ஐரோப்பா
:
பிரான்ஸ்
French troops killed in Afghanistan: another sign of
an escalating war
பிரெஞ்சுத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் கொல்லப்படல்: போர் தீவிரமாவதற்கு மற்றும்
ஒரு அறிகுறி
By Peter Symonds
21 August 2008
Use this version to print
|
Send this link by
email |
Email the
author
ஆப்கானிஸ்தானில் திங்களன்று 10 பிரெஞ்சு துருப்புகள் ஒரு கைகலப்பில் கொல்லப்பட்டது
அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆயுதமேந்தி எழுச்சியை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன்
போரில் தொடர்பு பற்றி பிரான்சில் மீண்டும் விவாதத்தையும் தொடக்கியுள்ளது. இந்நிகழ்வு 2001ல் ஆப்கானிஸ்தான
படையெடுப்பிற்குப் பின் பகிரங்கப் போரில் வெளிநாட்டுத் துருப்புக்கள் மிக அதிக அளவு இறந்ததை காட்டியுள்ளது;
பிரெஞ்சு இராணுவத்தை பொறுத்தவரையில் 1983ல் ஒரு பெய்ரூட் வாகன குண்டு 58 பாரட்ரூப்பர்களை கொன்றதற்கு
அடுத்த அதிக எண்ணிக்கையிலான துருப்புகள் இறந்த நிகழ்வு ஆகும்.
உத்தியோகபூர்வ விவரத்தின்படி பிரெஞ்சுப் படைகள் ஆப்கானிய வீரர்கள் மற்றும் அமெரிக்க
சிறப்புப் படையுடன் இணைந்த விதத்தில் ஒரு கூட்டு முன்னணிப் படையின் பகுதியாக இருந்தன. ஆப்கானிஸ்தானத்தின்
தலைநகரான காபூலில் இருந்து 50 கிலோமீட்டர் கிழக்கில் சரோபி மாவட்டத்தில் இது நடந்தது. இந்த ரோந்து
அதிகாலை மட்டமான சாலை நிலைமைகளினால், மலைப் பாதையில் நிறுத்தப்பட்டது. பிரெஞ்சு துருப்புகள் குழு
ஒன்று கால்நடையாக சுற்றி நோட்டம் விட முன்னேறியது; அதுதான் மூன்று புறங்களில் இருந்தும் தாக்கப்பட்டது.
தளபதி Jean-Louis
Georgelin செய்தி ஊடகத்திடம், ஒன்பது பிரெஞ்சு துருப்புகள்
உடனடியாகக் கொல்லப்பட்டனர் என்றும் பத்தாவது ஆள் வண்டி கவிழ்ந்தபின் உயிரிழந்தார் என்றும் கூறினார்.
நெருக்கமான விமானப் படை ஆதரவு மற்றும் துணைப் படைகள் உடனே அழைக்கப்பட்டன; ஆனால் சண்டை இரவு
வரை தப்பிப் பிழைத்தவர்கள் விமான வழியே பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பப்படும் வரை தொடர்ந்தது மற்றும்
23 பிரெஞ்சு துருப்புகளும் குறைந்தது 2 ஆபிரிக்க துருப்புகளும் காயமுற்றனர்.
எழுச்சியாளர்கள் குறைந்தது 100 பேர் இருந்திருக்கலாம் என்று மதிப்பீடுள் தெரிவிக்கின்றனர்;
தாலிபானும் பிற ஆக்கிரமிப்பு எதிர்ப்பு குழுக்களும் பெருகிய முறையில் அமெரிக்க, மற்றும் நேட்டோ படைகளை பெரிய
அளவில் மோதத் தயார் என்பதைக் காட்டும் அடையாளம் ஆகும் இது. "சமீபத்திய நடவடிக்கைகளில், தாலிபான்
இன்னும் கூடுதலான வகையில் அமைக்கவும், தந்திர உத்தியைக் கையாளவும் திறன் கொண்டிருப்பதும் இந்நிகழ்வில்
வந்துள்ளதுபோல் நன்கு தெரிகிறது. வெடிமருத்து பெறுவதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை"
என்று ஜோர்ஜெலன் கருத்துத் தெரிவித்தார்.
உயர்மட்டப் பிரிவுகளில் இருந்து பிரெஞ்சு துருப்புகள் வந்திருந்தனர் -- 8வது கடற்படையின்
தரைப்படை பாரசூட் பிரிவினர், இரண்டாம் வெளிநாட்டு பாரசூட் பிரிவு மற்றும்
Regiment de marche du Tchad
எனப்படும் இயந்திரம் அதிகம் கொண்ட கடற்படைப் பிரிவு ஆகியவற்றில் இவர்கள் இருந்தனர். இந்த ஆண்டின்
முன்பகுதில் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஆப்கானிஸ்தானில் பிரெஞ்சுத் துருப்புக்கள் 700ல்
இருந்து 2,600 க்கு புஷ் நிர்வாகம் கூடுதலான நேட்டோ படைகளைக் கேட்டதை அடுத்து பெருக்கினார். திங்களன்று
நடந்த மோதல் ஆப்கானிஸ்தானில் பிரெஞ்சு இறப்பை இருமடங்காக்கிவிட்டது; இப்பொழுது அது 2001ல் இருந்து
24 என்று உள்ளது.
சார்க்கோசி பிரெஞ்சுத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் நீடித்திருக்கும் தனது உறுதியை
விரைவில் வெளிப்படுத்தும் வகையில் செவ்வாயன்று கூறினார்: "ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் காப்பதற்கு
பயங்கரவாதத்திற்கு எதிராக பிரான்ஸ் போராட்டத்தை தொடர உறுதியாக உள்ளது. காரணம் நியாயமானது"
தொடர்ந்து நீடித்திருப்பதற்கு ஆதரவு தரும் வகையில் ஜனாதிபதி நேற்று ஆப்கானிஸ்தானிற்கு பிரெஞ்சு அதிகாரிகளுடன்
பறந்து சென்று ஒரு நினைவுக் கூட்டத்தில் கலந்து கொண்டு இராணுவத் தளபதிகளுடன் விவாதங்களையும் நடத்தினார்.
ஆனால் திங்கள் மோதல் பிரான்சில் தீவிர எதிர்ப்புக்களை தூண்டியுள்ளது. பல
கருத்துக் கணிப்புக்களிலும் பெரும்பாலான பிரெஞ்சு மக்கள் ஆப்கானிஸ்தானில் எவ்வித இராணுவ நடவடிக்கையும் கூடாது
என்று எதிர்த்துள்ளனர். மார்ச் மாதம் அதிக துருப்புக்களை அனுப்ப சார்க்கோசி எடுத்த முடிவு அப்பொழுதே பரந்த
அளவில் எதிர்க்கப்பட்டது; ஒரு BVA
கருத்துக் கணிப்பு 68 சதவீத மக்கள் எதிர்ப்பு காட்டினர் என்றும் 15 சதவீதத்தினர் மட்டுமே ஆதரவு கொடுத்தனர்
என்றும் காட்டியது.
இச்சமீபத்திய நிகழ்வைத் தொடர்ந்து கார்டியன் கூறியது: "அரசியல் உரையாடல்
தளங்களும் செய்தித்தாள் வலைப் பதிவுகளும் சார்க்கோசியின் "அட்லான்டிக் கடந்த போக்கு" பற்றி கண்டிக்கும்
கருத்துக்களால் நிரம்பி வழிந்தன... இது இளைஞர்களை அவர்களுடன் தொடர்பற்ற போரில் ஈடுபட அனுப்பிவைக்கிறது.
யாங்கீகளுக்கும் அவர்களது "புதிய உலக ஒழுங்கிற்கும்" உதவும் சடைநாய் போல் நிற்கும் அரசியல் வெட்ககரமானது
என்றும், "எமது துருப்புக்கள் பிரான்சின் நலனுக்காக இறக்கவில்லை" என்ற ஒரு கருத்தும் இருந்தது.
இறந்த துருப்புக்களில் ஒருவரின் சிற்றப்பாவான
Roland Gregoire
ராய்ட்டர்ஸிடம் கூறினார்: "இந்த இளைஞர்களை நாம் அங்கு அனுப்பி கொல்லவிட்டிருக்கக் கூடாது. நிச்சயமாக தெரிவது
அவர்கள் பதுங்கியிருந்து தாக்கப்பட்டு இறந்துவிட்டனர் என்பதுதான்; ஏதோ வேட்டை விலங்குகளை போல்."
எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி (PS)
ஆப்கானிஸ்தான் போர் பற்றி பாராளுமன்றத்தில் அவசர விவாதம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது; ஆனால்
பிரெஞ்சுப் படைகள் திரும்பப் பெற வேண்டும் என்று கூறவில்லை. இடது சாரி
Liberation
ல் ஒரு தலையங்கம், "இராணுவ ரீதியாக வெற்றி பெற முடியாத போரில்" எப்படி வெற்றி பெற முடியும் என்ற
வினாவை எழுப்பியுள்ளது.
நிலைமையைப் பயன்படுத்தி
Jean-Marie Le Pen, தீவிர வலதுசாரி தேசிய முன்னணியின்
தலைவர் பிரான்ஸ் பங்கு பெற்றதை நாட்டு வெறி உணர்வுடன் கண்டித்த வகையில் அறிவித்தார்: "எமது வீரர்கள்
சாம் அங்கிளுக்காக (அமெரிக்காவுக்காக) இறக்கத் தேவையில்லை. இந்த வீரர்கள் தங்கள் கடமைகளைச் செய்து
வந்தனர்; ஆனால் பிரான்சிற்காக இறக்கவில்லை. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தன் நலனுக்காக நடத்திக்
கொண்டிருக்கும் ஒரு முடிவில்லாப் போரில் அவர்கள் இறந்தனர்."
நிகழ்வு பற்றி உத்தியோகபூர்வ விளக்கத்திற்கு சவால் விடும் வகையில் காரணங்கள் வெளிப்படுவதால்
இந்த விவாதம் இன்னும் கூடுதலான முறையில் தூண்டிவிடப்படும். நேற்றைய
Le Monde
இல் தொடர்புடைய துருப்புகளுடன் காணப்பட்ட பேட்டியின் அடிப்படையில் வந்த ஒரு தகவல்படி, பிரெஞ்சு இழப்புக்கள்
உடனடியாக நேரவில்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. "இந்த வீரர்களின் கருத்துப்படி கட்டுப்பாடு மெதுவாகச் செயல்பட்டது,
மற்றும் ஒருங்கிணைப்பு தாமதமாக இருந்தது; எனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில்
விளக்கப்பட்டது," என செய்தித்தாள் குறிப்பிட்டது.
இத்துருப்புக்கள் "பல மணிநேரம் உதவிக்கு ஏதும் வராத நிலையில் தவித்தனர்"
Le Monde
இடம் ஒரு வீரர் கூறினார்: "எமது Famas
[தாக்குதல் துப்பாக்கிகள்] தவிர காப்பாற்றிக் கொள்ள வெடி மருந்துகள் ஏதும் எங்களிடம் இல்லை." சில இறப்புக்கள்
விமானத் தாக்குதல்கள் மற்றும் ஆப்கானிய வீரர்கள் கணவாய்க்கு மறுபுறத்தில் இருந்து சுட்டதால் வந்தன. நேற்று
பென்டகன் நேட்டோ விமானத் தாக்குதல்கள் பிரெஞ்சுத் துருப்புக்களை தாக்கிக் கொன்றன என்ற கூற்றை மறுத்துள்ளது.
விரிவாகும் போர்
பிரெஞ்சுத் துருப்புக்கள் பதுங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டமை ஆப்கானிஸ்தானில்
போர் தீவிரமாகியிருப்பதின் மற்றொரு அடையாளம் ஆகும். "ஜனநாயகம், சுதந்திரம்" ஆகியவற்றிற்கு "நியாயமான
காரணம்" என்பதைவிட, அமெரிக்காவிற்கு அப்பகுதியில் குறிப்பாக வளம் கொழிக்கும் மத்திய ஆசியாவில் நடவடிக்கைகளின்
ஒரு வட்டாரத் தளமாக நாட்டை உறுதிப்படுத்துவதை நோக்கங்கொண்ட, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும்
ஒரு புதிய காலனித்துவ வகைப் போரில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை அண்டை நாடான பாக்கிஸ்தானை எல்லைப்
பகுதிகளில் இருக்கும் எழுச்சியாளர்களின் புகலிடத்தை அழிக்காமல் இருப்பதற்கு குறைகூறினாலும், தாலிபனுக்கும் மற்ற
போராளிகள் குழுக்களுக்கும் தொடர்ந்த ஆதரவின் முக்கிய காரணம் அங்கு நிலவும் ஆழ்ந்த சீற்றம் ஆகும்; அதிலும்
குறிப்பாக தெற்கு, கிழக்கு ஆப்கானிஸ்தானத்தில் இருக்கும் பஷ்டூன் பழங்குடி மக்களிடம் உள்ள சீற்றம் ஆகும்;
கிட்டத்தட்ட ஏழாண்டு காலமான விமான குண்டுவீச்சு, ஒருதலைப்பட்ச காவலில் அடைப்பு, உதவி தருவதாகக்
கூறப்பட்ட உறுதிமொழிகள் முறிந்தது இவற்றைத்தான் அங்குள்ள மக்கள் கண்டு வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் கொண்டுள்ள நிலை
தொடர்ந்து ஆபத்தைக் கொடுக்கக் கூடிய வகையில் முக்கிய பெருநகரங்கள், சிறு நகரங்கள் ஆகியவற்றிற்கு
வெளியே உள்ளன. அமெரிக்க இராணுவத் தளங்கள்கூட தாக்குதலுக்கு உட்படுகின்றன. கடந்த மாதம் கணிசமான
கெரில்லா பிரிவினர் ஒரு சிறிய அமெரிக்க-ஆப்கான் படைத் தளத்தை பாக்கிஸ்தான் எல்லைக்கு அருகே வனட்
கிராமத்திற்கு அருகே முற்றுகையிட்டு 9 அமெரிக்க துருப்புகளை கொன்று 15க்கும் மேற்பட்டவர்களை
காயப்படுத்தவும் செய்தனர்.
திங்களன்று எழுச்சியாளர்கள்
Camp Salerno
என்னும் பெரிய அமெரிக்க தளத்தை, கோஸ்ட் நகரத்திற்கு அருகே ஹெலிகாப்டர் இறங்கும் வசதி, மற்றும் விமான
ஓட்டத் தளம் இருப்பதை, தாக்கினர்; இந்த இடம் தென் கிழக்கு ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு
முக்கியமானது ஆகும். பென்டகன் தாக்குதல் பற்றி குறைவாக மதிப்பிட்டாலும், குறிப்பிடத்தக்க போர் நிகழ்ந்தது
என்றும் கிட்டத்தட்ட 10 தற்கொலை படையினர் செவ்வாய் காலை மற்ற போராளிகள் ஆதரவுடன் தாக்குதல் நடத்தினர்
என்றும் தெரியவருகிறது.
நியூயோர்க் டைம்ஸ் கொடுத்துள்ள தவகல்: "எழுச்சியாளர்கள் ராக்கெட்டுகள்
மற்றும் எறிகுண்டுகளுடன் திங்கள் இரவு 11 மணிக்கு தாக்கத் தொடங்கினர்; போராளிக் குழு ஒன்று விமானத்தை
நோக்கி தளத்தின் பகுதியில் இருந்து முன்னேறியது என்று ஒரு ஆப்கானிய இராணுவ அதிகாரி கூறினார். ஒரு ஆப்கானிய
சிறப்புப் படைப் பிரிவு அவர்களை சூழ்ந்தது; 13 போராளிகள் கொல்லப்பட்டனர்; இதில் 10 பேர் தற்கொலை
பிரிவு ஆடைகளை அணிந்திருந்தனர் என்று [ஆப்கானிய தளபதி ஜாகெர்] ஆஜிமி தெரிவித்தார்.
"இரவில் பெரும்பகுதி கடுமையான பூசலைக் கண்டது; செவ்வாய் காலை 7 மணி
வரை இது நீடித்தது என்று கோஸ்ட் கவர்னர் Arsala
Jamal கூறினார். போராளிகளுக்கு எதிராக அமெரிக்க ஹெலிகாப்டர்
தாக்குதல்கள் நடத்தப்பட்டன; அவர்கள் தளத்தைச் சுற்றியிருந்த வயல்பகுதியில் சென்று கொண்டிருந்தனர்; ஹெலிகாப்டரில்
இருந்து கிராமத்தில் இருந்த ஒரு வீடும் தாக்கப்பட்டு இரு குழந்தைகள், இரு பெண்மணிகள் மற்றும் இரு ஆண்டுகள்
காயமுற்றனர்; இவ்வாறு மாநில போலீஸ் தலைமை அதிகாரி அப்துல் கயும் பகிஜோய் தெரிவித்தார்."
ஆப்கானிஸ்தானில் எழுச்சி அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பல பெருகிய கவலைகளை
தோற்றுவித்துள்ளது. RAND
பெருநிறுவன பகுப்பாய்வாளரான Set Jones
சமீபத்திய தாக்குதல்கள், "அமெரிக்க மற்றும் பிற நேட்டோ படைகளை இலக்கு கொண்டது, அதிகமாகவும் தைரியமாகவும்
போய்விட்டது; இவற்றில் நேரடியான, மரபார்ந்த முறைத் தாக்குதல்களும் இருந்தன....2006 கடைசியிலும்
2007 தொடக்கத்திலும் தாலிபான் மற்ற குழுக்கள் இடையே இத்தகைய மரபார்ந்த தாக்குல்களை நடத்துவதில்
பெரும் தயக்கம் இருந்தது." புதிய நடவடிக்கைகள் "அவர்கள் இப்பொழுது வெற்றி பெறுகின்றோம் என்பதைத் தெளிவாக
அறிந்து கொள்ளுவது போல் குறிப்புக் காட்டுகிறது; இதுதான் அவர்கள் இன்னும் தைரியமாகச் செயல்படுவதின் காரணம்."
ஒரு ஐரோப்பிய தளத்தைக் கொண்ட சிந்தன் குழுவான
Senis Cuncil
செவ்வாயன்று ஒரு அறிக்கை விடுத்து சமீபத்திய பூசல்கள் "ஆப்கானிஸ்தானில்
மேலை மூலோபாயம் தோற்றுக் கொண்டிருக்கிறது என்ற தெளிவான தகவலை கொடுக்கிறது. இதுவரை மேலைத்
தலைவர்கள் தாலிபான் எந்த அளவிற்கு ஆப்கானிஸ்தானில் உண்மையாக இருந்தனர் என்பதைப் பற்றியும் ஆப்கானிஸ்தான்
தலைநகருக்குள் சடுதியில் அவர்கள் நகரும் திறன் பற்றியும் கூற மறுத்துள்ளனர்."
இந்த சிந்தனைக் குழு நேட்டோ அதன் படை எண்ணிக்கையை 53,000த்தில் இருந்து
80,000 மாக உயர்த்துமாறு கோரியுள்ளது. "ஒரு புதிய படைகள் நிலைப்பாடுதான் தலைநகரத்தை காக்க
தேவையாகும். தாலிபான் ஆப்கானிஸ்தான் தலைநகரின் நுழைவாயிலில் நிற்கையில் நிலைமை நேட்டோ மற்றும்
ISAF
படைகளுக்கும் ஆப்கான் மக்களுக்கும் மோசமாகிப் போக முடியும்" என்று இது கூறியுள்ளது. ஒரு முந்தைய
Senlis
அறிக்கை ஆப்கானிய பகுதியில் பாதிக்கும் மேல் 54 சதவிகிதம் தாலிபானுக்கு நிரந்தர நிலை இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.
காபூலில் இருக்கும் ஆபத்தான நிலைமை திங்களன்று ஆப்கானிய அரசாங்கம் 70,000
போலீசாரை, இரகசிய பிரிவு முகவர்கள், உயருடக்கு மற்றும் சிவில் ஒழுங்கு போலீஸ், காவல்காரர்கள் உட்படத்
திரட்டி நாட்டின் சுதந்திர தனி கொண்டாட்டத்திற்கு வகை செய்த அளவில் உயர்த்திக் காட்டப்பட்டது. தலைநகரம்
பெருகிய முறையில் எழுச்சிக் குழுக்கள் அருகில் இருக்கும் பகுதிகளில் தங்களை இருத்திக் கொண்ட நிலையில் ராக்கெட்
தாக்குதலுக்கு உட்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு முன்னதாக, மூத்த டாலிபன் தளபதிகள் லண்டனைத் தளமாகக் கொண்ட
டைம்ஸிடம் தாங்கள் காபூலுக்கு செல்லும் பொருட்கள் செல்லும் பாதைகள் அனைத்தையும் துண்டித்துவிடும் இலக்கு
கொண்டுள்ளதாக் கூறினர். நகரத்திற்கு தெற்கு, கிழக்கு, மேற்கு திசைகளில் இருந்து வரும் பெரிய சாலைகள்
இப்பொழுது துருப்புக்களுக்கும் உதவி பணியாளர்களுக்கும் குடிமக்களுக்கும் ஆபத்து என்று வந்துவிட்டது. கடந்த வாரம்
மூன்று பெண் உதவிப் பணியாளர்கள் மறைந்திருந்து தாக்கப்பட்டு காபூலுக்கு ஒரு மணி நேர கார் செல்லும்
தொலைவில் கொல்லவும் பட்டனர். பிரெஞ்சு இராணுவம் சமீபத்தில் காபூல் வட்டாரக் கட்டுப்பாட்டைக் ஒண்டது;
இதில் திங்களன்று தாக்கதல் நடந்த சரோபியும் அடங்கும்.
ஆப்கானிஸ்தானத்தின் ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆய்வு மையத்தில் உள்ள
Haroun Mir
தாலிபான் 1980 களில் சோவியத் படைகளுக்கு எதிரான
CIA ஆதரவைக்
கொண்டிருந்த முஜாஹெதின் கடைபிடித்த உத்திகளைத்தான் பின்பற்றுவதுபோல் தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.
குல்புதின் ஹெக்மட்யார் என்னும் ஒரு முஜாஹெடின் தலைவருடைய கோட்டை என்று சரோபி மாவட்டம் கருதப்படுவது
தற்செயல் நிகழ்வு அல்ல; இரு தசாப்தங்களுக்கு முன்பு இவர்
CIA இடம் ஆதரவையும்
நிதியையும் பெற்றார்; அமெரிக்க செய்தி ஊடகம் இவரை சோவியத் ஆக்கிரமிப்பிற்கு எதிராக "சுதந்திரத்திற்காக
போராடும் வீரர்" என்று பாராட்டியது.
பதுங்கியிருந்து பிரெஞ்சுப் படைகள் கொல்லப்பட்டதானது வாஷிங்டன் ஆப்கானிஸ்தானில்
சக்திவாய்ந்த கெரில்லா போரை எதிர்கொண்டிருக்கிறது என்பதை நினைவுறுத்துகிறது; இதற்கும் சோவியத் ஸ்ராலினிச
அதிகாரத்துவம் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு எதிர்கொண்ட எழுச்சிக்கும் இடையே முக்கிய ஒற்றுமைகள் உள்ளன.
அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் பெரிய தளத்தில் மட்டும் உள்ளன; அமெரிக்க கைப்பாவை அரசாங்கம்
காபூலுக்கு வெளியே அதிக செல்வாக்கை கொண்டிருக்கவில்லை; "இதயங்கள், மனங்கள்" என்ற செயற்திட்டங்கள்
அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு எதிரான வெறுப்பையும் ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கான ஆதரவையும் தடுக்க
ஒன்றும் செய்ய முடியவில்லை.
எழுச்சியாளர்களின் தாக்குதல் கிட்டத்தட்ட 50 சதவீதம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
திங்கள் தாக்குதலுக்கு முன்பு 2008ல் வெளிநாட்டு துருப்புகள் இறப்பு ஏற்கவே 173ஐ அடைந்துள்ளது; இதில் 99
அமெரிக்கர்களும் அடங்குவர்; கடந்த ஆண்டு எண்ணிக்கையான 232 ஐ உறுதியாக மிஞ்சும். கிட்டத்தட்ட ஆப்கானிய
பாதுகாப்புப் படைகளில் 800 பேர் இறந்துள்ளனர்; 1,000க்கும் மேற்பட்ட குடிமக்கள் இறந்துள்ளனர்.
இந்த வாரம் பிரான்சில் மக்கள் எதிர்கொண்ட விதம் நிரூபித்துள்ளது போல், இந்தப்
போரின் மிருகத்தன்மையானது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து புதிய காலனித்துவ
வகை ஆக்கிரமிப்பில் இருப்பதற்கு தவிர்க்க முடியாமல் வளர்ந்துவரும் எதிர்ப்பாற்றலையும் பொதுமக்கள் எதிர்ப்பையும்
தோற்றுவிக்கும். |