்
முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக திருப்பியதுடன், பல இந்துத்துவா ''சமூக சேவை அமைப்புகள்'' மூலம்
அவர்களை தனது ஆதரவு தளமாக்கியதில் பாரதீய ஜனதா கட்சி சில வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரான மாற்றீட்டை
முன்வைக்கவில்லை.
சமீபத்தில் தெஹல்கா இதழால் வெளியிடப்பட்டு அடிக்கோடிடப்பட்டபடி,
முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டுவதில் மற்றும் குற்றவாளிகளுக்கு ஆதரவு அளிப்பதில் மோடி மீதும் மற்றும்
பாரதீய ஜனதா தலைவர்கள் மீதும் சட்டமுறைப்படி குற்றஞ்சாட்டவதில் மற்றும் குற்றத்தை மெய்ப்பிப்பதில் போதிய
ஆதாரங்கள் இருந்தபோதிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2002ம் ஆண்டு நடந்த
நிகழ்வுகளின் மீது ஒரு முறையான விசாரணையை ஏற்படுத்தவும் தவறிவிட்டது. (பார்வையிடவும்:
"In run-up to Gujarat elections: Magazine
exposé shows BJP state government organized 2002 pogrom")
மேலும் பாரதீய ஜனதாவிலிருந்து முரண்பட்டவர்களின் ஆதரவைப் பெற முயன்றதிலும் -
அதில் ஒருவர் அந்த கலவரம் நடந்த போது மாநில போலீஸ் துறைக்கான அமைச்சராக இருந்தவர் - காங்கிரஸ்
மதவாத அரசியல் எனும் வடிகுட்டையை நோக்கி இன்னொரு படியை எடுத்து வைத்தது.
பொருளாதார பாதுகாப்பின்மை, சமூக சமத்துவமின்மை மற்றும் மாநிலத்தில் இருந்த
வறுமை ஆகியவற்றை தேர்தல் பிரச்சனைகளில் முக்கியமான விடயமாக்க காங்கிரஸ் செய்யவுமில்லை,
விரும்பவுமில்லை. அனைத்திற்கும் மேலாக, இடதுசாரிகளின் பாராளுமன்ற ஆதரவைச் சார்ந்திருப்பதில் இருந்து அது
தன்னை விடுவித்துக் கொள்ளும்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அதேபோன்ற முதலீட்டு சார்பான
கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுடன் மற்றும் வேலைநீக்கங்கள், ஆலை கதவடைப்புகள் மற்றும் வேலைத்தலங்களை
வெளிநாடுகளுக்கு மாற்றுதல் போன்றவற்றிகுள்ள எஞ்சியுள்ள தடைகளையும் இல்லாமல் செய்யலாம்.
காங்கிரஸ் கட்சி இதுபோன்று செயல்பட்டிருந்தால் இந்த எதிர்பாரா அதிர்ச்சியை
சந்தித்திருக்காது. அது இந்திய முதலாளித்துவத்தின் மிக பழமை வாய்ந்த கட்சி மற்றும் அதன் வரலாற்றுரீதியில்
அரசாங்கத்திற்கு விரும்பப்படும் கட்சியாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டு) மற்றும் அதன் இடதுசாரி கூட்டணிகள்
காங்கிரசிடமும் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிடம் உழைக்கும் வர்க்கத்தை அடிபணிய செய்திருப்பதுடன்,
அவர்கள் பாரதீய ஜனதாவிற்கு எதிராக ஒரு பாதுகாப்பு கொத்தளத்தையும் உருவாக்கலாம் என கருதுகின்றனர்.
மேலும் இதன்மூலம் முதலாளித்துவத்தின் நவீன தாராளமயவாத சீர்த்திருத்த திட்டங்களுக்கு நெருக்கடி அளிக்க முடியும்
எனவும் கருதுகின்றனர்.
குஜராத் தேர்தல்களில் நச்சுத்தன்மை கொண்ட இந்து மேலாதிக்க கொள்கைகளுக்கு
சம்மதிக்கும் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு திரும்ப காங்கிரஸ் உதவி இருப்பதன் மூலம் இந்த
கொள்கையின் அரசியல் குற்றத்தன்மை மற்றொரு முறை எடுத்துக்காட்டப்பட்டு இருக்கிறது.
ஆனால் ஸ்ராலினிஸ்டுகள், காங்கிரஸுடன் மட்டுமின்றி, அவர்களின் நிலைப்பாட்டை
மாற்றலாம். "மதசார்பற்ற குழுக்களின் ஐக்கியத்திற்கு" அவர்கள் அழைப்புவிட்டிருப்பதன் மூலமும், சோனியா
காந்தி மற்றும் மன்மோகன் சிங்கிற்கு தங்கள் வழிகளில் இருக்கும் தவறுகளை கண்டுணர்ந்து மக்கள் நல
கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என அவர்கள் சற்றே வலுவிழந்த கோரிக்கைகளை வைத்திருப்பதன் மூலமும்
உழைக்கும் வர்க்கமும் ஏழைகளும் வலதுசாரி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவுகொடுக்க
வேண்டும் என்று கூறி குஜராத்தில் காங்கிரசின் தோல்விக்கு அவர்கள் பதிலுரைத்திருக்கிறார்கள். |