World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

"Measure of America" report documents social decay of the United States

US ranks 42nd in life expectancy

"அமெரிக்காவின் மதிப்பீடு" அறிக்கை அமெரிக்காவின் சமூக வீழ்ச்சியை ஆவணப்படுத்துகிறது

உயிர்வாழ்க்கைகால எதிர்பார்ப்பில் அமெரிக்கா 42வது இடத்தில் உள்ளது

By Patrick Martin
19 July 2008


Use this version to print | Send this link by email | Email the author

"அமெரிக்காவின் மதிப்பீடு" என்ற தலைப்பில் புதனன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வறிக்கை, அமெரிக்காவின் மிகமுக்கியமான மற்றும் ஆழ்ந்த சமூக வீழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒருதொகை புள்ளி விபரங்களை அளித்துள்ளது. Oxfam அறக்கட்டளை மற்றும் பிற அமைப்புகளால் நடைமுறைபடுத்தப்பட்டு, கொலம்பியா பல்கலைக்கழக அச்சகத்தால் பதிப்பிக்கப்பட்ட அந்த அறிக்கை, அரசாங்க புள்ளிவிபரங்களை பயன்படுத்தி, பிற அபிவிருத்தி அடைந்த தொழில்துறை நாடுகளுடன் ஒப்பிட்டு அமெரிக்க சமூகத்தின் திடீர் வீழ்ச்சியையும், அமெரிக்காவிற்குள் நிலவி வரும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் ஆவணப்படுத்தியுள்ளது.

குறைந்த அபிவிருந்தி அடைந்த நாடுகளின் சமூக நிலைமைகளை சிறப்பாக ஆராய்ந்திருந்ததுமான, பரவலாக அங்கீகரிக்கப்பட்டிருந்ததுமான ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட முறையை ஏற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆய்வு, முதல்முறையாக ஓர் அபிவிருத்தி அடைந்த நாட்டின் ஆய்வுக்கு அம்முறையை பயன்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முழு விளக்கமாக உள்ள அதன் முடிவுகள், நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினரின் வாழ்க்கை நிலைமைகள் "அமெரிக்க கனவுக்கு" அருகில் இல்லாமல் "மூன்றாம் உலக நாடுகளிற்கு" அண்மையில் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்க கணக்கெடுப்பு நிறுவனத்தால் அளிக்கப்பட்ட 2005 இன் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளின் கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களை அந்த அறிக்கை ஆராய்ந்துள்ளது. அது வீட்டுத்துறை குறைந்த பிணையுள்ள கடன்சந்தையின் உடைவிற்கும், அதை தொடர்ந்து அமெரிக்க பொருளாதாரம் பின்னடைவில் முழ்குவதற்கும் முன்னால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு என்பதால், படுமோசமான உண்மை வாழ்க்கை நிலைமைகளை எடுத்துக்காட்டுவதில் அந்த அறிக்கை கணிசமாக பின்தங்கியுள்ளது. இன்றைய நிலைமையை அடித்தளமாக கொண்ட ஒரு அறிக்கை இன்னும் தெளிவானதாக இருந்திருக்கும்.

இந்த ஆய்வை தயாரித்த மூன்று சமூக விஞ்ஞானிகள், ஓர் அமெரிக்க மனிதவள மேம்பாடு பட்டியலை உருவாக்கியுள்ளனர். அது மத்திய வருமான புள்ளிவிபரங்களையும், சுகாதாரம், உயிர்வாழ்க்கைகால எதிர்பார்ப்புகள் மற்றும் "அறிவுத்துறை வாய்ப்புகள்" (பள்ளிக் கல்விக்கு பின்னர் அதற்கு நேர்விகிதத்தில் கல்லூரி மற்றும் தொழில்முறை பட்டங்களுக்கான நுழைவு எண்ணிக்கை) ஆகியவை குறித்த புள்ளிவிபரங்களை உட்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவானது, தனி பொருளாதார ரீதியான பகுப்பாய்வாக இல்லாமல் ஒரு பரந்த சமூக நிலைமைகளை விளக்குவதாக உள்ளது.

மனிதவள மேம்பாட்டு பட்டியலின்படி, 1990 இல் (கனடாவிற்கு அடுத்து) இரண்டாம் இடத்தில் இருந்த அமெரிக்கா 12வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சரிவு, கிளிண்டன் மற்றும் புஷ் இருவரின் நிர்வாகங்களில் தொடந்துள்ளது, அதாவது 1995 இல் ஆறாவது இடத்திற்கும், 2000 தில் ஒன்பதாவது இடத்திற்கும் மற்றும் 2005 இல் 12வது இடத்திற்கும் அமெரிக்கா வீழ்ச்சி அடைந்துள்ளது.

இன்னும் சிலவற்றில் வீழ்ச்சி மேலும் மோசமாக உள்ளது. குரோசியா, எஸ்தோனியா, போலந்து மற்றும் கியூபா ஆகியவற்றுடன் ஒப்பிட கூடியளவில் குழந்தை இறப்பில் அமெரிக்கா 34 வது இடத்தில் உள்ளது. அமெரிக்க பள்ளி குழந்தைகள் அவற்றின் மறுதரப்பில் உள்ள கனடா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகியவற்றையும் விட திறன்களில் கணிசமாக குறைந்து செயல்படுகின்றனர். மேலும் மக்கள்தொகையில் 14 சதவீதத்தினர், அதாவது சுமார் 40 மில்லியன் மக்கள், அடிப்படை கல்வியறிவிலும், கணித திறனிலும் பின்தங்கியுள்ளனர்.

உலகின் 30 செல்வச்செழிப்பான நாடுகளில் ஒன்றாகவும், பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைப்பில் உள்ளடங்கியுள்ள (OECD) ஒரு நாடாகவும் விளங்கும் அமெரிக்கா, அதிகளவாக 15 சதவீதம் வறுமையில் வாழும் குழந்தைகளையும், நிறைய நபர்களை சிறைகளிலும் கொண்டுள்ளது. இவ்விரண்டும் மொத்த மக்கள் தொகையில் நிகர எண்ணிக்கையிலும் மற்றும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்திலுமாகும். உலக மக்கள் தொகையில் 5 சதவீதம் கொண்டிருக்கும் அமெரிக்கா, உலகளவிலான சிறைக்கைதிகளில் 24 சதவீதத்தினரை கொண்டிருக்கிறது.

அந்த அறிக்கை குறிப்பிடுவதாவது: "பிற வளமான நாடுகளை விட அமெரிக்காவில் தற்போது சமூக இடப்பெயர்வு கடினமானதாக உள்ளது. உண்மையில், ஜேர்மனி, பிரான்ஸ், கனடா அல்லது வடமேற்கு நாடுகள் ஒன்றில் பிறந்த ஓர் ஏழை குழந்தை அதன் வளர்ச்சியடைந்த பருவத்தில் மத்தியதர வர்க்கத்திற்குள் மாறுவதற்கு உள்ள வாய்ப்புகள் அமெரிக்காவில் அதுபோன்றதொரு சூழலில் பிறந்த குழந்தை மாறுவதற்கு உள்ள வாய்ப்புகளை விட கூடுதலாக உள்ளது."

ஒட்டுமொத்த உயிர்வாழ்க்கைக்கால எதிர்பார்ப்பில், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் அனைத்து மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளுக்கு பின்னால் மட்டுமின்றி, இஸ்ரேல், கிரீஸ், சிங்கப்பூர், கொஸ்டரிகா மற்றும் தென்கொரியா ஆகியவற்றிற்கும் பின்னால் அமெரிக்கா ஆச்சரியப்படும் வகையில் 42வது இடத்தில் உள்ளது. இந்த நாடுகளின் தனிநபருக்கான சுகாதார செலவுகளை விட இருமடங்கு அதிகமாக அமெரிக்கா செலவிடுகிறது, ஆனால் குடிமக்கள் குறைந்த ஆயுள் மட்டும் வாழ்கிறார்கள்.

இந்த அறிக்கையில் இதற்கான இரண்டு முக்கிய காரணிகள் கண்டறியப்பட்டன. முதன்மையாக வறுமை மற்றும் கல்வியறிவின்மையின் காரணமாக கொழுப்பு சார்ந்த ஒரு தொற்றுநோய் மற்றும் 47 மில்லியன் அமெரிக்கர்களுக்கு சுகாதார காப்பீடுயின்மை ஆகியவையே இந்த இரு காரணிகளாகும். அமெரிக்கர்களின் இறப்புக்கான 15 முதன்மை காரணங்களில் கொலை மற்றும் தற்கொலையும் இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.

நியூயோர்க்கை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஓர் இலாபம்சாரா ஆராய்ச்சி குழுவான காமன்வெல்த் நிதியத்தால் வியாழனன்று வெளியிடப்பட்ட இரண்டாவதொரு அறிக்கையால் அமெரிக்காவின் சுகாதாரத்துறை நெருக்கடி அடிக்கோடிடப்பட்டது. அமெரிக்காவில் 75 மில்லியன் மக்கள் (அதாவது மொத்த மக்கள்தொகையில் கால் பகுதியினர்) காப்பீட்டின்றியோ அல்லது தகுத்த காப்பீடின்றியோ இருக்கிறார்கள் என்பதை இந்த அறிக்கை கண்டறிந்தது. காமன்வெல்த் நிதியத்தின் தலைவர் கரென் டேவிஸ், விலையுயர்வு மற்றும் சுகாதார குறைபாடுகளை சுட்டிக்காட்டினார். "வாய்ப்புகள் படுமோசமாக உள்ளன என்பதே ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பாகும்," என்று அவர் தெரிவித்தார்.

காப்பீட்டுத்தொகை வழங்குவதை தவிர்க்க பல பில்லியன் கணக்கான டாலர்களை செலவிடும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் அதிகளவிலான நிர்வாக கட்டணங்கள் ஒரு முக்கிய காரணியாகும். பல காப்பீட்டு நிறுவனங்களால் சுரண்டப்படும் இலாபம் "நிர்வாக" செலவுகள் என்ற பெயரில் மறைக்கப்படுகின்றன. 5 சதவீத நிர்வாக செலவுகளுடன் தனியார் சுகாதாரத்துறை காப்பீட்டாளர்களை கொண்டுள்ள ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க சுகாதாரத்துறை செலவுகளில் நிர்வாக செலவுகள் 7.5 சதவீதத்தை எடுக்கின்றன. அரசு காப்பீட்டு முறைகளைக் கொண்டிருக்கும் கனடா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒரு சதவீதம் அல்லது அதற்கும் குறைவாகவே செலவாகிறது.

37 பிரத்யேக சுகாதாரத்துறை பட்டியலை ஆராய்ந்த காமன்வெல்த் ஆய்வின்படி, மொத்தத்தில் சில முன்னேற்றங்களை கொண்டுள்ள சில பிரிவுகளிலும் கூட, அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி விட்டு பட்டியலில் பிற நாடுகள் பெருமளவில் முன்னேற்றமடைந்துள்ளன. சான்றாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் 75 வயதிற்கு குறைந்த மக்களில் தடுக்க கூடிய இறப்பு எண்ணிக்கையை 100,000 நபர்களுக்கு 115 ஆக இருந்ததை 110 ஆக குறைத்துள்ளது. எவ்வாறிருப்பினும், பிரான்ஸ், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பிற நாடுகள் இதைவிட சிறப்பாக செய்துள்ளன. தற்போது இந்த முறைமைகளில், வளர்ச்சி அடைந்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா கடைசியில் அயர்லாந்து மற்றும் போர்த்துகல்லுக்கு கீழ் உள்ளது.

அமெரிக்காவின் மதிப்பீடு எனும் இந்த அறிக்கை, அனைத்து 50 மாநிலங்களையும் மற்றும் 438 பாராளுமன்ற மாவட்டங்களையும் ஒரு மதிப்பீட்டு அட்டவணையில் அளிப்பதற்காக, கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களை பகுத்தாராய்கிறது. இதன்மூலம் அமெரிக்காவிற்குள் நிலவும் பரவலான சமூக பிளவுகளையும், குறிப்பாக புவியியல் அடிப்படையிலான பிளவுகளை ஆவணப்படுத்துகிறது. அமெரிக்க பொருளாதார கணக்கெடுப்பு மேற்தட்டு வர்க்கத்தின் அடிப்படை வருமான வழிகளான ஆதாயபங்கு, வட்டி, முதலீட்டு இலாபங்கள் மற்றும் வியாபார இலாபங்களை விடுத்து, கூலி மற்றும் சம்பள வருவாயை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வதால் வருவாய் சமத்துவமின்மையின் அளவை இந்த அறிக்கை பெருமளவில் குறைத்து காட்டுகிறது. ஆனால் இந்த நிபந்தனைகளுடனும் கூட, இதன் கண்டுபிடிப்புகள் படுமோசமாக உள்ளன.

"2006 இல் மேல் ஐந்து இடத்தில் இருந்த அமெரிக்க குடும்பத்தினரின் சராசரி வருமானம் இறுதி ஐந்து இடத்தில் இருந்தவர்களை விட அதிகபட்சம் 15 மடங்கு அதிகமாகும் அல்லது 11,352 டாலருக்கு எதிராக 168,170 டாலராகும்." என்று இவ்வறிக்கையின் ஒட்டுமொத்த தொகுப்பு குறிப்பிடுகிறது. மேல்மட்டத்தில் இருக்கும் 1 சதவீத அமெரிக்க குடும்பத்தினர் குறைந்தபட்சம் தேசிய செல்வவளத்தில் மூன்றில் ஒரு பங்கு கொண்டுள்ளனர், அதேசமயம் பட்டியலில் கீழிருக்கும் 60 சதவீதத்தினர் மொத்தத்தில் வெறும் 4 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளனர்.

ஆசிரியர்கள் பின்வருவதை அவதானித்துள்ளனர்: "வருமான பகிர்வு மற்றும் செல்வவளத்தில் வளர்ந்து வரும் சமத்துவமின்மை அமெரிக்கர்களிடையே பின்வரும் ஆழ்ந்த கேள்வியை எழுப்பியுள்ளது: இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்த மத்திய வர்க்க தேசியம் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பிழைக்க முடியுமா? அல்லது அது பாரிய இரு துருவங்களுடைய நாடாக பிளவுப்படுகிறதா? எவ்வித தீர்வும் வரையறுக்காமல், "இந்த கேள்விகளுக்கான பதில்கள்... அமெரிக்காவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும், என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்."

அங்கு மாநிலத்திற்கு மாநிலம், கிராமங்களுக்கும் நகர்புறங்களுக்கும் இடையிலும், வடகிழக்கு மற்றும் பசிபிக் கடற்கரை போன்ற வளமான பகுதிகளுக்கும் தெற்கு மற்றும் அப்பலாசியன் பிராந்தியம் போன்ற வறுமையான பகுதிகளுக்கும் இடையே வருமானம், சுகாதாரம் மற்றும் கல்வி வாய்ப்புகளில் ஆச்சரியப்படத்தக்க ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

வெர்ஜீனியாவில் இருந்து நியூ ஹம்ப்ஷேயர் வரையிலான கிழக்கு கடற்கரையை ஒட்டி மத்திய வருமான அடிப்படையில் முதன்மையான பத்து மாநிலங்கள் அமைந்துள்ளன. மேற்கு வெர்ஜீனியாவும், அலபாமா, மிசிசிப்பி, லூசியானா மற்றும் அர்கன்சாஸ் ஆகிய தென்கோடி நான்கு மாநிலங்கள் உட்பட ஐந்து மாநிலங்கள் அடிமட்டத்தில் அமைந்துள்ளன. 2005 இல் தொகுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பு புள்ளிவிபரங்கள், ஹூரிகேன் கத்ரீனாவினால் அம்மாநிலங்களில் மூன்று சீரழிக்கப்படுவதற்கு முன்னதாக எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அங்கு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு உள்ளும் பாரிய ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. அமெரிக்காவில் வறுமையான பாராளுமன்ற மாவட்டம் தெற்கில் இல்லை, அது கலிபோர்னியாவின் மத்திய ஆற்றுப்படுகையில், ஜோன் ஸ்டீன்பெக் The Grapes of Wrath எழுதிய காலத்தில் இருந்ததிலிருந்து பெருமளவில் முன்னேறாத நிலைமைகளின் கீழ் பல்லாயிரக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் வாழும் பிரெஸ்னோ மற்றும் பேக்கர்ஸ்பீல்டை சுற்றி உள்ளது.

இருபதாவது மாவட்டமான கலிபோர்னியாவில், வயது நிரம்பியவர்களில் 6.5 சதவீதத்தினர் மட்டுமே கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளனர் மற்றும் மத்தியதர குடும்பத்தினரின் வருமானம், அமெரிக்க வறுமை கோட்டு வரையறைக்கும் கீழாக 16,767 டாலராக உள்ளது. இதற்கிடையில், பணக்கார 20 பாராளுமன்ற மாவட்டங்களில், சிலிக்கான் வலி மற்றும் உயர்மட்ட நகரமான லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் டீகோ உட்பட 10 மாவட்டங்கள் கலிபோர்னியாவில் உள்ளன.

மிகவும் பணக்கார பாராளுமன்ற மாவட்டம், பலவகைப்பட்ட குடிமக்களைக் கொண்ட 14 காவதாக உள்ள நியூயோர்க் மாவட்டமாகும்: இதில் உள்ள வயது நிரம்பியவர்களின் 62.6 சதவீதத்தினர் கல்லூரி பட்டம் பெற்றுள்ளனர் மற்றும் மத்தியதர குடும்ப வருமானம் ஆண்டுக்கு 51,139 டாலராக (மூலதனத்தில் இருந்து வரும் வருமானத்தை சேர்க்காமல் கூலி மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது) உள்ளது. ஒரு குறுகிய சுரங்கபாதை பயணத்தைக் கொண்டிருக்கும் பிரோன்க்ஸ் 16 வது மாவட்டமாக உள்ளது, இது அமெரிக்காவின் ஐந்து வறுமையான மாவட்டங்களில் ஒன்று, இங்கு வயது நிரம்பியவர்களில் 8.6 சதவீதத்தினர் மட்டுமே கல்லூரி பட்டம் பெற்றுள்ளனர், இங்கு மத்தியதர குடும்ப வருமானம் 19,113 டாலர் ஆகும்.

இணை-ஆசிரியர் ஷராஹ் பர்ட்-ஷார்ப்ஸ் அறிக்கையின் விபரங்களை தொகுத்து கூறும் போது, "சில அமெரிக்கர்கள் 30 முதல் 50 ஆண்டு மற்றவர்களுக்கு பின்னால் எல்லா இடங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள், பிரச்சனை என்று வரும்போது, நாம் அனைவரும் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத்தரம் என்று பேசுகிறோம்." என்று குறிப்பிடுகிறார். பணக்கார நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா விளங்கும் போதினும், "அனைத்து அமெரிக்கர்களுக்கும் சிறந்த வாழ்க்கையை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் வசதிகளை அளிப்பது குறித்து வரும்போது, அது வருந்தத்தக்க அளவில் பின்தங்கி நிற்கிறது."

அமெரிக்காவின் மதிப்பீடு அறிக்கையில் உள்ள புள்ளிவிபரங்களை தொகுத்து அளிப்பது அமெரிக்க ஊடக மற்றும் அரசியல் அமைப்பின் பொறுப்பாகும். இந்த அறிக்கை மிகவும் பெருமை வாய்ந்த அமெரிக்க கல்லூரிகளில் ஒன்றான கொலம்பியா பல்கலைக்கழகத்தால் பதிப்பிக்கப்பட்டது, மற்றும் அதன் இணை-ஆசிரியர் அவர்களின் கண்டுபிடிப்புகளை அறிவிக்க தலைநகரில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் முக்கிய செய்திதாள்களில் ஒன்று கூட இதை பொருட்படுத்தவில்லை என்பதுடன் இந்த ஆய்வு குறித்து எந்த மாலை நேர தொலைகாட்சி ஒளிபரப்புகளிலும் கூட காட்டப்படவில்லை.

கலிபோர்னியாவின் பிராந்திய பத்திரிகை, சோர்வுற்று கடைசி இடங்களில் 20வது பாராளுமன்ற மாவட்டமாக உள்ளதை குறிப்பிட்டது, ஆனால் விரிவான கண்டுபிடிப்புகளை வெளியிடவில்லை. பாரியளவில் தீவிர-வலதுசாரி வானொலி கலந்துரையாடல் தொழில்துறைக்கு உதவும் ஒரு வலைத் தளமான Talk Radio News Service ஒரு விடயத்தை குறிப்பிட்டது. "அறிக்கை: பெரும்பாலான அமெரிக்கர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளை விட சிறப்பாக வாழ்கின்றார்கள்" என்று நம்பத்தகாத தலைப்பிட்ட அது கண்டுபிடிப்புகளை தலைகீழாக எடுத்துக்காட்டியது.

ஊடகங்களில் மெளனம் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களின் மெளனத்துடன் சரியாக பொருந்துகிறது. வறுமை நிறைந்த கிழக்கு கென்டொக்கி, நியூ ஆர்லீன்ஸ் மற்றும் டெட்ராய்டு உள்நகரம் ஆகிய பகுதிகளில் ஓபாமா அல்லது மெக்கைனின் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட போதினும், இந்த கண்டுபிடிப்புகள் குறித்து அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை.

அந்த வகையில், மிசிசிபி, லூசியானா, அர்கன்சாஸ், அலபாமா மற்றும் மேற்கு வெர்ஜீனா ஆகிய மிக ஏழ்மையான ஐந்து மாநிலங்களில் ஓபாமாவின் பிரச்சாரம் சிறிது முயற்சி எடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடைசி நான்கும் வெளிப்படையாகவே குடியரசு கட்சியால் கைவிடப்பட்டுள்ளது. மிசிசிபியின் பெரும்பாலான கறுப்புஇன மக்கள், முக்கிய கட்சியின் முதல் ஆபிரிக்க-அமெரிக்க வேட்பாளருக்கு வாக்குகளை அளிப்பார்கள் என ஓபாமா பிரச்சாரம் நம்புகிறது.

உண்மையில், அமெரிக்க சமூகத்தின் பாரிய வீழ்ச்சியை சரிப்படுத்த இரு கட்சிகளுமே எந்த கொள்கைகளையும் முன்னிறுத்த முடியாது. வறுமை, வேலைவாய்ப்பின்மை, கல்வியறிவின்மை, நோய் மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றால் சூறையாடப்பட்டு, பின்னடைந்து செல்லும் ஒரு சமூகத்தை விளக்கிக்காட்ட வெளியாகிய தொடர்ச்சியான ஆய்வுகளில் அமெரிக்காவின் மதிப்பீடு மற்றும் காமன்வெல்த் நிதியம் ஆகியவற்றின் ஆய்வுகளே சமீபத்தில் வெளியானவை. சமூக பேரழிவுக்கு இருகட்சி முறை எந்த பதிலும் அளிக்க முடியாது, ஏனென்றால் தனக்கு தேவையான மேலும் அதிகமான செல்வவளத்திற்கு அடித்தளமிடுவதற்காக நாட்டை சுரண்டும் நிதியியல் மேற்தட்டுக்களால் சிதைக்கப்பட்ட ஒரு கருவியாகி உள்ளன.