World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP/ISSE May Day meeting in Colombo

கொழும்பில் சோ.ச.க/ஐ.எஸ்.எஸ்.ஈ. இன் மே தினக் கூட்டம்

28 April 2008

Back to screen version

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் மே தினக் கூட்டத்தை மே 1ம் திகதி கொழும்பில் நடத்தவுள்ளன.

உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும், தமது வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது உக்கிரப்படுத்தப்பட்டுவரும் தாக்குதல்களையும் மற்றும் வளர்ச்சிகண்டுவரும் யுத்த ஆபத்தையும் எதிர்கொண்டுள்ளனர்.

புஷ் நிர்வாகமானது ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பின்னடைவை சந்தித்த போதிலும் ஈரான் மீதான இராணுவத் தாக்குதலுக்கான தனது ஆத்திரமூட்டல் தயாரிப்புகளை உக்கிரமாக்கி வருகின்றது. அத்தகைய ஒரு தாக்குதல் பிராந்தியம் பூராவும் மற்றும் சர்வதேச ரீதியிலும் பதட்ட நிலைமைகளை உக்கிரமாக்குவதோடு பரந்த மோதல்களுக்கான அச்சுறுத்தலையும் கொண்டுள்ளது.

வீட்டுக் கடன் நெருக்கடியிலும் மற்றும் ஆழமடைந்து வரும் பூகோள நிதி நெருக்கடியிலும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது போல், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலக மேலாதிக்க நிலையில் இருந்து வரலாற்று ரீதியில் சரிந்து வருவதே அதன் இராணுவவாத வெடிப்பின் உந்து சக்தியாகும். முதலாளித்துவ சந்தையின் அராஜகப் பண்பானது ஊகவாணிப அலைகளால் அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கின்றது. இந்த ஊகங்களே உலகம் பூராவும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு எட்டாத விதத்தில் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்துகின்றன.

இலங்கை இந்தப் பூகோள போக்குகளின் கூர்மையான வெளிப்பாடாகும். மில்லியன் கணக்கான மக்கள் முகங்கொடுத்துள்ள சமூக நெருக்கடிகளை தீர்க்க இலாயக்கற்ற அரசாங்கம், வேண்டுமென்றே இனவாத பகைமையை கிளறி நாட்டை மீண்டும் யுத்தத்தில் மூழ்கடித்துள்ளது. யுத்தம் மற்றும் அது தோற்றுவித்துள்ள தாங்கமுடியாத பொருளாதார சுமைகள் தொடர்பாக வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்புக்கு பதிலடியாக, ஜனாதிபதி இராஜபக்ஷ தணிக்கை, எதேச்சதிகாரமாகக் கைது செய்து தடுத்து வைத்தல் மற்றும் அரச பயங்கரவாதத்தையும் நாடுகின்றார்.

யுத்தம், வறுமை, நோய், பட்டினி போன்ற துன்பங்களுக்கு ஒரே பதில், காலங்கடந்த இலாப அமைப்புமுறையையும் அது போட்டி தேசிய அரசுகள் என்ற முறையில் உலகில் ஏற்படுத்தியுள்ள பிரிவையும் ஒழித்துக் கட்டுவதேயாகும். ஒரு பொது சோசலிச முன்நோக்கில் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர் வர்க்கம் ஐக்கியப்பட வேண்டியது இன்றைய அவசரமான நடைமுறை அவசியமாகும். சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்பும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் இத்தகைய எரியும் பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்காக மே தினத்தில் தம்முடன் இணையுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றன.

காலம்: மே 1, மாலை 3 மணி

இடம்: புதிய நகர மண்டபம், கிரீன் பாத், கொழும்பு- 7

பிரதான பேச்சாளர்: சோ.ச.க. பொதுச் செயலாளரும் உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்துலக ஆசிரியர் குழு உறுப்பினருமான விஜே டயஸ்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved