:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Once again, the fundamental questions in the writers'
strike
எழுத்தாளர்கள் வேலைநிறுத்தத்தில் மீண்டும் அடிப்படை பிரச்சினைகள்
By David Walsh and Dan Conway
30 January 2008
Use this
version to print | Send this link by
email |
Email the
author
எழுத்தாளர் சங்கத்திற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடுட்டள்ளவர்களுக்கும் (WGA)
முக்கிய படப்பிடிப்பு நிலையங்கள், வலைப்பின்னல்களுக்கும் இடைய
முறைசாரா வகையில் தொடரும் பேச்சு வார்த்தைகள் நகரும் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின்
உடன்பாட்டில் (AMPTP)
ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சி எழுத்தாளர்களின் வேலைநிறுத்தம் இப்பொழுது
13வது வாரமாக நடைபெறுகிறது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பொழுது போக்குத் துறை மற்றும் பொதுமக்களின்
பரந்த பிரிவு ஆகியவற்றினுள்ளே பரவலான ஆதரவைத் தொடர்ந்து பெற்று வருகின்றனர். ஜனவரி மாத நடுவில்,
ஒரு புதிய முன்னணி ஆலோசனை நிறுவனமான
Interpret LLC யால் நடத்தப்பட்ட, கருத்துக் கணிப்பு
ஒன்று அமெரிக்க மக்களில் வேலைநிறுத்தம் பற்றித் தெரிந்தவர்கள், அதன் சரி, தவறுகள் பற்றித் தெரிந்தவர்களில்
7 சதவிகிதத்தினர்தான் பொழுதுபோக்குத் துறை நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர் என்று கண்டுபிடித்துள்ளது.
இவ்வாண்டின் பிற்பகுதியில் நிறுவனங்களுடன் தங்களுடைய சொந்த போராட்டத்தை எதிர்கொள்ள
இருக்கும் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்கள் தொடர்ந்து அதிக அளவில் எழுத்தாளர்களுக்கு ஆதரவைக்
கொடுத்து வருகின்றனர்; அக்காடமி பரிசளிப்பு விழா (Academy
Awards) நிகழ்ச்சிகள் நடக்குமா என்பது சந்தேகத்தில்தான்
உள்ளது. SAG
எனப்படும் திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பரிசளிக்கும் விழாவில் முன்னணி நடிகர்கள் தங்கள்
ஒற்றுமையைத் தெளிவாக்கினர்.
தற்போதைய முறைசாரா பேச்சுக்களைப் பற்றி வதந்திகள் ஏராளமாக வந்துள்ளன.
இந்த இரகசியம் முதலாளிகளுக்குத்தான் உதவியாக உள்ளது. ஹாலிவுட் நிர்வாகிகளுக்கு பல தசாப்தங்கள்
திரைப்பட, தொலைக்காட்சி தொழிலாளர்களின் முறைமையான கோரிக்கைகளை எதிர்த்து விரட்டியடித்து விடும்
அனுபவம் உண்டு. அவர்கள் பலவிதமான தந்திர உத்திகளை --மிரட்டுதல், பாராட்டுதல், தள்ளிப்போடுதல்,
"பிரிவினையைக் கையாண்டு வெற்றிபெறுதல்", கம்யூனிசத்தை சாடுதல், இறுதியில் மிருகத்தனமான வலிமையைப்
பயன்படுத்துதல்-- பயன்படுத்துவர். போராட்டம் தொழிற்சங்க பேச்சுவார்த்தைகள் என்ற ஒரு குறுகிய,
வறட்டுத்தனமான தளத்தில் மட்டும் நிற்கும்போது, படப்பிடிப்பு நிலையங்களும் வலைப்பினல்களும் எப்பொழுதும்
தாக்குதலில்தான் ஈடுபடும்.
சமீபத்திய தற்காலிக உடன்பாடு
AMPTP மற்றும்
DGA
எனப்படும் இயக்குனர்கள் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்டதானது, எழுத்தாளர்கள் ஒரு கருமித்தனமான
உடன்பாட்டை ஏற்பதற்காக அச்சத்தால் முண்டியடித்துக்கொண்டு ஓட வைக்கும் நோக்கத்துடன் செய்தி ஊடகத்தில்
மும்முரமான பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கான அடையாளமாகி உள்ளது.
டிசம்பர் மாதம் பேச்சுவார்த்தைகள் முறிவதற்கு முன்பு, பெருநிறுவனங்கள்
எழுத்தாளர்களுக்கு ஆண்டு ஒன்றிற்கு $250 ஓராண்டு காலத்திற்கு இணையதளத்தில் ஒரு மணி நேர தொலைக்காட்சி
நிகழ்ச்சியைக் காட்டுவதற்கு ஊதியமாகக் கொடுக்க முன்வந்தனர். நிறுவனங்கள் எச்சத் தொகையின் ஆரம்ப 17
நாட்கள் இலவசமாக வழங்குவதுடன், DGA
தலைமை ஓராண்டு காட்சிக்கு $1,200 என்பதை ஒப்புக் கொண்டது .
SAG சங்க நிர்வாக உறுப்பினரான
Justine Bateman
யுனைட்டெட் ஹாலிவுட்டில் ஒரு கருத்தைக் கூறுகையில் படப்பிடப்பு நிலையங்களும் வலைப்பின்னல்களும் எச்சங்கள்
பற்றியதை சக்திமிக்கவகையில் அகற்றுவதற்கு முயல்வதாகச் சுட்டிக் காட்டினார். இப்பெண்மணி, "DGA
தொலைக்காட்சிக்கு அதன் உடன்பாட்டில் இதைச் செய்கிறது. ஆண்டு முழுவதுமான தொலைக்காட்சி எச்ச மதிப்பிற்கு
ஒரே ஒரு முறை $1,200 க்கு விற்கத் தயாரா?" என்று வாதிட்டுள்ளார்.
"தற்பொழுது எழுத்தாளர்கள், இயக்குனர்கள் இரு பிரிவினரும் கிட்டத்தட்ட
$20,000 முதல் முக்கிய நேரத்திற்கு ஒரு மணி நேர நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பிற்கு பெறுகின்றனர். எச்ச
ஊதியம் படிப்படியாக குறைந்து பின்னர் வரும் பணங்கள் குறைந்து போகும் (அதுவும் எழுத்தாளர் அல்லது
இயக்குனருக்கு, அதிருஷ்டவசமாக அவை அதிகமாக மீண்டும் ஒளிபரப்பப்பட்டால்). எனவே இயக்குனர்களின்
உடன்பாடு முதல் தடவை முக்கிய நேர எச்சத்தில் 97 சதவிகிதத்தை விட்டுக் கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளது;
பெருநிறுவனங்கள் கால வரையற்று ஆண்டு முழுவதும் கணக்கிலடங்கா வகையில் மீண்டும் நிகழ்ச்சிகளைக் காட்ட
முடியும்."
"DGA திட்டமான
streaming
என்பதற்கு ஒப்புதலளிக்கப்பட்டால், வலைப்பின்னல்கள் ஒரு விரைவு வழியில் ஒரு பொழுதும் எங்கள் படைப்புக்களை
தொலைக்காட்சியில் காட்டமாட்டார்கள்."
இந்தப் புள்ளி விவரங்கள் வருமானத்தில் பின்னடைவு எத்தன்மையை கொண்டுள்ளது
என்பதையும் பெருநிறுவனங்கள் சுமத்த முடிவு எடுத்துள்ள நிபந்தனைகளையும் தெரிவிக்கின்றன. எழுத்தாளர்களை
நசுக்கும் வகையில் உலக நிதியச் சந்தைகள் மற்றும் செய்தி ஊடகம் மற்றும் குடியரசு, ஜனநாயகக் கட்சி
இரண்டையும் சேர்ந்த அரசியல் நடைமுறையின் ஆதரவுபெற்ற பெரும் முதலீட்டாளர்களின் கோரிக்கை உள்ளது.
அமெரிக்க ஆளும் உயரடுக்கு கடந்த மூன்று தசாப்தங்களில் மிகப் பெரிய அளவிற்கு
தன்னுடைய வருமானத்தை, தொழிலாளர்களின் நலன்களை அழித்தல், ஊதியத்தைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம்,
பெருக்கிக் கொண்டுள்ளது. தேசியப் பொருளாதாரத்தை அது கொள்ளையடித்து பரந்த செல்வத்தை தனக்கே
உழைக்கும் மக்களின் இழப்பில் தேடிக் குவித்துள்ளது. பொருளாதார சரிவு பெருகிய முறையில் ஏற்பட்டுள்ள
நிலையில், சக்தி வாய்ந்த பெருவணிக நலன்கள் ஊதியங்கள், நிலைமைகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்துவதை
சிறிதும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை; அவர்கள் கண்ணோட்டம் இப்படித்தான் உள்ளது. பிற
தொழிலாளர்களும் நன்கு உணரக்கூடிய வகையில் எழுத்தாளர்களுக்கு கட்டாயம் பாடம் புகட்டப்பட வேண்டும், அது
முன்னுதாரணம் போல் இருக்கும் என்று இந்த நலன்கள் வாதிடுகின்றன.
மேலும் எழுத்தாளர்களை பொறுத்த வரையில், ஒரு பண்பாட்டு, சிந்தனைப் போக்கு
பிரச்சினையும் இதில் அடங்கியுள்ளது. பெருநிறுவனங்கள் ஒரு ஒடுக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட "திறைமை"க்
குவியலை விரும்புகின்றனர்; இது அவர்கள் விதிக்கு இணங்கி நடக்க வேண்டும், அமெரிக்க சமூக வாழ்க்கையை பற்றி
உளைச்சல் தரும் பிரச்சினைகளை எழுப்பக் கூடாது என்றும் விரும்புகிறது.
ஜனநாயகக் கட்சி, புஷ் நிர்வாகத்தில் இருக்கும் அதன் சரிநிகர் கட்சியைப்
போலவே, உலகச் சந்தையில் அமெரிக்கா "போட்டித் தன்மையை" தக்க வைத்துக் கொள்வது எனும் பெயரில்
குறைந்த ஊதியம் மற்றும் குறைந்த நலன்களை மட்டும் பேணுவதற்கு அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.
ஹாலிவுட் அதிகாரப்படிநிலை பிரிவு ஜனநாயகக் கட்சியினருக்கு பல மில்லியன்
டாலர்களுக்கும் மேலான நிதியை அளிக்கிறது. கட்சியின் பல ஜனாதிபதி வேட்பில் நம்பிக்கையுடையவர்களும் பல
மாதங்களுக்கு முன்பே பெயரளவிற்கு ஆதரவு அறிக்கையை வெளியிட்டனர்; ஆனால்
AMPTP யின்
சார்பில் கிளின்டனுக்கு விருப்பமான பொது உறவுகள் நிறுவனமான
Fabiani & Lehane
ன் நடவடிக்கைகளும், கலிபோர்னியாவின் தொழிலாளர் கூட்டமைப்பு
மெளனமாக இருப்பதும் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அவர்களுடைய தொழிற்சங்க அதிகாரத்துவ கூட்டாளிகளின்
உண்மையான உளப்போக்கைக் குறிக்கின்றன: அதாவது எழுத்தாளர்களிடம் விரோத மனப்பான்மை மற்றும்
அவர்களுடைய போராட்டம், அதுவும் ஒரு தேர்தல் ஆண்டில், சமூகத்தில் இருக்கும் நிலைமையை பிரதிநிதித்துவம்
செய்யும் அச்சுறுத்தலைக் காட்டும் வகையில் உள்ளது என்று கருதுகின்றனர்.
ஒரு கெளரவமான பொருளாதார மற்றும் படைப்பாற்றலுக்கு உகந்த நிலைமைகளைப்
பெற வேண்டும் என்னும் எழுத்தாளர்களின் முயற்சி அவர்களை இத்தகைய சமூக சக்திகளின் தொகுப்புடன் மோதல்
பாதையில் தள்ளியுள்ளது. அமெரிக்க முதலாளித்துவத்திற்குள் இது ஒரு அரசியல், சமூகப் போராட்டம் ஆகும்.
எழுத்தாளர்கள் ஒன்றும் பொழுது போக்குத் துறையை முற்றிலும் மாற்றியமைக்கும்
பணியில் ஈடுபடப் போவதில்லை; ஆயினும்கூட அவர்கள் அப்பணியை முழு நனவுடன் செய்யாமல் நலன்களைப் பெற
இயலாது. உலக நிதிய முறையில் படிப்படியாய் வெளிப்படும் பிரச்சினைகளை கணக்கில் எடுக்காமல் மற்றும்
உலகெங்கிலும் நடக்கும் தொழிலாளர்கள் போராட்டம் ஆகியவற்றில் இருந்து விலகி தங்களுடைய வாழ்க்கை
நிலைமையை உயர்த்திக் கொள்ளலாம் என்று எழுத்தாளர்கள் நம்புவது ஒரு தீவிரப் பிழையாகிவிடும்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அமைப்புக்களை உரிமையாக்கி கொண்டு
அவற்றை நடத்தும் ஏகபோக நிறுவனங்களுக்கு எதிரான போராட்ட வழிவகையில், சமூகம், வரலாறு பற்றிய
தங்கள் புரிதலை ஆழப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்பதை எழுத்தாளர்கள் அறிந்து கொள்ள
வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்; மேலும் அவர்கள் தங்கள் கலையை இன்னும் திறனாய்ந்த
வகையில், கூரிய நுட்பத்தின் திக்கில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் விழைகிறோம். கம்யூனிச எதிர்ப்பு
தப்பெண்ணங்கள் கைவிடப்பட வேண்டும்; உண்மையான புரட்சிகர சோசலிச மரபு, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில்
பிரதிபலிக்கப்படுவது தீவிரமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
வேலை நிறுத்தத்தில் பொதிந்துள்ள பரந்த பிரச்சினைகளை பரிசீலிக்குமாறு
எழுத்தாளர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளுகிறோம்.
வேலை நிறுத்தம் செய்து கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளருடன் உரையாடல்:
ஜனவரி 24ம் தேதி ஒரு
WSWS நிருபர் கலிபோர்னியா, பர்பாங்கில் இருக்கும் வார்னர்
பிரதர்ஸ் படப்பிடப்பு நிலையத்திற்கு வெளியே இருக்கும் வேலைநிறுத்தம் செய்பவர்களிடம் பேசினார். மூத்த
எழுத்தாளர்-தயாரிப்பாளரான Paul Barber
(Andromeda, X Files, Nash Bridges புகழ்)
தற்போதைய நிலைமை பற்றி தன்னுடைய கருத்துக்களை தெரிவித்தார்.
WSWS: AMPTP, அமெரிக்க
இயக்குனர் சங்கத்துடன் செய்து கொண்டுள்ள உடன்பாடு பற்றி உங்கள் கருத்து என்ன?
Paul Barber: நாங்கள் இந்த
உடன்பாட்டின் விவரங்களை முழுமையாக பார்க்கவில்லை. இப்பொழுது செய்தி ஊடகத்தில் வந்துள்ள தகவல்களை
மட்டுமே பார்த்திருக்கிறோம். எங்களிடம் இருக்கும் தகவல்படி, இது நல்ல உடன்படிக்கையல்ல என்பதை
அறிகிறோம். சிலர் எதையோ மறைக்கிறார்கள் என்றால் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மறைத்துக்கொள்ள
ஊக்குவிக்கும் அதிகாரத்தளத்தில் உள்ளனர் என்றுதான் நான் எப்பொழுதும் அறிந்துள்ளேன்.
ஆனால் DGA
உடன்பாடு கதவிற்குள் நுழைந்துள்ள ஒரு கால் கட்டைவிரல் போல் உள்ளது. நாங்கள் வெளியே கிட்டத்தட்ட மூன்று
மாத காலமாக இருப்பதால் அது ஒரு சிறிய வெளிப்பாட்டை கொண்டுவந்துள்ளது.
WSWS:
WGA, ஒரு
முறைசாரா பேச்சுவார்த்தைகளை AMPTP
உடன் நடத்தவுள்ளது என்று தற்போது அறிவித்துள்ள உண்மை பற்றி நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?
PB: நல்லது, இது
எதிர்பார்க்கப்பட்டதுதான். நடப்பது எதுவும் எதிர்பாராதது இல்லை என்றுதான் கருதுகிறேன். ஆரம்பத்தில்
இருந்தே AMPTP
யின் திட்டம் இப்படித்தான் உள்ளது; இப்பொழுது இன்னும் வெளிப்படையாக அவர்கள் திட்டத்தை எப்படி
செயல்படுத்த உள்ளனர் என்பது தெரிகிறது; ஏனெனில் எப்பொழுதும் அவர்கள் இப்படித்தான் நடந்து கொள்ளுவர்.
எனவே ஒரு பெரிய அளவில் இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஒருவேளை இப்பொழுது அவர்கள் உள்ளதை வெளிப்படுத்துவர் என்று நாங்கள் நம்பிக்
கொண்டிருக்கிறோம்; ஒருவேளை முதல் தடவையாக எங்களுடன் அக்கறையாக பேசுவர் என்று நம்புகிறோம்.
ஆனால் உண்மை என்னவென்றால் நடைமுறையில் செய்திகள் இருட்டடிப்பிற்குத்தான் உட்பட்டுள்ளன.
துரதிருஷ்டவசமாக, எதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமோ, அதை உரிய
நேரத்தில் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும்
DGA உண்மையில்
வாக்குப் பதிவின் மூலம் தங்கள் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவர் என்று நான் நம்புகிறேன்; இவ்விதத்தில்
AMPTP முறையான
பேச்சுவார்த்தைகளை அந்த வழிவகை நிறைவடையும் வரையில், எங்களுடன் நடத்த முடியாது.
WSWS: WGA இரண்டு முக்கிய
கோரிக்கைகள் வலியுறுத்தப்படமாட்டாது என்று அறிவித்தது பற்றி நீங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளீர்களா, அதாவது
animation, reality shows
பற்றியவற்றை?
PB: மீண்டும் அது
எதிர்பார்க்கப்பட்டதுதான். விவாதத்திற்கு பல பிரச்சினைகளை மேசையில் வைக்கிறோம்; இறுதியில் இவை
பரிசீலனைக்கு வரும் என்பது தெரியும். எனவே இதனால் நான் வியப்படவில்லை; இது வழிவகையின் ஒரு பகுதிதான்.
இந்த வாதம் பின்னர், "இந்த வழிவகை திறமையானதா?" என்று மாறும். வேறு
நல்ல சொல் இல்லாத நிலையில், "தீவிர" நோக்கின்படி, அவர்களுடைய இடத்தில் நாம் அவர்களுடைய விதிகளுக்கு
உட்பட்டு பந்து விளையாடுகிறோம்; எனவே உண்மையான மாற்றம் வரவேண்டும் என்றால், முற்றிலும்
வேறுவிதத்தில்தான் முயற்சிகள் இருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது பாட்ரிக்கினால் (வெரோனேயால்)
செய்யப்படுவது, WGA East
னால் செய்யப்படுவது, உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டுள்ளது; இது ஒன்றும் பெரு நபர் வழிபாடு என்று
கொள்ளப்பட வேண்டாம். நாங்கள் எழுந்து எங்கள் கருத்தை வலியுறுத்திப் பேசுவோம்.
WSWS: நீங்கள் எங்கள் வலைத்
தளத்தை படிக்கிறீர்களா?
PB: ஆம், நான் படிக்கிறேன்.
WSWS: ஒரு பரந்த வரலாற்று,
சமூகப் பின்னணியில் நீங்கள் ஒரு எழுத்தாளரின் பணியை எப்படிக் காண்கிறீர்கள். இப்பொழுது நம் நாட்டிலும்,
சர்வதேச அளவிலும் நாம் ஒரு பெரிய மந்த நிலையில் நுழைந்து கொண்டிருக்கிறோம். நிறுவனங்கள் பல
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன; சமூக நலன்கள் தீவிரமாகக்
குறைக்கப்படுகின்றன அல்லது முற்றிலும் அகற்றப்படுகின்றன. உதாரணமாக, [கலிபோர்னியாவின்] கவர்னர்
[ஆர்னால்ட்] ஷ்வார்ஸ்நெக்கர், சமீபத்தில் கிட்டத்தட்ட $6 பில்லியனை மாநில கல்விச் செலவுத் திட்டத்தில்
இருந்து குறைக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் ஒரு எழுத்தாளர் என்ன செய்ய வேண்டும்,
இப்போராட்டம் எப்படி முக்கியமானது?
PB: உங்களுக்கு என்னால் இயன்ற
அளவிற்கு நேர்மையுடன் விடையிறுப்பேன். நான் முதலில் ஒரு மனிதன், பின்னர்தான் ஒரு எழுத்தாளர். இந்த
அரசியல் அக்கறைகள் இது ஒரு மனித உரிமைகள் பிரச்சினை என்பதை உயர்த்திக் காட்டுகின்றன. வேலைநிறுத்தத்தில்
ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் தொழிலாள வர்க்க மக்கள் ஆவர்.
ஆனால் நாம் வாழும் நாட்டிலும், முறையிலும் வர்க்கம் என்பது
அங்கீகரிக்கப்படவில்லை; எனவே துரதிருஷ்டவசமாக எங்கள் குழுவில் நன்கு அறியப்பட்டுள்ள உறுப்பினர்கள் மகத்தான
அளவில் அதிக ஊதியம் பெறுகின்றனர். இந்த வேலைநிறுத்தத்தைப் பற்றி ஆராயும்போது நீங்கள் ஒரு பெரிய
காட்சியைக் கருத்திற் கொள்ள வேண்டும்.
பர்மாவில் இருக்கும் நிலைமைகூட இப்போராட்டத்துடன் தொடர்பு உடையதுதான்.
எழுத்தாளர்கள் இணையதளத்தை அங்கு என்ன நடக்கிறது, உலகின் எல்லாப் பகுதிகளிலும் என்ன நடக்கிறது என்பதை
உயர்த்திக் காட்ட பயன்படுத்த முடியும், பயன்படுத்துகின்றனர். எனவே குறிப்பாக இணையதளம் உலகம் முழுவதும்
இருக்கும் தொழிலாளர்கள் ஒன்றுபடுத்தப்படலாம் என்பதை நிரூபணம் செய்கிறது.
WSWS: ஏன் இந்தத் துறை
முழுவதும் மூடப்பட வேண்டும் என்பதற்கு அழைப்பு விடப்படவில்லை?
PB: ஏனெனில் இங்குள்ள முறை
அந்த விதத்தில் செயல்படுவதாக நான் நினைக்கவில்லை. இது இன்னும் மெதுவான அதிகாரத்துவ வழிவகையாகும்.
உதாரணமாக ஒரு நடிகர் நேற்று காலை இங்கு நடந்து வந்து மறியலை மீறி உள்ளே செல்வதற்கு எங்களிடம் மன்னிப்புக்
கேட்டார்; அவருடன் பேசிய பிறகு நாங்கள் அவர் DGA
உடன்படிக்கையை நாங்கள் நிராகரிக்க வேண்டும் என்று காட்டும் உணர்வைவிட அவர் அதிகம் காட்டினார் என்பதை
அறிந்தோம். AMPTP
உடன் நாங்கள் எந்த உடன்பாடு கொண்டாலும் அது நடிகர்களையும் பாதிக்கும் என்பதை அவர் அறிவார். எனவே
நாங்கள் ஒரு முன்னணிப்படை என்ற உணர்வில், ஈட்டியின் முனையாய் இருக்கிறோம் என்று ஒருவிதத்தில் கூறமுடியும்.
மேலும் வரலாற்றளவில், இந்தப் பங்கு எப்பொழுதும்
WGA இடம்தான்
வந்துள்ளது. தொழில்துறை முழுவதும் பரந்த ஒரு வேலைநிறுத்தம் வரக்கூடும் என்று நான் நினைக்கிறேன்.
வேறுவிதமாகக் கூறினால் விளையாடும் தளம் ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டது; இன்னும் கால தாமதம் ஆனால் எங்கள்
பக்கம், பொழுதுபோக்குத் துறை தொழிலாளர்கள் என்று அழுத்தம் கூடும்; அதே நேரத்தில் மறுபுறத்தில் இருக்கும்
தயாரிப்பாளர்களுக்கும் அழுத்தம் ஏற்படும்; வரவிருக்கும் வாரங்கள், மாதங்களில் இதன் விளைவுகளை நீங்கள்
காண்பீர்கள். |