WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Obama continues lurch to the right on Iraq war and
militarism
ஈராக் போர் மற்றும் இராணுவவாதத்தில் ஒபாமா வலதிற்கு சாய்வதைத் தொடர்கிறார்
By Bill Van Auken
4 July 2008
Use this version to print
|
Send this link by
email |
Email the
author
ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கூடிய பரக் ஒபாமா வலது புறம்
தலைசுற்றும் வகையில் திரும்புகையில் குடியரசுக் கட்சியின் செயற்பட்டியலில் இருக்கும் முக்கிய அம்சங்களை ஏற்று,
ஆரம்பப் பிரச்சாரத்தில் இருந்த தன்னுடைய "நீங்கள் நம்பக்கூடிய மாற்றங்கள்" என்று முன்வைத்த நிலைப்பாடுகளை
தூக்கி எறிவது என்பது, அன்றாட வாடிக்கைச் செயலாகிவிட்டது.
புதன், வியாழன் அன்று உரைகளிலும் செய்தியாளர் கூட்டங்களிலும் ஒபாமா தன்னுடைய
பிரச்சாரத்தை அமெரிக்க இராணுவவாதத்திற்கு ஆதரவு என்ற வகையில் தொடர்ந்து அடையாளம் காட்டினார்;
அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட கால அட்டவணைக்குள் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க போர்ப்படைகளை திரும்பப்
பெறுவதாக ஆரம்பப் பிரச்சாரத்தில் கூறியிருந்த உறுதிமொழிகளில் இருந்து பின்வாங்கிவிட்டார்.
புதனன்று கோலரோடோ ஸ்ப்ரிங்ஸில் ஒபாமா தேசியப் பணிகள் பற்றி ஆற்றிய உரை
ஒன்று, அமெரிக்க இராணுவத்தை பெரிதும் பாராட்டியதோடு அதன் எண்ணிக்கையை உயர்த்தப் போவதாகவும்
உறுதியளித்தது.
அமெரிக்கப் படைகள், அமைதிப் பிரிவுகள் மற்றும் பிற சிவிலிய அமைப்புக்களின் விரிவாக்கத்தை
பற்றி திட்டமிடுகையில், ஒபாமா இளம் அமெரிக்கர்களுக்கு அவர் விடும் அழைப்புக்களில் முக்கியமான பிரிவு இராணுவம்
என்பதை தெளிவாக்கினார்.
செப்டம்பர் 11, 2001 நியூ யோர்க் நகரம் மற்றும் வாஷிங்டன் நகரத்தின்மீது
நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை பற்றி ஆரம்பத்தில் பேசிய அவர், புஷ் நிர்வாகம் "சேவைக்கு அழைப்பு
விடுத்தல்", "தியாகத்தை பகிர்ந்து கொள்ளுதல்" ஆகியற்றை செய்யாததற்காக ஒப்பாரி வைத்தார்.
"நாடு மற்றும் எமது மதிப்பீடுகளை காப்பாற்றுதலை விட பெரிய சவால் ஏதும்
இல்லை" என்று தொடர்ந்த அவர், "எழுச்சி பெற்றுள்ள தாலிபானுடன் போரிட்டுவருவதற்கும்" "ஈராக்கிய
பாலைவனங்கள் நகரங்களை காப்பாற்றியும் வரும்" அமெரிக்கத் துருப்புக்களின் நடவடிக்கைகளை புகழ்ந்தார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிய சமூகங்களை முறையாக அழிப்பதில் என்ன
"மதிப்பீடுகள்" இயைந்துள்ளன, உலகில் எண்ணெய் வளமுள்ள பகுதிகளில் அமெரிக்க மேலாதிக்கத்தை திணிப்பதற்கு
மில்லியன் கணக்கான குடி மக்களை கொலை செய்தல் அல்லது உறுப்புக்களை இழக்கச் செய்தலில் என்ன மதிப்பீடுகள்
உள்ளன என்பது பற்றி ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் அதிகம் விவரிக்கவில்லை.
மாறாக, "எமது படைகளுடைய சுமையைக் குறைக்க வேண்டும், அதே நேரத்தில்
21ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். இந்த "சவால்கள்
போர்கள் தொடர்ந்து நடத்தப்படவும், புதிய போர்கள் தொடக்கப்பட வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளன
என்பது தெளிவு. ஒரு ஜனாதிபதி என்னும் முறையில் தான், "அமெரிக்காவின் புதிய தலைமுறை ஒன்றை எமது
இராணுவத்தில் சேர அழைப்புவிடுகிறேன்" என்றார்; அதேவேளை அமெரிக்காவின் தரைப்படையில் 65,000
பேர்களும் கடற்படையில் 27,000 பேர்களும் அதிகரிக்கப்படவும் செய்யப்படும் என்று உறுதிமேற்கொண்டார்.
இராணுவம் தற்போதைய ஆள்சேர்ப்பு இலக்கை ஈடு செய்யாமல் திணறும் நிலையில்,
இந்தத்திட்டம் ஒபாமா கருத்தில் வைத்திருக்கும் தேசியப் பணி இராணுவ கட்டாய சேவை மீண்டும்
கொண்டுவரப்படுமா என்ற உண்மை வினாவை எழுப்புகிறது.
வட டகோட்டாவில், பார்கோவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் வியாழனன்று
முன்னாள் இராணுவத்தினர்களிடையே பேசுகையில், இக்கோடைக்காலம் அமெரிக்கா ஆக்கிரமித்துள்ள ஈராக்
நாட்டிற்கு செல்ல இருக்கையில் ஈராக் பற்றிய தன்னுடைய நிலைப்பாட்டை "சீரமைக்க இருப்பதாக" கூறினார்.
ஈராக்கில் இருந்து போரிடும் துருப்புக்கள் 16 மாதங்களில் திரும்பப் பெறப்படும்
என்று முன்பு கூறியிருந்த உறுதி மொழியில் இருந்து பின்வாங்கிய இவ்வேட்பாளர் கூறினார்: "களத்தில் இருக்கும் தளபதிகளை
கேட்பேன் என்று எப்பொழுதும் நான் கூறியுள்ளேன். படைகள் திரும்பப்பெறப்படும் வேகம் அங்கு ஸ்திரத்தன்மையைப்
பராமரித்தல், எமது துருப்புக்களின் பாதுகாப்பு இவற்றின் தேவையினால் ஆணையிடப்படும் என்று நான் எப்பொழுதும்
கூறியுள்ளேன்." இதற்கிடையில் ஈராக்கில் தற்போதைய மட்டத்தில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு இருப்பதற்கு தன்னுடைய
எதிர்ப்பை கூறுகையில் ஆப்கானிஸ்தானிற்கு படைகள் அனுப்பப்பட வேண்டியதின் மிக அவசரத் தேவையோடு இணைத்துப்
பார்க்க வேண்டும் என்றார்.
ஒபாமாவின் ஆலோசகர்கள் இன்னும் வெளிப்படையாக கூறுகின்றனர். அவருடைய
உயர்மட்ட வெளியுறவுக் கொள்கை ஆலோசகரும், முன்னாள் கிளின்டன் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு
ஆலோசகராக இருந்தவருமான ஆன்டனி லேக், செய்தி ஊடகத்திடம் வரவிருக்கும் ஜனநாயக நிர்வாகம் ஈராக்கில்
"தெளிவான பணிகளுக்காக எஞ்சியிருக்கும் படைகளை தக்க வைத்துக் கொள்ளும்" என்றும், "தேவையானால்
பழையபடி தாக்குதலுக்கு தயாராக இருக்கும்" என்றும் கூறினார். "இது ஒன்றும் தாக்கி, ஓடிவிடும் விஷயம் அல்ல;
நாம் பொறுத்திருந்து பார்ப்போம்" என்று லேக் கூறினார்; கிளின்டன் நிர்வாகத்தின் "மனிதாபிமான" வகைக்
குறுக்கீடுகளை சோமாலியா, ஹைட்டி, பால்க்கன்களில் செய்வதற்கு வடிவமைத்தவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
இதற்கிடையில், தற்போதைய பாதுகாப்பு மந்திரி ரொபேர்ட் கேட்ஸை அவருடைய
பதவியிலேயே தொடரவைப்பதற்கு ஒபாமா முயல்வார் என்ற ஊகமும் எழுந்துள்ளது; இடைவெளியின்றி
"பயங்கரவாதத்தின் மீதான போரின்" தொடர்ச்சியாக இருப்பதை உறுதிப்படுத்துதற்கு இவருடைய பிரச்சாரம்
இராணுவம், உளவுத்துறை மற்றும் போலீஸ் முகவாண்மைகளில் தொடரான இடைமருவு குழுக்களில் பங்கு பெறுவதற்கு
உடன்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜனநாயகக் கட்சி ஆரம்ப கட்ட தேர்தல்களில் ஈராக் போருக்கு எதிரி எனக்
காட்டிக் கொண்டவிதத்தில் கணிசமான வெற்றிக்கு வித்திட்டு, அவருடைய எதிரி ஹில்லாரி கிளின்டனை போர் தொடர
இசைவு கொடுத்ததற்காக குற்றம் சாட்டியபின், ஒபாமா இப்பொழுது தன்னை மற்றொரு "போர்க்கால
ஜனாதிபதி" எனக் காட்டிக் கொள்ள முற்படுகிறார்.
இப்படி ஒபாமாவின் பிரச்சாரத்தால் ஏற்பட்ட வலதுபுறப்பாய்ச்சல் முதலாளித்துவ
செய்தி ஊடகத்தில் கணசமான கருத்துக்களை எழுப்பும் வகையில் அப்பட்டமாக உள்ளது; அவற்றில் சில மக்களில்
கணிசமான அடுக்குகளை தேர்தல் வழிவகைகளில் இருந்து விரோதப்படுத்தக்கூடும் வகையில், முழு இரு கட்சி முறையின்
மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் இந்த சூழ்ச்சிக் கையாளல் அப்பட்டமாக இருக்கிறது என்று இது பற்றி
கவலைப் பிரதிபலிக்கின்ன்றன, சில அளவுக்கு மீறி மகிழ்கின்றன.
உதாரணமாக
Christian Science Monitor, வியாழனன்று,
ஒபாமாவின் வலதுபுறத்திற்கு பாய்தல், பெரும் கூட்டமாக ஒபாமாவிற்காக ஆதரவு கொடுத்த இளைய
வாக்காளர்களிடம் குறிப்பாக ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் மற்றும் பழைய பாணி அரசியல் பற்றிய அவரது
காட்சியால் மயக்கம் தெளியக்கூடும்" என்று சுட்டிக்காட்டியது.
இப்படி பெருமை பேசும் பிரிவில் புதனன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் "புஷ்ஷின்
மூன்றாம் பதவிக் காலம்" என்ற தலையங்கம் ஒன்று வெளியாயிற்று. புஷ் நிர்வாகத்தை ஆதிக்கத்திற்குள்
கொண்டிருக்கும் வலதுசாரி பிரிவுகளின் கருத்துக்களை பொதுவாகப் பிரதிபலிக்கும் இதழின் ஆசிரியர் குழு ஜோர்ஜ்
புஷ்ஷின் மூன்றாவது பதவிக்காலமாக மெக்கெயின் வெற்றி பெறுதல் போய்விடக்கூடும் என்று ஒபாமா தொடர்ந்து
கூறும் எச்சரிக்கைகளை சுட்டிக் காட்டியுள்ளது.
"தான்தான் அதற்காகப் போட்டியிடுகிறேன் என்பதை சிலர் கவனித்து விடுவாரோ
என அவர் கவலைப்படுகிறார் போலும்" என்று தலையங்கம் உறுதிபடக் கூறியது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு புஷ் நிர்வாகத்தின் மிக அதிகமான முறையில் பாதிப்பு
ஏற்படுத்திய தொலைபேசி ஒட்டுக்கேட்பு திட்டத்தை சட்டபூர்வமாக்க தான் வாக்களிப்பதாக ஒபாமா கூறியதையும்
இது சுட்டிக் காட்டியுள்ளது; அதே நேரத்தில் இவர், அதை செய்வதற்கு உதவிய, சட்டவிரோத ஒற்று நடவடிக்கைக்கு
உதவிய தொலைபேசி நிறுவனங்களுக்கு, தக்க பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். ஈராக்கில் இருந்து
அமெரிக்கப் போர்ப்படைகள் திரும்பப் பெறுவதற்கான கால அட்டவணை பற்றிய உறுதிமொழிகள் இப்பொழுது
இல்லை என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் "நம்பிக்கையை அடிப்படையாக" கொண்ட சமூகத்திட்டங்கள்
அரசாங்கத்தால் ஏற்கப்படும் என்ற கருத்தை அவர் தழுவியுள்ளதும் கூறப்பட்டுள்ளது; இதைத்தவிர அரசியல் வலதில்
துப்பாக்கிகளில் இருந்து மரண தண்டனை வரை இருக்கும் சூடான கருத்துக்கள் பற்றிய அவருடைய திட்டமிடப்பட்ட
தொடரான அறிக்கைகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.
மற்றொரு மக்களை திருப்திப்படுத்தும் வகையில் ஒபாமா பிரச்சினையின் அழைப்பு
இவர் NAFTA
வை எதிர்த்து தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பாதுகாப்புப் பார்வைக்கு பரிவுணர்வு காட்டுகிறார் என்ற கருத்தை
முறிப்பது ஆகும். சமீபத்தில் Fortune
இதழிற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் வேட்பாளர் அறிவித்ததாவது: "தடையற்ற வணிகத்தை நான் எப்பொழுதும்
ஆதரித்தவன்." இதைத்தொடர்ந்து அவர் இந்த பொருள் பற்றிய விவாதத்தில் ஆணித்தரமான வனப்புரை கூடுதலான
சூட்டை கொடுத்துள்ளது என்றும் கூறினார்.
"இப்பொழுது அவர் ஒரு பொதுத் தேர்தலில் இருக்கிறபடியால், இவர் வணிக
சமூகத்தை அதிகம் அச்சுறுத்த முடியாது" பங்குச் சந்தை சிறிதும் பயப்படவில்லை என்று தோன்றுகிறது.
Center for Responsive Politics
கொடுத்துள்ள புள்ளிவிவரங்கள்படி, ஒபாமா கிட்டத்தட்ட $8 மில்லியனை பாதுகாப்பு, முதலீட்டு நிறுவனங்களில்
இருந்து நன்கொடையாக பெற்றுள்ளார்; இது அவருடைய குடியரசுக் கட்சி போட்டியாளர் மெக்கெயின்
பெற்றதைவிடக் கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகும்.
பத்திரிகையின் தலையங்கம் நியாயமான முறை என்றாலும், அவநம்பிக்கை மிகுந்த
தன்மையில் முடிவுரையாக கூறுகிறது; "அடுத்த ஜனாதிபதி, ஜனநாயகக் கட்சியோ அல்லது குடியரசுக் கட்சியோ,
ஒப்புக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் திரு புஷ்ஷின் வெளியுறவு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையை
தழுவத்தான் நேரிடும்."
இறுதியில் வோல் ஸ்ட்ரீட்டின் இந்த வலதுசாரிக் குரல் ஒபாமாவை அவருடைய
கொள்கைகளுக்காக குறைகூறவில்லை; மாறாக இவருடைய சந்தேகத்திற்கு உரிய "அரசியல் குணநலனை" குறைகூறுகிறது;
இதன் பொருள் ஆளும் உயரடுக்கு கோரும் வெளிநாட்டில் போர்களை நடத்தவும், உள்நாட்டில் தொழிலாள
வர்க்கத்தின்மீது தாக்குதல்களை தொடரவும் இவர் நம்பிக்கைக்கு உகந்தவரா என்பது பற்றி ஐயங்கள் எழுப்பப்படுகின்றன.
ஒபாமா வலதிற்கு பாய்ந்துள்ளது இரு பெரும் கட்சிகளின் கொள்கைகளும் மக்களின்
செல்வம் கொழிக்கும் ஒரு சிறிய அடுக்கினால் தீர்மானிக்கப்படும் என்பதின் விளக்கிக்காட்டல் ஆகும்; அந்த அடுக்கு
அமெரிக்க மக்களின் உறுதி, உணர்வுகள் ஆகியவற்றை அவமதிக்கின்றது.
ஒபாமாவின் பிரச்சாரத்தால் தெளிவாகக் கூறப்பட்டுவரும் வலதுசாரி
செயற்பட்டியல், அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான உழைக்கும் மக்கள், புஷ் நிர்வாகத்துடன் அடையாளம்
காணப்படும் போர் கொள்கை, வாழ்க்கைத்தர தகர்ப்புக்கள் மற்றும் அரசியல் பிற்போக்குத்தனம் இவற்றிற்கு
தங்களின் ஆழமான குரோதத்தை வெளிப்படுத்துதற்கு சரியான வழிவகைகள் இல்லாமல், தங்களை அரசியல் ரீதியாக
வாக்குரிமையைப் பறிக்கும் மற்றொரு தேர்தலுக்கான அரங்கை வடிவமைக்கிறது.
ஆரம்ப கட்ட தேர்தல் வெற்றிகளை அடுத்து ஒபாமா விரைவாக வளர்ந்துள்ள விதம்
ஏமாற்றுத்தன அரசியல் மற்றும் பொதுக் கருத்தை திரித்தல் என்ற வகையில் அவருடைய பிரச்சாரம்
பொதிந்துள்ளதைத்தான் தொடக்கத்தில் இருந்து காட்டுகிறது. கீழிருந்து எழுச்சி என்பதை இது பிரதிபலிக்கவே
இல்லை; மாறாக ஆளும் மேற்தட்டின் சில கூறுபாடுகள் கொள்கையில் உறுதியான ஆனால் குறைந்த வரம்பு உடைய
மாறுதல்கள் சிலவற்றைக் கொண்டுவரும் முயற்சியைத்தான் காட்டியது, அதேவேளை உள்நாட்டிலும் வெளியிலும்
அமெரிக்க ஏகாதிபத்தியம் செல்வாக்கிழந்துள்ள நிலைமைகளின் கீழ் அதற்காக ஒரு புதிய முகத்தை அளிக்கும்
வகையில் ஒபமாவை அது பயன்படுத்துகிறது.
மாற்றத்தை நாடும் மக்களின் பரந்த அடுக்குகளை ஏமாற்றும் வகையில் ஒபாமா
பிரச்சாரத்தைப் பயன்படுத்தும் முயற்சி அமெரிக்க "இடது" என்று கூறிக் கொள்ளும் பெரும்பாலோரின்
செயலூக்கமான, முக்கியமான ஆதரவைப் பெறுகிறது. இவர்கள் ஜனநாயகக் கட்சியினரின் வலதுசாரி
வளைவரைகோட்டை மூடி மறைக்க பார்க்கின்றனர்; அல்லது அதற்கு வக்காலத்து வாங்குகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தேவையானதைத்தான் ஒபாமா செய்துகொண்டிருக்கிறார் என்ற அவநம்பிக்கை வாதத்தை
அவர்கள் முன்வைக்கின்றனர்; அமெரிக்க மக்கள் பிற்போக்காளர்கள், வலதுசாரிகள் என்றும் அவர்கள் வாதிடுவர்.
மற்றவர்கள் அவர் அமைப்புமுறையின் அழுத்தத்திற்கு எதிர்வினையாற்றுகிறார் என்றும் இடதில் இருந்து அழுத்தம்
கொடுப்பதின் மூலம் சரியான போக்கிற்கு தள்ளப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
இரண்டாவது சிந்தனைப் போக்கிற்கு தக்க உதாரணமாக இருப்பது இடது
தாராளவாத செய்தியாளர் அரியன்னா ஹபிங்டன் ஆவார்; தன்னுடைய வலைத் தளத்தில் ஒபாமாவிற்கு ஆலோசனை
தெரிவித்து, "மையத்துடன் இணைக்கொள்வது என்பது தோல்வியுறும் மூலோபாயம்" என்று அவரை எச்சரித்துள்ளார்.
மாறாக, "2004ல் வாக்குப் போடாத 82 மில்லியன் மக்களுக்கு
அழைப்புவிடுமாறு" அவர் இவரிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: "ஆரம்பத்தில் ஒபாமா பிரச்சாரத்தின்
அடிப்படையே வாக்காளர்கள் அடிப்படை மாறுதலுக்கு ஊக்கம் பெற வேண்டும் என்று தொடங்கவில்லையா?"
உண்மையில், ஒபாமா இப்பொழுதுதான் தன்னுடைய உண்மையான திட்டத்தை, அதாவது
ஊழல் மலிந்த, பிற்போக்குத்தன பெரும் வணிக அரசியல் வாதியின் திட்டத்தை முன்வைக்கிறார். ஹபிங்டன்,
Nation
இன்னும் பிற இடது என்ற இடத்தில் இருப்பதாகக்
கூறப்படுபவர்களுக்கு, அவருடைய வேட்புத் தன்மை பற்றிய பிரமைகளை தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை கொடுப்பார்;
அதே நேரத்தில் தன்னுடைய முக்கிய தளங்களான நிதிய பிரபுத்துவம் மற்றும் அரசு சக்திகளுக்கு உகந்த முறையில் செயல்படுவார்.
"அடிப்படை மாற்றம்" கொண்டுவரப்பட வேண்டும் என்ற உரிமை செயலாணையுடன்
அதிகாரத்திற்கு வருவதில் ஜனநாயகக் கட்சிக்கு விருப்பம் இல்லை; ஏனெனில் அத்தகைய மாற்றங்களை செயல்படுத்த
ஊக்கமோ ஆக்கமோ அவர்கள் கொண்டிருக்கவில்லை. ஒபாமாவின் சமீபத்திய பிரச்சார மாற்றம் ஒரு புதிய
உறுதியான கன்சர்வேடிவ் தளத்தை அரசியலில் தோற்றுவிப்பதைத்தான் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறது;
அது புஷ் நிர்வாகத்துடன் ஒரு தொடர்ச்சியைத்தான் முக்கிய கூறுபாடுகளில் பிரதிபலிக்கும்.
இறுதியில், ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியினரிடத்தில் போலித் தோற்றங்களை
வளர்ப்பது என்பது உழைக்கும் வர்க்கத்தின் பரந்த பிரிவை சுயாதீனமாக அரசியலில் திரட்டுவது என்ற உண்மையான
மாற்றீட்டை தடுக்கும் வகைக்குத்தான் உதவும்.
ஒன்று மட்டும் உறுதி. வரவிருக்கும் ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகள்,
வேட்பாளர் தன்னைக் காட்டிக் கொள்ள முற்பட்ட முந்தைய நிலையை ஒட்டியோ, இடது தாராளவாதிகளின்
அழுத்தத்தினாலோ நிர்ணயிக்கப்படாது. மாறாக அவை அமெரிக்க முதலாளித்துவ முறையை எதிர்கொண்டுள்ள மகத்தான
பொருளாதார, அரசியல் நெருக்கடிகளால் நிர்ணயிக்கப்படும்; இச்சூழ்நிலையில் ஆளும் உயரடுக்கின் வர்க்க நலன்களை
காப்பதற்குத் தேவையானவைதான் செய்யப்படும். பிரச்சாரத்தில் வலதிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது இந்த அடிப்படைப்
பணிக்கான தயாரிப்புத்தான். |