ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: Attali report calls for free-market reforms
பிரான்ஸ்: தடையற்ற சந்தைச் சீர்திருத்தங்களுக்கு அட்டாலி அறிக்கை அழைப்பு விடுகிறது
By Pierre Mabut and Alex Lantier
1 February 2008
Use this
version to print | Send this link by
email |
Email the
author
மைய-இடது சோசலிஸ்ட் கட்சியின் (PS)
முக்கிய அரசியல்வாதிகளுக்கு உயர்மட்ட ஆலோசகரும் வலதுசாரி ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி நிறுவியுள்ள
ஒரு சிந்தனைக் குழுவின் தலைவருமான ஜாக் அட்டாலி ஜனவரி 23ம் தேதி பிரெஞ்சுப் பொருளாதாரத்தின்
"பொருளாதார வளர்ச்சியின் விடுதலைக்கான" ஒரு திட்டத்தை வெளியிட்டார். சார்க்கோசி அனைத்து முன்மொழிவுகளிலும்
"பிரதானமாக உள்ளதை" செயல்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
316 பரிந்துரைகளின் முக்கிய நோக்கம் பொதுச் செலவினங்களை பெரிதும் குறைத்து
காலம் செல்லச் செல்ல அரசாங்க ஊழியர்களில் மூன்றில் இரு பங்கினர் எண்ணிக்கையை குறைத்துவிடுவதும் ஆகும். அறிக்கை
கூறுகிறது: "பொதுத் துறையில் வருங்காலத்தில் பணி இருக்காது என்பதை பிரெஞ்சுக்காரர்கள் குறிப்பாக அறிந்து
கொள்ளவேண்டியது முக்கியமாகும்... அதேபோல் அப்பணிகள் இருக்கும் நிறுவனங்களிலும் அரசு உதவித் தொகையை
இனி எதிர்பார்க்க முடியாது." இந்தத் திட்டம் முதலாளிகள் சமூகச் செலவினங்களுக்கு கொடுக்கும் அளிப்பை இன்னும்
அதிகமாக குறைக்கப் பார்க்கிறது; ஐரோப்பாவிலேயே இது அதிகம் என்று கூறப்படுகிறது; இதையொட்டி பொதுச்
செலவினங்கள் நேரடியாக பாதிக்கப்படும்.
இந்த அறிக்கை, நுகர்வோர் பொருட்களின் மீது அனைத்து விலைக் கட்டுப்பாடுகளையும்
அகற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது; குறிப்பாக 1996ம் ஆண்டு
Galland விதிகள் அகற்றப்பட வேண்டும் என்று கூறுகிறது. சிறிய
வணிகர்களிடமிருந்து வாடிக்கையாளர்களை எடுத்துக் கொள்ளும் பொருட்டு பெரிய அங்காடிகள் மற்றும் பெரிய கழிவு
கொடுக்கும் சில்லறை விற்பனையாளர்கள் அடக்க விலைக்கு குறைவாக பொருட்களை விற்பனை செய்வதை தடுப்பதன்
மூலம் 1996 சட்டம் சிறு சில்லறை வணிகர்களை பாதுகாக்கிறது.
இந்த அறிக்கை தொழிற் சட்டத்தில் பெரிய மாற்றத்தை திட்டமிட்டுள்ளது;
முதலாளிகள் CDI (Contrat à Durée
Indéterminée) நியமிக்கும் தொழிலாளர்களை
மறுசீரமைப்பு, இலாபத்தை அதிகரித்தல், போட்டித் தன்மை என்ற காரணத்தைக் காட்டி பணிநீக்கம் செய்ய
அனுமதிக்கிறது. வேலையிழந்தவர்கள் ஒரு மாத காலத்திற்கு வேலை தேடும் பொருட்டு ஒரு "சம்பளம்"
கொடுக்கப்படுவர். தன்னுடைய நடவடிக்கைகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டால், வேலையின்மை இரண்டு
ஆண்டுகளில் 8ல் இருந்து 5 சதவிகிதம் குறைக்கப்பட்டுவிடும் என்றும் வறுமையில் இருக்கும் மக்களுடைய எண்ணிக்கை
ஐந்து ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துவிடும் என்றும், தற்போதைய 7 மில்லியனில் இருந்து 5 மில்லியனுக்கு
வந்துவிடும் என்றும் கூறியுள்ளார். அறிக்கையின் நோக்கம் பொதுக்கடனை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 64
சதவிகிதத்தில் இருந்து 55 ஆகக் குறைப்பது என்றும் கூறியுள்ளார்.
உயர்கல்வி பற்றியதில், அட்டாலி அறிக்கை "பல்கலைக்கழக சிறப்பு தூண்கள்" 10
-- தனியார் துறையால் 80 சதவீதம் நிதியளிக்கக்கூடிய பல்கலைக்கழகங்களின் உயரடுக்கின் குழுவிற்கு தோற்றுவிக்கப்படுவதற்கு
ஆதரவு கொடுக்கிறது". இது ஏற்கனவே சார்க்கோசியின் மந்திரிகளால் முன்மொழியப்பட்ட உயர்கல்வி மீதான
பல்கலைக் கழகத்தின் சுதந்திரம் மற்றும் பொறுப்புக்கள் (LRU)
சட்டத்தில் ஊர்ந்துவரும் தனியார்மயத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.
இது சமீபத்தில் மாணவர்களால் பெரிதும் எதிர்க்கப்பட்டது. தங்களுடைய குழந்தைகளுக்கான பள்ளியை "விருப்பத்தேர்வு"
செய்ய பெற்றோரை அனுமதிக்கும் நிதிப் பத்திரங்கள் பெற்றோருக்கு கொடுக்கப்படும். வசதிகளற்ற பகுதிகளில்
இருக்கும் பள்ளிகள், குடும்பங்கள் அவற்றிற்கு இடையே போட்டியை ஊக்குவித்தல் என்னும் பெயரில் இன்னும் மோசமான
கல்வித்தர நிலைக்கு கைவிடப்படும்.
திட்டத்தில் இருக்கும் மற்ற கருத்துக்களில் மருந்து தயாரித்தளிப்பவர்கள் மற்றும்
டாக்சி ஒட்டுனர்கள் போன்ற தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படும்; அவர்களுக்கு
இதையொட்டி கூடுதலான வணிக வாய்ப்புக்கள் அளிக்கப்படும்.
சோசலிஸ்ட் கட்சியுடன் தொடர்புள்ள பலரும் அறியப்பட்டுள்ள அறிவுஜீவிகளால்
வெளியிடப்பட்டுள்ள இத்தகைய வலதுசாரி அறிக்கை, பிரான்சின் அரசியல் நிலைமை பற்றி மிக அதிகமாகவே
கூறுகிறது. 2007 கோடை காலத்தில் சார்க்கோசி பெற்ற உயர் கருத்துக்கணிப்பு வீதத்தின் குறுகிய காலகட்டம்
பெரும்பாலும் முதலாளித்துவ செய்தி ஊடகத்தில் அவரது முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கு சீரான சாதகமான
ஆதரவு கொடுக்கப்பட்டிருந்ததன் காரணத்தினாலாகும். இந்த அரசியல் ஒத்துழைப்பு சார்க்கோசி, டொமினிக்
ஸ்ட்ரொஸ்கான், ஜாக் லோங், பேர்னார்ட் குஷ்நெர் உள்ளிட்ட பல உயர்மட்ட சோசலிஸ்ட் கட்சி நபர்களை மிக
முக்கியமான பொதுப் பதவிகளுக்கு நியமித்ததில் மிகத்தெளிவாகக் காட்டப்பட்டது.
அட்டாலியை பொறுத்தவரை மாசற்ற நடைமுறையின் நற்சான்றுகளை பெற்றவர்
ஆவார். கெளரவம் வாய்ந்த National
Administration School எனப்படும் தேசிய நிர்வாகப்
பள்ளி உட்பட்டதில் ஒரு பொருளாதார வல்லுநராகப் பயிற்றுவிக்கப்பட்டார். அங்கு சோசலிஸ்ட் கட்சியுடன்
உயர்செல்வாக்கு பெற்றிருந்த Laurent Fabius
இன் உற்ற நண்பராக இருந்தார், 1981 ல் மித்திரோன் ஜனாதிபதியான போது அவருடைய "சிறப்பு
ஆலோசகராக இருந்தார். 1982-83ல் மித்திரோனின் பொருளாதார கொள்கைகள் நிதியச் சந்தைகளில்
எதிர்ப்பை ஏற்படுத்தியபோது, அட்டாலி பற்றாக்குறை நிதியச் செலவினத்திற்கு எதிராக "பொருளாதார திடீர்
நடுக்கத்திற்கு" வெளிப்படையாக பிரச்சாரம் செய்தார்
மித்திரோனுடன் அட்டாலியின் ஒத்துழைப்பு பத்து ஆண்டுகள் நீடித்தது. 1991ம் ஆண்டு
BERD
எனப்படும் ஐரோப்பிய மீளமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கியை அட்டாலி தொடக்கினார்; அதன் நோக்கம் கிழக்கு
முகாமில் இருக்கும் பொருளாதாரத்தை தனியார் முயற்சிகளுக்கு பிரித்துக் கொடுப்பதாகும். 1993ல்
BERD -ன்
தலைமையகம் லண்டனில் நிறுவப்பட்டபோது எழுந்த ஊழலை அடுத்து அட்டாலி தனது தலைமைப் பொறுப்பை
இராஜிநாமா செய்ய நேர்ந்தது. இதன் செலவு 560 மில்லியன் பிராங்குகள் அளவில் மேலாகப் போயிற்று,
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதற்கும் கொடுத்த மொத்தக் கடன் தொகையைவிட இது அதிகமாயிற்று.
இதன்பின் 2007ல் தவறான பணங்களை பெற்றிருந்தார் என்ற கூற்றுக்களை தீர்ப்பதற்காக அட்டாலியும் இறுதியில் 1
மில்லியனுக்கும் மேலான பிராங்குகளைக் கொடுத்தார்.
அட்டாலி அறிக்கைக்கு PS
எதிர்கொண்டுள்ள விதம் சார்க்கோசியின் அரசாங்கத்திற்கு அதன் முக்கிய நபர்கள் வெளிப்படையாகக் காட்டும்
ஒத்துழைப்பினால் அது கொண்டிருக்கும் இடர்பாடுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த செகோலென் ரோயலால்
அட்டாலியின் திட்டம் பெரும் ஆதரவுடன் வரவேற்கப்பட்டுள்ளது; பிந்தையவர் முக்கிய
PS
அரசியல்வாதிகளின் வலதுசாரி நிலைப்பாட்டை ஏற்றிருந்தார். அவர் கூறிய கருத்தாவது: "இந்த அறிக்கை உரிய
இடத்தில் இருக்கும் தகுதியை உடையது. மேசையின் முன் வைக்கப்பட்டிருக்கும் முன்கருத்துக்களை ஆராயும் அறிவார்ந்த
நேர்மை நமக்கு வேண்டும். தடைகளை அகற்றவேண்டிய வகையில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதற்கு,
முயற்சிகளுக்கு தடையேதும் கூடாது என்பதில் நாம் கருத்தைக் கொண்டிருக்க வேண்டும். பிரான்சிற்கு மேலும்
சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இந்த அறிக்கை பிரான்சிற்கு உதவுவதற்கு தயாரிக்கப்பட்டுள்ளது. நானும்
பிரான்சிற்கு உதவ விரும்புகிறேன்."
மற்ற PS
அரசியல்வாதிகள் அறிக்கை பற்றிக் கூறியுள்ளது அவர்கள் வலதுசாரி அரசியலுடன் கொண்டுள்ள அடிப்படை
உடன்பாட்டை நன்கு காட்டுகிறது. Jean
Christophe Cambadelis கூறினார்: "அட்டாலி அறிக்கை
ஒரு பல்பொளுள் அங்காடி போன்றதாகும்; ஒருவர் விரும்பியது எதுவும் அதில் உள்ளது. எப்படியும், நிக்கோலோ
சார்க்கோசி, அறிக்கை கொண்டிருக்கும் பெரும்பாலான முடிவுகளின் மீது நடவடிக்கை எடுக்காதிருப்பதை
நியாயப்படுத்த நிதிய நெருக்கடியை மேற்கோள் காட்டுவதை முடிவுக்கு கொண்டு வருவார்.
மிகக் கடுமையான கண்டனம்
Laurent Fabius
இன் கூட்டாளிகள், அட்டாலியின் நண்பர் மற்றும் மித்திரோனின் கீழ் முன்னாள்
வணிக ஆதரவு நிதிமந்திரி ஆகியோரிடம் இருந்து வந்தது.
Claude Bartolone உணர்வுகளை கிளறும் வகையில்,
"நிலைமையின் தீவிரத்திற்கும் ஊதிய வெட்டுக்களுடன் சமூகப்பாதுகாப்புக்களையும் குறைக்கக் கோரும் இந்த
"தடையற்ற சந்தை விவகாரத்திற்கும்" இடையிலான வேறுபாட்டால் திடுக்கிடுவதாக" கூறினார்.
அட்டாலியின் திட்டத்திற்கு ஒப்புதல் எதிர்பார்த்தபடி
Medef என்னும்
முதலாளிகள் கூட்டமைப்பில் இருந்து வந்துள்ளது; இது "இந்த அறிக்கைக்கு ஊக்கம் கொடுக்கும் முக்கிய
கோட்பாடுகள் மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்கிறோம்: அளிப்பின் கொள்கைக்கான அவசியம், கல்வி முறையின்
பேரார்வத்துடன் கூடிய சீர்திருத்தம்; போட்டியை சிறந்த முறையில் அமைத்தல், அரசின் சீர்திருத்தம், பொதுச்
செலவை கட்டுப்டுத்துதல், (முதலாளிகளுக்கு) சமூகச் செலவின குறைப்புக்கள் ஆகியவை."
தற்போது இந்த அறிக்கையின் விதி எப்படிப் போகும் என்பது தெளிவாக இல்லை.
ஜனாதிபதி சார்க்கோசி குறைந்தது அதன் இரு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் கொடுக்கப்போவதில்லை என்று
கூறியுள்ளார். மதிப்புக் கூட்டு வரியில் (VAT)
1.2 சதவிகித அதிகரிப்பு மற்றும் CSG
மூலம் வருமானங்களில் கூடுதலான வரிகள் (இவை பொதுநலச் செலவினங்களை ஈடுகட்ட உதவும்) ஆகியவற்றிற்கு
இடமில்லை என்றார். பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன், "ஒன்று உறுதி:
VAT ஐ அதிகரிக்க
மாட்டோம். எனக்கு முன் இருக்கும் முன்னுரிமை பொதுச் செலவினங்களை குறைப்பது ஆகும்" என்று கூறியுள்ளார்.
அட்டாலியின் முன்மொழிவில் இருக்கும், பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட
பிரான்சின் இரண்டாம் நிலை பிராந்திய நிர்வாகமான டிபார்ட்மென்டுகளை அகற்ற வேண்டும் என்பதையும்
சார்க்கோசி எதிர்த்துள்ளார். அவர் டிபார்ட்மென்டுகளால் வழங்கப்பட்ட "வரலாற்று முறைமை"க்கான தேவையை
குறிப்பிட்டார்: அடிப்படையில் பொதுக் கருத்து அவருக்கு எதிராக பெருகிய முறையில் இருக்கையில் உள்ளூர் அரசாங்கத்தில்
கணிசமான மாற்றம் என்பது உடனடியாக தீவிர சர்ச்சைகளுக்கு உட்பட்டுவிடும் என்பது அவருடைய கருத்து ஆகும்.
ஆண்டு ஒன்றுக்கு 250,000 கூடுதலான புலம்பெயர்ந்தோர்களை மனித ஆற்றல் தேவைப்படும்
வேலைகளில் நிரப்புவதற்கு ஊக்குவிக்கும் அவரது அழைப்புடன், வலதுசாரி அரசாங்கக் கட்சியான
UMP உறுப்பினர்கள்
மத்தியிலும் அட்டாலி புருவங்களை உயர்த்தவைத்தார். பல துறைகளில், இழிவான குறைந்த ஊதியம் மற்றும் நிலைமைகள்
இருக்கும் கட்டுமானப் பணி, உணவு, சுகாதார பாதுகாப்புத் துறைகளில் தேவையான மலிவான கூலி உழைப்பை
வழங்குவதன் மூலம், இது பொருளாதார வளர்ச்சியை ஆண்டு ஒன்றுக்கு 0.5 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
தேசிய வழிவகைகள் முறையில் சார்க்கோசி பிரச்சாரம் நடத்தி தன்னுடைய குடியேறுபவர்கள் மற்றும் தேசிய அடையாளப்
பிரிவு மந்திரியான Brice Hortefeux
ஐ குடியேறுபவர்கள் மீது சோதனை, வெளியேற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு முக்கிய குவிப்பு உடைய
கொள்கை என்றவிதத்தில் ஈடுபடச் செய்திருந்தார்; இத்தகைய கொள்கையை வெளிப்படையாக சார்க்கோசி ஏற்றல்
சந்தேகத்திற்கிடமின்றி அரசியல்ரீதியாக சிக்கல்களை ஏற்படுத்தும்.
ஆனால், அடிப்படை அரசியல் பிரச்சினைகளில் அரசாங்கத்தில் இருக்கும்
UMP நபர்களுக்கும்
அட்டாலி போன்ற PS
நபர்களுக்கும் இடையே கொள்கையளவிலான வேறுபாடு ஏதும் இல்லை; பிந்தையவர் பிரெஞ்சு மக்கள் மீது அரசியலில்
செல்வாக்கற்ற நடவடிக்கைகளை சுமத்துவதில் இணைந்து உள்ளார். அட்டாலி அறிக்கையை பற்றி விவாதித்திருந்த
பைனான்சியல் டைம்ஸ் பேட்டி ஒன்றில் பிய்யோன் கூறினார்: "பிரெஞ்சு மக்களுக்கு ஒரு நிகழ்வு நடந்தாலே
தேர்தல்கள் முடிவை மாற்றுவதற்குப் போதும். அவையெல்லாம் ஒரு பொருட்டல்ல. ஆனால் இங்கு முக்கியமானது
என்னவென்றால் பலவற்றை மாற்றுவதற்கு உறுதி கொண்டுள்ள ஜனாதிபதியை நாங்கள் பெற்றுள்ளோம். மற்றவையெல்லாம்
வெறும் நிகழ்வுக் குறிப்புக்கள்தான்." |