:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
ISSE demonstration to free Iranian students calls for
international unity of workers
ஈரானிய மாணவர்களை விடுவிப்பதற்கான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்
அமைப்பின் ஆர்ப்பாட்டம் தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்திற்கு அழைப்பு விடுக்கிறது
By our reporter
19 February 2008
Use this
version to print | Send this link by
email |
Email the
author
பெப்ரவரி 16ல், கைது செய்யப்பட்டுள்ள நாற்பதிற்கும் மேற்பட்ட இடதுசாரி மாணவர்களை
உடனடியாக விடுவிக்கவும் மற்றும் அவர்களுக்கு எதிரான வழக்குகளை ஈரானிய அரசாங்கம் கைவிடவும் கோரி நியூயோர்க்
நகரில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த மாணவர்களின்
நிலைமையை கவனத்தில் கொண்டிருந்ததற்கும் மேலாக யுத்தம், சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான
ஒரு போராட்டத்திற்கு அவசியமான அரசியல் அடிப்படைகளிலும் இந்த ஆர்ப்பாட்டம் கவனம் செலுத்தியது.
அமெரிக்க பல்கலைகழகத்தில் படித்து வரும் ஈரானிய மாணவர்களின் ஒரு குழுவுடன்
இணைந்து சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள்,
மன்ஹட்டன் நகரின் மையத்தில் உள்ள அமெரிக்காவிற்கான ஈரானிய இஸ்லாமிக் குடியரசு அமைப்புக்கு வெளியே பேரணி
நடத்தினர். மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை கொண்டதொரு சர்வதேச சோசலிச இயக்கத்தின் தேவையை
ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு மற்றும் முன்னோக்கினையும்
அடித்தளமாக கொண்டு, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பானது ஈரானிய ஆட்சி உட்பட தேசிய
முதலாளித்துவ அரசாங்கங்களுக்கான எவ்வித ஆதரவையும் நிராகரிக்கிறது. சமூக சமத்துவத்திற்கான சர்வதேச அமைப்பு
(ISSE)
என்பது நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின்
(ICFI) மாணவர் அமைப்பாகும்.
ஆஜாதி பராபரி குழுவின் (சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்குமான மாணவர்கள்)
உறுப்பினர்களான அந்த மாணவர்களின் கைது நடவடிக்கைக்காக ஈரானிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பின் வழிகாட்டி குழுவின் ஓர் உறுப்பினர் ஜோ கே ஒரு
கடிதத்தை வாசித்தார். (பார்க்கவும்: "ISSE
demonstrates in New York to demand release of jailed Iranian students")
அமெரிக்க யுத்த திட்டங்களை நிராகரிக்க இந்த குழு ஓர் ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு
செய்தபோது, டிசம்பரில் முதல் கைது நடவடிக்கை ஆரம்பித்தது. முன்னாள் ஜனாதிபதி மொஹம்மத் கத்தாமியை
சார்ந்திருந்த சீர்திருத்த குழுக்கள் உட்பட ஈரானிய அரசாங்கத்தின் அனைத்து பிரிவுகளுக்கு எதிராகவும் மாணவர்கள்
தங்களின் எதிர்ப்பை அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் ஓர் முக்கியமான
விளக்கத்தை அடைந்திருக்கிறார்கள் என கே தெரிவித்தார்.
"யுத்தம் மற்றும்
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஓர் இயக்கமானது, தேசிய முதலாளித்துவத்திற்கோ அல்லது ஈரானின் அல்லது
எந்வொரு நாட்டின் தேசிய அரசாங்கத்திற்கோ அடிபணிந்திருக்க முடியாது."
என அவர் தெரிவித்தார்.
அமெரிக்க ஆளும் வர்க்கத்தையும் மற்றும் மத்திய கிழக்கின் மீதான அதன் பேராசைகளையும்
சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு முற்றிலும் எதிர்ப்பதாக கே குறிப்பிட்டார்.
"ஈரானுக்கு எதிரான
எவ்வித அமெரிக்க நடவடிக்கையையும் நாங்கள் எதிர்க்கிறோம்,
'ஆட்சி மாற்றத்திற்கான
திட்டங்களையும் நாங்கள் எதிர்க்கிறோம்',
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டங்களை நாங்கள் ஆதரிக்கவில்லை,'
என அவர் தெரிவித்தார்.
"எவ்வாறிருப்பினும்,
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான எங்களின் எதிர்ப்பானது, ஈரானின் அல்லது வேறு எந்தவொரு நாட்டின் பிற்போக்கான
அல்லது ஜனநாயகத்திற்கு எதிரான முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எவ்வித ஆதரவளிப்பதிலும் தங்கியிருக்கவில்லை.
யுத்தத்திற்கு எதிரான போராட்டத்திற்காக இந்த அனைத்து அரசாங்கத்திற்கு எதிராகவும் மற்றும் தேசிய அரசமைப்பு
முறைக்கு எதிராகவும் தொழிலாளர்களையும், மாணவர்களையும் சுயாதீனமாக அணிதிரட்ட வேண்டியுள்ளது."
என அவர் குறிப்பிட்டார்.
2007, மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ல் நடந்த யுத்தத்திற்கு எதிரான சமூக
சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் அவசர மாநாட்டில்
முன்வைக்கப்பட்ட அறிக்கையின் சில பிரிவுகளையும் கே வாசித்தார். ஈராக் யுத்தம் மற்றும் ஈராக்கிற்கு எதிரான
இராணுவ நடவடிக்கைகளுக்கான திட்டங்களை பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய இந்த அறிக்கை, அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் எழுச்சியானது ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் பெரும் ஆபத்தாகும் என குறிப்பிடுகிறது.
"ஜனநாயகம்
மற்றும் சமத்துவம் மிக்க சர்வதேச சோசலிச சமூகத்தை உருவாக்கும் பாதையில், சர்வதேச உழைக்கும் மக்களின்
ஒருங்கிணைந்த சர்வதேச போராட்டம் மட்டுமே ஒரு புதிய உலக யுத்த அச்சுறுத்தலுக்கு பதிலாக அமையும்."
என அவர் அறிவித்தார்.
உழைக்கும் வர்க்கத்தைக் சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான நோக்கத்தை முன்
வைத்த அந்த அறிக்கை, ஒரு தேசியவாத முன்னோக்கினை தெளிவாக நிராகரித்தது.
"ஈரான், சீனா
மற்றும் இந்தியா போன்ற பொருளாதாரரீதியாக குறைந்தவளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள ஆளும்
மேற்தட்டுக்கள் அவைகளின் சொந்த நலன்களை மற்றும் ஆசைகளை கொண்டிருக்கின்றன. இந்த நலன்கள், உழைக்கும்
மக்களின் நலன்களுக்கு எதிராகவும் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கொள்கை ரீதியாக எவ்வித
தொடர்புமற்றவையாகும். இந்த நாடுகளுக்கு எதிரான யுத்தத்திற்கான எதிர்ப்புகள் அந்த நாடுகளின்
அரசாங்களுக்கு அல்லது அந்த அரசாங்கங்கள் பிரநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ நலன்களுக்கு எவ்வகையிலும்
ஆதரவு என பொருள்படாது. அணு ஆயுதங்கள் அல்லது பிற ஆயுதங்கள் இந்த நாடுகள் பெற்றுக்கொள்வதால்
ஏகாதிபத்தியத்தின் தோல்வி ஏற்படாது, சோசலிச திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச உழைக்கும் வர்க்கத்தை
ஒன்று திரட்டுவதன் மூலம் மட்டுமே அது நடந்தேறும்."
என அவர் குறிப்பிட்டார்.
உழைக்கும் வர்க்கம் "மட்டுமே
உண்மையான சர்வதேச வர்க்கமாகும்"
என வலியுறுத்தும் அந்த அறிக்கை, "அவர்களின்
சமூக நலன்கள் போட்டிமிக்க தேசிய அரசுகளின் முதலாளித்துவ அமைப்பின் எல்லைகளை தாண்டி செல்கின்றன."
(பார்வையிடவும்: "End the occupation of
Iraq! No to war against Iran! For an international socialist movement
against war!") எனக் குறிப்பிடுகிறது.
ஈரானிய மாணவர்களின் கைது நடவடிக்கை இந்த முன்னோக்கை உறுதிப்படுத்துகிறது
என கே தெரிவித்தார். ஈரானிய அரசாங்கம் அதன் வலதுசாரி கொள்கைகளுக்கு எதிர்ப்பை சந்தித்தபோது,
ஒடுக்குமுறையால் மட்டுமே பதிலளிக்க முடிந்ததையே இது எடுத்துக்காட்டுகிறது. யுத்தத்திற்கு எதிராகவும் மற்றும்
சமத்துவமான சோசலிச சமூகத்திற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் உலகளவில் உள்ள மாணவர்கள் மற்றும்
தொழிலாளர்களுடன் கைகோர்க்க ஈரானிய மாணவர்களுக்கு அழைப்பு விடுத்ததுடன் அவர் தம் உரையை முடித்துக்
கொண்டார்.
இதில் கலந்து கொண்ட பலர் சர்வதேசியவாதத்தின் பங்கினை வலியுறுத்தினர்.
திலாவெர் பல்கலைகழக மாணவரும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பின் வழிகாட்டி குழுவின்
உறுப்பினருமான ஆண்ரே டேமன் கூறுகையில், "அமெரிக்க
தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள், ஈரானிய மாணவர்கள் மற்றும்
தொழிலாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை போன்றதே
ஆகும்."
என தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெருமளவில் கடனில்
உள்ளனர் என டேமன் குறிப்பிட்டார். "கடந்த
தசாப்தங்களில் இருந்து, அமெரிக்காவில் ஊதியம் உயரவில்லை என்பதுடன் அது வீழ்ச்சி அடைந்தும் வருகிறது, ஆனால்
அதே நேரம் வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்து வருகின்றன. பள்ளிக் கட்டணங்களுக்காகவும், பிற செலவுகளுக்கும்
மற்றும் வீட்டு பராமரிப்புக்கும் மாணவர்கள் சில சமயம் ஆண்டுக்கு 10, 20, 30 அல்லது 50 ஆயிரம் டாலர்கள்
வரை கூட கடனாக வாங்க வேண்டியுள்ளது."
எனத் தெரிவித்த டேமன், அமெரிக்கா பொருளாதார மந்தநிலையை
நோக்கி செல்வதால் பொருளாதார நிலை மேலும் வீழ்ச்சியடையும் சாத்தியம் உள்ளது என குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் யுத்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது என டேமன் தெரிவித்தார்.
"இந்த
பிரச்சனைகளில் எதுவும் ஒரு தேசிய அடிப்படையிலோ அல்லது மாணவர்களின் அடிப்படையிலோ கூட தீர்க்கப்பட
முடியாததாகும். மாணவர்கள் உழைக்கும் வர்க்கத்தின் பக்கம், சர்வதேச உழைக்கும் வர்க்கத்தின் பக்கம் திரும்ப
வேண்டும், இதற்காகவே சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு போராடி வருகிறது."
என அவர் கூறினார்.
ஈரானில் இடதுசாரி மாணவர்கள் மீதானதொரு தாக்குதல் என்பது
"ஒரு சர்வதேச
நடவடிக்கையாகும்"
என ஸ்டேலென் தீவில் உள்ள வேகனர் கல்லூரியின் ஒரு புதிய மாணவியான ஜூலியா தெரிவித்தார். ஈரான் மாணவர்கள்
ஈரானிய மாணவர்களால் மட்டுமின்றி அமெரிக்க மாணவர்களின் ஒத்துழைப்பையும் பெற்றிருக்கிறார்கள் என்பதை இந்த
ஆர்ப்பாட்டம் எடுத்துக்காட்டும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலர், ஈரான் மற்றும் அமெரிக்க
தொழிலாளர்கள் சந்தித்து வரும் அரசியல் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க, பின்னர் நடந்த கூட்டத்தில் கலந்து
கொண்டனர்.
சர்வதேச மூலதனவாதத்தின் பொருளாதார நெருக்கடியால் அதிகரித்து வரும்
சர்வதேச சமூக பதட்டங்களை அமெரிக்க செனட்டிற்காக நியூயோர்க்கில் 2006ல் நிறுத்தப்பட்ட சோசலிச
சமத்துவ கட்சியின் வேட்பாளரான பில் வான் ஓகென் குறிப்பிட்டுக் காட்டினார். இது உலக முதலாளித்துவத்தின்
புறநிலை முரண்பாடாகும் என தெரிவித்த அவர், அது ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தின் வளர்ச்சிக்கு
அடிப்படையாக அமைகிறது என்று தெரிவித்தார்.
ஈரானின் வரலாறு மற்றும் இருபதாம் நூற்றாண்டில் உழைக்கும் வர்க்கத்தின்
அனுபவங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த காலகட்டம் முழுவதும், இன்று நான்காம்
அகிலத்தின் அனைத்துலக குழுவால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ட்ரொட்ஸ்கிச இயக்கமானது, அனைத்து வகையான
தேசியவாதம் மற்றும் சீர்திருத்தவாதத்திற்கு எதிராக ஒரு சர்வதேச நிலைநோக்கிற்காக போராடி இருக்கிறது.
வெனிசூலாவில் ஹூகோ சாவேசுக்கு எதிராகவும் மற்றும் இலத்தீன் அமெரிக்காவில்
அதிகாரவர்க்க தேசியவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கு எதிராகவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின்
நிலையான எதிர்ப்பு இருக்கின்றபோது, தங்களை சோசலிசவாதிகள் என குறிப்பிட்டுக் கொள்ளும் பல குழுக்கள்
அவரை புகழுவதை ஒரு பங்களிப்பாளர் குறிப்பிட்டுக் காட்டினார். ஈரானில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள்
மீதான ஒடுக்குமுறை தாக்குதலை ஈரானிய அரசாங்கம் மேற்கொண்டிருந்த போதிலும், ஈரானிய ஜனாதிபதி
மொஹ்மது அஹ்மதினிஜாத்தின் நெருங்கிய உறவுடன் சாவாசால் உருவாக்கப்பட்டது. |