WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
Professor sentenced for criticising Turkish founder
துருக்கி ஸ்தாபகரை குற்றஞ்சாட்டியமைக்காக பேராசிரியருக்கு தண்டனை வழங்கப்பட்டது
By Sinan Ikinci
31 January 2008
Use this version to
print | Send this link by email |
Email the
author
ஜனவரி 28ல், காஜி பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியர்
மற்றும் அன்காராவின் தாராளவாத சிந்தனைவாதிகள் அமைப்பின் தலைவருமான அடில்லா யாய்லாவுக்கு துருக்கி குடியரசின்
ஸ்தாபகர் முஸ்தபா கேமல் அட்டாதுருக் (Mustafa
Kemal Atatürk) இனை அவமானப்படுத்தியதற்காக, 15
மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்னாள் இஸ்மீர் நகரில் யாய்லாவால் நிகழ்த்தப்பட்ட
ஒரு உரைக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் யாய்லாவிற்கு எதிராக சிறைவாசத்தை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
எவ்வாறிருப்பினும், அடுத்த இரண்டு ஆண்டு நன்னடத்தை காலத்திற்குள் அவர் மீண்டும் அதே குற்றத்தை செய்வாரேயானால்,
இந்த தண்டனை நிறைவேற்றப்படும்.
2006, நவம்பர் 18ல், நீதி மற்றும் அபிவிருத்தி கட்சியின் உள்ளூர் கிளையால்
இஸ்மீரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசும் போது, 1925 முதல் 1945 வரை தனி ஒரு கட்சி
ஆட்சியில் இருந்த ஒரு காலகட்டத்தை (1938ல் அட்டாதுருக்கின்
மரணம் வரை முக்கியமாக அவரால் தலைமை தாங்கப்பட்டது)
யாய்லா தமது உரையில் குற்றஞ்சாட்டி பேசினார். உத்தியோகபூர்வ பிரச்சாரத்தின் மத்தியிலும் அதில் கூறப்படுவதுபோல்,
தனி ஒரு கட்சி காலகட்டமானது முற்போக்கானதாக இருக்காததுடன், அது சில விடயங்களில் பின்தங்கியும் இருந்தது
என யாய்லா குறிப்பிட்டார்.
நாளிதழ்களின் செய்திப்படி,
"அந்த உரையில்,
அட்டாதுருக்
பற்றியோ அல்லது அவரின் மரபுரிமையை பற்றியோ நான் எதுவும் பேசவில்லை.
நான் கேமாலிசம் (அட்டாதுருக்கின் காலகட்டத்தின் கருத்தியல்) பற்றியே பேசினேன். 'மத்தியகாலத்தில் இருந்து
குடியரசு நம்மை காப்பாற்றி இருப்பதாகக் கூறப்படுவது முரண்பாடாக உள்ளது'
என்றே நான் கூறினேன். மேலும் இந்த வாதத்தில் இயற்கையான
முரண்பாட்டை பொறுத்த வரை, 'எங்கு
பார்த்தாலும் ஏன் அட்டாதுருக்கின் சிலைகள் மற்றும் படங்கள் இருக்கின்றன என்று அவர்கள்
[ஐரோப்பியர்கள்]
கேட்பார்கள்'
என்று நான் தெரிவித்தேன்."
என யாய்லா நீதிமன்றத்தில் கூறினார்.
அவரின் குற்றச்சாட்டில், "இந்த
மனிதர்"
எனக் குறிப்பிட்டதன் மூலம் யாய்லா அட்டாதுருக்கின் மரபுரிமையை
வெளிப்படையாக அவமதித்ததாக எதிர்தரப்பு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார். குற்றச்சாட்டின்படி, பேராசிரியரை
பற்றி எட்டு தனித்தனி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த ஆத்திரமூட்டும் செயலுக்கு பின்னர் விரைவிலேயே, காஜி பல்கலைக்கழகம் இந்த
முரண்பாடுகளை கருத்தில் கொண்டு பேராசிரியர் யாய்லாவை வெளியேற்றியது, ஆனால் பின்னர் அவர் மீண்டும்
பதவியிலிருத்தப்பட்டார்.
அரசியல்ரீதியாக, பேராசிரியர் யாய்லா ஒரு தாராளவாதி, சோசலிசத்தின்
பக்கம் ஆழ்ந்த விரோதம் கொண்டவர் என்றும் அறியப்படுகிறார். அவர் துருக்கியில் இருந்து வெளியாகும் இஸ்லாமிய
இதழ்களுக்கு வழக்கமாக கட்டுரைகளை எழுதிவருகிறார். இதுதவிர, அவர் தீவிர தேசியவாத படைகளின்,
குறிப்பாக இராணுவம் மற்றும் தங்களின் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தை மேலும் பலவீனப்படுத்தக்
கூடிய எவ்வித அரசியல் எதிர்ப்பு உணர்வையும் நசுக்க விரும்பும் அரசின் பிற பிரிவுகளின் தாக்குதலுக்கும் உள்ளாகி
இருக்கிறார்.
யாய்லாவை பிரிதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞ்ஞர்கள் பத்திரிகைகளிடம் கூறும்
போது, அவர்கள் உடனடியாக மேல்முறையீட்டை அளிக்கவிருப்பதாக தெரிவித்தனர். யாய்லா பி.பி.சி யின் ஒரு
நேர்காணலுக்கு, தேவைப்படுமேயானால் தாம் தமது வழக்கை ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்திற்கு எடுத்துச்
செல்ல தயாராகிவிட்டதாக தெரிவித்தார்.
டிசம்பர் 6, 2006ல் இன்டர்நேஷனல் ஹெரால்டு ட்ரிபியூன் பத்திரிகையில் வெளியான
ஒரு கட்டுரையில், அவருக்கு எதிராக எவ்வாறு ஒரு பிரச்சாரம் வடிவெடுத்தது என விளக்கி இருந்தார்.
"அங்கு அந்த
கூட்டத்தில், உள்ளூர் பத்திரிகையாளர் [இஸ்மீரில்
இருந்து வெளியாகும் யெனி அசிர் பத்திரிகையாளர்]
உட்பட 37 பேர் மட்டுமே பங்கு பெற்றிருந்திருந்தனர்.
'கேமாலிசம்
சிலவகையில் பிற்போக்கானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் உங்களின் அறிவிப்பை நான் தவறாக புரிந்து
கொள்ளவில்லை அல்லவா?'
என்று அந்த பெண்மணி கேட்டார். அவர் என் கருத்தை தவறாக புரிந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தேன்,
பின்னர் இந்த பிரச்சனைகள் விரோத மனப்பான்மை இல்லாமல் நம்மால் அமைதியாக இருந்து விவாதிக்கப்பட
வேண்டும் என்று பதிலளித்தேன்."
என்று தெரிவித்தார்.
அடுத்த நாள், யெனி அசீர் அதன் முதல் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டது,
அச்செய்தி யாய்லாவை துரோகி என விமர்சித்ததுடன், அவர்
"உறுதியுடன்
அட்டாதுருக்கை
அவமானப்படுத்தினார்"
என வெளியிட்டது.
"அவமதிக்கும்
வார்த்தைகள்"
என்ற தலைப்புடன் ஒரு செய்தி அறிக்கையையும் அக்கட்டுரையுடன்
இணைக்கப்பட்டிருந்தது. "இந்த
அவமதிப்புகள்"
தொடர்பாக மெளனம் சாதிக்கும் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சியின் இஸ்மீர் கிளை தலைவர்களுக்கும் அந்த
பத்திரிகை கண்டனம் தெரிவித்தது.
பதிலுக்கு, அட்டாதுருக்
மற்றும் அவரின் காலகட்ட ஆட்சியைக் குறித்து யாய்லாவின்
கருத்துக்கள் தங்களை மிகவும் பாதித்துள்ளதாக கூறி உள்ளூர் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி தலைவர்கள் உடனடியாக
யாய்லாவிடமிருந்து தங்களை பிரித்துக் கொண்டனர். இது வெளிப்படையாக கபடத்தனமானது, ஏனென்றால்,
"மிதவாத"
மற்றும் "தீவிரவாத"
இஸ்லாமியர்கள் அட்டாதுருக்
மீது ஆழ்ந்த அதிருப்தி கொண்டிருக்கிறார்கள் என்பதில் எவ்வித இரகசியமும்
இல்லை. எவ்வாறிருப்பினும், ஒரு வேளை துருக்கிய இராணுவத்தின் தலைமையில் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம்
செய்யப்பட்டு வந்த போது, இந்த நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி தலைவர்கள் இதே வெட்கக்கேடான
சந்தர்ப்பவாத சூழ்ச்சிக்கு அடிபணிந்தனர்.
மீண்டும் ஒருமுறை, மாவோவாத கேமலிசவாத தொழிலாளர் கட்சியும் ஓர்
அழிவுண்டாக்கக் கூடிய மற்றும் வெறுப்புமிக்க செயலில் ஈடுபட்டது. யாய்லா ஒரு தேசதுரோகி என்றும், அவர்
உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் காஜி பல்கலைக்கழகத்திற்கு தொலைநகல் அனுப்பப்பட்டன.
"இடதுசாரி"
கேமலிச இளைஞர் அமைப்பு எனப் பெயரிடப்பட்ட துருக்கி இளைஞர் அமைப்பினால் (TGB)
இந்த ஆத்திரமூட்டும் செயல் ஏற்பாடு செய்யப்பட்டது என்றாலும், இந்நிகழ்வின் பின்புலத்தில் தொழிலாளர் கட்சியின்
கட்டுப்பாடு இருந்தது.
நவம்பர் 27ல், துருக்கி இளைஞர் அமைப்பின் பொது செயலாளர் ஒஸ்மான் ஜில்மாஸ்,
பொதுச்சேவையில் இருந்தும் மற்றும் கல்விப்பணியில் இருந்தும்
யாய்லாவை நீக்க வேண்டும் என்று கோரி உயர் கல்வி அமைப்பிடம் ஒரு மேல்முறையீட்டை அளித்தார். இந்த
மனுவை அளிப்பதற்கு முன்னதாக, ஜில்மாஸ்
மற்றும் துருக்கி இளைஞர் அமைப்பின் சில தலைவர்கள் ஒரு பத்திரிகை
கூட்டத்தை கூட்டி இருந்தார்கள். அதில் "அட்டாதுருக்
மற்றும் துருக்கி குடியரசுக்கு எதிராக அமெரிக்க மற்றும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையங்களிடம் பொய்ப்பிரச்சாரங்கள் மற்றும் அவதூறுகளை"
எடுத்துச் செல்வதற்காக அவர் யாய்லாவை குற்றஞ்சாட்டினார்.
அட்டாதுருக்
பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிடுவது கருத்து சுதந்திரத்தின் கீழ்
வராது என்றும் ஜில்மாஸ்
தெரிவித்தார். "அட்டாதுருக்கிற்கு
எதிராக விரோதத்தை வளர்க்கும் யாரும் கருத்து சுதந்திரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது."
என்றால் அவர்.
கடந்த ஆண்டு ஜூலை 22ன் தேசிய தேர்தலில் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி ஒரு
மிகப் பெரிய வெற்றியை அடைந்ததால் ஒரு பாரிய அடியை பெற்றிருந்த போதிலும், பேராசிரியர் யாய்லாவை
அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகள் மூலம், இஸ்லாமிய அரசாங்கத்திற்கு எதிரான துருக்கிய இராணுவத்தின்
பிரச்சாரங்கள் தொடர்வதையே தெளிவாகக் எடுத்துக்காட்டுகிறது.
கடந்த அக்டோபரில், குர்திஷ் தொழிலாளர் கட்சிக்கு (PKK)
எதிராக வடக்கு ஈராக்கில் எல்லை தாண்டிய நடவடிக்கைகளில்
இறங்க நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி அரசாங்கம் இராணுவ அதிகாரிகளுக்கு பச்சைக்கொடி காட்டியது, இதன் மூலம்
உள்ளூரில் இராணுவத்தின் கையை பலப்படுத்துகின்றது. இராணுவ அதிகாரிகளின் செல்வாக்கை நீதி மற்றும் அபிவிருத்தி
கட்சி அழித்துவிடும் என்று பேராசிரியர் யாய்லா உட்பட தாராளவாத வட்டாரங்களில் எழுப்பப்படும் நம்பிக்கைகள்
என்பது வெறும் நப்பாசையாகும் என்பதற்கு அதுவொரு வெளிப்படையான அறிகுறியாக இருந்தது.
அதுமட்டுமில்லாமல், 2001 பெப்ரவரியில் ஏற்பட்ட மோசமான நிதி நெருக்கடிக்குப்
பின்னர் சிறிது காலத்திலேயே, 2002ல் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, மொத்த
உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 6.6 சதவீதமாக இருக்கிறது. குறைவான சர்வதேச வட்டி விகிதங்களால்
நுழைந்த பெரியளவிலான மூலதன முதலீடு மற்றும் துருக்கியின் மிக உயர்ந்த வருவாய் ஆகிய இரண்டினாலும் இது சாத்தியப்பட்டது.
துருக்கியின் மிக உயர்ந்த வருவாய் என்பது உள்ளூரின் உண்மையான வட்டி விகிதம் மற்றும் அன்னிய நாணயத்தின் ஆண்டு
விலையிறக்கம் ஆகியவற்றிற்கிடையிலான வித்தியாசத்தில் இருந்து பெறப்படும் சராசரி வருவாய் ஆகும்.
ஏதோவகையில் தற்செயலாக, நீதி மற்றும் அபிவிருத்தி கட்சியின் அரசாங்கத்தின்
ஆட்சி காலம் துருக்கிக்கு ஒரு விரிவான விரும்பத்தக்க சர்வதேச பொருளாதார சூழ்நிலையுடன் ஒத்து போனது.
2002ல், நிதி சந்தைகள் 1997ல் ஏற்பட்ட ஆசிய நெருக்கடியில் இருந்தும் மீண்டெழுந்ததுடன் துருக்கி போன்ற
வளரும் நாடுகளில் சர்வதேச மூலதனம் பாயத் தொடங்கியது.
உலக மூலதன முறை ஒரு தீவிர பொருளாதார மற்றும் அரசியல் குழப்பத்தில்
நுழைந்திருந்த அந்த காலக்கட்டத்தின் போது, துருக்கிய முதலாளித்துவம் மிகவும் பாதிக்கப்பட்ட ஒன்றாக
இருந்தது. அதிகரித்த பணவீக்க விகிதத்துடன், நிரந்தரமாக விரிவாகி வந்த சேவைகளுக்கான செலுத்துமதி மற்றும்
அன்னிய வர்த்தக பற்றாக்குறையையும் அந்நாடு சுமந்து கொண்டிருந்தது.
நிச்சயமாக, நீதி மற்றும் அபிவிருத்தி கட்சிக்கு எதிராக அதன் பிரசாரத்தை மீண்டும்
தீவிரப்படுத்த இராணுவம் இந்த புதிய பொருளாதார காலத்தை ஒரு வாய்ப்பாக கருதும். ஆனால் இதற்காக
உழைக்கும் வர்க்கமும் மற்றும் மக்களின் பிற பிரிவினரும் அதிக விலை செலுத்தவேண்டி இருக்கும் என்பதுடன் மேலும்
கூடுதலாக வறுமை மற்றும் கடன் ஆகியவற்றின் அதிகரிப்பினுள் மூழ்கவேண்டியும் இருக்கும். |