World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Threat of US recession panics global stock markets

அமெரிக்கப் பொருளாதார மந்தநிலை உலகப்பங்குச் சந்தைகளை பீதி அடையச் செய்கிறது

By Andre Damon
22 January 2008

Back to screen version

உலகம் முழுவதும் திங்களன்று பங்குச் சந்தைகள் அமெரிக்க மந்த நிலை பற்றிய கவலைகள் அதிகரித்ததை அடுத்து பெரிதும் சரிந்தன. கடந்த வாரத்தில் அமெரிக்க நிதியச் சந்தைகள் 2002ல் இருந்து மிக மோசமான சரிவைக் கண்டன; Dow Jones Industrail Average 5 சதவிகித வீழ்ச்சியை கண்டபோது, பல ஆசிய, ஐரோப்பிய சந்தைக் குறியீடுகள் ஒரே நாளில் இத்தகைய விகித வீழ்ச்சியை எதிர்கொண்டன. செப்டம்பர் 11, 2001க்கு பின்னர் உலகப் பங்குச் சந்தைகளில் ஒரே நாளில் இவ்வளவு சரிவு ஏற்பட்டதில்லை. நிதியப் பங்குகளுடன் தொழில்துறை பங்குகளும் சரிந்தமை இதுவரை முக்கியமாக வங்கி, அடைமானப் பிரிவுகளுடன் மட்டும் நின்றிருந்த அமெரிக்க கடன் நெருக்கடி, இப்பொழுது உலகம் முழுவதும் உள்ள உண்மைப் பொருளாதாரத்திலும் படரத் தொடங்கிவிட்டது என்பதை காட்டுகிறது.

மும்பை பங்குச் சந்தைகளின் உணர் குறியீடு மிக அதிகமாக 7.4 சதவிகிதம் சரிந்த வகையில் இந்தியா மிகவும் கடினமாக பாதிக்கப்பட்டது; கடந்த இரு வாரங்களாக இந்திய பங்குச் சந்தை ஒப்புமையில் ஓரளவு நன்கு செயல்பட்டிருந்தபோதிலும் இந்நிலை ஏற்பட்டது. சில ஆய்வாளர்கள் அமெரிக்க பொருளாதாரப் பிரச்சினைகளை பொருட்படுத்தாமல் எதிர்த்து நிற்கக் கூடும் என்ற முடிவிற்கு வந்துள்ளனர்; ஆனால் இந்தக் கருத்து திங்களன்று பங்குகள் பெரும் சரிவிற்கு உட்பட்டவுடன் நம்பகத் தன்மையை இழந்துவிட்டது.

இதேபோல், எழுச்சியடைந்து கொண்டிருக்கும் சந்தைகளில் மற்றொரு முக்கிய சந்தை எனக் கருதப்படும் பிரேசிலின் பொவெஸ்பா குறியீடு, 6.6 சதவிகித சரிவை சந்தித்தது. இது ஆண்டு தொடக்கத்தில் இருந்து 20 சதவிகித வீழ்ச்சியை காட்டுகிறது.

"அமெரிக்க ஒரு மந்த நிலையை எதிர்கொள்ள இருக்கிறது என்ற முன்கருத்து பரந்து விளங்குகிறது" என்று Sao Paulo வை தளமாகக் கொண்டுள்ள Banco Votorantim என்னும் பிரேசிலின் மிகப் பெரிய பன்முகத் தொழிற்துறை குழுவின் ஒரு பிரிவான பங்குச் சந்தை பிரிவின் தலைவர் Luiz Sedrani, புளூம்பேர்க் செய்தி அமைப்பிடம் கூறினார். "அமெரிக்காவில் மந்த நிலை என்பது பொருட்களின் தேவையை குறைக்கும் என்பதால் பிரேசில் பாதிப்பிற்கு உட்படும்; அந்நாட்டிற்குத்தான் எமது ஏற்றுமதியின் பெரும்பகுதி செல்லுகிறது." என்றார் அவர்.

ஹாங்காங் மற்றும் சீனாவிலுள்ள முக்கிய பங்குச் சந்தை குறியீடுகளும் கணிசமாகக் குறைந்தன. ஹாங்காங்கில் முக்கிய ஹாங் செங் குறியீடு 5.5 சதவிகிதம் சரிந்தது; சீன அளவான ஷாங்காய் இணைப்புக் குறியீடு 5.14 சதவிகிதம் சரிந்தது; ஒப்புமையில் சீன பங்குச் சந்தை ஓரளவு வெளியாதிக்கமற்ற சூழ்நிலையில் செயல்படுகிறது என்றாலும் நிலைமை இப்படித்தான் இருந்தது. நாட்டின் முக்கிய நிதிய அமைப்புக்களில் ஒன்றான Bank of China அமெரிக்க அடைமானத் தொடர்புடைய பத்திரங்களில் ஏற்பட்டுள்ள இழப்புக்களை எதிர்பார்த்ததைவிடக் கூடுதலான முறையில் நஷ்டக் கணக்கில் எழுதிவிட போவதாக அறிவித்துள்ளது.

டோக்கியோ நிக்கேய் 225 குறியீடு கிட்டத்தட்ட 4 சதவிகிதம் அதன் மதிப்பை திங்களன்று இழந்தது; புது ஆண்டு தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 13 சதவிகிதத்தை இழந்துள்ளது. திங்களன்று சந்தை மூடப்பட்ட போது மதிப்பு இரண்டு ஆண்டுகளில் இல்லாத சரிவு நிலையில் நின்றது. ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து டொவ் ஜோன்ஸ் குறியீடு 8.9 சதவிகிதச் சரிவை சந்தித்துள்ளது. ஒப்புமையில் ஆஸ்திரேலியா, ஹாங்காங், இந்தியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் தென் கொரியாவில் உள்ள குறியீடுகள் இதே காலத்தில் 10 சதவிகிதத்திற்கும் மேல் சரிந்துள்ளன. சிங்கப்பூரின் முக்கிய குறியீடு திங்கள் மட்டும் 6 சதவிகிதம் சரிந்தது.

அமெரிக்க நுகர்வோர் செலவினக் குறைவினால் ஏற்படக்கூடிய ஏற்றுமதி பாதிப்புக்கள் தவிர ஆசியப் பொருளாதாரங்கள் தங்கள் சொந்தப் பிரச்சினைகளை கொண்டுள்ளன. சில ஆய்வாளர்கள் ஆசிய மத்திய வங்கிகள், குறிப்பாக சீனாவிலும் தைவானிலும் இருப்பவை, இப்பொழுது எதிர்மறை வளர்ச்சியின் ஆபத்துக்களை விட பணவீக்கம் பற்றிய கவலையை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பிய குறியீடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. Frankfurt Xetra Dax, 7.2 சதவிகிதம் குறைந்தது; பாரிஸ் CAC-40, 6.8 சதவிகிதம் சரிந்தது. லண்டன் FTSE 100, 1983ல் அது தொடக்கப்பட்டதில் இருந்து மிக அதிகமான வகையில் அதன் மதிப்பில் 5.5 சதவிகிதத்தை இழந்தது. ஸ்பெயினின் பங்குச் சந்தையும் 7 சதவிகிதத்திற்கும் மேலாகச் சரிந்தது; இது 1991ல் இருந்து அது கண்டிராத சரிவு ஆகும். பங்குச் சந்தை குறியீடுகள் சரிந்ததை தொடர்ந்து பாதுகாப்பை நோக்கிய நகருதல் ஏற்பட்டது; முதலீட்டாளர்கள் அரசாங்கப் பத்திரங்களை நாட முற்பட்டனர். ஜேர்மனிய மற்றும் இங்கிலாந்து அரச பத்திரங்களின் மதிப்பும் தீவிரமாகக் குறைந்தன.

இத்தகைய விரைவான விற்பனைகள் ஓரளவிற்கு நிதியப் பிரிவின் இழப்புக்களால் உந்ததுதல் பெற்றன; பல வங்கி, பத்திர காப்பீட்டுப் பங்குகள் அமெரிக்க குறைந்த பிணையுள்ள கடன் தொற்றினால் ஏற்பட்டுள்ள கூடுதலான கடனை நஷ்டக் கணக்கில் எழுதிவிடும் என்ற அச்சத்தால் இந்த நிலை ஏற்பட்டது. ஜேர்மனியின் Commerz bank பங்குகள் 6.7 சதவிகிதம் குறைந்தன; இதற்குக் காரணம் அதன் தலைமை நிர்வாகி 2007 நான்காம் காலண்டுப் பகுதியில் கூடுதலான கடன் நஷ்டக் கணக்குகளை காட்டும் என்ற அறிவித்து, இன்னும் நஷ்டக் கணக்குகள் காட்டப்படும் என்று கூறியதை அடுத்து இந்த நிலை ஏற்பட்டது.

பிரான்சின் Societe Generale இன்னும் கூடுதலான, வலுவான வகையில் கூடுதல் நஷ்டக் கணக்கு தெரியவந்ததும் பாதிப்பிற்கு உட்பட்டது; வங்கியின் பங்கு மதிப்பு வெள்ளியன்று 8 சதவிகிதம் சரிந்தது; திங்களன்று இன்னும் கூடுதலான 7.3 சரிவு ஏற்பட்டது. ஸ்விட்சர்லாந்தின் UBS, ஏற்கனவே $13.7 பில்லியன் கடனுக்காக தள்ளுபடி செய்த நிலையில், வெள்ளியன்று தன்னுடைய மதிப்பில் 4.7 சதவிகிதத்தைக் கண்டது. அமெரிக்க பங்குச் சந்தை திங்களன்று மூடப்பட்டிருந்தது; ஆனால் செவ்வாயன்று மீண்டும் திறக்கப்படும்போது எதிர்மறை விளைவைக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பங்குக் குறியீடுகளுடன் பிணைக்கப்பட்டுள்ள விற்பனைத்திகதி நிர்ணயிக்கப்பட்ட பங்குகள் (Futures) தீவிர சரிவைக் கண்டன.

ஐரோப்பிய காப்பீட்டு நிதி அமைப்புக்களும் பெரும் இழப்பு அடைந்தவைகளில் ஒன்றாயின; முதலீட்டாளர்கள் பத்திரம் மற்றும் பிற கடன் காப்பீடுகள் தள்ளுபடி மொத்தத் தொகையின் பாதிப்பால் இன்னும் ஆபத்திற்கு உட்படக்கூடும் என்ற கவலை கொண்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. Fitch Ratings இரண்டாவது பெரிய பத்திரக் காப்பீட்டு அமைப்பான Ambac உடைய மதிப்புத் தரத்தை வெள்ளியன்று குறைத்தது; இது திங்கள் பீதிக்கு ஓரளவு உந்துதலை கொடுத்தது.

ஐரோப்பிய, ஆசிய வங்கிகள் அமெரிக்க குறைந்த பிணையுள்ள கடனை அடிப்படையாக கொண்டுள்ள பாதுகாப்புக்களில் கணிசமான அளவை முதலீடு செய்துள்ளன; இவற்றில் பலவும் பயனற்றவை என நஷ்டக் கணக்கில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இன்னும் கூடுதலான கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்யக்கூடும், அமெரிக்க வீடுகள் சந்தை தொடர்ந்து மதிப்பிழந்து கட்டாய ஏலத்திற்கு உந்தப்படுவதால் இந்நிலை தொடரும் என்ற முதலீட்டாளர்களின் அச்சத்தினால் இந்த நிலை உருவாகியுள்ளது. குறைந்த பிணையுள்ள பாதுகாப்புப் பத்திரங்களுக்கு ஆதரவு கொடுத்து வந்த காப்பீட்டு நிதிய நிறுவனங்களும் சரிவைச் சந்தித்தன; ஏனெனில் முதலீட்டாளர்கள் வங்கிகள் அறிவிக்கும் கூடுதலான நஷ்டக் கணக்கை ஒட்டி நஷ்டங்கள் சரிசெய்யப்பட முடியாதவை என்ற முடிவில் இருப்பதால் இக்கருத்து நிலவுகிறது.

ஒரு நீண்ட காலப் பார்வையில், அமெரிக்காவில் மந்தநிலை, ஏற்றுமதியை முக்கியமாக கொண்டிருக்கும் மற்றும் அமெரிக்காவில் நுகர்வோர் தேவையை சார்ந்துள்ள (குறிப்பாக சீனாவில்) பொருளாதாரத்தில் பேரழிவைத் தரக்கூடிய பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் மந்த நிலையின் வருங்காலம் மத்திய வங்கி கட்டுப்பாட்டுக் குழுவை இன்னமும் கூடுதலான குறைப்புக்களை வட்டி விகிதத்தில் செய்யக் கூடும் என்பதால் இந்த நிலை உள்ளது; இதனால் அமெரிக்க மாற்று விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது; அதையொட்டி டாலர்களில் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும் ஆசிய இருப்புக்களின் மதிப்பும் குறைகின்றன.

உலக பங்குச் சந்தைகளில் மிகப் பெரிய சரிவு என்பது கடந்த வெள்ளியன்று புஷ் நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்டுள்ள ஊக்குவிப்பு நிதியத் தொகுப்பின் முற்றிலும் போதாத தன்மையைத்தான் காட்டுகிறது. இத்தொகுப்பு $145 பில்லியன்களுக்கு என்று மதிப்பிடப்பட்டாலும், அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிகிதம் என்றாலும், பெரும்பாலும் வரி செலுத்துபவர்களுக்கு ஒரே ஒரு முறை பணமாக சலுகையைப் பெறும் வகையில் இருக்கும்; இத்துடன் புதிய பெருநிறுவன வரிக் குறைப்புக்களும் இருக்கும்.

விஷயங்களை தக்க முன்னோக்கில் காண்பதற்கு, அமெரிக்க வீடுகளின் கடன்கள் இப்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 100 சதவிகிதத்தைவிட அதிகமாக உள்ளன. இது 2003ல் இருந்த 80 சதவிகிதத்தில் இருந்து உயர்ந்து விட்டது. நுகர்வோர்களிடம் இருக்கும் தற்போதைய கடன்குவிப்பை பார்க்கையில், ஊக்குவிப்பு தொகை அமெரிக்க வீடுகள் சேகரித்துள்ள மொத்த கடனில் ஒரு மிகச் சிறிய வீக்கத்தான் கொடுக்கும்; நுகர்வோர் செலவினங்களிலும், வீடுகளின் கட்டாய ஏலத்திலும் அதிக பாதிப்பைக் ஏற்படுத்தாது.

திங்களன்று பைனான்சியில் டைம்ஸின் கருத்துப் பக்கங்கள் இத்தகைய விற்பனைக்கான காரணத்தை விளக்குவதாக உள்ளன. "ஒரு வரி உந்துதல் மட்டுப்படுத்தப்பட்ட உதவியை வழங்குகின்றது" என்ற தலைப்பில் கிளைவ் குக் அமெரிக்க கூட்டாட்சி அரசாங்கத்தால் புகுத்தப்படும் பணம் நுகர்வோர் செலவினங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறுகிறார்; இதற்குக் காரணம் நுகர்வோர் மிக அதிக அளவு கடனைச் சேகரித்துள்ளனர். மேலும், "பொருளாதாரத்தின்மீது இருக்கும் நம்பிக்கை வீழ்ச்சியடைய தொடங்கிவிட்டது; சில மதிப்பீடுகளின்படி வீடுகளின் விலைகள் சரிசெய்யப்படுவதில் மூன்றில் ஒரு பங்கு என்ற நிலைதான் உள்ளது; கடன் நெருக்கடியின் முடிவு என்பது கண்ணிற்குப் புலப்படவில்லை." "தவிர்க்கமுடியாத நிதிய ஊக்கம் ஒரு புறம் இருந்தாலும், அமெரிக்க பொருளாதாரத்தை உறுதிபடுத்துவதற்கான பெரும் முயற்சிகள் அமெரிக்க மத்திய வங்கியால் மேற்கொள்ளப்படும்" என்று கட்டுரை முடிவுரையாக கூறியுள்ளது.

Wolfgang Munchau என்னும் மற்றொரு பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டிவிகித வெட்டுக்கள் உண்மையான பொருளாதாரத்தில் மிகக் குறைவான பாதிப்பைத்தான் கொள்ளும் என்று வாதிட்டுள்ளார். "2001ல் இருந்தது போன்ற மந்தநிலைகளும் உள்ளன; இவை நிதியக் கொள்கை ஊக்கத்தால் சாதகமான விளைவுகளை எதிர்கொண்டவையாக இருந்தன. ஆனால் அனைத்தும் அவ்வாறு இருப்பதில்லை. இப்பொழுது வந்துள்ள மந்தம் அது போன்ற தன்மையைப் பெற்றுள்ளது." எதிர்வரவிருக்கும் கீழ்நோக்குச் சரிவை "2008 மந்த நிலை" என்று Munchau குறித்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும்; ஏனெனில் இந்த மந்தநிலை தவிர்க்க முடியாதது, அல்லது ஏற்கனவே தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அவர் தொடர்ந்து எழுதுவதாவது: "எவரேனும் மத்திய வங்கி இந்தப் புயலில் அகப்பட்டுக்க கொண்டிருக்கும் நிரபராதியான மக்களுடைய நலன்களுக்காக வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று எவர் கூறினாலும் அதனால் ஏமாந்து விடாதீர்கள். வங்கி கூட்டமைப்பு ஹெலிகாப்டர் மூலம் கொட்டும் பண மழையினால் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நலன் பெறுபவர்கள் வங்கிகளா இருக்குமே அன்றி மக்களோ, நிறுவனங்களோ அல்ல."

கட்டுரையாளர்கள் திட்டமிடப்பட்டுள்ள நிதிய ஊக்க தொகை பற்றியோ மத்திய வங்கி வட்டிவிகிதக் குறைப்புக்களுக்கு எதிராக வலுவாக எழுதினாலும்கூட, அவர்கள் நம்பிக்கையுடைய மாற்றீடு ஏதும் கொடுக்கவில்லை. மொத்தத்தில் உணரப்படும் கருத்து உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைதல் என்பது உலக முதலாளித்துவ முறையின் தீர்க்க முடியாத நெருக்கடியின் அடையாளம் என்பதும், அது அமெரிக்காவில் குறைந்த பிணையுள்ள அடைமான ஊகச்சந்தை குமிழ் வெடிப்பில் இருந்து வெளிப்பட்டுள்ளது என்பதும் ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved