World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French high school students protest education cuts

பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அரசாங்கத்தின் கல்விச் செலவின குறைப்புக்களை எதிர்க்கின்றனர்

By Francis Dubois
12 April 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஏப்ரல் 10 வியாழனன்று பல்லாயிரக்கணக்கான பிரெஞ்சு உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் இரு வாரத்திற்குள் ஐந்தாம் தடவையாக உயர்நிலை கல்வியை பாதிக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் பழமைவாத அரசாங்கத்தின் கல்வி மந்திரி Xavier Darcos ஆல் அந்நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.

இந்த ஐந்தாம் நாள் ஆர்ப்பாட்டத்தன்று, கிட்டத்தட்ட 30,000 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் பல நகரத்தில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதில் இருந்து தெருவிற்கு வந்து பங்கு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை எதிர்ப்பு ஊர்வலம் அதற்கு இரு நாட்கள் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை விட இரு மடங்கு அதிக எண்ணிக்கையை கொண்டிருந்தது. கடந்த இரு வாரங்களில் லியோன், கிரெநோபில், தூலூஸ் மற்றும் சிறு நகரங்களான Blois, Tourcoing, Montpellier போன்றவற்றிலும் நிறைய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தொழிற்சங்க புள்ளிவிவரங்களின்படி தூலோனில் 4,000 பேர் ஏப்ரல் 4ம் தேதி எதிர்ப்பு தெரிவித்தனர். கிரெநோபிலில் ஏப்ரல் 10 அன்று 6,000 மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாரிஸ் பகுதியில் இருக்கும் பல கல்விக்கூடங்களும் கல்லூரிகளும் மாணவர்களின் "பொது மன்றங்களால்" தடைக்கு உட்பட்டுள்ளன அல்லது ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன; இங்கு புதிய நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பு பற்றி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் விவாதிக்கப்பட்டு வருகின்றது. முந்தைய எதிர்ப்புக்கள் போல் இல்லாமல், இது முக்கியமாக தொழில்/தொழில்நுட்ப பள்ளிகள், கல்விக்கூடங்களில் நடைபெறுகிறது; இவை நன்கு அணிதிரட்டி மாணவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அனுப்புகின்றன. ஏப்ரல் 10ம் தேதி இரு முக்கிய உயர்நிலைப் பள்ளி மாணவர் சங்கங்கள் "மிகப் பெரிய அளவில் திரண்டு வருமாறு" அழைப்பு விடுத்திருந்தன.

மிக அதிகமான போலீசாரும் இந்த ஆர்ப்பாட்டங்களில் காணப்பட்டனர்; இவற்றிற்கு அரசாங்கம் மற்றும் அதன் அரச படைகள் பலவற்றிடம் இருந்து திரும்பத் திரும்ப ஆத்திரமூட்டல்கள் நிகழ்கின்றன. ஒரு உறுதியான வடிவமைப்பை பின்பற்றும் இளைஞர் குழுக்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு முன்பு சென்று போலீசாரை நோக்கி கணைகளை வீசுகின்றனர்; இதற்கு விடையிறுக்கும் வகையில் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி சிலரைக் கைதும் செய்கின்றனர். இது அரசாங்கத்தால் இன்னும் கூடுதலாக அச்சுறுத்தப்படவும் எதிர்ப்புக்கள் "பொது வன்முறையை தூண்டுகின்றன" எனவே சட்ட விரோதம் என்று கூறுவதை நியாயப்படுத்தவும் உதவுகின்றன. செவ்வாய் ஆர்ப்பாட்டம் இறுதிக் கட்டத்தை அடையுமுன்னரே போலீசாரால் கலைக்கப்பட்டு விட்டது.

செவ்வாயன்று கல்வி மந்திரி Darcos, தன்னுடைய நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பு செய்தி ஊடகம் கூறியிருந்த "நிகழ்வுகளுடன்" நேரடித் தொடர்பு உடையது என்று கூறினார்; அவற்றில் ஆசிரியர்கள் அல்லது தலைமை ஆசிரியர்கள் தாக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. LCI வானொலி நிலையத்திற்கு அவர் கூறியதாவது: "கல்லூரிக்கு வந்து அனைத்தையும் உடைப்பதற்காக மாணவர்கள் வருகின்றனர் என்ற உண்மை, எமது ஆசிரியர்களை அவர்கள் மிரட்டுதல், தங்கள் சக மாணவர்களின் மொபைல் கைபேசிகளை திருடுதல், பள்ளித் தலைவரை தாக்குதல் இவை அனைத்தும் புது பள்ளி ஆண்டில் வகுப்பிற்கு 32 என்பதற்கு பதிலாக 33 பேர் இருப்பர் என்பதற்காக அல்லது 100 ஆசிரியர்களுக்கு பதிலாக 98 ஆசிரியர்கள் இருப்பார்கள் என்பதற்காக என்றால் இவை எல்லாம் ஏற்கமுடியாத நியாயமற்ற விகிதத்தில் நடைபெறுவதாகத்தான் நான் கருதுகிறேன்."

சில நிகழ்ச்சிகளில் போலீசாரின் கலகப் பிரிவுப் படை உயர்நிலைப் பள்ளிகள் முன் கூடியிருந்த சமாதான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்களை கலைத்து அனுப்பியது. ஏப்ரல் 4ம் தேதி தலைநகரத்திற்கு தென்கிழக்கே இருக்கும் புறநகரமான Creil என்னும் இடத்தில் போலீசார் நூற்றுக்கும் அதிகமாக இருந்த மாணவர்களை கண்ணீர்ப்புகை மூலம் கலைத்தனர். ஒரு மாணவர் கைது செய்யப்பட்டு பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவரை விடுவிக்க திரண்டபின்தான் விடுவிக்கப்பட்டார். பாரிஸுக்கு கிழக்கே இருக்கும் மற்றொரு புறநகரமான Gagny ல் ஒரு உயர்நிலைப் பள்ளி நுழைவாயிலின் அருகே டஜன் கணக்கில் அமைதியாக கூடியிருந்த மாணவர்கள் "கலைக்கப்பட்டனர்". ஏப்ரல் 1ம் தேதி கலகப் போலீஸ் பிரிவினால் கண்ணீர்ப்புகை மற்றும் flash balls பயன்படுத்தப்பட்டதற்கு இளைஞர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இருந்த பகுதியில் இருந்து பரந்த எதிர்ப்பு கிளம்பியது.

Darcos கடந்த வாரம் எதிர்ப்புக்களின் தன்மையை குறைத்து பேச முற்பட்டு, இவை பிரான்ஸில் இருக்கும் உயர்நிலைப் பள்ளிகளில் 2 சதவிகிதத்தைத்தான் பிரதிபலித்தது என்றார்; செவ்வாயன்று அவர் எதிர்ப்புக்கள் "வெறித்தன்மை நிறைந்த வடிவங்களை" கொள்ளுகின்றன என்று கூறினார். உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்புக்களை தூண்டிவிடுவதாகவும் தங்கள் நோக்கத்திற்காக மாணவர்களை "பயன்படுத்துவதாகவும்" அவர் குற்றம் சாட்டினார். அவர்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்களை தெருக்களுக்கு அழைப்பதில் இருக்கும் ஆபத்து பற்றி சிந்திக்க வேண்டும் என்று சில "தீவிரவாத அசிரியர்களுக்கு" தான் தெரிவிக்க விரும்புவதாகக் கூறினார். தலைமை ஆசிரியர்களுக்கு 750 யூரோக்கள் போனஸையும் ஒதுக்க Darcos முடிவு எடுத்தார்; இது பரந்த அளவில் இலஞ்சம் போல் மற்றவர்களால் கருதப்படுகிறது.

பிற ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைப் போலவே, ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய Pisa ஆய்வு, பல்வேறு நாட்டு கல்வி முறைகளின் திறன் பற்றிய ஆய்வு, பிரான்சில் பயன்படுத்தப்பட்டு வரும் கல்வித் துறையில் தீவிர மாற்றங்களை சுமத்துவதை நியாயப்படுத்த உதவுகிறது.

உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்; அரசாங்கமோ பழமையாகிவிட்ட கல்விமுறையை நவீனப்படுத்த இது தேவை என்று கூறுகிறது; ஆனால் இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இழப்பில் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையை திணித்தல் என்றுதான் காணப்படுகிறது; மேலும் மிகவும் நலன்கள் குறைந்த மாணவர்களுக்கு தகுதி பெறுவதற்கு இடர்பாடுகளை பெருக்கும் முயற்சியாகவும் கருதப்படுகிறது.

அடுத்த கல்வி ஆண்டில் 11,200 ஆசிரியர்கள் வேலைகள் அகற்றப்படுவது (இதில் உயர்நிலைப் பள்ளிகளில் 8,800 பேர்) என்பது பற்றிய அரசாங்க நடவடிக்கைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. இத்தகைய வேலைக்குறைப்புக்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என்று அரசாங்கம் நியாயப்படுத்துகிறது.

எதிர்ப்புக்களில் தொடர்புடைய இரு முக்கிய உயர்நிலைப் பள்ளி மாணவர் சங்கங்களில் ஒன்றின் அதாவது உயர்நிலை பள்ளி மாணவர்களின் தேசிய சங்கம் (Union national des lyceens) இன் துணைத் தலைவர் Leo Moreau கூறியுள்ளபடி, "மக்கட் தொகை விகிதாசாரத்தைவிட மிகப் பெரிய அளவில் வேலைகள் தகர்க்கப்படுகின்றன." சில பாடத்திட்டங்கள், ஓவியம், இசை, வெளிநாட்டு மொழிகள் போன்றவற்றில் ஆசிரியர்கள் வேலைகள் தகர்க்கப்படுவதையும் அவர் கண்டித்துள்ளார்; அதைத் தவிர ஏற்கனவே வகுப்புக்களில் அதிக மாணவர்கள் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

Unsa என்ற (Union nationale des syndicats autonomes) ஆசிரியர் சங்கத்தின் தலைமைச் செயலர் அலன் ஓலிவ் குறிப்பிட்டதானது, "2012 ஐ ஒட்டி 85,000 வேலை இழப்புக்கள் ஏற்பட்டுவிடும், அதனுடன் 150,000 மாணவர்களும் கல்வி முறையில் இருந்து அகற்றப்பட்டு விடுவர்." இது ஏப்ரல் 4ம் தேதி Le Monde யினால் மேற்கோளிடப்பட்டிருந்தது.

உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சங்கமான FIDL (Federation indepedneant et democratique lyceenne) அறிவித்திருப்பதாவது: "இந்தக் குறைப்புக்கள் முக்கியமாக புறநகரில் இருக்கும் பள்ளிகளை பாதிக்கும்; அவற்றில்தான் அதிக ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்." ஆசிரியர்கள் வேலை தகர்ப்பு என்பதின் பொருள் வகுப்புக்கள் அல்லது பாடத்திட்டங்கள் மறைதல் என்பதாகும், மற்ற ஆசிரியர்களுக்கு கூடுதலான வேலை என்பதாகவும் அமையும். இது கூடுதலாக உழைப்பதற்கு ஒரு "ஊக்கம்" என்ற வகையில் காட்டப்படுகிறது; ஆசிரியர்களால் அது கடுமையாக மறுக்கப்படுகிறது.

"முக்கியமற்றவை'' என அழைக்கப்படும் கலை, இசை, நாடகம் மற்றும் அதே போன்ற பாடத்திட்டங்கள் அகற்றப்பட்டுவிடும் என்ற கவலைகளும் வெளிவந்துள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்களால் எதிர்க்கப்படும் மற்றொரு நடவடிக்கை Baccalauréat professional (தொழில்துறை பாடங்கள்) எனப்படும் நான்காண்டு பயிற்சி மூன்று ஆண்டுகளாக்கப்படுவதும் மற்றும் Brevt d'Etude Profesional (BEP) என்பது இல்லாமல் செய்யப்படுவதுமாகும். 1986ல் அறிமுகப்படுத்த "Bac Pro", மரபார்ந்த "baccalauréat" ஐ விட ஒரு கூடுதலான தகுதியாகும். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பெறப்படும் BEP என்பது மரபார்ந்த Certificat d'aptitude professionnelle (CAP) ஐ விட சிறந்த தகுதியாகும்; இது ஒருவித தொழிற்பயிற்சி சான்று ஆகும். 1919 இல் இப்பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது; இது அகற்றப்படுதல் என்பது உறுதியற்ற CAP உடன் சேர்த்து பல மாணவர்களை Baccalauréat வைப் பெற முடியாமல் செய்து அப்படியே நிறுத்திவிடும் தன்மையை கொண்டுள்ளது.

"Carte scolaire" என்பது அகற்றப்படுவதுதான் எதிர்க்கப்படும் மூன்றாம் நடவடிக்கை ஆகும். Carte scolaire அமைப்பானது வளங்கள் ஆசிரியர்கள் பகிர்வு பற்றி கட்டுப்படுத்தி அரசாங்கப் பள்ளிகளுக்கு மாணவர்களையும் பிரித்து அளிக்கிறது. 1963ல் அறிமுகப்படுத்தப்பட்ட இம்முறை நாடெங்கிலும் நடத்தப்படும் கல்வி முறையில் சில கல்வித் தரங்கள், வளங்கள் ஆகியவை சம தரம் உடையனவாக இருந்தன. சமீபத்திய காலத்தில் இது பல அரசாங்கங்களின் தாக்குதலுக்கும் உட்பட்டுள்ளது; அவை இவற்றை அகற்றும் வகையில் செலவைக் குறைக்கின்றனர். வசதி உடைய குடும்பங்கள் விதிகளை தளர்த்தி தங்கள் குழந்தைகளை நன்கு செயல்படும் பள்ளிகளில் --Carte Scolaire க்கு வெளியே, அனுப்புகின்றனர். சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த ரோயாலும் Carte Scolaire ஐ மாற்றுவதற்கு ஆதரவு கொடுத்திருந்தார்; வறிய பகுதிகளில் இது அகற்றப்படுவது ஊறு விளைவிக்கும்.

சார்க்கோசி அரசாங்கம் இதை முற்றிலும் அகற்றிவிடும் திட்டத்தைத்தான் அறிவித்துள்ளது. மாணவர்கள் பொதுவாக அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் பள்ளிகள்/கல்லூரிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இந்த முறை அகற்றப்படுவது இரு வகையான கல்வி முறை அறிமுகமாவதற்கு இடம் அளித்துவிடும். இதற்கு இணையாக அரசாங்கம் "சிறப்பாக இயங்காத" பள்ளிகளை மூடும் திட்டத்தையும் கொண்டுள்ளது; அத்தகைய பள்ளிகள் பிளேயர் அரசாங்கத்தால் பிரிட்டனில் செய்யப்பட்டதைப் போல பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தின.

"பேராசிரியரின் அதிகாரத்தை மறுபடியும் நிறுவுதல்" என்ற முழக்கத்தில் அரசாங்கம் நீதித்துறைக்கு எந்த நிகழ்வு பற்றியும் அறிக்கை கொடுக்க வேண்டும் என்று பொதுவாக விரும்புகிறது (ஏற்கனவே இம்முறை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது). இந்த நடவடிக்கை கல்வியில் இருந்து விலகி சர்வாதிகார, அடக்குமுறை நடவடிக்கைகளுக்குத்தான் வழிவகை செய்யும்.

சிறப்புத் திட்ட (Régimes Spéciaux) ஓய்வுதியங்கள் தகர்ப்புக்கு எதிரான இரயில்வே வேலைநிறுத்தம், கடந்த இலையுதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களில் Loi Pécresse (Pécresse இன் சட்டம்) க்கு எதிராக நடத்திய மாணவர் இயக்கம் இவற்றின் அனுபவங்கள் இருந்த போதிலும்கூட, இரு முக்கிய உயர்நிலைப் பள்ளி சங்கங்கள், மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் முன்னோக்கு சிறிதும் மாறாமல்தான் உள்ளது: அதாவது தாக்குதல் பற்றி விவாதிக்க, பேச்சு வார்த்தைகள் நடத்த அரசாங்கத்தின்மீது அழுத்தம் கொடுத்தல் என்பதே அது. ஆர்ப்பாட்டங்களின் முக்கிய நோக்கமே மாணவர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கப்படுதல் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதுதான்.

இவ்விதத்தில் கடந்த வியாழன் ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் UNL இன் தலைவரான Florian Lecoultrfe, "சக்திகளின் உறவு முறை இப்பொழுது நன்கு நிறுவப்பட்டுள்ளது" என்று கூறினார்; மேலும், "உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் கோரிக்கையை இனி மந்திரி புறக்கணிக்க முடியாது. மாணவர்களை திரட்டுதல் எங்களுக்கு பதில்கள் கிடைக்காத வரை தொடரும்" என்றும் கூறினார்.

கடந்த செப்டம்பர் மாதம் கல்வி மந்திரி Pecresse கொண்டுவந்த பல்கலைக்கழகங்களின் "தன்னாட்சிக்கு" எதிரான பல்கலைக்கழக மாணவர் போராட்டம் மூன்று மாதத்திற்கு பின்னர் களைப்பிலும் தோல்வியிலும் முடிவடைந்தது. ஆசிரியர்கள் மற்றும் பிற தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டம் ஒதுக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் தொடர்ந்து போராட முடியவில்லை. சில வாரங்களுக்கு முன்பு இரயில் தொழிலாளர்கள் போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டது போல்தான் இந்த முடிவும் இருந்தது. உத்தியோகபூர்வ சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முடக்கும் செல்வாக்கில் இருந்து பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களை முறித்துக் கொண்டு, தங்கள் போராட்டங்களை தங்கள் கைகளிலேயே எடுத்துக் கொண்டு தொழிலாள வர்க்கம் முழுவதையும் திரட்ட வேண்டும் என்பதுதான் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தின் படிப்பினை ஆகும்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தினாலும் தன்னுடைய நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வதாக இல்லை என்று டார்க்கோஸ் கூறிவிட்டார். ஏப்ரல் 1ம் தேதி, "நான் பின்வாங்க வேண்டும் என்று விரும்பினாலும், என்னால் அப்படிச் செய்ய முடியாது" என்று அவர் தெரிவித்தார்; ஏனெனில் குறைப்புக்கள் ஏற்கனவே கடந்த கோடை காலம் முதல் "பரந்த முறையில் விவாதிக்கப்பட்டு விட்டன", அதன்மீது பாராளுமன்றத்தில் நவம்பர் மாதம் வாக்கு அளிக்கப்பட்டுவிட்டது. இத்தகைய பரந்த தாக்குதல்களை கல்வித்துறைமீது பிரெஞ்சு முதலாளித்துவம் செயல்படுத்துவதின் காரணம் அது அதன் ஏகாதிபத்திய போட்டியாளர்களிடம் இருந்து வரும் கடுமையான சர்வதேச நெருக்கடியை ஒட்டி தீவிரப் போட்டியை எதிர் கொண்டுள்ளதாகும்.

அரசாங்கத்துடன் கல்வியில் "சீர்திருத்தம்" பற்றி விவாதிப்பதை தொழிற்சங்கங்கள் எதிர்க்கவில்லை. அதைப்பற்றித் தங்கள் ஆலோசனைகள் கேட்கப்பட வேண்டும் என்பது ஒன்றுதான் அவர்களுடைய முன் நிபந்தனை ஆகும். குறைப்புக்கள் திரும்பப் பெறுதல் என்பது கல்வியில் இன்னும் அதிக "பொது சீர்திருத்தம்" பற்றி விவாதம் நடத்துவதற்கு பேரம் கொடுக்கும் தன்மை உடையது ஆகும். இவ்விதத்தில் ஏப்ரல் 4ம் தேதி UNL "தான் கல்வியில் உண்மையான சீர்திருத்தத்திற்கு முன்னிபந்தனையாக அடக்கப்பட்டுள்ள வளங்கள் மீட்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை உறுதி செய்வதாக" ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

ஏப்ரல் 8, மற்றும் 19 தேதிகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள இதே அறிக்கையில், "கல்விக்கூடங்களில் சீர்திருத்தம் என்பது... ஆலோசனைகள் இல்லாமல் முடியாது, அதுவும் உயர்நிலைப் பள்ளிகளின் மாணவர்களுக்கு பின்புறத்தே பட்ஜேட்டில் சேமிப்புக்கள் இருக்க வேண்டும் என்பதற்காக வளங்களில் பெரும் வெட்டுக்கள் கொண்டு வரப்படும் என்ற அடிப்படையில் கூடாது என்பதைத்தான்" UNL விரும்புகிறது என்று கூறியுள்ளது.

இதே போல் ஏப்ரல் 3ம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் FIDL உடைய முக்கிய கோரிக்கை கல்வி மந்திரி இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதாகும். ஏப்ரல் 8, 10 தேதிகளில் இரு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு கொடுத்த பின்னர் இது கைகளை பிசைந்து கொண்டு கூறுவதாவது: "கல்வி மந்திரி Xavier Darcos எங்களை அழைக்க வேண்டும் என்று FIDL மீண்டும் கூறுகிறது; அதையொட்டி அவர் குறைந்த பட்சம் பள்ளி மாணவர்களின் கவலைகளை, கோரிக்கைகளை கேட்கவாவது வேண்டும். உண்மையில் அணிதிரள்வின் பெரும் தன்மையை எதிர்கொள்ளும் போது அமைச்சர் தன்னுடைய பங்கை கருதி கட்டாயம் பிரதிநிதி அமைப்புக்களை வரவேற்க வேண்டும்."