ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: Le Monde journalists on strike
லு மொன்ட் பத்திரிகையாளர்கள் வேலைநிறுத்தம்
By Kumaran Ira and Alex Lantier
16 April 2008
Use this
version to print | Send this link by
email |
Email the
author
பிரான்சின் மைய-இடது நாளேடான லு மொன்ட் (Le
Monde) இன் செய்தியாளர்கள், ஊழியர்கள் பத்திரிகை
திட்டமிட்டுள்ள வேலைக் குறைப்புக்கள் மற்றும் சில தொடர்புடைய வெளியீட்டகங்களில் தற்செயலாய் விளையும் மாற்றங்கள்
பற்றியும் ஒரு நாள் வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொண்டனர். பெருநிறுவன லு மொன்ட் குழுவின் ஊழியர்களில்
100 பேர் பத்திரிகையின் பாரிஸ் தலைமை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செய்தியாளர்கள் வேலைப் புறக்கணிப்பு நடத்தியதை அடுத்து நாளேட்டின் செவ்வாய்
பதிப்பு வெளிவரவில்லை. அதே நேரத்தில் லு மொன்டின் வலைத்தளமான
Le Monde Interactif (www.lemonde.fr),
இக்குழுவிற்குள் ஒரு தனியான அமைப்பின் சில ஊழியர்கள் தங்கள் சக ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்
பதிப்பு இதழில் இருந்து கட்டுரைகளை வெளியிட்டு வலைத் தளத்தை சீராக்கவும் மறுத்து விட்டனர்.
ஏப்ரல் 4ம் தேதி பெரிய அளவில் மறு சீரமைப்பு என்பதை லு மொன்டின்
நிர்வாகம் தொடர்ந்து ஏற்பட்டுவரும் நஷ்டங்களை குறைக்கவும் ஏட்டின் கடன்களை தீர்க்கும் வகையிலும் 129 வேலைகளை
அகற்றியதாக அறிவித்ததை அடுத்து --செய்தி அறையில் 90 வேலைகள், பத்திரிகை செய்தியாளர்களில் நான்கில்
ஒரு பகுதியினர்-- இந்த 24
மணி நேர வேலைநிறுத்தம் நடந்தது.
லு மொன்ட் குழுமத்தின் தலையங்கம் எழுதும்
Eric Fottorino
ஊழியர்களிடம் பெரும் வேலைக்குறைப்புக்கள் ஒன்றுதான் செய்தித்தாளை
தொடர்ந்து நடத்துவதற்கு ஒரே வழி என்று கூறினார். ஏப்ரல் 4ம் தேதி லு மொன்டின் பதிப்பில் வெளியிட்ட
கட்டுரை ஒன்றில், Fottorino,
அவருடைய உதவியாளர் David Guiraud
இருவரும் எழுதியதாவது: "இத்திட்டத்தை நிரகாரிப்பது நமக்கு வெற்றியை மறுத்துவிடும், குழுமத்தின் வருங்காலத்தையும்
பெரும் ஆபத்திற்கு உட்படுத்திவிடும்."
மறுசீரமைப்புத் திட்டம் "மூலோபாயமற்ற" அல்லது லு மொன்ட்
குழுமத்தில் இருக்கும் நஷ்டங்களை கொடுக்கும் வெளியீடுகள்
Fleurus Presse (இளைஞர்
வெளியீடு), Editions de l'Etoile (திரைப்பட
சஞ்சிகை Cahiers du cinéma
வைப் பதிப்பிப்பது)
மற்றும் மாதாந்திர ஏடான
Danser,
La Procure
என்னும் மதத் துறை பற்றி நூலகங்களின் தொகுப்பை கொண்ட இணையம் ஆகியவற்றிலும் செயல்படுத்தப்படும்.
National Union of Journalists (SNJ)
க்கு லு மொன்ட்டின் பிரதிநிதியான
Christine Chombeau,
Le Journal du Dimache
இடம் கூறினார்: "நாங்கள் பல பிற மறுசீரமைப்புத் திட்டங்களையும் துரதிருஷ்டவசமாக பார்த்துள்ளோம்; ஆனால்
ஒவ்வொரு முறையும் அவை பத்திரிகையாளர்கள் தாமாகவே விரும்பி வெளியேறியது போன்ற திட்டத்தை கொண்டதாகும்.
இப்பொழுது நிர்வாகம்தாமே இந்த தானாகச் செல்லும் உரிமையை மறுத்து தொடக்கத்தில் இருந்து தானாய் கதவடைப்பு
செய்தல் பற்றி எண்ணிப்பார்க்கிறது. இது எமது நிறுவனத்தின் வழக்கங்களில் இருந்து முற்றிலும் முறித்துக் கொள்ளும்
விஷயமாகும்."
ஏப்ரல் 11 அன்று செய்தியாளர்கள் கூட்டமைப்பான
CGT, CFDT, CGC
தொழிற்சங்கங்கள் கூட்டமைப்புடன் இணைந்து SNJ
வெளியிட்ட கூட்டு அறிக்கை கூறுவதாவது: "லு மொன்ட் ஊழியர்களின் கவலைகள் ஒரு முழு ஊழியத்
தொகுப்பும் ஒவ்வொரு பதிப்பகத்திலும் தாக்குதலின் கீழ் உள்ளன. வேலைக்குறைப்புக்கள் செய்யப்பட வேண்டும்
என்று பார்க்காத, மோசமான பணி நிலைமைகள் மற்றும் பொருளாதார அழுத்தங்களை பார்க்காத
பதிப்பகங்களே இல்லை."
"நிர்வாகத்தின் உயர்மட்ட ஊதியங்களை அடையாளத்திற்கேனும் சிறிது குறைக்க
வேண்டும் என்ற கருத்தை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது" பற்றியும் தொழிற்சங்கங்கள் நிர்வாகத்தை
விமர்சித்துள்ளன.
ஏப்ரல் 14ம் தேதி பொது மன்றத்தில், லு மொன்ட் புதிய திட்டத்தை
நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் தீர்மானத்திற்கு வாக்களித்தது. இந்த தீர்மானம் 251 வாக்குகள் ஆதரவு,
ஒன்று கூட எதிர்ப்பில்லை, 4 பேர் வாக்களிக்கவில்லை என்ற முறையில் பெரும் வெற்றி பெற்றது. இந்த தீர்மானம்
நிர்வாகம் கட்டாய வெளியேற்றங்கள் செய்யக்கூடாது என்றும் லு மொன்ட் குழுமத்தின் மற்ற பெருநிறுவன
பதிப்பகங்களிலும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
AFP-TV உடன் நடத்திய ஏப்ரல்
14ம் தேதி பேட்டியில், Fottorino,
"லு மொன்ட்டின் ஊழியர்களுடை உணர்வை புரிந்து கொள்ளுவதாகவும்,
ஏன் அவற்றில் பங்கு ஏற்பதாகவும் கூட" தெரிவித்தார்; ஆனால் தன்னுடைய முதல் திட்டத்தை செயல்படுத்துவதில்
தான் "உறுதியாக இருப்பதாக" அறிவித்துவிட்டார். "இத்திட்டத்தில் கட்டாய வெளியேற்றங்கள் இருக்க வேண்டும்
என்பது தன் பொறுப்பு என்றும்", "திட்டத்தின் வெற்றிதான் லு மொன்ட் தொடர்ந்து சுதந்திரமாக செயல்படக்கூடிய
வகையில் உதவும்" என்றும் கூறினார்.
Fleurus Press, Télérama
ஆகியவற்றின் ஊழியர்கள் ஏப்ரல் 15 அன்று பொது மன்றங்களை
கூட்டி செவ்வாயன்று தொடங்க இருக்கும் வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்தனர். ஏப்ரல் 16ம் தேதி லு
மொன்ட் ஊழியர்களுடைய மற்றொரு பொதுமன்றக் கூட்டம் நடைபெற உள்ளது.
தலையங்க மற்றும் பெருநிறுவனச் சுதந்திரம் பற்றிய
Fottorino வின்
பிரார்த்தனையே லு மொன்ட் செய்தியாளர்களில் கால் பகுதியினரை அகற்ற காரணம் என்று கூறியிருப்பது
அப்பட்டமான ஏளனம் ஆகும்.
நாளேட்டின் நிதியக் கஷ்டங்கள் 150 மில்லியன் யூரோக்கள் கடன்கள் இருப்பதால்
வந்துள்ளன; பங்குச் சந்தையில் தொடக்கத்தில் பொதுமக்களுக்கு 2001ல் பங்கு விற்பனையை லு மொன்ட்
குழுமம் வாங்க அனுமதித்ததில் இருந்து இது வந்துள்ளது; அப்பொழுது ஒரு பெரும் பிரச்சாரம் பிற பதிப்புக்கள்,
வெளியீடுகள் வலைத் தளங்கள் ஆகியவற்றை வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்தன. இக்குழு 15.6 மில்லியன்
யூரோக்கள் நஷ்டம் என்று 2006ல் காட்டி 14.3 மில்லியன் யூரோக்களும் கூடுதலான நஷ்டம் என்று கூறியது.
நாளேட்டின் அன்றாட விற்பனை 2007ல் 358,000 பிரதிகள் ஆகும்; இது 2003ல் இருந்த 398,000 ல்
இருந்து குறைந்துவிட்டது. இது 2007ம் ஆண்டு லு மொன்ட் குழுவின் நஷ்டங்களுக்கு 6 மில்லியன்
யூரோக்களை கொடுத்தது.
2007 மே மாதம், நாளேட்டில்
அப்பொழுது தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த தலையங்கம் எழுதும்
Jean-Marie,
குழுவின் நாளேட்டு செய்தியாளர்கள் குழுவில் எதிர் வாக்குகள் பெற்றதை அடுத்து வெளியேற்றப்பட்டார்; குழு
உறுப்பினர்கள் கொலோம்பானி உடைய பிற பத்திரிகைகளை எடுத்தல் பற்றி கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர்.
மிக அதிக நஷ்டங்களை காட்டியபின் அவர் குழுமத்தை விட்டு விலகியதால், கொலோம்பானி தனக்கே 950,000
யூரோக்கள் போனஸாகக் கொடுத்துக் கொண்டார்.
செய்தி ஊடகம், பதிப்பித்தல், சில்லறை விற்பனை, விமானப் பிரிவு/பாதுகாப்பு
ஆகியவற்றில் ஈடுபாடு உடைய பெருநிறுவனமான
Lagardere Group --இதன் தலைமை நிர்வாகி
Arnaud Lagardere
ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசிக்கு நெருக்கமானவர் ஆவார்-- லு மொன்ட் குழுமத்தில் 17 சதவிகிதமும்
அதனது இணையத்தளமான லு மொன்ட் (Interactif)
இல் 34 சதவிகிதமும் கொண்டுள்ளார். வணிக ஏடான
La Tribune
தன்னுடைய ஏப்ரல் 14 பதிப்பில் கூறியது: "Lagardere
Group என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறது. இன்னும்
மேலதிகமாக மீளவும் மூலதனமிடல் இருந்தால், (லு மொன்ட் குழுவின்) கட்டுப்பாட்டை ஸ்பெயின் நிறுவனமான பிரிசாவுடன்
எடுத்துக் கொள்ளும் விருப்பத்தை அது மறைக்கவில்லை (அது லு மொன்ட்டின் மூலதனத்தில் 15 சதவிகித உரிமை
கொண்டது)."
இறுதியில் ஆபத்து கொடுக்கக்கூடியது லு மொன்ட்டில் பெரிய அளவு வெளியேற்றங்களுக்கான
திட்டங்கள்தான்; இதையொட்டி தவிர்க்க முடியாமல் ஏட்டின் தரம் குறையக்கூடும்; ஏட்டின் அரசியல் சுதந்திரமும்
இழக்கப்படலாம்; ஏனெனில் அது பிரெஞ்சு அரசியல் மற்றும் பெருநிறுவன உயரடுக்கின் தற்போதைய தலைவர்களின்
கருத்தை எதிரொலிக்கும் வகையில் மாறிவிடக்கூடும். லு மொன்ட் இதுவரை ஒரு புதிரை அளித்திருந்தது:
முற்றிலும் நடைமுறை பதிப்பாக இருந்தபோதிலும், செயல்முறையில் ஒருவித சுதந்திரத்தை அது அராசங்கத்தின்
அன்றாடா பிரச்சார அழுத்தங்கள் இல்லாத முறையில் கொண்டிருந்தது.
இது 1944ல் நிறுவப்பட்டது; நாஜிக்களிடம் இருந்து பிரான்ஸ் விடுதலை பெற்ற நேரத்தில்
சார்ல்ஸ் டு கோல் இதற்கு ஆதரவாக இருந்தார். முன்னாள் பெயர் பெற்ற பிரெஞ்சு ஏடான
Le Temps
இன் அலுவலகம், அச்சு இயந்திரங்கள் ஆகியவற்றை இது எடுத்துக் கொண்டது; அந்த நாளேடு ஆக்கிரமிப்புக்
காலத்தில் ஒத்துழைத்திருந்ததால் இழிவு பெற்றது. லு மொன்ட்க்கு தலைமைப் பொறுப்பிற்காக டு
கோல் முன்னாள் Le Temps
செய்தியாளரான Hubert Beuve-Mery
ஐ தேர்ந்தெடுத்தார்; அவர் எதிர்ப்புப் படையினரிடம் சேர்ந்திருந்தார்; சிறிது காலம் விஷியின் பாசிச சார்புடைய
யூரியேஜில் (Uriage)
இருந்த National School
ல் ஆசிரியராகவும் இருந்திருந்தார்.
பிரான்சிடம் இருந்து சுதந்திரம் அடைய அல்ஜீரிய சுதந்திரப் போர் நடைபெற்றபோது,
அல்ஜிரியர் பிரெஞ்சு இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டபோது, லு மொன்ட் டிசம்பர் 14,
1957 அன்று தனி உரிமை, சுதந்திரம் ஆகியவற்றைக் காப்பாற்றும் குழுவின் அறிக்கை (Report
of the Commission to Preserve Individual Rights and Liberties)
ஒன்றை வெளியிட்டது. அதைத் தொடர்ந்த
Beuve-Mery மற்றும் பல தலையங்க பணியாளர்கள் பலமுறையும்
படுகொலைக்கான இலக்கில் இருந்தனர். மே ஜூன் 1968 போராட்டங்களின்போது, லு மொன்ட் மாணவர்களிடம்
செல்வாக்கு பெற்றிருந்தது; அதன் விற்பனை மிக அதிகமாக 800,000 என்று போயிற்று. 1968க்குப் பின்னர்
லு மொன்ட் தன்னை பணியாளர்களுக்கு சொந்தமான நிறுவனம் என்று செய்தியாளர்கள், அச்சடிப்பவர்கள்
மற்றும் பிற ஊழியர்கள் 49 சதவிகித பங்கை கொண்டிருந்த நிலையில் அமைந்திருந்தது.
சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனுக்கு
(1981-1995) தேர்தல்களின் போது லு மொன்ட் ஆதரவு கொடுத்திருந்தது; ஆனால் பின்னர் 1980 களில் ஒரு
Greenpeace
கப்பல் மூழ்கடிக்கப்பட்டது பற்றிய தகவலையும் வெளியிட்டது; அது மித்தேரோனின் உத்தரவின்பேரில் நடைபெற்றது;
பிரெஞ்சு அணுசக்தி ஆயுதப் பரிசோதனைகளுக்கு எதிரான எதிர்ப்புக்கள் வருவதை தடைசெய்வதற்காக செய்யப்பட்டது.
சமீபத்திய பூசல்கள் இன்னும் கடுமையான முறையில் லு மொன்ட் கசப்பான,
வெளிப்படையான அரசியல் தன்மையை கொண்டது என்பது பற்றியதாகும்.
2003 TM
Philippe Cohen
மற்றும் Pierre
Pean இருவரும் ஒரு நீண்ட வலதுசாரி கண்டனத்தை லு
மொன்ட்க்கு எதிராக கொடுத்திருந்தனர் --La
Face cache du Monde (லு மொன்ட்டின் மறைந்துள்ள
முகம்); இது அரசாங்க இரகசியங்களை வெளியிட்டதற்காக அவ்வாறு கூறினர். இது 2005ல் தலையங்க தலைவர்
Edwy Plenel
என்னும் முன்னாள் போலி ட்ரொட்ஸ்கிச LCR
(Revolutionary Communist League)
இன் உறுப்பினர் இராஜிநாமா செய்வதை முடுக்கிவிட்டது.
Planel உம்
LCR உம்
தொடர்ந்து லு மொன்ட்க்குள் ஆதரவைக் கொண்டுள்ளனர்; அதிலும் குறிப்பாக கட்டுரையாளர்
Sylvia Zappi,
LCR
ஜனாதிபதி வேட்பாளர் ஒலிவியே பெசன்ஸ்நோவை பாராட்டிய விதத்தில் இருந்தது.
2007ம் ஆண்டு லு மொன்ட்டின் கண்காணிப்பு குழுவின் தலைவரும்
Jean-Marie Colombani
இன் ஒத்துழைப்பாளருமான Alain Minc
வெளியேற்றப்பட்டதை கண்டது. லு மொன்ட்டின் நிருபராக இல்லாத
Minc ஒரு வணிகர்,
தேசிய நிர்வாகத்துறை பாடசாலை (ENA
National Administration School)
என்னும் சிறப்புப் பள்ளியில் பட்டம் பெற்றவர்; ஆனால் ஸ்பினோசா வாழ்க்கை நூல் பற்றி அவர் எழுதியதில் பிறர்
கருத்துக்களை திருடி தண்டனை பெற்றதால் இழிவடைந்தார். அந்த நூலின் பெயர்
Spinoza, a Jewish Novel
என்பதாகும். இவர் சார்க்கோசிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறார்; பிந்தையவர் இவரை செய்தி
ஊடக விஷயங்களுக்கு ஆலோசகராக பயன்படுத்துகிறார். அக்டோபர் 2007ல் லு மொன்ட் ஐ விட்டு
நீங்குவதாக Minc
உடன்பட்டார்; போதுமான வாக்குகள் பெறவில்லை என்றாலும், கண்காணிப்புக் குழுவின் தலைவராக அவரை
நிர்வாகம் தொடருமாறு செய்ய இலயவில்லை என்றவுடன் லு மொன்ட்டை விட்டு நீங்குவதற்கு உடன்பட்டார்.
|