WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா
:
இலங்கை
Sri Lanka: Escalating war fuels rising
prices
இலங்கை: உக்கிரமடையும் யுத்தம் விலை அதிகரிப்புக்கு எண்ணெய் வார்க்கின்றது
By Saman Gunadasa
29 February 2008
Back to screen version
இலங்கை மக்கள், கடந்த டிசம்பரில் இருந்து, அரிசி, கோதுமை மா, பாண், பால்மா
மற்றும் எண்ணெய் உட்பட அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் ஒருபடி அதிகரித்துவரும் நிலையை எதிர்கொள்கின்றனர்.
பல உழைப்பாளர் குடும்பங்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பாட்டுக்கு திண்டாடுகின்றன.
இலங்கை மத்திய வங்கியின்படி, கடந்த ஆண்டுக்கான ஆண்டு பணவீக்க வீதம், 21.6 ஆகும்.
இது தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவிலேயே உயர்ந்த மட்டமாகும். கடந்த மாதம், கொழும்பு நுகர்வோர்
விலைச் சுட்டென் 5,955ல் இருந்து 6,302க்கு பாய்ந்தது. இது எந்தவொரு மாதத்திலும் நிகழாத 347 புள்ளிகளிலான
அதிகரிப்பாகும்.
* இலங்கையின் முக்கிய உணவான அரிசியின் விலை, கடந்த மூன்று மாதங்களுள் கிட்டத்தட்ட
இரு மடங்கை எட்டியுள்ளது. பரந்தளவில் உண்ணப்படும் சம்பா அரிசி இருமடங்கு விலை அதிகரித்துள்ளது. கடந்த நவம்பரில்
48 ரூபாயாக (35 சதம் அமெரிக்க டொலர்) இருந்த ஒரு கிலோ சம்பா, ஜனவரில் 85-100 ரூபா வரை
எட்டியுள்ளது. தற்போது, இதன் விலை கிட்டத்தட்ட 70 ரூபாவாக உள்ளது.
* ஜனவரியில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 59 ரூபாயில் இருந்து 68 ரூபா வரை
16 வீதத்தால் அதிகரித்திருந்தது. இதன் விலை கடந்த ஆண்டு 45 வீதத்தால் அதிகரித்திருந்ததால் பாணின் விலையும்
அதிகரித்தது.
* கடந்த ஜனவரியில், ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 117 ரூபாயில் இருந்து 127 ரூபா
வரை (1.16 அமெரிக்க டொலர்கள்) அதிகரித்திருந்த அதே வேளை, ஒரு லீட்டர் டீசல் மற்றும் ஏழைகள் அன்றாடம்
பயன்படுத்தும் எரிபொருளான மண்னெண்ணெய் முறையே 80 மற்றும் 70 ரூபாவரை அதிகரித்திருந்தன. 12.5 கிலோகிராம்
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,300 முதல் 1,495 ரூபா வரை 14 வீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த இரு
ஆண்டுகளில் எண்ணெய் விலை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்திருந்தன. இதன் விளைவாக, போக்குவரத்துச் செலவு
மற்றும் கட்டணங்களும் மீண்டும் அதிகரித்துவிட்டன.
* அரச மின்சார சபை மின்சார கட்டணத்தை மார்ச் மாதத்தில் இருந்து 43 வீதத்துக்கும்
150 வீதத்துக்கும் இடைப்பட்ட அளவில் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பை இயக்கும் பிரதான காரணி, அரசாங்கத்தின் பிரமாண்டமான
இராணுவச் செலவேயாகும். 2006 ஜூலையில் இருந்து, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ நாட்டை பிரிவினைவாத தமிழீழ
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தினுள் மூழ்கடித்துள்ளார். வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு சமூகப்
பிரச்சினைகளையும் அணுகுவதற்கு முற்றிலும் இலாயக்கற்ற அவரது முன்னோடி அரசாங்கங்களைப் போலவே, இராஜபக்ஷவும்
சமூகப் பதட்டங்களை திசை திருப்புவதன் பேரில் தமிழர் விரோத பேரினவாதத்தை கிளறி விட்டுக்கொண்டிருக்கின்றார்.
கடந்த நவம்பரில், 2008ம் ஆண்டுக்கான இராணுவச் செலவை கொழும்பு 167 பில்லியன்
ரூபா (1.5 பில்லியன் அமெரிக்க டொலர்) வரை கூட்டியது -இது 20 வீத அதிகரிப்பாகும். பிரதி நிதி அமைச்சர்
ரஞ்சித் சியம்பலாபிடிய, பெப்பிரவரி 26 அன்று டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில்,
பெப்பிரவரியில் யுத்தச் செலவுகள் ஏற்கனவே 10 பில்லியன்களால் அதிகரித்துள்ளது எனச் சுட்டிக் காட்டினார்.
புலிகளை இராணுவ ரீதியில் நசுக்கும் குற்றவியல் முயற்சியில், இலங்கை இராணுவம் மேலும்
ஆயுதங்களை கொள்வனவு செய்வதோடு மேலும் மேலும் படைக்கு ஆள் சேர்க்கின்றது. அரசாங்கம் உணவுப் பொருள்களுக்கு
வரிகளை திணிப்பதன் முலமும் உயர்ந்த வட்டி வீதத்தில் கடன்களை வாங்குவதன் மூலமும் மற்றும் மேலும் பணத்தை
அச்சடிப்பதன் மூலமும் யுத்த முயற்சிகளுக்கு நிதி வழங்கிக்கொண்டிருக்கின்றது.
2007 மார்ச்சில், அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவின் காரணமாக உழைக்கும் மக்கள்
மத்தியில் வளர்ச்சி கண்டுவந்த ஆத்திரத்தை எதிர்கொண்ட நிலையில், இராஜபக்ஷ அரசாங்கம் 10 அத்தியாவசிய உணவுப்
பொருட்களின் இறக்குமதி வரியை குறைக்கத் தள்ளப்பட்டது. அரசாங்கம் கடந்த டிசம்பரில் 2008 வரவு செலவுத்
திட்டம் நிறைவேற்றப்பட்டு வெகு சில காலத்திற்குள், இழக்கும் வருமானத்தை சமாளிக்க முடியாது எனக் கூறிக்கொண்டு
இந்த வரிகளை மீண்டும் அமுல்படுத்தியது.
நாட்டின் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல் என்ற பெயரில், மத்திய வங்கி சர்வதேச
நிதிச் சந்தையில் மேலும் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெறும் திட்டத்தை அறிவித்தது. கடந்த
ஆண்டு அரசாங்கம் இதே சாக்குப் போக்கைக் கூறி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றது.
ஆனால் இந்தக் கடன் ஏனைய வங்களுக்கு கொடுக்க இருந்த கடனை கொடுத்து முடிக்க பயன்படுத்தப்பட்டது. உண்மையில்,
இந்த கடன்கள் யுத்தத்திற்கு நிதியளிக்கவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட அரசாங்கம், மேலும் மேலும்
கடுதாசி நோட்டுக்களை வெளியிடுவதை நாடியது. பெப்பிரவரி 10ம் திகதி எல்.ஏ.என்.எஸ். சஞ்சிகைக்கு கருத்துத்
தெரிவித்த பொருளியலாளரான ஹர்ஷ டி சில்வா, கடந்த ஆண்டு மே மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடையில், 49
பில்லியன் ரூபாய் (457 மில்லியன் அமெரிக்க டொலர்) நோட்டுக்களை மத்திய வங்கி வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நாணய உள்ளீடு பணவீக்கம் அதிகரிப்பதற்கு பங்களிப்பு செய்துள்ளது.
பெப்பிரவரி 24 வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகை, அரசாங்கத்தின்
மோசமடைந்துவரும் நிதிப் பற்றாக்குறையானது உயர்ந்த வீதத்திலான பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தது.
"குறிப்பாக அண்மைய ஆண்டுகளில், பெரும் யுத்த செலவு இந்தப் பற்றாக்குறைக்கு ஒரு பகுதி காரணமாக இருந்து
வருகின்றது. உணர்ந்துகொள்ளப்படாதது என்னவெனில், இந்த நிதிப் பற்றாக்குறை பொதுக் கடனுடன் சேர்க்கப்படும்
மற்றும் அதனால் கடன் சேவை கிரயத்திற்கும் அது சேர்க்கப்படும். கடன் மீள் செலுத்துகை அரசாங்க செலவில் 40
வீதத் தொகையை பற்றிக்கொண்டுள்ளது.
பூகோள வளம் மற்றும் உணவின் விலை அதிகரிப்பு ஆகியன பணவீக்கத்தை
உக்கிரமாக்குகின்றன. உயர் இறக்குமதி விலைகள் 2007ல் இலங்கையின் 3.56 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகப்
பற்றாக்குறைக்கு பங்களிப்பு செய்துள்ளன. இது 2006ல் இருந்து கிட்டத்தட்ட 6 வீத அதிகரிப்பாகும்.
கடனைத் திருப்பிச் செலுத்தும் ஆற்றலை தரமிடும் சர்வதேச ஏஜன்சியான எஸ் அன்ட் பீ (Standard
and Poors -S&P), பெப்பிரவரி 16 அன்று இலங்கையின் பொருளாதார வாய்ப்பை "ஸ்திரமானது"
என்ற நிலையில் இருந்து "எதிர்மறையான" நிலைக்கு தரங்குறைத்துள்ளது. எஸ் அன்ட் பீ குறிப்பிடுவதன் படி, "நடைமுறை
செலவுகள் கவணிக்கத் தக்கவகையில் தற்காப்பானாதாகவும் மற்றும் வட்டிச் சேவை திட்டமிடப்பட்டதை விட
உயர்ந்ததாகவும் இருந்து வருகின்றன. தமிழ் பிரிவினைவாதிகளுடனான யுத்தத்தின் புதிய அபிவிருத்திகள் உட்பட அரசியல்
நிலைமைகள், இலங்கையின் தரப்படுத்தலை தொடர்ந்தும் நிறுவையிலேயே வைத்துள்ளன.''
உள்நாட்டு யுத்தத்திற்குப் புறம்பாக, இலங்கையின் உற்பத்தியில் 40 வீதத்தை ஏற்றுமதி
செய்யும் அமெரிக்காவில் வளர்ச்சிகாணும் பின்னடைவு, விவகாரத்தை மேலும் மோசமாக்கக் கூடும். பெப்பிரவரி 27,
இலங்கை வங்கியின் தலைமை நிதி வழங்குனர் சாலிய இராஜகருணா, அமெரிக்க பொருளாதாரம் 1 வீதத்தால்
சரிந்தால், அது இலங்கை, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளை "கடுமையாக" பாதிக்கக் கூடும். அமெரிக்க
பொருளாதார பின்னடைவின் தாக்கத்தில் இருந்து இலங்கையை "வேறுபடுத்த", வளர்ச்சியடைந்துவரும் இந்தியாவுடனான
வர்த்தகம் போதுமானது என்ற கருத்தை அவர் நிராகரித்தார்.
2006 மற்றும் 2007ம் ஆண்டுகளுக்கிடையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம்
7.4 வீதத்தில் இருந்து 6.7 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி இந்த ஆண்டு 7 வீத வளர்ச்சியை
முன்கணித்த போதிலும், ஏனைய ஆய்வாளர்கள் மெதுவான வளர்ச்சி வீதத்தையே கணித்துள்ளனர்.
வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் வர்க்க பதட்ட நிலைமைகள்
கடந்த புதன்கிழமை, இலங்கை கைத்தொழில் நிறுவனங்களின் தேசிய சபை, மின்சாரக்
கட்டண உயர்வை கைவிடுமாறு அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தது. சபையின் தலைவர் ஏ.மே. இரட்னராஜா
பிரகடனம் செய்ததாவது: "உயர் மட்ட வட்டி கிரயம், பாதுகாப்பு நிலைமையின் காரணமாக இயக்கக் கட்டுப்பாடுகள்,
போக்குவரத்து மற்றும் சேவைகளில் அதிகரித்து வரும் செலவு, ஏராளமான விடுமுறை தினங்கள், சுழன்றுகொண்டிருக்கும்
பணவீக்கத்தின் தாக்கம், ஏராளமான தீர்வை மற்றும் வரிகளும் கைத்தொழில் துறைக்கு மேலதிக சுமையாகும். இந்த
முட்டுக்கட்டைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து, சுதந்திர சந்தை பொருளாதாரத்தில் போட்டி நிலைமையை
விரிவுபடுத்த உதவுவதற்குப் பதிலாக, மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதன் ஊடாக கைத்தொழில்கள் மீது மேலும்
சிரமங்களை திணிப்பது, தேசிய பொருளாதாரத்திற்கு அழிவுகரமான விளைவுகளுடன் கைத்தொழில் துறையை நிச்சயமாக
ஸ்திரமற்றதாக்கும்."
ஏற்றுமதி வருமான இழப்பு, இறக்குமதி பொருட்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, குறைந்த
மட்டத்திலான வரி வருமானம், சம்பள மட்ட வீழ்ச்சி அல்லது தொழில் இழப்பு மற்றும் நாட்டின் கைத்தொழில் அடித்தளம்
"சிறிது சிறிதாக சிதைவுறுதல்" போன்றவை பற்றியும் இரட்னராஜா எச்சரித்தார். "மேலும் மேலும் ஏனைய நாடுகளில்
மீண்டும் நிறுவும் சாத்தியங்களை உள்ளூர் நிறுவனங்கள் காணும். இதனால், வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்குப்
பதிலாக, கைத்தொழில் நிறுவனங்கள் இலங்கையில் இருந்து தூர விலகக்கூடும்."
இரட்னராஜாவின் கருத்துக்கள் இராஜபக்ஷவுக்கும் மற்றும் முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும்
எச்சரிக்கையொன்றை விடுக்கின்றது. அது, நெருக்கடியின் பொருளாதார சுமைகளை உழைக்கும் மக்களின் முதுகில்
கட்டியடிக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்பதேயாகும். தமது கோரிக்கைகளை கொழும்பு
இட்டுநிரப்பாவிடில், வர்த்தக தட்டு உற்பத்திக் கைத்தொழிலை வேறு நாடுகளில் "மீள நிறுவும்". இலங்கையில் உற்பத்திக்
கைத்தொழிலானது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 17 வீதத்தை உள்ளடக்கிக் கொண்டுள்ளதோடு அதில் 1.5
மில்லியன் தொழிலாளர்கள் உழைக்கின்றார்கள்.
ஏற்கனவே தொழிலாளர்களின் சம்பளம் எலும்புவரை வெட்டப்பட்டுள்ளது. தனியார் துறை
தொழிலாளர்கள் நான்கு ஆண்டுகளாக எந்தவொரு சம்பள அதிகரிப்பையும் பெறவில்லை. இலங்கை உற்பத்தியின்
முதுகெழும்பாக உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் உள்ள பெண் தொழிலாளர்கள், தங்குமிடம் மற்றும் சாப்பாட்டுக்கும்
கூட செலவிட முடியாதளவு குறைந்த சம்பள மட்டத்தின் காரணமாக தமது தொழிலை விட்டு வெளியேறத்
தொடங்கியுள்ளனர். அவர்களது சராசரி மாதாந்த சம்பளம் 6,000-8,000 ரூபா வரையாகும் (60-80 அமெரிக்க
டொலர்கள்).
சிறந்த சம்பளம் மற்றும் நிலைமைகளை கோருவதன் காரணமாக இராஜபக்ஷ
தொழிலாளர்களையும் விவசாயிகளையும் "துரோகிகள்" என முத்திரை குத்துகின்றார். வளர்ச்சி கண்டுவரும் பணவீக்கத்தின்
மத்தியிலும், அவர் 2008 வரவு செலவுத் திட்டத்தில் பொதுத் துறை ஊழியர்களுக்கு "வாழ்க்கைச் செலவு
கொடுப்பணவாக" 375 ரூபா (3.75 அமெரிக்க டொலர்) அற்பத் தொகையை வழங்குவதாக அறிவிக்கத்
தள்ளப்பட்டார். ஆயினும், கைத்தொழில் நிறுவன சபையின் அறிக்கை, அடிப்படை தேவைகளுக்கான மானியங்களை மேலும்
வெட்டிக் குறைக்குமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதையே சுட்டிக்கட்டுகிறது. அத்தகைய எந்தவொரு
நகர்வும் சமூக பதட்ட நிலைமையை தவிர்க்க முடியாமல் உக்கிரமாக்கும்.
பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.), வாழ்க்கைத் தரம்
மீதான தாக்குதலை இயக்குவது பிரமாண்டமான இராணுவச் செலவே என்ற உண்மையை மறைக்க முயற்சிக்கின்றது. அரசாங்கத்தின்
மீது பலவித வார்த்தைஜால விமர்சனங்களை யூ.என்.பி. செய்தாலும், அது அதே தமிழர் விரோத இனவாத அரசியலையே
பங்கு போட்டுக்கொள்கின்றது. பெப்பிரவரி 14ம் திகதி யூ.என்.பீ. முன்னெடுத்த சுவரொட்டி பிரச்சாரம், "செலவுகள்
அதிகரித்தாலும் எங்களிடம் பணம் இல்லை! அரசாங்கத்தை வெளியேற்று! போன்ற சுலோகங்களை ஒப்பாரி வைத்தது.
ஆனால் இந்தப் பிரச்சாரம் எந்தவொரு வெகுஜன உற்சாகத்தையும் தூண்டவில்லை. யூ.என்.பி. யின் சொந்த சாதனைகள்,
1970 களின் பிற்பகுதியில் "சுதந்திர சந்தை" கொள்கைகளை ஆரம்பித்து வைத்ததும் மற்றும் 25 ஆண்டுகால உள்நாட்டு
யுத்தத்தை 1983ல் தொடக்கிவிட்டதுமேயாகும்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்கள
அதிதீவிரவாத கட்சிகள், வலதுசாரி மக்கள்வாத அழைப்புக்களை விடுக்கின்றன. அவர்கள் அதிகரித்துவரும் பண வீக்கத்திற்கான
பிரதான காரணம் உலகின் மிகப் பெரிய அமைச்சரவையில் உள்ள அரசாங்க அமைச்சர்களை பராமரிக்கவே அதிகம் செலவாகுவதாக
குற்றஞ்சாட்டுவதோடு அரசங்கத்தின் ஊழல்களை சுட்டிக்காட்டுகின்றனர். (இராஜபக்ஷ அரசாங்கம், அதன் அதிதீவிரமாக
ஆட்டங்கண்டு போயுள்ள ஆளும் கூட்டணியை பாதுகாப்பதன் பேரில் 111 அரசாங்க அமைச்சர்களில் 109 பேருக்கு
அமைச்சர் பதவிகளை வழங்கியுள்ளது.)
2005ல் இராஜபக்ஷ ஆட்சிக்கு வர ஜே.வி.பீ. உதவியதோடு, புலிகளுடனான யுத்த நிறுத்தத்தை
உடைக்க இடைவிடாமல் நெருக்கி வந்தது. இப்போது, அது விலைவாசி அதிகரிப்பு பற்றி சத்தமாக ஆர்ப்பாட்டம் செய்கின்றது.
எவ்வாறெனினும், குறிப்பிடத்தக்க வகையில், அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கோரும்
தமது முன்னைய கோரிக்கையை ஜே.வி.பீ. கைவிட்டுள்ளது. இது ஜே.வி.பீ. யின் "தாய்நாடு முதலில்" என்ற பிரச்சாரத்தின்
தர்க்கரீதியான விளைவாகும். இந்தப் பிரச்சாரத்தின் மூலம் ஜே.வி.பீ., தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான யுத்தத்திற்கு
வாழ்க்கைத் தரம் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என அழைப்புவிடுக்கின்றது.
யுத்த கால அர்ப்பணிப்புக்கு அழைப்பு விடுப்பதில் ஹெல உறுமய மேலும் உக்கிரமாக ஈடுபட்டுள்ளது.
"பஜ்ரியை சாப்பிட்டுக்கொண்டு எங்களுக்கு சம்பந்தம் இல்லாத யுத்தத்தை (இரண்டாம் உலக யுத்தம்) இலங்கையர்கள்
தாங்கிக்கொண்டால், இன்று எங்களது சொந்த யுத்தத்தின் போது ஏன் முணுமுணுப்பு?" என அதன் போஸ்டர்கள் கேட்கின்றன.
(பஜ்ரி: மனிதர்கள் உண்பதற்கு பொருத்தமில்லாத தரங் குறைந்த தானிய வகை)
இரண்டாம் உலக யுத்தத்தின் போது, உலகை மேலாதிக்கம் செய்யும் தமது நிலைமையை
பாதுகாக்கும் முயற்சியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சார்பில் பெரும் அர்ப்பணிப்புகளை செய்யுமாறு இலங்கை மக்களை
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் கோரினார்கள். "சுதந்திரத்தின்" பின்னர் 60 ஆண்டுகள் கடந்து, முதலாளித்துவ
ஆட்சியை பாதுகாப்பதன் பேரில், தொழிலாளர் வர்க்கம், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களை பிளவுபடுத்தி
வைக்கும் தமது தேவையின் நிமித்தம் நடத்தும் யுத்தத்திற்காக இலங்கை ஆளும் தட்டுக்கள் அதே கோரிக்கையை
முன்வைக்கின்றன. |