World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Paris meeting commemorates the life and work of Keerthi Balasuriya

கீர்த்தி பாலசூரியவின் வாழ்வு மற்றும் பணிகளைப் பற்றி பாரிஸ் கூட்டம் நினைவுகூர்கிறது

By our correspondent
25 March 2008

Use this version to print | Send this link by email | Email the author

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மார்ச் 16 அன்று பாரிசில் இலங்கை ட்ரொட்ஸ்கிச தலைவர் கீர்த்தி பாலசூரிய தன்னுடைய 39 வயதில் மறைந்ததின், 20வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஒரு கூட்டத்தை நடத்தியது.

இந்த கூட்டத்தில் பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியின் கிறிஸ் மார்ஸ்டன், உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் மொழி பக்கத்தின் தலைமை ஆசிரியர் அமுதன் மற்றும் ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் செயலாளருமான பீட்டர் சுவார்ட்ஸ் ஆகியோர் உரையாற்றினர்.

பிரான்சின் தமிழ் சமுதாயத்திலுள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் முக்கிய உறுப்பினரான அதியன் கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசுகையில் கீர்த்தியின் போராட்டம் உலகம் முழுவதும் இருக்கும் இளைய தலைமுறைக்கு ஒரு பெரும் ஊக்கம் என்றும், இதற்கு முன்னுதாராணமாக 38 வயதில் ஒரு கார்விபத்தில் ஓராண்டிற்கு முன் துன்பம்தரும் வகையில் மறைந்த இளம் ட்ரொட்ஸ்கிச தலைவர் ரவீந்திரநாதன் செந்தில்ரவியை சுட்டிக் காட்டினார்.

இந்திய போல்ஷிவிக் லெனினிச கட்சியின் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுடைய பங்கு பற்றி மார்ஸ்டன் விரிவாக எடுத்துரைத்தார். போல்ஷிவிக் லெனினிச கட்சி ட்ரொட்ஸ்கியால் வளர்த்தெடுக்கப்பட்ட நிரந்தரப் புரட்சி தத்துவத்தை தனக்கு அடிப்படையாக கொண்டு, 1940களில் அப்பொழுது சிலோன் என்று அழைக்கப்பட்டிருந்த இலங்கையில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை வழிநடத்தியது. இதன் இலங்கை பகுதியான லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) இப்போராட்டத்திற்காக பாடுபட்டது; அத்தகைய போராட்டம் இன, மத வேறுபாடுகளை கடந்து தொழிலாள வர்க்கத்தின் பிரிவுகளால் வழிநடத்தப்பட்டு அனைத்துவித அடக்குமுறைகளையும் தூக்கி எறிந்து சோசலிசம் கட்டியமைக்கப்பட வேண்டும் என்ற முன்னோக்கை கொண்டிருந்தது. தமிழ் சிறுபான்மையினருக்கு குடியுரிமையை மறுத்து அவர்களுடைய மொழிக்கும் அங்கீகாரம் இல்லாமல் செய்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சுமத்தியிருந்த இனவெறி அரசியலமைப்பிற்கு எதிரான அவர்கள் போராட்டம், அவர்களை வெகுஜனப் போராட்டத்தின் தலைமையில், குறிப்பாக 1953 ஹர்த்தாலில் (பொது வேலைநிறுத்தம்) இருத்தியது.

"துன்பியலான வகையில்" "LSSP யின் கோட்பாட்டு அடிப்படையிலான அரசியல் போராட்டத்தின் உயர் கட்டமாக இருக்குமென இது நிரூபிக்கப்பட இருந்தது" என்றார் மார்ஸ்டன். ஏனெனில் பாராளுமன்ற வடிவமைப்பு, தேசியவாதம் அதில் இருந்து வகுப்புவாதம் என்று பின்னர் கட்சி தொடர்ந்து மாற்றிக் கொண்டது; அந்த வழிவகையானது நான்காம் அகிலத்தின் உள்ளே வளர்ச்சியுற்ற மிசேல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மண்டேலினால் வழிநடத்தப்பட்ட மையவாத மற்றும் சீர்திருத்தவாத போக்குகளுடன் கட்டுண்டிருந்தது.

தமிழ் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை சிங்கள மக்களில் பெரும்பாலானவர்களிடம் இருந்து பிரிவினை செய்ததற்கு பொறுப்பாக LSSP யின் தலைமையின் தொடர்ச்சியான காட்டிக் கொடுப்புக்கள் இருந்ததை மார்ஸ்டன் எடுத்துக் கூறினார்; இதையொட்டி 1983 இனப்படு கொலைகளை தொடர்ந்து நாட்டில் உள்நாட்டுப் போர் 25 ஆண்டுகளாக நடந்து வருவதையும் குறிப்பிட்டார்.

"இந்த வளர்ச்சியின் அடிப்படையில்தான் ட்ரொட்ஸ்கிசத்திற்கு உண்மையாக இருந்த கீர்த்தி பாலசூரிய மற்றும் பிறரின் முக்கியத்துவத்தை உண்மையான முறையில் மதிப்பிட முடியும்" என்று மார்ஸ்டன் கூறினார். "அவர்களுடைய எண்ணிக்கை சிறிதாகத்தான் இருந்தது; ஆனால் அவர்கள் எடுத்த நிலைப்பாடு விலைமதிப்பிடமுடியாதது மற்றும் உலக முக்கியத்துவம் வாய்ந்தது... அப்பொழுது அவர்கள் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடு இல்லாவிட்டால், சோசலிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் புகழ் எப்போதைக்குமாக LSSP யின் அரசியல் காட்டிக் கொடுப்பின் கனத்தினால் பெரும் இழப்பிற்கு உட்பட்டிருக்கும்."

"ஒவ்வொரு கட்டத்திலும் கீர்த்தி தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் மற்றும் வரலாற்று நலன்களை காக்க முற்பட்டார். அப்பொழுது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பகுதியான தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் அரசியல் நெருக்கடி 1985ல் முன்னுக்கு வந்த பொழுது, அவர் ட்ரொட்ஸ்கிசத்தின் முன்னோக்கை மீட்கவும் புதுப்பிக்கவும் அனைத்துலகக் குழுவினால் நடத்தப்பட்ட போராட்டத்தில் மைய பங்கை கொண்டிருந்தார்." என்று மார்ஸ்டன் விளக்கினார்.

டிசம்பர் 1987ல் இதய நோய் தாக்குதலால் துன்பகரமான முறையில் இறப்பதற்கு முன், சமூகப் புரட்சிக்கான வாய்ப்பு வளம் முன்னோடியில்லாத உலகந்தழுவிய உற்பத்தி முறையில் எத்தகைய உட்குறிப்புக்களை கொண்டிருக்கும் என்பதை புரிந்துகொள்வதற்கு மும்முரமாய் வேலைத்திட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தார். இந்த அடிப்படையில் "அவர் தேசிய முதலாளித்துவத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட பெயரளவு சுதந்திர நாடுகளில் இருக்கும் தேசிய முதலாளித்துவ இயக்கங்களுக்கும் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்களுக்கும் இடையே ஒரு இருப்பு நிலைக் குறிப்பை வரைவதில் ஊக்கம் கொண்டிருந்தார்."

"இந்த விவாதங்களின் மூலம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, தற்காலத்தைய பிரிவினை மற்றும் வகுப்புவாத இயக்கங்கள், தொழிலாளர்களையும் அத்தியாவசிய இயற்கை வளங்களையும் சுரண்டுவதற்குமான தங்களின் சொந்த உரிமைகளை உத்திரவாதம் செய்யும் பொருட்டும் மற்றும் இந்த வழியில் பிரதான அரசுகள் மற்றும் நாடுகடந்த நிறுவனங்களுடன் தங்களின் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும் வேண்டி, நிலவுகின்ற மத்தியத்துவப்படுத்தப்பட்ட அரசுகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முயலும், பிராந்திய மற்றும் இன அடிப்படையைக் கொண்ட முதலாளித்துவ வர்க்கத்தின் பதில் நடவடிக்கையை பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன என்ற முடிவுக்கு வந்தது.

"இத்தகைய இயக்கங்களில் உண்மையான ஜனநாயக அல்லது ஏகாதிபத்திய-எதிர்ப்பு உள்ளடக்கம் ஏதும் கிடையாது. அவை தொழிலாள வர்க்கம் தன்னை சர்வதேச அளவில் ஐக்கியப்படுத்திக் கொள்ளுவதற்கு எதிரிடையாக இருந்தன; மேலும் ஏகாதிபத்திய எதிர்ப்பை முடிவிற்கு கொண்டுவருவதற்கு ஒரே உண்மையான அடிப்படையான, உலகை விரோதப் போக்குடைய முதலாளித்துவ தேசிய அரசுகளாக பிரித்தல் என்பதை முடிவுக்கு கொண்டுவரவும் எதிராக இருந்தன."

இவ்விதத்தில், கீர்த்தியின் வாழ்வும் பணியும் "இப்பொழுது புரட்சிகர சோசலிச நெறிகளின் குறுக்கு நெடுக்கு இழைகளின் பகுதியாகி விட்டது-- அதுதான் வர்க்க ஒடுக்குமுறையில் இருந்து மனிதகுலத்தை விடுவிப்பதற்கான வரலாற்று ரீதியாக பெறப்பட்ட அடிப்படை வேலைத்திட்டமும் முன்னோக்கும் ஆகும்" என மார்ஸ்டன் முடித்தார்.

தமிழர்-எதிர்ப்பு இன அழிப்புக்களில் இருந்து வந்த ஒரு புலம் பெயர்ந்தோன் என்ற முறையில் தேசிய விடுதலை கருத்துக்களால் வலுவாக செல்வாக்கு பெற்றிருந்த, ஆனால் போராடியிருந்த முதலாளித்துவ தேசிய இயக்கங்களுடன் ஏமாற்றம் அடைந்திருந்த நிலையில், தான் முதலில் ஜேர்மனியில் இருந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சர்வதேச பள்ளியில் கீர்த்தியை சந்தித்த பொழுதான காலத்தைப் பற்றி அமுதன் பேசினார். "நான் கட்சிக்கு அப்பொழுது புதியவன். முதல் நாளே தோழர் கீர்த்தி பாலசூரிய மதிய உணவு இடைவேளையின் என்னிடம் கலந்துரையாட வந்தார்... எங்கள் கலந்துரையாடல் இலங்கை, இந்தியாவில் இருந்த அரசியல் நிலைமை, தேசிய குழுக்களின் தன்மை ஆகியவை பற்றி இருந்தது. இரு நாடுகளும் இந்திய-இலங்கை 1987 உடன்பாட்டில் கையெழுத்திட ஒப்புக் கொண்டிருந்தன; இது இந்தியத் துணைக்கண்டத்தில் பரந்த அரசியல் பாதிப்பை ஏற்படுத்தியது. முதலாளித்துவ வளர்ச்சி பின்தங்கிய நாடுகளில் தேசிய முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தனம் எப்படி இருந்தது என்பது மீண்டும் ஒரு வெளிப்படையாயிற்று."

அந்த நேரத்தில் ஐரோப்பாவில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தமிழ் மக்களிடையே நன்கு அறியப்பட்டிருக்கவில்லை என்று அமுதன் நினைவுகூர்ந்தார். "இப்பொழுது 20 ஆண்டுகளுக்கு பின்னர் நாம், ஐரோப்பாவில் இருக்கும் தமிழ் சமூகத்திடையே சர்வதேசிய சோசலிச முன்னோக்கு பற்றி உறுதி நிறைந்த அரசியல் செல்வாக்கை நிறுவியுள்ளோம்.

அனைத்து தமிழ் தேசியவாத குழுக்களும், சில தம்மை சோசலிஸ்ட் என்று கூறிக்கொண்டாலும், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உடன்பட்டன. "இது ஐரோப்பாவில் இருக்கும் தமிழ் மக்களிடையே மகத்தான அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த இளைஞர்களில் ஒரு பிரிவினர், அந்த இயக்கங்களை விட்டு நீங்கினர். எப்படியிருந்தபோதும் ஒரு மாற்றீட்டு அரசியல் முன்னோக்கு இல்லாமல் இருந்தது."

"அந்த இயக்கங்களின் வர்க்க தன்மை, தொழிலாள வர்க்கத்துடன் அவை கொண்டிருந்த உறவுகள் பற்றி கீர்த்தி விளக்கினார்" என்று அமுதன் கூறினார். "இந்திய-இலங்கை அரசாங்கங்களிற்கு அவை நிபந்தனையற்ற முறையில் சரணடைந்நதது அவர்களுடைய முதலாளித்துவ தேசியவாத முன்னோக்கின் தர்க்கரீதியான விளைவு ஆகும். அவர்கள் பரந்துபட்ட தமிழ் மக்களை விட கூடுதலான முறையில் இந்திய-இலங்கை முதலாளித்துவத்தை நம்பினர். அவர்களுடைய முன்னோக்கு தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் சுரண்டுவதற்கு பிரத்தியேகமாக உரிமை பெறுவது என்பதாக இருந்தது. இதுவோ ஜனநாயக உரிமைகளுக்கான உண்மையான போராட்டத்திற்கு முற்றிலும் எதிரானது ஆகும்.

"ஒரு சோசலிசப் புரட்சியின் ஊடாகத்தான் ஜனநாயக உரிமைகளை நிறைவேற்றுதலை சாத்தியமாக்க முடியும் என்பதை அவர் வலியுறுத்தியதுடன் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியின் முன்னோக்குகளையும் விவரித்தார்."

இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு கீர்த்தி "தன்னுடைய சர்வதேச சக சிந்தனையாளர்களுடன் மிக நெருக்கமாக இணைந்து, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை பற்றிய அனைத்துலக குழு அறிக்கை மீதானதில் உழைத்திருந்தார்" என்று கூட்டத்தினருக்கு அமுதன் கூறினார். "ஸ்ரீலங்காவின் நிலைமை பற்றியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமை பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை" (நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தற்போதைய இலங்கை பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஆவணம்) 1980 களில் அரசியல் நனவுடைய இளைஞர்களால் மிகவும் விவாதிக்கப்பட்ட ஒரு ஆவணமாகும். அனைத்துலகக் குழுவின் பகுதிகள் ஐரோப்பாவில் கணிசமான தமிழ் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை வென்றெடுக்க அடித்தளமாக இருந்தது.

தீவின் வடக்குப் பகுதியில் ஒரு தனி அரசுக்காக நடத்தும் ஆயுதப் போராட்டத்திற்கு முன்னணி வகிக்கும் முதலாளித்துவ தேசியவாத குழுவான, தமிழீழ விடுதலைப் புலிகளின் வர்க்கத் தன்மை, நன்கு வெளிப்பட்டுள்ளது: "சுதந்திர போராளிகளாக" இருப்பதாக LTTE கூறிக்கொள்வதில் இருந்து ஒரு சலுகை பெற்ற உயரடுக்காக மாற்றமடைந்தது, 2002ல் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன் இன்னும் வெளிப்படையாயிற்று. வணிக விரிவாக்கங்களும் முதலீட்டுத் திட்டங்களும் அதன் பிரதிநிதிகள் மற்றும் இடைத்தரகர்களின் அரசியல் நிகழ்ச்சிநிரலாக ஆகி, புலம் பெயர்ந்த சமூகத்தை அது அதன் ஆதரவைத் திரும்பப் பெறும்படியான பாதிப்பை விளைவித்துள்ளது."

தமிழ் தேசியவாதம் என்பது மேலை நாடுகளில் இருக்கும் தமிழர்களிடையே பெரிதும் செல்வாக்கை இழந்துவிட்டதாக அமுதன் கூறினார். "ஈராக்கியப் போர், நிதியியல் நெருக்கடி, வேலையின்மை, சமூக சமத்துவமின்மை மற்றும் இவர்கள் வாழும் நாட்டிலுள்ள தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோருடைய போராட்டங்கள் இவர்களின் அரசியல் சிந்தனையில் பெரும் பாதிப்பைக் கொடுத்துள்ளன. தமிழ் மக்களுடைய ஜனநாயக அபிலாசைகள் தமிழ்ப் பகுதிகளில் சிறிய முதலாளித்துவ அரசுகளை அமைப்பது என்ற குறுகிய கருத்தின்மூலம் அடையப்பட முடியும் என்று அவர்கள் இனியும் கருதுவதில்லை."

"சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம், பப்லோவாதம் ஆகியவற்றின் இணைந்த காட்டிக் கொடுப்புக்கள் தொழிலாள வர்க்கத்தை பெரிதும் பாதித்த சகாப்தத்தில் கீர்த்தி தன்னுடைய அரசியல் பணியை நடத்தி வந்தார்; அக்காலத்தில் அனைத்துலகக் குழுவின் ட்ரொட்ஸ்கிச காரியாளர்கள் ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

"ஆனால் உலக முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகள் புரட்சிகரமான மக்கள் போராட்டங்கள் என்ற புதிய காலத்தைத் தூண்டும் என்று அவர் உறுதியாக நம்பினார்; மேலும் இப்போராட்டத்தின் எதிர்காலம், பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் படிப்பினைகளில் பயிற்சி பெற்ற, எஃகு போன்று உறுதி பெற்ற ஒரு புரட்சிகர தலைமையின் இருப்பில்தான் முழுவதும் தங்கியுள்ளது என்றும் உறுதியாக நம்பினார்."

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பிளவு மற்றும் 1987 டிசம்பர் 18ல் கீர்த்தியின் அகால மரணம் இவற்றிற்கு இடையே இருந்த இரு ஆண்டுகள் ஐயத்திற்கு இடமின்றி, அவருடைய அரசியல் வாழ்வில் பெரும் பயனுடையவாக திகழ்ந்தன. அனைத்துலகக் குழுவால் பிளவின்போதும் அதற்கு பின்னரும் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்களில் அவருடைய பங்கு கணிசமாக இருந்தது... அவைதான் அனைத்துலகக் குழு கடந்த இரு தசாப்தங்களாக பரந்த அளவில் தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான சாதனைகளை புரிவதற்கு -- குறிப்பாக உலக சோசலிச வலைத் தளம் சர்வதேச மார்க்சிசத்தின் உண்மைக் குரலாக வளர்வதற்கு அஸ்திவாரங்களை அமைத்தன."

உலக நிதிய முறையின் தீர்க்க முடியாத நெருக்கடி, குறைந்த பிணையுள்ள அடைமானக் கடன் நெருக்கடியினால் தூண்டுதல் பெற்றது, ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சங்கடம் மற்றும் பெரும் சக்திகளுக்கிடையில் உலக மேலாதிக்கத்திற்கான யுத்தம் ஆகியவை, "தவிர்க்க முடியாமல் புதிய போர்களுக்கு வழிவகுத்து, மூர்க்கமான வர்க்கப் போராட்டங்களை புதுப்பிக்கவும் இட்டுச் செல்லும்." என்று சுவார்ட்ஸ் விளக்கினார். "தோழர் கீர்த்தி தன்னுடைய முழு வாழ்நாட்களையும் இந்த வரவிருக்கும் தவிர்க்க முடியாத போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தை தயார் செய்வதற்காகவே செலவழித்தார்."

நாம் விரைவில் பிரான்சில் மே-ஜூன் 1968ல் நடைபெற்ற எழுச்சியின் 40 வது ஆண்டு நிறைவை போற்ற இருக்கிறோம் என்று கூட்டத்தினருக்கு அவர் நினைவு படுத்தினார். "போருக்குப் பிந்தைய காலத்தில் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் மிகப் பெரிய புரட்சி இயக்கமாக அது இருந்தது... இங்கு பிரான்சில் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்; அது ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டிக் கொடுப்பினால்தான் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது."

1970 களின் தொடக்கத்தில் உலகம் முழுவதையும் அடித்துச்சென்ற பெரும் இயக்கத்தின் ஒரு பாகமாக இது இருந்தது. முதலாளித்துவத்தின் எதிர்தாக்குதல் "போருக்கு பிந்தைய காலத்தின் சமூக சமரசத்திற்கு அடிப்படையாக இருந்த கீன்ஸிய பொருளாதார கொள்கைகளை கைவிடுதலில் சம்பந்தப்பட்டிருந்தது. வணிகம், நிதியம் ஆகியவற்றில் தேசிய கட்டுப்பாடுகளை அது அகற்றியது; அதைத் தொடர்ந்து உலகந்தழுவிய முறை எனக் கூறப்படும் வழிவகை வெள்ளப் பெருக்கென வருவதற்கு உதவியது. இதையொட்டி தொழிலாள வர்க்கத்தின் மீது மகத்தான தாக்குதல் ஏற்பட்டது; அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றேகன் PATCO விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொழிற்சங்கத்தை உடைத்து நொருக்கியதில் மற்றும் பிரிட்டிஷ் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை பிரிட்டிஷ் பிரதமர் மார்க்கரெட் தாட்சர் தோற்கடித்ததில் சுருக்கமாய் காட்டப்பட்டது."

பழைய தொழிலாளர் அமைப்புக்களுடைய விடையிறுப்பு தேசிய அரசின் கட்டமைப்பிற்குள் ஒரு சமூக சமரசத்தை நாடும் முந்தைய முயற்சிகளைக் கைவிட்டுவிடுதல் என்பதாக இருந்தது; மாறாக, இது "உலகந்தழுவிய சந்தை மீது தங்களின் தேசிய முதலாளித்துவ போட்டித் தன்மையை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு தொழிலாள வர்க்கத்தின் மீது மாபெரும் தாக்குதல்களை திணிக்கும்."

கிழக்கு ஐரோப்பா, சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவில் இருக்கும் ஸ்ராலினிச ஆட்சிகளை பொறுத்தவரை, "தனி ஒரு தேசிய அரசின் கட்டமைப்பிற்குள், தனி ஒரு நாட்டில் சோசலிசம் கட்டியமைக்கப்பட முடியும் என்ற அவர்களின் மோசடித்தன்மையை பூகோளமயமாக்கல் அம்பலப்படுத்திவிட்டது."

"பூகோளமயமாக்கலும் குளிர்யுத்த முடிவும் குட்டி முதலாளித்துவ தேசிய வாத அமைப்புக்களின் முழு திவால்தன்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது" என்று சுவார்ட்ஸ் தொடர்ந்தார். மாஸ்கோ, வாஷிங்டன் ஆகியவற்றிற்கு இடையே தந்திரோபாய கையாளல் நடவடிக்கைகள் இல்லாத நிலையில், "அவை ஏகாதிபத்திய எதிர்ப்பு போலித்தனத்தை கைவிட்டு வாஷிங்டன் அல்லது மற்ற ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவிற்கு போட்டியிடுகின்றன.... தங்கள் சொந்த தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கு இளைய பங்காளிகளாக அனுமதிக்கும் ஏகாதிபத்தியத்துடன் ஒரு உடன்பாட்டை காண்பதற்கு முயற்சிக்கின்றன."

இலங்கையின் வடக்கில் ஒரு சிறுதுண்டு தமிழ் பகுதி என்பது "இப்பகுதியில் ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளுக்கு ஒத்திசைந்து கொடுக்கும் ஒரு கருவியாகவே ஆகிவிடும். இந்த அடித்தளத்தில் ஜனநாயகம் என்பது சாத்தியிமில்லாதது."

அமெரிக்காவின் ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கை மற்றும் பெருகிய முறையில் போட்டியிடும் பெரும் சக்திகளுக்கு இடையே வளர்ந்துவரும் பூசல்கள், இராணுவமயமாக்கல் ஆகியவை முதல் உலகப் போருக்கு இட்டுச்சென்ற நிலைமையை ஒத்த தன்மையை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன என்று சுவார்ட்ஸ் கூட்டத்தில் எச்சரித்தார். "இப்பொழுதுள்ள வினா இதுதான்: ஒரு அழிவை கொடுக்கவல்ல புதிய அணுசக்திப் போருக்குள் ஏகாதித்தியம் மனிதகுலத்தை மூழ்கடித்துவிடுமோ? அல்லது சர்வதேச தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தை அகற்றிவிட்டு உயர்நிலையில், சோசலிச அஸ்திவாரத்தில் சமூகத்தை கட்டியமைப்பதன் மூலம் இதனை தடுக்குமா?"

ஐரோப்பா முழுவதும் வர்க்கப் போராட்டம் மீண்டும் எழுச்சி பெற்று வருவதை சுட்டிக்காட்டி அவர் வினவினார்: "ஆனால் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முன்னோக்கை எவர் கொடுப்பர்? கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து வலதிற்கு நகர்ந்து கொண்டிருக்கும் சமூக ஜனநாயக, சோசலிச, கம்யூனிஸ்ட் கட்சிகளா கொடுக்கும்? ஒவ்வொரு போராட்டமாக காட்டிக் கொடுத்து தொழிலாளர்களுக்கு இடையே நிர்வாகத்தின் போலீஸ் போல் செயல்பட்டு வரும் தொழிற்சங்கங்களா கொடுக்கும்? அல்லது நேற்றைய மாவோ சே துங், யாசர் அராஃபத் மற்றும் சான்டினிஸ்ட்டாக்களை பெருமைப்படுத்தி, இன்றைய ஹ்யூகோ சாவேஸ், ஈவோ மோரேல்ஸ் ஆகியோரை கெளரவிப்பவர்கள் கொடுப்பார்களா? வெனிசூலாவின் பெரும் எண்ணெய் வருமானத்தில் இருந்து மக்களுக்கு கொஞ்சம் விசிறியடிக்கும் இராணுவ அதுகாரி ஷாவேஸ் போன்றவர்கள் சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்க முடியும் என்று எவரேனும் நம்பமுடியுமா?"

"நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒன்றுதான் உலக நிலைமை மற்றும் 20ம் நூற்றாண்டின் வரலாறு பற்றிய பகுப்பாய்வில் உறுதியான தளத்தைக் கொண்ட முன்னோக்கை கொண்டிருக்கிறது" என்று சுவார்ட்ஸ் கூறினார். "சோசலிச சர்வதேசிய பதாகையின் கீழ் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கு நாம் போராடவேண்டும்."

"கீர்த்தியின் மரபுரிமை செல்வத்தை கெளரவப்படுத்துவது என்பதற்கு பொருள் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களில் இருந்து பெறப்பட்ட படிப்பினைகள், வரலாறு ஆகியவற்றை இளைய தலைமுறைக்கு கற்பிப்பது என்பதாகும்... அந்த படிப்பினைகளும், கொள்கைகளும்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் பொதிந்துள்ளன."