World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Rwanda: Government report documents French role in 1994 genocide

ருவண்டா : 1994ம் ஆண்டு இனப் படுகொலையில் பிரெஞ்சுப் பங்கு பற்றி அரசாங்க அறிக்கை

By Kumaran Ira and Alex Lantier
14 August 2008


Use this version to print | Send this link by email | Email the author

கிகாலியில் இருக்கும் ருவண்ட அரசாங்கம் ஆகஸ்ட் 5ம் தேதி ஒரு 500 பக்க அறிக்கையை பிரான்சின் டுட்சி எதிர்ப்பு இனப்படுகொலையின் பங்கு பற்றி விவரித்து வெளியிட்டது; இதை பிரெஞ்சு ஆதரவு பெற்ற Hutu அரசாங்கம் 1994ல் நிகழ்த்தியது. பிரெஞ்சு ஆதாரங்களின் அடிப்படையில் --ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் சொந்த ஆவணங்களை வெளியிட்டு சமீபத்தில் அவை தொலைக் காட்சியிலும் செய்தி ஊடகத்திலும் வந்திருந்தன-- மற்றும் ருவண்டா சாட்சிகளின் கூற்றின்படியும், இந்த அறிக்கை மிகப் பரந்த அளவில் இப்படுகொலைகளை திட்டமிட்டு நிகழ்த்தியதில் தீவிர பிரெஞ்சு ஒத்துழைப்பிற்கான சான்றையும் கொடுத்துள்ளது.

இந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள முடிவுகள் பரந்த முறையில் இனப் படுகொலை பற்றி உத்தியோகபூர்வ விசாரணையின் கண்டிப்புக்களுடன் ஒத்துள்ளன; ஆனால் இது இன்னமும் கூடுதலான வகையில் ருவண்டா நிகழ்வுகளுக்கு பொறுப்பாக இருந்த உயர்மட்ட பிரெஞ்சு அதிகாரிகள் பெயர்களைக் கொடுப்பதுடன் கொடுமைகளில் நேரடியான பிரெஞ்சு இராணுவத் தொடர்புகள் பற்றியும் விரிவான சாட்சியங்களை கொடுத்துள்ளன. படுகொலையில் தொடர்புடைய 33 பிரெஞ்சு அரசியல்வாதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோரின் மீது இந்த அறிக்கை சுட்டிக் காட்டுவதுடன் விசாரணைக்கு அவர்கள் உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. பழைய ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன், அவருடைய மகன் ஜோன் கிறிஸ்தோப், அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த எடுவார்ட் பலடூர், அப்பொழுது வெளியுறவு மந்திரியாக இருந்த அலன் யூப்பே மற்றும் அவருடைய முக்கிய உதவியாளர் டொமினிக் டு வில்ப்பன், 2005-07ல் பின்னர் பிரதமரானவர் ஆகியோருடைய பெயர்கள் இப்பட்டியலில் உள்ளன.

1994 படுகொலைகள் மிகப் பெரிய IMF கட்டளையின் கீழ் நாட்டின் நாணய மதிப்பை ருவண்டா உலகச் சந்தையில் காப்பி விலை சரிந்ததால் விளைந்த பேரழிவு தரக்கூடிய பொருளாதார மந்த நிலையை எதிர்கொண்ட போது நிகழ்ந்தன. ருவண்டாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருளே காப்பி ஆகும். மேலும் அமெரிக்க ஆதரவு பெற்ற டுட்சி தளத்தைக் கொண்ட RPF எனப்பட்ட ருவண்டா நாட்டுப்பற்றாளர் முன்னணியின் படையெடுப்பையும் எதிர்கொண்டது. ஏப்ரல் 1994ல் ருவண்டா ஜனாதிபதி Juvenal Hayarimana உடைய விமானம் கிகலிக்கு மேலே பறந்துகொண்டிருக்கையில் அவர் சுட்டு வீழ்த்தப்பட்டு இறந்ததால், டுடிஸ்களைக் கொல்வதற்கு பெரும்பாலான வேலையில்லா இளைஞர்களைச் சேர்க்குமாறு அரசாங்கம் Interhamwe போராளிகளுக்கு வானொலி ஒலிபரப்பு மூலம் வேண்டுகோள் விடுத்தது. ஏப்ரல் முதல் ஜூலை வரை Interahamwe மற்றும் தொடர்புடைய குடிப்படையினர் டுட்சிக்கள் மற்றும் அரசாங்கத்தை எதிர்க்கும் ஹுடுக்கள் என்று கிட்டத்தட்ட 800,000 மக்களைக் கொன்றதாக மதிப்பிடப்பட்டது.

பிரெஞ்சு உயர்நிலைப் படைப்பிரிவுகள் --2,500 தரைப்படை மற்றும் விமான ஆதரவுப் பிரிவினர் அடங்கியது-- கிழக்கு Zaire பகுதியில் இருக்கும் கோமாவிற்கு பறந்தனர் (இப்பொழுது காங்கோ ஜனநாயகக் குடியரசு எனப்படுவது); மேற்குப்புறம் ருவண்டாவை நோக்கி அவை அணிவகுத்துச் சென்றன. ஆனால் அவர்களுடைய இலக்கு, படுகொலைகளை நிறுத்துவற்கு என்று இல்லாமல் அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த RPF படையெடுப்பிற்கு எதிராக அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தல் என்று இருந்தது.

கிகலியில் ஆவண வடிவில் வெளியிடப்பட்டுள்ள தற்போதைய அறிக்கை, செய்தி ஊடகத்தின் பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டது, பிரெஞ்சுப் படைகள் பலமுறையும் டுடிஸ்களுக்கு எதிரான கொடுமைகளில் அரசாங்கப் படைகளுன் ஒத்துழைத்துள்ளதை தெரிவிக்கிறது. அறிக்கையின் நகல் ஒன்றைப் பெற்ற கிகலின் New Times கருத்தின்படி அறிக்கை கூறுவதாவது: "டுட்ஸிக்களை மறைத்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட டுட்ஸிக்கள், ஹூடுக்கள் ஆகியோரின் படுகொலைகளில் பிரெஞ்சு துருப்புகளும் தொடர்பு கொண்டிருந்தனர். தப்பிப் பிழைத்த பல டுட்ஸி மகளிருக்கு எதிராக பிரெஞ்சு துருப்புகள் கற்பழிப்பில் ஈடுபட்டனர். இந்த பாலியல்முறைகேடுகள் குறிப்பாக டுட்சி தப்பிப் பிழைத்த மகளிருக்கு எதிராக இலக்குவைத்து முறையாக செலுத்தப்பட்டன; வேறுவிதமாகக் கூறினால் பலமுறையும் சித்திரவதைக்கு உட்படுத்துதல் கொடுமைகள் நிறைந்திருந்தன, இவை பொறுத்துக் கொள்ளப்பட்டன; அவற்றைச் செய்தவர்கள் சார்ந்திருந்த ஸ்தாபனத்தின் நடைமுறைகள் மற்றும் தரங்களின் விளைபொருளாக அவை இருந்தன."

New Times கருத்தின்படி, இந்த அறிக்கை கொலைகள், "இனத் துய்மை செய்தல்" ஆகியவற்றில் பிரெஞ்சு ஒத்துழைப்பு பற்றியும் ஆதாரங்களைக் காட்டியுள்ளது: "பிரெஞ்சு துருப்புக்கள் படையெடுத்த நிலப்பகுதிகளை எரித்து அழிக்கும் கொள்கையை கொண்டிருந்தனர். Cyangugu, Kibuye, Gikongore ஆகிய இடங்களில் இருக்கும் மூன்று போலீஸ் நிலைய அதிகாரிகளையும் ஹுட்டு மக்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக Zaire க்கு ஓடிவிடுவதை ஊக்குவிக்குமாறு உத்தரவிட்டனர். மேலும் அவர்களிடம் பெருந்த மக்கள் இருக்கும் முகாம்களில் ஊடுருவியுள்ள டுட்ஸிக்கள் தங்களிடத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கோரினர்; அவர்களில் சிலரையாவது Interahamwe கொல்லலாம் என்பதற்காக இது கோரப்பட்டது. மூன்று நிலையங்களில் பல்வேறு இடங்களிலும் அவர்கள் தங்கள் பார்வையிலேயே Interahamwe டுட்சிக்களை கொலை செய்ய அனுமதித்தனர்."

அறிக்கை 337 பக்க வரைவுக் குறிப்பாக நவம்பர் 2007ல் வெளியிடப்பட்டது; பின்னர் ஆன்லைனில் செய்தி ஏடு Le Nouvel Oservateur ல் வெளிவந்தது. பிரெஞ்சு மற்றும் ருவண்டா அரசாங்க ஆவணக் காப்பகங்களில் இருந்து கணிசமான வரலாற்று ஆதாரங்களை கொடுத்திருப்பதுடன், இது நூற்றுக்கணக்கான பக்கங்கள் நிறைந்த செய்தி ஊடகத் தகவல்கள் மற்றும் நேரில் பார்த்தவர்களுடைய சாட்சியங்களையும் கொடுத்துள்ளது; ருவண்டா நகரங்கள் பலவற்றில் நடந்த கூட்டங்களில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் பிரெஞ்சு துருப்புக்கள் செய்த அல்லது அனுமதித்த கொடுமைகளும் கூறப்பட்டுள்ளன.

நேரில் பார்த்த ஒருவரின் சாட்சியப்படி, "இனப் படுகொலையின்போது, 1994 ஜூன் இறுதியில், Nyarushishi க்கு பிரெஞ்சுப் படையினர் வந்து தங்கள் நிலையை உறுதி செய்து கொண்டனர். நியாருஷிஷி முகாமைச் சுற்றிலும் Interahamwe மற்றும் போலீசார் ஏற்பாடு செய்திருந்த சாலைத் தடைகள் இருந்தன. இவ்விடத்திற்கு வருவதற்கு பிரெஞ்சுக்காரர்கள் சாலைத் தடைகளை கடக்க வேண்டியிருந்தது. ஒரு நாள் மூன்று இளைஞர்கள் இன்டரஹம்வேயினால் தேயிலைத் தோட்டத்தில் காணப்பட்டனர்; அவர்கள் முகாமை நோக்கி இன்டரஹம்வியானால் விரட்டப்பட்டு ஓடினர். நியாருஷிஷியால் மேற்கொள்ளப்பட்டுவரும் முகாமிற்குள் நுழைய முடிந்தது. போலீஸ் தளபதி அங்கு வந்து அவர்களை அழைத்துக் கொண்டு சென்றார். பிரெஞ்சுக்காரர்கள் இதைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்தனர். அந்த மூன்று இளைஞர்களையும் பின்னர் நாங்கள் பார்க்கவில்லை."

Interahamwe முன்னாள் உறுப்பினர் ஒருவர் சாட்சியம் அளித்தார்: "விறகுக்காக அலைந்த முகாம்களை விட்டு சென்ற டுடிஸ்களையும் நாங்கள் கொன்றோம்; அதில் செம்பேபாவின் மகன் சார்ல்ஸும் இருந்தார். அவர்களை கொன்ற பின்னர் சாலைப் பகுதியின் அருகே இருந்த பெரிய புதைகுழியுனுள் அனைவரையும் புதைத்தோம். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பார்க்க பிரெஞ்சுப் படையினர் வந்தனர்; நாங்கள்தாம் உண்மையான இராணுவவீரர்கள் என்றும் கூறினர். அதற்கு வெகுமதியாக எங்களுக்குப் போர்க்கால உணவினையும் கொடுத்தனர். எங்களுடன் இரவு நேர ரோந்துப் பணியிலும் ஈடுபட்டனர்."

நவம்பர் 2007 வரைவு ஆவணத்தில் பிரெஞ்சு துருப்புக்கள் ருவண்டா குடிமக்களுக்கு எதிராக நடத்திய பாலியல் தாக்குதல்கள் பற்றியும் விரிவான குற்றச்சாட்டுக்கள் இருந்தன.

இந்த அறிக்கைகளில் ஆவணப்படுத்தப்பட்ட கொடுமைகளைத் தவிர, பிரெஞ்சு அரசாங்கம் எந்த வித மன்னிப்பும் கோரவில்லை; ருவண்டா அரசாங்கமும் இதுவரை பிரெஞ்சு அரசியல் வாதிகள் மீது குற்றம் சாட்ட முன்வரவில்லை. ருவண்டாவின் நீதித்துறை மந்திரி Thacisse Karugaram நியூ டைம்ஸிடம் கூறினார்: "இது விசாரணை அறிக்கை; இது ஒன்றும் குற்றக் கோப்பு அல்ல. இது ஒன்றும் தவறு பற்றிய அறிக்கை அல்ல; ஆனால் இந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் தொடரப்படலாம். ஒரு விரிவான குற்ற அறிக்கை என்று இதைப் பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை."

சில பிரெஞ்சு அதிகாரிகள் தற்போதைய அறிக்கையில் நேரடியாகக் குறிக்கப்பட்டுள்ளவர்கள் இதை வெளிப்படையாக தாக்கியுள்ளனர். 1994ல் வெளியுறவு மந்திரியாக இருந்த அலன் யூப்பே ஜனவரி 17 அன்று வெளிவந்த தன் வலைத்தள செய்தியில் குறிப்பிடுவதாவது: "கடந்த சில ஆண்டுகளாக வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி நடந்துவருவதைக் காண்கிறோம். மோதலில் ஈடுபட்டிருந்த பிரான்சை இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் காட்டும் முயற்சி இது. ஏற்க முடியாத தவறான அறிக்கையாகும்."

தற்போதைய பாதுகாப்பு மந்திரி Hervé Morin, 1994ம் ஆண்டு அப்பொழுது பாதுகாப்பு மந்திரியாக இருந்த François Lyotard க்கு உதவியாளராக இருந்தவர், அறிக்கையின் கண்டுபிடிப்புக்கள் "முற்றிலும் பொறுத்துக் கொள்ள முடியாதவை" என்றும் மனத்தை உறைய வைக்கும் வகையில் "எந்தக் குற்ற உணர்வையும்" பிரான்சின் வீரர்கள் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறினார்.

இப்பொழுது பிரெஞ்சு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ எதிர்கொள்ளல் அறிக்கையை புறக்கணிக்கும் வகையில் பிரான்சின் பங்கையும் புதைப்பது ஆகும். பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரகம் அறிக்கையில் இருக்கும் குற்றச் சாட்டுக்கள் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும்; அதே நேரத்தில் ருவண்டாவுடன் உறவுகளை முன்னேற்றுவிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்திருந்தது. "பிரான்ஸ் எப்பொழுதும் போல் இப்பொழுதும் ருவண்டாவுடன் கடினமான கடந்த காலத்தைக் கடந்து ஒரு புதிய உறவைக் கட்டமைக்க உறுதியாக உள்ளது."

பிரான்சின் மைய-இடது நாளேடான Le Monde கூறியது: "ஒவ்வொருவருக்கும் கூறப்பட்டுவிட்டது; அநாவசியாமாக பேசாதீர்கள்... கோடை விடுமுறையினால் பிரெஞ்சு அதிகாரிகள் அதிகம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை; பிரான்ஸ்-ருவண்டா செய்திகள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டை ஒட்டி நீர்த்து விட்டது. வெளியுறவு அமைச்சரகம் அன்றாட செய்தி ஊடகத் தகவலில் உத்தியோக பூர்வ விடையிறுப்பைத்தான் கொடுக்கும் என்று நிர்வாகம் முடிவெடுத்துள்ளது." "இந்த அறிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ள இருக்கிறோம் என்ற உணர்வை நாங்கள் கொடுக்க விரும்பவில்லை; அதையொட்டி கருத்து வேறுபாடுகள் விவாதத்தையும் மேற்கொள்ளப் போவதில்லை" என்று குஷ்நெரின் உதவியாளர்கள் கூறியதாக அது தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு மற்றும் ருவண்ட அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம், ஜனாதிபதி சார்க்கோசி ருவண்டாவின் ஜனாதிபதி போல் ககமேயுடன் போர்த்துகல்லில் இருக்கும் லிஸ்பனில் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரான்சின் வலுவான சமரசத்திற்கான விருப்பம் பற்றி அவர் வலுவாக எடுத்துரைத்தார்; ருவண்டா இனப்படு கொலையை ஒட்டி சர்வதேச சமூகத்தின் பலவீனங்கள், தவறுகள் ஆகியவற்றை பிரான்ஸ் உட்பட அனைத்தும் எதிர்கொள்ளக் காட்டும் கவலை பற்றியும் கருத்தை தெரிவித்தார்." பிரெஞ்சு வெளியுறவு மந்திரியான பேர்னார்ட் குஷ்நெர் ஜனவரி 2008ல் கிகலிக்கு சென்றிருந்தார். கடந்த ஆண்டு ஒரு பிரான்ஸ்-ருவண்டா செயற்குழு மூன்று முறை கூடி கிகலிக்கும் பாரிசுக்கும் இடையே உத்தியோகபூர்வ உறவுகள் மீட்கப்படுவது பற்றிப் பேச்சு வார்த்தைகள் நடத்தின.