World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: While waving red-flags, the Stalinist CPM lurches further right

இந்தியா: சிவப்புக் கொடிகளை உயர்த்தி அசைக்கையில், ஸ்ராலினிச சிபிஐ (எம்) இன்னும் வலதிற்கு பாய்கிறது

By Arun Kumar
5 April 2008

Use this version to print | Send this link by email | Email the author

இடது முன்னணியின் முக்கிய பங்காளியும் இந்தியாவின் முக்கிய ஸ்ராலினிச கட்சியுமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் அதன் 19வது தேசிய மாநாட்டை ஏப்ரல் 13, வியாழனன்று அன்று முடித்துக் கொண்டது.

மே 2004ல் இருந்து சிபிஎம் தலைமையில் இடது முன்னணி இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தை "வெளியில் இருந்து" பதவியில் நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது. இந்திய முதலாளித்துவத்தின் மரபார்ந்த அரசாங்க கட்சியான காங்கிரஸ் கட்சியினால் வழிநடத்தப்படும் UPA அரசாங்கம் உலக முதலாளித்துவ சந்தையின் உற்பத்திக்காக இந்தியாவை ஒரு குறைவூதிய தொழிலாளர் மையமாக மாற்றும் நோக்கத்துடன் புதிய தாராளக் கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது; அதே நேரத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு "மூலோபாய, உலகளாவிய பங்காளித்தனத்தை" உறுதிப்படுத்திக் கொள்ளவும் விரும்புகிறது.

சிபிஎம் மாநாடு நடந்த இடமான கோயம்புத்தூர் என்னும் தென்னிந்திய ஜவுளி உற்பத்தி மையத்தின் அனைத்து போக்குவரத்துப் பிரிவுகளிலும் கட்சிச் செயல்வீரர்கள் சிவப்பு காகித வளைவுகளையும் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளையும் நிறுவினர். "உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்" என்று அறிவிக்கும் பெரிய பதாகைகள் மற்றும் சிவப்பு கொடிகள் சிபிஎம் பேராளர்களை ஆறு நாட்கள் மாநாடு நடந்த அரங்கத்தில் நுழையும்போது வரவேற்றன.

இவை அனைத்தும் வெறும் ஏமாற்றுப் பகட்டுத்தான் என்பதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. சிவப்பு கொடிகளை அசைத்தல், மற்றும் வெற்றுத்தனமான ஏனைய "புரட்சிகர" சடங்குகள் இந்திய முதலாளித்துவத்தின் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து நிறுத்தும் தலையாய பங்கு ஆராயப்படாமல் தடுப்பதற்குத்தான் பயன்படுகின்றன.

தொழிலாள வர்க்கத்தை வலதுசாரி UPA அரசாங்கத்திற்கு உதவும் வகையில் செயல்படுத்துவதைத்தான் சிபிஎம் செய்து வருகிறது என்பது மட்டும் இல்லை. இடது முன்னணி அரசாங்கம் அமைத்துள்ள மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் அது சிறிதும் வெட்கம் இல்லாமல், சிறப்பு பொருளாதாரப் பகுதிகள் அமைப்பதற்காக விவசாயிகளின் நிலங்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கு எதிரான அவர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கு குருதிதோய்ந்த வன்முறையை பயன்படுத்துவது உள்பட, முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது. (பார்க்க: விவசாயிகள் கிளர்ச்சிகளை அடக்க மேற்குவங்க ஸ்ராலினிச அரசாங்கம் பயங்கரவாத நடவடிக்கையை அதிகரிக்கிறது.)

சிபிஎம் மாநாட்டில் மிகப் பெரிய அளவில் ஒரு செய்தியாளர் கூட்டம் இருந்தது. சிபிஎம் தேசிய பாராளுமன்றத்தில் மூன்றாம் பெரிய முகாமிற்குத் தலைமை தாங்குவது மட்டும் இதற்குக் காரணம் இல்லை; காங்கிரஸ் கட்சித் தலைமை விரைவில் சிபிஎம் மற்றும் அதன் இடது கூட்டாளிகளை மீறி இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்தக்கூடும் என்பது பற்றிய பெருகிய முறையிலான செய்தி ஊடகத்தின் ஊகமும் காரணம் ஆகும்.

கட்சித் தலைமை சிபிஎம் மாநாட்டிற்கு அளித்த அரசியல் தீர்மானத்தில் UPA அதன் முழு ஐந்து ஆண்டுகால பதவிக்காலத்திலும் பதவியில் இருப்பதற்கு தன் விருப்பம், நோக்கத்தை தெளிவாக்கியுள்ளது. முன்கூட்டியே தேர்தல் வந்தால் அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை (இடது முன்னணி, இந்து மேலாதிக்கவாத BJP அனைத்தும் அடங்கும்) அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கின்ற சூழ்நிலைமையின் கீழ் அவ்வொப்பந்தத்துடன் தொடர்ந்து செல்வதன்மூலம் அதனை விரைவுபடுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருப்பதன் காரணமாகவே இருக்கும்.

சிபிஎம் மாநாட்டின் இரண்டாம் நாளன்று செய்தியாளர் மாநாட்டில் பேசிய பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, தன்னுடைய கட்சி UPA அரசாங்கத்திற்குக் கொடுக்கும் ஆதரவை வலியுறுத்திக் கூறினார்; "அரசாங்க அதிகாரத்தில் இருந்து வகுப்புவாத சக்திகளை ஒதுக்குவதற்காக நாங்கள் UPA க்கு ஆதரவு கொடுக்கிறோம்."

பின்னர் ஒரு கேள்விக்கு விடையிறுக்கையில், யெச்சூரி "முக்கிய விரோதியான" BJP ஐ விட காங்கிரஸ் "ஒரு குறைந்த தீமை" என்பதால் அதை அதிகாரத்தில் தக்க வைக்க வேண்டும் என்பதற்கான ஸ்ராலினிச நிலைப்பாட்டை விரிவாகக் கூறினார். "எமது நிலைப்பாடு ஒரு காங்கிரஸ் அல்லாத, BJP எதிர்ப்பு உள்ள தன்மையைக் கொண்டுள்ளது. காங்கிரஸில் இருந்தும் BJP யில் இருந்தும் சம அளவு ஒதுங்கியிருக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை; ஏனெனில் வகுப்புவாதம் நாட்டின் ஐக்கியம், இறைமை ஆகியவற்றிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று நாங்கள் கருதுகிறோம்.

ஆனால் தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் கிராமப்புற இந்தியாவிலும் UPA அரசாங்கத்திற்கு எதிராக பெருகி வரும் எதிர்ப்பை சிபிஎம் தலைமை அசட்டை செய்ய முடியாது; உலகப் பொருளாதாரத்துடன் இந்தியாவின் முழு ஒன்றிணைப்பிற்கு ஆதரவில் 1991ம் ஆண்டில் இந்திய முதலாளித்துவ வர்க்கம் அரசு வழி வளர்ச்சித் திட்டத்தைக் கைவிட்டதில் இருந்து கிராமப்புறங்களில் உண்மையில் உணவில் பெறப்படும் கலோரி அளவு குறைந்துவிட்டது.

உயரும் உணவு விலைகள் பற்றி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் திட்டங்களை சிபிஎம் அறிவித்துள்ளது: ஆனால் இது "மக்கள் சார்பு" உடைய கொள்கைகளை UPA அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் வடிவமைப்பிற்குள் இருக்கும்.

காங்கிரஸிற்கும் BJP க்கும் பதிலாக ஒரு "மூன்றாம் மாற்றீட்டிற்கான" அதன் நீண்ட கால அழைப்பை பெருகிய முறையில் சிபிஎம் மாநாடு வலியுறுத்தியுள்ளது. யெச்சூரி கூறினார்: "தற்போதைய அரசாங்கத்தின் புதிய தாராள கொள்கை போக்கு பற்றியும் இந்தியாவை அமெரிக்காவுடன் ஒரு மூலோபாயக் கூட்டிற்கு இணைக்கும் கருத்து பற்றி எடுக்கும் முயற்சிகள் பற்றியும் பெருகிய முறையில் அதிருப்தி உள்ளது. எனவே முக்கியமான அரசியல் பிரச்சினை பொருளாதார, அரசியல் கொள்கைகளில் மாற்றீடு காணவேண்டிய ஒரு மூன்றாம் அமைப்பை நிறுவதலாக இருக்க வேண்டும். காங்கிரஸ் அல்லாத, BJP எதிர்ப்பு உடைய அரசியல் மாற்றீட்டை நாங்கள் காண விரும்புகிறோம்."

ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இந்த மூன்றாம் மாற்றீடு "சமரசத்திற்கு இடமில்லாமல் வகுப்புவாத சக்திகளுக்கு எதிர்ப்பு", மக்கள் விரோத பொருளாதார சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தாழ்ந்த நிலையில் இந்தியாவை நிறுத்துவதற்கு எதிர்ப்பு என்ற மூன்று முக்கிய பிரச்சினைகளை ஒட்டி கொள்கை அடிப்படையில் நிறுவப்படும் என்று கூறுகின்றனர்.

"ஒரு மூன்றாம் அணி அமைப்பதற்கும் மூன்றாம் மாற்றீடு அமைப்பதற்கும் இடையே வேறுபாடு உண்டு. மூன்றாம் அணி என்பது "வெட்டி ஒட்டும் வேலை", ஆனால் "மூன்றாம் மாற்றீடு என்பது உறுதியான கொள்கை நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டிருக்கும்" என்று யெச்சூரி விளக்கினார்.

"மூன்றாம் அணி" என்ற சொல்லை பயன்படுத்துவதில் சிபிஎம் தலைமை நாணுகிறது என்றால், எற்கனவே அத்தகைய கூட்டு முயற்சிக்கப்பட்டதுடன் சிபிஎம் தான் அதன் அரசியல் தலைமையை பெரும் அளவில் வழங்கியது. 1996 ல் இருந்து 1998 வரை ஒரு "மூன்றாம்" அல்லது ஐக்கிய முன்னணிக் கூட்டு, இந்திய அரசாங்கத்தை அமைத்திருந்தது, சிபிஎம் அதற்கு "வெளியில் இருந்து ஆதரவை கொடுத்தது." இந்த அரசாங்கம் முன்னதாக இருந்த காங்கிரஸ் கட்சியின் புதிய தாராளக் கொள்கைகளை தொடர்ந்தது; அதன் மூலம் BJP மார்ச் 1998ல் பல கட்சிக் கூட்டணியின் தலைமையேற்று அதிகாரத்திற்கு வருவதற்கு கதவு திறந்துவிட்டது.

இது ஒருபுறம் இருக்க சிபிஎம் திட்டமிட்டிருப்பது உண்மையில் மற்றொரு தேர்தல் முகாம், பல வட்டார, சாதி அடிப்படையிலான முதலாளித்துவ கட்சிகளுடன் என்பது ஆகும். இக்கட்சிகளில் பல முன்பு இருந்த மூன்றாம் அணியில் உறுப்புக்களாக இருந்தவை; அனைத்தும் இந்திய முதலாளித்துவத்தின் பொருளாதார "சீர்திருத்தத்திற்கு" உடந்தையாக இருந்தவை. ஏற்கனவே சிபிஎம் பேச்சுவார்த்தைகள் மற்றும் பகுதி உடன்பாட்டை ஆந்திர பிரதேசத்தை தளமாகக் கொண்டுள்ள தெலுகு தேசக் கட்சி TDP, யுடன் தொடங்கிவிட்டது. அதுவும் வரவிருக்கும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியில் ஒரு பகுதியாக இருக்கும்.

சிபிஎம் ஆதரவு கொடுத்திருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் TDP ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. ஐக்கிய முன்னணி பதவியில் இருந்து அகற்றப்பட்டதும், TDP, BJP உடன் 1998-2004ல் உடன்பாட்டைக் கொண்டு, BJP தலைமையில் இருந்த மத்திய அரசாங்கத்திற்கு ஆதரவைக் கொடுத்தது. இதற்கிடையில், ஆந்திரப் பிரதேசத்தில் TDP மானில அரசாங்கத்தை அமைத்தது; அங்கோ அது இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்ட புதிய தாராளக் கொள்கைகளை அது முன்னின்று நடத்தியது: உலக வங்கியிடம் இருந்து அடிக்கடி பெரும் பாராட்டுக்களையும் பெற்றது.

ஆயினும்கூட சிபிஎம், TDP ஐ வகுப்புவாதம் மற்றும் மக்கள் எதிர்ப்பு சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களில் ஒரு உற்ற, "கொள்கைப்பிடிப்பு" திறன் உடைய கட்சியாக தழுவும் விருப்பத்தை கொண்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் UPA நட்புக் கட்சிகளுடன், அதுவும் அவை அனைத்தும் தற்போதைய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து இருக்கும் நிலையில் தேர்தல் உடன்பாடுகள், ஒப்பந்தங்களை கொள்ளும் திட்டத்தையும் சிபிஎம் கைவிட்டுவிடவில்லை.

"தொழில்மயமாக்கும்": திட்டத்திற்கு சிபிஎம் மாநாடு இசைவு கொடுத்துள்ளதும் குறைந்த மதிப்பு உடையது அல்ல; அதாவது மேற்கு வங்க மானிலத்தில் செயல்படுத்தப்படும் முதலீட்டாளர் ஆதரவு உடைய கொள்களைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒப்புதல்; மற்றும் நந்திக்கிராமில் விவசாயிகள் எதிர்ப்பை இது வன்முறையை கையாண்டு அடக்கியதும் குறைந்த மதிப்பு உடையது அல்ல.

சிபிஎம் தலைமையிலான கேரள அரசாங்கம் மேற்கு வங்க அரசாங்க உதாரணத்தை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது மற்றும் அது இந்திய மற்றும் சர்வதேச மூலதனத்தை ஊடாடும் நோக்கத்துடன் மிகவிரைந்து கொள்கை மாற்றங்களை முன்னெடுக்குமாறும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

சிபிஎம் தலைமை கட்சியின் அரசியல் செல்வாக்கு பற்றி பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கையில், பெருகிய முறையில் கணக்கிலடங்கா நெருக்கடியின் அடையாளங்கள் காணப்படுகின்றன; நந்திக்கிராமில் அடக்குமுறை பற்றி இடதுசாரி அறிவுஜீவுகளின் பரந்த எதிர்ப்புக்களில் இருந்து கட்சியின் அமைப்புமுறை அறிக்கை வரை இது தெளிவாகிறது; பிந்தையதில் சிபிஎம் தலைவர்கள் கூடுதலான முறையில் இந்தியாவின் மரபார்ந்த அரசியல் உயரடுக்கினரின் தீமைகளைத்தான் செய்து கொண்டு வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

அறிக்கையின் ஒரு நகல் இதற்கு கசிந்து வெளிவந்த New Indian Express இன் கருத்தின்படி, "சில கட்சித் தொண்டர்கள் சாதி மற்றும் சமய வழக்கங்களைப் பின்பற்றுகின்றனர். கட்சி உறுப்பினர்கள் சிலரே வரதட்ணை வாங்குவதாக புகார்கள் வந்துள்ளன. சில கட்சி உறுப்பினர்கள் பிறந்தநாட்கள், திருமணங்கள், புது வீடு கட்டுதல் போன்றவற்றிற்கு ஆடம்பரமான விருந்துகளை ஒழுங்கு செய்கின்றனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

"கட்சித் தலைவர்களுக்குள்ளும் ஊழல் தீவிரமாக ஊடுருவியுள்ளது பற்றிக் கட்சி பெரும் கவலை கொண்டுள்ளது... கட்சித் தலைவர்களும் அமைப்புக்களின் தலைவர்களும் தங்கள் வருமானம், சொத்துக்கள் பற்றி அறிக்கையை கொடுக்க வேண்டும் என்று கட்சி ஏற்கனவே வழிகாட்டி நெறிகளை கொடுத்துள்ளது...."

கட்சியின் கேரள நாளேடு தேசாபிமானியின் மேலாளர் ஒருவர் ஒரு வணிகரிடம் இருந்து 10 மில்லியன் இந்திய ரூபாய்களை (அப்பொழுது அமெரிக்க $175,000) வாங்கிக் கொண்டதாக அறிக்கையில் ஒரு குறிப்பு உள்ளது.

பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மேற்கு வங்க முதல் மந்திரியும் பொலிட்பீரோவின் உறுப்பினருமான புத்ததேப் பட்டச்சார்ஜி கட்சி ஒரு "திருத்த நடவடிக்கையை" மேற்கொள்ள இருப்பதை உறுதிப்படுத்தினார். "பணம், உடல் பலம், குற்றம் சார்ந்த தன்மை ஆகியவற்றில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு அரசியலை நாங்கள் விரும்புகிறோம்." என்று அவர் கூறினார். சோசலிசம் தொலைதூர விஷயம் என்று கூறுவதன் மூலம் டாட்டாக்கள் மற்றும் மற்ற பெருநிறுவன முதலாளிகள் பாலான அவரது ஊடாட்டம் பற்றிய விமர்சனங்களை நிராகரிக்கும் பட்டாச்சார்ஜி, சிபிஎம் கூடுதலான முறையில் முதலாளித்துவ வர்க்க அமைப்புடன் என்றுமில்லாத வகையில் ஆழ்ந்து ஒருங்கிணைந்ததை ஒட்டித்தான் இந்த ஊழல் வெளிப்பட்டுள்ளது என்பதை ஒப்புக் கொள்ளவில்லை.

சிபிஎம் மாநாட்டிற்கு 26 நாடுகளில் இருந்து 51 தோழமைப் பேராளர்கள் வந்திருந்ததும் கட்சியின் அரசியல் வளைவரை பாதை பற்றி நன்கு புலப்படுத்துகிறது.

இதில் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர்; அவர்களோ நவம்பர் மாத அமெரிக்க தேர்தல்களில் ஜனநாயகக் கட்சிக்காக ஆதரவு கொடுப்பவர்கள்; பிரான்சில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வந்திருந்தனர்; அக்கட்சி 1930 களில் இருந்து பல முறை பிரெஞ்சு முதலாளித்துவத்தை காப்பாற்ற உதவியுள்ளது; சமீபத்தில் 2002 ல் கூட தொழிலாள வர்க்க எதிர்ப்பு நிறைந்த சிக்கன நடவடிக்கைகளை தொடர்ந்திருந்த அரசாங்கத்தில் பங்கு பெற்றிருந்தது.

மிகப்பெரிய தோழமை பிரதிநிதிகள் குழு, சீன கம்யூனிஸ்ட் கட்சியில் (CCP) யில் இருந்து வந்த ஆறு உறுப்பினர்கள் அடங்கிய குழுவாகும். சீனாவின் ஆளும் கட்சி ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு தலைமை தாங்குகிறது; அது இரக்கமற்ற முறையில் சீனத் தொழிலாளர்களை வெளிநாட்டு மூலதனத்திற்காகவும் எழுச்சி பெறும் சீன முதலாளித்துவத்திற்காகவும் அடக்கி வருகிறது. சமீபத்தில் CCP தன்னுடைய அமைப்புவிதிகளை திருத்தி முதலாளிகளும் கட்சியில் சேரலாம் என்று அனுமதித்துள்ளது.

சிபிஎம் ன் 19வது மாநாட்டிற்கு கொடுத்த வாழ்த்துக்களில் CCP "இந்தியாவில் இருக்கும் உண்மை நிலைகளுக்கு ஏற்ப மார்க்சிச கோட்பாடுகளை பிணைக்கும் தீவிர முயற்சிகளுக்கு" பாராட்டுத் தெரிவித்தது. தன்னுடைய பங்கிற்கு சிபிஎம், சீனாவை ஒரு சோசலிச நாடு என்றும், மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம் சீனாவில் இருக்கும் முதலீட்டுச் சார்பு ஆட்சி கடந்த மூன்று தசாப்தங்களில் தன்னுடைய தொழில்மயமாக்கும் திட்டத்திற்கு ஒரு மாதிரி என்றும் கூறியது.