World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

EU meeting on Georgia reveals tensions between European powers and US

ஜோர்ஜியா மீதான ஐரோப்பிய ஒன்றிய கூட்டம், ஐரோப்பிய சக்திகளுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டங்களை வெளிப்படுத்துகிறது

By Stefan Steinberg
15 August 2008


Use this version to print | Send this link by email | Email the author

இங்கிலாந்து, ஸ்வீடன் போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன், பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிடமிருந்து தீவிர அழுத்தம் இருந்த போதிலும், ஜோர்ஜியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான மோதல் குறித்து விவாதிக்க புதனன்று புரூஷல்ஸில் நடந்த அவசர கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகளால் வெளியிடப்பட்ட அறிவிப்பு, ரஷ்யா மீதான எவ்வித கண்டனங்களையும் தவிர்த்து கொண்டிருந்தது.

ரஷ்யாவுடன் வெளிப்படையான மோதலை தவிர்க்கும் வகையில், அப்பிராந்தியத்திற்கு துருப்புகளை அனுப்புவதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்தது. மாறாக, ஜோர்ஜியாவில் 100 லிருந்து 300 வரையிலான ளிஷிசிணி கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான மற்றும் மனிதாபிமான உதவிகளை உயர்த்துவதற்கான ஜேர்மனியின் திட்டங்களை பெரும்பாலான மந்திரிகள் ஏற்றுக் கொண்டார்கள்.

புரூஷெல்சில் ரஷ்யா தொடர்பாக எடுக்கப்பட்ட நிலைப்பாடு மற்றும் கட்டுப்பாட்டு முறைமைகளை ஒப்புக்கொண்ட பெரும்பாலான மந்திரிகள், ஜோர்ஜியா மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையிலான ஐந்து நாட்கள் கடுமையான சண்டையை முன்னெடுத்ததாக ரஷ்யாவை குற்றஞ்சாட்டிய அமெரிக்க அரசாங்கத்தின் அதிகார வெளிப்பாட்டிற்கு முற்றிலும் முரணாக நின்றார்கள். புஷ் நிர்வாகம் அதனுடைய இராணுவ படைகளை அப்பகுதிக்கு மனிதாபிமான உதவி என்ற பெயரில் அனுப்ப இருக்கிறது.

கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னதாக, ஜேர்மனிய வெளியுறவு மந்திரியான சோசலிச ஜனநாயக கட்சியின் பிராங்க் வோல்டர் ஸ்ரைன்மெயர் மற்றும் பிரான்ஸின் வெளியுறவு மந்திரி பேர்னார்டு கோச்னெர் அளித்த அறிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவில் ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரத்துடன் முரண்பட்டிருந்தன. அது வெள்ளை மாளிகையிலிருந்து தோன்றியிருந்தது என்பதுடன் ஐரோப்பாவிலுள்ள அமெரிக்காவின் நெருங்கிய கூட்டினரின் எதிரொலிப்பாக இருந்தது.

புரூஷெல்ஸ் கூட்டத்திற்கு முன்னர், ரஷ்யாவை பற்றிய ஒருதலைப்பட்சமான கண்டனத்தை தான் எதிர்ப்பதாக ஸ்ரைன்மெயர் தெளிவுபடுத்தினார். "பொறுப்பு மற்றும் குறைகள் பற்றிய சமீபத்திய நாட்களின் கருத்துக்களுக்காக, நீண்ட விவாதங்களில் நாம் நேரத்தை செலவழிக்க தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறினார். "பிறரை சுட்டி காட்டிவதற்கு பதிலாக, ஐரோப்பிய ஒன்றியம் வருங்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் மற்றும் மேலும் ஸ்திரப்படுத்துவதில் பங்கு வகிப்பது குறித்து சிந்திக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

ஸ்ரைன்மெயரின் நிலைப்பாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்திற்குள் பிரான்ஸ், இத்தாலி மற்றும் பின்லாந்து நாடுகளின் வெளியுறவு மந்திரிகளால் ஆதரவு அளிக்கப்பட்டது. OSCE இன் தலைமையை கொண்டிருக்கும் பின்லாந்து நாட்டின் வெளியுறவுதுறை மந்திரி அலெக்சாண்டர் ஸ்டப், பெரும்பாலான மந்திரிகளின் நிலைப்பாட்டை சுருக்கி கூறும் வகையில் அறிவித்தார்: "பிறரை குற்றஞ்சாட்டுவது மற்றும் கடுமையாக பேசுவது பின்னர் தொடங்கும்."

கூட்டத்தை தொடர்ந்து, ரஷ்யாவின் கூட்டுமுயற்சியுடன் தான் "காகசஸின் ஸ்திரத்தன்மை" அடையப்பட முடியும் என்பதை ஸ்ரைன்மெயர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஸ்ரைன்மெயரின் நிலைப்பாடு, கிறிஸ்துவ ஜனநாயக சங்கத்தை (CDU) வழிநடத்தும் ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெலின் உத்தியோகபூர்வ ஆதரவை பெற்றது. வியாழனன்று, அவரின் செய்திதொடர்பாளர் Thomas Steg, மோதலில் ரஷ்யாவின் பாத்திரத்திற்கு ஜேர்மனியின் பிரதிபலிப்பு குறித்து கூறுகையில், "அளவுக்கதிமாய் உணர்ச்சிவயப்படாமல்" இருப்பது மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார். இந்த வெள்ளியன்று சோசியின் கருங்கடல் ரீசார்ட்டில் ரஷ்ய பிரதம மந்திரி விளாதீமிர் புதினுடனான அதிபரின் திட்டமிட்ட பேச்சுவார்த்தைகளில் அவர் "சாதாகமான" விடயங்களை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

ரஷ்யா பற்றிய ஓர் ஒருமித்த கொள்கைக்கு ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவு, இந்த பிரச்சனையில் ரஷ்யாவின் பங்களிப்பை கண்டிக்க விரும்பிய வாஷிங்டனின் பல உறுதியான ஐரோப்பிய கூட்டினரின் கடுமையான பிரச்சாரத்தை தொடர்ந்து நடந்தது. ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் கூட வலியுறுத்தி வருகின்றன. இந்த வார தொடக்கத்தில் யுத்த முடிவு உடன்பாடு அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரஷ்ய எதிர்ப்பு பிரச்சார தாக்குதல் தொடங்கிவிட்டது.

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இட்டு அந்த உடன்படிக்கை, பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி மற்றும் அவரின் வெளியுறவு மந்திரி குஷ்நெர் ஆகியோரால் பேசி முடிக்கப்பட்டது. செவ்வாயன்று, ஆகஸ்ட் 7 இல் தெற்கு ஓசேஷியாவில் ஜோர்ஜிய தலையீட்டுக்கு முன்னர், ஜோர்ஜியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் இருந்த வெளியுறவு விவகார நிலைமையை மீட்டெடுத்துள்ள இந்த உடன்படிக்கை தமக்கு திருப்தியாக இருப்பதாக, சார்க்கோசியுடன் கைகுலுக்கி கொண்டே, ரஷ்ய ஜனாதிபதி திமிட்ரி மேட்வடெவ் அறிவித்தார்.

கூட்டத்தை தொடர்ந்து, ஒப்பந்தத்தை மதித்த போதினும், ஜனாதிபதி மிகெய்ல் சாகாஷ்விலி பொறுப்பில் இருக்கும் வரை ரஷ்ய அரசாங்கம் ஜோர்ஜியவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது என்று ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் குறிப்பிட்டார்.

தெற்கு ஒசேஷியா மற்றும் அப்காஜியா மாகாணங்களின் வருங்கால நிலை சர்வதேச கவனிப்பின் கீழ் இருக்கும் என்று குறிப்பிடப்பட்ட ஆறாவது புள்ளியை நிராகரித்த ஜோர்ஜிய ஜனாதிபதியால், மாஸ்கோவுவில் ஏற்பட்ட இந்த உடன்பாடு உடனடியாக விமர்சிக்கப்பட்டது. இந்த மாகாணங்கள் ஜோர்ஜிய பகுதியென்றே தான் தொடர்ந்து கருதுவதாகவும், இதில் சர்வதேச தலையீட்டிற்கு இடமில்லை என்றும் சாகாஷ்விலி தெளிவுபடுத்தினார்.

ஜோர்ஜிய ஜனாதிபதியுடன் தங்கள் ஐக்கியத்தை அடிக்கோடிட, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான போலந்து, லாட்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியா ஆகியவற்றின் ஜனாதிபதிகள் செவ்வாயன்று டிபிலிசிக்கு பயணித்து, அந்நாட்டில் ஏற்கனவே வந்திருந்த உக்ரைனின் ஜனாதிபதி விக்டர் யுஷ்செங்கோவுடன் சேர்ந்து பேசினர். சோவியத் ஒன்றியம் 1991 இல் உடைந்ததில் இருந்து, இந்நாடுகள் அனைத்தும் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. சாகாஷ்விலியை முட்டு கொடுத்து நிறுத்தும் ஒருங்கிணைந்த நடவடிக்கை, புஷ் நிர்வாகத்துடனான ஐக்கியம் என்பற்கு ஒரு தெளிவான அடையாளம் இருந்தது.

செவ்வாயன்று திபிலிஸில் நடந்த பேரணி ஒன்றில், ரஷ்யாவிற்கு எதிரான ஒருங்கிணைந்த எதிர்ப்புக்கு அழைப்பு விடுக்க, போலந்து ஜனாதிபதி லெக் காக்சின்ஸ்கி ஜோர்ஜிய ஜனாதிபதியுடன் சேர்ந்து கொண்டார். "நாம் இங்கு சண்டையை கையில் எடுக்க ஒன்று கூடியுள்ளோம்." என்று கூடியிருந்த கூட்டத்தில் அறிவித்த அவர், "சில காலங்களுக்கு பின்னர் முதல்முறையாக, கிழக்கிலுள்ள எமது அண்டை நாட்டினர் நாங்கள் பல நூற்றாண்டுகளாக அறிந்திருந்த முகத்தை மீண்டும் காட்டியுள்ளனர். இவை தங்களை சுற்றியுள்ள நாடுகள் தங்களுக்கு தாழ்ந்து இருக்க வேண்டும் என விரும்புகின்றன. நாம் அதற்கு முடியாது என்போம்!"

மறுநாள் இதே நாடுகள் நேட்டோவிற்கு ஜோர்ஜியாவிற்கு உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்று கோரின. லிதுவேனிய ஜனாதிபதி வால்டாஸ் அடாம்குஸ் புதனன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் "எதிர்கால ஜோர்ஜிய ஆக்கிரமிப்பு மற்றும் இதுபோன்ற பிற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தடுப்பதற்கான ஒரே வாய்ப்பு என்னவென்றால், நேட்டோ அங்கத்துவ நடவடிக்கை திட்டத்தை விரிவாக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.

ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்ற கருத்திற்கு பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி டேவிட் மிலிபாண்ட் ஆதரவளித்தார். ஜோர்ஜியாவுடனான ரஷ்யாவின் தீவிர நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதனுடனான உறவுகளை ஐரோப்பிய ஒன்றியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று புரூஷெல்ஸ் கூட்டத்தில் டேவிட் மிலிபாண்ட் கேட்டுக் கொண்டார்.

பனிப்போர் காலத்தில் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்ட வனப்புரைகளை எதிரொலிக்கும் வகையில் மில்பாண்ட் தொடர்ந்து கூறியதாவது: "தெற்கு ஓசேஷிய எல்லைகளுக்கு பின்னால் இருந்த ரஷ்ய ஆக்கிரமிப்பு படைகள் உண்மையில் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது... கோரியிலிருந்த ரஷ்ய டாங்குகளும், சேனாகியிலிருந்த ரஷ்ய டாங்குகளும், ஜோர்ஜிய துறைமுகமான போடியை ரஷ்யாவின் முற்றுகையும், இனி வராது என்று நான் நினைத்த நாட்களை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளன" என்றார்.

புரூஷெல்ஸ் கூட்டம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக, நேட்டோவின் பொதுசெயலாளரான நெதர்லாந்தின் Jaap de Hoop Schefer, ஐரோப்பிய அரசுகளின் ஜோர்ஜிய ஆதரவு குழுவிற்கு முழுமனதுடன் தன் ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்தார். செவ்வாயன்று, ஜோர்ஜியாவின் இறையாண்மையை மதிக்கும்படி ரஷ்யாவை கேட்டுக்கொண்ட de Hoop Scheffer, ''ஒரு நாள்" நேட்டோ அதன் பதவியில் ஜோர்ஜியாவை சேர்த்து கொள்ளும் என்று அறிவித்தார்.

எவ்வாறிருப்பினும், குறிப்பிடத்தக்க வகையில் பிரிட்டனை மட்டும் தவிர்த்து, பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய சக்திகள் அமெரிக்க நிர்வாகத்தின் மோதல் போக்கை நிராகரித்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தின் முடிவை நிர்ணயித்தன. ஜோர்ஜியா மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான மோதல்கள், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் முதல்முறையாக ஈராக் யுத்தத்தின் போது ஏற்பட்ட ஆழ்ந்த அழுத்தங்களை மீண்டுமொருமுறை வெளியே கொண்டு வந்துள்ளது.

அமெரிக்காவுடன் தங்கள் உறவுகள் பாதிக்கப்பட்டாலும் ரஷ்யாவுடன் நல்லுறவைத் தக்கவைத்து கொள்ள வேண்டும் என்று பல முக்கிய ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ள உறுதிப்பாடு, அடிப்படை பொருளாதார மற்றும் புவி-அரசியல் நலன்களை அடித்தளத்தில் கொண்டுள்ளது.

பொருளாதாரரீதியாக, ஐரோப்பா ரஷ்யாவிலிருந்து வினியோகிக்கப்படும் எண்ணெய் மற்றும் எரிபொருள்களை பெரிதும் சார்ந்துள்ளது. ஐரோப்பாவிற்கு, குறிப்பாக ஜேர்மனிய வர்த்தகத்திற்கு, ரஷ்யாவும் வளர்ந்து வரும் முக்கிய சந்தையாக உள்ளது. 2008ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் ரஷ்யாவிற்கான ஜேர்மனி ஏற்றுமதிகள் 50 சதவீதத்திற்கும் மேலாக, மொத்தம் 29 பில்லியன் டாலரை எட்டியிருந்தது. பேர்லினிலுள்ள பொருளாதார ஆய்விற்கான ஜேர்மன் பயிலகத்தின் ஒரு பொருளாதார நிபுணரான கிறிஸ்டியன் டிரீகெர், "பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரையில் ரஷ்யா ஒரு வலுவான நாடாகும். இது மற்ற பகுதிகளில் இருக்கும் பலகீனமான வளர்ச்சியை ஈடு செய்கிறது" என்றார்.

ஐரோப்பாவின் பொருளாதார வீழ்ச்சி ஐரோப்பாவிற்குள்ளேயே கார் விற்பனையைப் பாதித்து வரும் நிலைமையில், ஐரோப்பிய கார் தயாரிப்பாளர்களான Daimler, Renault and Fiat போன்ற நிறுவனங்களுக்கு, ரஷ்யா பாரிய முறையில் ஒரு முக்கிய சந்தையாகி உள்ளது.

இன்னும் பொதுவாக, காகசஸ் மற்றும் பால்கன் பகுதிகளில் வளர்ந்து வரும் அமெரிக்காவின் தீவிர நடவடிக்கைகள், ஐரோப்பிய நலன்களுக்கு ஓர் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

சோவியத் ஒன்றியம் சிதைந்த பல ஆண்டுகளுக்கு, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் துணை நாடுகளுக்குள் அமெரிக்காவின் இராணுவ இருப்பை பாரியளவில் அதிகரிப்பதன் மூலம், அதன் நாட்டில் சரிந்து வந்த பொருளாதார செல்வாக்கை ஈடுகட்ட அமெரிக்கா விரும்பியதற்கு முக்கிய மேற்கு ஐரோப்பிய நாடுகள் அதற்கு துணை நின்றன. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமையிலான பேரழிவு மிக்க யுத்தங்களைத் தொடர்ந்து, ஸ்திரமின்மை மற்றும் கண்டங்களில் ஏற்படும் பிரிவுகளுக்கு அமெரிக்கா முக்கிய காரணமாக இருப்பதை மேற்கு ஐரோப்பிய அரசியல் வட்டாரங்கள் தெளிவாக கண்டு கொண்டன.

போலந்து மற்றும் செக் குடியரசில் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை நிறுவுவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் ரஷ்யாவிற்கு ஆத்திரமூட்டியதுடன், வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவ் இடையில் இருக்கும் ஐரோப்பாவை ஒரு முக்கிய அணுஆயுத யுத்தகளமாக மாற்றிவிடும் அச்சுறுத்தியது. ஏற்கனவே 2006 இல், அமெரிக்க சார்பு நிலைநோக்கு கொண்ட நாடுகளை கூடுதலாக கூட்டணிக்குள் (நேட்டோவிற்குள்) கொண்டு வருவதன் மூலம் பால்டிக் மற்றும் காகசஸ் பிராந்தியங்களில் அதன் செல்வாக்கை விரிவாக்குவதற்கான அமெரிக்காவின் ஆர்வத்தை ஜேர்மனியின் வலதுசாரி Konrad Adenaur அமைப்பு எச்சரித்தது.

ஜோர்ஜியாவை விரைவாக நேட்டோ அமைப்பிற்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வாஷிங்டன் வலியுறுத்தியிருப்பது, இந்த ஆண்டு ஆரம்பத்தில் அரசியல் மோதலில் கொண்டு வந்து விட்டது. ஏப்ரலில் புக்காரஸ்ட்டில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில், ஜோர்ஜியா மற்றும் உக்ரைன் நேட்டோ அணியில் விரைவாக சேர்க்கப்பட என்ற தமது திட்டங்களுக்கு, அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஜேர்மனிய தலைமையிலான ஒன்றுபட்ட ஐரோப்பிய எதிர்ப்பை எதிர்கொண்டார். கடைசி நேர சமரசத்தில் மட்டுமே, அவ்விரு நாடுகளின் நேட்டோ அங்கத்துவ முடிவு ஒத்தி போடப்பட்டு, அமெரிக்க ஜனாதிபதிக்கு சங்கடத்தை தவிர்த்தது.

சமீபத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கொசோவோவின் சுதந்திரத்தை அங்கீகரிப்பது என்று முடிவெடுத்ததை அடுத்து, ரஷ்யாவின் பொறுமை மிகவும் சோதிக்கப்படுகிறது ஜேர்மனிய வெளியுறவுத்துறை மந்திரி எச்சரித்தார். "கொசோவோ அங்கீகரிக்கும் சிக்கலான முடிவை தொடர்ந்து, நமது வெளியுறவு கொள்கையில் ரஷ்யாவின் பொறுமை அளவை நாம் அடைந்து விட்டோம் என்பது தெளிவாக தெரிகிறது" என்று Steinmeier ஜேர்மனிய செய்தி ஊடகத்திடம் தெரிவித்தார்.

முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பெல்ட் 2003 இல் கூறிய கருத்துக்கள் இன்றும் ஐரோப்பாவிற்கு தெளிவாக நினைவில் உள்ளன. அப்பொழுது அவர் ஜேர்மனி மற்றும் பிரான்சை ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தில் ஆதரவு அளிக்காததற்காக கண்டித்தார். பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் "பழைய ஐரோப்பாவை" பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிய அவர், சமீபத்திய ஆண்டுகளில் நேட்டோவின் விரிவாக்கம் "ஈர்ப்பு மையம் கிழக்கிற்கு நகர்ந்து விட்டது என்ற பொருளை எடுத்துக்காட்டுகிறது." என்றார்.

அமெரிக்காவுடன் பகிரங்கமாக மோதலை சந்திக்க விரும்பாத போதிலும், முக்கிய ஐரோப்பிய அரசியல்வாதிகள், அமெரிக்க அரசியல் மற்றும் மேற்கு ஐரோப்பிய இராணுவ மேலாதிக்கம் படர்ந்திருந்த பனிப்போர் காலபிளவிற்கு மீண்டும் திரும்புவதை தாங்கள் எதிர்ப்பதாக தொடர்ந்து தெளிவாக்கி வருகின்றனர்.

வெளிப்படையாக தெரியும் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் வீழ்ச்சியானது, ஐரோப்பா அதன் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கான ஒரு சரியான வாய்ப்பு என்று பிரெஞ்சு வணிக நாளேடான Les Echos குறிப்பிட்டுள்ளது.

புதனன்று வெளியிட்ட தலையங்கம் ஒன்றில் அந்த நாளேடு குறிப்பிட்டதாவது: "ஜனாதிபதி சார்க்கோசி மாஸ்கோவிற்கும் டிபிலிசிக்கும் இடையே இராஜாங்கரீதியாக பயணித்தது மிகவும் ஆபத்தானதாகும்." எவ்வாறிருப்பினும், அமெரிக்காவின் பலவீனத்தை சாதகமாக்க ஐரோப்பிய நாடுகளுக்கான வாய்ப்புகளை கோட்டிட்டு காட்டியது. "ஜனாதிபதி புஷ் தன்னுடைய பதவி கால இறுதியில் வலுவிழந்து நிற்பது, ஜோர்ஜியாவில் ஆயுதங்களுக்கு பதிலாக இராஜாங்க முறைகளை பயன்படுத்துவதற்கு ஐரோப்பாவை முன்நிற்க செய்கிறது... ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து அனுகூலங்களையும் கிரெம்ளின் ஏற்கக்கூடிய வகையில் கொண்டுள்ளது.... விசேடமாக, பொருளாதார அடிப்படையில்... ஆனால் ஐரோப்பியர்கள் இந்த துருப்புசீட்டை பயன்படுத்துவார்களா என்பது, அவர்கள் ஒரே குரலில் பேசுவார்களா என்பது கேள்வியாகி உள்ளது. அதைவிட நிச்சயமற்றது எதுவும் அங்கில்லை."

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒரே குரலில் பேச முடியவில்லை என்பதை புரூஷெல்சில் நடந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நிரூபித்துள்ள போதினும், வெளியுறவு கொள்கை மற்றும் அமெரிக்காவுடன் போட்டி போட கூடிய வகையில் அல்லது அதற்கு சவால்விடும் வகையிலான் இராணுவ திறன்களுக்கான தங்களின் சொந்த கருவிகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையை மேற்கு ஐரோப்பிய நாடுகள் உணர்ந்து வருவதை அது வெளிப்படுத்தியது.