World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியாBrown government promotes patriotism and militarism பிரிட்டனில் பிரெளன் அரசாங்கம் தேசப்பற்று மற்றும் இராணுவவாதத்தை வளர்க்கிறது By Simon Whelan கடினமான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள பிரதம மந்திரி கோர்டன் பிரெளனுடைய தொழிற் கட்சி அரசாங்கம், பிரிட்டிஷ் தேசப்பற்று மற்றும் இராணுவவாதம் ஆகியவற்றை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உள்நாட்டை பொறுத்தவரை, அரசாங்கம் அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை, வாழ்க்கைத் தரங்களை பேரழிவிற்கு உட்படுத்தும் அச்சம் கொண்ட நெருங்கிவரும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளது; வெளியுறவை பொறுத்தவரையில் பிரிட்டன் இன்னமும் ஈராக், ஆப்கானிஸ்தான புதை மணலில் ஆழ்ந்துள்ளது. அத்தகைய இராணுவ நடவடிக்கைகளின் பின்னடைவு பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் விழைவுகளை சர்வதேச அளவில் எவ்விதத்திலும் குறைத்துவிடவில்லை. மூலோபாய இருப்புக்களுக்காக போட்டி என்பது அரசாங்கம் அதன் ஆதரவை வெளிநாடுகளில் இராணுவத் தலையீட்டிற்கு மீண்டும் வற்புறுத்தியிருப்பதைத்தான் காண்கிறது. இத்தகைய கொள்கைக்கு எதிர்ப்பை அடக்குதல் அல்லது ஓரமாக ஒதுக்குதல் என்பது தேவையாகும். இதை அடையும் பொருட்டு, அரசாங்கம் இராணுவம் மற்றும் ஊடகத்துடன் சேர்ந்து கொண்டு மக்கள் கருத்தை சூழ்ச்சியாயக் கையாளவும் அச்சுறுத்தவும் முயற்சிக்க தொடங்குகிறது. ஈராக் படையெடுப்பின் ஐந்தாம் ஆண்டு நிறைவு முடிவடைவதற்கு சற்று முன்னதாக பிரிட்டிஷ் இராணுவம் ஒரு 2 மில்லியன் பவுண்ட் செலவிலான ஆட்சேர்ப்பு உந்துதலைத் தொடங்கியது. படைகளின் எண்ணிக்கையில் 10 சதவீத குறைப்பை இராணுவம் எதிர்கொண்டுள்ளது; ஏனெனில் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பணி செய்ய விரும்பாத பயிற்சி பெற்ற துருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதில் தொடர்ந்து பிரச்சினைகள் உள்ளன. இராணுவம் ஒரு பொது உறவு நிறுவனத்தின் பணிகளை இதற்காக 18 மாதங்களுக்கு முன்பு நாடியுள்ளது. துருப்புகளை தேர்ந்தெடுக்கும் தலைமை அதிகாரியான பிரிகேடியர் அன்டுறூ ஜாக்சன் புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைககளில் "மிகச் சிறந்த" ஒன்றுக்கு பொறுப்பைக் கொண்டுள்ளார்; இதற்கு அவருக்கு Rugby Union England International இன் ஜொனி வில்கின்சனுடைய ஆதரவு கிடைத்துள்ளது. இராணுவத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதற்கான ஒன்றையொன்று பாதிக்கும் நடவடிக்கையில் இதுதான் முதல் தடவயாகும்; பொது மக்கள் பிரிட்டிஷ் துருப்புக்களுக்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர். ஆப்கானிஸ்தான், ஈராக் ஆக்கிரமிப்பிற்கு பரந்த எதிர்ப்பு இருப்பதை நன்கு உணர்ந்துள்ள நிலையில், இராணுவம் துருப்புகளுக்கு குறைந்த ஊதியம், குறைந்த வீடுகள் ஆகியவை பற்றிய பரிவுணர்வையும், இராணுவவாதத்தை நெறிப்படுத்தும் வகையில் போருக்கு தக்க கருவிகள் எப்பொழுதும் கிடைக்காமல் போவது பற்றிய பரிவுணர்வையும் வெளிப்படுத்தியுள்ளது. செய்தி ஊடகம் இளவரசர் ஹரியை ஆப்கானிஸ்தானில் குறுகிய காலத்திற்கு பணி புரிந்ததற்காக பெரும் வீரர் எனப் பாரட்டிய முறையில் பிரச்சாரத்தை தொடர்ந்தது. இவ்வார ஆரம்பத்தில் இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் இருவரும் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் காயமுற்ற துருப்புகளுக்கு நிதியுதவி கொடுப்பதற்காக விருந்து ஒன்றை கொடுப்பர் என்று அறிவிக்கப்பட்டது. வலதுசாரி Daily Mail இன் ஆதரவை பெற்ற "மாவீரர்களுக்கு உதவுங்கள்" ("Help for Heroes") என்ற முறையீடு, மே 7ம் தேதி லண்டனில் நடக்கவிருக்கிறது. இளவரசர்கள், பணிபுரியும் இராணுவ அதிகாரிகள், முன்னாள் SAS துருப்பு ஆண்டி நக்நாம், இராணுவத் தலைவர் தளபதி ரிச்சார்ட் டான்னட் ஆகியோர் இதில் பங்கு பெறுகின்றனர். செல்வம் படைத்த புகழ்வாய்ந்தவர்கள் கலந்து கொள்ளும் விருந்து ஒரு இரகசிய இடத்தில் நடைபெறுகிறது; இராணுவச் செயற்பாடுகள், இராணுவ இசைக்குழு நிகழ்ச்சி ஆகியவை இருக்கும். அதே மாதம் ஈராக்கில் இருந்து இங்கிலாந்து துருப்புக்கள் திரும்ப அரசாங்கம் திட்டம் வகுத்துள்ள அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரெளன் இங்கிலாந்து துருப்புக்கள் அடுத்த மாதத்தில் 4,100ல் இருந்து 2,500 ஆக குறைக்கப்பட உள்ளன என்று உறுதி கொடுத்திருந்தார். இது காலவரையற்று தாமதப்படுத்தப்பட்டுள்ளது; ஏனெனில் நாட்டின் தெற்கில் இருக்கும் பிரிட்டிஷ் படைகள் எழுச்சியாளர்களுக்கு எதிராக பெரிய தாக்குதலுக்கு தயார் செய்திருந்தனர். Peterborough ற்கு அருகே உள்ள விட்டெரிங் RAF ல் இருக்கும் இராணுவத்தினர் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுவது பற்றிய ஒருமுகப்படுத்தப்பட்ட உத்தியோக பூர்வ சீற்றத்தையும் வெறுப்பையும் கடந்த வாரங்களும் கூட கண்டன. வார்த்தைகளால் இழிவுபடுத்துப்படுவதாக கூறப்படுவதன் காரணமாக இராணுவப் பணி அலுவலர்கள் தங்கள் சீருடைகளை பொது இடங்களில் அணிய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளனர். Peterborough வின் கன்சர்வேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர் Stewart Jackson பின்னர், "எந்த தீவிரப் பிரச்சினைகள் தொடர்பாகவும் போலீசாரிடம் சான்றுகள் ஏதும் இல்லை. ஒரு சில இடங்களில் திட்டப்பட்டுள்ளனர் என்பதுதான் நான் கேள்விப்பட்டது" என்று ஒப்புக் கொண்டார். ஆனால் இது ஒன்றும் பிரெளன் செய்தி ஊடகத்திடம் இராணுவ துருப்புகள் தங்கள் சீருடையை பெருமிதத்துடன் அணிந்து கொள்ளலாம், சாதாரண மக்கள் அதற்கு மதிப்பு கொடுத்து சீருடைப் பணிக்கு பொது இடத்தில் அவர்களுடைய "தியாகங்களுக்காக", "பொது பணிக்காக" மதிப்பு கொடுக்க வேண்டும் என்று அறிக்கை கொடுப்பதில் தடை செய்துவிடவில்லை. அரண்மனையும் கவலையை வெளியிட்டு அறிக்கை கொடுத்தது.RAF Wittering பற்றிய ஊடகப் பிரச்சாரம் முன்னாள் டோரி பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் Quentin Davies அளிக்க வேண்டும் என்று பிரெளன் கூறிய அறிக்கையுடன் இணைந்து வந்துள்ளது; புதிய தொழிற்கட்சிக்கு மாறிவிட்ட குயென்டின் இராணுவம் பற்றி மக்களுடைய அணுகுமுறையை முன்னேற்றுவிப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து வருகிறார். இந்த அறிக்கை பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகளை தங்கள் இராணுவ உடையை எப்பொழுதும் பகிரங்கமாக அணிய ஊக்கம் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் நோக்கம் மக்களிடையே போருக்கு தயாராக இருக்கும் தரப்புக்கள் தெருக்களில் இருப்பது பற்றிய உணர்வை பெருக்குவது ஆகும்.இதைத்தவிர, இந்த அறிக்கை உள்ளூராட்சி குழுக்கள், ஈராக்கில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்தும் திரும்பி வரும் படைப்பிரிவுகளுக்கு உள்ளூர் அணிவகுப்புக்களை அமைக்க வேண்டும் என்று பரிந்துரை கூறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. போரில் காயமுற்ற துருப்புக்கள் Purple-Heart பதக்கங்களை பொதுக் கூட்டங்களில் முழு இராணுவ மரியாதைகளுடனும், இராணுவ இசை முழங்க அவர்களுடைய தியாகங்களுக்காக பெறுவர். கால்பந்து குழுக்கள் மற்ற அமைப்புக்களும், போருக்கான உடையணிந்த நிலையில் இராணுவத்தில் தடையற்ற முறையில் வருவதற்கு அனுமதி கொடுக்கப்படும். நடைமுறைக்குள்ளிருந்து வரும் மற்ற ஆலோசனைகள் Armed Forces Day, இராணுவ நாள் என ஒன்று கொண்டாடப்பட வேண்டும் என்று உள்ளது; இதற்கு முன்னாள் படைத் தலைவர் Guthrie பிரபுவின் ஆதரவு உள்ளது. பிரெளன் உத்தரவின் பேரில் வந்துள்ள "குடியுரிமை: எமது பொதுப் பிணைப்பு" என்பது பற்றிய மற்றொரு அறிக்கை, கோல்ட்ஸ்மித் பிரபுவால் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பில் பிரிட்டனின் பங்கிற்கு சட்டபூர்வமாக ஒப்புதலளித்த இந்த முன்னாள் தலைமை வழக்கறிஞர், அரசியாருக்கு பள்ளிச் சிறார்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்வது தேவைப்படுகிறது என்ற ஒரு முன்மொழிவுடன், அவர்களிடையே தேசப் பற்றை ஏற்படுத்துவதற்கு குவிப்புக் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். இப்படி திட்டமிடப்பட்டுள்ள உறுதிமொழியில், "உண்மையான விசுவாசம்", "மாட்சிமை தங்கிய அரசியாருக்கு", "நான் என்னுடைய விசுவாசத்தை ஐக்கிய இராச்சியத்திற்குக் கொடுப்பேன், அதன் உரிமைகளையும் சுதந்திரங்களையும் மதிப்பேன். அதன் ஜனநாயக மதிப்பிடுகளை நிலைநிறுத்துவேன். அதன் சட்டங்களை நன்றியுடன் கடைபிடித்து என்னுடைய கடமைகளையும், கடப்பாடுகளையும் பிரிட்டிஷ் குடிமகன் என்ற முறையில் நிறைவு செய்வேன்" என்று அறிவிக்கப்பட உள்ளது. கோல்ட்ஸ்மித்தின் அறிக்கை இங்கிலாந்தில் வசிக்கும் காமன்வெல்த் குடிமக்கள் மற்றும் வட அயர்லாந்தில் வசிக்காத ஐரிஷ் குடிமக்கள் பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்பதை நிறுத்த முன்மொழிகிறது. அறக்கட்டளைகளின் சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர் தன்னார்வ பணிகளை செய்வதற்கு ஊக்கம் கொடுக்கப்படும்; அரசாங்கமானது இவ்வறக்கட்டளைகளை பெருகிய முறையில் அரசு ஏற்பாடுகளுக்கு ஒரு பதில் ஏற்பாடாக முன்தள்ளுகிறது. |